Author: நிருபர் காவலன்
ஏவுகணை சோதனைக்கு தயராகி வரும் வடகொரியா
ஏவுகணை சோதனைக்கு தயராகி வரும் வடகொரியா
வடகொரியா நீண்ட தூர கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை
சோதனை நடத்த தயாராகி வருகிறது .
ரசியா உக்கிரைன் போர் உக்கிரம் பெற்றுள்ள நிலையில் ,
அந்த களமுனையில் பயன் பாட்டில் உள்ள ஏவுகணைகள் திறன் ,
மற்றும் அதன் செயல் பாடுகளை கண்ணுற்ற
வடகொரியா ஆயுத தயாரிப்பு ஆரய்ச்சியாளர்கள் அதனை முறியடிக்கும் விதமான ஏவுகணைகள் மேற்பட்ட தொழில் நுட்பத்துடன் கூடிய ,
ஏவுகணைகளை சோதனை செய்த்திட தயாராகி வருகிறது .
உலக நாடுகளின் மிரட்டல்களுக்கு ,
பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் ,வடகொரியா
தனது ஏவுகணை சோதனைகளை தொடர்ந்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
இராணுவ வாகனத்தால் நேர்ந்த கோர விபத்து
இராணுவ வாகனத்தால் நேர்ந்த கோர விபத்து
அலவத்துகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 வீதியில் வெலிகந்த சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பல்லேகலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த இராணுவத்திற்குச் சொந்தமான வாகனமொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
உக்குவெல பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் இராணுவ வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
உணவு பொதி கொத்து பிரைட் ரைஸ் விலை அதிகரிப்பு
உணவு பொதி கொத்து பிரைட் ரைஸ் விலை அதிகரிப்பு
மின்கட்டண அதிகரிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் உணவு பொதிகள், கொத்து மற்றும் ஃபிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் விலை 10% ஆல் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை
உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்தார்.
வெலிகம பொலிஸிற்கு முன்பாக பதற்றநிலை
வெலிகம பொலிஸிற்கு முன்பாக பதற்றநிலை
மாத்தறை வெலிகம பொலிஸிற்கு முன்பாக இன்று (16) பிற்பகல் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
வெலிகம, தெனிபிட்டிய பிரதேசத்தில் 12 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கு இதில் தொடர்பில்லை என தெரிவித்து அங்கு கூடிய மக்களால் இவ்வாறு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
அண்மையில் குறித்த சிறுமி மேலதிக வகுப்பில் கலந்து கொண்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது நான்கு இளைஞர்களால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் சிறுமியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன்படி நேற்று மாலை தெனிப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கைது செய்யப்பட்ட இளைஞரின் உறவினர்கள் பொலிஸ் நிலையம் முன் திரண்டதுடன், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட இருவருக்கும் இது தொடர்பான சம்பவத்தில் தொடர்பில்லை எனத் தெரிவித்தனர்.
குறித்த இளைஞர்கள் பொலிஸாரால் தாக்கப்பட்டதாகவும்
கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரின் தாயார் தெரிவித்துள்ளார்.
வாகன வேலைத்தளம் ஒன்றில் தீ விபத்து
வாகன வேலைத்தளம் ஒன்றில் தீ விபத்து
தாவடி வன்னிய சிங்கம் வீதியில் உள்ள வாகன வேலைத்தளம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக வாகன பெயிண்டிங் மற்றும் வாகன வேலைத்தளம் எரிந்து நாசமாகியுள்ளதோடு வேலைத் தளத்துக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பட்டா ரக வாகனமும் முழுமையாக எரிந்துள்ளது.
வேலைத்தளத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
யாழ் மாநகர சபையின் தீயணைப்பு வாகனம்
வரவழைக்கப்பட்டு தற்பொழுது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு
மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு
செட்டிகுளம், முசல்குத்தி வீதியில் மின்சாரம் தாக்கி 30 வயது மதிக்கத்தக்க யானை ஒன்று இறந்த நிலையில் இன்று (15) மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா, செட்டிகுளம், முசல்குத்தி பகுதியில் உள்ள வயல் நிலங்களைச் சூழ போடப்பட்ட மின்சாரக் கம்பியில் சிக்கிய காட்டு யானை ஒன்று அப் பகுதியில் விழுந்து இறந்துள்ளது.
அப் பகுதிக்கு சென்றவர்கள் இதனை அவதானித்த நிலையில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கியிருந்தனர்.
இதனையடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மற்றும் கால்நடை வைத்திய அதிகாரி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று யானையை பார்வையிட்ட போது யானை இறந்திருந்தது.
வயல் நிலங்களுக்கு வைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கியே குறித்த யானை மரணமடைந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இருப்பினும், யானையின் மரணம் தொடர்பில் கால்நடை வைத்திய அதிகாரியால் உடற்கூற்று பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானையே இவ்வாறு இறந்துள்ளது.
இது தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனை
நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனை
நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் இன்று (15) மரண தண்டனை விதித்துள்ளது.
2005 ஆம் ஆண்டு திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டமைக்காக அதிகாரிகளுக்கு விசாரணையின் பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அப்போது திஸ்ஸமஹாராம பொலிஸில் கடமையாற்றிய குற்றப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 4 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு
எடுத்துக் கொள்ளப்பட்ட போது, நீதிமன்றம் அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்தது.
சிறுத்தையை கொன்று இறைச்சியாக விற்பனை செய்த 4 பேர் கைது
சிறுத்தையை கொன்று இறைச்சியாக விற்பனை செய்த 4 பேர் கைது
பொகவந்தலாவ பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் சுற்றித்திரிந்த சிறுத்தையை கொன்று இறைச்சியாக விற்பனை செய்த நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சிறுத்தையைக் கொன்று அதன் இறைச்சியை விற்பனை செய்து கொண்டிருந்த போது நான்கு சந்தேக நபர்களையும் கொல்லப்பட்ட சிறுத்தையின் உடலின் ஒரு பகுதியையும் பொகவந்தலாவ பொலிஸார் நேற்று (14) கைது செய்தனர்.
சிறுத்தையை கொன்று இறைச்சியாக விற்பனை செய்த 4 பேர் கைது
சந்தேகநபர்கள் பொகவந்தலாவ கொட்டியாகலை தோட்டத்தின் மேல் பகுதியில் வசிப்பவர்கள் என்பதுடன், அதனை அண்டிய சமனல இயற்கை சரணாலயத்தில் சுற்றித்திரியும் சிறுத்தைகள் இரை தேடி தேயிலை தோட்டத்திற்கு வரும்போது கம்பிக்கூடு அமைத்து பிடித்து கொன்றுள்ளனர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சிறுத்தையின் உடல் பாகங்கள் நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அறிக்கை பெறப்பட்டதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில்
ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
ஒரே மாவில் மொறுமொறு தோசை|பஞ்சு போல இட்லி | Crispy Dosa | Sponge Idli |Idli Dosa Batter in Tami
ஒரே மாவில் மொறுமொறு தோசை|பஞ்சு போல இட்லி | Crispy Dosa | Sponge Idli |Idli Dosa Batter in Tami
ரோட்டு கடை சுவையில் நம்ம வீட்டில் ,ஒரே மாவில் மொறுமொறு தோசை|பஞ்சு போல இட்லி செஞ்சு சாப்பிடலாம் வாங்க.
இப்போ ஒரே மாவில் மொறுமொறு தோசை மற்றும் பஞ்சு போல இட்லி
எப்படி செய்வது அத்தகு தேவையான பொருட்கள் என்ன பார்க்கலாம் வாங்க .
இந்த தோசை இட்லி செய்வதற்கு மிக்சிங் போல் எடுத்து அதில
இரண்டு கப் அளவுக்கு இட்லீ அரிசி சேர்த்து கொள்ளுங்க .
இப்போ இந்த அரிசியை தண்ணி ஊற்றி இரண்டு தடவை நன்றாக கழுவி கொள்ளுங்க .
ஒரே மாவில் மொறுமொறு தோசை|பஞ்சு போல இட்லி | Crispy Dosa | Sponge Idli |Idli Dosa Batter in Tami
அடுத்து மேலும் ஒரு பாத்திரம் எடுத்து அதில அரை கப் அளவுக்கு உளுந்து ,வெந்தயம் கலந்து கழுவி எடுத்து மீள புதிய தண்ணி ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைத்திடுங்க .
ஊறி வந்த பின்னர் தண்ணியை வடித்து மிக்சியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்திடுங்க .
அடுத்து ஒரு சட்டியில் அரை கப் அளவு வெள்ளை அவல் எடுத்திடுங்க ,
தண்ணி ஊற்றி நன்றாக கழுவி எடுத்திடுங்க .இதையும் 10 நிமிடம் ஊறவைத்திடுங்க .அரசி ,அவல் எல்லாத்தையும் நன்றாக அரைத்து எடுத்திதூங்க .
அப்புறம் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி எட்டு மணி நேரம் ஊற வைத்திடுங்க .
செய்முறை இரண்டு .
இப்போ ஒரு சட்டியில் தோசைக்கு ஏற்றது போல மாவை எடுத்து தண்ணி போல கரைத்திடுங்க .அப்புறம் தோசை கல்லை சூடாக்கி அதன் மேல தோசை போல ஊற்றி எடுங்க .
தோசை மொறு மொறு என முறுக்கி வரும் வரை தோசையை சூடாக்கி எடுத்திடுங்க .இப்போ மொறு மொறு தோசை ரெடியாடிச்சு .
அப்புறம் இட்லி சட்டியில் இட்லி மாவை ஊற்றி 8 நிமிடம் சூடாக்கி எடுத்திடுங்க .அவ்வளவு தாங்க தோசை இட்டலி ரெடியாகிடிச்சு .
இது கூட கார சட்னி ,தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிடுங்க
கடை போல சுவையில் இருக்கும் .
அவ்வளவு தாங்க .வாய்க்கு சுவையான மொறு மொறு தோசை பஞ்சுபோல
இட்லி ரெடியாகிடிச்சு .
ஈரான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா
ஈரான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா
சிரியாவின் குருதீஸ் பகுதிகளை அண்மித்து ,
அமெரிக்கா அமைத்துள்ள இராணுவ தளம் அருகே
பறந்து கொண்டிருந்த ஈரான் தயாரிப்பு தாக்குதல் உளவு விமானம்,
ஒன்றை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது .
ஈரான் தற்கொலை தாக்குதல் விமானங்கள் மற்றும் ,உளவு விமானங்கள்
என்பன சுட்டு வீழ்த்த முடியா நிலையில் உகைரைன் திணறிய வண்ணம் உள்ளது .,
அவ்வாறான விமானங்கள் தற்போது மத்திய கிழக்கில் உள்ள ,
அமெரிக்கா இராணுவ தளங்கள் மேலாக பறந்து வருகிறது .
இவ்வாறு பறக்கும் ஈரான் விமானங்கள் ,
மிக ஆபத்தானவை என இஸ்ரேல் அமெரிக்கா கூட்டாக
தெரிவித்து வருகின்றன .
மொறு மொறு அடை தோசை பூண்டு சட்னி|Adai Dosa Recipe in Tamil | Poondu Chutney
மொறு மொறு அடை தோசை பூண்டு சட்னி|Adai Dosa Recipe in Tamil | Poondu Chutney
நம்ம வீட்டில் மொறு மொறு அடை தோசை .மிக சுவையாக தரமாக செய்து சாப்பிடலாம் வாங்க .
அடை தோசை செய்வது எப்படி ..?
அதற்கு தேவையான பொருட்கள் என்ன ..?
இந்த அடை தோசை செய்வதற்கு சட்டி டுத்து ,
ஒரு க்ளாஸ் வெள்ளை அரசி ,அரை கப் கடலை பருப்பு ,
அரை கப் பாசி பருப்பு ,அரை கப் துவரம் பருப்பு ,எடுத்திட்டு அதில தேவையான தண்ணி ஊற்றி நன்றாக
கழுவி எடுங்க .
நன்றாக் கழுவி எடுத்த பின்னர் புதிய தண்ணி சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைத்திடுங்க .
மூன்று மணி நேரம் கழித்து நீரை வடித்து எடுத்து மிக்சியில போட்டு
கூடவே சின்ன துண்டு பட்டை ,3 கராம்பு ,சோம்பு ,பூண்டு ,8 வறுமிளகாய் ,சேர்த்து நன்றாக அரைத்து எடுங்க .
அப்புறமா பெரிய வெங்காயம் தேங்காய் பல்லு ,
கொத்தமல்லி இலைகளை பொடியாக வெட்டி சேர்த்திடுங்க .
கூடவே உப்பு சேர்த்து நன்றாக கலந்திடுங்க .
மொறு மொறு அடை தோசை பூண்டு சட்னி|Adai Dosa Recipe in Tamil | Poondu Chutney
அதற்கு அப்புறம் தோசை கல்லை சூடாக்கி எண்ணெய் ஊற்றிட்டு தோசை மாதிரி ஊற்றுங்க,அப்புறம் தோசை மேல குழி வெட்டி போடுங்க .வெந்து வர அதற்கு அபப்டி பண்ணுங்க .
நன்றாக வெந்து வரும் வரை தோசை சுட்டு எடுத்திடுங்க .
செய்முறை ரெண்டு
தொட்டு சாப்பிட பூண்டு சட்னி செய்யலாம் வாங்க .
கடாய வைத்து பூண்டு பூட்டு வெந்து வரு பொழுது தேவையான மிளகாய் ,
சின்ன வெங்காயம் ,சின்ன துண்டு புளி சேர்த்து வறுத்தெடுங்க .
நன்றாக கலர் மாறி வந்ததும் ஆற வைத்து மிக்சியில் போட்டு தேவையான தண்ணி சேர்த்து அரைத்து எடுங்க .
அப்புறம் கடாயில் எண்ணெய் பூட்டு தாளித்து எடுங்க .
அரைத்த சட்னியை இதில போட்டு கருவேப்பிலை போட்டு, வேக வைத்து எடுங்க .ஐந்து நிமிடம் முடிந்ததும் சட்னியை எடுத்திடுங்க .
அப்புறம் மொறு மொறு தோசையுடன் பூண்டு மிளகாய் சட்னி சேர்த்து சாப்பிடுங்க.
அவ்வளவு தாங்க .இதுபோல நன்றாக நாள்தோறும் வீட்டில் செஞ்சு சாப்பிடுங்க மக்களே .இப்போ சொல்லுங்க சுவை எப்புடி இருக்கு மக்களே .
மொறு மொறு அடை தோசை| பூண்டு சட்னி| Adai Dosa Recipe in Tamil | Poondu Chutney Breakfast Recipe | Healthy Recipe | Dosa Recipe|
Breakfast Recipe|
Spicy Paneer Gravy இப்படி செஞ்சு பாருங்க |simple paneer recipes|best paneer dish|Spicy Paneer Gravy in tamil
Spicy Paneer Gravy இப்படி செஞ்சு பாருங்க |simple paneer recipes|best paneer dish|Spicy Paneer Gravy in tamil
Spicy Paneer Gravy Recipe தோசை ,சாதம் மற்றும் ப்ரோட்டா ,இட்லீ கூட எல்லாம் சேர்த்து சாப்பிட மிக சுவையாக
இருக்கும் .அப்படியான பனீர் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க .
பனீர் செய்வது எப்படி .?
பன்னீர் செய்வதற்கு தேவையான பொருட்கள் என்ன ..?
அடுப்பில கடாய் வைத்து கொள்ளுங்க அதில் எண்ணெய் விட்டு சூடானதும் ,இரண்டு பிரியாணி இலை ,காய்ந்த மிளகாய் ,ஏலக்காய் ,பட்டை ,கொத்து கருவேப்பிலை ,மூன்று சின்ன வெங்காயம் சின்னதா பொடியாக்கி வெட்டி ,அதனை எல்லாம் ஒன்றாக போட்டு கலக்கி எடுங்க .
அப்புறம் இஞ்சி பூண்டு ,உப்பு சேர்த்து நன்றாக வதக்கி வாங்க ,மஞ்சள் தூள் ,கரம் மசாலா ,மல்லித்தூள்,கூடவே மிளகாய் தூள் சேர்த்து கலக்கிடுங்க .
அப்புறம் இரண்டு தக்காளி பொடியாக வெட்டி அரைத்து எடுத்து அதனை சேர்த்திடுங்க .
Spicy Paneer Gravy இப்படி செஞ்சு பாருங்க |simple paneer recipes|best paneer dish|Spicy Paneer Gravy in tamil
இப்போ தண்ணி ஊற்றி இதனை 10 நிமிடம் ஊறவைத்திடுங்க .
அப்புறம் இரண்டு கரண்டி தயிர் சேர்த்து, தேவையான தண்ணீர் சேர்த்து வேக வைத்து கொள்ளுங்க .
அதன் பின்னர் மிக்சியில் அரை கரண்டி சோம்பு ,சீரகம் ,
ஒருகரண்டி மிளகு சேர்த்து நனறாக அரைத்து எடுத்து ,அதனை சேர்த்து கலக்கிடுங்க ,வாசம் தூக்கலாக இருக்கும் .
இப்போ குழம்பு ரெடியானதும், பிறகு பன்னீர் சேர்த்திடுங்க ,
சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைத்திடுங்க .அதன் பின்னர் கொத்தமல்லி இலை சேர்த்து வைத்து உறைப்பான பன்னீர் கிரேவியை இறக்கிடுங்க .
அவ்வளவு தாங்க .வாய்க்கு சுவையான உறைப்பான பன்னீர் ரெடியாடிச்சு.இப்படி நாள் தோறும் பனீர் செய்து சாப்பிடுங்க மக்களே .
ஒரு பூனைக்கு இருக்க அறிவு உனக்கில்லையா மக்களிடம் கோபப்பட்ட சீமான்
ஒரு பூனைக்கு இருக்க அறிவு உனக்கில்லையா மக்களிடம் கோபப்பட்ட சீமான்
ஒரு பூனைக்கு உள்ள அறிவு மக்களுக்கு இல்லையா என சீமான் கேட்டு கேட்டு பேசியுள்ளார் .
இந்த மக்கள் விழிக்க முடியாதவரை இப்படித்தான் இருப்பாங்க .
காசு வாங்கிட்டு ஒட்டு போடும் வாழ்வை முற்றாக ஒழிக்கும் வரை இந்த இனம் திருந்தாது என சீமான் பேசி வருகிறார் .
திணறும் உக்கிரைன் துரத்தும் ரசியா இராணுவம்
திணறும் உக்கிரைன் துரத்தும் ரசியா இராணுவம்
உக்கிரைன் மற்றும் பக்மூட் மற்றும் டொன்ஸ்டெக் பகுதிகளை மீட்கும்
நடவடிக்கையில் ரஷியா இராணுவம் கடுமையான
தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .
பல அடுக்கு பாதுகாப்பு வேலிகளை அமைத்து ,
அதன் ஊடாக புதிய புதிய தந்திரோபாய தாக்குதல்களை,
ரசியா இராணுவம் நடத்திய வண்ணம் உள்ளது .
வழமைக்கு மாறான புதிய போர் களங்களை,
ரசியா இராணுவம் நடத்திய வண்ணம் உள்ளது .
ரசியா இராணுவத்தின் படையெடுப்பினால் ,
எமது இராணுவம் சரண் அடைய போவதில்லை ,
ஆனால் எதிரிகள் புதிய முறையிலான தாக்குதல்களை நடத்துகின்றனர் .
எமது படைகள் அதனை எதிர் கொண்டு தடுத்து போராடி வறுகின்றனர் .
இறுதி வரை நாம் சரணடைய போவதில்லை என்கின்ற சொல்லாடலை,
உக்கிரைன் இராணுவம் பயன் படுத்துகிறது .
அவ்வாறு எனின் எதிரிகளின் தாக்குதல்களை ,
சமாளிக்க முடியாது திணறி வருவதை உக்கிரைன்
இராணுவம் ஒப்பு கொள்கிறது .
அப்படி என்றால் விரைவில் உகைரைன் கிழக்கு,
பக்மூட் மற்றும் டொன்ஸ்டெக் ரஷியா படைகள் வசம் ,
சென்று விடும் என்பதே இன்றைய கள நிலவரமாக உள்ளது .
நீதிமன்ற கட்டளையை ஏற்க மறுத்த எம்.பி
நீதிமன்ற கட்டளையை ஏற்க மறுத்த எம்.பி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நீதிமன்றம் வருகை தருமாறு கூறும் பொலிஸ் கட்டளையை நேற்று (14) பொலிஸார் வழங்கியிருந்தனர்.
அந்தக் கட்டளை சிங்கள மொழியில் மாத்திரம் இருந்ததன் காரணமாக, சிங்கள மொழி தனக்கு வாசிக்கத் தெரியாது எனவும் ஆகவே, கட்டளையைத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தமிழில் கொண்டு வந்து தருமாறு கூறி, பொலிஸாரிடதே தனை மீளக் கையளித்தார் எம்.பி.
பின்னர் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து கொண்டு வந்து கொடுத்தபோது, நீதிமன்றத்துக்கு தன்னை வருவதற்கு அழைக்கும் அழைப்பை நீதிமன்றம் தான் வழங்கமுடியுமே தவிர, நீதிமன்றத்துக்கு அழைக்கும் அழைப்பை பொலிஸாரால் வழங்கமுடியுமா என பாராளுமன்ற
உறுப்பினர் வினவிய போது, பொலிஸார் அமைதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
வாலிபனை அடித்து கொன்ற சிறுவர்கள்
வாலிபனை அடித்து கொன்ற சிறுவர்கள்
இலங்கை வெலிபென்ன பகுதியில் 34 வயது வாலிபரை அடித்து கொன்ற குற்ற சாட்டில்16 வயதுடைய மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைதான மூவரும் காவல்துறை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பாரப்படுத்த பட்டுளள்னர்.
தபால் மூல தேர்தல் ஒத்திவைப்பு
தபால் மூல தேர்தல் ஒத்திவைப்பு
இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ,
தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என,
தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த திடீர் அறிவுப்புக்கான காரணம் வெளியிட படவில்லை.
சிக்கிய ஆயுத கப்பல்
சிக்கிய ஆயுத கப்பல்
ஓமான் குடா பகுதியில் வேகமாக பயணித்து கொண்டிருந்த ஆயுத கப்பல்
ஒன்று மடக்கி பிடிக்க பட்டுள்ளது .
அமெரிக்கா இராணுவத்தினர்
மேற்கொண்ட விசேட கடல் நடவடிக்கையின் பொழுது ,
ஏமன் கவுதிய இராணுவத்தினருக்கு ஈரான் வழங்கிய 5000 துப்பாக்கிகள்,
7009 ஏவுகணைகள் 16 லட்சம் தோட்டாக்கள் உள்ளடங்கிய மிக பெரும் ஆயுதம்
சிக்கியது .
இந்த ஆயுதங்கள் பல மில்லியன் டொலர்
பெறுமதியானவை எனப்படுகிறது .
ஆயுத கடத்தலை மேற்கொண்ட
கப்பல் சிறை பிடிக்க பட்டத்துடன் ,
அந்த ஆயுதங்களை கடத்தி
சென்று கொண்டிருந்த கடத்தல்
காரர்களும் மடக்கி பிடிக்க பட்டனர் .
ஈரானின் எண்ணெய் கப்பல்கள் ,
மற்றும் ஆயுத கப்பல்களை இஸ்ரேலக் ,
அமெரிக்கா தொடராக
இவ்விதம் சிறை பிடித்த வண்ணம்
உள்ளமை குறிப்பிட தக்கது .
சிறுமிகளுடன் தேயிலை மலைக்குள் நுழைந்த இராணுவ சிப்பாய் கைது
சிறுமிகளுடன் தேயிலை மலைக்குள் நுழைந்த இராணுவ சிப்பாய் கைது
சிறுமிகள் இருவரை துஸ்பிரயோகப்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று(14) கைதுசெய்யப்பட்டுள்ளார் என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
நோர்வூட்- வெஞ்சர் தோட்டத்தைச் சேர்ந்த குறித்த இராணுவ சிப்பாய் விடுமுறை நிமித்தம் தனது வீட்டுக்கு வருகைத் தந்துள்ளதுடன், குறித்த தோட்டத்தைச் சேர்ந்த 10 மற்றும் 8 வயது சிறுமிகள் இருவரை தேயிலை மலைக்கு அழைத்துச் சென்று, துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார்.
சிறுமிகளுடன் தேயிலை மலைக்குள் நுழைந்த இராணுவ சிப்பாய் கைது
இதன்போது ஒரு சிறுமி அவரிடமிருந்து தப்பியோடி வந்தததை அவதானித்த பிரதேசவாசிகள் சந்தேகநபரை பிடித்து நோர்வூட் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமிகளின் பெற்றோரால் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமிகள் இருவரும் மருத்துவ பரிசோதனைக்காக டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையின் விசேட வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் கிளிநொச்சி பிரதேசத்திலுள்ள இராணுவ முகாமொன்றில் கடமையாற்றி வருவதாகத் தெரிவித்த பொலிஸார்,
அவரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்தனர்.
விபத்தில் திருக்கோவில் சகோதரர்கள் மரணம்
விபத்தில் திருக்கோவில் சகோதரர்கள் மரணம்
கொழும்பு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் சிக்கி அம்பாறை – திருக்கோவில் பிரதேசத்தில் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர்கள் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், பெண்ணொருவர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக குடுபத்தினர் தெரிவிக்கையில், கொழும்பு – வம்பலப்பிடடியில் உள்ள சகோதரி சுகவீனமடைந்த நிலையில் சகோதரின் சுகநலம் விசாரிப்பதற்காக நேற்று செவ்வாய்க்கிமை மாலை 5 மணியளவில் திருக்கோவிலில் இருந்து அவர்களுடைய காரில் கொழும்பு நோக்கி பயணமாகியுள்ளனர்.
விபத்தில் திருக்கோவில் சகோதரர்கள் மரணம்
இந்நிலையிலேயே கொழும்பு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி இரு சகோதரர்களும் உயிரிழந்துள்ளனர்.
திருக்கோவிலைச் சேர்ந்தவரும் கனடாவில் இருந்து விடுமுறையைக் கழிப்பதற்காக வந்திருந்த தங்கராசா நாகசுந்தரம் (70 வயது) மற்றும் திருக்கோவிலைச் சேர்ந்த அவரது சகோதரர் தங்கராசா கேதாரவரதசுந்தரம் (74 வயது) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஆவர்.
உயிரிழந்த நாகசுந்தரத்தின் மனைவி சாருமதி மற்றும் உயிரிழந்த கேதாரவரதசுந்தரத்தின் மகன் ஜசிகாந்த ஆகிய இருவரும் காயமடைந்த
நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.









































































