லிந்துலையில் துயரச் சம்பவம்
Posted in இலங்கை செய்திகள்

லிந்துலையில் துயரச் சம்பவம்

லிந்துலையில் துயரச் சம்பவம்

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேன பிரதேசத்தில் ஆக்ரா ஓயாவில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

நேற்று (25) இந்த சிறுவன் மேலும் 5 சிறுவர்களுடன் நீராடச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த மாணவன், ஓடையில் ஆழமான பள்ளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நுவரெலியாவைச் சேர்ந்த தினுக கமகே என்ற 16 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்தார்.

லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2000 விற்பனை செய்யப்படும் இளநீர்
Posted in இலங்கை செய்திகள்

2000 விற்பனை செய்யப்படும் இளநீர்

2000 விற்பனை செய்யப்படும் இளநீர்

ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு, இரண்டாவது இளநீர் செய்கை கிராமம் முருதவெல ரலுவ கிராமத்திற்கு அருகாமையில் நிறுவப்பட்டுள்ளது.

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் நேற்று (25) இந்த வேலைத்திட்டம் இடம்பெற்றது.

ஏற்றுமதிக்கு இளநீர் பயிரிடும் முதல் கிராமம் கடந்த ஆண்டு கீழ் முருதவெலியில் ஆரம்பிக்கப்பட்டதுடன் இவ்விரு கிராமங்களிலும் 10,000 இளநீர் மரக்கன்றுகள் நடப்படவுள்ளன.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கையின் இளநீருக்கு அதிக கேள்வி காணப்படுவதாகவும், மேலும் பல நாடுகளில் இருந்து எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இளநீருக்கு அதிக கேள்வி இருப்பதாகவும் விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

வாரத்திற்கு சுமார் 252,000 இளநீர்கள் நாட்டிலிருந்து ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

2022 ஆம் ஆண்டில் இளநீர் ஏற்றுமதி மூலம் இரண்டு பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதுடன், கடந்த வருடம் (2023) எதிர்பார்த்த வருமானம் ஆறு பில்லியன் ரூபாவாகும்.

2000 விற்பனை செய்யப்படும் இளநீர்

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இளநீர் ஒன்றின் விலை இலங்கை ரூபாவின் பெறுமதிக்கு அமைய 2000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இளநீர் இலங்கையின் பூர்வீகப் பயிராகும், பல நாடுகள் இளநீர் பயிரிட முயன்றாலும், இலங்கையில் இளநீர் போன்று அதிக சுவை இல்லாததால் அந்த முயற்சிகள் தோல்வியடைந்தன.

இதன் காரணமாக, உள்நாட்டு இளநீருக்கு உலகச் சந்தையில் இலங்கையின் ஏகபோக உரிமை இன்னும் உள்ளது.

இந்த சூழ்நிலையில் இருந்து அதிகபட்ச இளநீரை அறுவடை செய்வதற்காக, குறிப்பாக முருதவெல பிரதேசத்தில் உள்ள பல கிராமங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, இரண்டாவது இளநீர் செய்கை மாதிரி கிராமமாக ரலுவ கிராமம் நிறுவப்பட்டுள்ளதுடன் அங்குள்ள விவசாயிகளுக்கு 1,600 இளநீர் கன்றுகளை நேற்று விவசாய அமைச்சர் வழங்கி வைத்தார்.

காணி உரிமையைப் பெறுவதற்கான Hotline இலக்கம்
Posted in இலங்கை செய்திகள்

காணி உரிமையைப் பெறுவதற்கான Hotline இலக்கம்

காணி உரிமையைப் பெறுவதற்கான Hotline இலக்கம்

உறுமய’ தேசிய வேலைத் திட்டத்தின் அபிலாஷைகளை நனவாக்கி, மக்கள் தமது காணியின் முழுமையான உரிமையை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கும் நோக்கில் அதற்காக விண்ணப்பிப்பதற்கு அவசரத் தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தினமும் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஜனாதிபதி அலுவலகம், உறுமய தேசிய செயற்பாட்டு அலுவலகம், 1908 என்ற அவசரத் தொலைபேசி இலக்கம் மற்றும் 0114 354600 / 0114 354601 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தமது கோரிக்கைகளைப் பதிவு செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

www.tinyurl.com/urumaya (டிஜிட்டல் விண்ணப்பப் படிவம்) படிவத்தைப் பூர்த்தி செய்தும் இதற்கான பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காணி உரிமையைப் பெறுவதற்கான Hotline இலக்கம்

1935 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க நில மேம்பாட்டுக் கட்டளைச் சட்டத்தின் மூலம் விவசாயிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதிப் பத்திரங்கள் / கொடுப்பனவுப்

பத்திரங்கள் உள்ள அரசாங்கக் காணிகளை நிபந்தனைகளின்றி முழுமையான உரிமையை மக்களுக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 2024 வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட ஒரு தனித்துவமான முன்மொழிவாகும்.

இந்த ‘உறுமய’ நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக முழுமையான உரிமையுடைய காணி உறுதிப்பத்திரங்களைப் பெறுவதன் மூலம், குறித்த காணிக்கு புதிய

பெறுமதி கிடைப்பதுடன், அவர்களின் உரிமையைப் பாதுகாத்து அவர்களின் குடும்பத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் வாய்ப்பு உருவாகும்.

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

தென்னிலங்கையில் மற்றொரு துப்பாக்கிச் சூடு

தென்னிலங்கையில் மற்றொரு துப்பாக்கிச் சூடு

எல்பிட்டிய, பத்திராஜ வத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இன்று (26) காலை 07.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கரந்தெனிய பிரதேச பொது சுகாதார பரிசோதகராக பணியாற்றி வந்த 51 வயதுடைய ரொஷான் குமார விதானகே என்ற நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூடு தொடர்பில் இருவர் கைது

துப்பாக்கிச் சூடு தொடர்பில் இருவர் கைது

நீர்கொழும்பு, பமுனுகம வீதியில் லெல்லம அருகில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவத்திற்கு உதவிய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்லவும் மறைத்துவைக்கவும் உதவியதற்காக சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் பதுவத்தை மற்றும் அம்பலயாய ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கு அமைய குற்றவாளிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் நீர்கொழும்பு பிரதேச குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்

வவுனியாவில் மோட்டர் சைக்கிள் திருட்டு
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் மோட்டர் சைக்கிள் திருட்டு

வவுனியாவில் மோட்டர் சைக்கிள் திருட்டு

வவுனியா, புதிய பேரூந்து நிலையம் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர்.

வவுனியா, புதிய பேரூந்து நிலையம் அருகில் மோட்டர் சைக்கிள் ஒன்றை இரவு நிறுத்திவிட்டு கொழும்பு பயணித்த ஒருவர் மறுநாள் பகல் வந்து பார்த்த போது அவரது மோட்டர் சைக்கிள் விட்ட இடத்தில் காணப்படவில்லை.

அப் பகுதியில் தேடிய போதும் மோட்டர் சைக்கிள் கிடைக்காத நிலையில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாடு தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, மோட்டர் சைக்கிள்களை பொது இடங்களில், வீதியோரங்களில் நிறுத்தி விட்டு தூர பயணங்களை மேற்கொள்ளாது அதனை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி விட்டு செல்லுமாறு வவுனியா பொலிசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

ரஷ்ய உக்ரைன் கடும் மோதல் 1000 இராணுவம் பலி
Posted in உக்ரைன் உலக செய்திகள்

ரஷ்யா உக்ரைன் போரில் 31 000 உக்ரைன் இராணுவம் மரணம்

ரஷ்யா உக்ரைன் போரில் 31 000 உக்ரைன் இராணுவம் மரணம்

ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கு இடையில் இடம்பெற்ற போரில் ,
31 000 உக்ரைன் இராணுவம் மரணம் என உக்ரைன் அதிபர் ஜெலான்சி தெரிவித்துள்ளார்

உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் இரண்டு ஆண்டுகளாக இடம்பெற்று வரும் இரு தரப்பு போரில் சிக்கி
உக்ரைன் இராணுவத்தினர் பெரும் தொகையில் மரணமாகியுள்ளதாக ஜெலன்ஸி தெரிவித்துள்ளார்

எமது தாயக நிலப் பரப்பை ஆக்கிரமிக்கும் நோக்குடன் போரினை தொடுத்து ,உக்ரைனை அபகரிக்க போரை நடந்து ரஷ்ய எதிரியுடன் போரிட்டு வீரமரணம் அடைந்த இராணுவத்தினர் தியாகத்தை ,மக்கள் மறக்க முடியாது என முழங்கினார் .

ரஷ்யா உக்ரைன் போரில் 31 000 உக்ரைன் இராணுவம் மரணம்

அமெரிக்காவுக்கு ஆதரவாக உக்ரைன் செயலாற்றி ரஸ்யாவுக்கு எதிரான சதிகளில் உக்ரைன் ஈடுபட்டு வந்ததை அடுத்தே புட்டீன் போரினை தொடுத்தார் .

புட்டீன் கூறியது போன்று இதுவரை உக்ரனுக்கு பெருமளவு ஆயுதங்களை வழங்கி தொடர்ந்து போருக்குள் தள்ளி வருவது அதே மேற்குலக நாடுகள் இப்பொழுது அம்பலமாகியுள்ளது

உக்ரைன் உள்கட்டமைப்பு முற்றாக செயல் முடக்க பட்ட நிலையில் ,மின்சாரம் ,தொலை தொடர்புகள் தூண்டிக்க பட்ட நிலையில் பல்லாயிரம் மக்கள் வசித்து வருகின்றனர் .

அவர்களை கருத்தில் கொள்ளாது ஜலான்சி தொடர்ந்து போரை நடத்தி செல்கின்றமை இங்கே குறிப்பிட தக்கது .

துருக்கி f -16 ரக விமானங்களை வழங்கும் அமெரிக்கா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஏமன் ஹவுதிகள் ஏவுகணைகள் விமான சுரங்கங்கள் அழிப்பு அமெரிக்கா

ஏமன் ஹவுதிகள் ஏவுகணைகள் விமான சுரங்கங்கள் அழிப்பு அமெரிக்கா

ஏமன் ஹவுதி இராணுவத்தின் ஏவுகணைகள் விமான சுரங்கங்கள் அழிப்பு என அமெரிக்கா அறிவிப்பு .

ஹவுதி இராணுவம் செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

ஹவுதிகள் நடத்தும் தாக்குதலினால் செங்கடல் கப்பல் போக்குவரத்து தடை பட்டுள்ளது .

, இஸ்ரேல் ,அமெரிக்கா ,பிரிட்டன் கப்பல்கள் மீது தொடர் தாக்குதல் நடத்த பட்ட வண்ணம் உள்ளன .

இதனை அடுத்து தற்போது அந்த தாக்குதல்களுக்கு பயன்படுத்த படும் விமானங்கள் ,ஏவுகணைகள் என்பனவற்றை தேடி அழிக்கும் ,தாக்குதல்களை அமெரிக்கா ,பிரிட்டன் மேற்கொண்டு வருகிறது .

கடந்த தினம் ஏமன் ஹவுதிகள் 18 இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதில் அவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது .

வீடியோ

அமெரிக்கா விமான தளங்களுக்குள் வெடித்த விமானம்
Posted in உக்ரைன் உலக செய்திகள்

ரஷ்யா விமானங்கள் 18 உக்ரைன் படைகளினால் சுட்டு வீழ்த்தல்

ரஷ்யா விமானங்கள் 18 உக்ரைன் படைகளினால் சுட்டு வீழ்த்தல்

ரஷ்யா விமானங்கள் 18 உக்ரைன் படைகளினால் சுட்டு வீழ்த்தல் ,உக்ரைனுக்குள் பறந்து வந்த ரஷ்யா தற்கொலை விமானங்களே சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .

உக்ரைன் இராணுவம் ரஷ்யா உள்ளே நுழைந்து தாக்குதலை நடத்தி வந்த நிலையில் ,தற்போது அதற்கு பதிலடி தாக்குதல்களை ரஷ்யா நடத்திய வண்ணம் உள்ளது .

இந்த ரஷ்யா விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டதால் ,ரஷ்யா படைகளின் தாக்குதல் தோற்கடிக்க பட்டு இழப்பு தடுக்க பட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது .

வீடியோ

ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் இராணுவ அதிகாரி அவுட்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் இராணுவ அதிகாரி அவுட்


ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் இராணுவ அதிகாரி அவுட்

ஹமாஸ் படைகள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் இராணுவ முக்கிய படைத்துறை அதிகாரி பலியாகியுள்ளார் ,காசாவில் நடந்த உக்கிர போர்

வீடியோ

காவலரை கட்டிப்போட்டு இரும்பு திருட்டு யாழில் திருட்டு கும்பல் அட்டகாசம்
Posted in இலங்கை செய்திகள்

கடையை உடைத்த காதலன் கைது கவலையுடன் காதலி

கடையை உடைத்த காதலன் கைது கவலையுடன் காதலி

தனது காதலியுடன் விடுமுறையை கழிப்பதற்கு பதுளையில் இருந்து அம்பாறைக்கு வந்த இளைஞனொருவர் விடுதிக்கு செலுத்த பணம் இல்லாத காரணத்தினால் கடையொன்றில் 10,000 ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அம்பாறை பஸ் நிலையத்தில் யுவதியை இருக்குமாறு தெரிவித்து நகரின் பிரபல மொத்த விற்பனை நிறுவனத்திற்குள் நுழைந்த குறித்த இளைஞன் பணத்தை திருடி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடையை உடைத்த காதலன் கைது கவலையுடன் காதலி

அம்பாறை பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இளைஞனுடன் சென்ற யுவதியை பெற்றோரிடம் ஒப்படைத்த பொலிஸார், சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

தந்தையை கோடரியால் வெட்டி கொன்ற மகன்

தந்தையை கோடரியால் வெட்டி கொன்ற மகன்

மகனின் கோடரி தாக்குதில், தந்தை மரணமடைந்த சம்பவம், காலி பிடிகல களுஆராச்சிகொட பகுதியில் சனிக்கிழமை (24) இடம்பெற்றுள்ளது என பிடிகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் பிட்டிகல களுஆராச்சிகொட பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான பியதாச ஜயசிங்க வயது(73) என்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தாக்குதலை மேற்கொண்ட மகனை நீதிமன்றில் ஆஜரப்படுத்தவுள்ளதாக (24) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

வவுனியா கைத்தொலைபேசியை திருடிய சம்பவம் தொடர்பில் மூவர் கைது

வவுனியா கைத்தொலைபேசியை திருடிய சம்பவம் தொடர்பில் மூவர் கைது

வவுனியாவில் முதியவர் ஒருவரை தாக்கி விட்டு கைத்தொலைபேசியை திருடிய சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் நேற்று (24) தெரிவித்தனர்.

வவுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் முதியவர் ஒருவர் வீதியால் சென்ற போது அவரை தாக்கி விட்டு அவரிடம் இருந்த கைத்தொலைபேசியை இருவர் பறித்துச் சென்றுள்ளனர்.

வவுனியா கைத்தொலைபேசியை திருடிய சம்பவம் தொடர்பில் மூவர் கைது

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட முதியவர் வவுனியா பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் 17 மற்றும் 38 வயதுடைய இருவர் பொலிஸாரால் கைது செய்யபட்டனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த இருவரும் முதியவரிடம் இருந்து பறித்து சென்ற கைத்தொலைபேசியை வவுனியா நகரப் பகுதியில் உள்ள மதுபான நிலையம் ஒன்றில் கொடுத்து விட்டு மது அருந்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த கைத்தொலைபேசியை பெற்றுக் கொண்ட மதுபானசாலை ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து திருடப்பட்ட கைத்தொலைபேசியும் மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளின் பின் குறித்த மூவரையும் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தேர்தல் தை மாதம் இடம்பெறும் என அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் தேர்தல் தொடர்பில் குழப்பநிலை

இலங்கையில் தேர்தல் தொடர்பில் குழப்பநிலை

தற்போதைய அரசியல் குழப்பத்தை கருத்தில் கொண்டு பல அமைச்சர்கள் அரசியல் கூட்டணிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர்.

தேர்தல் நடக்குமா, நடக்காதா, எந்தத் தேர்தலை முதலில் நடத்துவது என்ற உறுதியான சூழலுக்கு இதுவரை யாராலும் வரமுடியவில்லை.

தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடாததே இதற்கு காரணமாகும்.

இலங்கையில் தேர்தல் தொடர்பில் குழப்பநிலை

எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதாகவும், அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் பொதுத் தேர்தலை நடத்துவதாகவும் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்திருந்தார்.

இதனை ஜனாதிபதி நேற்று (24) மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.

எவ்வாறாயினும், தற்போதைய நிலவரத்தை கருத்திற்கொண்டு பல அமைச்சர்கள் சில பிரச்சினையான சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, உருவாகும் அனைத்து அரசியல் கூட்டணிகளுடனும் அவர்கள் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர்.

எனினும் பேசும்படியான புதிய அரசியல் கூட்டணிகள் இன்னும் உருவாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இலங்கை விமானிகளின்றி பறக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்
Posted in இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட அறிவிப்பு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட அறிவிப்பு

இன்று (25) ஏற்பட்ட விமான தாமதம் தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தற்காலிக மற்றும் திட்டமிடப்படாத செயற்பாடுகள் காரணமாக இந்த தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையினாலும் இது ஏற்படவில்லை என்றும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

தாமதத்தினால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு அனைத்து பயணிகளிடமும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மன்னிப்பு கோருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறானதொரு நிலை மீண்டும் ஏற்படாத வகையில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்க நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் புதிய மாற்றம்

கல்வித்துறையில் புதிய மாற்றம்

கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் முன்னோடித் திட்டம் மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக ஆசிரியர்களுக்கான பயிற்சியும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும் என்றார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வென்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் 4 முகாம் மீது ஹிஸ்புல்லா இராணுவம் அதிரடி தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் 4 முகாம் மீது ஹிஸ்புல்லா இராணுவம் அதிரடி தாக்குதல்


இஸ்ரேல் 4 முகாம் மீது ஹிஸ்புல்லா இராணுவம் அதிரடி தாக்குதல்

இஸ்ரேல் 4 முகாம் மீது ஹிஸ்புல்லா இராணுவம் அதிரடி தாக்குதல் ,வெடித்து பறந்த ஏவுகணைகள்

வீடியோ

நெதன்யாகுவின் சதி நடவடிக்கை முறியடிப்பு கொதிக்கும் பாலஸ்தீனம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

நெதன்யாகுவின் சதி நடவடிக்கை முறியடிப்பு கொதிக்கும் பாலஸ்தீனம்


நெதன்யாகுவின் சதி நடவடிக்கை முறியடிப்பு கொதிக்கும் பாலஸ்தீனம்

நெதன்யாகுவின் சதி நடவடிக்கை முறியடிப்பு கொதிக்கும் பாலஸ்தீனம் ,
பாலஸ்தீன தனி நாட்டுக்கு இஸ்ரேல் எதிர்ப்பு

வீடியோ

இலங்கையர்களை நாடு கடத்திய சீனா
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையர்களை நாடு கடத்திய சீனா

இலங்கையர்களை நாடு கடத்திய சீனா

கொள்கலன் ஒன்றில் மறைந்திருந்து மலேசியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது சீனாவில் கைது செய்யப்பட்ட இரு இலங்கையர்களும் ஒரு வருடத்தின் பின்னர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று (24) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த 2 சந்தேக நபர்களும் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் இருந்த கொள்கலனில் மறைந்து மலேசியாவிற்கு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் 26 வயதுடைய மலர்மதி ராஜேந்திரன் என்றும் மற்றவர் 39 வயதான ஜெயக்குமார் தருமராசா என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஜனவரி 30, 2023 அன்று குறித்த இருவரும் மலேசியா செல்வதற்காக கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘மெர்க்ஸ் யூனிகார்ன்’ கப்பலில் ஏற்றப்பட்ட வெற்று கொள்கலனுக்குள் இரகசியமாக நுழைந்துள்ளனர்.

இலங்கையர்களை நாடு கடத்திய சீனா

ஆனால் குறித்த கப்பல் மலேசியாவிற்கு வந்தபோது, ​​கொள்கலனில் மறைந்திருந்த இரு சந்தேக நபர்களும் மலேசியா ஏற்றுக்கொள்ள மறுத்ததால், அதிகாரிகள் சந்தேக நபர்களை ஏற்றிக்கொண்டு பல நாடுகளுக்குச் சென்று இறுதியாக சீனாவிற்கு சென்றுள்ளனர்.

இதனை அடுத்து சீன அதிகாரிகள் இருவரையும் கைது செய்தனர்.

இந்நிலையில் சந்தேகநபர்கள் இருவரையும் நாட்டில் இருந்து நாடு கடத்த நடவடிக்கை எடுத்த பின்னர், இன்று காலை 5.01 மணி அளவில், சீனாவின் ஷாங்காய் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமானம் (UL-867) மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பின்னர், கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்களம், வர்த்தகம் மற்றும் ஆட்கடத்தல் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழு ஒன்று அவர்களை கைது செய்து கொழும்பு கிருலப்பன பகுதியில் உள்ள பிரதான அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹிஸ்புல்லா தாக்குதலில் இஸ்ரேல் கட்டளை தலைமையகம் எரிகிறது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹிஸ்புல்லா தாக்குதலில் இஸ்ரேல் கட்டளை தலைமையகம் எரிகிறது


ஹிஸ்புல்லா தாக்குதலில் இஸ்ரேல் கட்டளை தலைமையகம் எரிகிறது

ஹிஸ்புல்லா தாக்குதலில் இஸ்ரேல் கட்டளை
தலைமையகம் எரிகிறது ,தளபதி வீரமரணத்திற்கு பதிலடி வழங்கிய ஹிஸ்புல்லா

video