Author: நிருபர் காவலன்
ஹவுதி தாக்குதலில் மூழ்கி கொண்டிருக்கும் பிரிட்டன் கப்பல்
ஹவுதி தாக்குதலில் மூழ்கி கொண்டிருக்கும் பிரிட்டன் கப்பல்
ஹவுதி படைகள் நடத்திய தாக்குதலில் மூழ்கி கொண்டிருக்கும் பிரிட்டன் உர கப்பல் .
செங்கடலில் பயணித்த பிரிட்டன் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல் ,தினறு கப்பல் நிறுவனங்கள் ,
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

மின்சார கட்டணத்தை 20 வீதத்தால் குறைக்கும் திறன் மின்சார சபை
மின்சார கட்டணத்தை 20 வீதத்தால் குறைக்கும் திறன் மின்சார சபைக்கு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
தவறான புள்ளிவிவரங்களை முன்வைத்து மின் கட்டணத்தை சபை உயர்த்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, மக்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்குவதற்கு மின்சார சபைக்கு அவசியமில்லை என தேசிய மக்கள் சக்தியின் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சட்டவிரோதமான முறையில் மக்களிடம் பணம் அறவிடுவதன் மூலம் மின்சார சபை 60 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான இலாபத்தை ஈட்டியுள்ளதாக மின்சார பாவனையாளர் சங்கத்தின் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்
சாந்தனை இலங்கைக்கு அனுப்ப அரசு அனுமதி
சாந்தனை இலங்கைக்கு அனுப்ப அரசு அனுமதி
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலை ஆகி உள்ள சாந்தன் இலங்கைக்கு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை பெற்ற இலங்கையை சேர்ந்த சாந்தன், திருச்சி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு கை, கால், காதுகளில் ஏற்பட்ட கடும் வலி காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவருக்கு நோய் தீவிரம் அடைந்ததால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் தண்டனை பெற்று விடுதலை ஆன தன்னை சொந்த நாடான இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என இந்திய அரசிடம் அவர் கோரிக்கை வைத்து வந்தார். பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களுக்கும், சாந்தனுக்கு ஆதரவு தெரிவித்து கோரிக்கை முன் வைத்திருந்தனர்.
சாந்தனை இலங்கைக்கு அனுப்ப அரசு அனுமதி
முன்னதாக இலங்கை அரசும் சாந்தன் இலங்கைக்கு வர அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் திருச்சி இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமில் உள்ள சாந்தனை சொந்த நாட்டுக்கு அனுப்புவதற்கான அனுமதி கடிதத்தை மத்திய அரசு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாருக்கு அனுப்பி உள்ளது.
மத்திய அரசின் உத்தரவு நகல் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், இன்னும் இரண்டு நாட்களுக்குள் சாந்தன் இலங்கைக்கு அனுப்பப்படுவார், விமான டிக்கெட்டை சாந்தனே முன்பதிவு செய்யலாம் என என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
(செய்தி பின்னணி)
1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்திற்கு வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், முருகன், இந்த நாசாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், நளினி, ஜெயக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு 32 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்தனர்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதை அடுத்து 2022 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் திகதி முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நால்வரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை சொந்தநாட்டுக்கு அனுப்ப கோரி கோரிக்கைகள் எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கச்சதீவு திருவிழாவுக்கு தலைமன்னாரிலிருந்து சென்ற 40 படகுகள்
கச்சதீவு திருவிழாவுக்கு தலைமன்னாரிலிருந்து சென்ற 40 படகுகள்
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய 2024 ம் வருடத்திற்கான திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கச்சதீவு பயணமாகி உள்ளனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் (23) 40 படகுகளில் 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலைமன்னார் துறைமுகத்தின் ஊடாக கச்சதீவு ஆலயத்திற்கு சென்றுள்ளனர்.
கச்சதீவு திருவிழாவுக்கு தலைமன்னாரிலிருந்து சென்ற 40 படகுகள்
இன்று மலை வழிபாடுகளுடன் ஆரம்பமாகும் திருவிழாவானது நாளை சனிக்கிழமை காலையில் யாழ்ப்பாணம் நெடுந்தீவு பங்கின் பங்கு தந்தையர்களின் தலைமையில் விசேட திருப்பலிகள் ஒப்புக் கொடுக்க புனித அந்தோனியார் திருவிழா சிறப்பாக நடைபெறும் .
மேலும் இந்த வருட கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கு இந்தியாவிலிருந்து பக்தர்கள் எவரும் வருகை தரவில்லை என கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன
டுபாய் பொலிஸாரால் கொலையாளிகள் கைது
டுபாய் பொலிஸாரால் கொலையாளிகள் கைது
பெலியத்தவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு ஆதரவளித்த சிலர் டுபாயில் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஊரகஹா மைக்கல், புஸ்ஸே ஹர்ஷ மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இருவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்நாட்டில் உள்ள ஒரு இரவு விடுதியில் நடந்த மோதலின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 13 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டுபாய் பொலிஸாரால் கொலையாளிகள் கைது
கைது செய்யப்பட்ட 13 பேரும் பெலியத்தவில் ஐந்து பேரின் கொலைக்கு தலைமை தாங்கியதாக சந்தேகிக்கப்படும் கொஸ்கொட சுஜீயின் நெருங்கிய உதவியாளர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது கொஸ்கொட சுஜீ குறித்த குழுவை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.
எனினும், இந்த கைது தொடர்பாக டுபாய் இராச்சியம் இதுவரை அதிகாரபூர்வமாக இலங்கை அரசுக்கு அறிவிக்கவில்லை.
சந்தேக நபர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இரு நாட்டு பாதுகாப்பு தரப்பினரும் கலந்துரையாடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது
அமெரிக்க இராணுவம் தளம் மீது ராக்கெட் தாக்குதல்
அமெரிக்க இராணுவம் தளம் மீது ராக்கெட் தாக்குதல்
கிழக்கு சிரியாவில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் மீது
ராக்கெட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த ரொக்கட் தாக்குதலில் குறித்த இராணுவ முகாம்
பலத்த சேதங்களை சந்தித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
குறித்த சட்டவிரோத அமெரிக்கா முகாம் மீது வியாழக்கிழமை இரவு கடும்
ராக்கெட் தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக ,ஈரான் ஆதரவு போர் படைகள் அறிவித்துள்ளன .
அமெரிக்க இராணுவம் தளம் மீது ராக்கெட் தாக்குதல்
சிரியாவின் அல்-ஒமர் எண்ணெய் வயலில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது,
நாள்தோறும் தொடர் தாக்குதல் இடம்பெற்று வருவதல் ,சிரியாவில் இருந்து அமெரிக்கா ஆக்கிரமிப்பு படைகள் தப்பி ஓடும் நிலை காணப்படுகிறது .
தொடர்ந்து ஏற்படுத்த பட்டு வரும் ஆள் ,ஆயுத இழப்புக்களை அடுத்து,
இராணுவத்தினர் உளவியல் நிலையில் பாதிக்க பட்டுள்ளனர் .
இதனால் வேறு வழியின்று ஆப்கானிஸ்தானை போல ,
அமெரிக்கா படைகள் இங்கிருந்து ஓட்டம் பிடிக்க போகின்றன .
வீழ்ந்து நொறுங்கிய உலங்கு வானூர்தி 4 போலீஸ் அதிகாரிகள் மரணம்
வீழ்ந்து நொறுங்கிய உலங்கு வானூர்தி 4 போலீஸ் அதிகாரிகள் மரணம்
கொலம்பியாவின் வடமேற்கு அன்டியோகுவியா
பகுதி மேலாக பறந்து கொண்டிருந்த இராணுவ
உலங்கு வானூர்தி ஒன்று வீழ்ந்து நொறுங்கியுள்ளது .
இந்த வானூர்தி விபத்தில் போது ,அவ்வேளை அதில்
பயணித்த நான்கு உயர் காவல்துறை அதிகாரிகள் பலியாகியுள்ளனர் .
கரமன்டா நகரின் மேலாக பறந்து கொண்டிருந்த பொழுது
ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் , 4 அதிகாரிகள் பலியாகியுள்ளதாக
காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
மேற்படி சம்பவம் திட்டமிபட்ட சதியாக இருக்கலாம் என ,
சந்தேகிக்க படுவதால் ,மக்கள் மத்தியில் பர பரப்பு நிலவுகிறது .
- தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

- DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்

- டிரம்ப் டிசம்பரில் மீண்டும் ஜியை சந்திப்பார் என்று கூறினார்

- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது

இஸ்ரேல் 5 பட்டாலியன் இராணுவம் அவையவங்கள் இழப்பு
இஸ்ரேல் 5 பட்டாலியன் இராணுவம் அவையவங்கள் இழப்பு
இஸ்ரேல் பாலஸ்தின போர் அரங்கிக்கில்
5 பட்டாலியன் இஸ்ரேல் இராணுவம் அவையவங்கள் இழந்து தவிப்பு .
ஹமாஸ் படைகள் நடத்திய தாக்குதலில் இந்த பெரும் இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

பிரிட்டன் அமெரிக்கா கப்பல் மீது கவுதிகள் தாக்குதல்
பிரிட்டன் அமெரிக்கா கப்பல் மீது கவுதிகள் தாக்குதல்
பிரிட்டன் அமெரிக்கா போர் கப்பல் மீது கவுதிகள் ,ஏவுகணைகள் ,விமானம் மூலம்,கடும்தாக்குதல் .
பிரிட்டன் அமெரிக்கா போர் கப்பல்களுக்கு கடும் சேதம் என ஏமன் படைகள் அறிவிப்பு
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

சனத் நிஷாந்தவின் மரணத்திற்கான காரணம்
சனத் நிஷாந்தவின் மரணத்திற்கான காரணம்
முன்னாள் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்திற்கான காரணத்தை இந்த சந்தர்ப்பத்தில் அறிவிக்க வாய்ப்பில்லை என வெலிசர நீதவான் துசித தம்மிக்க உடுவவிதான தெரிவித்துள்ளார்.
சனத் நிஷாந்தவின் பிரேத பரிசோதனை அறிக்கை சட்ட வைத்திய அதிகாரியினால் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படவில்லை என வலியுறுத்தி நீதவான் இதனை தெரிவித்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக வீதியின் கெரவலபிட்டிய பிரதேசத்தில் சனத் நிஷாந்தவின் மரணத்திற்கு காரணமான வீதி விபத்து தொடர்பில் தாம் அதிருப்தியடைந்துள்ளதாக சனத் நிஷாந்தவின் மனைவி சார்பில் ஆஜரான
தனராஜ் சமரக்கோன் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மரணத்திற்கான காரணத்தை அறிவிக்குமாறு சனத் நிஷாந்தவின் மனைவியின் உரிமைகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.
சனத் நிஷாந்தவின் மரணத்திற்கான காரணம்
இதன்போது, விபத்தில் உயிரிழந்த சனத் நிஷாந்தவின் பிரேத பரிசோதனை அறிக்கை சட்ட வைத்திய அதிகாரியினால் இதுவரை நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படாததால் மரணத்திற்கான காரணத்தை வெளியிட முடியாது என நீதவான் தெரிவித்தார்.
விபத்து இடம்பெற்ற போது அந்த இடத்தை பார்வையிட வேண்டிய அவசியமில்லை என்ற போதும், விபத்து இடம்பெற்ற ஜனவரி 24 ஆம் திகதி தான் குறித்த இடத்திற்கு சென்று பார்வையிட்டதாக நீதவான் துசித தம்மிக்க உடுவவிதான தெரிவித்ததாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரியிடம் கோரிக்கை விடுக்குமாறு கந்தானை பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவித்த நீதவான், இந்த முறைப்பாட்டை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி மீண்டும் அழைக்க உத்தரவிட்டுள்ளார்.
நீர்மூழ்கி கப்பல் மூலம் தாக்குதல் நடத்தும் ஹவுதி
நீர்மூழ்கி கப்பல் மூலம் தாக்குதல் நடத்தும் ஹவுதி
நீர்மூழ்கி கப்பல் மூலம் தாக்குதல் நடத்தும் ஹவுதி இராணுவம் ,
செங்கடலில் நடக்கும் புதிய தாக்குதல் ,திணறும் அமெரிக்கா கூட்டு படை இராணுவம் ,
யாழில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டு
யாழில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டு
யாழ்ப்பாணம் – அச்செழு பகுதியில் நேற்றையதினம் வீடொன்றில் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டை சேதப்படுத்தியதுடன் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதலையும் நடத்தியுள்ளது.
44 மற்றும் 45 வயதான சகோதரர்களே வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
காயமடைந்த இருவரும் கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
யாழில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டு
குறித்த சம்பவம் நேற்று (22) இரவு 10 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருவரிடையே ஏற்பட்ட முரண்பாடே
வன்முறைக்கான காரணம் என சந்தேகிக்கும் அச்சுவேலி பொலிஸார், சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்கலைக்கழக கட்டமைப்பின் கீழ் தொழிற்பயிற்சி
பல்கலைக்கழக கட்டமைப்பின் கீழ் தொழிற்பயிற்சி
நவீன உலகிற்கு ஏற்றவாறு தொழில் கல்வியை மறுசீரமைத்து, இந்நாட்டின் இளைஞர் யுவதிகள் போட்டித்தன்மை நிறைந்த உலக தொழில் சந்தையில் வெற்றி பெறுவதற்கு உகந்த சூழல் உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.
அதற்கமைய, நாட்டின் அனைத்து தொழிற்பயிற்சி நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து ஒரே பல்கலைக்கழக கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவதோடு, புதிய விடயப்பரப்புகளை உள்ளடக்கிய பாடநெறிகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பல்கலைக்கழக கட்டமைப்பின் கீழ் தொழிற்பயிற்சி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரத்மலானை லலித் அத்துலத்முதலி தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேற்று மேற்பார்வை விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போதே இதனை கூறினார்.
தற்போது டிஜிட்டல் மாற்றத்திற்கான முன்னெடுப்புகள் துரிதமாக இடம்பெற்று வருவதோடு, இதன்போது செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் எனவும், நாளாந்தம் மாற்றமடையும் தொழில்நுட்பத்துடன் முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதே இலங்கையின் எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்
மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்கள்
மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்கள்
மட்டக்களப்பு – செங்கலடி சுகாதார பிரிவின் கீழ் உள்ள உணவகங்களில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற முறையில் உணவை களஞ்சியப்படுத்தி
விற்பனை செய்த 4 உணவக உரிமையாளர்களுக்கு எதிராக ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை (22) வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து அவர்களை கடுமையாக எச்சரித்து தலா ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபா தண்டமாக செலுத்துமாறும் உத்தரவிட்டதுடன் கைப்பற்றப்பட்ட உணவு பொருட்களை அழிக்குமாறு நீதவான் கட்டளையிட்டார்.
இதேவேளை இந்த திடீர் சோதனை நடவடிக்கையில் மேலும் கண்டுபிடிக்கப்பட்ட சுகாதாரமற்ற முறையில் உணவுகளை விற்பனை செய்து
வந்த உணவகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக எதிர்வரும் 26ம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பரமானந்தராசா தெரிவித்தார்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

ரமழான் உணவு விழாவுக்கு எதிர்ப்பு
ரமழான் உணவு விழாவுக்கு எதிர்ப்பு
இந்த ஆண்டு மார்ச் 12-ம் திகதி ரமழான் நோன்பு காலம் தொடங்குவதால், பெங்களூருவில் உணவுத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த உணவுத் திருவிழாவுக்கு பிரேசர் டவுன் குடியிருப்போர்
நலச் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த சங்கத்தின் சார்பில் 3,500 பேர் கையெழுத்திட்டு, புலிகேசிநகர் காங்கிரஸ் எம்எல்ஏ ஏ.சி. சீனிவாசாவிடம் மனு அளித் துள்ளனர்.
அவர்கள் தங்கள் மனுவில் கூறியிருப்பதாவது: “ரமழான் உணவுத் திருவிழா காரணமாக பிரேசர் டவுனில் 40 நாட்களுக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பணிக்குச் செல்வோர் கடும் பாதிப்புக்கு
ரமழான் உணவு விழாவுக்கு எதிர்ப்பு
ஆளாகின்றனர். கடந்த ஆண்டு உணவுத் திருவிழாவில் ஒரு கடையில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் காயம் அடைந்தவர்களை மீட்க நோயாளர் காவு வண்டி (ஆம்புலன்ஸ்) வர முடியாத நிலை ஏற்பட்டது.
ரம்ழான் உணவுத் திருவிழாவினால் குப்பை, புகை, கழிவு நீர்போன்ற சுகாதார கேடுகள் ஏற்படுகின்றன. இங்கு இறைச்சி உணவு வகைகள் தூய்மையற்ற
முறையில் சமைக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் அதனை உண்ணும் மக்கள் உடல் நலக்குறைவுக்கு ஆளாகின்றனர். எனவே ரமழான் உணவுத் திருவிழாவை பிரேசர் டவுனில் நடத்தக்கூடாது.” என தெரிவித்துள்ளனர்
ஈரானிடம் சிக்கிய பிரிட்டன் விமானங்கள்
ஈரானிடம் சிக்கிய பிரிட்டன் விமானங்கள்
ஈரானிடம் சிக்கிய பிரிட்டன் விமானங்கள் ,
விமான இரகசியங்களை பெற்று அவ்வாறே விமானங்களை தயாரிக்கும் ஈரான்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

நானுஓயா ரதெல்ல வீதியில் பாரிய விபத்து
நானுஓயா ரதெல்ல வீதியில் பாரிய விபத்து
நானுஓயா ரதெல்ல குறுக்கு வழி வீதியில் இன்று மாலை பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்த 8 பேர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாத்தறை பிரதேசத்தில் இருந்து யாத்திரிகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் பேருந்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
கச்சதீவு திருவிழா இன்று ஆரம்பம்
கச்சதீவு திருவிழா இன்று ஆரம்பம்
கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்தத் திருவிழா இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது.
இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரம் நேற்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இதேவேளை, சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்காத நிலையில் இந்திய யாத்திரிகர்கள் எவரும் கச்சதீவு திருவிழாவில் பங்கேற்கமாட்டார்கள் என்று இராமேஸ்வரம் – வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு நேற்றுமுன்தினம் எழுத்தில் அறிவித்திருந்தார்
காதலர் தினத்தில் யாழில் இடம்பெற்றுள்ள கொள்ளை
காதலர் தினத்தில் யாழில் இடம்பெற்றுள்ள கொள்ளை
காதலர் தினத்தன்று தனது மனைவிக்கு பரிசளிப்பதற்காக 29 பவுண் நகைகளை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய கணவர் உள்ளிட்ட இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டனர்.
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 25 வயதான ஆணும் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 49 வயதான பெண்ணுமே காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
காதலர் தினத்தன்று வல்வெட்டித்துறை பகுதியில் முதியவர்கள் உள்ள வீட்டினுள் 29 பவுண் நகைகள் திருடப்பட்டன.
திருட்டுச் சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
காதலர் தினத்தில் யாழில் இடம்பெற்றுள்ள கொள்ளை
இந்நிலையில் யாழ்ப்பாண நகரில் நேற்று 4 பவுண் நகைகளை அடகு வைக்க சென்ற போது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து பிரதான சந்தேகநபர் 25 பவுண் தாலியுடன் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக நடவடிக்கைக்காக வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இஸ்ரேலுக்குள் துப்பாக்கி சண்டை 11 பேர் காயம் பலி
இஸ்ரேலுக்குள் துப்பாக்கி சண்டை 11 பேர் காயம் பலி
இஸ்ரேலுக்குள் பாலஸ்தீன போர் படைகள் நுழைந்து
துப்பாக்கி சண்டை 11இஸ்ரேலியர்கள்காயம் ,பலி ,போலீஸ் இராணுவம் குவிப்பு
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

































