கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது எப்படி? கருணாநிதிக்கு தெரியுமா
Posted in இலங்கை செய்திகள்

கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது எப்படி? கருணாநிதிக்கு தெரியுமா

கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது எப்படி? கருணாநிதிக்கு தெரியுமா

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடியும், திமுகவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆர்டிஐ மூலம் பெற்ற தகவல்கள் தான். இந்நிலையில் தான் ஆர்டிஐயில் அண்ணாமலை பெற்ற தகவல்களின் முக்கிய விபரங்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவுக்கு சொந்தமான கச்சத்தீவு தற்போது இலங்கைக்கு சொந்தமாக உள்ளது. மத்தியில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி இருந்தபோது கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. தற்போது கச்சத்தீவு பிரச்சனையால் தமிழக மீனவர்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இதனால் கச்சத்தீவை மீண்டும் இந்தியாவுடன் சேர்க்க வேண்டும் என தமிழக மீனவர்கள் நீண்டகாலமாக கூறி வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் இன்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கச்சத்தீவு பற்றி பரபரப்பான கருத்துகளை தெரிவித்துள்ளார்.

அதில் ‛‛கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் எப்படி விட்டு கொடுத்தது என்பதற்கு புதிய ஆதாரம் கிடைத்துள்ளது. இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, நலன்களை பலவீனப்படுத்துவதே காங்கிரஸின் 75 ஆண்டு கால செயல்திறனாக உள்ளது. காங்கிரஸை எப்போதும் நம்பக்கூடாது என்று மக்கள் மனதில் உறுதியான நம்பிக்கை உள்ளது. கச்சத்தீவு விவகாரத்தில் இந்தியர்கள் ஒவ்வொருவரையும் காங்கிரஸ் கோபத்தில் ஆழ்த்தி உள்ளது” என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் இந்த பதிவுக்கு தமிழக பாஜக தலைவர் ஆர்டிஐ மூலம் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது தொடர்பான தகவல்களை பெற்றிருப்பது தான் காரணம். அண்ணாமலை பெற்றுள்ள தகவலில், ‛‛முன்னாள் பிரதமர் நேரு1961 மே 10ம் தேதி கச்சத்தீவுக்கு நான் எந்த முக்கியத்துவமும் தரவில்லை. அதற்கான உரிமையை விட்டு தயங்கமாட்டேன் என பேசியுள்ளார். கச்சத்தீவுக்கு இந்தியா உரிமை கொண்டாட வாய்ப்பு உள்ளதாக அப்போதைய அட்டர்னி ஜெனரல் எம்சி செடல்வாட் 1960ல் கூறியிருந்தாலும் கூட நேருவின் முடிவு எதிர்மாறாக இருந்தது.

மேலும் 1973ல் இந்தியா-இலங்கை வெளியுறவுத்துறை செயலாளர்கள் அளவிலான பேச்சுவார்த்தை கொழும்பில் நடந்தது. இந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை அப்போதைய வெளியுறவுத்துறை செயலாளர் கேவால் சிங் தெரிவித்தார். அப்போது ராமநாதபுரம் ராஜாவிற்கு கச்சத்தீவு உரிமை உள்ளது என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கப்படவில்லை என தெரிவித்தார்.

மேலும் இலங்கை ஜனாதிபதி சிறிமாவோ, டெல்லி வந்து இந்திரா காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பேச்சுவார்த்தையின் முடிவில் மத்திய அரசு தன்னிச்சையாகவே கச்சத்தீவை இலங்கைக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்பிறகு 1974ல் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது” என்ற விபரங்கள் உள்ளன.

இந்த தகவல் தான் தற்போது பூதாகரமாகி உள்ளது. இதுதொடர்பான செய்தியை குறிப்பிட்டு தான் பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திமுகவை சாடியுள்ளார். இதுதொடர்பாக நிர்மலா சீதாராமன், ‛‛தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் கேள்விக்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலமாக உண்மை. கச்சத்தீவு கைமாறியது காங்கிரஸ் ஆட்சியில் 1976ல். இதை பற்றிய முழு விபரம் 1974ஜுன் மாதம் அன்றைய முதல்வர் கருணாநிதியிடம் தெரிவிக்கப்பட்டது.

இன்று வரை கச்சத்தீவு பற்றி உண்மைக்கு புறம்பாக பிரச்சாரம் செய்து வரும் ஆளும் கட்சி திமுக இதற்கு பதிலளிக்க வேண்டும். கச்சத்தீவை காங்கிரஸ் கட்சியுடன் சேர்த்து தாரை வார்த்துவிட்டு, பிறரை கேள்வி கேட்கும் போக்கு மிகவும் தவறு” என கூறியுள்ளார்.

கச்சத்தீவை மீட்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. மேலும் சமீபத்தில் கூட முதல்வர் ஸ்டாலின் கச்சத்தீவு மீட்பு தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இத்தகைய சூழலில் இந்த தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. ஒவ்வொரு லோக்சபா தேர்தலின்போது கச்சத்தீவு விவகாரம் பூதாகரமாகும். அந்த வகையில் தான் தற்போதும் கச்சத்தீவு விவகாரம் பூதாகரமாகி உள்ளது.

கருணாநிதியை கரித்து கொட்டுவதை நிறுத்துங்கள் மனோ கணேசன்
Posted in இலங்கை செய்திகள்

கருணாநிதியை கரித்து கொட்டுவதை நிறுத்துங்கள் மனோ கணேசன்

கலைஞர் கருணாநிதியை கரித்து கொட்டுவதை நிறுத்துங்கள்!

சும்மா கலைஞர் கருணாநிதியை கரித்து கொட்டுவதை நிறுத்துங்கள்! இலங்கையில் தமிழர்களின் எல்லா இழப்புகளுக்கும், தமிழக அரசியல்வாதிகளையும், இந்திய

தலைவர்களையும் காரணமாக காட்டுவதையும் நிறுத்துங்கள்!! என கொழும்பு மாவட்ட எம்பி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

தமிழக இலங்கை அரசியல் பிரமுகர் மறைந்த மணவை தம்பியின் மைந்தர் மணவை அசோகனின் பவள விழா நிகழ்வு மட்டக்குளியில் நடைபெற்ற போது, அதில் அதிதியாக

கலந்துக்கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், தமது உரையில் மேலும் கூறியதாவது,

சும்மா கலைஞர் கருணாநிதியை கரித்து கொட்டுவதை நிறுத்துங்கள். இலங்கையில் தமிழர்களின் எல்லா இழப்புகளுக்கும், தமிழக அரசியல்வாதிகளையும், இந்திய

தலைவர்களையும் காரணமாக காட்டுவதை நிறுத்துங்கள். இலங்கையில் தமிழர்கள் கண்டு விட்ட இழப்புகளுக்கு முதற்காரணம், இலங்கை தமிழ் அரசியல் மேதைகள். இரண்டாவது காரணம், கொலைகார பேரினவாத அரசுகள்.

1940களில் கண்டிய சிங்கள தலைமைகளே தர முன் வந்த சமஷ்டியை எட்டி உதைத்தது யார்? 65:35 என்ற ஜனபரம்பலுக்கு, நியாயமேயற்ற 50:50 என்ற யதார்த்தமற்ற

கோரிக்கையை முன் வைத்து, பிரிட்டீஷ் அரசாங்கமே கைவிரிக்கும் நிலைமையை ஏற்படுத்தியது யார்? 1987ல் வடக்கு கிழக்கு மாநிலம் என்ற அடிப்படையை துவக்கி வைத்த, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தையும், மாகாணசபைகளையும் எட்டி உதைத்தது யார்?

இன்று, “பிச்சை வேண்டாம், நாயை பிடி!” என்ற மாதிரி, 13ம் திருத்தத்தையாவது முழுமையாக அமுல் செய்யுங்களேன் என ஓலமிடுவது யார்? இந்திய நாட்டு பிரதமராக இருந்த, மீண்டும் பதவிக்கு வரவிருந்த, ராஜீவின் மரணத்துக்கு காரணத்தை மறந்து

விட்டு, இப்போது இந்திய அரசு தலைவர்களிடம், அதிகாரிகளிடம் கோரிக்கை மேல் கோரிக்கை வைப்பது யார்? இன்றும்கூட சகோதர முஸ்லிம் மக்களின் தேசிய அபிலாஷைகளை உள்வாங்காமல், வடக்கு-கிழக்கு இணைப்பு என நிபந்தனை விதிப்பது யார்?

கருணாநிதியை கரித்து கொட்டுவதை நிறுத்துங்கள் மனோ கணேசன்

கருணாநிதியும், இந்திய தலைவர்களும் அதி உத்தமர்கள் என நான் கூற வரவில்லை. கருணாநிதியை கருணை நிதி எனவும் நான் கூறவில்லை. ராஜிவ் காந்தியை மகாத்மா காந்தி எனவும் நான் கூற வரவில்லை.

ராஜிவ் அனுப்பி வைத்த இந்திய அமைதி படை இங்கே கொலைகள், பாதகங்கள் செய்யவே இல்லை எனவும் நான் கூற வரவில்லை. “ஆர்மி” என்ற இராணுவம் எல்லா நாட்டிலும் ஒன்றுதான். கட்டவிழ்த்து விட்டால் இந்திய, இலங்கை, இங்கிலாந்து, அமெரிக்க இராணுவம் எல்லாம் ஒன்றுதான்.

இந்தியா ஒரு நாடு. இலங்கை இன்னொரு நாடு. தமது “தேச நலன்கள்” அவரவருக்கு முக்கியம் என்பதும், இந்தியர்கள் எமக்காக வரக்கூடிய தொடுவானம் எதுவரை என்பதும், நமது தமிழ் அரசியல் மேதைகளுக்கு விளங்கி இருந்திருக்க வேண்டும். அது சிங்கள அரசியல் மேதைகளுக்கு நன்கு தெரிந்து இருந்தது. அதனால்தான் அவர்கள் கெட்டிக்காரத்தனமாக காய் நகர்த்தி தமது இலக்கை அடைந்தார்கள்.

கருணாநிதியை கரித்து கொட்டுவதை நிறுத்துங்கள் மனோ கணேசன்

கருணாநிதியோ, ஜெயலலிதாவோ, எம்ஜியாரோ, இன்று ஸ்டாலினோகூட, தமக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தும் எட்டு கோடி தமிழருக்குதான் முதலில் பொறுப்புகூற கடமைபட்டுள்ளார்கள். இந்திரா காந்தியோ, ராஜீவ் காந்தியோ, இன்று நரேந்திர

மோடியோகூட, தமக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தும் நூற்றிமுப்பது கோடி இந்திய மக்களுக்குதான் முதலில் பொறுப்புகூற கடமைபட்டுள்ளார்கள்.

தங்கள் பார்வையில் தங்கள் நாட்டுக்கும், அரசாங்கத்துக்கும் தீமை எனை அவர்கள் கருதும் எந்த ஒரு காரியத்தையும் அவர்கள் செய்ய மாட்டார்கள்.

இதிலும்கூட, கருணாநிதி இலங்கை தமிழருக்காக, தமிழ் நாட்டில் இரண்டு முறை தனது திராவிட முன்னேற்ற கழக மாநில ஆட்சியை இழந்தார் என்பது இங்கே எத்தனை தமிழ் மேதைகளுக்கு ஞாபகம் இருக்கிறது? ஆகவே, சும்மா கலைஞர் கருணாநிதியை குறி

வைத்து கரித்து கொட்டுவதை நிறுத்துங்கள். முதலில் சுய விமர்சனம் செய்ய ஆரம்பியுங்கள். வரலாறு முழுக்க செய்து விட்ட சுய தவறுகளை தேடுங்கள். விடை கிடைக்கும்.

நான் சும்மா ஊருக்கு உபதேசம் செய்யவில்லை. அனுபவத்தை பகிர்கிறேன்.
எனக்கு பின்னடைவு ஏற்பட்டால், காரணத்தை எனக்குள்ளேதான் நான் தேடுகிறேன்.
ஆகவே விடையும் கிடைக்கிறது. இந்த யுக்தியை எனக்கு வரலாறு கற்று கொடுத்திருக்கின்றது.