Author: நிருபர் காவலன்
வேலைத்திட்டம் இன்றி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது சஜித் பிரேமதாசா
வேலைத்திட்டம் இன்றி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது சஜித் பிரேமதாசா
வேலைத்திட்டம் இன்றி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது நாட்டின் எழுந்துள்ள ஒவ்வொரு பிரச்சினைக்கும் பதில் நாடு பெறும் டொலர்களும் ரூபாக்களையும்
கொண்டே அமைகிறது. டொலரையும், ரூபாவையும் ஈட்டுவதற்கு முறையான வேலைத்திட்டம் இல்லாமல் வெறும் பேச்சுக்களை வைத்து பதவிக்கு வர யாராவது யோசித்தால்,
நாட்டு மக்கள் இரண்டாவது அவலத்தை எதிர்நோக்குவர். 2019 ஆம் ஆண்டைப் போன்று 2024 ஆம் ஆண்டிலும் மக்கள் பாரிய அனர்த்தத்தை எதிர்கொள்ள நேரிடும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
உண்மை, யதார்த்தம், தரவு, அறிவியல் மற்றும் பரிசோதனைகள், பகுப்பாய்வுகள் என்பவற்றின் அடிப்படையில் அமைந்த கொள்கை உருவாக்கத்திற்கு ஒரு நாடாக நாம் முன்னேற வேண்டும்.
கொள்கைகளை உருவாக்குதல் மற்றும் அவற்றை செயல்படுத்துதல், கண்காணித்தல், பின்தொடர்தல் மற்றும் மீளாய்வு செய்தல், பின்னூட்டம் ஆகியவை மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறானதொரு
வேலைத்திட்டத்தை தயாரிக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 122 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் அநுராதபுரம் கே.பீ.ரத்நாயக்க மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு 13 ஆம் திகதி இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இப்பாடசாலையில் நடன மற்றும் அரங்கேற்றங்கள் குழுவிற்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதியுதவியை பெற்றுத் தருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு வாக்குறுதியளித்தார்.
வேலைத்திட்டம் இன்றி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது சஜித் பிரேமதாசா
பொருளாதார அபிவிருத்தியின் மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும், நாட்டின் பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களின் எதிர்காலத்தை வலுப்படுத்த ரூபாக்களும் டொலர்களும் தேவை, இந்த டொலர்களை பொருளாதார
அபிவிருத்தியின் மூலம் மட்டுமே ஈட்டிக்கொள்ள முடியும். அறிவை மையமாகக் கொண்ட, ஏற்றுமதியை மையமாகக் கொண்ட பொருளாதாரம், நேரடி அன்னிய முதலீடு முறைமையின் ஊடாகவே, விழுந்து கிடக்கும் தேசத்தை மீண்டும் பெருமைக்குரிய தேசமாக கட்டியெழுப்ப முடியும் என எதிர்க்கட்சித்
தலைவர் தெரிவித்தார். கல்விக்கு முதலிடம், பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் முக்கிய நோக்கம் Education First என்ற கொள்கையாகும். கல்விக்கு முதலிடம் வழங்குவதே தனது பிரதான இலக்கு என்றாலும், இந்த கல்வி முறை
நவீனமயப்படுத்தப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். அரசாங்கத்தின் டிஜிட்டல் ஸ்ரீலங்கா என்பது உயரடுக்கு வர்க்கத்தின் பிள்ளைகளுக்கு மட்டுமே! உயரடுக்கு பெரும் பணக்காரர்களின் பிள்ளைகளுக்கே டிஜிட்டல் ஸ்ரீலங்கா உருவாக்கப்பட்டுள்ளது.
இலவசக் கல்வியை போதிக்கும் 10,126 அரச பாடசாலைகளில் 41 இலட்சம் பிள்ளைகளுக்கு இந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் போக்கை காண்பதிற்கில்லை.
இந்த பிள்ளைகளின் அடிப்படை மற்றும் மனித உரிமைகள் நாளுக்கு நாள் மீறப்பட்டு வருகின்றன. காலாவதியான கல்வி முறைமையினால் ஒரு சில துறைகளைத் தவிர, பெரும்பாலான துறைகளைச் சேர்ந்தவர்கள்
வேலையின்மை வரிசையில் நிற்கிறார்கள். தனியார் துறையில் கூட அவர்களால் வேலைவாய்பை எடுத்துக் கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். இது பெரும் துரதிஷ்டம் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக் காட்டினார்
ஹவுதிகள் புதிய விமானம் hypersonic missile சோதனை
ஹவுதிகள் புதிய விமானம் hypersonic missile சோதனை
ஹவுதிகள் புதிய விமானம் மற்றும் hypersonic missile சோதனை செய்துள்ளனர்
,தமது ஏவுகணைகள் விமானங்கள் சோதனை வெற்றிகரமாக முடைவடைந்துள்ளதாக ஹவுதி அன்சர் அல்ல அறிவித்துள்ளன
இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதை நிறுத்தியுள்ள கனடா
ஹவுதி தாக்குதலில் சரக்கு கப்பல் சேதம் ரஷ்யாவிடம் வீழ்ந்த நகரம்
ஹவுதி தாக்குதலில் சரக்கு கப்பல் சேதம் ரஷ்யாவிடம் வீழ்ந்த நகரம்
ஹவுதி தாக்குதலில் சரக்கு கப்பல் சேதம் ரஷ்யாவிடம் வீழ்ந்த நகரம்
அலறும் செங்கடல் ,முடங்கும் கப்பல் போக்குவரத்து ,திணறும் அமெரிக்கா பிரிட்டன் ,
பெரிய வெங்காய விலை தொடர்பில் இணக்கப்பாடு
பெரிய வெங்காய விலை தொடர்பில் இணக்கப்பாடு
பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் தங்களுடைய கையிருப்புகளை 450 முதல் 500ரூபாய்க்கு இடையில் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்தனர்.
வர்த்தக அமைச்சருடனான கலந்துரையாடலின் போது, இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவது தொடர்பில், அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்களுக்கும் வர்த்த அமைச்சருக்கும் இடையில் நேற்று அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் நளின் பெர்னாண்டோ, கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதாக கூறினார்.
சரக்கு கப்பல் சிறை பிடிப்பு தாக்குதலை நடத்தும் புது படை
சரக்கு கப்பல் சிறை பிடிப்பு தாக்குதலை நடத்தும் புது படை
சரக்கு கப்பல் சிறை பிடிப்பு தாக்குதலை நடத்தும் புது படை .
செங்கடல் போன்று புதிய களமுனை திறப்பு ,அதிரும் சர்வதேச பெருங்கடல் ,
திணறும் கப்பல் போக்குவரத்து
IMF பிரதிநிதிகளை இன்று சந்திக்கும் தேசிய மக்கள் சக்தி
IMF பிரதிநிதிகளை இன்று சந்திக்கும் தேசிய மக்கள் சக்தி
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை இன்று (14) சந்திக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இன்று காலை 10.00 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அந்த கட்சியின் பொருளாதார சபை உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதார அழுத்தங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தவுள்ளதாக சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.
IMF பிரதிநிதிகளை இன்று சந்திக்கும் தேசிய மக்கள் சக்தி
இதேவேளை, உத்தேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பதிவு மற்றும் கண்காணிப்பு சட்டமூலத்தை கைவிடுமாறும், இணையவழி பாதுகாப்புச் சட்டத்தை தடை செய்யுமாறும் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவித்துள்ளது.
மனித உரிமைகள் நியமங்கள் மதிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் திருத்தம் செய்யுமாறும் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட வேண்டுமென சர்வதேச நாணய நிதியத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
சிவில் சமூகத்தை கடுமையாக ஒடுக்கும் மற்றும் நாட்டில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் வகையிலான சட்டமூலங்களை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம், இலங்கையில் தனது வேலைத்திட்டத்தின் நம்பகத்தன்மையையும் வினைத்திறனையும் பாதுகாப்பதற்காக குறித்த உத்தேச சட்டமூலங்களை திருத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் பகிரங்க கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
லஹிரு திரிமான்ன பயணித்த கார் விபத்து
லஹிரு திரிமான்ன பயணித்த கார் விபத்து
அனுராதபுரம் திரப்பனை பகுதியில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லஹிரு திரிமான்ன பயணித்த கார், லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து இன்று (14) காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காரில் பயணித்த மூவரும் லொறியின் சாரதியும் மற்றுமொருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் கார் பலத்த சேதமடைந்துள்ளடன் லொறியும் வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளது.
மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து
மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து
ஹோமாகம டிப்போவிற்கு சொந்தமான பேருந்து ஒன்று இன்று(14) காலை விபத்துக்குள்ளானது.
NSBM பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றே இவ்வாறு இவ்விபத்தில் சிக்கியுள்ளது.
NSBM பல்கலைக்கழகம் அருகே சாரதியால் பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மதில் சுவரின் ஒரு பகுதியில் மோதி உடைத்துக்கொண்டு சென்றிருந்தது.
விபத்தின் போது பேருந்தில் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று பயணித்த போதிலும், விபத்தில் அவர்களுக்கு காயம் எதுவம் ஏற்படவில்லை.
இந்த விபத்தில் பேருந்து சேதமடைந்ததுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பலாங்கொடை பொலிஸ் துப்பாக்கிச் சூடு
அம்பலாங்கொடை பொலிஸ் துப்பாக்கிச் சூடு
அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடந்தோட்டை – பொனதுவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பாதாள உலக உறுப்பினரான ‘சமன்கொல்லா’ என்ற அகம்பொடி சஜித் சமன் பியந்தவின் வீட்டின் மீதே இன்று (14) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் வீட்டின் சுவர் மற்றும் கதவுகளை பல தோட்டாக்கள் தாக்கியுள்ளதுடன், சம்பவத்தின் போது சமன்கொல்லாவின் தாயும் மூன்று சகோதரிகளும் உடனிருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
சிவில் விமான சேவை அதிகார சபைக்கு புதிய பணிப்பாளர் நாயகம்
சிவில் விமான சேவை அதிகார சபைக்கு புதிய பணிப்பாளர் நாயகம்
இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபையின் புதிய பணிப்பாளர் நாயகம் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியாக எயார் வைஸ் மார்ஷல் எச்.எம்.எஸ்.கே.பி. கொட்டகதெனிய நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சரவையின் பரிந்துரைகளின் அடிப்படையில் துறைமுகங்கள், கடல்சார் விவகாரங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் இந்த நியமனம் நேற்று (13) வழங்கப்பட்டுள்ளது.
எயார் வைஸ் மார்ஷல் கொட்டகதெனிய, கொழும்பு பல்கலைக்கழகத்தில் சர்வதேச கற்கைகள் மற்றும் இந்தியாவின் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகளில் முதுகலைப் பட்டதாரி ஆவார்.
மேலும் அவர் அமெரிக்கா மற்றும் சீனாவின் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் மேலதிக கல்வியையும் பயின்றுள்ளார்.
இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபையின் பணிப்பாளர் நாயகமாகவும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் முன்னர் கடமையாற்றிய பி.ஏ.ஜெயகாந்த சமீபத்தில் ஓய்வு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வாள்வெட்டில் படுகொலை
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வாள்வெட்டில் படுகொலை
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வாள்வெட்டில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐவரை பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (13) பொலிஸாரால் முற்படுத்தப்பட்டனர்.
இதன்போது பொலிஸார் சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை நடத்த அனுமதி கோரிய நிலையில் மல்லாகம் நீதவான் 24 மணி நேரம் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.
காரைநகருக்கு சென்று விட்டு வட்டுக்கோட்டை திரும்பும்போது 23 வயதான தவச்செல்வம் பவிதரன் என்ற இளைஞர் கடத்தப்பட்டு வாள்வெட்டு மற்றும் சித்திரவதைக்கு இலக்காகியிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நான்கு சந்தேக நபர்கள் நேற்று கிளிநொச்சி பகுதியில் பதுங்கியிருந்த வேளையில் யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டது.
உயிரிழந்த இளைஞனை கடத்தி செல்ல பயன்படுத்தப்பட்ட கார் நேற்று இரத்த கறைகளுடன் மீட்கப்பட்டதுடன் குறித்த காரில் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் பொல்லுகள், இரும்பு கம்பிகள் என்பனவும் சந்தேக நபரொருவரின் காணியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் மீட்கப்பட்டது.
இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய மேலுமொரு சந்தேக நபர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டார்.
இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட மேலும் சிலரை தேடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அமைச்சர் டக்ளஸ் விடுத்துள்ள சவால்
அமைச்சர் டக்ளஸ் விடுத்துள்ள சவால்
போக்கற்றவர்கள் நரம்பற்ற நாக்குகளினால் கடலட்டைப் பண்ணைகளை பற்றி தவறாக பேசுவதாக சாடியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டைப் பண்ணைகளில் பல்தேசியக் கம்பனிகளோ சீனப் பிரஜைகளோ சம்மந்தப்பட்டிருப்பதை நிரூபிக்குமாறும் சவால் விடுத்துள்ளார்.
கடலட்டை பண்ணைகள் தொடர்பாக சமூக ஆர்வலர்களாக தம்மை அடையாளப்படுத்துவோர் சிலர் அவ்வப்போது வெளியிடும் கருத்து தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே, கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், எமது மாவட்டங்களில் காணப்படும் வளங்களை பயன்படுத்தி அந்தந்த பிரதேச மக்களின் வாழ்வியலை கட்டியெழுப்பும் நோக்கோடு, விஞ்ஞான ஆய்வுகள் மூலம் சூழலியல் பாதுகாப்பை உறுதி செய்து மேற்கொள்ளப்படும் கடலட்டை பண்ணைகளை எழுந்தமானமாக விமர்சிப்பதன் மூலம் எமது மக்களுக்கு துரோகம் இழைக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
சாதிக்கலாம் துணிந்துவா
சாதிக்கலாம் துணிந்துவா
அழுகை நிறுத்தி எழுந்து வா
அகிலம் படிக்க பறந்து வா
எதுவும் முடியும் துணிந்து வா
ஏவுகணையாய் வெடிக்க வா
கொஞ்சம் சிந்தை துலக்கி வா
கொடிய துயரை உடைத்து வா
அடக்குமுறையை கிழித்து வா
ஆளுமையை நிறுத்த வா
பிடித்த தெல்லாம் படிக்க வா
பிரியமதில் செலுத்த வா
அறத்தை நாட்டி எழுத வா
அறிவாயுதம் எடுத்து வா
இழிவு கடந்து எழுந்து வா
இமையம் தொடலாம் நடந்து வா
பறக்கும் தட்டாய் சுழன்று வா
பகையா அவர் எதிர்த்து வா
பங்கு சந்தை பழகு
பணம் தரும் உலகு
சாதனை இங்கு படை – உலக
சாதனையை இங்கே உடை ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 13-03-2024
இஸ்ரேல் காசா படுகொலைக்கு எதிராக கொலண்ட் Amsterdam இல் போராட்டம்
இஸ்ரேல் காசா படுகொலைக்கு எதிராக கொலண்ட் Amsterdam இல் போராட்டம்
இஸ்ரேல் காசா படுகொலைக்கு எதிராக கொலண்ட் மத்திய Amsterdam இல் பகுதியில் மக்கள் பெரும் போராட்டம் நடத்தியுள்ளனர்
இஸ்ரேல் அரச இராணுவத்தால் பாலஸ்தீனம் காசா மக்கள் மீது நடத்த படும் கொடிய இனப்படுகொலைக்கு எதிராக ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு இந்த போரினை நடத்தியுள்ளனர் .
காசா மீது இஸ்ரேல் புரிந்து வரும் கொடிய தாக்குதலுக்கு எதிராக சர்வதேச அளவில் மக்கள் பெரும் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
- தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

- DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்

- டிரம்ப் டிசம்பரில் மீண்டும் ஜியை சந்திப்பார் என்று கூறினார்

- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது

ஹாலண்டில் தமிழ் பெண் படுகொலை நகைகள் கொள்ளை
ஹாலண்டில் தமிழ் பெண் படுகொலை நகைகள் கொள்ளை
ஹாலண்டில் தமிழ் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் ,இவரது வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் நகைகள் என்பனவற்றை கொள்ளை அடித்து தமிழ் பெண்ணை படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்க படுகிறது
ஹொலண்ட் பேபார்வைக் பகுதியில் தனிமையில் வசித்து வந்த இலங்கை தமிழ் பெண் ஒருவரே இவ்விதம் படுகொலை செய்ய பட்டுள்ளார் .
இந்த படுகொலைகளின் காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,தொடர்ந்து போலீஸ் குற்ற தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
மேற்படி சம்பவம் ஹொலண்ட் தமிழர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
- FCID முன் ஆஜராக புதிய தேதியை ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளார்

- இன்று பல பகுதிகளில் மழை

- ஏழு நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது ஈரான்

- வானிலைத் துறை உயர் அலைகளுக்கு அம்பர் அறிவுரைகளை வழங்குகிற

- பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

- 2025 O/L பரீட்சையின் மறுபரிசீலனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன

- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

ரஷ்யா தாக்குதலில் 234 உக்ரைன் இராணுவம் பலி
ரஷ்யா தாக்குதலில் 234 உக்ரைன் இராணுவம் பலி
ரஷ்யா இராணுவ தாக்குதலில் 234 உக்ரைன் இராணுவம் பலியாகியுள்ளதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இரண்டு ஆண்டுகளாக நீடிக்கும் இந்த யுத்தத்தில் சிக்கி உக்ரைன் உள்கட்டமைப்பு முற்றாக சிதைந்துள்ளது .
இதனை அடுத்து ரஷ்ய இராணுவத்தின் முன்னரங்க நிலைகள் ஊடக முன்னேற்ற நடவடிக்கை மேற்கொண்ட உக்ரைன் படைகள் ,வழிமறிக்க பட்டு துடைத்து அழிக்க பட்டுள்ளதாக ரஷ்ய இராணுவத்தின் தளபதிகள் அறிவித்த்துள்ளன.
- தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

- DR காங்கோ விமான விபத்தில் 2 உயர் இராணுவ அதிகாரிகள் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்

- டிரம்ப் டிசம்பரில் மீண்டும் ஜியை சந்திப்பார் என்று கூறினார்

- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது

இலங்கை இந்திய அதிகாரிகள் கலந்துரையாடல்
இலங்கை இந்திய அதிகாரிகள் கலந்துரையாடல்
இந்தியாவின் மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் செயலாளர் ஸ்ரீ புபிந்தர் சிங் பல்லாவின் தலைமையிலான தூதுக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
நாட்டில் உள்ள மீள்புதுப்பிக்கத்தக்க முதலீடுகளுக்கான வாய்ப்புகள் தொடர்பில் இந்திய ஆய்வாளர்களுக்கும் இலங்கையின் அதிகாரிகளுக்கும் இடையே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மின்சக்தி , எரிசக்தி அமைச்சில் நேற்று காலை இடம்பெற்ற தூதுக்குழுவினருடனான சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒத்துழைப்பு, புதிய திட்டங்களை
ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள், தொழில்நுட்ப பரிமாற்றங்கள், முதலீட்டு வாய்ப்புகள், அரசாங்க கொள்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
கடற்கரை பகுதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு
கடற்கரை பகுதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு .
பேருவளை மாகல்கந்த கடற்கரை பகுதியில் பெண்ணொருவரின் சடலமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு (12) 09.00 மணியளவில் குறித்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாகவும், அவர் யார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இஸ்லாம் மதத்திற்கு மாறிய குற்றவாளி 14 வருடங்களின் பின் கைது
இஸ்லாம் மதத்திற்கு மாறிய குற்றவாளி 14 வருடங்களின் பின் கைது
மட்டக்களப்பில் இரு சிறுமிகளை சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் கைதாகி நீதிமன்ற பிணையில் வெளிவந்து நீதிமன்றில் ஆஜராகாமல் இருந்த நிலையில் மேல் நீதிமன்றில் 7 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்பளித்து திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, 14 வருடங்களாக மதம் மாறி பெயரை மாற்றி பொலன்னறுவையில் தலைமறைவாகி இருந்து வந்த குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (11) இவர் கைது செய்யப்பட்டதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள திருப்பெருந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய குறித்த நபர் நாவற்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பெண் பிள்ளைகளின் தாய் ஒருவரை திருமணம் முடித்த நிலையில் மனைவியின் இரு பெண் பிள்ளைகளை அடித்து சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் 2009 ம் ஆண்டு கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி வந்துள்ள அவரை, மட்டு மேல் நீதிமன்றிம் கடந்த 2016-2-25 ம் திகதி குற்றவாளி என இனங்கண்டு அவருக்கு 5 வருட சிறைத்தண்டனையும் 20 ஆயிரம் ரூபாவை அபதாரமாக செலுத்துமாறும் அதனை 3 மாதத்தில் செலுத்த
தவறின் 3 மாதங்கள் சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் 2 இலட்சம் ரூபாவை செலுத்துமாறும் அதனை செலுத்த தவறின் 2 வருட சிறைத்தண்டனையும் வழங்கி அவருக்கு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது .
இஸ்லாம் மதத்திற்கு மாறிய குற்றவாளி 14 வருடங்களின் பின் கைது
இந்த நிலையில் குறித்த நபர் தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில் குறித்த நபர் பாதிக்கப்பட் சிறுமிகள் உட்பட குடும்பத்துடன் இஸ்லாம் மதத்திற்கு மதம் மாறி அங்கு ஹூசையன் என பெயரை மாற்றி பொலன்னறுவையில் வசித்து வந்துள்தை கண்டறிந்தனர்.
இதனையடுத்து பொலிஸ் சார்ஜன் அரசரட்டணம் கோகுலன் குறித்த குற்றவாளியுடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு சாமர்த்தியமாக பேசி இன்று பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து கைது செய்துள்ளார்.
கைது செய்யப்பட்ட குற்றவாளியை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.





























