Author: நிருபர் காவலன்
ஹோட்டல் அறையில் இரண்டு சடலங்கள் மீட்பு
ஹோட்டல் அறையில் இரண்டு சடலங்கள் மீட்பு
பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து, சந்தேக நபரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று பொத்துவில் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அறுகம்பை பகுதியில் உள்ள ஹோட்டல் அறையில் தங்கியிருந்த பெண் ஒருவரே நேற்று (12) படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் மஹகளுகொல்ல பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த பெண் ஆண் ஒருவருடன் ஹோட்டல் அறையில் தங்க வந்திருந்த நிலையில், அறை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த முகாமையாளர் அறுகம்பை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு அறிவித்து அவர்களுடன் அறையின் கதவை உடைத்து திறந்துள்ளனர்.
ஹோட்டல் அறையில் இரண்டு சடலங்கள் மீட்பு
இதன்போது, குறித்த அறையில் பெண் ஒருவர் இரத்த வௌ்ளத்துடன் சடலமாக காணப்பட்டதாகவும், சந்தேகநபர் அறையை அண்டிய குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொத்துவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இஸ்ரேல் விமான நிலையம் மீது விமான தாக்குதல்
இஸ்ரேல் விமான நிலையம் மீது விமான தாக்குதல்
இஸ்ரேல் விமான நிலையம் மீது ஈராக்கிய போர் படைகள்
விமான மூலம் தாக்குதல்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

காசாவுக்கு செல்ல புது பாதை கண்டு பிடிப்பு கப்பல் மீது தாக்குதல்
காசாவுக்கு செல்ல புது பாதை கண்டு பிடிப்பு கப்பல் மீது தாக்குதல்
காசாவுக்கு செல்ல புது பாதை கண்டு பிடித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிப்பு.
கப்பல் மீது போர் படைகள் அதிரடி தாக்குதல்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வேலைநிறுத்தம்
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வேலைநிறுத்தம்
சம்பள பிரச்சினையை அடிப்படையாக கொண்டு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க போராட்டம் இன்று (13) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
இன்று மாலை 4.30 மணி வரை தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனத்தின் இணை செயலாளர் கே.எல்.டி.ஜி.ரிச்மண்ட் தெரிவித்தார்.
“நேற்று நண்பகல் 12 மணியளவில் நாட்டிலுள்ள 17 தேசிய பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் பணியிலிருந்து விலகினர். இதற்கு முக்கிய காரணம் கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலில் பல்கலைக்கழகங்களில் சம்பளம் குறைப்பு சரி
செய்யப்படும் என உறுதியளித்தமையே ஆகும். இதுவரை சரி செய்யப்படவில்லை. அதனால் தான் வேலைநிறுத்தம் நடக்கிறது. இதற்கு அதிகாரிகள்தான் பொறுப்பு. தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் அடுத்த வாரம் முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்” என்றார்.
வெப்பமான வானிலை அதிகரிக்கும்
வெப்பமான வானிலை அதிகரிக்கும்
நாட்டின் பல பகுதிகளில் வெப்பத்தின் அளவு தொடர்ந்தும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், வடமேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களிலும் அனுராதபுரம், மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மனித உடல் அதிகளவில் உணரக்கூடிய வகையில், உஷ்ணத்தின் அளவு அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேற்படி பகுதிகளில் வசிக்கும் மக்கள் விசேட அவதானம் செலுத்த வேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது
தொண்டையில் மாத்திரை சிக்கி 4 வயது சிறுமி மரணம்
தொண்டையில் மாத்திரை சிக்கி 4 வயது சிறுமி மரணம்
மருந்து மாத்திரை ஒன்று தொண்டையில் சிக்கியதில் நான்கு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காய்ச்சல் காரணமாக பாட்டி கொடுத்த மாத்திரையொன்று சிறுமியின் தொண்டையில் சிக்கியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
மயக்கமடைந்த சிறுமி மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று (11) உயிரிழந்துள்ளார்.
ஓஷதி சவிந்தயா ராஜபக்ஷ என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.
தாய் வௌிநாடு சென்றுள்ளதால் தாத்தா, பாட்டி மற்றும் இரண்டு சகோதரிகளுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
தந்தை அவர்கள் வசிக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள வேறொரு வீட்டில் வசித்து வருவதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மஹியங்கனை வைத்தியசாலையில் சிறுமியின் தொண்டையில் சிக்கியிருந்த மாத்திரை அகற்றப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விசாரணை அறிக்கை கிடைக்கும் வரை மரண விசாரணையை ஒத்திவைக்க திடீர் மரண பரிசோதகர் அமல் ஜயவர்தன நடவடிக்கை எடுத்திருந்தார்.
ரஷ்ய ராணுவ சரக்கு விமானம் தீப்பிடித்து விபத்து
ரஷ்ய ராணுவ சரக்கு விமானம் தீப்பிடித்து விபத்து
உக்ரைனிய போர்க் கைதிகளுடன் சென்ற ரஷ்ய ராணுவ விமானம் விபத்துக்குள்ளான ஒரு மாதத்தில், அதே போன்ற மற்றொரு நிகழ்வு நடந்துள்ளது. ரஷ்ய ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தியின்படி,
மாஸ்கோவின் வடகிழக்கே உள்ள இவானோவோ பகுதியில் ஒரு ரஷ்ய ராணுவ சரக்கு விமானம் தீப்பிடித்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது.
IL-76 என்ற இந்த விமானம் செவ்வாயன்று எஞ்சினில் தீப்பிடித்த நிலையில் தரையிறங்க முயற்சி செய்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தில் இருந்து கரும்புகையின் எழும் காட்சி சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியாகி வைரலாகியுள்ளது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த குறைந்தது 15 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. விமான எஞ்சின் தீப்பிடித்ததால் விபத்து நடந்தது என்றும் கூறியுள்ளது.
முன்னதாக ஜனவரி மாதம், 65 உக்ரைனியர்கள், 6 விமான பணியாளர்கள் மற்றும் மூன்று பேரை ஏற்றிச் சென்ற ரஷ்ய ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது. போர்க் கைதிகளின் விமானத்தை உக்ரைன் சுட்டுக் கொன்றதாக ரஷ்யா குற்றம் சாட்டியது. பெல்கொரோட் பகுதிக்கு உக்ரைனியக் கைதிகளை கொண்டு சென்றபோது விபத்து நடந்ததாகவும் தெரிவித்தது.
உக்ரைனியப் படைகளால் ஏவப்பட்ட ஏவுகணைகள் மூலம் விமானம் வீழ்த்தப்பட்டதாக இரண்டு மூத்த ரஷ்ய அதிகாரிகள் குற்றம் சாட்டினர். ஆனால், அதற்கு ஆதாரம் எதையும் அளிக்கவில்லை. இருப்பினும், உக்ரைன் ரஷ்யாவின் கூற்றை நிராகரித்தது. ரஷ்யா தவறான தகவலை வழங்குவதாகவும் பதிலளித்தது.
30 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் 21 கொலைகள்
30 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் 21 கொலைகள்
2024 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் மார்ச் மாதம் 12 ஆம் திகதி வரை பல்வேறு பகுதிகளில் 30 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
30 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 17 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏனைய 13 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.
மட்டக்குளிய அலிவத்த பகுதியில் துப்பாக்கிச் சூடு
மட்டக்குளிய அலிவத்த பகுதியில் துப்பாக்கிச் சூடு
மட்டக்குளிய அலிவத்த பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
எவ்வாறாயினும் துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று பிற்பகல் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, அம்பலாங்கொடையில் நேற்று இரவு 8.35 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சிசிரிவி காட்சிகள் வௌியாகியுள்ளன.
அம்பலாங்கொட, கலகொட, வெல வீதியில் அமைந்துள்ள கடையொன்றுக்கு அருகில் இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் மூவர் காயமடைந்திருந்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் டி 56 ரக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் செல்வது சிசிரிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
இதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டில், ஹலம்ப உதேஷ் மதுஷங்க என்ற பொடி மெந்திஸ் என்ற நபரும் மற்றும் தடல்லகே சித்தும் அங்ஜன என்ற சுது ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர்.
லொகு சத்துர என்ற சத்துர மதுஷங்க, பத்தினி வசம் அகில மற்றும் சங்கமகே சம்பிக்க துஷார ஆகியோர் காயமடைந்து, தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உன் இதயத்தை எனக்கு தா
உன் இதயத்தை எனக்கு தா
உன்னை தாங்கும் என் இதயம்
உனக்காய் தானே துடிக்கிறதே
கண்ணில் வடியும் நீர் துளியில்
கண்ணே காதல் தெரிகிறதே
மெல்ல பேசும் உன் மொழியில்
மேன்மை நன்றே தெரிகிறதே
மெலிந்த மேனி உன் அழகை
மெய்யாய் விழியும் ரசிக்கிறதே
கரும்பாய் இனிக்கும் உன் பேச்சை
காது கேட்க துடிக்கிறதே
கல்லறை சாயும் காலம் வரை – உன்
காலடி இருக்க பிடிக்கிறதே
நீளும் இந்த இரவுக்குள்ளே
நியத்தை நாங்கள் தொலைப்போமா
மீளா துடிக்கும் ஆசைகளை
மீள சுழற்சி செய்வோமா
உன் பதில் என்ன கூறாயோ
உன் உரிமம் எனக்கு தாராயோ
இன்றேனும் ஒரு நொடி ஏற்காயா
இதயத்தை எனக்கு தருவாயா ..?
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 12-03-2024
எரிந்த விமான தளம் விமானங்கள் அழிப்பு
எரிந்த விமான தளம் விமானங்கள் அழிப்பு
எரிந்த ரஷ்ய விமான தயாரிப்பு விமான தளம் ,
பல விமானங்கள் அழிப்பு , வெடித்த கடும் யுத்தம்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

லெபனான்னுக்குள் நுழைந்து இஸ்ரேல் விமானங்கள்தாக்குதல்
லெபனான்னுக்குள் நுழைந்து இஸ்ரேல் விமானங்கள்தாக்குதல்
தெற்கு லெபனான்னுக்குள் நுழைந்து இஸ்ரேல் விமானங்கள்
கடும் தாக்குதல் ,பதிலுக்கு திருப்பி அடிக்கும் ஹிஸ்புல்லா விமானங்கள்
வவுனியாவில் பாடசாலை ஒன்றில் இருந்து மோட்டார் குண்டுகள் மீட்பு
வவுனியாவில் பாடசாலை ஒன்றில் இருந்து மோட்டார் குண்டுகள் மீட்பு
வவுனியா, மடுகந்தை தேசிய பாடசாலையில் இருந்து வெடிக்காத நிலையில் 7 மோட்டார் குண்டுகள் நேற்று (11) மீட்கப்பட்டுள்ளதாக மடுகந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, மடுகந்தை தேசிய பாடசாலையில் இருந்த குப்பை குழியை துப்பரவு செய்த போது குறித்த குழிக்குள் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து பாடசாலை நிர்வாகத்தால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார், விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் அப் பகுதியில் இருந்து 7 மோட்டார் குண்டுகளை மீட்டனர்.
மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகளை வவுனியா நீதிமன்றின் அனுமதியுடன் அழிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
அதிரடியாக ரத்துச் செய்யப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்
அதிரடியாக ரத்துச் செய்யப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்
மீள் ஏற்றுமதிக்காக மிளகு உட்பட பல மசாலாப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் வகையில் அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்று (11) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு தனது எதிர்ப்பை வெளியிட்டார்.
குறிப்பாக மீள் ஏற்றுமதிக்காக இந்த வாசனை திரவியங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பது உள்நாட்டு வாசனை பொருள் விவசாயிகளை ஊக்கமிழக்க செய்வதாகவும் அதனால் உள்நாட்டு வாசனை பொருட்களின் சாகுபடி வீழ்ச்சியடையும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது உலகின் சிறந்த வாசனைப் பொருட்கள் வர்த்தகநாமங்களில் முதலிடம் வகிக்கும் இலங்கையின் வாசனைப் பொருட்களின் தரத்தில் இது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயங்களை கருத்திற்கொண்டு ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துவதற்கும் இலங்கைக்கு மீள் ஏற்றுமதிக்காக வாசனைப் பொருட்களை இறக்குமதி செய்வதை இடைநிறுத்துவதற்கும் தீர்மானித்ததாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
உள்நாட்டு வாசனைப் பொருட்களின் தரத்தை மேலும் பேணுவதற்கும், தோட்டப் பயிர்களாக உள்நாட்டு வாசனைப் பொருட்களை மேலும் மேம்படுத்துவதற்கு அரசாங்கம் ஆற்ற வேண்டிய பங்கு குறித்து நீண்ட ஆய்வுகளை மேற்கொள்வது தொடர்பில் அமைச்சரவையின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பிரதி பொலிஸ்மா அதிபர் தனபாலவிற்கு பதவி உயர்வு
பிரதி பொலிஸ்மா அதிபர் தனபாலவிற்கு பதவி உயர்வு
பிரதி பொலிஸ்மா அதிபர் டி.சி.ஏ. தனபால சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு பெப்ரவரி 29 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் மா அதிபரினால் குறித்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனபால தற்போது பொலிஸ் விசேட பணியகத்தின் பொறுப்பாளராக கடமையாற்றி வருகின்றார்
உலகின் மிகப்பெரிய பணக்கார பெண்
உலகின் மிகப்பெரிய பணக்கார பெண்
கோடீஸ்வரர்கள் அல்லது பெரும் பணக்காரர்கள் என்றாலே, எலான் மஸ்க், அர்னால்ட் பெர்னால்ட், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், இந்தியாவின் பணக்காரர் முகேஷ் அம்பானி போன்ற பெயர்கள் தான் நினைவுக்கு
வருகின்றன. ஆனால் வரலாற்றை புரட்டி பார்த்தால் மேலே குறிப்பிடப்பட்டவர்களின் ஒட்டுமொத்த சொத்துக்களை விடவும் அதிகமான சொத்துக்களை கொண்ட உலகின் பெரும்பணக்கார பெண்ணாக திகழ்ந்திருக்கிறார் சீனாவின் பேரரசி வூ.
ஆம்.. வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களின் படி பேரரசி வூ, தான் வாழ்ந்த சகாப்தத்தின் பணக்காரப் பெண்ணாக கருதப்படுகிறார்., சில வரலாற்றாசிரியர்கள் இதுவரை வாழ்ந்தவர்களிலேயே பெரும் பணக்காரப் பெண் என்றால் அது வூ தான் என்று குறிப்பிடுகின்றனர்..
பேரரசி வூ-வின் மொத்த சொத்து மதிப்பு 16 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ், முகேஷ் அம்பானி போன்ற பெரும் பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பை சேர்த்தாலும் பேரரசி வூ வின் சொத்துக்கு நிகராகதாம்.
அதாவது எலான் மஸ்க்கின் 229 பில்லியன் அமெரிக்க டொலர்கள், ஜெஃப் பெசோஸ் 174 பில்லியன் டொலர்கள் மற்றும் சுமார் 106.2 பில்லியன் டொலர் சொத்து மதிப்பு முகேஷ் அம்பானியின் ஆகியோரின் சொத்துமதிப்பை முறியடித்தது.
டாங் வம்சத்தைச் சேர்ந்த பேரரசி வூ ஒரு புத்திசாலி ஆட்சியாளர் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்., தானது ஆட்சி மற்றும் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள பல்வேறு உத்திகளைக் கையாண்டார் என்றும் கூறப்படுகிறது,
மேலும் தனது பதவியைப் பாதுகாக்க தனது சொந்த குழந்தைகளை நாடு கடத்துவது போன்ற கடுமையான நடவடிக்கைகளை வூ மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
பேரரசி வூ ஏறக்குறைய 15 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அந்த காலக்கட்டத்தில் சீனப் பேரரசு மத்திய ஆசியாவில் விரிவடைந்தது.. அவரது ஆட்சியின் கீழ், சீனப் பொருளாதாரம் செழித்த வளர்ந்ததுடன், தேயிலை மற்றும் பட்டு வர்த்தகத்தில் கணிசமான வளர்ச்சியைக் கண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரரசி வூவின் செழுமையான மற்றும் கம்பீரமான வாழ்க்கை முறை, ஆகியவை “Empress of China” என்ற தொலைக்காட்சித் தொடர் உட்பட பல்வேறு திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் சமகால மக்களுக்கும் தெரியவந்தது.
தேரர் படுகொலை சந்தேகநபர் சுட்டுக் கொலை
தேரர் படுகொலை சந்தேகநபர் சுட்டுக் கொலை
கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய விகாரை ஒன்றில் தேரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
அத்தனகல்ல யடவக்க பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதத்தை மீட்க சந்தேகநபரை அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேக நபர் தப்பிச் செல்ல முற்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் உயிரிழந்துள்ளார்.
கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய, கஹடான ஸ்ரீ ஞானராம விகாரையின் தேரர் ஒருவர் கடந்த ஜனவரி 23 ஆம் திகதி சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த சந்தேகநபர் மொனராகலை ஹம்பேகமுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் இருப்பதாக ஹம்பேகமுவ பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
32 வயதான சந்தேக நபர் அரலகங்வில பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
சிலாபம் விபத்தில் 22 வயது இளைஞன் பலி
சிலாபம் விபத்தில் 22 வயது இளைஞன் பலி
சிலாபம் – திகன்வெவ பிரதேசத்தில் வீதிக்கு அருகில் உழவு இயந்திரத்திற்கு எரிபொருளை நிரப்பிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன், அதேவீதியில் சென்ற டிப்பர் லொறியில் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சிலாபம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபம் – திகன்வெவ, மாரக்கெல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீதியின் அருகே நின்றுகொண்டு உழவு இயந்திரத்திற்கு எரிபொருள் ஊற்றிக்கொண்டிருந்த இளைஞன் மீதே இவ்வாறு டிப்பர் வாகனம் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனது தந்தைக்கு சொந்தமான சிறிய பெக்கோ இயந்திரத்தை தனது சொந்த உழவு இயந்திரத்தில் ஏற்றிச் சென்ற போது, உழவு இயந்திரத்தில் திடீரென எரிபொருள் தீர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, எரிபொருளை எடுத்து உழவு இயந்திரத்திற்கு நிரப்பிக் கொண்டிருந்த போது, அவ்வீதியூடாக அதிவேகமாக பயணித்த டிப்பர் வாகனம் வீதியை விட்டு விலகி அந்த இளைஞன் மீதி மோதி கவிழ்ந்துள்ளது.
விபத்தில் இளைஞன் தூக்கி வீசப்பட்டு சிறிய பள்ளமொன்றில் விழுந்ததாகவும், விபத்தில் கவிழ்ந்த டிப்பரின் முன்பக்க இரண்டு சக்கரங்கள் இளைஞனின் மார்பில் கடுமையாக தாக்கியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் சிலாபம் தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
உன்னை அறிந்து உனக்காய் அழுகிறேன்
உன்னை அறிந்து உனக்காய் அழுகிறேன்
நிலவே நிலவே நீ எங்கே
நினைவுகள் மட்டும் ஏன் இங்கே
ஏக்கத்துடன் நான் தவிக்க
ஏங்க வைத்து போனதெங்கே
அந்தி வரும் பொழுதில்
ஆகாயம் தேடுகிறேன்
ஆதரவு இல்லா
அன்பே வாடுகிறேன்
தன்னம் தனி வாடையிலே
தாகம் தவிக்கிறது
தாராளம் செய்தாய் அன்று
தவறிழைத்தேன் நான் இன்று
ஓடும் நதியில் ஆடும் படகாய்
ஓடினாயே அன்று
ஓடி ஆடும் அலையில்
ஓங்கி அடி வாங்கினாயே நன்று
வலி வாங்கி அமைதி கொண்டாய்
வாழ்வின் வழி தெரிந்து நின்றாய்
உன்னை புரியா தவறிழைத்தேன்
உன்னாலே இன்று ஊமை ஆனேன்
படிக்கும் போது தானே பிடிக்கிறதே
பக்குவம் அதில் தானே முளைக்கிறதே
காலம் கடந்து தெளிதல் பிழைதானே
கண்ணீர் வடிக்கிறேன் உனக்காய் நானே ,
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 11-03-2024
மனைவியை கொன்ற கணவன்
மனைவியை கொன்ற கணவன்
அலபாத்த, நிரியெல்ல பிரதேசத்தை சேர்ந்த மனைவியை, கணவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (10) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவம், விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குடும்பத் தகராறு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனித்தனி வீடுகளில் வசித்து வந்த நிலையில், உயிரிழந்த பெண் பிள்ளைகளுக்கான புத்தகங்களை எடுத்து வருவதற்காக கணவன் வீட்டுக்குச் நேற்று சென்ற போதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.
கணவன் மகைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் 40 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
43 வயதான சந்தேக நபர் பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.



























