Posted in இலங்கை செய்திகள்

இலங்கை பிரதமர் ரணில் செய்த வேலை

இலங்கை பிரதமர் ரணில் செய்த வேலை

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யோகா தினத்தில் இணைந்து செய்த வேலை சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது .

நாட்டு மக்கள் எரிபொருள் மாற்று உணவு விலையேற்றத்தினால தள்ளாடி கொண்டிருக்க ,ரணில் திறந்த வெளி யோகாதினத்தில் கலந்து கொண்டு உடலை ஆட்டிடை நிமிர்த்தும் காட்சிகள் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

பிரதமர் பதவி பறிபோகும் கவலையில் ரணில்

இந்தியாவே இலங்கைக்கு அதிகம் உதவியது ரணில்

ரணில் செய்த இந்த வேலை தாம் தமது அதிகாரத்தில் அமரவே மட்டும் என்பதையும் மக்களை பற்றிய கவலை
இல்லை என்கின்ற விடயத்தை இந்த சம்பவம் ஊடாக இடித்துரைத்துள்ளது .

    Posted in இலங்கை செய்திகள்

    வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்கள் வயதெல்லையில் மாற்றம்

    வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்கள் வயதெல்லையில் மாற்றம்

    இலங்கையில் அமைச்சரவை முடிவுகள் வெளியாகியுள்ளது ,இதில் சவுதி நாட்டுக்கு செல்லும் பெண்களின் வயதெல்லை 25 ஆகவும்

    மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும்பெண்களின் வயதெல்லை 23 ஆகவும் பிற நாடுகளுக்கு செல்லும் பெண்களின் வயதெல்லை 21 ஆகாவும் திருத்தும் செய்ய பட்டுள்ளது.

    ஒரு லட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு ஓட்டம்

    மத்திய கிழக்கு நாடுகளில் பணிக்கு செல்லும் பெண்கள் அதிகம்
    பாதிக்க படுவதால் இந்த வயதெல்லையில் அதிரடி மாற்றம் செய்ய பட்டுள்ளமை குறிப்பிட தக்கது.

      Posted in இலங்கை செய்திகள்

      அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

      2022.06.20 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

      (அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம், தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.)

      1. சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக ‘தேசிய தனி முகப்பிடம்’ (National Single Window) கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்

      உலக வர்த்தக அமைப்பின், வர்த்தக நடவடிக்கைகளை இலகுபடுத்தும் ஒப்பந்தம் 2017 பெப்ரவரி மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், இலங்கையும் குறித்த ஒப்பந்தத்தின் பங்காளராக கையொப்பமிட்டுள்ளது. குறித்த ஒப்பந்தத்திற்கமைய தேச

      எல்லைகளுடாக நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்படும் வர்த்தக நடவடிக்கைகள் (இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் மீள்ஏற்றுமதி) பங்கேற்பு வர்த்தக நடவடிக்கை ஒழுங்குபடுத்தல் அதிகார சபைகளுக்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும்

      தரவுகளை சமர்ப்பிப்பதற்கு ஒரு நிலையத்தை (தனி முகப்பிடம்) ஆரம்பித்து மேற்கொண்டு செல்வதற்கான கடப்பாடு இலங்கைக்கு உள்ளது. உலக வங்கியின் நிதியுதவியுடன் குறித்த கருத்திட்டத்திற்குரிய முறைசார்ந்த திட்டமொன்று 2018 ஆம்

      ஆண்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த திட்டத்திற்கமைய மூன்று கட்டங்களின் (03) கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள இக்கருத்திட்டத்தின் மதிப்பீட்டு செலவு 15 மில்லியன் அமெரிக்க டொலர்களாவதுடன், உலக வங்கி மற்றும் ஏனைய

      தரப்பினர்களுடன் குறித்த நிதியைப் பெற்றுக் கொள்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள ‘தேசிய தனி முகப்பிடம்’ கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி, பொருளாதார

      உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

      1. 2021 ஆம் ஆண்டுக்கான நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் ஆண்டறிக்கையை (இறுதி வரவு செலவு நிலைமை தொடர்பான அறிக்கை) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்

      2003 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க நிதி முகாமைத்துவ (பொறுப்புச்) சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய, நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் ஆண்டறிக்கை (இறுதி வரவு செலவு நிலைமை தொடர்பான அறிக்கை)

      குறித்த நிதியாண்டு முடிவடைந்த பின்னர் 05 மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்படல் வேண்டும். அதற்கமைய, 2021 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை குறித்த அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையை

      பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

      1. வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆழமற்ற கடற்பகுதியில் ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு கடலட்டை உற்பத்திக் கிராமங்களை உருவாக்கல்

      இயற்கைக் கடல்சார் சூழலில் பிடிக்கப்படும் கடலட்டைகளின் ஏற்றுமதியால் குறிப்பிடத்தக்களவு வெளிநாட்டு செலாவணியை ஈட்டிக்கொள்ள முடியும்.

      அதற்கமைய, பெற்றுக்கொண்ட அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு கடலட்டை இனப்பெருக்க நிலையத்தை நிறுவுதல், கடலட்டைப் பண்ணைகளை விரிவாக்கம் செய்தல், வணிக ரீதியான உயிரின வளர்ப்பு போன்ற கடலட்டை

      ஏற்றுமதிக் கிராமங்களை உருவாக்குவதன் மூலம் வெளிநாட்டு செலாவணி ஈட்டுவதை அதிகரித்தல் மற்றும் மீனவர் சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு வணிக ரீதியான கடலட்டை உயிரின

      அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

      வளர்ப்பு கருத்திட்டமொன்று இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையால் (NAQDA) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த கருத்திட்டத்திற்காக யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில்

      5000 ஏக்கர் காணிகளை அடையாளங் கண்டு, அவற்றில் 100 ஏக்கர்களுடன் கூடிய கடலட்டை உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக் கிராமங்களை உருவாக்குவதற்கும், மற்றும் 100 ஏக்கர் காணியில் 01 ஏக்கர் வீதம் கடலட்டை உற்பத்திப் பண்ணைகளைத் தாபித்து

      குறித்த கருத்திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்வதற்காகவும் கடற்றொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

      1. புகையிரதத் திணைக்களத்திற்கு சொந்தமான பாதுகாக்கப்பட்ட காணிகளை விவசாய நடவடிக்கைகளுக்காக தற்காலிக அடிப்படையில் வழங்கல்

      இலங்கைப் புகையிரதத் திணைக்களத்திற்குச் சொந்தமான பாதுகாக்கப்பட்ட காணிகள் மொத்தமாக 14,000 ஏக்கர்கள் காணப்படுவதுடன், அவற்றில் 10மூ வீதமான காணிகள் பல்வேறு பணிகளுக்காக குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.

      ஏனைய பாதுகாக்கப்பட்ட காணிகளில் புகையிரத் திணைக்களத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக துரிதமாகப் பெறவேண்டிய தேவையற்றதும் மற்றும் புகையிரதப் பாதை மற்றும் புகையிரத நிலையங்களுக்கு அருகாமையிலுள்ள

      பாதுகாக்கப்பட்ட காணிகளாக ஒதுக்கப்பட்டுள்ளதும், பயிர்ச்செய்கைக்குப் பொருத்தமானதுமான காணிகளை விவசாய நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதற்காக தற்காலிக குத்தகை அடிப்படையில் வழங்குவது உகந்ததென

      அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த பிரதேசங்களில் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, புகையிதப் பாதைக்கு அருகாமையில் வசிக்கின்றவர்களுக்கு மற்றும் குறைந்த வருமானங் கொண்ட குடும்பங்களுக்கு

      முன்னுரிமை வழங்கப்பட்டு குறித்த காணிகளை விவசாயப் பயன்பாட்டுக்காக குத்தகை அடிப்படையில் (01) ஒரு வருடகாலத்திற்கு வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்

      அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

      1. முத்துராஜவெலவில் அமைந்துள்ள 10 ஏக்கர் காணித்துண்டை மின்சார சபைக்கு ஒப்படைத்தல்

      முத்துராஜவெலவில் அமைந்துள்ள யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்திற்கு அருகாமையிலுள்ள 10 ஏக்கர் காணித்துண்டில் 300 மெகாவோட் டுNபு மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதற்காக

      இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபையால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த காணித்துண்டைக் கொள்வனவு செய்வதற்காக மின்சார சபையின் பணிப்பாளர் சபையின் அனுமதி கிடைத்துள்ளது.

      அதற்கமைய, அரச விலைமதிப்பீட்டாளரால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ள குறித்த காணித்துண்டின் சந்தைப் பெறுமதியை அறவிட்டு, அதனை இலங்கை மின்சார

      சபைக்கு வழங்குவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

      1. தேசிய சுற்றாடல் கொள்கையை அங்கீகரித்தல்

      2003 ஆம் ஆண்டு அப்போதைய சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள ‘தேசிய சுற்றாடல் கொள்கைகள் மற்றும் மூலோபாயங்கள்’ பிரகடனம் தற்போது இலங்கையில் சுற்றாடல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு

      வழிகாட்டுகின்ற பிரதான கொள்கைப் பிரகடனமாகும். கடந்த காலப்பகுதியில் தேசிய மற்றும் உலகளாவிய ரீதியில் சுற்றாடலுக்குப் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்ற குறிப்பிடத்தக்க மாற்றங்கள் பல இடம்பெற்றுள்ளன. அதேபோல் சுற்றாடல்

      மாற்றங்களால் ஏற்பட்டுள்ள பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார ரீதியான காரணிகளும், சுற்றாடல் விடயத்தானம் பற்றிய விஞ்ஞான ரீதியான அறிவும் குறிப்பிடத்தக்களவு மாற்றமடைந்துள்ளது. குறித்த நிலைமைகளைக் கருத்தில்

      கொண்டு சுற்றாடல் விடயதானம் பற்றிய நிபுணர்கள், பங்காளர்;கள் மற்றும் பொதுமக்கள் கருத்துகளையும் பெற்றுக்கொண்டு 2003 ஆம் வெளியிடப்பட்டுள்ள தேசிய சுற்றாடல் கொள்கை மற்றும் மூலோபாயங்கள், சமகாலத் தேவைகளுக்குப்

      அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

      பொருத்தமான வகையில் இற்றைப்படுத்துவதற்கு சுற்றாடல் அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதற்கமைய, தயாரிக்கப்பட்டுள்ள தேசிய

      சுற்றாடல் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

      1. வீட்டு மற்றும் வீட்டுப் பணிகள் சார்ந்த வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களில் ஈடுபடும் இலங்கைப் பெண்களின் குறைந்தபட்ச வயதெல்லையை திருத்தம் செய்தல்

      இலங்கைப் பெண்களுக்கு வீட்டு மற்றும் வீட்டுப் பணிகள் சார்ந்த வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களில் ஈடுபடுவதற்காக தற்போது காணப்படும் குறைந்தபட்ச வயதெல்லை சவூதி அரேபியாவுக்கு 25 உம், ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுக்கு 23 உம் மற்றும்

      எனைய நாடுகளுக்கு 21 உம் ஆகவுள்ளது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளைக் கருத்தில் கொண்டு குறித்த வயதெல்லையைத் திருத்தம் செய்தல் தொடர்பாக விடயங்களை ஆராய்ந்து

      அமைச்சரவைக்குப் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரின் தலைமையில் அமைச்சரவை உப குழுவொன்றை நியமிப்பதற்கு 2022 யூன் மாதம் 06 ஆம் திகதி

      இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த உபகுழுவால் சமர்;ப்பிக்கப்படும் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு இலங்கைப் பெண்கள் வீட்டு மற்றும் வீட்டுப் பணிகள் சார்ந்த வெளிநாட்டு

      அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

      வேலைவாய்ப்புக்களில் ஈடுபடுத்தும் குறைந்தபட்ச வயதை 21 ஆக திருத்தம் செய்வதற்கு அங்கீகாரம் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

      1. தேசிய சேமிப்பு வங்கிக்கான பாதுகாப்பு சேவைகளை வழங்குவதற்கான பெறுகைக் கோரல்

      தேசிய சேமிப்பு வங்கியின் தலைமைக் காரியாலயம் மற்றும் நாடளாவிய ரீதியில் காணப்படும் அதன் கிளைகளுக்குப் பாதுகாப்புச் சேவைகளை வழங்குவதற்காக தேசிய போட்டி விலைமுறிப் பொறிமுறையைப் பின்பற்றி விலைமனுக்

      கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய ஒவ்வொரு பிரிவுக்கமைய தகைமை பெற்ற பாதுகாப்புச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்குக் குறித்த ஒப்பந்தத்தை வழங்குவதற்கு நிதி,

      பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

      1. இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு புதிய அணுக்கக் கண்காணிப்பு முறைமையை நிறுவுதல்

      இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவால் தற்போது பயன்படுத்தப்படுகின்ற அணுக்கக் கண்காணிப்பு முறைமை (Surveillance System) 2008 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டுள்ளதுடன், சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான

      வகையில் குறித்த முறைமையை நவீனமயப்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. உலக வங்கியின் நிதியத்தின் கீழ் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிதிப்பிரிவின் நவீனமயப்படுத்தல்

      கருத்திட்டத்தின் மூலம் அதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக் கொள்வதற்கான இயலுமை உள்ளது. அதற்கமைய, தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் அணுக்கக் கண்காணிப்பு முறைமையைப் பொருத்திய லண்டன் பங்குப் பரிவர்த்தனைக் குழுவின்

      உறுப்பினரான இலங்கையில் அமைந்துள்ள Millennium IT Software (Pvt) Ltd. இற்கு நேரடிப் பெறுகைக் கோரலாக பிரேரிப்பொன்றை பெற்று குறித்த அணுக்கக் கண்காணிப்பு முறைமையை நவீனமயப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி,

      பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

      1. அநுராதபுரம் அஞ்சல் அலுவலக வளாகத்தில் கலப்பு அபிவிருத்தி வீடமைப்புக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்

      நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபை மூலம் அநுராதபுரம் அஞ்சல் அலுவலகத்தில் அமைந்துள்ள 99 ஏக்கர் காணியில் கலப்பு அபிவிருத்திக் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.

      காணியின் சமகாலப் பெறுமதிக்கு சமமான வகையில் அஞ்சல் அலுவலக வளாகத்தை அஞ்சல் திணைக்களத்திற்கு வழங்கும் உடன்பாட்டுடன், குறித்த காணியை விடுவிப்பதற்கு அத்திணைக்களம் உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய,

      முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அக்காணியை அரச காணிகள் கட்டளைச் சட்டத்தின் 6(1) உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கமைய விடுவிப்பு வழங்கலாக நகரக் குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு

      வழங்குவதற்கும், தேசிய அல்லது சர்வதேச போட்டி விலைமுறிப் பொறிமுறையைப் பயன்படுத்தி விருப்பக் கோரல்களைப் பெற்று பொருத்தமான முதலீட்டாளர்களைத் தெரிவு செய்து அரச-தனியார் பங்குடமைக் கருத்திட்டமாக இக்கருத்திட்டத்தை

      நடைமுறைப்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

      1. 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம்

      20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பற்றித் தற்போது நாட்டில் பெரும் சர்ச்சைக்குரிய நிலைமைகள் தோன்றியுள்ளமையால், 19 ஆவது அரசியலமைப்புத்

      திருத்தச் சட்டத்தில் காணப்படுகின்ற நன்மைபயக்கும் பிரிவுகளை மீண்டும் அறிமுகப்படுத்துமாறு கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

      இந்நிலைமையின் கீழ் தற்போது முகங்கொடுக்க நேர்ந்துள்ள நெருக்கடி நிலைமைகளைக் கருத்தில் கொண்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்திற்கும் இடையில் அதிகாரச் சமநிலையை ஏற்படுத்தும் வகையில்

      பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் கூட்டாகப் பொறுப்புக் கூறும் அமைச்சரவைக்கும் மற்றும் அரசியலமைப்புப் பேரவைக்கும் ஒருசில அதிகாரங்களை ஒப்படைக்கும் வகையிலும் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வது

      பொருத்தமானதென அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்

      சமர்ப்பித்துள்ள அடிப்படைச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை கொள்கை ரீதியான அங்கீகாரத்தை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் தொடரும் போராட்டம் 21 பேர் கைது

      இலங்கையில் தொடரும் போராட்டம் 21 பேர் கைது

      இலங்கை சற்று முன்னர் ஜனாதிபதி செயலகம் மற்றும் நிதி அமைச்சின் முன்பாக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு தமது போராட்டத்தை நடத்திய வண்ணம் உள்ளனர்.

      இந்த போர் களத்தில் வழமைக்கு மாறாக புத்த பிக்குகள் பெருமளவு கலந்து கொண்டுள்ளது ஆளும் கோட்டபாய அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

      இலங்கை ஜனாதிபதி கோத்தபாயவின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு இந்த போராட்டம் வீச்சம் பெற்றுள்ளது .

      கோட்டாவை வீட்டுக்கு போ ,ராஜபக்சே குடும்பம் ஒழிக என்ற கொட்டு முரசு வாசகங்கள் அதிர்ந்த வண்ணம் உள்ளது.

      இலங்கையில் தொடரும் போராட்டம் 21 பேர் கைது

      இந்த அமைதியான போராட்டத்தை நடத்திய இருபத்தி ஒரு போராட்டக்காரர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் .இதில் ஒரு புத்த பிக்கும் அடங்கும் என்பது குறிப்பிட தக்கது

      Posted in இலங்கை செய்திகள்

      கோட்டபாய பிறந்த நாளில் தொடரும் போராட்டம்

      கோட்டபாய பிறந்த நாளில் தொடரும் போராட்டம்

      இலங்கை செய்திகள்

      இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே 73 தாவது பிறந்த நாளில் காலிமுக திடலில் புத்துயிர் பெறும் போராட்டம் .

      கடந்த தினம் இரவு ஜனாதிபதி செயலகம் மற்றும் காலிமுக திடல் கோட்டா கோ காம திடலில் விஷேட கொட்டகைகள் அமைக்க பட்டு மக்கள் கோட்டபாய ராஜபக்சே 73 தாவது பிறந்தநாளுக்கு அதிர்ச்சிகர பரிசாக இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அந்த போராட்ட களத்தில் உள்ள மக்கள் சிலர் கருத்துரைத்துள்ளனர்.

      கோட்டபாய பிறந்த நாளில் தொடரும் போராட்டம்

      இந்த கோட்டபாய ராஜபக்சே அரசாங்கத்தை நாம் துரத்தியடித்து புதியவரை இந்த நாட்டுக்கு நியமிக்க வேண்டும் என அந்தமக்கள் வேண்டுதல் விடுத்துள்ளனர்.

      இலங்கை ஆளும் ஜனாதிபதி கோட்டபாய பிறந்த நாளில் தொடரும் போராட்டம் காரணமாக நாடு மீள செயல் இழக்கும் நிலக்கு செல்லும் என எதிர் பார்க்க படுகிறது.

      தொடரும் இந்த போராட்டம் காரணமாக மீளவும் பலத்த அவமானத்தை சந்தித்த வண்ணம் ராஜபக்சே குடும்பம் நாட்டை விட்டு தப்பி ஓடும் நிலை ஏற்படும் என போராட்டக்கார்கள் ஆவசேமாக முழங்கி வருகின்றனர்

      இதன் எதிர் திசை செயல் நோக்கு காலிமுக திடல் கோட்டா கோ காம போராட்டம் உச்சம் பெற போவதை எடுத்துரைக்கிறது .

        Posted in இலங்கை செய்திகள்

        ஜனாதிபதி செயலகம் முன்பாக மக்கள் போராட்டம்

        ஜனாதிபதி செயலகம் முன்பாக மக்கள் போராட்டம்

        இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சே
        ஜனாதிபதி செயலகம் முன்பாக மக்கள் ஒன்று கூடி பெரும் போராட்டம் ஒன்றை நடத்தினர்

        ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டம் நடத்தியமாக்கல் அங்கு கூடாரம் அமைத்து தொடர போர்த்தில் ஈடுபட்டனர்

        மக்கள் நடத்திய இந்த போராட்டம் காரணமா அந்த வழி சாலை போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டுள்ளது .

        இதனை அடுத்து இராணுவத்தினர் குவிக்க பட்டு மக்களால் கைது செய்ய பட்டு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர் .

        தொடர்ந்து ஸ்லேலு பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டால் நாடு பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது .

        கோட்டாவே வீட்டுக்கு போ லண்டனில் மக்கள் போராடட்ம

        இந்த பொருளாதார சுமைகளில் இருந்து தம்மை விடுவிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

        அதற்கு ஆளும் அரசு தமது அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளா வருகிறது என்ற நிலையில்

        கோட்டா கோ காம காலிமுக திடல் ஆர்ப்பாட்ட காரர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர் .

        மக்கள் சாத்வீக மாக நடைபெறும் போராட்டங்களில் வன்முறை புகுத்தி மக்களை கைது செய்யும் வேட்டையில் இராணுவம் ,
        போலீஸ் ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது .

          Posted in இலங்கை செய்திகள்

          சர்வதேச நாணய நிதியம் ரணில் பேச்சு

          சர்வதேச நாணய நிதியம் ரணில் பேச்சு

          இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதிய உறுப்பினர்களுகுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பேச்சு வார்த்தை நடத்திய வண்ணம் உள்ளார்.


          இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்கும் முகமாக இந்த விசேட சந்திப்பு இடம்பெற்ற வண்ணம் உள்ளது.

          சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்து இலங்கைக்கு உதவும் என அறிவித்திருந்த நிலையில் ,இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவுடன் இந்த பேச்சு இடம்பெற்ற வண்ணம் உள்ளது.

          சர்வதேச நாணய நிதியதுடன் பேச்சு

          தற்போது இடம்பெற்ற வண்ணம் உள்ள பேச்சுக்களின் பொழுது உடன்பாடு
          எட்டப்பட்டு சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

          நாட்டில் ஆளும் அரசுகளுக்கு எதிராக வெடித்துள்ள போராட்டம் ,அதனால் எழுந்து மனவிரக்தி தற்கொலைகள் என்பனவற்றை சர்வதேச நானன்யா நிதிய வருகையும் அதன் சந்திப்பும் தீர்த்து வைக்குமா என்பதே கேள்வியாக உள்ளது .

            Posted in இலங்கை செய்திகள்

            யாழில் ஆசிரியர்கள் மறியல் போராட்டம்

            யாழில் ஆசிரியர்கள் மறியல் போராட்டம்

            இலங்கை யாழில் ஆசிரியர்கள் மறியல் போராட்டம் ஒன்றை நடத்திய வண்ணம் உள்ளனர்.

            பரிட்ச்சை தாள்களை திருத்தும் இவர்கள் தமக்கு எரிபொருள் வாழ்க கோரி இந்த போட்டத்த்தில் ஈடுபட்டுள்ளனர்.

            எரிபொருள் வழங்க வேண்டும் அல்லது அதனை பெறுவதற்கான எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றை தமக்கு ஒதுக்கி தர வேண்டும் என இந்த ஆசிரியர்கள் கோரிக்கை வந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளளனர்.

            நாடெங்கும் வசிக்கும் மக்கள் எரிபொருள் ,எரிவாயு இல்லாது ஆளும் அரசுக்கு எதிராக போராடிய வண்ணம் உள்ளது.

            அவ்வாறான நிலையில் இந்த ஆசிரியர்கள் போராடட்ம யாழில் இடம்பெற்ற வண்னம் உள்ளது குறிப்பிட தக்கது.

              Posted in இலங்கை செய்திகள்

              விபத்தில் இருவர் மரணம்

              விபத்தில் இருவர் மரணம்

              இலங்கையில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற இரு வெவ்வேறு வீதி விபத்துக்களில் சிக்கி இருவர் மரணமாகியுள்ளனர் .

              இலங்கையில் நாள் தோறும் வீதி விபத்துக்களில் சிக்கி நான்கிற்கு மேற்பட்ட மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர் .

              வீதி விதிமுறைகளை கடைபிடிக்க மறுக்கும் மக்களின் செயல் நடவடிக்கையால் இந்த வீதி விபத்துக்கள் அதிகம் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.

              இந்த வீதி விபத்துக்களை தடுத்திட மக்களே விழிப்பாக செயல் படுத்தல் அவசியம் என்கிறது காவல்துறை .

                Posted in இலங்கை செய்திகள்

                கேரளா கஞ்சா 543 கிலோ மீட்பு

                கேரளா கஞ்சா 543 கிலோ மீட்பு

                உடப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியபாடு கடற்பிரதேசத்தில் இருந்து 543 கிலோ கிராம் கேரளா கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

                இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா இன்றைய இலங்கை மொத்த பெறுமதி 120 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

                வடமேற்கு கடற்படை கட்டளையின் புத்தளம் தம்பபண்ணி கடற்படையினர் ​நேற்று வழமை போல உடப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சின்னப்பாடு – பெரியபாடு கடற்பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

                இதன்போது, கடலில் சில பொதி செய்யப்பட்ட சில மூடைகள் மிதந்துபொண்டு வருவதனை அவதானித்த கடற்படையினர் அதனை கைப்பற்றி பார்வையிட்டுள்ளனர்.

                இதன்போதே, கேரளா கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கடலில் மிதந்து வந்த அனைத்து பொதிகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

                அரியாலையில் 68 மில்லியன் ரூபா கேரளா கஞ்சா மீட்பு

                173 மூடைகளில் ஒரு கிலோ வீதம் அடைக்கப்பட்டிருந்த 543 கிலோ கிராம் (ஈரமான எடை) கேரளக் கஞ்சா பொதிகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

                மேற்படி கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட குறித்த கேரளா கஞ்சாவை கடல்மார்க்கமாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்த சந்தேக நபர்கள், அதனை கரைக்கு கொண்டு வர முடியாமல் கடலிலேயே வீசிவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என தாம் நம்புவதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

                கேரளா கஞ்சா 543 கிலோ மீட்பு

                மேற்படி கேரளா கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டமையை அடுத்து, சின்னப்பாடு – பெரியபாடு பகுதியில் கடற்படையினர் மேலதிக தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

                மேலும், கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா பொதிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உடப்பு பொலிஸாரிடம்
                ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் கூறியுள்ளனர்.

                இலங்கைக்கு கடத்த பட்டு வரும் பெருமளவிலான கேரளா கஞ்சா இலங்கை கடற்படையினரால் மீட்ப பட்டு வருவதுடன் இவ்வாறான கஞ்சா கடத்தல் முறியடிக்க பட்டு வருகிறது .

                அவ்விதம் இருந்தும் இந்த கேரளா கஞ்சா கடத்தல் தொடர்ந்த வண்ணம் உள்ளமை போலீசார் மற்றும் இராணுவத்தினருக்கு இடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .

                  Posted in இலங்கை செய்திகள்

                  அவுஸ்ரேலியா பயணித்த அகதிகள் 41 பேர் நாடு கடத்தல்

                  அவுஸ்ரேலியா பயணித்த அகதிகள் 41 பேர் நாடு கடத்தல்

                  இலங்கை செய்திகள்.எதிரி செய்திகள் .

                  இலங்கையில் இருந்து ஆபத்தான கடல் வழியை பயன் படுத்தி அவுஸ்ரேலியா பயணித்த அகதிகள் 41 பேர் மீள இலங்கைக்கு நாடு கடத்த பட்டுள்ளனர்.

                  இவ்வாறு நாடு கடத்த பட்டவர்களில் பலர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டு பிணையில் விடுவிக்க பட்டுள்ளனர்.

                  அதிக பணத்தை உழைத்திட முடியும் என்ற நிலையில் ஆபத்தான கடல் வழியை பயன் படுத்தி அவுஸ்ரேலியாவுக்கு செல்லும் அகதிகள் கிறிஸ்ம்ஸ தீவில் தடுத்து வைக்க பட்டனர்.

                  இலங்கையர்கள் 15 பேரை நாடு கடத்திய அவுஸ்ரேலியா

                  அவ்விதம் கிறிஸ்ம்ஸ தீவில் தடுத்து வைக்க பட்ட அகதிகள் தற்போது அவுஸ்ரேலியா அரசாங்கத்தினால் இலங்கைக்கு நாடு கடத்த பட்டுள்ளனர் .

                  தொடராக இலங்கை கடல் வாழியை பயன் படுத்தி அவுஸ்ரேலியாவுக்கு அகதிகள் பயணித்த வண்ணம் உள்ளனர் .


                  ஆனால் அவுஸ்ரேலியா செல்லும் அகதிகள் கிறிஸ்மஸ தனி தீவில் தடுத்து வைக்க பட்டு ,இவ்வாறு இலங்கைக்கு மீள விசேட விமானம் மூலம் நாடு கடத்த பட்டு வருகின்றனர்.

                  இந்த பாதகமான விடயங்கள் இவ்வாறு உள்ள நிலையில் நம்ம தமிழர்கள்
                  அவுஸ்ரேலியாவுக்கு கடல்வழியூடாக பயணித்து வருகின்றமை குறிப்பிட தக்கது.

                    Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

                    அவுஸ்ரேலியாவில் பெண்ணை கற்பழித்த ஐந்து ஆண்கள்

                    அவுஸ்ரேலியாவில் பெண்ணை கற்பழித்த ஐந்து ஆண்கள்

                    அவுஸ்ரேலிய தலைநகர் சிட்டினி பகுதியில் இருபத்தி இரண்டு வயதுடைய இளம் பெண் ஒருவரை கற்பழித்த ஐந்து ஆண்கள் காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளனர்.


                    ஆன்லைன் மூலம் அறிமுகமான பெண் குறித்த நபரை தன்னை சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் ,அவரும் அந்த பெண்ணின் வேண்டுதலை ஏற்று குறித்த பகுதிக்கு வருகை தந்துள்ளார்.

                    அப்பொழுது இவர் அந்த பெண்ணை சந்தித்த பின்னர் அங்கு வருகை தந்த நான்கு ஆண்கள் இணைந்து இந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முனைந்துள்ள்ளனர் .

                    இளம் பெண்ணை நண்பர்க்ளுடன் சேர்ந்து கற்பழித்த மாமா

                    லண்டனில் இளம் பெண்ணை கற்பளித்த 10 பேர் கைது

                    பெண் பொலிசாருக்கு சம்பவத்தை தெரிவித்ததை அடுத்து ஐந்து ஆண்களும் கைது செய்ய பட்டு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்.

                    அவுஸ்ரேலியாவில் பெண்ணை கற்பழித்த ஐந்து ஆண்கள் இணையம் மூலம் ஏற்படட அறிமுகம் இன்று சிறை செல்லும் வரை வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது ,இது தான விதி என்கிறது .

                      Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

                      பீகாரில் கலவரம் பேரூந்து எரிப்பு

                      பீகாரில் கலவரம் பேரூந்து எரிப்பு

                      இந்திய செய்திகள்.எதிரி செய்திகள் .

                      மத்திய பிரதேச பீகாரில் இடம்பெற்று வரும் கலவரத்தில் ,போராட்ட காரர்களினால் பேரூந்துகள் தீ வைத்து எரிக்க பட்டுள்ளன.

                      தொடரும் இந்த கலவரம் பேரூந்து எரிப்பை அடுத்து ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது.

                      பீகாரில் தொடரும் கலவரம் வன்முறை மேற்கொண்ட 199 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் .அரச மற்றும் மக்கள் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களே இதுவரை கைது செய்ய பட்டுள்ளனர்.

                      தொடர்ந்து போராட்டம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

                        Posted in இலங்கை செய்திகள்

                        பாலியல் தொழிலுக்கு அனுமதி

                        பாலியல் தொழிலுக்கு அனுமதி

                        சொந்த விருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடும் மேஜரான தனிப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க வேண்டும் என ​பொலிஸாருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

                        சென்னை சிந்தாதிரிப்பேட்டைப் பகுதியில் உள்ள மசாஜ் சென்டர் ஒன்றில் பாலியல் தொழில் நடைபெறுவதாக வந்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார்

                        சோதனை நடத்தி, அந்த மசாஜ் சென்டரின் உரிமையாளர் உள்ளிட்ட சிலரை கைது செய்தனர்.

                        இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உதயக்குமார் என்பவர் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

                        இந்த மனு மீதான விசாரணை நீதிபதி என். சதிஷ்குமார் முன்பாக நடந்தது. அப்போது உதயக்குமார் தரப்பி்ல், இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் தனது பெயர் இல்லை என்றும், அதன்பிறகு சேர்க்கப்பட்ட அறிக்கையில் தனது பெயரை

                        சேர்த்துள்ளதாகவும், பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் தங்களது சொந்த விருப்பத்தின் பேரில் ஈடுபட்டால் அது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றம் ஆகாது என்றும், பாலியல் விடுதி நடத்துவது மட்டுமே சட்டவிரோதம் என்றும் வாதிடப்பட்டது.

                        பொஸார் தரப்பில், அந்த மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடைபெற்றதாகவும், அதன் அடிப்படையிலேயே அங்கிருந்தவர்களை கைது செய்து வழக்குப் பதிவு

                        செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி, மனுதாரரின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் இல்லாத நிலையில், அதன்பிறகு தாக்கல் செய்யப்பட்டுள்ள

                        அறிக்கையில் பெயர் சேர்க்கப்பட்டு இருந்தாலும் அவர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை, எனக்கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

                        மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பாலியல் தொழில்
                        நடைபெறும் விடுதிகளுக்கு சோதனைக்குச் செல்லும் பொலிஸார்


                        அங்குள்ள பாலியல் தொழிலாளர்களை கைது செய்யவோ அல்லது துன்புறுத்தவோ கூடாது.

                        பாலியல் விடுதிகளை நடத்துவதுதான் சட்டவிரோதம். மேஜரான தனிப்பட்ட
                        நபர்கள் தங்களது சொந்த விருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலி்ல் ஈடுபட்டால்


                        அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை பொலிஸார் தவிர்க்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          கோட்டா திட்டத்தின் கீழ் எரிபொருள் விநியோகம்

                          கோட்டா திட்டத்தின் கீழ் எரிபொருள் விநியோகம்

                          தொழில்சார் போக்குவரத்து முச்சக்கர வண்டிகள், தனியார் பேருந்துகள், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து வாகனங்கள், அலுவலக பணியாளர்கள் போக்குவரத்து வாகனங்கள் மற்றும் கொள்கலன் போக்குவரத்து வாகனங்கள் உள்ளிட்ட

                          போக்குவரத்துத் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்களுக்கு முன்னுரிமை அளித்து எரிபொருள் விநியோக திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

                          கோட்டா திட்டத்தின் கீழ் எரிபொருளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

                          அதன்படி, இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த
                          ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                            Posted in இலங்கை செய்திகள்

                            ஆண் ஒருவர் அடித்து கொலை

                            ஆண் ஒருவர் அடித்து கொலை

                            தெரணியகல, பொரங்கட பகுதியில் ஆன் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுளளார்

                            இவரது இந்த கொலைக்குரிய காரணம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
                            கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துழலர்

                            இந்த படுகொலைக்குரிய காரணம் தெரியவரவில்லை

                              Posted in இலங்கை செய்திகள்

                              நாட்டின் உணவு நெருக்கடிக்குத் தீர்வு

                              நாட்டின் உணவு நெருக்கடிக்குத் தீர்வு

                              நாட்டில் நிலவும் உணவுப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கு அனைத்து அமைச்சுக்களையும் ஒன்றிணைத்து உணவுப் பாதுகாப்புக்கான அமைச்சரவை உபகுழுவொன்றை அமைக்க வேண்டுமென அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) தீர்மானிக்கப்பட்டது.

                              தற்போதைய உணவு நெருக்கடியைச் சமாளிப்பதற்குப் பொறுப்பான அனைத்து நிறுவனங்களையும் ஒன்றிணைத்து, விரைவான முடிவுகளை எடுப்பதற்கும்,

                              எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைப் பின்பற்றுவதற்கும், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்கும் இந்தக் குழுவை அமைப்பது முக்கியம் என குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

                              பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) திஸ்ஸ விதாரண தலைமையில் அண்மையில் நடைபெற்ற (10) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவிலேயே இவ்வாறு

                              தீர்மானிக்கப்பட்டது. உணவு நெருக்கடியைச் சமாளிப்பதற்கு சார்க் உணவு வங்கி மற்றும் உலக உணவுத் திட்டம் (WFP) ஆகியவற்றின் ஆதரவைப் பெறுவது குறித்தும் இதில் கலந்துரையாடப்பட்டது.

                              நாட்டில் உணவுப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் நீக்கியதன் காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கட்டுப்படியாகாத நிலையில் அதிகரித்துள்ளதாக கோபா குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

                              சந்தையில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் உயர்ந்த விலையில் இருப்பதால் அரசாங்கத்தின் தலையீட்டில் நியாயமான விலையில் அவற்றை வழங்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயுமாறும் குழுவின் தலைவர் பரிந்துரைத்தார். இதன்படி,

                              உணவு ஆணையாளர் திணைக்களம், லங்கா சதோச நிறுவனம், கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம், அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம், மற்றும் ஏனைய

                              கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உணவு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

                              காலநிலை மாற்றம், ரஷ்ய – உக்ரைன் போர், உலக கோதுமை உற்பத்தியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, சோள உற்பத்தி, உர உற்பத்தியிலில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி,

                              எண்ணெய் விலை உயர்வு போன்றவற்றால் உணவு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். இந்நிலையில்,

                              அண்மைக்காலமாக இலங்கையில் ஏற்பட்ட உர நெருக்கடி மற்றும் அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறை மற்றும் பூச்சிக்கொல்லி பயன்பாடு தொடர்பான கொள்கை சிக்கல்கள் காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உற்பத்தி

                              குறைந்துள்ளது. இலங்கை சுங்க மற்றும் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தரவுகளின்படி, சம்பா அரிசி, நாட்டு அரிசி, சீனி, சிகப்பு

                              பருப்பு, கோதுமை மா, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, டின் மீன், பால்மா, செத்தல் மிளகாய் கொண்டைக்கடலை, கோழி இறைச்சி, மீன் மற்றும் முட்டை உள்ளிட்

                              16 வகையான உணவுகள் வர்த்தக அமைச்சினால் அத்தியாவசிய உணவுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

                              இந்த வருடத்தில் பெரும்போக மற்றும் சிறுபோகத்தில் உற்பத்தி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் அளவு மற்றும் நாட்டின் தேவையை பூர்த்தி

                              செய்ய தேவையான அளவு குறித்து அதிகாரிகள் குழுவுக்கு விளக்கினர். புதிய அரசாங்கத்தின் கீழ் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் அமைக்கப்பட்ட

                              விசேட குழு பிரதமர் அலுவலகத்தில் கூடி இது குறித்து ஆராயவிருப்பதாக விவசாய அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார். எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் நாட்டின் காபோஹைட்ரேட், புரதம் மற்றும் ஏனைய எரிசக்தி தேவைகளை எவ்வாறு பூர்த்தி

                              செய்வது என்பது தொடர்பில் விவசாய அமைச்சு முறையான வேலைத்திட்டத்தை வகுத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். இது அனைத்துப் பாராளுமன்ற

                              உறுப்பினர்களின் தகவலுக்காக மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும் என செயலாளர் தெரிவித்தார்.

                              இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார, கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, கௌரவ உதய கம்மன்பில, கௌரவ லசந்த

                              அழகியவன்ன, கௌரவ (வைத்தியகலாநிதி) சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, கௌரவ (கலாநிதி) ஹரினி அமரசூரிய, கௌரவ நிரோஷன் பெரேரா


                              ஆகியோரும் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

                                Posted in இலங்கை செய்திகள்

                                விசுவமடுவில் பொல்லுகளுடன் இராணுவம் -கைகள் முறிப்பு -ஸ்ரீதரன் எம்பி -வீடியோ

                                விசுவமடுவில் பொல்லுகளுடன் இராணுவம் -கைகள் முறிப்பு -ஸ்ரீதரன் எம்பி -வீடியோ

                                விசுவமடுவில் சிங்கள இராணுவத்தினர் இருவருக்கு கைகளை முறிக்க பட்ட நிலையில் அவர்கள் தர்மபுரம் மற்றும் கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க பட்டுள்ளார்கள் .

                                மேலும் விசுவமடுவில் பொல்லுகளுடன் இராணுவம் தமிழர்களை தாக்கிட தயார் நிலையில் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சீரும் சிறுத்தை சிறிதரன் எம்பி அவர்கள் சம்பவ இடத்தில நின்றவாறு கருத்தை தெரிவித்துளளார்.

                                அங்கு போத்தல்கள் உடைக்க பட்டுள்ளதாகவும் ,கடைகள் அடித்து பூட்ட பட்டு மக்களை அச்சுறுத்தும் செயல் நகர்வில் சிங்கள இராணுவம் ஏவிவிட பட்டுள்ளதாக பார்க்க படுகிறது.

                                எவ்வேளையும் தமிழர்கள் மீது விசுவமடுவில் பொல்லுகளுடன் இராணுவம் தாக்குதலை நடத்தி அதனை இன மோதலாக்கி மாற்றிடவும் ,கலவரத்தை தூண்டி விடவும் சிங்கள இராணுவம் சூழ்ச்சிகளை செய்து வருவதாக ஸ்ரீதரன் எம்பி குற்றம் சுமத்தியுள்ளார்.

                                சிங்கள இராணுவத்தின் இந்த சம்பவங்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

                                இதில் அழுத்தி காணொளி பார்க்க

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  பொலிஸ் துப்பாக்கியை பறிக்க முனைந்தவர் சுட்டு கொலை

                                  பொலிஸ் துப்பாக்கியை பறிக்க முனைந்தவர் சுட்டு கொலை

                                  இலங்கை நெலுவவ பகுதியில் சுற்றிவளைப்பு தேடுதலில் ஈடுபட்டிருந்த
                                  பொது குற்றவாளி ஒருவரை பொலிஸ் துப்பாக்கியை பறித்து அந்த காவல்துறை அதிகாரியை சுட முயன்ற பொழுது சந்தேக நபர் சுட்டு கொலை செய்ய பட்டுளளார் .

                                  போதைவஸ்து கடத்தல் குறித்த பகுதியில் இடம்பெறுவதாக தமக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அந்த பகுதியை சுற்றி வளைத்த பொழுது பொலிஸ் துப்பாக்கியை பறிக்க முனைந்தவர் சுட்டு செய்யப்பட்டுளளார்.

                                  குறித்த துப்பாக்கி சூட்டு கொலை தொடர்பில் மேற்கண்டவாறு பொலிஸ் திரைக் கதை வசனம் தயாரித்து வெளியிட்டுள்ளது.

                                  இலங்கையில் இவ்விதமான சுட்டு கொலை சம்பவங்கள் சாதாணமாக இடம்பெறுகின்றமை கவனிக்க தக்கது .

                                    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                    உக்கிரேனுக்கு ஆயுத உதவி பிரிட்டன் அறிவிப்பு

                                    உக்கிரேனுக்கு ஆயுத உதவி பிரிட்டன் அறிவிப்பு

                                    ரசியா இராணுவம் உக்கிரேன் மீது இராணுவ படையெடுப்பை நடத்திய வண்ணம் உள்ளது .

                                    தொடரும் போரில் உக்கிரேனுக்கு ஆயுத உதவி மாற்றும் இராணுவ பயிற்சிகள் என்பன வழங்கப்படும் என பிரிட்டன் அறிவிப்பு செய்துள்ளது.

                                    மூன்று மாத்திற்கு ஒருமுறை பத்தாயிரம் உக்கிரேன் இராணுவத்தினருக்கு பிரிட்டன் இராணுவம் பயிற்சிகளை வழங்கும் என்கிறது பிரிட்டன் .

                                    தொடர்ந்து உக்கிரேன் போரில் இருந்து மீளும் வரை தாம் உதவிகள் புரிவோம் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

                                    உக்கிரேன் போரினை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தொடர்ந்து நடத்தி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .