Posted in இலங்கை செய்திகள்

கேரளா கஞ்சா 543 கிலோ மீட்பு

கேரளா கஞ்சா 543 கிலோ மீட்பு

உடப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியபாடு கடற்பிரதேசத்தில் இருந்து 543 கிலோ கிராம் கேரளா கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா இன்றைய இலங்கை மொத்த பெறுமதி 120 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

வடமேற்கு கடற்படை கட்டளையின் புத்தளம் தம்பபண்ணி கடற்படையினர் ​நேற்று வழமை போல உடப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சின்னப்பாடு – பெரியபாடு கடற்பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன்போது, கடலில் சில பொதி செய்யப்பட்ட சில மூடைகள் மிதந்துபொண்டு வருவதனை அவதானித்த கடற்படையினர் அதனை கைப்பற்றி பார்வையிட்டுள்ளனர்.

இதன்போதே, கேரளா கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கடலில் மிதந்து வந்த அனைத்து பொதிகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அரியாலையில் 68 மில்லியன் ரூபா கேரளா கஞ்சா மீட்பு

173 மூடைகளில் ஒரு கிலோ வீதம் அடைக்கப்பட்டிருந்த 543 கிலோ கிராம் (ஈரமான எடை) கேரளக் கஞ்சா பொதிகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேற்படி கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட குறித்த கேரளா கஞ்சாவை கடல்மார்க்கமாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்த சந்தேக நபர்கள், அதனை கரைக்கு கொண்டு வர முடியாமல் கடலிலேயே வீசிவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என தாம் நம்புவதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கேரளா கஞ்சா 543 கிலோ மீட்பு

மேற்படி கேரளா கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டமையை அடுத்து, சின்னப்பாடு – பெரியபாடு பகுதியில் கடற்படையினர் மேலதிக தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா பொதிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உடப்பு பொலிஸாரிடம்
ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் கூறியுள்ளனர்.

இலங்கைக்கு கடத்த பட்டு வரும் பெருமளவிலான கேரளா கஞ்சா இலங்கை கடற்படையினரால் மீட்ப பட்டு வருவதுடன் இவ்வாறான கஞ்சா கடத்தல் முறியடிக்க பட்டு வருகிறது .

அவ்விதம் இருந்தும் இந்த கேரளா கஞ்சா கடத்தல் தொடர்ந்த வண்ணம் உள்ளமை போலீசார் மற்றும் இராணுவத்தினருக்கு இடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .

    Posted in இலங்கை செய்திகள்

    அரியாலையில் 68 மில்லியன் ரூபா கேரளா கஞ்சா மீட்பு

    அரியாலையில் 68 மில்லியன் ரூபா கேரளா கஞ்ச மீட்பு

    இந்தியா கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்ட நிலையில் அறுபத்தி எட்டு மில்லியன் ரூபா

    பெறுமதியான கஞ்சா மீட்க பட்டுள்ளது

    அரியாலை பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்க பட்டிருந்த நிலையில் இந்த கஞ்சா

    கடற்படையின் உதவியுடன் மீட்க பட்டுள்ளது

    இந்த கடத்தலோடு தொடர்புடைய சிலரும் கைது செய்ய பட்டுள்ளனர்

      Posted in இலங்கை செய்திகள்

      யாழில் – 55 மில்லியன் கேரளா கஞ்சா கடத்தல் முறியடிப்பு – மடக்கிய கடற்படை photo

      யாழில் – 55 மில்லியன் கேரளா கஞ்சா கடத்தல் முறியடிப்பு – மடக்கிய கடற்படை photo

      இந்தியா கேரளவில் இருந்து படகுகள் மூலம் 58 பொதிகளில் பொதி செய்ய பட்டு கடத்தி வரப்பட்ட

      சுமார் 183 கிலோ கஞ்சா ஐலங்கை கடல் படையினரால் காங்கேசன்துறை கடல் பகுதியில் வித்து மடக்கி பிடிக்க பட்டது

      இவ்வாறு கடத்தி வரப்பட்ட கஞ்சா தீயிட்டு கொழுத்த பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது

      கேரளா கஞ்சா
      கேரளா கஞ்சா