அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

Spread the love

2022.06.20 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

(அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம், தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.)

  1. சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக ‘தேசிய தனி முகப்பிடம்’ (National Single Window) கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்

உலக வர்த்தக அமைப்பின், வர்த்தக நடவடிக்கைகளை இலகுபடுத்தும் ஒப்பந்தம் 2017 பெப்ரவரி மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், இலங்கையும் குறித்த ஒப்பந்தத்தின் பங்காளராக கையொப்பமிட்டுள்ளது. குறித்த ஒப்பந்தத்திற்கமைய தேச

எல்லைகளுடாக நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்படும் வர்த்தக நடவடிக்கைகள் (இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் மீள்ஏற்றுமதி) பங்கேற்பு வர்த்தக நடவடிக்கை ஒழுங்குபடுத்தல் அதிகார சபைகளுக்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும்

தரவுகளை சமர்ப்பிப்பதற்கு ஒரு நிலையத்தை (தனி முகப்பிடம்) ஆரம்பித்து மேற்கொண்டு செல்வதற்கான கடப்பாடு இலங்கைக்கு உள்ளது. உலக வங்கியின் நிதியுதவியுடன் குறித்த கருத்திட்டத்திற்குரிய முறைசார்ந்த திட்டமொன்று 2018 ஆம்

ஆண்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த திட்டத்திற்கமைய மூன்று கட்டங்களின் (03) கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள இக்கருத்திட்டத்தின் மதிப்பீட்டு செலவு 15 மில்லியன் அமெரிக்க டொலர்களாவதுடன், உலக வங்கி மற்றும் ஏனைய

தரப்பினர்களுடன் குறித்த நிதியைப் பெற்றுக் கொள்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள ‘தேசிய தனி முகப்பிடம்’ கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி, பொருளாதார

உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  1. 2021 ஆம் ஆண்டுக்கான நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் ஆண்டறிக்கையை (இறுதி வரவு செலவு நிலைமை தொடர்பான அறிக்கை) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்

2003 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க நிதி முகாமைத்துவ (பொறுப்புச்) சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய, நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் ஆண்டறிக்கை (இறுதி வரவு செலவு நிலைமை தொடர்பான அறிக்கை)

குறித்த நிதியாண்டு முடிவடைந்த பின்னர் 05 மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்படல் வேண்டும். அதற்கமைய, 2021 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை குறித்த அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையை

பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  1. வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆழமற்ற கடற்பகுதியில் ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு கடலட்டை உற்பத்திக் கிராமங்களை உருவாக்கல்

இயற்கைக் கடல்சார் சூழலில் பிடிக்கப்படும் கடலட்டைகளின் ஏற்றுமதியால் குறிப்பிடத்தக்களவு வெளிநாட்டு செலாவணியை ஈட்டிக்கொள்ள முடியும்.

அதற்கமைய, பெற்றுக்கொண்ட அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு கடலட்டை இனப்பெருக்க நிலையத்தை நிறுவுதல், கடலட்டைப் பண்ணைகளை விரிவாக்கம் செய்தல், வணிக ரீதியான உயிரின வளர்ப்பு போன்ற கடலட்டை

ஏற்றுமதிக் கிராமங்களை உருவாக்குவதன் மூலம் வெளிநாட்டு செலாவணி ஈட்டுவதை அதிகரித்தல் மற்றும் மீனவர் சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு வணிக ரீதியான கடலட்டை உயிரின

அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

வளர்ப்பு கருத்திட்டமொன்று இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையால் (NAQDA) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த கருத்திட்டத்திற்காக யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில்

5000 ஏக்கர் காணிகளை அடையாளங் கண்டு, அவற்றில் 100 ஏக்கர்களுடன் கூடிய கடலட்டை உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக் கிராமங்களை உருவாக்குவதற்கும், மற்றும் 100 ஏக்கர் காணியில் 01 ஏக்கர் வீதம் கடலட்டை உற்பத்திப் பண்ணைகளைத் தாபித்து

குறித்த கருத்திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்வதற்காகவும் கடற்றொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  1. புகையிரதத் திணைக்களத்திற்கு சொந்தமான பாதுகாக்கப்பட்ட காணிகளை விவசாய நடவடிக்கைகளுக்காக தற்காலிக அடிப்படையில் வழங்கல்

இலங்கைப் புகையிரதத் திணைக்களத்திற்குச் சொந்தமான பாதுகாக்கப்பட்ட காணிகள் மொத்தமாக 14,000 ஏக்கர்கள் காணப்படுவதுடன், அவற்றில் 10மூ வீதமான காணிகள் பல்வேறு பணிகளுக்காக குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.

ஏனைய பாதுகாக்கப்பட்ட காணிகளில் புகையிரத் திணைக்களத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக துரிதமாகப் பெறவேண்டிய தேவையற்றதும் மற்றும் புகையிரதப் பாதை மற்றும் புகையிரத நிலையங்களுக்கு அருகாமையிலுள்ள

பாதுகாக்கப்பட்ட காணிகளாக ஒதுக்கப்பட்டுள்ளதும், பயிர்ச்செய்கைக்குப் பொருத்தமானதுமான காணிகளை விவசாய நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதற்காக தற்காலிக குத்தகை அடிப்படையில் வழங்குவது உகந்ததென

அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த பிரதேசங்களில் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, புகையிதப் பாதைக்கு அருகாமையில் வசிக்கின்றவர்களுக்கு மற்றும் குறைந்த வருமானங் கொண்ட குடும்பங்களுக்கு

முன்னுரிமை வழங்கப்பட்டு குறித்த காணிகளை விவசாயப் பயன்பாட்டுக்காக குத்தகை அடிப்படையில் (01) ஒரு வருடகாலத்திற்கு வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்

அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  1. முத்துராஜவெலவில் அமைந்துள்ள 10 ஏக்கர் காணித்துண்டை மின்சார சபைக்கு ஒப்படைத்தல்

முத்துராஜவெலவில் அமைந்துள்ள யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்திற்கு அருகாமையிலுள்ள 10 ஏக்கர் காணித்துண்டில் 300 மெகாவோட் டுNபு மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதற்காக

இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபையால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த காணித்துண்டைக் கொள்வனவு செய்வதற்காக மின்சார சபையின் பணிப்பாளர் சபையின் அனுமதி கிடைத்துள்ளது.

அதற்கமைய, அரச விலைமதிப்பீட்டாளரால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ள குறித்த காணித்துண்டின் சந்தைப் பெறுமதியை அறவிட்டு, அதனை இலங்கை மின்சார

சபைக்கு வழங்குவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  1. தேசிய சுற்றாடல் கொள்கையை அங்கீகரித்தல்

2003 ஆம் ஆண்டு அப்போதைய சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள ‘தேசிய சுற்றாடல் கொள்கைகள் மற்றும் மூலோபாயங்கள்’ பிரகடனம் தற்போது இலங்கையில் சுற்றாடல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு

வழிகாட்டுகின்ற பிரதான கொள்கைப் பிரகடனமாகும். கடந்த காலப்பகுதியில் தேசிய மற்றும் உலகளாவிய ரீதியில் சுற்றாடலுக்குப் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்ற குறிப்பிடத்தக்க மாற்றங்கள் பல இடம்பெற்றுள்ளன. அதேபோல் சுற்றாடல்

மாற்றங்களால் ஏற்பட்டுள்ள பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார ரீதியான காரணிகளும், சுற்றாடல் விடயத்தானம் பற்றிய விஞ்ஞான ரீதியான அறிவும் குறிப்பிடத்தக்களவு மாற்றமடைந்துள்ளது. குறித்த நிலைமைகளைக் கருத்தில்

கொண்டு சுற்றாடல் விடயதானம் பற்றிய நிபுணர்கள், பங்காளர்;கள் மற்றும் பொதுமக்கள் கருத்துகளையும் பெற்றுக்கொண்டு 2003 ஆம் வெளியிடப்பட்டுள்ள தேசிய சுற்றாடல் கொள்கை மற்றும் மூலோபாயங்கள், சமகாலத் தேவைகளுக்குப்

அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

பொருத்தமான வகையில் இற்றைப்படுத்துவதற்கு சுற்றாடல் அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதற்கமைய, தயாரிக்கப்பட்டுள்ள தேசிய

சுற்றாடல் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  1. வீட்டு மற்றும் வீட்டுப் பணிகள் சார்ந்த வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களில் ஈடுபடும் இலங்கைப் பெண்களின் குறைந்தபட்ச வயதெல்லையை திருத்தம் செய்தல்

இலங்கைப் பெண்களுக்கு வீட்டு மற்றும் வீட்டுப் பணிகள் சார்ந்த வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களில் ஈடுபடுவதற்காக தற்போது காணப்படும் குறைந்தபட்ச வயதெல்லை சவூதி அரேபியாவுக்கு 25 உம், ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுக்கு 23 உம் மற்றும்

எனைய நாடுகளுக்கு 21 உம் ஆகவுள்ளது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளைக் கருத்தில் கொண்டு குறித்த வயதெல்லையைத் திருத்தம் செய்தல் தொடர்பாக விடயங்களை ஆராய்ந்து

அமைச்சரவைக்குப் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரின் தலைமையில் அமைச்சரவை உப குழுவொன்றை நியமிப்பதற்கு 2022 யூன் மாதம் 06 ஆம் திகதி

இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த உபகுழுவால் சமர்;ப்பிக்கப்படும் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு இலங்கைப் பெண்கள் வீட்டு மற்றும் வீட்டுப் பணிகள் சார்ந்த வெளிநாட்டு

அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

வேலைவாய்ப்புக்களில் ஈடுபடுத்தும் குறைந்தபட்ச வயதை 21 ஆக திருத்தம் செய்வதற்கு அங்கீகாரம் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

  1. தேசிய சேமிப்பு வங்கிக்கான பாதுகாப்பு சேவைகளை வழங்குவதற்கான பெறுகைக் கோரல்

தேசிய சேமிப்பு வங்கியின் தலைமைக் காரியாலயம் மற்றும் நாடளாவிய ரீதியில் காணப்படும் அதன் கிளைகளுக்குப் பாதுகாப்புச் சேவைகளை வழங்குவதற்காக தேசிய போட்டி விலைமுறிப் பொறிமுறையைப் பின்பற்றி விலைமனுக்

கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய ஒவ்வொரு பிரிவுக்கமைய தகைமை பெற்ற பாதுகாப்புச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்குக் குறித்த ஒப்பந்தத்தை வழங்குவதற்கு நிதி,

பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  1. இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு புதிய அணுக்கக் கண்காணிப்பு முறைமையை நிறுவுதல்

இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவால் தற்போது பயன்படுத்தப்படுகின்ற அணுக்கக் கண்காணிப்பு முறைமை (Surveillance System) 2008 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டுள்ளதுடன், சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான

வகையில் குறித்த முறைமையை நவீனமயப்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. உலக வங்கியின் நிதியத்தின் கீழ் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிதிப்பிரிவின் நவீனமயப்படுத்தல்

கருத்திட்டத்தின் மூலம் அதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக் கொள்வதற்கான இயலுமை உள்ளது. அதற்கமைய, தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் அணுக்கக் கண்காணிப்பு முறைமையைப் பொருத்திய லண்டன் பங்குப் பரிவர்த்தனைக் குழுவின்

உறுப்பினரான இலங்கையில் அமைந்துள்ள Millennium IT Software (Pvt) Ltd. இற்கு நேரடிப் பெறுகைக் கோரலாக பிரேரிப்பொன்றை பெற்று குறித்த அணுக்கக் கண்காணிப்பு முறைமையை நவீனமயப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி,

பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  1. அநுராதபுரம் அஞ்சல் அலுவலக வளாகத்தில் கலப்பு அபிவிருத்தி வீடமைப்புக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்

நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபை மூலம் அநுராதபுரம் அஞ்சல் அலுவலகத்தில் அமைந்துள்ள 99 ஏக்கர் காணியில் கலப்பு அபிவிருத்திக் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.

காணியின் சமகாலப் பெறுமதிக்கு சமமான வகையில் அஞ்சல் அலுவலக வளாகத்தை அஞ்சல் திணைக்களத்திற்கு வழங்கும் உடன்பாட்டுடன், குறித்த காணியை விடுவிப்பதற்கு அத்திணைக்களம் உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய,

முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அக்காணியை அரச காணிகள் கட்டளைச் சட்டத்தின் 6(1) உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கமைய விடுவிப்பு வழங்கலாக நகரக் குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு

வழங்குவதற்கும், தேசிய அல்லது சர்வதேச போட்டி விலைமுறிப் பொறிமுறையைப் பயன்படுத்தி விருப்பக் கோரல்களைப் பெற்று பொருத்தமான முதலீட்டாளர்களைத் தெரிவு செய்து அரச-தனியார் பங்குடமைக் கருத்திட்டமாக இக்கருத்திட்டத்தை

நடைமுறைப்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  1. 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம்

20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பற்றித் தற்போது நாட்டில் பெரும் சர்ச்சைக்குரிய நிலைமைகள் தோன்றியுள்ளமையால், 19 ஆவது அரசியலமைப்புத்

திருத்தச் சட்டத்தில் காணப்படுகின்ற நன்மைபயக்கும் பிரிவுகளை மீண்டும் அறிமுகப்படுத்துமாறு கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலைமையின் கீழ் தற்போது முகங்கொடுக்க நேர்ந்துள்ள நெருக்கடி நிலைமைகளைக் கருத்தில் கொண்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்திற்கும் இடையில் அதிகாரச் சமநிலையை ஏற்படுத்தும் வகையில்

பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் கூட்டாகப் பொறுப்புக் கூறும் அமைச்சரவைக்கும் மற்றும் அரசியலமைப்புப் பேரவைக்கும் ஒருசில அதிகாரங்களை ஒப்படைக்கும் வகையிலும் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வது

பொருத்தமானதென அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்

சமர்ப்பித்துள்ள அடிப்படைச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை கொள்கை ரீதியான அங்கீகாரத்தை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

Leave a Reply