பிரியாணி தோற்று போகும் சுவையில் குஸ்கா முட்டை வறுவல்
Posted in பங்கு சந்தை Forex Trade

bitcoin பாரிய வீழ்ச்சி பணத்தை அள்ளும் நேரம்

உலக நாடுகளில் மிக முதல்தர கிரிப்டோ கரன்சியாக விளங்கும் bitcoin பாரிய வீழ்ச்சி. பணத்தை அள்ளும் நேரம் .இப்போது உங்களுக்கு கிடைக்க பெற்றுள்ளது.

நமது டெக்கினிக்கல் கணிப்பின் பிரகாரம் bitcoin பாரிய வீழ்ச்சி நோக்கு செல்லும் இடமாக பணத்தை அள்ளும் நேரம் 13950 இந்த எல்லை பகுதி உடைத்தால் அடுத்து 11000 பகுதிகளை எட்டி பிடிக்கும் வாய்ப்பு உள்ளது .

அதன் பின்னர் இதன் ஏறு வரிசை அதிவேக உச்சம் ஒரு லட்சம் வரை எகிறும் நிலை காண படுகிறது.


எதிர் வரும் வாரம் bitcoin பாரிய வீழ்ச்சி நோக்கி சென்று பின்னர் அசுர வேகத்தில் மேல் நோக்கி செல்லும்.

ஆகையால் பங்கு சந்தையில் ஒரே நாளில் செல்வந்தராகிட பணத்தை அள்ளும் நேரம் இப்போது உங்களுக்கு கிடைக்க பெற்றுள்ளது.

இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன் படுத்தி முந்தி கொண்டு bitcoin வாங்கிட தயார் நிலையில் காத்திருங்கள் .

நாம் கூறும் இந்த எல்லை பகுதியை bitcoin இறங்குநிலை அண்மித்ததும் ஒரு பேசிண்டேஜ் விகிதம் பணம் கையடாலை புரிந்து , சாதூரியமாக கையாண்டு ,பணத்தை bitcoin பங்கு சந்தையில் பணத்தை அள்ளி கொள்ளுங்கள்.

உதாரணம் ஆயிரம் டொலர் உங்களிடம் வைப்பில் இருந்தால் நீங்கள் bitcoin வாங்கிட 0.03 என்பதை பயன் படுத்தி வாங்கி கொள்ளுங்கள் .

இந்த பகுதி என்பது ஆபத்தின்றி காத்திருந்து bitcoin பங்கு சந்தையில் அதிக இலாபத்தை பெற்றிடும் வழியாகும் .

bitcoin இலாபத்தை take profit பெற்று கொள்ளும் இடமாக 25000 அல்லது 28000 பகுதிகளை வைத்து கொள்ளுங்கள்.

bitcoin பாரிய வீழ்ச்சி பணத்தை அள்ளும் நேரம்


இந்த பகுதிகள் மிக இலகுவாக குறுகிய கால பகுதியில் bitcoin மூலம் இலாபத்தை பெற்றுக்கொள்ளும் வழியாக டெக்கினிக்கல் கணிப்பீட்டில் காண முடிகிறது .

எனவே அவசர பட்டு இப்பொழுது வாங்கிடாது காத்திருந்து நாம் குறிப்பிட்ட பகுதி அல்லது அதனை கிட்ட தட்ட அண்மித்த பின்னர் bitcoin வாங்கி அதிக இலாபத்தை பெற்று கொள்ளுங்கள்.


நமது கணிப்பீடு அறிக்கை கணிப்பு துல்லியமானது எனின் , கிட்ட தட்ட மூன்று வருடங்களின் பின்னர் bitcoin இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது எனலாம்.

இந்த எல்லை பகுதியை bitcoin சந்தை எட்டும் பொழுது பெரும் சுனாமி தாக்குதலாக சந்தை அதிர்வலைகள் காணப்படும்.


அதனால் பணம் கையாடல் உரியமுறையில் கையாண்டால் bitcoin பங்கு சந்தையில் இதில் நீங்கள் வெற்றி கொள்ள முடியும்

  • வன்னி –
https://www.youtube.com/watch?v=CNbM4QJYakI&list=PLaP0pLxA2cX9GqISB2TxUmNqaziYUplta
    Posted in இலங்கை செய்திகள்

    பொறுப்புக்கூறலை தவிர்ப்பதற்கு பொருளாதாரப் பேரழிவின் பின்னால் ஒளியும் சிறிலங்கா ! ஐ.நாவுக்கு எச்சரிக்கை !!

    பொறுப்புக்கூறலை தவிர்ப்பதற்கு பொருளாதாரப் பேரழிவின் பின்னால் ஒளியும் சிறிலங்கா ! ஐ.நாவுக்கு எச்சரிக்கை !!

    ஜெனீவா-ஐ.நா மனித உரிமை பேரவையின் 50வது கூட்டத் தொடரில், சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், ஜூன் 13, 2022 அன்று சபையில் கூறியதானது, தமிழ்மக்களுக்கு எதிராக சிறிலங்காவினால் இழைக்கப்பட்ட கொடுங்குற்றங்களுக்கு

    பொறுப்புக் கூறுவதைத் தவிர்ப்பதற்காக, சபையை தவறாக வழிநடத்துவதை நோக்கமாகக் கொண்டது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையை எச்சரித்துள்ளது.

    தமிழ்மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறத் தவறியதை மறைக்க,

    சிறிலங்கா தனது தற்போதைய பொருளாதாரப் பேரழிவை முன்னிறுத்துவதனை ஐ.நா பேரவையும், சர்வதேச சமூகமும் அனுமதிக்க கூடாது வலியுறுத்துகின்றோம் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் கோரியுள்ளார்.

    சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிசின் உரைக்கு பதிலுரையாக விரிவான அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், பாரிய இராணுவச் செலவீனங்கள், 21வது திருத்தச் சட்ட மாயை,

    சிங்கள அரசியல் சமூகத்தின் இனவாதம், மோசமான பயங்கரவாதத் தடுப்புச்சட்டம், மக்களுக்கு எதிராக தொடரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை உட்பட

    சிறிலங்காவின் பல விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளதோடு, பொறுப்புக்கூறலுக்கு சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பு என தெரவித்துள்ளார்.

    அறிக்கையின் முழுவிவரம் :

    https://www.einpresswire.com/article/577311052/sri-lanka-is-hiding-behind-economic-disaster-to-avoid-accountability-for-atrocity-crimes-committed-against-tamils-tgte

    ‘தமிழ்மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுங்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுவதைத் தவிர்ப்பதற்காக சிறிலங்கா பொருளாதாரப் பேரழிவின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறது : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

    பொறுப்புக்கூறலை தவிர்ப்பதற்கு பொருளாதாரப் பேரழிவின் பின்னால் ஒளியும் சிறிலங்கா ! ஐ.நாவுக்கு எச்சரிக்கை !!

    தென்னிலங்கையில் இடம்பெற்றுவரும் போராட்டத்திற்கு கிடைத்த எதிர்வினைகளையும், வடக்கு கிழக்கு பகுதியில் இடம்பெற்று வரும்

    போராட்டங்களுக்கு கிடைத்த எதிர்வினைகளையும் ஒப்பிட்டு நோக்கில் சிங்கள அரசியல் சமூகத்தில் வேரூன்றிய இனவாதத்தை வெளிப்படுத்துகின்றன.

    பாரிய இராணுவச் செலவீனங்கள் :

    சிறிலங்காவின் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பேரழிவிற்கு முதன்மையான காரணங்களில் ஒன்றாக, தமிழர்களை அடிமைகளாக வைத்திருக்கும் ஒரே நோக்கத்துக்காக தமிழர் தாயகத்தினை ஆக்கிரமித்து நிலைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள

    பாரிய இராணுவமும், அதன் செலவீனங்களுமே மிகப்பெரிய நிதிச்சுமையாகும். தமிழர் தாயகத்தில்யுத்தம் முடிவடைந்து 13 வருடங்கள் கடந்த பின்னரும், தமிழர் தாயகத்தில் 6 பொதுமக்களுக்கு 1 இராணுவ வீரர் நிலைநிறுத்தப்பட்டுள்ளார் என அமெரிக்காவின்

    கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட ஒக்லாண்ட நிறுவகம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

    21வது திருத்தச் சட்ட மாயை :

    சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் தனது உரையில், சிறிலங்காவின் அரசியலமைப்பின் 21வது திருத்தம் குறித்து ஒரு மாயக் கருத்தைக் சர்வதேச

    பொறுப்புக்கூறலை தவிர்ப்பதற்கு பொருளாதாரப் பேரழிவின் பின்னால் ஒளியும் சிறிலங்கா ! ஐ.நாவுக்கு எச்சரிக்கை !!

    சமூகத்தை நோக்கி முன்வைத்துள்ளார். இது ‘பாராளுமன்றம், சுயாதீன நிறுவனங்கள், நிதி பரிவர்த்தனை மற்றும் அதிகாரங்களின் மீதான சமநிலைகளை உறுதிப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது’ என பாசாங்குத்தனமாக

    குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் சிறிலங்கா அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் உண்மையில் ஜனாதிபதியின் அதிகாரங்களை சரிபார்க்கும் வகையில் செயல்படவில்லை. ஜனாதிபதி தொடர்ந்து சில அமைச்சுக்களை தனது அதிகாரத்தின்

    கீழ் வைத்திருக்கலாம் என்பதோடு பாராளுமன்றத்தை ஒத்திவைக்கும் அதிகாரமும் காணப்படுகின்றது. குறிப்பாக ‘ஜனநாயக விழுமியங்களை ஒருங்கிணைக்க’ இலங்கை அரசியல் சமூகமும் அதன் பாராளுமன்றமும் இனரீதியாக நடுநிலையாக இருக்க

    வேண்டும். ஜனாதிபதி அதிகாரத்தை சமநிலைப்படுத்த பாராளுமன்றத்தக்கு கூடுதலான அதிகாரங்களை வழங்குவதனை சிங்கள அரசியல் சமூகத்தில் உள்ள

    பௌத்த இனவாதத்தை மாற்றாது. சிறிலங்கா அரசு ஒரு சிங்கள பௌத்த அடிப்படைவாத அரசாகவே உள்ளது. 21வது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் அது அவ்வாறே தொடரும்.

    சிங்கள அரசியல் சமூகத்தின் இனவாதம் :

    கோட்டகோகம உட்பட பெரும்பாலான சிங்கள ஆர்ப்பாட்டக்காரர்களால் தெற்கில் பொருளாதார முறைகேடுகளுக்கு எதிராக வெடித்த போராட்டங்களை, சிறிலங்கா அரசாங்கம் கையாண்ட விதமானது அரசாங்கம் மற்றும் அரச கட்டமைப்புக்கள்

    அப்பட்டமான இனவாதத்தை காட்டுகிறது. வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்ப் போராட்டக்காரர்களுக்கு வழமையாக நிகழ்வதற்கு மாறாக, தெற்கில் ரம்புக்கனையில்

    ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரை பொலிஸார் சுட்டுக் கொன்றபோது, ரம்புக்கனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டார். காலி முகத்திடலில்

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாக்கப்பட்ட போது, எம்.பி.க்களாக இருந்த போதிலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    பொறுப்புக்கூறலை தவிர்ப்பதற்கு பொருளாதாரப் பேரழிவின் பின்னால் ஒளியும் சிறிலங்கா ! ஐ.நாவுக்கு எச்சரிக்கை !!

    இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சிங்கள வழக்கறிஞர்கள், பொலிஸாராலும் தாக்கப்படவில்லை. போராட்டக்காரர்களுக்கு முன்னால் நின்றனர், அதேசமயம் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திலோ அல்லது மாவீரர் நாளிலோ

    போராட்டக்காரர்கள் தாக்கப்படும்போது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வரவில்லை. போராட்ட செய்திகளை சேகரிக்கும் சிங்கள ஊடகவியலாளர்கள் தாக்கப்படவில்லை மற்றும் அவர்களின் கமெராக்கள் பலவந்தமாக

    கைப்பற்றப்படவில்லை, அதேசமயம் வலிந்து காணாமல் போனவர்களின் குடும்பங்கள் போன்ற போராட்ட செய்திகளை சேகரிக்கும் தமிழ் ஊடகவியலாளர்கள் சிறிலங்கா பொலிஸாரால் துன்புறுத்தப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

    எனவே, இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் நடைபெறும் போராட்டங்களைக் கையாளும் விதத்தில் இருந்து தென்னிலங்கைப் போராட்டங்களைக் கையாளும்

    விதத்தின் மூலம் அரசாங்கமும், அதன் சட்டத்தை அமுல்படுத்தும் பிரிவினரும், சிங்கள சிவில் சமூகமும் தமது இனவாதத்தை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர்.

    மோசமான பயங்கரவாதத் தடுப்புச்சட்டம் :

    நாகரீக நாடுகளின் மீதான அசிங்கமான கறை என சர்வதேச சட்ட வல்லுநர்கள் ஆணையத்தால் வகைப்படுத்தப்பட்ட, சிறிலங்காவின் மோசமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்தும் வெளிவிவகார அமைச்சர்

    பேசியுள்ளார். பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகள், தமிழ்மக்கள் கோரியது போல் பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமே தவிர, திருத்தம் செய்யப்படவேண்டியதில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து

    வைக்கப்பட்டிருந்த 22 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் கூறுகிறார். இந்த 22 பேர் பல வருடங்கள் சிறைவாசத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர்

    என்பதோடு சித்திரவதை, தனிமைப்படுத்தல் போன்ற கொடுமைகளை அனுபவித்தனர். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இன்னும் பலரும் தொடர்ந்தும் சிறைகளில் உள்ளனர்.

    மாவீரர் நாள் அல்லது முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் ஒன்றுகூடியதற்காக தமிழர்கள் இந்த நிகழ்வுகளை செய்தி வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் அனைவருமே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழே கைது

    செய்யப்பட்டமையையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்ட விரும்புகிறது. ஆனால் தென்னிலங்கையில் நடந்த போராட்டங்களில் இடம்பெற்ற கைதுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் செய்யப்படவில்லை. அவை அவசரகாலச்

    விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவ்விதிகள் காலாவதியாகிவிடப்பட்டன. அதேசமயம் 1979ம் ஆண்டு முதல் பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறையில் இருந்து வருகின்றது. கைது செய்யப்பட்ட தமிழர்கள்

    அனைவரும் இந்த சட்டத்தின் கீழேயே கைது செய்யப்பட்டனர். இன்றும் கூட இச்சட்டத்தின் கீழேயே கைது செய்யப்படுகின்றனர். இதே போல் 2019ம் ஆண்டு ஈஸ்டர் குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு முஸ்லிம்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ஆனால் தெற்கில் போராட்டம் நடத்திய சிங்களவர்கள் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை. இதனால்தான் சித்திரவதை தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு

    அறிக்கையாளர் பெல் எமர்சன் தனது அறிக்கையொன்றில் ‘பயங்கரவாத தடுப்புச் சட்டம் தமிழர்கள் மீதே கூடியளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது’ என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

    பொய்யான கூற்றுக்கு பொறுப்புக்கூறவேண்டிய சிறிலங்கா :

    சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் சபைக்கு அளித்த அறிக்கையில், ‘காணாமல் போனோர் அலுவலகத்தின் செயல்முறையின் ஒரு பகுதியாக விசாரணைக் குழுவிற்கு அழைக்கப்பட்ட 83வீத நபர்களை சந்தித்துள்ளது’ என்றும் கூறியுள்ளார்.

    ஆனால், ‘காணாமல் போனவர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள்’ என்று சிறிலங்காவின் ஜனாதிபதியே குறிப்பிட்டுள்ளார். பிபிசியின் ஜனவரி 20, 2020 செய்தியறிக்கையின் படி : ‘

    சிறிலங்காவில் போரின் போது காணாமல் போன 20,000க்கும் அதிகமானோர் இறந்துவிட்டதாக சிறிலங்காவின் ஜனாதிபதி முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார். தலைநகர் கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலக செய்திக்குறிப்பில் காணாமல் போனவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது

    .(https://www.bbc.com/news/world-asia-51184085). இந்த செய்தி நியூயார்க் டைம்ஸ் மற்றும் தி இந்து உட்பட பல சர்வதேச ஊடகங்களிலும் பரவலாக வெளியிடப்பட்டது. இருந்த போதிலும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் இந்த மோசடிக் கூற்றை தொடர்ந்தும்

    செய்து வருகின்றார், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான தீர்வைக் காண, காணாமல் போனோர் அலுவலகம் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது என்ற பொய்யான கூற்றுக்கு சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சரை

    பொறுப்புக்கூறுமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுப்பினர்கள் மற்றும் பேரவையின் தலைவர் கோரவேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கேட்டுக்கொள்கிறது.

    மேலும், வெளிவிவகார அமைச்சர் தனது உரையில், இழப்பீடு அலுவலகத்திற்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 759 மில்லியனுடன் கூடுதலாக 53 மில்லியன் இலங்கை ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

    நிதிநிவாரணம் மூலம் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களின் துன்பங்களையும் இழப்புக்களை ஈடுசெய்ய முடியாது என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

    ஐரோப்பிய நீதிமன்றங்கள் மற்றும் அமெரிக்க பிராந்திய நீதிமன்றங்களின் கூற்றுப்படி ‘பயனுள்ள தீர்வு’ என்பது முழுமையான பயனுள்ள விசாரணை, மற்றும் மீண்டும்

    நிகழாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை உள்ளடக்கியது என தெளிவாக குறிப்பிட்டுள்ளது. வாழ்வின் இழப்புக்களை பணக்கையேடு மட்டும் தணிக்காது.

    வெளிவிவகார அமைச்சர் தனது உரையில், ‘ஐக்கிய நாடுகளின் ஒழுங்குமுறை எண்.1 இன் கீழ் 2012ம் ஆண்டு தடைவிதிக்கப்பட்ட தனிநபர்கள், அமைப்புக்கள் தொடர்பில்

    மதிப்பாய்வு செய்யப்படுவதோடு, தற்போது 318 தனிநபர்கள் மற்றும் 4 அமைப்புக்கள் தடைப்பட்டியலில் இருந்து நீக்க முன்மொழியப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

    தொடரும் வேடிக்கை விளையாட்டு :

    சிறிலங்காவின் இந்த நடத்தையானது எங்கள் தொட்பான தொடர்சியான வேடிக்கை விளையாட்டாகும். 2014 ஆண்டில் சிறிலங்கா அரசாங்கம், 424 தனிநபர்கள் மற்றும் 16 அமைப்புக்களை ‘பயங்கரவாத பட்டியலிட்டு’ தடைவித்தது. 2015ம் ஆண்டில் ஆட்சிக்கு

    வந்த புதிய அரசாங்கம் மீண்டும் வேடிக்கை விளையாட்டாக 8 அமைப்புக்களையும், 259 தனிபர்களையும் புனிதர்களாக்கி தனது தடைப் பட்டியலில் இருந்து நீக்கியது.

    பொறுப்புக்கூறலை தவிர்ப்பதற்கு பொருளாதாரப் பேரழிவின் பின்னால் ஒளியும் சிறிலங்கா ! ஐ.நாவுக்கு எச்சரிக்கை !!

    திரும்பவும் 2021ல் புதிய அரசாங்கம் மீண்டும் தனது வேடிக்கை விiளாட்டை காட்டியது. 380 தனிநபர்களையும் மற்றும் 7 அமைப்புக்களையும் பயங்கரவாத தடைப்பட்டியலில்

    இட்டுக்கொண்டது. ஐ.நா மனிதஉரிமைப் பேரவையில் சிறிலங்கா வெளிவிவார அமைச்சரின் சமீபத்திய அறிக்கையானது இந்த எண்ணிக்கை வேடிக்கை விளையாட்டை மீளவும், தொடர்வதனை வெளிக்காட்டுகின்றது.

    இலங்கை அரசாங்கத்தின் இந்த எண்ணிக்கை வேடிக்கை விளையாட்டானது, 2012ம் ஆண்டு-ஐ.நா. ஒழுங்குமுறை இலக்கம் 1ஐ சிறிலங்கா துர்பிரயோகசம் செய்வதனை நிரூபிக்கின்றது. சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த நடத்தை ஐ.நாவின்

    நம்பகத்தன்மையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. துரதிஷ்டவசமாக, 13 வருடங்களுக்கு முன்னர் யுத்தம் முடிவடைந்த பின்னர் எந்தவொரு வன்முறைச் சம்பவமும் இடம்பெறாத போதிலும், சில வெளிநாட்டு சத்திகளால் விடுதலைப்

    புலிகளை ‘பயங்கரவாத அமைப்பாக’ தொடர்ந்து பெயரிடுவது, சிறிலங்கா அரசாங்கத்தை இந்த வேடிக்கை விளையாட்டை தொடர்ந்து விளையாடச் செய்துள்ளது.

    தமிழ் மக்களுக்கு எதிராக தொடரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை :

    தமிழர் பகுதிகளில் சிறிலங்காவின் ஆயுதப் படைகளின் பாரிய இராணுவ பிரசன்னம் தமிழ் மக்களின் அடையாளத்தை அழிப்பதற்கும், தமிழ்மக்களின் மனித உரிமை மீறல்களுக்கும் தொடர்ந்து பங்களிக்கிறது. உதாரணமாக, சமீபத்தில் தமிழர்களின்

    பொறுப்புக்கூறலை தவிர்ப்பதற்கு பொருளாதாரப் பேரழிவின் பின்னால் ஒளியும் சிறிலங்கா ! ஐ.நாவுக்கு எச்சரிக்கை !!
    பொறுப்புக்கூறலை தவிர்ப்பதற்கு பொருளாதாரப் பேரழிவின் பின்னால் ஒளியும் சிறிலங்கா ! ஐ.நாவுக்கு எச்சரிக்கை !!

    பண்டைய வழிபாட்டுத்தளத்தினை ஆக்கிரமித்து அபகரித்து புத்த விகாரையொன்றினை கட்டுவதற்கு எதிராக, அமைதிவழியில் போராடிய தமிழ்மக்கள் மீது இராணுவமும் காவல்துறையும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் தமிழ்

    நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் காயமடைந்துள்ளார். நீதிமன்ற உத்தரவையும் மீறியே புத்த விகாரையினை கட்ட முனைந்துள்ளதோடு, இது தமிழர்கள் மீது தொடரும் பண்பாட்டு இனஅழிப்பாகவுள்ளது.

    சிங்கள சிவில் சமூகத்திடமும் மற்றும் அரசாங்கத்திலும் பௌத்த இனவாதம் ஆழவேர்விட்டுள்ள நிலையில், தமிழர்களுக்கு முன்னெப்போதையும் விட பாதுகாப்பு தேவைப்படுகிறது. தமிழர்களுக்கு எதிரான குற்றங்களுக்காக சிறிலங்கா

    அரசியல்வாதிகள், இராணுவத்தினர் தண்டனைகளில் இருந்து விடுபடுவதற்கு முற்றுப்புள்ளி இருந்தால் மட்டுமே பாதுகாப்பு கிடைக்கும். சிறிலங்கா அரசின் மனித

    உரிமை அட்டூழியங்களுக்கு முழுப் பொறுப்புக்கூறலைக் கோருவதன் மூலம் தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவர ஐ.நா மனித உரிமைகள் பேரவை உதவ முடியும்.

    சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஏனைய பலதரப்பு அமைப்புக்கள் மற்றும் அரசாங்கங்கள் இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்க உதவுவதற்குத் தயாராக இருப்பதால், இராணுவத்தைக் குறைத்து தமிழர்

    தாயகத்திலிருந்து அகற்றுமாறு சிறிலங்கா அரசாங்கத்திற்கு முதலில் அறிவுறுத்த வேண்டும். மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு கொழும்பின்

    பொறுப்புக்கூறலை உறுதி செய்வதில் தங்கியிருந்து சிறிலங்காவுக்கு நிதியுதவி செய்ய பலதரப்பு நிறுவனங்களும் அரசாங்கங்களும் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும்.

    சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துக :

    நிறைவாக, 2021 ஜனவரி 12ம் தேதி ஐ.நா மனித உரிமைகளுக்கான ஆணையாளரர் மிசேல் பசேலேற் அம்மையாரின் அறிக்கையில், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு விடுத்த அழைப்பையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

    மீண்டும் வலியுறுத்துகிறது. ஐநா மனித உரிமைகளுக்கான நான்கு முன்னாள் ஆணையாளர்கள், ஐ.நா.வின் நான்கு முன்னாள் உயர் அதிகாரிகள், இலங்கைக்கு பயணம் செய்து அறிக்கைகளை எழுதிய ஐ.நாவின் ஒன்பது முன்னாள் சிறப்பு

    அறிக்கையாளர்கள், ஐ.நா. செயலாளர் நாயகம் குழுவின் மூன்று உறுப்பினர்கள், இலங்கை பற்றிய நிபுணர்கள் ஆகியோர் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு என்ற அழைப்பை விடுத்திருந்தனர்.

    செப்டெம்பர் மாதம் 46-1 தீர்மானம் காலாவதியாகும் போது,
    ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வில்,


    பொறுப்புக்கூறல் தொடர்பில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் என பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்
    என தனது விரிவான அறிக்கையில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

      Posted in சினிமா சீமான் பேச்சு

      நடிகை நயன்தாராவுக்கு கல்யாணம் ஆனா எனக்கு என்ன சீமான்

      நடிகை நயன்தாராவுக்கு கல்யாணம் ஆனா எனக்கு என்ன சீமான்

      பிரபல நடிகை நயன்தாராவுக்கு கல்யாணம் ஆனா எனக்கு என்ன சீமான் பதிலடி வழங்கியுள்ளார் .

      நயன்தாரா திருமணம் வியாபாரமா அல்லது அழைப்பா என்ற கேள்வியை கேட்ட நிருபருக்கு நெத்தியடி பதில் வழங்கிய சீமான் இந்த பேட்டி வைரலாகி வருகிறது .

      கேட்பதற்கு ஏராளம் கேள்விகள் உள்ள போதும், விவாதிக்க பல விடயங்கள் உள்ள போதும் ,இந்த திரை கவர்ச்சியில் மூழ்கி இருக்கும் எமது மக்கள் என்று அதில் இருந்து விடுபட்டு வெளியில் வரப்போகிறார்கள் என்பதே சீமான் ஆதங்கமாக உள்ளது .

      நடிகை நயன்தாராவுக்கு கல்யாணம் ஆனா எனக்கு என்ன சீமான் பதில் சரிதான் போங்க .

      சீமான் பேசும் இந்த காணொளியை பாருங்கள் .

      https://www.youtube.com/watch?v=SN4PyJ4G1Q8

      நடிகை நயன்தாராவுக்கு கல்யாணம் ஆனா என்ன

      Posted in இலங்கை செய்திகள்

      பள்ளத்தில் வீழ்ந்து சிதறிய வாகனம்

      பள்ளத்தில் வீழ்ந்து சிதறிய வாகனம்

      இலங்கை செய்திகள் .எதிரி செய்திகள் .

      இலங்கை பெரகல பிரதான வீதியில் பயணித்து கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து சிதறிய சம்பவம் இடம்பெற்றுள்ளது .

      அந்த சாலை வழியாக பயணித்த மேலும் ஒரு வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது .

      பள்ளத்தில் வீழ்ந்த வாகனத்தை செலுத்தி சென்ற சாரதி பலத்த காயங்களுடன் மீட்க பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார்.

      குறித்த வாகனத்தை மோதி விட்டு தப்பி சென்ற வாகனத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

      பள்ளத்தில் வீழ்ந்து சிதறிய வாகனம் பலத்த சேதமான நிலையில் மீட்க பட்டுள்ளது .

      இலங்கையில் இவ்விதமான விபத்துக்கள் அதிகரித்து செல்கின்றமையும் பள்ளத்தில் வீழ்ந்து வாகனங்கள் சிதறுகின்ற சம்பவங்கள்
      தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

        ராகி அப்பம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க சுவையே தனி
        Posted in இலங்கை செய்திகள்

        ஆற்றில் குதித்த பெண்ணை காப்பாற்றிய பொலிஸ்

        ஆற்றில் குதித்த பெண்ணை காப்பாற்றிய பொலிஸ்

        கண்டி பகுதியில் ஆற்றில் குதித்த பெண்ணை காப்பாற்றிய கரை சேர்த்த பொலிஸ் ஊழியர் நடவடிக்கை மக்களினால் பார்த்த பெறுகிறது

        ஐம்பத்தி எட்டு வயது பெண் ஒருவர் ஆற்றில் குதித்ததை கண்ணுற்ற இவர்கள் பாய்ந்து சென்று காப்பாற்றி கரை சேர்த்தனர்

        தற்போது ஆற்றில் குதித்த பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .

        போலீஸ் ஊழியர் மற்றும் வாலிபர் ஒருவர் இணைந்து இந்த பெண்ணை மீட்டு காப்பாற்றிய செய்தி காட்டு தீ போல் பரவி வருகிறது .

          Posted in இலங்கை செய்திகள்

          களனி கங்கையில் மிதந்த சிசு சடலம்

          களனி கங்கையில் மிதந்த சிசு சடலம்

          இலங்கை செய்திகள் .எதிரி செய்திகள் .

          இலங்கை களனி கங்கையில் மிதந்த சிசு சடலம் மீட்க பட்டுள்ளது ,தாய் ஒருவரால் களனி கங்கியில் வீச பட்ட ஐந்து வயது சிறுவனின் சடலம் இவ்விதம் கரை ஒதுங்கியுள்ளது .

          சிறுவனை களனி கங்கியில் வீசி விட்டு தகொலைக்கு முயன்ற தாயை மக்கள் காப்பாற்றினார் .

          தற்போது தயார் உயிருடன் உள்ளார் ,ஆனால் சிறுவன் பலியாகியுள்ளான்.இவ்வாறான தற்கொலை சம்பவங்கள் களனி கங்கை பகுதியில் அதிகரித்து செல்கிறது

          களனி கங்கை இலங்கையில் தற்கொலை புரியும் இடமாக மாற்றம் பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது .

            Posted in இலங்கை செய்திகள்

            கிளிநொச்சியில் நபரை தாக்கிய கரடி

            கிளிநொச்சியில் நபரை தாக்கிய கரடி

            கிளிநொச்சி கொக்காவில் பகுதியில் காட்டுக்கு விறகு வெட்ட சென்ற முப்பத்தி எட்டு வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை அங்கு வந்த கரடி தாக்கியுள்ளது.

            இந்த கரடியின் தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் யாழ்ப்பாண மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.

            கிளிநொச்சியில் நபரை தாக்கிய கரடி செயல்பாடு தொடர்பான விடயம் பரவிய நிலையில் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது .

            காட்டு யானைகள் மக்களை தாக்கி வரும் நிலையில் தற்போது கரடிகளும்
            கிளிநொச்சியில் தாக்குதலில் ஈடுபட்ட வண்ணம் உள்ளதே இந்த பீதி நிலைக்கு காரணமாக அமைந்துள்ளது.

              Posted in பிரித்தானிய செய்தி

              இறந்த பெண்ணை தின்ற பூனைகள்

              இறந்த பெண்ணை தின்ற பூனைகள்

              எதிரி செய்திகள்.பிரித்தானிய செய்திகள்.

              பிரிட்டனில் பெண் ஒருவர் வீட்டிற்குள் திடீரென இறந்து விட்டார் ,இறந்த பெண் இருபது பூனைகளை வளர்த்து வந்தார் ,இறந்த அந்த பெண்ணை பசியால் வாடிய பூனைகள் தின்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது .

              நபர் ஒருவர் போலீசாருக்கு வழங்கிய தகவலை அடுத்து வீட்டிற்கு சென்ற போலீசார் அந்த வீட்டில் கடி காயங்களுக்கு உள்ளான நிலையில் பெண்ணின் சடலத்தை மீட்டனர்.

              குறித்த பெண் இறந்து இரண்டு வரங்களான நிலையில் பசியால் வாடிய பூனைகள் பெண்ணை கடித்து தின்றுள்ளன.

              பெண்ணை தின்ற பூனைகள் செயலை கண்ணுற்று அதிர்ச்சியடைந்த பொலிசார், அழுகிய நிலையில் பெண்ணின் சடலதை மீட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

              பசியால் வாடிய பூனைகள் மீட்க பட்டு ஒவ்வொன்றும் 29 பவுண்டுக்ளுக்கு விற்பனை செய்ய பட்டுள்ளன .

              தம்மை வளர்த்த பாசமிகு பெண்ணை தின்ற பூனைகள் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன .

              இறந்த பெண்ணின் உடலின் பல பாகங்களை காணவில்லை .அந்த பாகங்கள் யாவற்றையும் இந்த பூனைகள் தின்று பசியை போக்கியுள்ளன .

              அதற்கு காரணம் பசியால் வாடிய பூனைகளுக்கு உணவு ஏதும் இல்லாத நிலையில் இந்த பெண்ணை தின்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

              தற்போது பெண்ணை தின்ற பூனைகள் செய்தி வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

              தனிமையில் பெண் வசித்து வந்தமையாலே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என மக்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர் .

              இந்த கருத்துக்களில் சிலதோ கண்ணீர் தரும் படியாக அமைய பெறுகின்றன ,இந்த செயல் மனித குலத்தை அதிர வைக்கும் ஒன்றாக உள்ளது .

              பூனைகளுடன் கூடி மகிழ்ந்த பெண்ணை தின்ற பூனைங்கள் செயல், வாத பிரதி வாதங்களாக உருவெடுத்துள்ளது .

              இந்த கொடூர செயலுக்கு பூனைகள் காரணமா ..?அந்த பெண் காரணமா..? அல்லது அந்த வீட்டார் தான் காரணமா என்ற பட்டிமன்ற வாதங்கள் தொடரத்தான் செய்கின்றன .

              இந்த மக்கள் கருத்துக்களை உற்று நோக்கும் பொழுது இறந்த பெண்ணை உண்ட பூனைகளை கண்ட காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தமை சரியாகத்தான் உள்ளது என்பதே திரைக்கதை போல உறுதியாகிறது .

              –வன்னி மைந்தன் –


                Posted in சீமான் பேச்சு

                உதயநிதி பெரியாரா கலாய்த்து தள்ளிய சீமான்

                உதயநிதி பெரியாரா கலாய்த்து தள்ளிய சீமான்

                சீமான் பேச்சு .

                நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் உதயநிதி பெரியாரா என கேட்டு கலாய்த்து தள்ளிய காணொளி வைரலாகி வருகிறது .

                சீமான் பேச்சு என்றால் அதில் தனி கிக்கு கிண்டல் இருக்கும் ,அதுபோலவே இந்த காணொளியிலுள்ள அமைந்துள்ளது .

                இவர் கூறும் நேர்பட பேசும் விடயங்கள் மறு புறத்தே புரட்டி பார்க்கும் பொழுது கிண்டலாகவே வீழ்ந்துடையும் .

                இதோ செந்தமிழன் சீமான் பேசிய காணொளியை பாருங்கள் .

                இதில் அழுத்தி காணொளி பார்க்க

                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                பிரிட்டன் Iceland கடையில் பால் பாண் பட்டர் 3 சதத்திற்கு விற்பனை

                பிரிட்டன் Iceland கடையில் பால் பாண் பட்டர் 3 சதத்திற்கு விற்பனை

                பிரித்தானிய செய்திகள். எதிரி செய்திகள் .

                பிரிட்டனில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை அதிகரிப்பை அடுத்து
                பிரிட்டன் Iceland கடையில் பால் ,பாண், பட்டர், 3 சதத்திற்கு விற்பனை ஆகிறது .

                வாடிக்கையாளர்களின் பொருளாதார சுமையை அடுத்து இந்த அதிரடி விற்பனை செய்ய படுகிறது.


                இயல்பாக, பால் ,பாண்,பட்டர் , உணவு பொருட்கள் ஒவ்வொன்றும் ஒரு பவுண்டுக்கு விற்பனை செய்ய படுகின்றன .

                மக்களின் நலன் கருதியே நாள் தோறும் Iceland கடையில் பல பொருட்கள் அதிக விலை குறைப்பு செய்ய பட்டு விற்பனை செய்யப்படுவதாக Iceland கடை தெரிவித்துள்ளது.

                Iceland கடையின் இந்த அதிரடி அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .


                குறித்த Iceland கடையில் ஒவ்வொரு வாடிகையாளருக்கும் ஒன்று என்ற விகிதம் மட்டுமே இவ்விதம் வழங்க படுகின்றமை குறிப்பிட தக்கது.

                  Posted in சீமான் பேச்சு

                  என்ன மேல் சாதி புடுங்கி நீ ? மதுவந்தி-யை கிழித்த சீமான்

                  என்ன மேல் சாதி புடுங்கி நீ ? மதுவந்தி-யை கிழித்த சீமான்

                  மனிதர்களால் நாங்களே என்ன மேல் சாதி என கூறிய அவருக்கு புடுங்கி நீ ? மதுவந்தி-என கிழித்த சீமான் .

                  நியத்தின் நிலத்தோடு நியமாகி பேசிடும் சீமான் பேச்சு ,அறத்தை நிருபிக்கும் அவர் தம் வாதம் .

                  அதனை கொஞ்சம் காதில போட்டுங்கள் .

                  இதில் அழுத்தி காணொளி பாருங்க

                  https://www.youtube.com/watch?v=J6jebzxP3tU
                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                  உக்கிரேனுக்கு பிரிட்டன் பிரதமர் திடீர் பயணம்

                  உக்கிரேனுக்கு பிரிட்டன் பிரதமர் திடீர் பயணம்

                  பிரித்தானிய செய்திகள்.எதிரி செய்திகள் .

                  உக்கிரேனுக்கு பிரிட்டன் பிரதமர் திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் ,உக்கிரேன் தலைநகர் கீவ் நகரில் இவரது பயணம் அமைந்துள்ளது

                  இத்தாலி ஜெர்மனுக்கு எரிவாயு விநியோகத்தை மட்டு படுத்தி ரசியா அறிவித்த இரு தினத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் உக்கிரேனுக்கு பயணித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்க படுகிறது.

                  உக்கிரேனுக்கு ஆயுத உதவிகள் வழங்கி வரும் நாடுகளில் பிரிட்டன் முதன்மையான இடத்தை வகிக்கிறது .

                  தொடராக உக்கிரேன் ரசியாவிடம் வீழ்ந்து விடாது தடுத்து வருகின்ற போரினை பிரிட்டன் முதன்மையாக நின்று புரிந்து வருகிறது.

                  குண்டுகளினால் உக்கிரேன் தலைநகர் அதிர்ந்த வண்ணம் இருக்க பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இரண்டாவது தடவையாக உக்கிரேன் பயணித்துள்ளது ரசியாவுக்கு விடுத்துள்ள நேரடி அச்சுறுத்தலாக பார்க்க படுகிறது.

                  பிரிட்டன் பிரதமர் இந்த பயணத்தின் பின்னர் ரசியா இராணுவத்தின் தாக்குதல்கள்
                  உக்கிரேன் மீது அதிகரிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

                    Posted in இலங்கை செய்திகள்

                    உணவு பிரச்சினை -பிரதமரிடம் மனோ வேண்டுதல்

                    உணவு பிரச்சினை -பிரதமரிடம் மனோ வேண்டுதல்

                    இலங்கை செய்திகள்.எதிரி செய்திகள்.

                    கொழும்புக்கு சமைத்த உணவு-தோட்டப்புறங்களுக்கு பயிர் செய்ய காணி

                    • உணவு பிரச்சினை பற்றிய கூட்டத்தில் பிரதமரிடம் மனோ-திகா

                    உணவு பிரச்சினை பற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட்டிய கூட்டத்தில் கலந்துக்கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி, பிரதி

                    தலைவர் பழனி திகாம்பரம் எம்பி ஆகியோர் உணவு பிரச்சினைபஞ்சத்தை எதிர்கொள்ள மலைநாட்டு தோட்டங்களில் உள்ள தரிசு காணிகளை தோட்ட மக்களுக்கு வழங்க

                    வேண்டும் எனவும், கொழும்பு நகரில் தொடர்மாடிகளில் மற்றும் பின்தங்கிய குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கு, நிலைமை சீராகும்வரை சமைத்த உணவு

                    பொதிகள் வழங்க வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்தனர்.

                    பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற உணவு பிரச்சினை நெருக்கடி பற்றிய கலந்துரையாடலில் பிரதமருடன், விவசாய அமைச்சர்

                    மஹிந்த அமரவீர, பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன, வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி,

                    பிரதி தலைவர் பழனி திகாம்பரம் எம்பி, சம்பிக்க ரணவக்க எம்பி, திஸ்ஸ அத்தநாயக்க எம்பி, நிமல் லான்சா எம்பி, சாகல ரத்னாயக்க, நவீன் திசாநாயக்க, செந்தில்

                    உணவு பிரச்சினை -பிரதமரிடம் மனோ வேண்டுதல்

                    தொண்டமன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இக்கூட்டத்தில் எம்பி மனோ கணேசன் பின்வரும் ஆலோசனைகளை முன்வைத்து உரையாற்றினார்.

                    கொழும்பு மாநகரம்
                    கொழும்பு மாநகரத்தில் பின்தங்கிய தொடர்மாடிகளிலும், குடியிருப்புகளிலும் வாழ்கின்ற குடும்பங்கள் போதிய வருமானம் இல்லாமலும், உணவு சமைக்க எரிவாயு, மண்ணெண்ணெய் மற்றும் உணவுப்பொருட்கள் இல்லாமலும் தவிக்கின்றனர்.

                    ஒரு நாளைக்கு ஒரு முறையேனும், இவர்களுக்கு சமைத்த உணவு பொதிகளை வழங்க வேண்டும்.

                    இதற்கு கொழும்பு துறைமுக சமையல் கூடத்தையும், கொழும்பு மாநகரசபைக்கு சொந்தமான சமையல் உணவு கூடங்களையும் பயன்படுத்தலாம்.

                    இதற்கான பொறுப்பை இராணுவ சமையல் பிரிவுக்கு வழங்கலாம். இந்த திட்டத்தை உடன் நடைமுறை படுத்துங்கள்.

                    உணவு பிரச்சினை -பிரதமரிடம் மனோ வேண்டுதல்
                    உணவு பிரச்சினை -பிரதமரிடம் மனோ வேண்டுதல்

                    மலைநாட்டு தோட்ட மக்கள்
                    மலைநாட்டில் தோட்டங்களில் மக்கள் போதிய வருமானம் இல்லாமல் இருக்கிறார்கள். 2021 ஜனவரியில் சுமார் ரூ.190 ஆக இருந்த அமெரிக்க டொலரின் பெறுமானம், இன்று 2022ல் சுமார் ரூ.360 ஆக உயர்ந்து விட்டது.

                    ஆகவே ஏற்றுமதியாளர்களின் வருமானம் இலங்கை ரூபாவில் 90 விகிதம் அல்லது ஏறக்குறைய இரு மடங்கு உயர்ந்து விட்டது.

                    ஆனால், இந்த உயர்ந்த மேலதிக வருமானத்தை இந்த ஏற்றுமதி விளைபொருளை உற்பத்தி செய்யும் தொழிலார்களுடன் பகிர்ந்து கொள்ள தோட்ட நிறுவனங்கள் தயார் இல்லை.

                    2021 ஜனவரியில் தந்த அதே அடிப்படை சம்பளம் ரூ. 900 தான், இன்று 2022லும் வழங்கப்படுகிறது. இதென்ன நியாயம்?

                    ஆகவே ஒன்றில் சம்பளத்தை அதிகரித்து, தொழிலாளர்களின் வாங்கும்
                    சக்தியை கூட்டுங்கள் அல்லது மலைநாட்டு தோட்டங்களில் உள்ள தரிசு காணிகளை


                    தோட்ட மக்களுக்கு வழங்கி, தங்கள் உணவு பொருட்களை வளர்க்க அவர்களுக்கு அனுமதி வழங்குங்கள்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      பொலிஸ் அதிகாரி தன்னை தானே சுட்டுக்கொலை

                      பொலிஸ் அதிகாரி தன்னை தானே சுட்டுக்கொலை

                      இலங்கை செய்திகள் .எதிரி செய்திகள் .

                      இலங்கை தங்காலை பகுதி காவல்த்துறை நிலையத்தை சேர்ந்த சார்யன் தர காவல்துறை அதிகாரி ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.

                      தன்னை தானே சுட்டு தற்கொலை செய்தமைக்கான காரணம் தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .

                        Posted in இலங்கை செய்திகள்

                        பசில் மருத்துவமனையில் அனுமதி

                        பசில் மருத்துவமனையில் அனுமதி

                        இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சே கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க பட்டுளளார்

                        இவருக்கு நடந்ததுஎன்ன என்பது தொடர்பாக உடனடியாக தெரியவரவில்லை .

                        இது பசில் ராஜபக்சே போட்ட நாடகமா என்ன என்ன தோன்றுகிறது .

                          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                          லண்டனில் எரிந்த அடுக்குமாடி பேரூந்து

                          லண்டனில் எரிந்த அடுக்குமாடி பேரூந்து

                          தெற்கு லண்டன் Brixton பகுதியில் இரட்டை அடுக்குமாடி பயணிகள் பேரூந்து ஒன்று தீயில் ஏரிந்துள்ளது .

                          இந்த பேரூந்து தீ விபத்துக்குரிய காரணம் தெரியவரவில்லை .

                          அடுக்குமாடி பேரூந்தில் தீ பிடித்த பொழுது எத்தனை பயணிகள் பயணித்தனர் என தெரியவரவில்லை .

                          எனினும் இந்த அடுக்குமாடி பேரூந்து தீ விபத்தில் சிக்கி உயிர்பலிகளோ அன்றி காயங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்க படுகிறது .

                          லண்டனில் எரிந்த அடுக்குமாடி பேரூந்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

                            Posted in இலங்கை செய்திகள்

                            லண்டன் நுழையும் அகதிகள் யாவரும் ரூவாண்டாவுக்கு மாற்றம்

                            லண்டன் நுழையும் அகதிகள் யாவரும் ரூவாண்டாவுக்கு மாற்றம்

                            லண்டனுக்குள் நுழையும் அகதிகள் யாவரும் ரூவாண்டாவுக்கு மாற்றம் செய்படுகின்றனர்

                            அவுஸ்ரேலிய அரசு தனி தீவில் அகதிகளை தடுத்து
                            வைத்திருப்பதை போல லண்டன் நுழையும் அகதிகள் யாவரையும்நான்காயிரம் மைல் தொலைவில் உள்ள ரூவாண்டாவுக்கு இடம் மாற்றம் செய்ய படுகின்றனர்.

                            ருவாண்டா மற்றும் பிரிட்டன் அரசுகளுக்கு இடையில் ஏற்படுத்த பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த அகதிகள் அங்கு அனுப்பி வைக்க படுகின்றனர்.

                            இது பிரிட்டனுக்குள் கைதிகள் நுழைவதை தடுக்கும் முகமாக லண்டன் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கியாக பார்க்க படுகிறது.

                              Posted in இலங்கை செய்திகள்

                              இலங்கையில் நடக்கும் அவலம் – – வீடியோ

                              இலங்கையில் நடக்கும் அவலம் – – வீடியோ

                              இலங்கை செய்திகள் .எதிரி செய்திகள் .

                              இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் இலங்கை வாழ் மக்கள் பெரிதும் துயர்களை சந்தித்த வண்ணம் உள்ளனர்.

                              அவ்விதம் இலங்கையில் நடக்கும் அவலம் தொடர்பான காணொளி ஒன்று சமுக வலைத்தளங்கள் ஊடக வைரலாகி வருகிறது.

                              இலங்கையில் நடக்கும் இந்த அவலம் தொடர்பான காணொளிகள் மற்றும் அதில் மக்கள் தெரிவிக்கும் உரையாடல்கள் யாவும் அரசுக்கு எதிரான ஒன்றாக மாற்றம் பெற்றுவருகிறது.

                              மக்கள் கருத்தியலை உற்று நோக்கும் பொழுது மிக பெரும் போரட்டம் ஒன்று
                              ஆளும் ரணில் மற்றும் கோத்தபாய ராஜபக்சே அரசுகளுக்கு எதிராக வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

                              இலங்கையில் நடக்கும் அவலம் – – வீடியோ

                              எரிபொருள் தட்டுபாடு இலங்கையில் ஏற்பட்டுள்ளதால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோல் பெற்று கொள்ளும் அவலம் ஏற்பட்டுள்ளது .

                              இந்த அவலம் மக்கள் மனதில் ஆளும் அரசுகளுக்கு எதிரான வெறுப்புணர்வை சம்பாதித்துள்ளது .

                              நாட்டை கொள்ளையடித்து ஏப்பம் இட்ட ராஜபக்சே ஆட்சியாளர்களின் அவலம் இது. போரை வென்றதாக மார் தட்டிய ராஜபக்சே குடும்பத்தின் சாதனையில் இதுவும் ஒன்று .

                              இன்று இலங்கையில் நடக்கும் இந்த அவலம் என்று வரை தொடரும் என்பது மக்கள் கேள்வியாக உள்ளது .

                              இந்த அவலம் தொடராமல் தடுத்திட அரசியல் தலைமைகள் தமிழருக்கான தீர்வு திட்டத்தை வழங்குவதன் ஊடாக நாட்டை மீள் நிலைக்கு இயங்க வைக்க முடியும் .

                              ஆனால் அதனை ராஜபக்சே ஆட்சியாளர்கள் செய்வார்களா என்பதே சந்தேகம் .

                              அவ்விதம் இலங்கையில் உள் நட்டு பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்பட்டால் நாடு இயல்பு நிலைக்கு செல்வதுடன் அதுவே மிக பெரும் பொருளாதார செழிப்பான ஒன்றாக மாற்றம் பெறும் .

                              இந்த மாற்றம் இலங்கையில் நடக்கும் இந்த பேரழிவில் இருந்து நாட்டை மீட்கவும் புதிய தற்சார்பு பொருளாதரத்திற்குள் நகர்த்தி செல்ல முடியும் .

                              ஆபத்தில் இருந்து நாட்டை மீட்டு கொள்ளவும் ,வளமான வாழ்வியலை பெற்றுக்கொள்ளவும் பெரும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது .

                              இதனை நன்குணர்ந்து செயல்பாட்டால் ஒன்றிணைந்த இலங்கைக்குள் மக்கள் மகிழ்வுடன் வாழும் வாழ்வியலும் ,அதன் பொருளாதாரமும் செழிப்பான ஒன்றாக மாற்றம் பெறும் என்பதே இயல்பாகிறது .

                              • வன்னி மைந்தன் –
                                Posted in இலங்கை செய்திகள்

                                லண்டனில் பிரிட்டிஷ் போராளிகள் விடுவிக்க கோரி போராட்டம்

                                லண்டனில் பிரிட்டிஷ் போராளிகள் விடுவிக்க கோரி போராட்டம்

                                இரண்டு பிரிட்டிஷ் போராளிகள் மற்றும் மொராக்கோவைச் சேர்ந்த மூன்றில் ஒருவர், உக்ரைனுக்காகப் போரிட்டபோது ரஷ்ய துருப்புக்களால் கைப்பற்றப்பட்ட மரண தண்டனை விதிக்கப்பட்டது.

                                உக்ரைனுக்கு கூலிப்படையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட மூவரும் ஐடன் அஸ்லின், ஷான் பின்னர் மற்றும் சவுடுன் பிராஹிம் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து “டோனெட்ஸ்க் மக்கள் குடியரசின் உச்ச நீதிமன்றம்” உத்தரவிட்டது.

                                போர்க் கைதிகள் தொடர்பான சர்வதேச நியதிகளுக்கு மாறாக இரண்டு பிரிட்டிஷ் சிப்பாய்களுக்கும் மொராக்கோவைச் சேர்ந்த ஒருவருக்கும் மரண தண்டனை

                                விதிக்கப்பட்டதற்கு எதிராக தமிழர்களுக்கான சுதந்திர வேட்டைக்காரர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர்.


                                தமிழர்களுக்கான சுதந்திர வேட்டைக்காரர்கள் அமைப்பினர் 17.06.2022 அன்று ரஷ்ய தூதரகத்திற்கு முன்பாக மூன்று இராணுவத்தினரின் உயிரைக் காப்பாற்றவும்
                                அவர்களின் மனித உரிமைகளுக்காகவும் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  இராணுவத்தால் பெரும் தொகை பணம் மீட்பு

                                  இராணுவத்தால் பெரும் தொகை பணம் மீட்பு

                                  இலங்கை பெற்றா கடற்கரை சாலை பகுதியில் பண பரிவர்தனத்தில் ஈடுபட்டு வந்த நிலையம் ஒன்று இராணுவத்தால் திடீரென சுற்றிவளைக்க பட்டது.

                                  இதன் போது அங்கிருந்து சுமார் 18.6 மில்லியன் பணம் மீட்க பட்டது .இராணுவத்தால் நான்கு லட்சம் வெளிநாட்டு பணம் மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது.

                                  இந்த பணம் சட்டவிரோத பணபரிவர்த்தனத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக இராணுவத்தால் தெரிவிக்க படுகிறது .

                                  இராணுவத்தால் பெரும் தொகை பணம் மீட்பு


                                  கைது செய்ய பட்டவர்கள் தொடர் விசாரணைகளுக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்.

                                  இராணுவத்தினருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்தே இந்த திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ள பட்டு தொகை பணம் மீட்பு இடம்பெற்றுள்ளது .