அநுரவின் ஆட்சி தலிபான் ஆட்சியை ஒத்தது
Posted in இலங்கை செய்திகள்

அநுரவின் ஆட்சி தலிபான் ஆட்சியை ஒத்தது

அநுரவின் ஆட்சி தலிபான் ஆட்சியை ஒத்தது

அநுரவின் ஆட்சி தலிபான் ஆட்சியை ஒத்தது ,இடதுசாரி தலைவர்கள் அதிகாரத்துக்கு வந்த எந்த நாடும் முன்னேற்றமடைந்தும் இல்லை.

அந்த நாட்டு மக்கள் அழகான வாழ்க்கை வாழ்ந்ததும் இல்லை, கியுபா, வெனிசுலா போன்ற நாடுகள் இதற்கு சிறந்த உதாரணமாகும் என ஐக்கிய தேசிய கட்சி கொழும்பு மாவட்ட அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (8) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தின் நோக்கமாக இருப்பது, வளமான நாடு அழகான வாழ்க்கையை ஏற்படுத்துவதாகும்.

ஆனால் இடதுசாரி தலைவர்கள் அதிகாரத்தில் இருக்கும் நாட்டில் எங்காவது வளமான நாடு அழகான வாழ்க்கை இருக்குமானால் அந்த நாட்டை இவர்கள் காட்ட வேண்டும்.

கியுபாவின் இடதுசாரி கொள்கையுடைய ஆட்சியாளரான பிடல் கஸ்ட்ரோ சிறந்த ஜனநாயக தலைவர். ஆனால் அவருக்கு அவது நாட்டை கட்டியெழுப்ப முடியாமல் போனது.

கியுபாவை வளமான நாடாக்கவோ அந்நாட்டு மக்களுக்கு அழகான வாழ்கையையை ஏற்படுத்திக்கொடுக்கவோ முடியவில்லை. கியுபா உலக நாடுகளில் இருந்து தனிப்பட்டு, ஒதுக்கப்பட்ட நாடாக மாறியுள்ளது.

அனுரகுமார திஸாநாயக்கவும் இடதுசாரி கொள்கையுடைய தலைவர். இரண்டு தடவைகள் ஆயுத முனையில் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்தவர்.

அவரே தற்போது ஜனநாயக முறையில் அரசியல் கட்சி ஊடாக அதிகாரத்துக்கு வர முயற்சிக்கிறார்.

அவர்களின் எதிர்காலம் அனைவருக்கும் தெரியும். நாட்டில் வன்முறையை தோற்றுவித்து பல அழிவுகளை மேற்கொண்டவர்கள்.

அதனால் அவர்கள் அதிகாரத்துக்கு வந்தால் எவ்வாறான நிலை ஏற்படும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

அதேபோன்று வெனிசுலா நாட்டின் தலைவரும் இடதுசாரி கொள்கையுடையவர். அவரின் ஆட்சியின் கீழ் இருந்து 70இலட்சம் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.

உலக எரிபொருள் உற்பத்தியில் 4ஆவது இடத்தில் வெனிசுலா இருக்கிறது. என்றாலும் அவர்களுக்கு பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்ய முடியாமல் போயிருக்கிறது.

அந்த நாட்டு தலைவருக்கும் வெனிசுலாவை வளமான நாடாக்கவோ அந்நாட்டு மக்களுக்கு அழகான வாழ்கையையை ஏற்படுத்திக்கொடுக்கவோ முடியாமல் போயிருக்கிறது.

ஆசியாவில் வட கொரியாவில் இடதுசாரி கொள்கையுடைய ஆட்சியாளரே இருந்து வருகிறார் அங்கு தனி ஆட்சியே இடம்பெறுகிறது. ஜனநாயகம் இல்லை. அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் ஒன்றும் தெரியாது.

அந்த நாடும் உலகில் ஏனைய நாடுகளில் இருந்து ஒதுக்கப்பட்டு, சர்வதேச நாடுகளுடன் எந்த தொடர்பும் இல்லாத நாடாகவே இருந்து வருகிறது.

அதேபோன்று சீனாவில் இடதுசாரி கொள்கையுடைய கம்யூனிஸ்ட் கட்சி மாத்திரமே இருக்கிறது.

வேறு கட்சிகள் அங்கு இல்லை. அந்த நாடு வளமான நாடு. ஆனால் அந்த நாட்டில் ஜனநாயகம், சுதந்திரம் இல்லை.ஊடக, கலாசார சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்ட நாடாகும்.

அதனால் இடதுசாரி கொள்கையுடைய தலைவர்கள் அதிகாரத்தில் இருக்கும் எந்த நாட்டிலும் அனுரகுமார ஏற்படுத்தப்போகும், வளமும் இல்லை.

அந்த மக்களுக்கு அழகான வாழ்க்கையும் இல்லை. அதேநேரம் அடிப்படைவாத கொள்கையுடைய தலிபான் ஆட்சியை போன்ற ஆட்சிக்கே அனுரகுமார முயற்சிக்கிறார்.

அந்த நிலைக்கு எமது நாட்டை கொண்டு செல்ல மக்கள் இடமளிக்கப்போவதில்லை என்றார்.

நைஜீரியாவில் பயங்கர விபத்து 48 பேர் உயிரிழப்பு
Posted in உலக செய்திகள்

நைஜீரியாவில் பயங்கர விபத்து 48 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவில் பயங்கர விபத்து 48 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவில் பயங்கர விபத்து 48 பேர் உயிரிழப்பு ,நைஜீரியாவில் பயணிகள் வாகனம் மீது லொரி ஒன்று மோதி வெடித்துச் சிதறியதில் 48 பேர் உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நைஜர் மாகாணம் அகெயி நகரில் எரிபொருள் ஏற்றிச் சென்ற லொரி மீது மற்றொரு லொரி மோதியே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவின் நைஜர் மாகாணம் அகெயி நகரில் உள்ள நெடுஞ்சாலையில், நேற்று எரிபொருள் ஏற்றிக்கொண்டு லொரி சென்று கொண்டிருந்தது.

அப்போது, சாலையின் எதிரே வேகமாக வந்த மற்றொரு லொரி எரிபொருள் ஏற்றிச்சென்ற லொரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 2 லொரிகளும் வெடித்து சிதறின. இச்சம்பவத்தில் 48 பேர் உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புக்குழுவினர் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நிலையில், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது

ரணிலின் கூட்டத்தில் ரவையுடன் இளைஞன் கைது
Posted in இலங்கை செய்திகள்

ரணிலின் கூட்டத்தில் ரவையுடன் இளைஞன் கைது

ரணிலின் கூட்டத்தில் ரவையுடன் இளைஞன் கைது

ரணிலின் கூட்டத்தில் ரவையுடன் இளைஞன் கைது ,மட்டக்களப்பில், ஜனாதிபதி ரணில் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ரி 56 ரக துப்பாக்கி ரவை உடன் சென்ற இளைஞன் ஒருவரை ஜனாதிபதி பாதுகாப்பு படையினர் ஞாயிற்றுக்கிழமை (08) கைது செய்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் கோரகளிமடு பிரதேசத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு வருகை தருபவர்களை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் சோதனையிட்டு அனுப்பிக் கொண்டிருந்தனர்.

இதன் போது கூட்டத்திற்கு சென்ற இளைஞன் ஒருவரை சோதனையிடும் போது அவரின் உடமையிலிருந்து ரி 56 ரக துப்பாக்கி ரவை ஒன்றை கண்டுபிடித்து மீட்டதையடுத்து அவரை கைது செய்தனர்

இதில் கைது செய்யப்பட்டவர் வாகரை வம்மிவெட்டுவான் வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய கடற்தொழில் ஈடுபட்டு வருபவர் எனவும் இவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி போலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

வாக்களிக்க தற்காலிக அடையாள அட்டை
Posted in இலங்கை செய்திகள்

வாக்களிக்க தற்காலிக அடையாள அட்டை

வாக்களிக்க தற்காலிக அடையாள அட்டை

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு செல்லுபடியாகும் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள், தற்காலிக வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தற்காலிக வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என ஆணைக்குழு கூறியுள்ளது.

தங்கள் பகுதியில் உள்ள கிராம அலுவலர் அல்லது தோ

மட்டக்களப்பு அபிவிருத்தி செய்யப்படும்
Posted in இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு அபிவிருத்தி செய்யப்படும்

மட்டக்களப்பு அபிவிருத்தி செய்யப்படும்

மட்டக்களப்பு அபிவிருத்தி செய்யப்படும் ,வாகரை தொடக்கம் காத்தான்குடி வரையிலான பாரிய சுற்றுலா வலயமொன்றை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு உலகின் பிரதான சுற்றுலாப் பிரதேசமாக மாறும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மட்டக்களப்பு, கல்குடா பிரதேசத்தில் இன்று (08) முற்பகல் இடம்பெற்ற ‘இயலும் ஶ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். முற்போக்குத் தமிழர் கழகம் இதனை ஒழுங்கு செய்திருந்தது.

இந்த மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு சஜித்துக்கும் அனுரவுக்கும் சரியான கொள்கை இல்லை.

அவர்கள் பேசிக்கொண்டிருப்பதை மாத்திரமே செய்கிறார்கள் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாடு எதிர்நோக்கும் சவால்களுக்கு அவர்களிடம் தீர்வுகள் இல்லை எனவும், பிரச்சினைகள் ஏற்படும் போது ஓடிவிடுவதாகவும் தெரிவித்தார்.

எனவே, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் நாட்டுக்காக மக்கள் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி, எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி எரிவாயு சிலிண்டரை வெற்றியீட்டி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் வேலைத் திட்டத்தை வலுப்படுத்துமாறு அனைத்து மக்களிடமும் கேட்டுக்கொண்டார்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டதாவது:

”2022 இல் நான் இந்த பகுதிக்கு வந்த போது நீண்ட வரிசை இருந்தது. பல பகுதிகளுக்கும் சென்றேன்.

நீங்கள் அனைவரும் வரிசையில் இருந்தீர்கள். இந்த வரிசையுகத்தை நிறைவு செய்ய முடிவு செய்தேன். 2023 இல் நான் வரும் போது வரிசைகள் இருக்கவில்லை.

விவசாயிகள் என்னிடம் உரம் கேட்டார்கள். அதனை நான் பெற்றுக்கொடுத்தேன். நீங்கள் சிறந்த விளைச்சலைப் பெற்றுத் தந்தீர்கள்.

இவ்வாறு தான் நாட்டை முன்னேற்றினோம். நீங்கள் அனைவரும் கஷ்டப்பட்டீர்கள். மீண்டும் அந்த நிலைக்குச் செல்ல வேண்டுமா?

நெருக்கடியை போக்க சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்றோம். நிபந்தனைகளுடன் உதவி கிடைத்தது. உதவி பெற வேறு வழியிருக்கவில்லை.

இந்தியாவிடமிருந்து 3.5 பில்லியன் கிடைத்தது. அது தவிர வேறு வழி எதுவும் இருக்கவில்லை. கடினமான முடிவுகளை எடுக்க நேரிட்டது. வரியை அதிகரிக்க நேரிட்டது. விமர்சனங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது.

எவ்வாறு முன்னோக்கிச் செல்ல இருக்கிறோம் என்பது இந்த தேர்தலிலே முடிவாகும். பிரச்சினைகள் வந்த போது மற்ற தலைவர்கள் ஓடுகையில் நான் மட்டுமே முன்வந்தேன்.

இவர்களை நம்ப முடியுமா? பாராளுமன்றத்தைக் கலைகுமாறு கோரினார்கள். தேர்தலை நடத்தச் சொன்னார்கள்.

இவ்வாறு பல நொண்டிச்சாக்குகளைக் கூறினார்கள். இவர்கள் கூறியதைப் போன்று 2022 இல் தேர்தலை நடத்தியிருந்தால் என்ன நடந்திருக்கும். பிரச்சினை தீருமா? அல்லது சிக்கல் ஏற்படுமா? பங்களாதேஷத்தைப் போன்று நாடு மாறியிருக்கும்.

சஜித் வந்து மேடைகளில் பேசுகிறார், பேசுகிறார். பேசிக்கொண்டே இருக்கிறார். எந்த தீர்வும் அவரிடமில்லை. இவ்வாறனவர்களுக்கு எவ்வாறு தீர்வு வழங்க முடியும். அடுத்த 5 வருடங்களுக்கான ‘இயலும் ஶ்ரீலங்கா’ திட்டம் எம்மிடமுள்ளது. 5 அம்சங்களில் அதில் பிரதானமானவை.

வாழ்க்கைச் சுமையை இலகுபடுத்த வேண்டும். வரியைக் குறைப்பதாக சஜித்தும் அநுரவும் சொல்கிறார்கள்.

வரியை குறைத்தால் வருமானம் குறையும். கடன் பெறுவதாக அவர்கள் சொல்கிறார்கள். 2019 இல் கோட்டாபய வரியைக் குறைத்தார். 2022 இல் நாடு வீழ்ச்சியடைந்தது. அந்த நிலைமை மீண்டும் ஏற்பட வேண்டுமா?

பெண்களுக்குத் தான் அதிக பிரச்சினை ஏற்பட்டது? பெண்களின் உரிமைகள் செயற்படுத்தப்படுவதில்லை. பெண்களை வலுவூட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

பெண்கள் வீடுகளில் எதிர்கொள்ளும் வன்முறைகளை தடுக்க சட்ட ஆலோசனை மற்றும் மருத்துவ சேவை நிலையங்களை அமைக்க இருக்கிறோம்.

குடித்து விட்டு வீட்டுக்கு வந்து குழப்பம் செய்யும் ஆண்கள் இனி கவனமாக இருக்க வேண்டிவரும். பெண்களின் மரியாதையைப் பாதுகாக்க வேண்டும்.

இந்தப் பிரதேசத்தில் விவசாய நவீன மயமாக்கலை மேற்கொண்டு நவீன விவசாயத்தில் ஈடுபவோருக்கு கடனுதவி வழங்க இருக்கிறோம்.

மீன்பிடித்துறையிலும் நவீன தொழில்நுட்பத்தை வழங்க இருக்கிறோம். கைத்தொழில் வலயங்கள் மற்றும் முதலீட்டு வலயங்களை ஆரம்பிக்க இருக்கிறோம்.

திருகோணமலையில் ஒன்றை ஆரம்பிப்போம். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இங்கு கொண்டு வர இருக்கிறோம். டிஜிட்டல் மத்திய நிலையமொன்றை மட்டக்களிப்பில் ஆரம்பிக்க இருக்கிறோம்.

இந்தப் பிரதேசத்தை சுற்றுலா வலயமாக முன்னேற்றுவோம். 1977 இல் நான் இங்கு வந்த போது தேவநாயகம் அமைச்சராக இருந்தார்.

நல்லையாவைப் பற்றியும் அறிந்திருந்தேன். எனது தந்தை ஹோட்டலொன்றை ஆரம்பித்தார். அதற்கு அருகில் தான் பிள்ளையானின் கிராமம் இருந்தது.

கல்குடாவில் அனைத்து இடங்களுக்கும் சென்று வந்துள்ளேன். வாகரை முதல் காத்தான்குடி வரை பாரிய சுற்றுலா வலயமொன்றை இங்கு உருவாக்குவேன்.

ஹிங்குரக்கொட விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய இருக்கிறோம். இப்பகுதிக்கு வர அது இலகுவாக இருக்கும்.

சுற்றுலாத்துறையுடன் தொடர்புள்ள பயிற்சிகளை வழங்குவோம். சம்பிரதாய நடனங்கள், கப்பிரிங்ஜா, சம்பிரதாய முஸ்லிம் நடனங்கள், நவீன நடனங்கள், வாத்தியக் குழுக்கள், சுவையான உணவுகள் என பல விடயங்கள் எமக்குத் தேவைப்படும். அவ்வாறு தான் சுற்றுலாத்துறை முன்னேறும்.

இப்பகுதியில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ள இருக்கிறோம். மட்டக்களப்பு பிரதேசத்தை உலகில் தலைசிறந்த சுற்றுலாப் பயண வலயமாக மாற்ற எம்மால் “இயலும்”. சஜித்தினால் அல்லது அநுரவினால் அதனை செய்ய முடியும்.

கேஸ் சிலிண்டருக்கு வாக்களியுங்கள். இன்றேல் கேசும் இல்லை சுற்றுலாத்துறையும் இல்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்போம்
Posted in இலங்கை செய்திகள்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்போம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்போம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்போம் ,ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை நுவரெலியா மாவட்டத்தில் இரண்டு

லட்சத்துக்கு மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்போம் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும், எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து, நுவரெலியா – தலவாக்கலையில் நேற்று (08) மதியம் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

இதில் உரையாற்றும் போதே இராதாகிருஷ்ணன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எமது நாட்டில் இதுவரை எட்டு ஜனாதிபதிகள் உருவாகியுள்ளனர். அவர்களுக்கிடையில் மாறுபட்ட கொள்கையே இருந்துள்ளது. தான் சிங்கள, பௌத்த வாக்குகளால்தான் ஆட்சிக்கு வந்ததாக ஒருவர் கூறினார்.

தமிழர்களையும் அரவணைத்துக்கொண்டே பயணிக்க வேண்டும் என மற்றுமொருவர் கூறினார். இப்படி மாறுபட்ட நிலைப்பாடுகள் காணப்பட்டன.

ஆனால் அனைத்து இன மக்களையும் அரவணைத்துக்கொண்டு பயணிக்ககூடிய ஒரே தலைவர் சஜித் பிரேமதாசதான். இதனை நாட்டு மக்களும் நிச்சயம் உணரவேண்டும்.

சஜித்துடன் நாம் ஐந்தாண்டுகள் இணைந்து பயணிக்கின்றோம். அவர் இனவாதமற்ற தலைவர் என்பதை எமக்கு அறியமுடிகின்றது.

ஒரு சிலர் வடக்குக்கு சென்றால் ஒரு விடயத்தையும், தெற்கில் மற்றுமொரு விடயத்தையும் குறிப்பிடுகின்றனர்.

ஆனால் அனைத்து பகுதிகளிலும் செய்யக்கூடிய விடயங்களை சொல்லும் தலைவராக சஜித் காணப்படுகின்றார்.

அனைத்து இன மக்களையும் சமமாக பார்க்கக்கூடிய தலைவராகவும் அவர் உள்ளார். அதனால் அடிப்படையிலேயே நாம் சஜித்தை ஆதரித்தோம்.

சஜித்தை நாம் வெறுமனே ஆமாம் சாமி போட்டு ஆதரிக்கவில்லை. 47 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவற்றை அவரும் ஏற்றுக்கொண்டுள்ளார். லயன்களை வெறுமனே கிராமங்களாக மாற்றுவதில் தீர்வு கிட்டப்போவதில்லை.

சஜித் ஆட்சியில் மலையகத்தில் நாம் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவோம். மக்களை அச்சுறுத்தி வாக்கு பெறும் முயற்சியில் அநுரகுமார திஸாநாயக்க ஈடுபட்டுவருகின்றார்.

சஜித்தைவிடவும் அநுர முன்னிலையில் இருக்கின்றார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார்.

அநுரவை வெற்றிபெற வைப்பதே ஜனாதிபதியின் நோக்கம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ரணசிங்க பிரேமதாசதான் எமது மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்கினார்

அன்புள்ள அண்ணா சீமான் அவர்களுக்கு அர்ச்சுனா எழுதிய கடிதம்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

அன்புள்ள அண்ணா சீமான் அவர்களுக்கு அர்ச்சுனா எழுதிய கடிதம்

அன்புள்ள அண்ணா சீமான் அவர்களுக்கு அர்ச்சுனா எழுதிய கடிதம்

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா
வைத்திய அத்தியட்ச்சகர்
ஆதார வைத்தியசாலை சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
திரு சீமான் அவர்கள்
நாம் தமிழர் கட்சி
தமிழ்நாடு
இந்தியா


அன்புள்ள அண்ணா சீமான் அவர்களுக்கும் எமது தொப்புள்கொடி உலக வாழ்த்தமிழ் மக்களுக்கும் இலங்கையிலிருந்து உங்கள் தம்பி தமிழுள்ள தாயத்தில் இருந்து எமது மக்கள் சார்பாக ஒரு அன்பு கடிதம்…
அண்ணா.


நாங்கள் இறைவனின் கிருபையால் நன்றாக இருக்கிறோம். நீங்களும் எமது புலம்பெயர் ஈழ மைந்தர்களின் கிருபையால் மிகவும் நன்றாக இருக்கின்றீர்கள் என்பது எமக்கு நன்றாகவே தெரியும்.


எல்லாம் வல்ல எனது இனத் தலைவனின் இறைவனின் பாதத்திற்கும் சிரம் தாழ்த்தி தாயகனவிலே தங்கள் உயிரையும் உடலையும் வித்திட்டு விதியாகிப்போன எனது அக்கா அண்ணா தம்பி தங்கைகளுக்காக இந்த மடலை உங்களின் கவனத்திற்காக எழுதிக் கொண்டிருக்கிறேன். .


தமிழனாய் பிறந்ததற்காகவும் தமிழனுக்காய் பிறந்ததுக்காகவும் பெருமையாய் தங்களுக்கு ஒரு கடிதம்.


1983 இல் தொடங்கிய தமிழின வேட்கை கடந்த 40 வருடங்கள ஆகியும் எங்கே செல்கின்றோம் இதனை தேடுகின்றோம் எனத் தெரியாமலே பிறந்ததிலிருந்து இன்றுவரை நாடோடியாய் அலையும் ஒரு இனத்தின் ஆண் மகன் இதயத்தில் இருந்து இடத்தினை பிழிந்து எடுத்து கடைசியாய் கண்ணீருடன் எழுதிக் கொண்டிருக்கும் மடல் இது..


உலகமே திரண்டு 2009ல் எனது தலைவணையும் எனது தனயன் களையும் எனது தமிழினத்தையும் கந்தக காட்டில் புதைத்துக் கொண்ட ஒரு இனத்தின் தந்தையை இழந்த ஒரு குழந்தையின் ஏக்க மடல் இது….


நாடினை இழந்தோம் வீடினை இழந்தோம் தாயினை இழந்தோம்..
தந்தையினை இழந்தோம் சுமக்காய் போராடிய 44,000 உறவினை இதே மண்ணில் விட்டுடலாய் புதைத்தோம்..


கடைசியில் எமது தலைவணையும் இழந்து இருந்தால் தலைவன் இல்லையேல் இறைவனின் தேடிக் கொண்டிருக்கிறோம்..
உங்களுக்கும் தமிழக தொப்புள் கொடி உறவுகளுக்கும் எமது கூக்குரல் கேட்காது..
ஏனெனில் நாம் தமிழர் ஆயிற்றே..


எனது இனம் அணுவணுமாய் பிளக்கப்பட்டு ஒரு இனப்படுகொலையை அரங்கேற்றிய பேரினம் உங்களை ஆதரவாக பற்றிக் கொண்டிருப்பதை அறிந்தும் உங்களை நம்பிய எனது புலம்பெயர் இரத்தங்கள் உங்களுக்கு பணம் சேர்த்து அனுப்புவதை தெரிந்தும் தெரியாமல் இங்கும் ஒரு பானை

சோற்றிற்கும் ஓடிக் கொண்டுதான் இருக்கின்றோம்…
ஏனெனில் நாம் தமிழராயிற்றே..


மூன்று தசாப்தங்களாக பேரினம் எம்மை அணு அணுவாய் சிதைத்தது..
இருந்தும் உயிர்ப்புடன் தான் ஓடிக் கொண்டிருக்கிறோம் ஏனெனில் நாமும் தமிழர் ஆயிற்றே…


என் தனையன்..
எம் இன தலைவன் மேதகு..
மற்றும் மறவன் துணை சென்ற என் அண்ணாவும் அக்காவும் என் கொடியும் என் தேசியக் கொள்கையும் உனக்கு..
உன் தமிழ்நாட்டு அரசியலுக்கு பேசுபொருள் தான்..
நீ உண்ட ஆமை கறியும் தலைவனை பாசறையும் உனக்கு அரசியல் ஆணிகள்..
ஏனெனில் நீயும் தமிழன் ஆயிற்றே..
அண்ணனின் காலத்தில்..
ஈழத்தில் பிறந்த இந்த மருத்துவனின் குரல் உனக்கு கேட்கின்றதோ இல்லையோ..
என் தமிழ் இனத்திற்கு கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது..
என் தமையன் உன்னடி வந்தது..
என் உறவுகள் உன் பால் சிரம் தாழ்த்தியது..
என் தலைவனில் மூச்சுக்காற்றை நீ சுவாசித்து இருக்கிறாய் என்பதற்காக மட்டுமே அன்றி..
தமிழினத்தையும் தலைவனையும் மண் கொண்ட வித்துடல்களையும் மரணித்த வேங்கைகளையும் உனக்கு அடைமானம் வைக்க அல்ல..
உன் அரசியலுக்காய் பாவிக்க அல்ல..
தமிழில் எழுதி இருக்கிறேன்..
முடிந்தால் வாசித்துக் கொள்..
என்னிடம் என் தேசம் என் தேசியத் தலைவன் என் மாவீரர் வரலாறுகளின் உலகத் தமிழர் இனத்திற்குரியது…
என் கொடி அது என் தலைவனுடையது..
என் உயிரிலும் மேலானது..
அதை உன் அரசியலில் இருந்து மீண்டும் எனது மூச்சுக்காற்றுகளுக்கு மீட்கும் ஓர் நன்னாளை பார்த்து ஓடிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தமிழினதும் நெறிக்கப்பட்ட குரல்வலைகளில் இருந்து அன்புடன் கேட்கிறேன்..
என் இனத்தை எங்களை நாங்களாகவே ஆளவும் வாழவும் இடம் கொடு..
இப்படிக்கு அன்புடன்..
இராமநாதன் அர்ச்சுனா
தலைவனின் பாசறையில் இருந்து.

இவ்வாறு அர்ச்சுனா இராமநாதன் சீமான் அண்ணா அவர்களுக்கு எழுதிய கடிதத்தை முகநூலில் பதிவு செய்துள்ளார் .

அர்ச்சுனா காவல்துறை மோதல்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனா காவல்துறை மோதல்

அர்ச்சுனா காவல்துறை மோதல்

அர்ச்சுனா காவல்துறை மோதல்.வீதி சோதனை காவல்துறையினர் மறித்து அர்ச்சுனாவுக்கு செய்த விடயம் அம்பலமாகியுள்ளது .

தகாத வார்த்தையால் போலீசார் அர்ச்சுனா இராமநாதன் அவர்களை இலங்கை காவல்துறை திட்டிய விடயங்கள் தொடர்பாக அர்ச்சுனா வெளியிட்டுள்ளார் .

அந்த விடயம் தொடர்பாக இந்த காணொளியில் வெளியிட்டுள்ளார் .

video

சீமான் தொடர்பாக அர்ச்சுனா வெளியிட்ட ஆதாரம்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

சீமான் தொடர்பாக அர்ச்சுனா வெளியிட்ட ஆதாரம்

சீமான் தொடர்பாக அர்ச்சுனா வெளியிட்ட ஆதாரம் ,

சீமான் தொடர்பாக அர்ச்சுனா வெளியிட்ட ஆதாரம்  ,தமிழர் கட்சியின் சீமான் செயல்பாடுகள் தொடர்பாக வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் வெளிப்படையாக பலவிடயங்களை வெளியிட்டுள்ளார் .

அதன் முக்கிய பகுதிகள் இந்த காணொளியில் .உள்ளது

வீடியோ

வீரசிங்கம் மகாலிங்கம் மரண அறிவித்தல்
Posted in இலங்கை செய்திகள் மரண அறிவித்தல்

வீரசிங்கம் மகாலிங்கம் மரண அறிவித்தல்

வீரசிங்கம் மகாலிங்கம் மரண அறிவித்தல்

வீரசிங்கம் மகாலிங்கம் மரண அறிவித்தல்,யாழ் மண்டைதீவை பிறப்பிடமாக கொண்ட திருநெல்வேலி பால்பண்ணை வீதியை திடமாக கொண்ட 04-09-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்

This image has an empty alt attribute; its file name is LETTER-353x450.png
அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் ஏவுகணையை இந்தியா பரிசோதித்தது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் ஏவுகணையை இந்தியா பரிசோதித்தது

அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் ஏவுகணையை இந்தியா பரிசோதித்தது


அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் ஏவுகணையை இந்தியா பரிசோதித்தது ,அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் ஏவுகணையை இந்தியா பரிசோதித்தது.


எஹ்ரான், செப். 07 (எம்என்ஏ) – இந்தியா வெள்ளிக்கிழமை ஒரு இடைநிலை ஏவுகணையை வெற்றிகரமாக ஏவியது என்று பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

அக்னி-4 ஏவுதல் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த ஏவுதல் அனைத்து செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப அளவுருக்கள் வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்டது. இது மூலோபாய படைகளின் கட்டளையின் கீழ் நடத்தப்பட்டது, ”என்று அது கூறியது.

அக்னி-4 என்பது 4,000 கிலோமீட்டர்கள் (2,500 மைல்கள்) தூரம் வரை சென்று தாக்கக்கூடிய அணுசக்தி திறன் கொண்ட, நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணையாகும்.

முன்னதாக இந்தியா ஏவுகணையை வெற்றிகரமாக ஏவியது..

புயலில் 195பேர் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

புயலில் 195பேர் பலி

புயலில் 195பேர் பலி


புயலில் 195பேர் பலி ,யாகி புயல் வடக்கு வியட்நாமில் 195 பேர் பலி, காயம்
தெஹ்ரான், செப். 08 (எம்என்ஏ) – சனிக்கிழமை பிற்பகல் வடக்கு வியட்நாமைத் தாக்கியதில் இருந்து,

யாகி புயல் ஒன்பது இறப்புகள் மற்றும் 186 பேர் காயம் அடைந்துள்ளது என்று ஞாயிற்றுக்கிழமை காலை நாட்டின் விவசாய மற்றும் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 30 ஆண்டுகளில் இப்பகுதியைத் தாக்கிய மிக சக்திவாய்ந்த புயலான சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் மூன்று பேர் கடலோர மாகாணமான குவாங் நின்,

வடக்கு மாகாணமான ஹை டுவாங்கைச் சேர்ந்த ஒருவர், துறைமுக நகரமான ஹை ஃபோங்கிலிருந்து ஒருவர், மற்றும் நான்கு வடக்கு மாகாணமான ஹோவா பின், சின்ஹுவா தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்களில், 157 பேர் குவாங் நினைச் சேர்ந்தவர்கள், 13 பேர் ஹை ஃபோங்கைச் சேர்ந்தவர்கள், 10 பேர் ஹனோய், ஐந்து பேர் ஹை டுவோங்கைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒருவர் ஹோவா பின்ஹ் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, குவாங் நினில் 25 ஆளில்லா கப்பல்கள், முக்கியமாக மீன்பிடி படகுகள், பெரிய அலைகள் மற்றும் பலத்த காற்றால் மூழ்கின.

குவாங் நின், ஹை ஃபோங், தாய் பின், ஹை டுவாங் மற்றும் ஹனோய் ஆகிய இடங்களில் சூறாவளியால் சில மின்மாற்றிகள் மற்றும் டிரான்ஸ்மிஷன் லைன்கள் சேதமடைந்ததால் மின்தடை ஏற்பட்டுள்ளது.

சூறாவளி கிட்டத்தட்ட 3,300 வீடுகள், 121,500 ஹெக்டேர் நெல் மற்றும் பிற பயிர்கள், 5,000 ஹெக்டேர்களுக்கு மேல் பழ மரங்கள் மற்றும் 1,000 க்கும் மேற்பட்ட மீன்வளர்ப்பு கூண்டுகளையும் சேதப்படுத்தியுள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இயற்கை பேரழிவுகள், முக்கியமாக புயல்கள், நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம், தென்கிழக்கு ஆசிய நாட்டில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஆகஸ்ட் 5 வரை 111 பேர் இறந்துள்ளனர் மற்றும் காணாமல் போயுள்ளனர்,

இது ஐந்து ஆண்டுகளில் இதே காலத்தில் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது என்று தேசிய வழிநடத்தல் குழு தெரிவித்துள்ளது. இயற்கை பேரிடர் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு

MQ-9 ட்ரோனை வீழ்த்திய ஹவுதி
Posted in உலக செய்திகள்

MQ-9 ட்ரோனை வீழ்த்திய ஹவுதி

MQ-9 ட்ரோனை வீழ்த்திய ஹவுதி


MQ-9 ட்ரோனை வீழ்த்திய ஹவுதி ,யேமன் அதன் எல்லையில் அமெரிக்க MQ-9 ட்ரோனைத் தாக்கியது.


டெஹ்ரான், செப். 08 (எம்என்ஏ) – ஏமன் வான் பாதுகாப்பு படையினர் அமெரிக்காவின் MQ-9 ஆளில்லா விமானத்தை மரிப் மாகாணத்தில் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியதாக ஏமன் ஆயுதப் படையின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் யாஹ்யா சாரி அறிவித்தார்.

மாரிப் மாகாணத்தின் வான்பரப்பில் அமெரிக்க ஆளில்லா விமானம் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டபோது ஏமன் இராணுவம் சுட்டு வீழ்த்தியது, சாரீ கூறினார்.

அவரைப் பொறுத்தவரை, இது யேமன் படைகள் சுட்டு வீழ்த்தப்பட்ட எட்டாவது MQ-9 ட்ரோன் ஆகும்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிரான பாலஸ்தீனத்தின் போராட்டத்திற்கு யேமன் மக்கள் தங்கள் வெளிப்படையான ஆதரவை அறிவித்துள்ளனர், அக்டோபர் 7 ஆம் தேதி ஆட்சி காசா மீது பேரழிவுகரமான போரைத்

தொடங்கிய பின்னர், பிரதேசத்தின் பாலஸ்தீனிய எதிர்ப்பு இயக்கங்கள் ஆக்கிரமிப்பு நிறுவனத்திற்கு எதிராக ஆபரேஷன் அல்-அக்ஸா புயல் என்று அழைக்கப்படும் திடீர் பதிலடித் தாக்குதலை நடத்தியது.

காசாவில் குறைந்தது 27,948 பேரைக் கொன்று 67,459 நபர்களைக் காயப்படுத்திய இஸ்ரேலிய தரை மற்றும் வான்வழித் தாக்குதல்கள் முடிவுக்கு வரும் வரை தங்கள் தாக்குதல்களை நிறுத்தப் போவதில்லை என்று ஏமன் ஆயுதப் படைகள் கூறியுள்ளன.

டிசம்பரில் அமெரிக்கா வும் பிரிட்டனும் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஏமனை குறிவைத்து இராணுவக் கூட்டணியை அறிவித்தன.

சீமான் அர்ச்சுனா மோதல்
Posted in இலங்கை செய்திகள்

சீமான் அர்ச்சுனா மோதல்

சீமான் அர்ச்சுனா மோதல்

சீமான் அர்ச்சுனா மோதல் ,போக்கு தீவிரமடைந்து வந்த நிலையில் அவை தற்போது முற்று பெற்றுள்ளதாக கடந்த தினம் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார் .

வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் கலந்து கொண்டு பேசுபொழுது சீமானுடன் தான் பேசியதாகவும் அதன் பின்னர் தனது நிலைப்பாடு எப்படி உள்ளது என்கின்ற விடயத்தை தெளிவாக அர்ச்சுனா இராமநாதன் விளக்கியுள்ளார் .

சீமானுடன் நட்புறவாக அரசியலை எடுத்து செல்ல உள்ளதாகவும் ,ஆனால் அவர் பயன் படுத்தும் புலிகளது சிந்தனைகள் ,எவற்றையுய்ம் தான் பயன்படுத்த மாட்டேன் என தெரிவித்துள்ளார் .

காலம் கணிக்கின்ற பொழுது அதனை அவ்விடத்தில் சிறந்த முறையில் செய்து கொள்வேன் என்கின்ற விடயத்தை தெரிவித்துள்ளார் .

இதனை அடுத்து தற்பொழுது சீமான் அர்ச்சுனா இடையில் நிலவிய முறுகல் மோதல் நிலை தவிர்க்க பட்டு மென் போக்குடன் கூடிய அரசியல் பயணம் பயணிப்பதாக அறிய முடிகிறது .

மாலைதீவில் தீவு வங்கிய புலிகள்
Posted in இலங்கை செய்திகள்

மாலைதீவில் தீவு வங்கிய புலிகள்

மாலைதீவில் தீவு வங்கிய புலிகள்

மாலைதீவில் தீவு வங்கிய புலிகள் ,புலிகளின் குழு ஒன்று மாலைதீவில் தீவு ஒன்றை வங்கியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இறுதி போரில் விடுதலை புலிகளுக்கு ஆயுதங்கள் வாங்கி கப்பல் மூலம் அனுப்புவதக தெரிவித்த மேற்படி குழுவினர் .அந்த ஆயுதங்களை வாங்காது அந்த பணத்தை கொள்ளையடித்து மாலைதீவில் தீவு வாங்கியுள்ளது கண்டுபிடிக்க பட்டுள்ளது

அனைத்துலகம் என்கின்ற கட்டமைப்பில் இணைந்து பயணித்த குழு ஒன்று இணைந்து இந்த தீவினை வாங்கியுள்ளது மிக பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

போர் முடிவடைந்து 15 வருடங்கள் கழிந்துள்ள பொழுதும் ,இதுவரை அந்த போரில் விழுப்புண் அடைந்த மக்களிற்கு தீரவ்வு எதனையும் காணாது ,போராளிகளுக்கு உதவிகள் ஏதும் வழங்காது ,மக்களிடம் பணத்தை பெற்று இந்த குழுவானது சுக போக வாழ்க்கை வாழ்வது அம்பலமாகியுள்ளது .

மாவீரர் வியாபாரிகளாக மாற்றம் பெற்றுள்ள இவர்கள் அவ்வேளை அங்கு சேமிக்க படும் பணத்தை கொண்டு ஆடம்பர வாழ்வில் வாழ்ந்து வருவது கண்டு பிடிக்க பட்டுள்ளதாக மக்கள் சமூகம் தெரிவித்துள்ளது .

இவ்வாறு கோடி பணத்தை கொள்ளையடித்து ஆடம்பர வாழ்வில் வாழும் இவர்களை ,இப்படி செல்வந்தராக மக்கள் வாழவைப்பது ஏன் என்ற கேள்வியே தற்போது எழுப்ப பட்டுள்ளது .

மக்களே விழிப்பாக பயணியுங்கள் .இது தொடர்பான விவாதம் எமது வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் இடம்பெறுகிறது அதில் கலந்து கொண்டு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் .

எமது டிக் டாக்கில் இணைய இதில் அழுத்துங்கள்

அச்சுறுத்திய அநுரகுமார மன்னிப்பு கோர வேண்டும்
Posted in இலங்கை செய்திகள்

அச்சுறுத்திய அநுரகுமார மன்னிப்பு கோர வேண்டும்

அச்சுறுத்திய அநுரகுமார மன்னிப்பு கோர வேண்டும்

அச்சுறுத்திய அநுரகுமார மன்னிப்பு கோர வேண்டும் ,வாக்குகளைப் பெறுவதற்காக வடக்கு மக்களை அச்சுறுத்திய அநுரகுமார திஸாநாயக்க அந்த மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிங்கள மக்களின் பெயரைப் பயன்படுத்தி வடக்கு மக்களை அச்சுறுத்தியமைக்காக தென்பகுதி மக்களிடமும் அநுரகுமார மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தின் சங்கிலியன் பூங்காவில் இன்று நடைபெற்ற இயலும் ஶ்ரீலங்காவெற்றிப் பேரணியில் உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன், மாகாண சபைகளுக்கு அபிவிருத்திக்கான அதிகாரம் வழங்கப்படும் என்பதுடன் மாகாண அபிவிருத்தி விசேட நிறுவனங்கள் ஆரம்பிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

விவசாயத் துறையைப் பலப்படுத்தி வரும் நிலையில், வடக்கில் விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வடக்கில் காங்கேசன்துறை, பூனகரி,மாங்குளத்தில் விசேட வர்த்தக வலயம் ஆரம்பிக்கவிருப்பதுடன் வடக்கில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் வடக்கில் டிஜிட்டல் மத்திய நிலையமொன்றை ஆரம்பிக்கவிருப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டதாவது:

”ஜனாதிபதித் தேர்தலை ந டத்த முடியும் என இரண்டு வருடங்களுக்கு முன்னர் யாரும் நம்பியிருக்கவில்லை.

அனைத்திற்கும் வரிசை இருந்தது. நாட்டில் ஸ்தீரத்தன்மையை பாதுகாத்து பொருளாதாரத்தைப் பலப்படுத்தியுள்ளேன்.

அந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தக் கூடியதாக உள்ளது. இயலும் ஶ்ரீலங்கா எண்ணக் கருவை முன்னெடுத்து வருகிறேன்.

சஜித்தும் அநுரவும் பொறுப்புக்களை ஏற்க முன்வரவில்லை. அவர்கள் இருந்தால் தேர்தலை நடத்தியிருக்க முடியுமா? கூட்டங்களில் பேச முன்னர் அவர்கள் எனக்கு நன்றி சொல்ல வேண்டும்.

இன்னும் பிரச்சினைகளும், சிரமங்களும் உள்ளன. ஆனால் எதிர்பார்ப்பு பற்றிய எதிர்பார்ப்பு உள்ளது. அந்த எதிர்பார்ப்பைப் பாதூக்ககவே நான் போட்டியிடுகிறேன்.
கடந்த காலத்தில் எமது கடன் சுமை அதிகரித்திருந்தது. கடன் பெறுவதை நிறுத்தினோம். கடன் பெறுவதை நிறுத்தியதால் வரிகளை அதிகரிக்க நேரிட்டது. பண வீக்கம் அதிகரித்திருந்தது. இருவேளை சாப்பிடுவது கூட கஷ்டமாக இருந்தது.

தற்பொழுது பொருளாதரம் பலமடைந்துள்ளது. அஸ்வெசும திட்டத்தின் கீழ் 24 இலட்சம் பேருக்கு வழங்கி இருக்கிறோம்.

இன்னும் 5 இலட்சம் பேருக்கு அஸ்வெசும வழங்கப்பட வேண்டும். சம்பள உயர்வு வழங்கியுள்ளதோடு ஓய்வூதியங்களையும் அதிகரித்துள்ளோம்.

பொருளாதாரம் வலுவடைந்துள்ளதாலே அவற்றை செய்ய முடிந்தது. பொருட்களின் விலைகளும் குறைந்துள்ளன. மேலும், நிவாரணங்கள் வழங்க வேண்டும்.

பொருட்களின் விலைகள் குறைவடைந்து வருகிறன. வாழ்க்கைச் செலவு இன்னும் அதிகமாக இருக்கிறது.

அதனால் ரூபாவின் பெறுமதியைப் பலப்படுத்தி வாழ்க்கைச் செலவைக் குறைக்க வேண்டும். ரூபாவின் பெறுமதி வலுவடையும் போது இன்னும் சலுகைகளை வழங்கலாம்.

அடுத்த வருடம் மேலும் சலுகைகள் வழங்குவேன். வரியை குறைத்து, சலுகைகள் வழங்க முடியாது. 2019 இல் கோட்டாபய வரியை குறைத்தார்.

நாட்டின் வருமானம் குறைந்தது. 2022 இல் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. பெண்களுக்காக தனியான விஞ்ஞாபனத்தை சமர்ப்பித்துள்ளேன்.

அவர்களை வலுவூட்ட சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களிலும் தனியான பிரிவு ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மக்களுக்கும் உறுமய காணி உறுதி பெற்றுக் கொடுக்கப்படும். அடுத்த வருடம் மேலும் வாழ்க்கைச் செலவை குறைப்போம்.

உற்பத்தி அதிகரிக்கும் போது அனைவரிடமும் வரி அறவிடப்படும். அத்தோடு தற்பொழுது வரி செலுத்துவோரின் வரிச்சுமை குறையும்.

விவசாயத் துறையைப் பலப்படுத்தி வருகிறோம். வடக்கு விவசாயத்திற்கு முக்கியமானது. டிஜிட்டல் பொருளாதாரத்தை ஏற்படுத்த இருக்கிறோம்.

வடக்கில் காங்கேசன்துறை, பூனகரி,மாங்குளத்தில் விசேட வர்த்தக வலயம் ஆரம்பிக்க இருக்கிறோம். இப்பிரதேசத்தில் சுற்றுலாதுறையை ஊக்குவிக்கிறோம்.

டிஜிட்டல் மத்திய நிலையமொன்றை ஆரம்பிக்க இருக்கிறோம். இவற்றை அரசினால் தனியாக மேற்கொள்ள முடியாது.

9 மாகாண சபைகளுக்கும் அரசாங்கத்துடன் பணியாற்றுவதற்காக மாகாண சபைகளுக்கு அபிவிருத்திக்கான அதிகாரம் வழங்கப்படும். மாகாண அபிவிருத்தி விசேட நிறுவனங்கள் ஆரம்பிக்கப்படும்.

வடக்கு மக்களை அநுரகுமார அச்சுறுத்துகிறார். மாற்றத்திற்காக தெற்கு மக்கள் தயாராகியிருக்கையில் அந்த மாற்றத்திற்கு எதிராக செயற்பட்டால் எவ்வாறான மனநிலை தெற்கில் ஏற்படும் என்கிறார்.

அவரது வெற்றியின் பங்காளர்களாக வர வேண்டும் என்கிறார். தனக்கு வாக்களிக்காவிட்டால் பார்த்துக் கொள்வோம் என அநுர எச்சரித்தார். அதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

2010 ஜனாதிபதித் தேர்தலின் போது இங்கு வந்து பொன்சேக்காவுக்கு வாக்களிக்க கோரினோம். வடக்கு மக்கள் பொன்சேக்காவுக்கு வாக்களித்தனர். தெற்கு மக்கள் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வாக்களித்தனர்.

மஹிந்த ராஜபக்‌ஷ வென்றார்.உங்களை யாராவது தாக்கினார்களா. 2015 இல் மைத்திரிபால சிரிசேனவுக்கு வாக்களிக்கக் கோரினோம்.

தென் பகுதி மக்கள் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வாக்களித்தனர். நாம் வென்றோம். ஏதாவது நடந்ததா. 2019 இல் வடக்கு மக்கள் சஜித்திற்கு வாக்களித்தார்கள்.

தெற்கில் கோட்டாவுக்கு வாக்களித்தார்கள். கோட்டாபய இராணுவத்தை அழைத்து வந்தாரா. தேர்தல் முடிவுகளை மக்கள் அங்கீகரித்தனர். அநுர எப்படி மக்களை அச்சுறுத்த முடியும்.

வடக்கு மக்களை மட்டுமன்றி தெற்கு மக்களையும் அவர் அச்சுறுத்துகிறார். அது தான் அவர்களின் போக்கு.

அநுர வெற்றி பெற மாட்டார். முன்பு துண்டுப் பிரசுரம் பகிர்ந்தார். வடக்கு மக்களிடம் அநுர மன்னிப்புக் கோர வேண்டும்.

தென்பகுதியில் உள்ள சிங்கள மக்களின் பெயரைப் பயன்படுத்தி அச்சுறுத்தியதற்காக தென்பகுதி மக்களிடமும் அநுர மன்னிப்புக் கோர வேண்டும்.

பின்னர் அவருக்கு எதிர்க்கட்சிக்கு வரலாம். அவருக்கு யாழ்ப்பாணத்திற்கு வர முடியாது போகும்.

நாம் முன்னர் அவர்களுக்கு அஞ்சவும் இல்லை. இப்பொழுது அஞ்சவுமில்லை. சஜித் பற்றி பேசி பயனில்லை.

எதிர்க்கட்சித் தலைவரின் பொறுப்பை அவர் செய்திருந்தால் அநுர முன்னேறி வந்திருக்க மாட்டார்.

அவருக்கு அளிக்கும் வாக்குகள் பயனற்றதாகும். எமது நாட்டை முன்னேற்ற வேண்டும். எனவே கேஸ் சிலிண்டருக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்.” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மனைவியை கொன்று உயிரை மாய்த்துக்கொண்ட கணவர்
Posted in இலங்கை செய்திகள்

மனைவியை கொன்று உயிரை மாய்த்துக்கொண்ட கணவர்

மனைவியை கொன்று உயிரை மாய்த்துக்கொண்ட கணவர்

மனைவியை கொன்று உயிரை மாய்த்துக்கொண்ட கணவர் ,கணவன், மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததுடன் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று (07) இச்சம்பவம் மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குஞ்சிக்குளம் பகுதியில் பதிவாகியுள்ளது.

குஞ்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய ஆணும் 56 வயதுடைய பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் இதேபோன்று கடந்த 06 ஆம் திகதி இரவு ஏற்பட்ட தகராறின் பின்னரே கணவன், மனைவியை கொலை செய்து பின்னர் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளமை பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கோடாரி, குற்றம் நடந்த இடத்தில் இருந்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அன்று கோட்டாவுடன் டீல் இன்று அநுரவுடன் டீல்
Posted in இலங்கை செய்திகள்

அன்று கோட்டாவுடன் டீல் இன்று அநுரவுடன் டீல்

அன்று கோட்டாவுடன் டீல் இன்று அநுரவுடன் டீல்

அன்று கோட்டாவுடன் டீல் இன்று அநுரவுடன் டீல் ,220 இலட்சம் மக்கள் முன்னிலையில் இன்று கீரியும் பாம்பும் ஒன்றாக இணைகின்ற நிகழ்வு இடம் பெற்றுள்ளது.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிக்கும் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் அரசியல் திருமணம் இடம்பெறுகிறது.

இந்த இரு தரப்பினரும் ஒன்றாக இணைந்து மோசமான கூட்டமைப்பொன்றை உருவாக்கி என்னை தோல்வி அடையச் செய்ய முயற்சிக்கின்றார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு 200 மில்லியன் ரூபா செலவாகும். இவர்கள் இருவரும் கலந்தாலோசித்து ஜனாதிபதி பதவியையும், பிரதமர் பதவியையும் பிரித்துக்கொண்டால் 200 மில்லியன் செலவிலிருந்து குறைவடையும் என்றும், இதுவரை காலமும் இவர்கள் நாடகமாடி மக்களை ஏமாற்றி இருக்கிறார்கள்.

இது இவர்களுடைய டீல். இந்த டீலோடு தபால் மூல வாக்களிப்புக்கு முந்தைய தினம் அரச ஊடகத்தில் உரையாற்றுவதற்கு அநுர குமாரவுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எமது நாட்டு வரலாற்றிலே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற ஒருவர் தோல்வி அடைவேன் என தெரிவித்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

தற்போதைய ஜனாதிபதி தோல்வி அடைவார் என அவரே தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்க நினைத்திருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியாளர்களும், மொட்டுக் கட்சி ஆதரவாளர்களும் அந்த வாக்குகளை வீணடிக்காமல் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்தார்.

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் கூட்டணியின் 36 ஆவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எஹலியகொட நகரில் வெற்றிகரமாக இடம்பெற்றது.

ஐக்கிய மக்கள் கூட்டணியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் என பெரும் திரளானோர் இப்பேரணியில் கலந்து கொண்டிருந்தனர். இத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியின் வரலாற்றுக் காலம் நெடுகிலும் வழி தவற செய்கின்ற மற்றும் காட்டிக் கொடுக்கின்ற வேலையை செய்திருக்கின்றார்.

2019 ஆம் ஆண்டு தேர்தலின் போதும் தன்னை தோல்வி அடையச் செய்வதற்காக கோட்டாபய உடன் டீல் செய்து கொண்டார். அவர் தோல்வி அடைந்தமையால் தன்னுடைய 40 ஆயிரம் பேர்களின் வேலைகளை இல்லாது செய்ததோடு பதவி உயர்வுகளையும் இல்லாது செய்து பழிவாங்கி இருக்கிறார்.

அந்த வேலைகளை செய்த பதில் ஜனாதிபதி இந்த சந்தர்ப்பத்திலும் பழிவாங்கப்பட்ட 40 ஆயிரம் பேர் குறித்து சிந்திப்பதில்லை. அவருக்கு மக்களுடைய எதிர்பார்ப்புகள் குறித்த உணர்வுகள் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்டு நிர்கதியாகியுள்ள 40 ஆயிரம் பேரையும் தான் பொறுப்பு ஏற்றுக் கொள்வதாகவும், unp ஜனாதிபதிக்கு அதைச் செய்ய முடியாது என்பதால், அவர்களை தான் பொறுப்பேற்றுக் கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

இன்று காணப்படுகின்ற சேறு பூசுகின்ற அழுக்கு அரசியலில் மக்களை ஏமாற்றி முட்டாளாக்குகின்ற கீழ்தரமான அரசியல் முறையை நாம் இல்லாதொழிக்க வேண்டும்.

இன்று வருகின்றார்கள் செல்கின்றார்கள் என்ற வதந்திகள் பரப்பப்பட்டாலும் ஐக்கிய மக்கள் சக்தியின் பயணத்தில் எந்த ஒரு மக்கள் பிரதிநிதியையும் பணம் கொடுத்து பெற்றுக்கொள்ளவோ அல்லது வைத்துக் கொள்ளவோ இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நாட்டுக்கு உள்ள ஒரே மாற்று வழி ரணில் அநுர தொடர்பு அல்ல. மக்களின் வேதனையை மக்களின் உயிர் நாடியை உணருகின்ற மக்கள் மயமான, ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் கூட்டணியுமாகும். என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

தான் தெற்கிலே வெற்றி அடைந்திருப்பதாக அனுரகுமார திசாநாயக்க வடக்கிற்கு சென்று கூறுகின்றார். அது வெறும் கனவு.

அநுரவும் ரணிலும் அரசியல் ரீதியான சம்பந்த உறவு வைக்கின்ற போது ஐக்கிய மக்கள் சக்தி பொதுமக்களுடன் ஒப்பந்தம் செய்கின்றது. தம்மிடம் திருடர்களுடனான டீல் இல்லை. தமது ஒரே பொறுப்பு துன்பத்தில் இருக்கின்ற மக்களை மீட்டெடுப்பதாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

F-16 போர் விமான பாகம் விற்பனை
Posted in உலக செய்திகள்

F-16 போர் விமான பாகம் விற்பனை

F-16 போர் விமான பாகம் விற்பனை

F-16 போர் விமான பாகம் விற்பனை ,நெதர்லாந்து உக்ரைனுக்கு F-16 போர் விமானத்தின் பாகங்களை வழங்க உள்ளது
நெதர்லாந்து உக்ரைனுக்கு F-16 போர் விமானத்தின் பாகங்களை வழங்க உள்ளது.


தெஹ்ரான், செப். 07 (எம்என்ஏ) உக்ரைனின் எஃப்-16 போர் விமானங்கள் மற்றும் வான்-விண் ஏவுகணைகளை பராமரிப்பதற்கான உபகரணங்கள் மற்றும் பொருட்களை நெதர்லாந்து வழங்கப் போகிறது என்று நெதர்லாந்து பாதுகாப்பு அமைச்சர் ரூபன் பிரேகெல்மன்ஸ் தெரிவித்தார்.

ஏஜென்சியின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியின்படி, ஜெர்மனியில் உள்ள ராம்ஸ்டீன் விமான தளத்தில் நடந்த உக்ரைனின் பாதுகாப்பு குறித்த தொடர்புக் குழுவின் கூட்டத்தில், பிரேகெல்மன்ஸ் உக்ரைனுக்கு உதவியை அறிவித்தார்.

“F-16 விமானத்திற்கு ஆதரவு பொருட்கள் மற்றும் பராமரிப்புக்கான உதிரி பாகங்கள் தேவை, இல்லையெனில் அவை பறக்க முடியாது. நெதர்லாந்து EUR 80 மில்லியன் மதிப்புள்ள பொருட்களை வழங்கும். பெரிய அளவிலான உதிரி பாகங்கள் தவிர, ஜெனரேட்டர்கள், சிறிய வாகனங்கள், அத்தியாவசிய பராமரிப்பு பொருட்கள், சிறப்பு கருவிகள் மற்றும் படிக்கட்டுகள் ஆகியவை இதில் அடங்கும். வான்வழி ஏவுகணைகள் மூலம், உக்ரைன் எதிரி விமானங்களை வீழ்த்த முடியும்” என்று அமைச்சர் கூறியதாக இன்டர்ஃபாக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

செயல்பாட்டுப் பாதுகாப்புக் காரணங்களுக்காக, சம்பந்தப்பட்ட அளவுகள் அல்லது வகைகளைப் பற்றிய எந்த விவரத்தையும் அமைச்சர் வழங்கவில்லை.

திட்டமிடப்பட்ட டெலிவரி நேரம் குறித்தும் அவர் கருத்து தெரிவிக்கவில்லை, ஆனால் பொருட்கள் விரைவில் உக்ரைனை சென்றடைய வேண்டும் என்பதே நோக்கம்.

கூடுதலாக, உக்ரைனுக்கான சர்வதேச நிதியம் (IFU) இந்த வார தொடக்கத்தில் உக்ரைனுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட 1 பில்லியன் பவுண்டுகளை தாண்டிவிட்டதாக அறிவித்தது. ஐக்கிய இராச்சியத்தால் நிர்வகிக்கப்படும் இந்த நிதியில் நெதர்லாந்து ஒரு பங்குதாரராக உள்ளது.

கோடைகாலத்திற்கு முன், நெதர்லாந்து IFU மூலம் உக்ரைனுக்கான ட்ரோன்களை வாங்குவதற்கு பங்களித்ததாக அறிவித்தது, மேலும் இன்றுவரை அந்த நிதிக்கு நாடு 125 மில்லியன் யூரோக்களை வழங்கியுள்ளது. குறிப்பிடப்பட்ட அனைத்துத் தொகைகளும் உக்ரைனுக்கு முன்னர் கிடைக்கப்பெற்ற உதவி நிதிகளால் மூடப்பட்டிருக்கும்

திடீரென மாவையை சந்தித்த ஜனாதிபதி ரணில்
Posted in இலங்கை செய்திகள்

திடீரென மாவையை சந்தித்த ஜனாதிபதி ரணில்

திடீரென மாவையை சந்தித்த ஜனாதிபதி ரணில்

திடீரென மாவையை சந்தித்த ஜனாதிபதி ரணில் ,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (7) மாலை இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் உள்ள மாவை சேனாதிராஜாவின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , இரண்டு தேர்தல் பிரசாங்களில் பங்கேற்பதாக யாழ்ப்பாணம் சென்றிருந்த வேளையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இல்லத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை மாவை சேனாதிராஜா, இந்து சமய முறைப்படி வரவேற்றார்.

மாவை சேனாதிராஜாவின் தனிப்பட்ட அழைப்பின் பிரகாரம் ஜனாதிபதி, அவரின் இல்லத்திற்கு சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது விசேடமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்று, வடமாகாண அபிவிருத்தியை உறுதிப்படுத்துவார் என நம்புவதாக, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.