வீரசிங்கம் மகாலிங்கம் மரண அறிவித்தல்
Posted in இலங்கை செய்திகள் மரண அறிவித்தல்

வீரசிங்கம் மகாலிங்கம் மரண அறிவித்தல்

வீரசிங்கம் மகாலிங்கம் மரண அறிவித்தல்

வீரசிங்கம் மகாலிங்கம் மரண அறிவித்தல்,யாழ் மண்டைதீவை பிறப்பிடமாக கொண்ட திருநெல்வேலி பால்பண்ணை வீதியை திடமாக கொண்ட 04-09-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்

This image has an empty alt attribute; its file name is LETTER-353x450.png
திருமதி விஜயலட்சுமி சிவபாக்கியநாதன்
Posted in மரண அறிவித்தல்

திருமதி விஜயலட்சுமி சிவபாக்கியநாதன்

நுணாவில் சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் ,சித்தன்கேணியையும் ,
இலண்டன் ஈஸ்ட்காமை வசிப்பிடமாகவும் கொண்ட
திருமதி விஜயலட்சுமி சிவபாக்கியநாதன் (ஓய்வுபெற்ற அதிபர் /ஆசிரியர் ,
பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி } 11-02-2023 சனிக்கிழமை
இறைவனடி எய்தினார் .

அன்னார் காலஞ்சென்றவர்களான -சின்னத்துரை இராசம்மா தம்பதிகளின்
அன்பு மகளும் ,சிவசுந்தரம் -சிவபாக்கியம் தம்பதிகளின் மருமகளும் ஆவார் .
அன்னார் காலஞ்சென்ற சட்டத்தரணி சிவபாக்கியநாதன் அவர்களின்
அன்பு மனைவியுமாவர் .

நித்தியலட்சுமி (கனடா ) பத்மாவதி (இலங்கை )சற்குணவதி (இலண்டன் )
ரூபவதி (இலண்டன்) இரத்தினேஸ்வரி (இலங்கை }கமலேஸ்வரி {கனடா }
ஆகியோரின் சகோதரியும் ,சிவபாக்கியசுந்தரம் (இலண்டன் )
காலஞ்சென்ற கனகரட்ணம் (இலண்டன் ) இராசலட்சுமி (இலங்கை )
காலஞ்சென்ற சந்தானலட்சுமி (பிரான்ஸ் ) ஜெயபாலசுந்தரம் (இலங்கை )
சிவஞான சுந்தரம் (இலண்டன் ) சிவரஞ்சிதம் (பிரான்ஸ் )சிவயோகவதி (பிரான்ஸ் )
இன் மைத்துனியும் ,

DR வசந்தன் (நியுசிலாந்து ) வாசுகி முருகதாஸ் (சட்டத்தரணி இலண்டன் )
கலாவதனி ( கணக்காளர் இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ,

சீதா ,முருகதாஸ் (தாசன் ),சிவநேசன் {பிரகாஷ் }ஆகியோரின் அன்பு மாமியாரும் ,
பிரசாந்த் ,நீரா ,ஹரிதரன் {தரன் } பிரியங்கா ,ஆகாஷ் ,சோபிகாவின்
அன்பு பேத்தியுமாவார் .

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 16-02-23 வியாழக்கிழமை காலை 7.00 மணி முதல் 9.30 மணி வரை
8 -10 Shakespeare Crescent, Manor Park , London E12 6LN (Near East Ham station)
இலும், தகனக்கிரிகைகள் South Chapel at City of London Crematorium,
Aldersbrook Road, Manor Park, London E12 5DQ இல் காலை 10.15 மணி
முதல் 10.45 மணிவரை நடைபெறும் என்பதை அறியத் தருகிறோம்.

தொடர்புகட்கு
வாசுகி முருகதாஸ் (மகள் ) 0044 7960899219
கலாவதனி சிவநேசன் (மகள்) 0044 7958607214

மரண அறிவித்தல்- சபாபதிப்பிள்ளை சண்முகலிங்கம்
Posted in மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்- சபாபதிப்பிள்ளை சண்முகலிங்கம்

மரண அறிவித்தல்- சபாபதிப்பிள்ளை சண்முகலிங்கம்

சபாபதிப்பிள்ளை சண்முகலிங்கம்
( கோண்டாவில் லிங்கோ லுப்றிக்கேசன் சேவிஸ் முன்னாள் உரிமையாளரும் ,இராஜேஸ்வரி பேச்சி அம்மன் தேவஸ்தானம் தர்மகத்தாவும் ஆவார் )

புன்னாலைக்கட்டுவன் வடக்கை பிறப்பிடமாகவும் ,கல்வியங்காடு ஆடியபாதம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட ,சபாபதிப்பிள்ளை சண்முகலிங்கம் அவர்கள் 05-12-2022 அன்று இறைபதமடைந்துவிட்டார் .

அன்னார் காலம் சென்றவர்களான சபாபதிப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்புமகனும் ,காசிப்பிள்ளை -சின்னதங்கம் ,தம்பதிகளின் அன்பு மருமகனும் ,
கமலாம்பிகையின் அன்பு கணவரும் ,காலம்சென்ற பரஞ்சோதியின் அன்பு சகோதரனும் ,
சத்தியதேவி ,சியாமளாதேவி(முத்தமிழ் முன்பள்ளி பொறுப்பாசிரியை )மஞ்சுளாதேவி (யாழ் மாநகரசபை) நிர்மலாதேவி( நுணாவில். கி ,அமிர்தாம்பிகை வித்தியாலயம்}
யசோதராதேவி{ லண்டன்) ,சசிதரன்( TVS – யசோ மோட்டோர்ஸ் )ஆகியோரின் பாசமிகு தந்தையும் .


விக்னராஜா ,பாஸ்கரன் ,காலஞ்சென்ற உதயகுமார் ,ஜீவகுமார் ,மிதுரா ஆகியோரின் மாமனாரும் ,
நிரோஷன் ,நிலுக் ஷிகா ,பிரவீணா ,நிலக் ஷனா ,பவிசனா ,கிஷானா ,சதுர்ஜன் ,கிசோறா ,அஷ்வினி ,அபிராஜ் ,அக்ஷ்யன் ,அபிரா ,வியஜகுமாரி ஆகியோரின் பேரனும் அகிஷான் ,அபினாஷ் ஆகியோரின் பூட்டனும் ,
காலஞ்சென்றவர்களான றோசம்மா மற்றும் கந்தசாமி ,தேவசாமி ,சிவபாக்கியம் ,ஆகியோரின் மைத்துனருமாவார் .

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06/12/2022செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் இராஜேஸ்வரி வாசா-ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகன கிரியைக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் ,உறவினர் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல் -குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு -0094-779912380

மரண அறிவித்தல்- சபாபதிப்பிள்ளை சண்முகலிங்கம்
மரண அறிவித்தல்- சபாபதிப்பிள்ளை சண்முகலிங்கம்
மரண அறிவித்தல் செல்லத்தம்பி செல்வகுமார் அன்னார் செல்லத்தம்பி
Posted in மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் செல்லத்தம்பி செல்வகுமார்

மரண அறிவித்தல் செல்லத்தம்பி செல்வகுமார்( ஆனையிறவு உப்பள கூட்டுத்தாபன முன்னாள் ஊழியர் )

சங்கத்தார் வயல் இயக்கச்சியை பிறப்பிடமாகவும் ,உசன் மிருசுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட ,செல்லத்தம்பி செல்வகுமார்( ஆனையிறவு உப்பள கூட்டுத்தாபன முன்னாள் ஊழியர் ) )05/10/2022 அன்று இறைவனடி சேர்ந்தார் .

அன்னார் காலம் சென்ற செல்லத்தம்பி சாந்தநாயகியின் அன்பு மூத்த மகனும் ,கந்தையா சின்னப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகனும் ,ஜெகதீஸ்வரியின் அன்பு கணவரும் ,ஜெந்தினி (லண்டன் ) சாந்தகுமார் (( ஆனையிறவு உப்பள கூட்டுத்தாபன முன்னாள் ஊழியர் ) )ஜீவகுமார் ( லண்டன் )சாந்தகுமாரி ( லண்டன் )வசந்த குமாரி ( ஓய்வு பெற்ற பெண் பரிசாரகர் )தவக்குமாரி (ஆசிரியர் -வ /மருகாரம்பளை அ ,த ,க பாடசாலை ] ஜெயக்குமாரி ( பெண் பரிசாரகர் பிரதேச வைத்தியசாலை வரணி )
ராஜகுமாரி ( கனடா )ஆகியோரது பாசமிகு சகோதரரும் ஆவர் .

நிரோசன் ( கரைச்சி பிரதேச செயலகம் )விஞ்சிகன் (விருட்சம் கல்வி நிலையம் பளை }ஜான்சா BA பட்டதாரி ,ஆகியோரின் பாசமிகு தந்தையும் ,வினோதா (உடையார் கட்டு ஆரம்ப பாடசாலை )துஷ்யந்தன் (நியுசுலாந் ) ஆகியோரின் அன்பு மாமனாரும் .

ஆருஷன் ,அஜனன் ,அரண் கைலன் ,அஜய் கார்த்திகேயன் ,ஆகியோரின் பாசமிகு பேரனும் ,திருஞான சந்திரன் ,செல்வநாயகம்,புஸ்பவதி ,குகநேசன் ,லக்ஷ்மனராஜ் ,யசோதராதேவி ,பாலகிருஸ்ணராஜா ,இராசதுரை ,இராசேந்திரம் ,இராசநாயகம் ,புவனேஸ்வரி ,,காலம்சென்ற இராஜேஸ்வரி ,கனகேஸ்வரி ,ரதீஸ்வரி ஆகியோரது மைத்துனரும் ஆவர் .

அன்னார் பஞ்சலிங்கம் செல்வமலர் (குறவில் தமிழ் ம ,வி உடையார்கட்டு }பஞ்சலிங்கம் ஜெயலட்சுமி ஆகியோரது சம்பந்தியும் ஆவர் .

அன்னாரது இறுதிக்கிரியைகள் 06/10/2022 வியாழக்கிழமை காலை 10.00மணியளவில் ,அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று ,அன்னாரின் பூதவுடல் உசன் ஈச்சங்காட்டு மயானத்தில் தகனம் செய்ய படும் என்பதை அறியத்தருகிறோம் .

தகவல்
இப்படிக்கு
குடும்பத்தினர் .

தொலைபேசி இலக்கம் -0094 778449500
தொலைபேசி இலக்கம் 0094 777322313

உங்கள் கருதுங்களை கீழ் உள்ள கருத்து பகுதியின் ஊடாக பகிர்ந்து கொள்ள முடியும் .

Posted in மரண அறிவித்தல்

பூசணிக்காயில் துவையலா?

பூசணிக்காயில் துவையலா?

பூசணிக்காயில் எல்லா விதமான மருத்துவ குணங்களும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் வாயு தொந்தரவு, செரிமான கோளாறு மற்றும் அல்சர் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

பூசணிக்காயில் துவையலா? எப்படி செய்றதுனு பார்க்கலாமா?
பூசணிக்காய் துவையல்
தேவையான பொருட்கள்:

பூசணிக்காய் – 1 துண்டு

கடலைபருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
துவரம்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
சிவப்பு மிளகாய் – 4
புளி – நெல்லிக்காய் அளவு
தேங்காய் – அரை மூடி
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

தாளிக்க

கடுகு, உளுந்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு இணுக்கு

செய்முறை:

பூசணிக்காயை தோல் சீவி துருவிக் கொள்ளுங்கள்.

தேங்காயை பூப்போல துருவி வைக்கவும்.

பின் துருவிய பூசணி துருவலில் உப்பு சேர்த்து பிசறி ஒரு தட்டில் அமுக்கி தட்டை சாய்த்தார் போல் வைத்தால் நீரெல்லாம் வடிந்துவிடும். இப்படி செய்து சமைப்பதால் சளி பிடிக்காது. (பூசணியில் இருந்து வரும் நீரில் மிளகுதூள் சேர்த்து பழச்சாறாகக் குடிக்கலாம்)

வாணலியை சூடாக்கி, எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பின் அதில் கடலைபருப்பு, துவரம்பருப்பு இரண்டையும் மணம் வர வறுத்து, பின் பூசணி துருவல், சிவப்பு மிளகாய், புளி அனைத்தையும் சேர்த்து வதக்கவும்.

ஆறியதும் துருவிய தேங்காய், உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றாக நைசாக அரைக்கவும்.

பூசணி துவையல் தயார்.

மணமும் ருசியும் சத்தும் உள்ளது. நல்லெண்ணெய் ஊற்றி சாதத்தில் கலந்து சாப்பிடலாம். சாம்பார் சாதம், ரசம் சாதத்திற்கும் அருமையான சைட் டிஷ்.

    Posted in மரண அறிவித்தல்

    நாகலிங்கம் – இரசாரட்ணம் முரசுமோட்டை

    நாகலிங்கம் – இரசாரட்ணம் முரசுமோட்டை

    யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை, உதயநகர் 30 வீட்டுத்திட்டம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Noisy-le-Grand ஐ தற்போதைய வசிப்பிடமாகவும்

    கொண்ட நாகலிங்கம் இராசரட்ணம் அவர்கள் 05-06-2021 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும்,

    காலஞ்சென்ற சூசைமுத்து(மணியம்), ரோசலின்(பாக்கியம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,ஆன் புஸ்பகாந்தி(புஸ்பம்) அவர்களின் அன்புக் கணவரும்,புஸ்பவதனா(அமுதா), இன்பவதனா(கவிதா), இரட்ணவதனா(கீதா- இலங்கை), இரட்ணகுமார்(குமார்), ஜெயக்குமார்(குட்டி),

    ஜெயவதனா(பிள்ளை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,மதன், திருநாகரன்(கர்ணன்), அருள்வண்ணன்(பாபு) கௌரி, ரௌத்திரி, றமேஸ்குமார்(ரமேஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,மதுஷன், நிதுஷன், யதுஷா, துவாரகன், துவாரகா, சகானா, அட்சயா, அபினயா

    , சாருகா, டெய்சி, சரண், சணா, பரத், அனொஷ்கா, வரன், தரன், அக்‌ஷரா, ரித்திகா, அனுஷ், ஆருயன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,இராஜலட்சுமி, சொர்ணலட்சுமி, காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, பாலசுப்பிரமணியம், வில்வரத்தினம், சிவஞானம் மற்றும் இராஜேஸ்வரி,

    பாலச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான பேனார்ட், யறாட், பேபி, பபி மற்றும் ஜெயந்தி, எட்வெட் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின்

    இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்


    தொடர்புகளுக்கு
    குமார் – மகன்Mobile : +33651453725 குட்டி – மகன்Mobile : +33762053450 அமுதா – மகள்Mobile : +33652417007 கவிதா – மகள்Mobile : +31644923334 கீதா – மகள்Mobile : +94764148654 வதனா – மகள்Mobile : +33651217037 பாலச்சந்திரன் – சகோதரன்Mobile : +33662365007 இராஜேஸ்வரி – சகோதரிMobile : +33668726928

      Posted in மரண அறிவித்தல்

      ஓராம் ஆண்டு நினைவஞ்சலி – சிற்றம்பலம்- குருநாதன்

      ஓராம் ஆண்டு நினைவஞ்சலி – சிற்றம்பலம்- குருநாதன்

      கிளிநொச்சி முரசுமோட்டையை சேர்ந்த விவசாய மன்னரும் ,தொழில்

      தருணருமான சிற்றம்பலம்- குருநாதன் – ( குஞ்சி ) அவர்கள் வீட்டை உடைத்து

      புகுந்த யானையின் கோர தாக்குதலில் சிக்கி அகல மரணமானார் ,அன்னாரின் ஓராம் ஆண்டு நினைவஞ்சலி இன்றாகும்

      இத் தகவலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு அறிய தருகின்றோம்

      • தகவல் கருணா ,மற்றும் குடும்பத்தினர்
      ஓராம் ஆண்டு நினைவஞ்சலி
      ஓராம் ஆண்டு நினைவஞ்சலி
      Posted in கொரனோ வைரஸ் மரண அறிவித்தல்

      பிரான்சில் புலிகளின் முக்கியஸ்தர் மனைவி கொரனோவால் மரணம்-

      பிரான்சில் புலிகளின் முக்கியஸ்தர் மனைவி கொரனோவால் மரணம்

      உலகை உலுப்பி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பிரான்சில்


      கிளிநொச்சியை சேர்ந்த தமிழீழ செயல் பாட்டாளரும்,நாடு கடந்த அரசாங்கத்தின் முன்னாள் சபாநாயகரும் , பிரபல தொழிலதிபருமான Fast Auto, Carrosserie), நாகலிங்கம் பாலசந்திரன் அவர்களின் அன்பு மனைவி கமலா , என அழைக்க படும் கமலாம்பிகை அவர்கள் இன்று மரணமாகியுள்ளார்

      கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி மருத்துவ மனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த பொழுதும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபகரமாக இறந்துள்ளார்

      தமிழீழ தேசிய விடுதலை போராட்ட காலத்தில் ,கணவனுக்கு உறுதுணையாக நின்று பலம் சேர்த்த வீரமங்கை ,
      தன்னலமற்று மக்களின் வாழ்வியல் நீதியின் வழியில் நேரே நடந்த திலகவதி, இன்று எம்மை எல்லாம் தவிக்க விட்டு சென்று விட்டார்

      அன்னாரது ஆறா துயரில் தவிக்கும் ,கணவன் ,மற்றும் பிள்ளைகளின் துயரில் எதிரி இணையமும் பங்கெடுத்து கொள்கிறது .

      மரண அறிவித்தல் ….!

      யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட பாலச்சந்திரன் கமலாம்பிகை அவர்கள் 09-04-2020

      வியாழக்கிழமைஅன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான மருதையினர் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்

      சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும், பாலச்சந்திரன் நாகலிங்கம்(தமிழ்தேசிய செயற்பாட்டாளர், முன்னாள் தலைவர்- தமிழர் புனர்வாழ்வுக் கழகம், நாடுகடந்த அரசின் முன்னாள்

      உள்துறை அமைச்சர், சபாநாயகர், சமூகசேவையாளர், பிரபல தொழிலதிபர்- Fast Auto, Carrosserie) அவர்களின் அன்பு மனைவியும், கமலேந்திரா(நாடுகடந்த அரசின் மாவீரர,போராளிகள் குடும்ப நல

      உதவி அமைச்சர், தொழிலதிபர்- Carrosserie First, Fast Auto), கல்பனா, கௌசிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும், ஜெயசீலன் அவர்களின் பாசமிகு பெரியம்மாவும், மயூரி அவர்களின் பாசமிகு

      மாமியாரும்,சகானா, கயிலன், றோசான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,

      நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்


      தொடர்புகளுக்கு 0033 662 3650 07
      காமலேந்திரன் மகன் – 0033 6691 74390

      இணைப்பு – இரண்டு ..எதிர் வரும் புதன் கிழமை அன்னாரின் இறுதி கிரியைகள் திட்டமிட்டபடி இடம்பெறவுள்ளன என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர் .மக்கள் அதிகம் கூடிட முடியாத நிலை உள்ளதால் உங்கள் இரங்கலை இங்கே தெரிவிக்கலாம்

      ஏன் தவிக்க விட்டாய் …?

      புலி முக்கியஸ்தர் மனைவி உடல் இன்று தகனம் – கண்ணீரில் மக்கள் click here

      ஏன் தவிக்க விட்டாய் …?

      பிரான்சில் கொரனோவால்
      பிரான்சில் கொர
      னோவால்