கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்கும் முயற்சியில் இந்தியா
கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்கும் முயற்சியில் இந்தியா
கச்சதீவை மீண்டும் இலங்கையிடமிருந்து மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “கச்சதீவை மீண்டும் இலங்கையிடமிருந்து மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன், இராமநாதபுரத்தில் விமான
நிலையம் அமைய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்விடயத்தில் தமிழகத்துக்கு சாதகமான நிலையே ஏற்படும்.
“இலங்கை அரசுடன் நமது வெளியுறவுத் துறை, வேளாண்மைத் துறை மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இலங்கை அரசால் பறிமுதல்
செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
“ஆழ்கடல் மீன்பிடி திட்டமும், தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையிலேயே செயல்படுத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
வாலிபனை குதிக்க கொன்ற சிறுவன் – இலங்கையில் நடந்த பயங்கரம்
வாலிபனை குதிக்க கொன்ற சிறுவன் – இலங்கையில் நடந்த பயங்கரம்
இலங்கை கிராண்பாஸ் பகுதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய் தகராறு முற்றிய நிலையில் பத்தொன்பது வயது வாலிபனை பதின்நான்கு வயது சிறுவன் கத்தியால் குத்தி படுகொலை செய்துளளன்
,மேற்படி குற்ற செயலை புரிந்த சிறுவன் கைது செய்ய பட்டுள்ளான்
அம்பிகை உண்ணாவிரதத்தை கேவல படுத்திய கும்பல்களுக்கு செருப்படி -video
இலங்கைக்கு ஆப்பு – இந்தியா உளவு லீலை -video
அம்பிகை உண்ணாவிரதத்தை கேவல படுத்திய கும்பல்களுக்கு செருப்படி ,முன்னாள் புலி என கொக்கரிக்கும் நக்கி பிழைக்கும் சில நாய்களுக்கு இந்த முக்கிய நபரது பதில் செருப்படி தான்.
நஞ்சு காடு ,நஞ்சை குடித்து செத்து போ – நீ எல்லாம் முன்னாள் புலி போராளி -சி தூ கேவலம் ,
அகர முதல எழுத்தெல்லாம் கருணா
நிதி முதற்றே திருட்டு
ஜெனீவா விடயத்தில் சிறிலங்காவுக்கு சவாலாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
ஜெனீவா விடயத்தில் சிறிலங்காவுக்கு சவாலாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பாரப்படுத்த வேண்டும் என்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முனைப்பு, ஜெனீவா விடயத்தில் சிறிலங்காவுக்கு பெரும் சவாலாக உள்ளதென கொழும்பைத் தளமாக கொண்டு இயங்கும் ஆங்கில ஊடகம் ஓன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவுக்கு சவாலான வாரம் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள செய்திக்கட்டுரையிலேயே இதனைத் தெரிவித்துள்ள அவ்வூடகம், ஐ.நாவில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின் உரைக்கு, பதிலுரையாக அமைந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனின்
அறிக்கையினை சுட்டிக்காட்டி, ஐ.நா மனித உரிமைச்சபை விடயத்தில் சிறிலங்காவுக்கு எதிரான தீவிரமான பிரச்சாரத்தினை மேற்கொள்பவராக பிரதமர் வி.உருத்திரகுமாரன் உள்ளரெனவும தெரிவித்துள்ளது.
சிறிலங்கா தொடர்பில் வாக்கெடுப்பினை நோக்கி சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவில், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தும் வகையில் திருத்தங்கள்
கொண்டு வரப்பட வேண்டுமென கூட்டுநாடுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளதாகவும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான பிரித்தானிய அரசாங்கத்தின் தடைக்கு எதிராகவும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சட்டநடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ள அச்செய்திக்கட்டுரையில், தமிழீழ விடுதலைப்புலிகள் எவ்வித பயங்காரவாத
நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாதிடுகின்றது எனவும் தெரிவித்துள்ளது.
ஈராக் அமெரிக்கா இராணுவ முகாம் மீது ஏவுகணை தாக்குதல்
ஈராக் அமெரிக்கா இராணுவ முகாம் மீது ஏவுகணை தாக்குதல்
ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவம் முகாம் மீது எட்டுக்கு மேற்பட்ட ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன
இந்த ஏவுகணை தாக்குதலினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தெரிவிக்க படவில்லை ,எனினும்
கட்டட இடிபாட்டு காட்சிகள் வெளியாகியுள்ளன .
அவ்வாறு எனின் உயிரழப்பு ஏற்பட்டு இருக்க கூடும் என அஞ்ச படுகிறது
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்கா இராணுவம் வெளியயேற வேண்டும் ,தவறினால் அவர்கள் இலக்குகள் மீது தாக்குதல் நடத்த படும் என ஈரான் பகிரங்கமாக அறிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
சவூதி நாட்டுக்குள் வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள் – பதட்டம் அதிகரிப்பு
சவூதி நாட்டுக்குள் வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள் – பதட்டம் அதிகரிப்பு
சவூதி அரேபியாவின் தெற்கு பகுதியில் ஈரான் ஆதரவுடன் இயங்கும் கவுதிய படைகள் 24 மணித்தியாலத்தில் இரு தடவை
ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளன ,
இந்த தாக்குதலின் பொழுது சவுதி அரசுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறித்த கிளர்ச்சி படைகள் அறிவித்துள்ளன
இந்த ஏவுகணை தாக்குதலினாலே நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது
ROTTERDAM துறைமுகத்தில் சிக்கிய – 300 மில்லியன் பெறுமதியான போதைவஸ்து
ROTTERDAM துறைமுகத்தில்சிக்கிய – 300 மில்லியன் பெறுமதியான போதைவஸ்து
நெதர்லாந்து ரொட்டர்டாம் துறைமுகத்தில் Ecuador.
நாட்டில் இருந்து பயணித்த கப்பல் ஒன்றில் கொண்டனர் ஒன்றுக்குள் மறைத்து எடுத்துவரப்பட்ட சுமார் நான்கு டன் எடையுள்ள கொக்கையின் போதைவஸ்து சுங்க பிரிவினரால் மடக்க பிடிக்க பட்டது
இதன் மொத்த பெறுமதி சுமார் 300 மில்லியன் யூரோக்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்
சில மாதங்களுக்கு முன்னரும் இதே துறைமுகத்தில் பெரும் தொகை போதைவஸ்து சிக்கியது இங்கே குறிப்பிட தக்கது
கொலண்டில் பொலிஸ் வேட்டை 258 பேர் கைது -46,600 தண்டம்
கொலண்டில் பொலிஸ் வேட்டை 258 பேர் கைது -46,600 தண்டம்
நெதர்லாந்து நாட்டில் காவல்துறையினரால் 258 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,ஊரடங்கு வேளையில் அதனை மீறி செயல் பட்ட நபர்கள் இவ்விதம் கைது செய்ய பட்டுள்ளனர்
,மேலும் இதே கால பகுதியில் நிகழ்கால விதிமுறைகளை மீறி செயல் பட்ட நபர்களுக்கு வழங்க பட்ட தண்ட பணம் மட்டும் சுமார் 46,600 யுரோக்கள் என தெரிவிக்க பட்டுள்ளது
நல்ல உழைப்புதான் போங்க
பெண்கள் வயதுக்கு வரப்போவதை உணர்த்தும் அறிகுறிகள்
பெண்கள் வயதுக்கு வரப்போவதை உணர்த்தும் அறிகுறிகள்
பெண்கள் தங்கள் அழகை ஆராதித்தாலும், அத்தகைய அழகுக்காக தங்கள் உடல் எத்தகைய மாற்றங்களை சந்தித்திருக்கிறது? ஒவ்வொரு உறுப்புகளும் வளர்ச்சியை பெற என்ன காரணம்?
அந்த வளர்ச்சியால் உடலுக்கு என்ன பலன்? திருமணத்திற்கு பின்பு வாழ்க்கையை ரசித்து அனுபவிக்க பெண்களின் உடல் உறுப்புகள் எப்படி காரணமாக இருக்கின்றன? தாய்மை அடைய
அந்த உறுப்புகள் அவளுக்கு எப்படி உதவுகின்றன? என்பதெல்லாம் பெரும்பாலான பெண்களுக்கு தெரியாத ரகசியங்களாகவும், அதிசயங்களாகவும்தான் இருக்கின்றன.
பெண்களின் உடலில் அதிசயிக்கத்தக்க அளவில் பெரிய மாற்றங்கள் அவர்கள் வயதுக்கு வரும்போதுதான் நிகழ்கிறது. இப்போது பத்துவயதிலே சில சிறுமிகள் வயதுக்கு
பெண்கள் வயதுக்கு வரப்போவதை உணர்த்தும் அறிகுறிகள்
வந்துவிடுகிறார்கள். ஆனால் அவர்கள் 20 வயதுக்குரிய உடல் வளர்ச்சியை பெற்றிருக்கிறார்கள்.
10 வயது பெண்ணுக்கு, 20 வயதுக்குரிய உடல் வளர்ச்சி ஏற்படுவது அவளுக்கான பிரச்சினையாக மட்டும் இல்லாமல் சமூகத்திற்கான பிரச்சினையாகவும் மாறிவிடுகிறது.
இப்போது பெரும்பாலான பெற்றோர்கள் ஒரு குழந்தையே போதும் என்று முடிவு செய்துவிடுகிறார்கள்.
அந்த ஒரே ஒரு குழந்தையும் பெண்ணாக இருந்தால், அதை செல்லக் குழந்தையாக்கி விரும்பியதை எல்லாம் வாங்கிக்கொடுக்கிறார்கள். ருசிக்காக அளவுக்கு
அதிகமான கொழுப்பு அடங்கிய உணவை சிறுமிகள் சாப்பிடும்போது அவர்களது உடல், தேவைக்கு அதிகமான வளர்ச்சியை பெற்றுவிடுகிறது.
அப்போது அவர்களது கொழுப்பில் இருந்து ‘லெப்டின்’
என்ற ஹார்மோன் உருவாகும். அதுவே மூளையில் தூண்டுதலை உருவாக்கி, பால்ய வயதிலேயே சிறுமிகள் பருவமடைந்துவிடும் சூழலை உருவாக்குகிறது.
பருவமடைதல் என்பது திடீரென்று உடலுக்குள் நடக்கும் ‘மேஜிக்’ போன்ற நிகழ்வு அல்ல. உடலுக்குள் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் அதற்குரிய வளர்ச்சி மாற்றங்கள் படிப்படியாக நடந்துகொண்டிருக்கும்.
அவை அத்தனையும் இயற்கையான முறையில் நடந்து முடிந்துவிட்டது
என்பதை பருவமடைதல் வெளிப்படையாக உணர்த்துகிறது. பெண்களைப் பொறுத்தவரையில் மார்பக வளர்ச்சி, மறைவிடங்களில் ரோம வளர்ச்சி, இனப்பெருக்க உறுப்புகளின் மேம்பாடு, உடல்
பெண்கள் வயதுக்கு வரப்போவதை உணர்த்தும் அறிகுறிகள்
உயரமாகுதல், பூசி மெழுகினாற்போன்று அழகு கூடுதல் போன்றவைகள் அவர்கள் வயதுக்கு வரப்போவதை உணர்த்தும் அறிகுறிகளாக அமைகின்றன.
ஒரு சிறுமி வயதுக்கு வந்துவிட்டாள் என்றால், அப்போதே அவளது இனப்பெருக்க உறுப்புகள் வளர்ச்சி நிலையை அடைந்துவிட்டன என்று அர்த்தம்.
அடுத்த ஒன்று அல்லது இரண்டு வருடத்தில் அந்த உறுப்புகள் முழு வளர்ச்சியை எட்டிவிடும். அப்போது அவளது உடலும், எண்ணங்களும்
குழப்பத்துடன் காணப்படும். அவளது குழப்பத்தை ஒருசிலர் தவறாக பயன்படுத்திக்கொள்ளக்கூடும்.
அதனால்தான் 13, 14 வயதிலேயே ஒருசில சிறுமிகள் கர்ப்பிணியாகிவிடும் சமூக அவலமும் நடக்கிறது.
ஒரு சிறுமி எத்தனை வயதாக இருந்தாலும், அவள் உடல் பிரமிக்கவைக்கும் வளர்ச்சியை பெற்றிருந்தாலும், பெற்றோர் மட்டும்தான் அவளை எப்போதும் தங்கள் மகளாகப் பார்ப்பார்கள்.
ஆனால் சமூகமும் தன் கண்களால் அப்படித்தான் பார்க்கும் என்று பெற்றோர்கள் கருதுவது தவறு.
சிறிய வயதிலேயே அதிக உடல் வளர்ச்சியை பெற்றிருக்கும் சிறுமிகளை சமூகத்தின் எல்லா கண்களும் நல்லவிதமாக பார்ப்பதில்லை.
முன்பு 15 வயதுகளில் பெண்கள் பருவமடைந்தார்கள். இப்போது பத்து வயதில்கூட வயதுக்கு வந்துவிடுகிறார்கள்.
அது அவர்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. சிறுவயதிலே உங்கள் மகள் வயதுக்கு வருவதை தவிர்க்கவேண்டும் என்றால், நாலைந்து வயதில் இருக்கும் உங்கள் மகள்களை இப்போதே கவனித்து வளருங்கள்.
மகள்களுக்கு கண்ட உணவுகளையும் வாங்கிக்கொடுக்கவேண்டாம். சிறுவயதிலே வயதுக்கு வரும் சிறுமிகளில் பெரும்பாலானவர்கள் உயரம் குறைந்தவர்களாக, குட்டையாக, பருத்த உருவம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
எதிர்காலத்தில் அவர்களுக்கு பல்வேறு விதமான ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படும் என்பதால், குண்டான சிறுமிகளை மைதான வெளி விளையாட்டுகளில் ஈடுபடுத்துங்கள்.
ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மற்றும் பொருத்தமான உணவுப் பழக்கங்களை கடைப்பிடிக்கச்செய்யுங்கள்.
பொருத்தமான வயதில் பருவமடையும் பெண்களின் உடல் நலமும், மனநலமும் சிறப்பாக இருக்கும்.
அவர்களது உடலும் கட்டுக்கோப்பான அழகுடன் காணப்படும். திருமணத்திற்கு பிறகு அவர்கள் தாய்மை அடைவதிலும் நெருக்கடிகள் தோன்றாது.
இறுக்கமான பிரா அணிந்தால் இந்த பிரச்சனைகள் வரலாம்
இறுக்கமான பிரா அணிந்தால் இந்த பிரச்சனைகள் வரலாம்
தூங்கும்போது பிரா அணியலாமா என்னும் கேள்வி பல பெண்களிடம் இருக்கிறது. ஆனால் எதுவாயினும் அது அவர்களுடைய சௌகரியத்தைப் பொருத்தது என சிலர் கருத்துக்களை முன்
வைப்பார்கள். அது அவரவர் விருப்பம் என்பதை விட அவ்வாறு செய்வதால் மருத்துவ ரீதியாக நல்லதா கெட்டதா என்னும் வாதமும் முன் வைக்கப்படுகிறது.
உண்மையில் மருத்துவர்களின் வாய் வழியில் இரவு பிரா அணிவதால் மார்பகங்கள் தளர்வடைவதை தவிர்க்கலாம் என்கின்றனர். ஆனால் அலுவலகம் செல்லும் பெண்கள் நாள்
முழுவதும் இறுக்கமான பிராவை அணிந்திருப்பதால் வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக அதை கழட்டி எறிவதைதான் பெரிய ரிலீஃபாக நினைக்கின்றனர். எனவே அவர்கள் சௌகரியத்தைதான் பெரிதாக நினைக்கின்றனர்.
இறுக்கமான பிரா அணிந்தால் இந்த பிரச்சனைகள் வரலாம்
பொதுவாக மார்பகங்கள் தளர்வடைதல் என்பது வயது செல்ல செல்ல இயற்கையாக நிகழக்கூடியது. அதை பிரா அணிவதால் தடுக்கமுடியாது.
இருப்பினும் தளர்ந்து தொங்கும் மார்பகங்கள் பெண்களுக்கு சங்கடத்தையும், அசௌகரியத்தையும் கொடுக்கலாம்.
எனவே இதுபோன்ற பிராக்கள்தான் அவர்களுக்கான வரமாக உள்ளது. அதேபோல் பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்களுக்கும் பிரா அணிவது சௌகரியத்தை தரும். இரவு புரண்டு படுக்கும்போது அவை அதிக வலியை தரலாம். எனவே பிரா நல்ல சாய்ஸாக இருக்கும்.
எதுவாயினும் உங்களுக்கு ஃபிட்டான , சரியான அளவிலான பிராக்களை அணியுங்கள். காட்டன்
துணியால் ஆனா பிரா அணிவது காற்றோட்டமாக இருக்கும். இறுக்கமான பிரா அணிவது வேறு ஏதேனும் பக்கவிளைவுகளை உண்டாக்கலாம்.
அவர்மீது காதல் வர அந்த கதைதான் காரணம் நடிகை
அவர்மீது காதல் வர அந்த கதைதான் காரணம் நடிகை
காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது.
இப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த செல்வராகவன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்ஜிகே ஆகிய படங்களை இயக்கினார்.
சமீபத்தில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. அடுத்ததாக தனுஷை வைத்து நானே வருவேன் என்ற படத்தை இயக்க இருக்கிறார்.
மனைவியுடன் செல்வராகவன்
இந்நிலையில் இவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 2010ஆம் ஆண்டும் செல்வராகவன் உருவாக்கி கானல் நீர் என்ற கதையை படித்துதான் செல்வராகவன் மீது காதல் வயப்பட்டேன் என்று கூறுகிறார்.
மேலும் கானல் நீர் திரைப்படம் தான் ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் வெளியான இரண்டாம் உலகம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
சட்டை பட்டனை கழட்டிய அமலாபால்
சட்டை பட்டனை கழட்டிய அமலாபால்
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலாபால். இவரது நடிப்பில் அதோ அந்த பறவை போல, கடாவர் ஆகிய திரைப்படங்கள் உருவாகியுள்ளது.
சமூக வலைத்தளத்தில் அதிகமாக புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் அமலா பால்.
தற்போது சட்டை பட்டனை கழட்டி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டிருக்கும் அமலாபால், ‘என்னால் மாற்ற முடியாத விஷயங்களை இனி ஏற்றுக்கொள்வதில்லை.
நான் இப்போது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்களை மாற்றுகிறேன்.
நீங்கள் வெறுப்பதை
ஏற்றுக்கொள்வதை நிறுத்தும்போது உங்கள் வாழ்க்கை எவ்வளவு கடுமையானதாக மாறும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது’ என்று பதிவு செய்திருக்கிறார்.
பிரசாந்த் – சிம்ரன் படத்தில் பிரபல நடிகை
பிரசாந்த் – சிம்ரன் படத்தில் இணைந்த பிரபல நடிகை… வைரலாகும் புகைப்படம்
பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘அந்தாதூன்’. இப்படத்தை தமிழில்
ரீமேக் செய்கின்றனர். ‘அந்தகன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாகவும் நாயகியாக சிம்ரனும் நடிக்கிறார்கள்.
தற்போது மேலும் ஒரு நாயகியாக பிரியா ஆனந்த் இணைந்திருக்கிறார். இவர் பாலிவுட்டில் ராதிகா ஆப்தே நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரசாந்தும், பிரியா ஆனந்தும் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பிரியா ஆனந்த் – பிரசாந்த்
இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பிரிட்டன் பாராளுமன்றில் 1.30PM க்கு இலங்கை விவாதம் நேரலை – பார்க்க இதில் அழுத்துங்கள்
பிரிட்டன் பாராளுமன்றில் 1.30PM க்கு இலங்கை விவாதம் நேரலை – பார்க்க இதில் அழுத்துங்கள்
இன்று மதியம் ஒன்று முப்பது மணிக்கு பிரிட்டன் பாராளுமன்றில் இலங்கை தொடர்பான விவாதம் இடம்பெறுகிறது
இலங்கையை சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்துமாறு கோரி இந்த விவாதம் இடம்பெறுகிறது
மேற்படி விவாதம் தொடர்பான கருது பகிர்வுகளை பார்க்க கீழ் உள்ள இணைப்பில் அழுத்துங்க
ஐ நா தீர்மானம் நிறைவேறுவதற்கு -தமிழர்களை இதனை விரைந்து செய்யுங்கள்
ஐ நா தீர்மானம் நிறைவேறுவதற்கு -தமிழர்களை இதனை விரைந்து செய்யுங்கள்
ஐ நா தீர்மானம் நிறைவேறுவதற்கு உறுப்புரிமை நாடுகளை தமிழர்கள் எப்படி அணுகலாம்?பிரதானியாவில் உள்ள 47 நாடுகளின் தூதரரங்களையும் அணுகி தமிழர்களின் கோரிக்கைகளை
வைப்பதட்கான நேரம் தமிழர் அமைப்புக்கள் ஆகவும் தனி மனிதர்கள் ஆகவும் இதை செய்வார்களா?
TODAY 17..03.21
Time:7.00 pm UK time, Europe 8pm, India 1230 pm, US 2.00pm, Sydney 4am
The discussion broadcast at Facebook live at TEI radio.
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/84906419579
Meeting ID: 849 06419579 PASSWORD: 1234 https://www.facebook.com/ten.olee.31/ https://www.youtube.com/c/tamileelamradioOk .
எதிர்வரும் திங்கள் ஐநாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம்
எதிர்வரும் திங்கள் ஐநாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம்
ஆளும் இலங்கை அரசு புரிந்த மனித குலத்துக்கு எதிரான வன்முறைகள் ,படுகொலைகள்,இன அழிப்பு தொடர்பிலான குற்ற சாட்டுக்கள் தொடர்பில் வாக்கெடுப்பு நடைபெறுகிறது
இதில் அதிகமான நாடுகள் வாக்களித்தால் இலங்கை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த பட்டு விசாரிக்க படும் நிலை ஏற்படும் ,
அதுபோல இன்று பிரிட்டன் பார்களுமன்றிலும் இது தொடர்பான விவாதம் இடம்பெறுகின்றமை குறிப்பிட தக்கது
வெளிநாடு பறக்கும் மகிந்தா
வெளிநாடு பறக்கும் மகிந்தா
இலங்கை ஆளும் பிரதமர் மகிந்த ராஜபக்சே பங்களாதேஸ் நாட்டுக்கு அரசமுறை பயணத்தை மேற்கொண்டு செல்கிறார்
இவரது பயணத்தின் பொழுதுஇரு நாடுகளுக்கு இடையில் அபிவிருத்தி ,மற்றும் பாதுகாப்பு தொடர்பிலான ஒப்பந்தங்கள் கைச்சாத்திட படும் என எதிர் பார்க்க படுகிறது
புதிதாக நியமனம் பெற்றுவந்த வைத்தியர்களுக்கு கடிதம் வழங்கி வைப்பு
புதிதாக நியமனம் பெற்றுவந்த வைத்தியர்களுக்கு கடிதம் வழங்கி வைப்பு
கிழக்கு மாகாணத்துக்கு புதிதாக நியமனம் பெற்றுவந்த ஆயர்வேத வைத்தியர்கள் தங்களின் பயிற்சிகளை
பெற்றுக்கொள்வதற்கான கடிதங்களை கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள ஆணையாளர் வைத்திய காலநிதி திருமதி ஆர்.ஸ்ரீதர் நேற்று (16) வழங்கி வைத்தார்.
இந்தக் கடிதங்களைப் பெற்றுக்கொண்ட வைத்தியர்கள் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள மருந்து உற்பத்திப் பிரிவுகளுக்கு
நியமிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த வைத்தியர்கள் தங்களுக்கான பயிற்சிக் காலங்களில் மருந்து உற்பத்தி நடைமுறை, நிர்வாகம், மற்றும் பதிவேடுகள் தொடர்பான பயிற்சிகளை
பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலேயே திருகோணமலை மாவட்ட கப்பல்துறை மருந்து உற்பத்திப் பிரிவுக்கு 04 பேரும், மட்டக்களப்பு மாவட்ட சத்திரகொண்டான் மருந்து உற்பத்திப்
பிரிவுக்கு 03 பேரும், அம்பாறை மாவட்ட மருந்து உற்பத்திப் பிரிவவுக்கு ஒருவர் என்ற வீதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்

இலங்கையில் கொரனோவால் 532 பேர் மரணம் – பரவும் நோய்
இலங்கையில் கொரனோவால் 532 பேர் மரணம் – பரவும் நோய்
இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை 532 பேர் மரணமாகியுள்ளனர்
இந்த மரண எண்ணிக்கை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என அஞ்ச படுகிறது
இன்று மட்டும் ஐநூறுக்கு மேற்பட்ட புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
மகனுக்கு முருகன் பெயர் சூட்டிய கார்த்தி
மகனுக்கு முருகன் பெயர் சூட்டிய கார்த்தி.
பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. முதல் படத்திலேயே முத்திரை பதித்த அவர், தொடர்ந்து பையா, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி
, மெட்ராஸ் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு ரஞ்சனி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.
இந்த தம்பதிக்கு கடந்த 2013ம் ஆண்டு உமையாள் என்ற பெண் குழந்தை பிறந்தது. அதையடுத்து சுமார் 7 ஆண்டுகள் கழித்து கடந்த அக்டோபர் மாதம் கார்த்தி – ரஞ்சனி தம்பதினருக்கு ஆண்
குழந்தை பிறந்தது. தற்போது குழந்தைக்கு ‘கந்தன்’ என்று முருக கடவுளின் பெயரை சூட்டி இருக்கிறார்.
மேலும் சமூக வலைத்தளத்தில் ‘கண்ணா, அம்மாவும், அக்காவும், நானும் உனக்கு மிக ஆசையாக “கந்தன்” என்று பெயர் சூட்டி இருக்கிறோம். உன் வருகையால், நம் சுற்றம் மேலும்
இனிமையாகட்டும். அன்புடன்… அப்பா’ என்று பதிவு செய்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் வாழ்த்துகளை கூறி வருகிறார்கள்.







