மனிதர்கள் மட்டுமல்ல… நீ நட்ட மரங்களும் உனக்காக துக்கம் அனுசரிக்கின்றன – வைரமுத்து இரங்கல்
மனிதர்கள் மட்டுமல்ல, நீ நட்ட மரங்களும் உனக்காக துக்கம் அனுசரிக்கின்றன என விவேக் மறைவிற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
மனிதர்கள் மட்டுமல்ல… நீ நட்ட மரங்களும் உனக்காக துக்கம் அனுசரிக்கின்றன – வைரமுத்து இரங்கல்
விவேக், வைரமுத்து
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவிற்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் கவிஞர் வைரமுத்து, விவேக் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:
“அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே!
எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன்
அழவைத்துவிட்டுப் போய்விட்டானே!
திரையில் இனி பகுத்தறிவுக்குப்
பஞ்சம் வந்துவிடுமே!
மனிதர்கள் மட்டுமல்ல விவேக்!
நீ நட்ட மரங்களும் உனக்காக
துக்கம் அனுசரிக்கின்றன.
கலைச் சரித்திரம் சொல்லும் :
நீ ‘காமெடி’க் கதாநாயகன்”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
- ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் ‘நீண்ட காலம் நீடிக்காது’ என டிரம்ப் அச்சுறுத்தல்
- அவசரகால கையிருப்பில் இருந்து டீசலை வெளியிடுமாறு ஐரோப்பாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கக்கூடும் என டிரம்ப் கூறுகிறார்
- கடந்த 24 மணி நேரத்தில் ஹூதிகளுக்கும் அரசாங்க ஆதரவுப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்தனர்
- ஏமனில் சாதனை அளவிலான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்
- பிரெஞ்சு தூதருடன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சவால்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விவாதித்தார்
- யோஷித ராஜபக்ச மீதான பணச்சலவை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது
- தித்வா புயலால் ஏற்பட்ட இடையூறுக்குப் பிறகு ‘பொடி மெனிக்கே’ இரயில் பேராதெனியாவை வந்தடைந்தது














