Posted in உலக செய்திகள்

பாரிய ரயில் விபத்து 97 பேர் காயம் – பலர் மரணம்

பாரிய ரயில் விபத்து 97 பேர் காயம் – பலர் மரணம்

எகிப்தில் இன்று இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் சிக்கி 97 பேர் படுகாயமடைந்துள்ளனர் ,மேலும் சிலர் பலியாகியுள்ளனர்

எனினும் இந்த விபத்தில் ஏற்பட்ட முழுமையான மரண விபரம் மற்றும் காயமடைந்தவர்கள் விபரம் வெளியாகவில்லை

ஐம்பதுக்கு மேற்பட்ட ஆம்புலன்சில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது

கடந்த விபத்தில் இருபது பேர் மரணமாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது ,விபத்து தொடர்பிலான தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

ரயில் விபத்து
ரயில் விபத்து
Posted in Uncategorized

பாரிய நில நடுக்கம் இடிந்து வீழ்ந்த வீடுகள் – அணு உலைக்கு சேதமா ..?

பாரிய நில நடுக்கம் இடிந்து வீழ்ந்த வீடுகள் – அணு உலைக்கு சேதமா ..?

ஈரானின் தெற்கு பகுதியில் இன்று இடம் பெற்ற பாரிய நில நடுக்கத்தில் சிக்கி பல வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ள ,இந்த நில அதிர்வின் தாக்குதல் பதிவு 5.9 ஆக பதிந்துள்ளது

பாதிக்க பட்ட பகுதிகள் நோக்கி மருத்துவ குழுக்கள் அனுப்ப பட்டுள்ளன

இதுவரை ஐவர் காயமடந்துள்ளனர் எனவும் தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்க படுகிறது

நில நடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு அருகிலேயே ஈரானின் அணு உலை உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

இதற்கும் சேதங்கள் ஏற்பட்டனவா என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவிலை

    Posted in மருத்துவம்

    சரியாக தூங்காவிட்டால் எலும்பு பாதிப்படையும்

    சரியாக தூங்காவிட்டால் எலும்பு பாதிப்படையும்

    பெண்கள் தூங்கும் விஷயத்தில் அலட்சியம் கொள்ளக்கூடாது. தினமும் நன்றாக தூங்கி எழுந்தால் உடல் அளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்கலாம்.

    பெண்கள் தூக்கமின்மை பிரச்சினையால் அவதிப்பட்டால் எலும்புகள் பலவீனடைந்து ‘ஆஸ்ட்ரோபோரோசிஸ்’ எனப்படும் எலும்பு அடர்த்தி குறைபாடு ஏற்படும் என்று ஆய்வில்

    கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து போதுமான நேரம் தூங்காமல் குறைந்த நேரமே தூங்கி எழுந்தால் எலும்பு அடர்த்தி பாதிப்பு அதிகமாகி எலும்புகள் பலவீனமாகும் என்பதை அமெரிக்காவைச் சேர்ந்த பப்பெல்லோ பல்கலைக் கழகம் கண்டறிந்துள்ளது.

    மாதவிடாய் நிறைவடைந்து மெனோபாஸ் காலகட்டத்தை எதிர்நோக்கி இருக்கும் 11 ஆயிரத்து 84 பெண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் தூங்கும் நேரத்தை

    கணக்கிட்டு ஆய்வு முடிவை வெளியிட்டிருக்கிறார்கள். ஆய்வில் பங்கேற்ற இந்த பெண்கள் அனைவரும் தினமும் இரவில் ஐந்து மணிக்கும் குறைவான நேரமே தூங்கி இருக்கிறார்கள்.

    சரியாக தூங்காவிட்டால் எலும்பு பாதிப்படையும்

    அவர்களின் முதுகுத்தண்டுவடம், இடுப்பு, கழுத்து உள்பட எலும்புகள் சார்ந்த உடற்பகுதிகளை பரிசோதனை செய்ததில் 63 சதவீத எலும்புகள் தேய்மானம் அடைந்திருந்தது தெரியவந்துள்ளது.

    அத்துடன் நிறைய பேருக்கு எலும்பு அடர்த்தி குறைபாடும் ஏற்பட்டிருக்கிறது. அதேவேளையில் தினமும் 9 மணி நேரம் தூங்கும் பெண்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் அவர்களின் எலும்புகள் ஆரோக்கியமாக இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வை மேற்கொண்ட குழுவின் தலைவர் பால்கோம் குறிப்பிடுகையில், “பெண்கள் தூங்கும் விஷயத்தில் அலட்சியம் கொள்ளக்கூடாது. தூங்கும் நேரத்தில் எந்த சிந்தனைக்கும் இடம்

    கொடுக்காமல் ஆழ்ந்து தூங்க வேண்டும். தினமும் நன்றாக தூங்கி எழுந்தால் உடல் அளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்கலாம்” என்கிறார்.

      Posted in சினிமா

      அரசுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி – நடிகர் விவேக் மனைவி

      அரசுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி – நடிகர் விவேக் மனைவி

      நடிகர் விவேக்கின் குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர், அப்போது அவரின் மனைவி அருள்செல்வி மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்தார்

      தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் விவேக். தமது காமெடி மூலமாக மக்களுக்கு

      தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ள இவர் நேற்று காலமானார். இவரது உடல் நேற்று மாலை காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

      இந்நிலையில், இன்று நடிகர் விவேக்கின் குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர். விவேக்கின் மனைவி

      அருள்செல்வி மகள்கள் அமிர்த நந்தினி, தேஜஸ்வினி, மைத்துனர் செல்வகுமார் பத்திரிகையாளர் சந்திப்பின்போது உடனிருந்தனர்.

      பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவேக்கின் மனைவி அருள்செல்வி, “எங்களுக்கு பக்க பலமாக இருந்த மத்திய,

      மாநில அரசிற்கு நன்றி, அரசு மரியாதை அளித்ததற்கு அரசிற்கு நன்றி, இறுதி வரை உடன் இருந்த காவல்துறைக்கும்,

      ஊடக்கத்துறைக்கும் நன்றி. இறுதி அஞ்சலியில் பங்கு பெற்ற கோடான கோடி ரசிகர்கர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்” என்றார்.

      நடிகர் விவேக் மனைவி
      நடிகர் விவேக் மனைவி
        Posted in சினிமா

        நட்புக்காக சம்பளமே வாங்காமல் நடித்த யோகி பாபு

        நட்புக்காக சம்பளமே வாங்காமல் நடித்த யோகி பாபு

        பிசியாக வலம் வரும் நேரத்தில் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து சம்பளமே வாங்காமல் நடித்த நடிகர் யோகி பாபுவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

        நட்புக்காக சம்பளமே வாங்காமல் நடித்த யோகி பாபு
        யோகி பாபு
        வழக்கு எண், தனி ஒருவன், தில்லுக்கு துட்டு உள்பட 25க்கும் மேற்பட்ட படங்களுக்கு

        படத்தொகுப்பாளராக பணியாற்றியவர் கோபி கிருஷ்ணா. இவர் தயாரிப்பில் நடன இயக்குனர் தினேஷ் நடிப்பில் உருவாகும் படம் ‘நாயே பேயே’. இந்த படத்தை சக்திவாசன் இயக்கி உள்ளார்.

        ஐஸ்வர்யா, ‘ஆடுகளம்’ முருகதாஸ், புச்சி பாபு, ரோகேஷ், கிருஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

        பிசியான காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபு, படத்தின் நாயகன் தினேஷ் மாஸ்டர் மற்றும் தயாரிப்பாளர் கோபி கிருஷ்ணாவுடனான நட்புக்காக இந்த படத்தின் விளம்பர பாடலில் நடனமாடி

        கொடுத்துள்ளார். அந்த பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

        இதுகுறித்து கோபி கிருஷ்ணா கூறியதாவது: “படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் யோகி பாபுவை நடிக்க வைக்க முயற்சி செய்தோம். படம் முழுக்க வரும் கதாபாத்திரம் என்பதால்

        அவரது கால்ஷீட் 40 நாட்கள் தேவைப்பட்டது. ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் அவரால் நடிக்க முடியவில்லை. அவருக்கு பதிலாக முருகதாஸ் நடித்தார்.

        யோகி பாபு

        இந்த படத்துக்கு தனது பங்களிப்பு ஏதாவது இருக்கவேண்டும் என்று சொன்ன அவரே கொடுத்த ஐடியா தான் இந்த விளம்பர பாடல். ஒரு நாள் முழுக்க எங்களுடன் இருந்து நடித்து கொடுத்தார்.

        சம்பளம் வாங்கிக்கொள்ளவில்லை. கேரவன் வசதி கூட வேண்டாம் என்று மறுத்துவிட்டார். எனக்காகவும் தினேஷ் மாஸ்டருக்காகவும் இந்த உதவியை செய்துகொடுத்தார்.

        பிசியாக வலம் வரும் நேரத்தில் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த பேருதவியை செய்த அவரை என்றும் மறக்க மாட்டோம். அவர் மட்டுமல்லாது சக்தி சரவணன், லொள்ளுசபா ஜீவா,

        பிக்பாஸ் பரணி, டைகர் தங்கதுரை, பிடிச்சுருக்கு அசோக் என அனைவருமே சம்பளம் வாங்கிக்கொள்ளாமல் நடித்து கொடுத்து உதவினார்கள்.

        இவர்கள் இடம் பெற்றுள்ள பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன், படத்தின் வியாபாரத்துக்கும் உதவியுள்ளது”. இவ்வாறு அவர் கூறினார். கலகலப்பான குடும்ப படமாக உருவாகி இருக்கும் நாயே பேயே படம் வரும் 23 ம் தேதி வெளியாக இருக்கிறது

          Posted in சினிமா

          முதல் அமைச்சர் மகளாக நடிக்கும் நயன்தாரா

          முதல் அமைச்சர் மகளாக நடிக்கும் நயன்தாரா

          தமிழில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, அடுத்ததாக பிரபல நடிகரின் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

          முதல் அமைச்சர் மகளாக நடிக்கும் நயன்தாரா
          நயன்தாரா


          மலையாளத்தில் மோகன்லால் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘லூசிபர்’. இந்தியாவையே மிரள‌ வைத்த இந்த படத்தில் மோகன்லால் அரசியல்வாதியாகவும்,

          அண்டர்கிரவுண்ட் கேங்ஸ்டராகவும் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கும் பணிகளை துவங்கிவிட்டார் பிருத்விராஜ்.

          தற்போது லூசிபர் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க இருக்கிறார். பிரபல இயக்குனர் மோகன் ராஜா இந்த படத்தை இயக்கவிருக்கிறார். சுமார் 200

          கோடி ரூபாய் செலவில் தயாரிக்கவுள்ள இப்படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி மாதமே தொடங்கவிருந்த இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக இன்னும் தொடங்கப்படவில்லை.

          மோகன்ராஜா, மோகன்லால், சிரஞ்சீவி

          இந்தப் படத்தில் மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்திருந்த முதலமைச்சர் மகள் கதாபாத்திரத்திற்கு, நயன்தாராவை நடிக்க வைக்க முதலில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

          னால் கால்ஷீட் பிரச்சினையால் நயன்தாரா மறுத்துவிட்டார். அதன்பிறகு சில நடிகைகளை பரிசீலித்து வந்தனர்.

          இந்நிலையில், தற்போது நயன்தாராவையே நடிக்க வைக்க மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தில் நயன்தாரா இணைவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

            கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
            Posted in Uncategorized

            ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர் படுகொலை

            ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர் படுகொலை

            Tarawih பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் மீது திடீரென நுழைந்த ஆயுத

            தாரி தாக்குதலை நடத்தினார் .இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் ,மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்

            இந்த படுகொலைக்குரிய காரணம் தெரியவரவில்லை


            தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

              Posted in இலங்கை செய்திகள்

              கூட்டமைப்பை உடைக்கும் சுமந்திரன் – தவராசா கூக்குரல்

              கூட்டமைப்பை உடைக்கும் சுமந்திரன் – தவராசா கூக்குரல்

              இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் அரசியல் குழு உறுப்பினருமான ஜனாதிபதி

              சட்டத்தரணி கே.வி.தவராசா தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

              தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆணையைப் பெற்றுத் தமிழர்களின் தலைமைத்துவத்தைச் சுமந்து திறம்பட வழிநடத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிறிது சிறிதாக மக்கள் ஆணையை

              இழந்து செல்லும் சூழ்நிலையில், அதற்கான காரணங்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வது மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

              கடந்த பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் இன்னும் சரியான முறையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்

              பதவி நிலைகள் உரியவர்களுக்கு அளிக்கப்படாத இடைவெளியில், கட்சியின் இருப்பைச் சிதைக்கும் பல்வேறு கருத்தாடல்கள் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

              இன்னும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஓர் ஊடகப் பேச்சாளர் நியமிக்கப்படவில்லையெனவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தன்னைக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் போன்று

              பிரதிபலித்தபடி தொடர்ந்தும் சர்ச்சையான கருத்துக்களை பொதுவெளியில் தெரிவித்து வருவது கட்சியின் அரசியல் இருப்பிற்கும் உறுதிப்பாட்டிற்கும் சவாலாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

                Posted in இலங்கை செய்திகள்

                மலையகத்தில் நடைபெற்ற மாபெரும் மென்பந்து கிரிகெட் சுற்று போட்டி photo

                மலையகத்தில் நடைபெற்ற மாபெரும் மென்பந்து கிரிகெட் சுற்று போட்டி

                கிரிகெட் சுற்று போட்டி

                “ஒற்றுமையே எமது பலம்”

                இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன

                இந்த நாட்டின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கும் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையே எமது பலம் என்று கூறுகின்றார் கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள் நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன அவர்கள்

                புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் மேற்படி கல்லூரியில் கடந்த காலங்களில் கல்வி பயின்ற பழைய மாணவர்களை ஒன்றினைத்து 11 பேர் கொண்ட 16 அணிகள் உறுவாக்கபட்டு குறித்த அணிகளுக்கு இடையில் கிரிகெட் மென்பந்து சுற்றுப்போட்டி 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் நடைபெற்றது.

                கல்லூரியின் அதிபர் எஸ்.சந்திரமோகன் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் எம். கவாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த சுற்போட்டியை கடந்த 16.04.2021 ஆம் திகதி கிராமிய

                வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள்இ நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன அவர்களினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கபட்டது. இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.

                தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்.

                இன்று நம் நாட்டில் மக்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக இனம் மதம் மொழி சாதி அரசியல் தோட்டம் ஊர் ரீதயாக பிரிக்கபட்டே இருக்கின்றோம். இது இந்த நாட்டுக்கும் எமக்கும் எமது சமூகத்திற்கும் உகந்த ஒன்று அல்ல நாம் இளைஞர்கள் என்ற ரீதியில் ஒன்றுமையாக இருந்து எமது

                சமூகத்தையும் நாட்டையும் காப்பாற்ற வேண்டும். இதற்கு இந்த கிரிகெட் போட்டி ஒரு நல்ல சந்தர்ப்பம். இதில் எப்படி ஒன்றுமையாக இருக்கின்றோமோ அதேபோல் நாமும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நான் இங்கு கட்சி அரசியல் ரீதியாக வரவில்லை. உங்களில் ஒருவனாகவே

                வந்திருக்கின்றேன். ஒற்றுமையே எமது பலம். இந்த பாடசாலையில் விளையாட்டு மைதானத்தை விளையாட்டுதுறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ ஊடாக புணர்நிர்மானம் செய்ய இரண்டு

                மில்லியன் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளேன். தொடர்ந்து இந்த பாடசாலையின் அபிவிருத்தியில் உங்களுடன் தோல் நிற்பேன் என்று கூறினார்

                .

                இந் நிகழ்வில் சமய பெரியார்கள் கல்வி அதிகாரிகள் பிரஜாசத்தி பணிப்பாளர் பாரத் அருள்சாமி அயல் பாடசாலைகளின் அதிபர்கள் அரசியல் பிரமுகர்கள் பாடசாலையின் அபிவிருத்தி சங்கத்தினர் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் உட்பட நலன் விரும்பிகள் கலந்துக் கொண்டனர்.

                தொடர்ந்து நடைபெற்ற இந்த கிரிகெட் சுற்றுபோட்டி 17.04.2021 மாலை முடிவுற்றது. இந்த போட்டியின் முதலாவது வெற்றி கின்ணத்தையும் பணப்பரிசையும் 2014 ஆம் கல்வி பயின்ற

                பழைய மாணவர் அணி வெற்றிக் கொண்டதுடன் இரண்டாம் இடத்தை 2009 ஆம் ஆண்டு கல்வி பயின்ற பழைய மாணவர் அணியும் மூன்றாம் இடத்தை 2010 ஆம் ஆண்டு கல்வி பயின்ற பழைய மாணவர் அணியும் பெற்றுக் கொண்டது

                கிரிகெட் சுற்று போட்டி

                கிரிகெட் சுற்று போட்டி
                  Posted in Uncategorized

                  போலீசார் திடீர் சோதனை – குடிகாரர் 1834 பேர் கைது

                  போலீசார் திடீர் சோதனை – குடிகாரர் 1834 பேர் கைது

                  இலங்கை` வீதிகள் நாள்தோறும் இடம்பெற்று வரும் வீதி விபத்துக்களை தடுப்பதற்கு ,போலீசார் தீவிர சோதனைகளை மேற் கொண்டு வருகின்றனர்

                  இந்த சோதனை நடவடிக்கையின் பொழுது கடந்த ஐந்து நாட்களில் மட்டும் சுமார் 1834 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                  மேலும் முக்கிய நுழைவு சாலைகளில் சோதனைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,இந்த கைது எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என நம்ப படுகிறது

                  Police raid – drunk 1834 arrested

                    Posted in இலங்கை செய்திகள்

                    தடம்புரண்ட இராணுவ வண்டி – இரு சிப்பாய்கள் காயம்

                    தடம்புரண்ட இராணுவ வண்டி – இரு சிப்பாய்கள் காயம்

                    இலங்கை வவுனியா ஓமந்தை சோதனை சாவடிக்கு அருகில் இராணுவத்தினர் பிக்கப் ரக வண்டி

                    ஒன்று விபத்தில் சிக்கியத்தில் அதில் பயணித்த இரு இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர்

                    காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

                    இந்த விபத்து தொடர்பனா விசாரணைகள் இடப்பெற்ற வண்ணம் உள்ளன

                    தடம்புரண்ட இராணுவ வண்டி
                    தடம்புரண்ட இராணுவ வண்டி
                      Posted in Uncategorized

                      கோட்டா அரசுக்கு ஆபத்தாக மாறிய தமிழ் இன அழிப்பு

                      கோட்டா அரசுக்கு ஆபத்தாக மாறிய தமிழ் இன அழிப்பு

                      ஆளும் கோட்டா சகோதரர்கள் ஆட்சியில் நடத்த பட்ட மிக பெரும் தமிழ் இனப் படுகொலைக்கு நீதி கோரி உலக சமுதாயம்

                      போராடி வருகிறது ,12 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் குற்றவாளிகள் தண்டிக்க படாது உள்ளது ,உலக சமதத்துவதை பாதித்துள்ளது

                      இதனை அடுத்து பிரிட்டன் தலைமையில் ஏற் படுத்த பட்ட போர்க்குற்றம் தொடர்பான விடயங்கள் ஐநாவில் பாரப்படுத்த பட்டுள்ளது

                      எதிர்வரும் காலங்களில் இலங்கை மிக நெருக்கடிகளை சந்திக்கும் என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

                      தமிழர்களை கொன்று ,புலிகளை அழித்து விட்டோம் என மார் தட்டும் இலங்கைக்கு இந்த தீர்ப்பு பெரும் இடியாக மாறும் என அந்த வட்டாரங்கள் இடித்து கூறுகின்றன

                      (war) crimes
                      (war) crimes
                        Posted in Uncategorized

                        கடற்கரையில் 2 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்கள் photo

                        கடற்கரையில் 2 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்கள்

                        அவுஸ்ரேலியா Fraser கடற்கரை பகுதியில் பெற்றோருடன் நடந்து சென்று கொண்டிருந்த சிறுவன் ஒருவனை

                        வழிமறித்த நாய்கள் அவனை கடித்து குதறியது ,பலத்த காயங்களுக்கு உள்ளான அவனை

                        உலங்குவானூர்தியில் வந்த மருத்துவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்

                        மேற்படி சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளத்துடன் ,மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                        கடித்து குதறிய நாய்கள்
                        கடித்து குதறிய நாய்கள்
                          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                          2 5 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான 22 கொண்டனர் மீட்பு தொடரும் விசாரணை

                          2 5 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான 22 கொண்டனர் மீட்பு தொடரும் விசாரணை

                          பிரிட்டனுக்குள் கப்பல் ஒன்றின் மூலம் எடுத்துவரப் பட்ட 22 கொண்டனர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                          மேற்படி கொண்டெனருக்குள் உடுப்புகள் ,கைபேசிகள் ,மற்றும் இலத்திரனியல் பொருட்கள் அடக்க பட்டுள்ளன

                          இவை மோசடியான முறையில் உள்வாங்க பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ள நிலையில் இந்த

                          துரித விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன

                          கொண்டனர் மீட்பு
                          கொண்டனர் மீட்பு
                            Posted in Uncategorized

                            பிரிட்டனில் -பலத்த காயங்களுடன் மோட்டார் வீதியில் கண்டு பிடிக்க பட்ட வாலிபன்

                            பிரிட்டனில் -பலத்த காயங்களுடன் மோட்டார் வீதியில் கண்டு பிடிக்க பட்ட வாலிபன்

                            பிரிட்டன் westbound carriageway, வேக சாலையில் பலத்த அடி காயங்களுக்கு உள்ளான நிலையில் 17

                            வயது வாலிபன் ஒருவர் காவல் துறையினரால் மீட்க பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்
                            5 முதல் 7 ஆம் இலக்க சந்தியில் மேற்படி விபத்து இடம் பெற்றுள்ளது

                            இந்த விபத்தை கண்ணுற்றவர்கள் யாரவது இருந்தால் தமக்கு தெரிவிக்கும் படி மக்கள் உதவியைபோலீசார் நாடியுள்ளனர்

                            தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                              Posted in இலங்கை செய்திகள்

                              பெண்ணை பேரூந்தால் இடித்து கொன்ற சாராதி

                              பெண்ணை பேரூந்தால் இடித்து கொன்ற சாராதி

                              இலங்கை கதிர்காமம் பகுதியில் உள்ள பஸ் டிப்போ ஒன்றில் ,குறித்த பேரூந்து நிலையத்தில்

                              பயணித்த பெண் ஒருவரை அரச பேரூந்து ஒன்று இடித்து வீழ்த்தி கொன்றுள்ள சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                              மேற்படி விபத்து அங்கு பொருத்த பட்டிருந்த கமராவில் பதிவகையுள்ள நிலையில்,சாரதி ,நடத்துனர் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

                              மேற்படி விபத்து காட்சி வைரலாகி வருகிறது

                              இடித்து கொன்ற சாராதி
                              இடித்து கொன்ற சாராதி
                                Posted in Uncategorized

                                உக்கிரேனை சுற்றிவளைத்த ரஷியா போர் கப்பல்கள்

                                உக்கிரேனை சுற்றிவளைத்த ரஷியா போர் கப்பல்கள்

                                உக்கிரேனுக்கும் ,ரசியாவுக்கும் இடையில் மீளவும் முறுகல் முற்றியுள்ள நிலையில் இரண்டு மிதக்கும் போர்

                                கப்பல்களை ரசிய கருங்கடல் நோக்கி அனுப்பியுள்ளது .அது தவிர பலநூறு இராணுவத்தையும் எல்லையில் குவித்துள்ளது

                                எவ்வேளையும் உக்கிரேனுக்குள் ரசியா நுழைய கூடும் என்ற பர பரப்பு நிலவுகிறது ,எவ்வேளையும்

                                எதுவும் நடக்கலாம் என்ற நிலையே தொடர்ந்து நிலவி வருகிறது குறிப்பிட தக்கது

                                ரஷியா போர் கப்பல்கள்
                                ரஷியா போர் கப்பல்கள்
                                Posted in இலங்கை செய்திகள்

                                கோட்டாவால் என் உயிருக்கு ஆபத்து – பாதுகாப்பை பாலப்படுத்துக -விஜயதாச கோரிக்கை

                                கோட்டாவால் என் உயிருக்கு ஆபத்து – பாதுகாப்பை பாலப்படுத்துக -விஜயதாச கோரிக்கை

                                இலங்கையின் முன்னாள் நீதி அமைச்சர் வியஜாதச தனது உயிருக்கு ஆளும் ஜனாதிபதி

                                கோத்தபாயாவினால ஆபத்து உள்ளது எனவும் ,இதனால் தனது பாதுகாப்பை பலப்படுத்த படி IGP க்கு கடிதம் எழுதியுள்ளார்

                                முன்னாள் அமைச்சர் ஒருவருக்கே நாட்டில் இவ்விதம் கொலை அச்சுறுத்தல் உள்ளது எனின்

                                சாதாரண மக்களின் வாழ்வியல் எவ்வாறு இருக்கும் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள முடியும் என்பதே இந்த நிகழ்வுகளின் வெளிப்பாடாக உள்ளது

                                இவரது ஆட்சியில் நாள் தோறும் நீர் ஏரிகளில் மனித சடலங்கள் மிதந்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                                விஜயதாச
                                விஜயதாச
                                  Posted in உலக செய்திகள்

                                  உக்கிரேன் ரசியா போர் பதட்டம் – கருங்கடலில் பிரிட்டன் போர் கப்பல்

                                  உக்கிரேன் ரசியா போர் பதட்டம் – கருங்கடலில் பிரிட்டன் போர் கப்பல்

                                  ரசியாவுக்கும் உக்கிரேனுக்கும் இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளன நிலையில் கருங்கடல் பகுதியில்


                                  பிரிட்டனின் மிதக்கும் போர் கப்பல் நுழைந்துள்ளது

                                  இந்த கப்பலில் விமானங்கள் ,உலங்குவானூர்திகள் ,ஏவுகணைகள் என்பன உள்ளன

                                  மேற்படி கப்பல் நுழைவு நாடுகளுக்கு இடையில் மேலும் பட்டத்தை அதிகரித்துள்ளது

                                  போர் கப்பல்
                                  போர் கப்பல்
                                    Posted in இலங்கை செய்திகள்

                                    இலங்கையில் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள் – 52 பேர் மரணம்

                                    இலங்கையில் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள் – 52 பேர் மரணம்

                                    இலங்கையில் கடந்த ஐந்து நாட்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் சிக்கி இதுவரை ஐம்பத்தி இரண்டு பேர் மரணமாகியுள்ளனர்

                                    மேலும் பல நூறு பேர் படுகாயமடைந்துள்ளனர்

                                    சாரதிகள் அலட்சியமும் ,வீதி போக்குவரத்து விதிகளை பின்பற்ற தவறியதன் காரணமாக இந்த உயிர்பலிகள் இடம்பெற்றுள்ளன

                                    பல்லாயிரம் போலீசார் குவிக்க பட்டுள்ள பொழுதும் இந்த மனித உயிர் பலிகளை தடுக்க முடியாது போலீசார் திணறி வருகின்றனர்