Posted in சினிமா

மீண்டும் வெப் தொடரில் நடிக்கும் சமந்தா

மீண்டும் வெப் தொடரில் நடிக்கும் சமந்தா

தி பேமிலி மேன் 2’ வெப் தொடருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், நடிகை சமந்தா மீண்டும் ஒரு வெப் தொடரில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம்.

மீண்டும் வெப் தொடரில் நடிக்கும் சமந்தா
சமந்தா


தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடர் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி உள்ளார். பிரபல பாலிவுட் இயக்குனர்களான ராஜ் மற்றும் டிகே

ஆகியோர் இந்த தொடரை இயக்கி இருந்தனர். பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே கடந்த வாரம் ஓடிடியில் வெளியான இந்த வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சமந்தா

இந்நிலையில், நடிகை சமந்தா மீண்டும் ஒரு வெப் தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் அந்த வெப் தொடரை தயாரிக்க உள்ளதாக

கூறப்படுகிறது. மேலும் இந்த வெப் தொடரை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாக்க திட்டமிட்டுள்ளார்களாம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Posted in சினிமா

நடிகை மீது தேசத்துரோக வழக்கு

நடிகை மீது தேசத்துரோக வழக்கு

லட்சத்தீவு நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ள பிரஃபுல் படேல் என்பவர் பற்றி பேசிய நடிகை மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகை மீது தேசத்துரோக வழக்கு பதிவு
ஆயிஷா சுல்தானா


பிரபல நடிகை மற்றும் இயக்குனர் ஆயிஷா சுல்தானா. இவர் சமீபத்தில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் லட்சத்தீவு விவகாரம் குறித்து பேசினார். அப்போது லட்சத்தீவு நிர்வாகியாக நியமனம்

செய்யப்பட்டுள்ள பிரஃபுல் படேல் என்பவர் மத்திய அரசால் அனுப்பி வைக்கப்பட்ட பயோவெப்பன் என்று பேசி இருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து நடிகை ஆயிஷா சுல்தானா மீது பாஜக பிரமுகர் அப்துல் காதர் ஹாஜி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் நடிகை சாயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனது பேச்சு குறித்து ஆயிஷா சுல்தானா கூறும்போது, லட்சத்தீவு நிர்வாகி

பிரஃபுல் பட்டேலை பயோவெப்பன் என தான் பேசியது நாட்டையோ அரசையோ குறிப்பிடவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

    Posted in Uncategorized

    பயணக்கட்டுப்பாடு-நீடிப்பு – மக்கள் அவதி

    பயணக்கட்டுப்பாடு-நீடிப்பு – மக்கள் அவதி

    நாட்டில் தற்போது அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாடு, எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 04 மணி

    வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று(12) தெரிவித்துள்ளார்.

    கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள

    பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படும் என நேற்று(10) அறிவிக்கப்பட்டது.

    எனினும், நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்வரும் 21ஆம் திகதி வரை

    பயணக்கட்டுப்பாட்டை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி கூறியுள்ளார்.

      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      பிரிட்டனில் பரவும் புதிய வகை நோய்

      பிரிட்டனில் பரவும் புதிய வகை நோய்

      பிரித்தானியாவில் குரங்கு அம்மை (Monkey Pox) என்னும் வைரஸ் பரவுவதால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர். வட வேல்ஸில் இரண்டு நோயாளர்களுக்கு ஆட்கொல்லி குரங்கு அம்மை

      உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என பிரித்தானிய சுகாதார மற்றும் சமூக பாதுகாப்புச் செயலாளர் மட் ஹென்கொக் (Matt Hancock) தெரிவித்துள்ளார்.

      ஏற்கெனவே கொவிட்-19 தனிமைப்படுத்தலை பராமரித்து வரும் நிலையில், தற்பொழுது இந்த அரிய வகை ஆட்கொல்லிக் கிருமி பிரித்தானிய மக்களை அச்சம் கொள்ளச் செய்துள்ளது.


      இந்த நோய்த் தாக்கத்துக்குள்ளாகியுள்ள இருவரும், வெளிநாடொன்றிலிருந்தே இந்தக் கிருமியைக் காவிக்கொண்டு வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

        Posted in Uncategorized

        ஆற்றுக்குள் பாய்ந்த லொறி – சாரதி மரணம்

        ஆற்றுக்குள் பாய்ந்த லொறி – சாரதி மரணம்

        பிபிலவில் இருந்து கம்பளை நோக்கி பயணித்த கோழிகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று விக்டோரியா நீர்த்தேக்கத்தில் பாய்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

        குறித்த விபத்தில் லொறியின் சாரதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

        கண்டி மற்றும் தெல்தெணிய பொலிஸின் சுழியோடிகளின் உதவியுடன் சாரதியின் சடலம் மற்றும் லொறி மீட்கப்பட்டுள்ளது.

        விபத்து இடம்பெறும் போது லொறியில் சுமார் 1,600 கோழிகள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

          Posted in Uncategorized

          பேரூந்து மீது கல்வீச்சு தாக்குதல் – ரவுடிகள் அட்டகாசம்

          பேரூந்து மீது கல்வீச்சு தாக்குதல் – ரவுடிகள் அட்டகாசம்

          வவுனியா முருகனூர் பகுதியில் ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்டு இளைஞர் குழுவொன்று தப்பிச் சென்றுள்ளனர்.

          முருகனூர் பகுதியில் இன்று (12) காலை 7.00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சிதம்பரபுரம் பகுதியிலிருந்து வவுனியா இராசேந்திரகுளம்

          ஆடைத்தொழிற்சாலை நோக்கி ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்திற்கு முருகனூர் விவசாய பண்ணைக் அருகே முகங்களை மறைந்தவாறு நின்ற இளைஞர் குழுவினர் கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

          கல்வீச்சு தாக்குதலையடுத்து பேரூந்தினை சாரதி நிறுத்திய போது பேரூந்தினுள் புகுந்த அவ் இளைஞர் குழுவினர் சாரதி மீதும் தாக்குதல் மேற்கொண்டு அவ்விடத்தில் இருந்து தப்பித்துச் சென்றுள்ளனர்.

            Posted in Uncategorized

            இலங்கையில் எரிபொருட்கள் விலை அதிகரிப்பு – 20 ரூபாவால் எகிறும் பெட்ரோல்

            இலங்கையில் எரிபொருட்கள் விலை அதிகரிப்பு – 20 ரூபாவால் எகிறும் பெட்ரோல்

            இலங்கையில் ஆளும் கோட்டபாய அரசினால் எரிபொருட்கள் விலை திடிரென அதிகரிக்க படுகிறது


            இன்று நள்ளிரவு முதல் உயர்ரத்த படும் இந்த எரி பொருட்கள் விலையால் மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர்

            பெற்றோல் லிட்டருக்கு 20 ரூபாவால்; அதிகரிக்க படுகிறது ,அதேபோல டீசல் 7 ரூபாவில் அதிகரிக்க படுகிறது

            கொரனோ காலத்தில் மக்கள் வாழ்வாதாரத்திற்கு திணறி வரும் நிலையில் இந்த விலை ஏற்றம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

              Posted in Uncategorized

              தொடரும் காவல்துறை வேட்டை -1,027 பேர் கைது

              தொடரும் காவல்துறை வேட்டை -1,027 பேர் கைது

              இலக்கையில் தன்மை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் கடந்த தினம் மட்டும் சுமார் 1,027 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்


              கைதான அனைவரும் முகக்கவசம் மற்றும் மாகாண எல்லைகளை கடந்த குற்ற சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                Posted in இலங்கை செய்திகள்

                இலங்கையில் 8.000 டெங்கு நோயாளர்கள்

                இலங்கையில் 8.000 டெங்கு நோயாளர்கள்

                இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலை காரணமாக டெங்கு நோயானது அதிகமாக பரவி வருகிரது


                இந்த நோயின் தாக்குதலில் சிக்கி எட்டாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்

                சுற்றுப்புற சூழல் அசுத்தம் காரணமாகவே இந்த நோயானது பரவி வருகின்றமை குறிப்பிட தக்கது

                  Posted in Uncategorized

                  இலங்கையில் குற்றப் பிரிவிற்கு முதலாவது பெண் பொலிஸ் அதிகாரி

                  இலங்கையில் குற்றப் பிரிவிற்கு முதலாவது பெண் பொலிஸ் அதிகாரி

                  இலங்கை வரலாற்றில் முதன் முதலாக குற்ற தடுப்பு பிரிவிற்கு SSP Imesha Muthumala நியமிக்க பட்டுள்ளார்

                  ஏனைய நிலைகளில் பெண்கள் உள்ள பொழுதும் ,இந்த நிலைக்கு இப்பொழுதே இவர் நியமிக்க பட்டுள்ளது ,காவல்துறை வரலாற்றில் பெரும் சாதனையாக பார்க்க படுகிறது

                  Posted in Uncategorized

                  இலங்கையில் ஒரே நாளில் 101 பேர் மரணம் – மிரட்டும் கொரனோ

                  இலங்கையில் ஒரே நாளில் 101 பேர் மரணம் – மிரட்டும் கொரனோ

                  இலங்கையில் இன்று ஒரே நாளில் நூற்றி ஒரு பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை இலங்கையில்

                  பலியானவர்களில் இன்றே அதிக அளவான மக்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது


                  இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 2114 ஆக இடம்பிடித்துள்ளது

                    Posted in Uncategorized

                    இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்க தீர்மானம் நிறைவேற்றம்

                    இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்க தீர்மானம் நிறைவேற்றம்

                    இலங்கையில் அமுலில் இருக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (பி.டி.ஏ) .ரத்து செய்யக் கோரும் தீர்மானம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

                    இலங்கை மீதான தீர்மானம் ஆதரவாக 628 வாக்குகள், எதிராக 15 மற்றும் 40 நாடுகள், வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

                    மனித உரிமை நிலைமை குறித்து ஐரோப்பிய பாராளுமன்றம் மூன்று தீர்மானங்களை

                    நிறைவேற்றியது. ஸ்பெயின் / மொராக்கோ எல்லையிலும், ரஷ்யாவிலும், இலங்கையிலும் மனித உரிமை நிலைமைகள் குறித்தே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

                    மிக சமீபத்திய மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கையின் ஆபத்தான சரிவு குறித்து ஐரோப்பிய பாராளுமன்றம் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள

                    Posted in இலங்கை செய்திகள்

                    பாயும் பறக்கும் படை முற்றுகையில் 1,038 பேர் கைது

                    பாயும் பறக்கும் படை முற்றுகையில் 1,038 பேர் கைது

                    இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டின் பேரில் கடந்த தினம் மட்டும் சுமார் 1,038 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                    இவ்வாறு கைதானவர்கள் முகமூடி இன்றி உலவியதும் ,மாகாண எல்லைகளை கடந்த

                    குற்றச்சாட்டில் இந்த கைது வேட்டை இடம் பெற்றுள்ளது

                    Posted in இலங்கை செய்திகள்

                    இந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கை வந்தவர் கைது

                    இந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கை வந்தவர் கைது

                    இந்தியாவில் இருந்து இலங்கை முள்ளியவளை பகுதிக்கு படகு மூலமா வந்தடைந்த நபர் ஒருவர் காவல்துறையால் கைது செய்ய பட்டுளளார்

                    மக்கள் வழங்கிய தகவலை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது

                      Posted in Uncategorized

                      கடிதம் மூலம் மருந்துகளை அனுப்பும் – யாழ்ப்பாண மருத்துவமனை

                      கடிதம் மூலம் மருந்துகளை அனுப்பும் – யாழ்ப்பாண மருத்துவமனை

                      யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக் களத்தில் (Clinic) வைத்தியசேவை பெறும் நேயாளர்களுக்கான மருந்து வகைகள், தபால் மூலமாக அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.

                      நாட்டில் தற்போது நிலவும் கொரோனா நிலைமை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

                      இதுதொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

                      யாழ்ப்பாண  மருத்துவமனை
                        Posted in Uncategorized

                        பியர் அருந்தும் சிறுவன் – மடக்கிய பொலிஸ்

                        பியர் அருந்தும் சிறுவன் – மடக்கிய பொலிஸ்

                        சமூக வலைத்தளத்தில் சிறுவன் பியர் அருந்தும் காட்சிகள் அடங்கிய காணொளி வெளியான நிலையில் அது தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

                        பேலியகொட, நுகே வீதியை சேர்ந்த 04 வயது சிறுவன, குறித்த வீடியோவில் உள்ளதாக தகவல் வெளியான நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

                        இதனையடுத்து, குறித்த வீடியோவை எடுத்த சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிபொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

                        அத்துடன், கைதுசெய்யப்பட்ட 25 வயதுடைய சந்தேக நபரை நீதிமன்றில் இன்று(11) முன்னிலைப்படுத்தவுள்ளதாக அவர் கூறினார்.

                        இலங்கையின் சட்டத்துக்கு அமைய சிறுவர்களுக்கு மதுபானம், புகைத்தல் பொருட்கள் உள்ளிட்டவைற்றை பெற்றுக்கொடுப்பது, வழங்குவது பாரிய குற்றம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

                          Posted in பங்கு சந்தை Forex Trade

                          29 முதலீடு -144 இலாபம் -forex trade – video

                          29 முதலீடு -144 இலாபம் -forex trade – video

                          உலக பங்கு சந்தை நாணய மாற்றில் 29 முதலீடு புரிந்து சுமார் 114 பவுண்டுகள் இலாபமாக பெறப்பட்டுள்ளது ,


                          சந்தையின் களநிலவர நகர்வுகள் துல்லியமாக அறிய பெற்றால் இதில் இருந்து அதிக இலாபத்தை ஈட்டி கொள்ள முடியும்


                          அவ்வாறான சந்தைநகர்வே இது ,நீஙக்ளும் உங்கள் வீட்டில் இருந்த படி செய்து கொள்ள ,முடியும் ,அதற்கு நாம் உதவி புரிகிறோம் ,

                          இதோ இந்த காணொளியை பாருங்கள் ,மேலும் பல காணொளிகள் உள்ளது அதனையும் பாருங்கள் .பின்னர் முடிவெடுத்து செயல் படுங்கள்

                          களத்தின் இலக்கை சொல்வது நாம் ( சிக்கனல் ) வெற்றியை தீர்மானிப்பது நீங்கள் ,முயன்று பார்க்க ஆசை படின் தொடர்பு கொள்ளுங்கள்

                          சிறிய முதலீடு பெரும் இலாபம்

                          click here video

                          https://www.youtube.com/watch?v=3XAZCe-PVCo
                            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                            லண்டனில் தமிழர் வீடுகளில் ஒரு லட்சம் நகை கொள்ளையடித்த திருடன்

                            லண்டனில் தமிழர் வீடுகளில் -ஒரு லட்சம் நகை கொள்ளையடித்த திருடன்

                            பிரிட்டனில் பல காலமாக தங்க நகை திருட்டில் ஈடுபட்டு வந்த திருடன் சிக்கினார்

                            இவர் சுமார் ஒருலட்சம் பவுண்டுகள் பெறுமதியான தங்கம் மற்றும் மணிக்கூடுகள் என்பன திருடியுள்ளது அம்பலமாகியுள்ளது

                            நீதிமன்றில் இடம்பெற்று வந்த விசாரணைகளில் இவருக்கு ஐந்தரை வருடம் சிறை தண்டனை வழங்க தீர்ப்பளிக்க பட்டுள்ளது

                            தமிழர்கள் வீடுகளில் இவ்வாறான வெள்ளையர் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்தமை இங்கே குறிப்பிட தக்கது

                              Posted in உளவு செய்திகள்

                              ரசியாவிடம் ஏவுகணையை வாங்கி குவிக்கும் இந்தியா

                              ரசியாவிடம் ஏவுகணையை வாங்கி குவிக்கும் இந்தியா

                              ரசியாவிடம் விமான வான் இடைமறிப்பு ஏவுகணையை இந்திய வாங்கி குவிகிறது ,இந்த ஆயுத

                              விற்பனை ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்த ஏவுகணைகள் இவ்வருட இறுதிக்குள் இந்தியாவுக்கு விநியோகிக்க படும் என ரசியா தெரிவித்துள்ளது

                              சீனாவுடனான போரில் இந்த ஏவுகணை தடுப்பை இந்தியா உணர்ந்து கொண்டது ,அதனை அடுத்தே மேற்படி ஏவுகணைகளை இந்திய வாங்கி குவிக்கின்றமை குறிப்பிட தக்கது

                              Posted in Uncategorized

                              இஸ்ரேல் வீசிய குண்டின் மேலே ஏறி விளையாடும் சிறுவர்கள் photo in

                              இஸ்ரேல் வீசிய குண்டின் மேலே ஏறி விளையாடும் சிறுவர்கள்

                              பலஸ்தீனத்தில் இஸ்ரேல் வீசிய எறிகணைகள் மற்றும் பெரும் ஏவுகணைகள் என்பன வீழ்ந்து

                              வெடித்தன ,இதில் பலநூறு குண்டுகள் வெடிக்காத நிலையில் உள்ளது ,இவ்வாறான குண்டுகள் மீது சிறுவர்கள் ஏறி விளையாடும் பயங்கர காட்சிகள் வெளியாகியுள்ளன

                              இஸ்ரேல் வீசிய இந்த குண்டின் எடை சுமார் ஆயிரம் கிலோ ஆகும் ,அவ்வாறான பெரும் அழிவை தரக்கூடிய இந்த குண்டின் மீதே .சிறுவர்கள் ஏறி விளையாடுகின்றனர்

                              நாம் போராளிகள் முகாம்கள்மீதே குண்டை வீசினோம் என இஸ்ரேல் கூறியது ,இப்பொழுது புரிந்ததா .இவர்கள் இலங்கையின் மச்சான் தான் என்பது

                              ஏன் தெரியுமா..? இலங்கையும் போர்க்காலத்தில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிலையில் ,இவர்கள் போலவே பேசியது இங்கே குறிப்பிட தக்கது