Posted in இலங்கை செய்திகள்

இன்று மட்டும் 2,715 பேர் கொரனோவால் பாதிப்பு

இன்று மட்டும் 2,715 பேர் கொரனோவால் பாதிப்பு

இலங்கையில் இன்று மட்டும் சுமார் 2,715 பேர் கொரனோ தொற்று நோயினால் பாதிக்க பட்டுள்ளனர்


இவ்வாறு பாதிக்க பட்ட அனைவரும் தனிமை படுத்த பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

பல நாடுகளில் இருந்து கொரனோ தடுப்பு மருந்துகள் இயக்குமதி செய்ய பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

    Posted in இலங்கை செய்திகள்

    ஒபரேஷன் சாகர் ஆரக்‌ஷா 2 பணியில்- இந்திய படை

    ஒபரேஷன் சாகர் ஆரக்‌ஷா 2 பணியில்- இந்திய படை

    ஒபரேஷன் சாகர் ஆரக்‌ஷா 2 பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இந்திய கரையோர காவல் படை கப்பல்களின் கப்டன்கள், இந்நடவடிக்கை குறித்த வினைத்திறன் மேம்பாட்டு மீளாய்வுக்காக 2021

    ஜூன் 10ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தபோது இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிசாந்த உலுகேதென்ன சிறப்பாக வரவேற்றார்.

    இந்த கப்பல்கள் மூலமாக வழங்கப்பட்டிருந்த ஆதரவினை பாராட்டிய அவர், எம்.வி.எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தீ அனர்த்தத்தினை கட்டுப்படுத்துவதற்காக வழங்கிய துரிதமான பதில் நடவடிக்கைக்காக இந்தியாவிற்கு விசேட நன்றிகளையும் தெரிவித்திருந்தார்.

    கடல் மாசு நீக்கும் சிறப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டிருந்த சமுத்திர பிரஹரி கப்பலின் செயற்பாடுகள் குறித்தும் இந்நடவடிக்கைகளில் தமது வகிபாகம் குறித்தும் இந்திய கடலோர காவல் படையின் கப்டன்கள் இலங்கை கடற்படை தளபதிக்கு எடுத்துக் கூறியிருந்தனர்.

    1. இந்த சந்தர்ப்பத்தில் அங்கு சமூகமளித்திருந்த உயர் ஸ்தானிகர் கௌரவ கோபால் பாக்லே அவர்கள், இந்நடவடிக்கை முழுவதும் இந்திய கப்பல்களின் செயற்பாடுகளுக்கு இதயபூர்வமான ஒத்துழைப்பினை வழங்கிய இலங்கை கடற்படைக்கும் இலங்கை கடற்படை தளபதிக்கும்
    2. நன்றியினை தெரிவித்திருந்தார். கடல் மார்க்கத்தில் இந்தியாவையும் இலங்கையையும்
    3. பிணைத்த புவியியல் ரீதியிலான காரணிகள் மாத்திரமின்றி ஒபரேஷன் சாகர் ஆரக்‌ஷா 1 மற்றும் 2 செயற்பாடுகளின் மூலமாக சான்று பகர்ந்ததைப்போன்று கடலில் இடம்பெற்ற அனர்த்தங்கள் மற்றும் HADR ஆகிய அவசர நிலைகளில் பதிலளிப்பதற்காக பாரம்பரிய ரீதியில் காணப்படும் ஒத்துழைப்பும் இதற்கான முக்கிய காரணியாக அமைகின்றது எனவும் அவர்
    4. இங்கு குறிப்பிட்டார். பொதுவான கடற்பரப்பில் அனர்த்த சூழ்நிலைகளில் உரிய தருணத்தில் தக்க பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக காணப்படும் இருதரப்பு பொறிமுறைகளையும் அவர் இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டினார். மேலும் பொதுவான
    5. கடற்பரப்பின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு இந்தியாவும் இலங்கையும் ஒன்றிணைந்து செயற்படுகின்றமையை சுட்டிக்காட்டியிருந்த அவர் மீண்டும் நிகழக்கூடிய செயற்கை அனர்த்தங்கள் மற்றும் மனிதர்களின் செயற்பாடுகளால் ஏற்படும் அனர்த்தங்கள்
    6. ஆகியவற்றிற்கு உரிய பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டியிருந்தார்.
    7. எம்.வி.எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக இலங்கை
    8. கடற்படையிடமிருந்து உதவிக்காக கோரிக்கை விடுக்கப்பட்ட சில மணித்தியாலங்களில் மே 25ஆம் திகதி முதல் இந்திய கடலோர காவல்படை கப்பல்கள் இங்கு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமையையும் மாசு நீக்கும் செயற்பாடுகளுக்கான உதவிகளையும் இந்த
    9. சந்தர்ப்பத்தில் நினைவூட்டமுடியும். எம்.வி.எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீயினை அணைக்கும் முயற்சிகளில் ஐசிஜி டோனியருடன் இணைந்து இந்திய கடலோர காவல் படையின் மூன்று கப்பல்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. மேலும் கடல் மாசு
    10. அச்சுறுத்தலை கணிப்பிடும் பணிகளில் மாசினை கட்டுப்படுத்தும் கப்பல்கள் உதவியை வழங்கியிருந்ததுடன் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான பூரண வசதிகளை அக்கப்பல்கள் தம் வசம் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இரு
    11. நாடுகளினதும் கடல் படைகள் இடையில் காணப்படும் கூட்டுத்திறன் மற்றும் ஒன்றிணைவானது இந்திய இலங்கை கூட்டு நடவடிக்கைகளுக்கான சிறந்த சான்றாக அமைகின்றன.
    12. 2020 செப்டம்பர் இலங்கை கரைக்கு அப்பால் எம்டி.நியூ டைமன்ட் கப்பலில் ஏற்பட்ட தீ
    13. விபத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் இந்தியக் கடற்படையினதும் இந்திய கடலோர காவல் படையினதும் இவ்வாறான கப்பல்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. கடந்த ஆண்டுகளில் கடலில் ஏற்பட்ட அனர்த்தங்கள்
    14. மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளின்போது வெற்றிகரமாகவும் துரிதமாகவும் முதலில் பதிலளித்து உதவியினை வழங்கும் நாடாக இந்தியா உள்ளது. பிராந்தியத்தில் அனைவருக்கும்
    15. பாதுகாப்பும் வளர்ச்சியும் என்ற சாகர் கோட்பாட்டிற்கு அமைவாகவும் அயலுறவுக்கு முதலிடம் கொள்கையை பிரதிபலிப்பதாகவும் இந்த செயற்பாடுகள் அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

    இந்திய உயர் ஸ்தானிகராலயம்
    கொழும்பு

    Posted in உலக செய்திகள்

    புயலில் சிக்கிய அவுஸ்ரேலியா – மின்சாரம் இன்றி தவிப்பு

    புயலில் சிக்கிய அவுஸ்ரேலியா – மின்சாரம் இன்றி தவிப்பு

    அவுஸ்ரேலியா குயின் லாண்ட் பகுதியில் திடீரென வீசிய புயல் காரணமாக அந்த பகுதியில் உள்ள மக்கள் மின்சாரம் துண்டிக்க பட்டு தவித்து வருகின்றனர்

    இந்த புயலின் கோர தாண்டவத்தில் சிக்கி பலன் தரும் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன ,மேலும் மின்சார கம்பங்கள் சேதமடைந்துள்ளன

    இதனால பல வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ள காட்சிகளை காண முடிகிறது ,மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

      Posted in இலங்கை செய்திகள்

      ஆடம்பர மாளிகையில் பாட்டி – 9 பேர் கைது

      ஆடம்பர மாளிகையில் பாட்டி – 9 பேர் கைது

      இலங்கை கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள ஆடம்பர இல்லத்தில் விருந்து வைத்து மகிழ்ந்த ஒன்பது பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

      கைதான அனைவரும் தனிமை படுத்த பட்டுள்ளனர்

      போலீசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து இந்த கைது வேட்டை இடம்பெற்றுள்ளது

        Posted in Uncategorized

        ஆப்காணில் வெடித்த குண்டு -16 -பேர் மரணம் -70 பேர் காயம்

        ஆப்காணில் வெடித்த குண்டு -16 -பேர் மரணம் -70 பேர் காயம்

        ஆப்கானிஸ்தான் நாட்டில் இராணுவ நிலைக்கு அருகில் இடம்பெற்ற கார் குண்டு தாக்குதலில்

        சிக்கி பதினாறு பேர் பலியாகியுள்ளனர்

        மேலும் 70 பேர் படுகாயமடைந்துள்ளனர் ,அமெரிக்கா இராணுவம் அங்கிருந்து விலகி வரும் நிலையில் தலிபான்கள் தாக்குதல்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிட தக்கது

          Posted in Uncategorized

          வீழ்ந்து எரியும் இராணுவ விமானம் -வீடியோ

          வீழ்ந்து எரியும் இராணுவ விமானம் -வீடியோ

          மியான்மர் நாட்டில் இராணுவத்தினரை காவிய படி பயணித்த இராணுவ விமானம் ஒன்று திடீரென

          வீழ்ந்து நொறுங்கியது ,இதன் பொழுது அதில் பயணித்த அனைவரும் பலியாகியுள்ளனர்

          மேற்படி விமான விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

          click here video


          https://www.youtube.com/watch?v=VfgfdUXNCnw

          https://www.youtube.com/watch?v=VfgfdUXNCnw
          Posted in சினிமா

          5 படங்களில் நடிக்கும் சிவகார்த்திகேயன்

          5 படங்களில் நடிக்கும் சிவகார்த்திகேயன்

          டாக்டர், அயலான், டான் ஆகிய படங்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், ஒரே நிறுவனத்தின் 5 படங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

          ஒரே நிறுவனத்தின் 5 படங்களில் நடிக்கும் சிவகார்த்திகேயன்
          சிவகார்த்திகேயன்


          தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் தற்போது டாக்டர், அயலான், டான் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

          இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு தொடர்ச்சியாக 5 படங்களில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், ஐந்து படங்களுக்கும் சேர்த்து ரூபாய் 75 கோடி அவருக்கு சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

          சிவகார்த்திகேயன்

          சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது ’அண்ணாத்த’, ’தளபதி 65’, சூர்யா 40 ஆகிய படங்களை தயாரித்து வருகிறது.

          Posted in சினிமா

          மீண்டும் திருமணமா? – நடிகை வனிதா விளக்கம்

          மீண்டும் திருமணமா? – நடிகை வனிதா விளக்கம்

          பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் வனிதா. ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர், கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் பீட்டர்பால் என்பவரை 3

          -வது திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கினார். பின்னர் சில தினங்களிலேயே அவரை குடிகாரர் என்று உதறித் தள்ளி மேலும் பரபரப்பு ஏற்படுத்தினார். இதையடுத்து தொலைக்காட்சி

          தொடர்களில் நடித்து வந்த வனிதா, தற்போது சினிமாவில் தீவிர கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.

          இதனிடையே, நடிகை வனிதா, கொல்கத்தாவை சேர்ந்த பைலட் ஒருவரை அண்மையில் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.

          இந்நிலையில், இதுகுறித்து விளக்களித்து நடிகை வனிதா டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “உங்கள் அனைவருக்கும் ஒன்றை தெரியப்படுத்த விரும்புகிறேன். நான் இப்போதும் சிங்கிளாகவே

          இருக்கிறேன். அப்படியே இருக்க விரும்புறேன். எந்தவொரு வதந்தியையும் பரப்பவோ, நம்பவோ வேண்டாம்” எனக்கூறி திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

          Posted in இலங்கை செய்திகள்

          பிறந்த குழந்தை கொரனோவால் மரணம்

          பிறந்த குழந்தை கொரனோவால் மரணம்

          இலங்கை கம்பளை பகுதியில் பிறந்து 8 நாட்களான குழந்தை ஒன்று கொரனோ நோயினால் சிக்கி பலியாகியுள்ளார்

          இலங்கையில் வேகமாக பரவி வரும் நிலையில் நாள் தோறும் பலர் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

            Posted in இலங்கை செய்திகள்

            கிணற்றுக்குள் இருந்து சிறுவன் சடலமாக மீட்பு

            கிணற்றுக்குள் இருந்து சிறுவன் சடலமாக மீட்பு

            இலங்கை மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் உள்ள கிணறு ஒன்றுக்குள் இருந்து நான்கு வயது சிறுவன் சடலமாக மீட்க பட்டுள்ளான்

            இந்த சிறுவன் தவறி வீழ்ந்தாரா அல்லது படுகொலை செய்ய பட்டாரா என்பது தொடர்பில் விசாரணைகள்
            இடம் பெற்ற வண்ணம் உள்ளது

            சமீப காலங்களாக நீர் அருவிகளில் இருந்து சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

              Posted in இலங்கை செய்திகள்

              அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டத்தில்!photo

              அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டத்தில்!

              பைஷல் இஸ்மாயில் –

              அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதி உத்தியோகத்தர்களால் இன்று (03) வைத்தியசாலையின் முற்றலில் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து சுலோக அட்டைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

              கொவிட் -19 ஆட் கொல்லிக்கு முதலில் பலியாவது தாதியரா?, கொவிட் உடனான போரில் முன்னரங்கில் நிற்போருக்கு போதியளவு கையுறைகள் முகக்கவசங்களை தங்குதடையின்றி வழங்கு,


              தடுப்பூசி பராமரிப்பில் நோயாளியுடன் நெருங்கிப் பணியாற்றும் எமது குடும்பத்துக்கும் வழங்கு, நாம் நோயாளிகளுக்கான சேவையை தடையின்றி மேற்கொள்ள போக்குவரத்து வசதி செய்து

              கொடு, பொதுமக்களின் உயிராபத்தைக் குறைப்பதற்கான பராமரிப்பை கொடுக்க எமக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கு, தடுப்பூசி ஏற்றாத சுகாதாரப் பணிக் குழுவினருக்கு உடனடியாக ஏற்று.

              சுமார் 5,000 தாதிய உத்தியோகத்தர்களுக்கு இதுவரை தடுப்பூசி ஏற்றப்படவில்லை. அதற்கான ஏற்பாடுகளை செய், தடுப்பூசி ஏற்றாத தாதியருக்கு உடனே தடுப்பூசியேற்ற ஒழுங்கு செய்.

              ஆபத்தைப் பொருட்படுத்தாது சேவையாற்றும் சுகாதாரப் பணிக் குழுவினருக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்திக்கொடு, கொவிட் -19 தனிமைப்படுத்தல் விடுதிகளில் சேவையாற்றும் பணிக்

              குழுவினருக்கு உணவு வினியோகத்தை ஒழுங்கு செய், ஆபத்துக்கு முகங்கொடுக்கும் சுகாதாரப் பணிக் குழுவினரின் குடும்பத்தினருக்கு தடுப்பூசி ஏற்ற ஒழுங்கு செய் போன்ற வாசகங்கள் கொண்ட பதாதைகளையும் தாங்கியவாறு கோஷங்களையும் எழுப்பினர்.

              வைத்தியசாலை
              வைத்தியசாலை
              வைத்தியசாலை
              வைத்தியசாலை
              Posted in Uncategorized

              இலங்கையில் கொரானாவுக்கு 67 பேர் பலி

              இலங்கையில் கொரானாவுக்கு 67 பேர் பலி

              இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 67 பேர் பலியாகியுள்ளனர்

              நாள் தோறும் இந்த நோயின் தாக்குதலில் சிக்கி இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                Posted in Uncategorized

                அநியாயங்கள் நாட்டில் அதிகரிக்க கூடாது – மரண வீட்டில் சாணக்கியன்

                அநியாயங்கள் நாட்டில் அதிகரிக்க கூடாது – மரண வீட்டில் சாணக்கியன்

                கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவர் உயிரிழந்திருந்த நிலையில், குறித்த நபரின் பாணந்துறை வீட்டிற்கு தமிழ்

                தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் இரா. சாணக்கியன் ஆகியோர் நேற்று (09) சென்றிருந்தனர்.

                உயிரிழந்தவரின் மனைவி மற்றும் உறவினர்களுடன் பிரதேச மக்களையும் சந்தித்து இருவரும் ஆறுதல் கூறியிருந்தனர்.

                இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சாணக்கியன், ´´இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் ஒரு விதமாகவும், பொலிஸார் ஒரு விதமாகவும், உறவினர்கள் ஒரு விதமாகவும் தெரிவிக்கின்றனர்.

                எனவே இது தொடர்பில் பாராபட்சமற்ற நியாயமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இங்கு தமிழரா, முஸ்லிமா, சிங்களவரா என்பதல்ல விடயம். இதுபோன்ற அநியாயங்கள் நாட்டில் அதிகரிக்க கூடாதென்பதற்காகவே நாம் இங்கு வருகை தந்துள்ளோம்.´´ எனக் குறிப்பிட்டுள்ளார்.

                இந்த விடயம் தொடர்பில் இரா. சாணக்கியன் நேற்று முன்தினம் பாராளுமன்றத்திலும் கருத்து

                வெளியிட்டிருந்ததுடன், நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.

                இதேவேளை, இதற்கு முன்னர் இதுபோன்ற மற்றுமோர் சம்பவம் மட்டக்களப்பு பகுதியிலும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

                Posted in Uncategorized

                வவுனியா, சாந்தசோலை பிரதேசத்தில் -சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல்

                வவுனியா, சாந்தசோலை பிரதேசத்தில் -சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல்

                வவுனியா, சாந்தசோலை பிரதேசத்தில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை தாக்கிய நபரை தேடி விசேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

                குறித்த பொது சுகாதாரப் பரிசோதகரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண தெரிவித்தார்.

                முகக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரிடம் விசாரணையில்

                ஈடுபட்ட போது குறித்த நபரால் பொது சுகாதார பரிசோதகர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

                25 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு பொது சுகாதார பரிசோதகரை தாக்கியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

                அதன்படி, குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்காக வவுனியா பொலிஸாரினால் விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

                Posted in இலங்கை செய்திகள்

                கிராம உத்தியோகத்தர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு

                கிராம உத்தியோகத்தர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு

                கிராம உத்தியோகத்தர் பதவிக்கான ஆட்களை இணைத்துக்கொள்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

                இணையவழி (Online) மூலம் விண்ணப்பிப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

                பரீட்சைகள் திணைக்களத்தின்உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

                Posted in இலங்கை செய்திகள்

                பொலிஸ் வேட்டை 1,057 பேர் கைது

                பொலிஸ் வேட்டை 1,057 பேர் கைது

                இலங்கையில் தனிமை படுத்தல் சட்டத்தை மீறிய சுமார் 1,057 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                முகக் கவசம் அணிய மறுத்தமை மற்றும் ,மாகாண எல்லையை கடந்தமை தொடர்பிலான குற்ற சாட்டில் இந்த கைது இடம்பெற்றுள்ளது

                Posted in Uncategorized

                வெடித்த குண்டு – சிதறிய இராணுவ உடல்கள்

                வெடித்த குண்டு – சிதறிய இராணுவ உடல்கள்

                கிழக்கு சிரியாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ரசியா இராணுவத்தினரை இலக்கு வைத்த

                நடத்த பட்ட தாக்குதலில் பல இராணுவத்தின் படுகாயமடைந்துள்ளனர் ,இதில் சிலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

                எனினும் முழுமையான சேத விபரங்கள் வெளியிடப்படவில்லை

                  Posted in உலக செய்திகள்

                  சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

                  சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

                  சிரியா ,லெபனான் எல்லையில் உள்ள முக்கிய இராணுவ நிலைகளை இலக்கு வைத்து இஸ்ரலிய இராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதல் தோல்வியில் முடிந்துள்ளது

                  மேற்படி ஏவுகணையை இடையில் வான் எதிர்ப்பு ஏவுகணை சுட்டு வீழ்த்தியுள்ளதாக சிரியா இராணுவம் தெரிவித்துள்ளது

                  கமாஸ் வழங்கிய ஏவுகணை தாக்குதலில் சிதைவடைந்த இஸ்ரேலிய இராணுவம் மீள இப்பொழுது வலிந்து தாக்குதலை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .

                    Posted in சினிமா

                    குடும்பமே அந்த நடிகைக்கு ரசிகையாகிவிட்டோம் – ரகுல் பிரீத் சிங்

                    குடும்பமே அந்த நடிகைக்கு ரசிகையாகிவிட்டோம் – ரகுல் பிரீத் சிங்

                    தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை ரகுல் பிரீத் சிங், முன்னணி நடிகை ஒருவரை புகழ்ந்து பேசி இருக்கிறார்.

                    எங்கள் குடும்பமே அந்த நடிகைக்கு ரசிகையாகிவிட்டோம் – ரகுல் பிரீத் சிங்
                    ரகுல் பிரீத் சிங்,


                    மனோஜ் பாய்பாய், சமந்தா, பிரியாமணி நடிப்பில் அமேசானில் வெளியாகியுள்ள வெப் தொடர் தி பேமிலி மேன்-2. இந்த தொடரை ஒளிபரப்பக்கூடாது என்று வைகோ, பாரதிராஜா, சீமான் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு பக்கம் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், மறு பக்கம் இப்படத்தை பாராட்டி வருகிறார்கள்.

                    சமந்தா
                    சமந்தா – ரகுல் பிரீத் சிங்

                    இந்நிலையில் நடிகை ரகுல் சிங் டுவிட்டரில், ‛‛தி பேமிலி மேன்-2 தொடரில் நடித்துள்ள மனோஜ்பாஜ்பாயின் நடிப்பை பாராட்ட வார்த்தைகளே இல்லை. அதேபோல் சமந்தா ராஜி

                    கேரக்டரை மிக அற்புதமாக செய்திருக்கிறார். இந்த தொடரை பார்த்த பிறகு எங்கள் குடும்பமே சமந்தாவின் ரசிகைகளாக மாறி விட்டோம்” என்று பதிவிட்டுள்ளார்

                      Posted in சினிமா

                      சீதையாக நடிக்க ரூ.12 கோடி சம்பளம் கேட்ட பிரபல நடிகை

                      சீதையாக நடிக்க ரூ.12 கோடி சம்பளம் கேட்ட பிரபல நடிகை

                      சீதையின் பார்வையில் காட்சிகள் நகர்வது போன்று திரைக்கதை அமைத்துள்ளதால் இந்தி படத்திற்கு ‘சீதா’ என்று பெயர் வைத்துள்ளனர்.

                      பாகுபலி வெற்றிக்கு பிறகு அனைத்து மொழிகளிலும் சரித்திர புராண படங்கள் அதிகம் தயாராகின்றன. மலையாளத்தில் ‘அரபிக் கடலின்டே சிம்ஹம்’ எனும் சரித்திர படத்தில்

                      மோகன்லால் நடித்துள்ளார். தெலுங்கில் ராமாயண கதை ‘ஆதிபுருஷ்’ என்ற பெயரில் படமாகிறது. இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான் நடிக்கின்றனர். ரூ.500 கோடி செலவில்

                      இப்படம் தயாராகிறது. தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் இந்த படத்தை டப்பிங் செய்து வெளியிடுகின்றனர்.

                      இந்நிலையில், இந்தியிலும் ராமாயண கதை ‘சீதா’ என்ற பெயரில் படமாகிறது. சீதையின் பார்வையில் காட்சிகள் நகர்வது போன்று திரைக்கதை அமைத்துள்ளதால் இப்படத்திற்கு ‘சீதா’

                      என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் சீதையாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். கதை கேட்டதும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ள அவர், அப்படத்தில் நடிக்க ரூ.12 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம்.

                      கரீனா கபூர்

                      வழக்கமாக ஒரு படத்துக்கு 6 முதல் 8 கோடி வரை சம்பளம் வாங்கும் அவர், இப்படத்திற்காக சுமார் ஒரு வருடம் கால்ஷீட் தர வேண்டி இருப்பதால் ரூ.12 கோடி கேட்கிறாராம். படக்குழுவினர், அவர்

                      கேட்ட தொகையை கொடுத்து ஒப்பந்தம் செய்வார்களா? அல்லது வேறு நடிகையை நடிக்க வைப்பார்களா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.