அமெரிக்காவில் துப்பாக்கி சூடு நடத்திய மூவர் கைது
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு நடத்திய மூவர் கைது
அமெரிக்காவில் அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய
மூன்று கறுப்பினத்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
இந்த சூட்டு சம்பவத்தில் மூன்று வயது சிசு உள்ளிட்டவர்கள் பலியாகி இருந்தமை குறிப்பிட தக்கது
நகங்களில் தென்படும் நோய் பாதிப்பு அறிகுறி
நகங்களில் தென்படும் நோய் பாதிப்பு அறிகுறி
தண்ணீரில் நனைத்தாலோ, சருமம் வறட்சியாக இருந்தாலோ நகங்கள் உடைவது தொடர்ந்து கொண்டிருக்கும். சோர்வு, சரும பொலிவின்மை போன்ற அறிகுறிகள் உருவாகும்.
முகம், கண்கள், நாக்கு போன்றவைகளை பார்த்து அவருக்கு உடலில் எத்தகைய பாதிப்புகள் இருக்கின்றன என்பதை அனுபவ டாக்டர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள்.
அதுபோல் நகங்களும் உடல் பாதிப்புகளை எடுத்துக்காட்டுகின்றன. நகங்கள் வெளிப்படுத்தும் நோய் அறிகுறிகளை காண்போம்!
நகங்களின் நடுப்பகுதியில் வெள்ளை நிறத்தில் புள்ளிகளும், திட்டுகளும் காணப்பட்டால் அவை நோய்த்தொற்றின் அறிகுறியாக இருக்கும்.
அதனால் அவர்கள் உடல்நலத்தில் அக்கறைகாட்டி மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும்.
மஞ்சள் நிறம் மற்றும் வெளிறிய நிறத்தில் ஒருசிலரின் நகங்கள் காட்சியளிக்கும். பெரும்பாலும் வயதானவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக தென்படும்.
புகைபிடித்தல், நீரிழிவு நோய், சுவாச நோய் போன்ற பாதிப்புக்களின் அறிகுறியாக இதனை உணரலாம்.
சிலருக்கு நகங்களின் நடுப்பகுதியில் குழி விழுந்து காணப்படும். அழுத்தமான கோடுகள் போன்றும் பதிந்திருக்கும். இது ஒருவகை திசுக்கோளாறுகளால் ஏற்படும் பாதிப்பாகும்.
இப்படிப்பட்டவர்களுக்கு தோல் அழற்சி பிரச்சினையும் இருக்கலாம்.
நகம் வெடித்து காணப்பட்டால், நகப்பூச்சு ஒத்துக்கொள்ளவில்லை என்று கருதலாம். ஆனால் வெடித்து நகங்கள் பிசிறுபோல் உதிர்ந்துகொண்டிருந்தால் இரும்பு சத்து குறைபாடு இருப்பதாக அர்த்தம்.
உடனே பரிசோதிக்க வேண்டியது அவசியம்.
நகங்களில் சிலருக்கு நீள்வாக்கிலும், பக்கவாட்டிலும் வரிசையாக கோடுகள் காணப்படும். நகத்தின் நிறமும் மாறுபட தொடங்கியிருக்கும்.
நகங்களில் தென்படும் நோய் பாதிப்பு அறிகுறி
அது சிறுநீரக நோய் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். சோர்வு, கவலை எடை இழப்பு, நீரிழிவு, சிறுநீர் அதிகமாக வெளியேறுவது போன்ற பாதிப்புகளும் அவர்களுக்கு இருக்கலாம்.
சிலருக்கு நகங்கள் வலுவே இல்லாமல் உடைந்துபோய் கொண்டிருக்கும். அது உடல்நலப்பிரச்சினைக்கான ஆரம்பகட்ட அறிகுறியாகும்.
தண்ணீரில் நனைத்தாலோ, சருமம் வறட்சியாக இருந்தாலோ நகங்கள் உடைவது தொடர்ந்து கொண்டிருக்கும். சோர்வு, சரும பொலிவின்மை போன்ற அறிகுறிகள் உருவாகும்.
இந்த பிரச்சினையை கட்டுப்படுத்த வைட்டமின் சத்துக்களைகொண்ட உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
நகங்களில் கருமை படிந்திருந்தாலோ, நகங்களை சுற்றி ரத்தக்கட்டு தோன்றியிருந்தாலோ, அது புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
உடனே மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
சசிகுமாரின் ‘ராஜவம்சம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சசிகுமாரின் ‘ராஜவம்சம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் ராஜவம்சம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சசிகுமாரின் ‘ராஜவம்சம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சசிகுமார் – நிக்கி கல்ராணி
நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ராஜவம்சம். இப்படத்தை புதுமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கி உள்ளார். இவர் இயக்குனர் சுந்தர் சி-யிடம் உதவி இயக்குனராக
பணியாற்றியவர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சித்தார்த் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.
மேலும் சதீஷ், யோகி பாபு, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், கும்கி அஸ்வின், சிங்கம்புலி, நிரோஷா, மனோபாலா, சாம்ஸ், ஆடம்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில்
நடித்துள்ளனர். 49 நடிகர், நடிகைகளுடன் உருவாகும் ராஜவம்சம், தலைப்புக்கு ஏற்றார்போல் குடும்பங்கள் கொண்டாடும் படமாக தயாராகி உள்ளது. இப்படத்தை செந்தூர் பிலிம்ஸ் சார்பில் டீ.டி.ராஜா தயாரித்துள்ளார்.
ராஜவம்சம் படத்தின் போஸ்டர்
கடந்த மார்ச் மாதமே ரிலீசாக இருந்த இப்படம் கொரோனா இரண்டாவது அலை காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு
உள்ளது. அதன்படி இப்படம் வருகிற அக்டோபர் 1-ந் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காதலனுக்கு புது பட்டம் கொடுத்த நயன்தாரா
காதலனுக்கு புது பட்டம் கொடுத்த நயன்தாரா
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.
விக்னேஷ் சிவனுக்கு புது பட்டம் கொடுத்த நயன்தாரா
விக்னேஷ் சிவன், நயன்தாரா
தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தற்போது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும்
இப்படம் காமெடி ரொமான்ஸ் படமாக தயாராகி வருகிறது. இந்த படத்தில் நயன்தாராவுடன்
இணைந்து விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் முதல் பாடல், கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தையொட்டி வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இரண்டாவது பாடல் குறித்த முக்கிய அப்டேட்டை நயன்தாரா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளான வரும் செப்டம்பர்
18-ம் தேதி ‘டூ.. டூ.. டூ’ என்ற இரண்டாவது பாடல் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர்
அந்த டுவிட்டில் விக்னேஷ் சிவனை ‘அன்பான டைரக்டர்’ என குறிப்பிட்டுள்ளார். இது நயன்தாரா கொடுத்த புதுபட்டம் என கூறப்படுகிறது.
நீங்க இல்லாம துபாய் ரோடே வெறிச்சோடி கிடக்கு – வடிவேலுவை வாழ்த்திய சேரன்
நீங்க இல்லாம துபாய் ரோடே வெறிச்சோடி கிடக்கு – வடிவேலுவை வாழ்த்திய சேரன்
இன்று பிறந்தநாள் கொண்டாடும் வடிவேலுவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நீங்க இல்லாம துபாய் ரோடே வெறிச்சோடி கிடக்கு – வடிவேலுவை வாழ்த்திய பிரபல இயக்குனர்
வடிவேலு
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த வடிவேலு, தயாரிப்பாளர் சங்கம் விதித்த தடை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.
தற்போது அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு, ரீ-என்ட்ரிக்கு தயாராகி வருகிறார் வடிவேலு. அதன்படி சுராஜ் இயக்கும் படத்தில் முதலில் நடிக்க உள்ளார் வடிவேலு, இப்படத்தை லைகா
நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் வடிவேலுவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் இயக்குனர் சேரன், நடிகர் வடிவேலுவுக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “பிறந்தநாள் வாழ்த்துக்கள் வடிவேலு அய்யா.. நம்பர் 6, விவேகானந்தர் தெரு,
துபாய் குறுக்குச்சந்துல இருந்து பேசுறேன்.. நீங்க மறுபடி துபாய்க்கு வந்தது சந்தோசம்யா
வாங்கய்யா பின்னலாம். நீங்க இல்லாம துபாய் ரோடே வெறிச்சோடி கிடக்குய்யா.. காமெடில நீங்க எப்பவும் ‘கிங்’..” என குறிப்பிட்டுள்ளார்.
எதற்கடா உனக்கு திருமணம்
எதற்கடா உனக்கு திருமணம்
சீதனத்து கொடுமைகளை
சினத்தோடு உரைக்க வந்தால்
மேதினத்து மேனிகளோ
மோதி இன்றி வீழ்கின்றார்
பானை வயிறு உடல் தாங்கி
பாதி வழி அலைகின்ற
வேலையில்லா வேந்தர்களின்
வேண்டுதல் இதுவாம்
உதடெல்லாம் விஷம் வைத்து
ஊறுகின்ற பாம்பே
முதுகெலும்பு இன்றி
முன்னே கேட்க்கிறான்
உள்ளான் பானையிலே
ஊற்றியே வைக்கிறான்
இல்லாதான் வேண்டியே
இல்லறத்தில் கூடுறான்
உன் இச்சை தீர்ப்பதற்கு
உனக்கு வரி செலுத்தி
நடக்கிற திருமணம்
நாயே எதற்கு …?
வன்னி மைந்தன்
ஆக்கம் 12-09-2021
வன்னி மைந்தன் கவிதைகள்
திடீரென்று திருமணம் செய்து கொண்ட நடிகை
திடீரென்று திருமணம் செய்து கொண்ட நடிகை
தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த நடிகை வித்யுலேகா திடீரென்று திருமணம் செய்துக் கொண்டார்.
திடீரென்று திருமணம் செய்து கொண்ட நடிகை வித்யுலேகா
கணவருடன் வித்யுலேகா
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
கெளதம் மேனன் இயக்கத்தில், ஜீவா – சமந்தா நடிப்பில் வெளியான ‘நீதானே என் பொன் வசந்தம்’ படத்தில் காமெடி நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் வித்யுலேகா. கடந்த ஆண்டு லாக்டவுன் சமயத்தில், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்சய் உடன் வித்யுலேகாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
வித்யுலேகா
குடும்ப உறுப்பினர்கள் மட்டும் அதில் கலந்து கொண்டனர். வருங்கால கணவர் சஞ்சய் உடன் வித்யூலேகா எடுத்துக் கொண்ட நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள
பக்கத்தில் பதிவு செய்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்த்துக்களை பெற்றார்.
இந்நிலையில், திடீரென்று வித்யுலேகாவும் சஞ்சய்யும் திருமணம் செய்துகொண்டனர். இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
விளம்பரம் தேட வில்லை…. கனகா
விளம்பரம் தேட வில்லை…. கனகா
கரகாட்டக்காரன் படத்தில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை கனகா, தான் விளம்பரத்திற்காக எதுவும் செய்யவில்லை என்று கூறியிருக்கிறார்.
விளம்பரம் தேட வில்லை…. கனகா காட்டம்
கனகா
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
கங்கை அமரன் இயக்கத்தில் 1989-ல் வெளியான கரகாட்டக்காரன் படத்தில் கதாநாயகியாக
நடித்து பிரபலமான கனகா முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜயகாந்த், ராமராஜன், பிரபு, கார்த்திக் உள்ளிட்டோரின் படங்களில் நடித்து இருக்கிறார்.
1999-ல் வெளியான விரலுக்கேத்த வீக்கம் படத்தில் நடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகிய அவர் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோவில் தனக்கு மீண்டும் நடிக்க ஆசை உள்ளது
என்றும், இதற்காக சினிமாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கற்கப்போகிறேன் என்றும் தெரிவித்து இருந்தார்.
அந்த வீடியோவை பார்த்த சிலர் மீண்டும் சினிமா வாய்ப்பை பிடிக்க விளம்பரம் தேடும் முயற்சியாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார் என்று கனகாவை விமர்சித்தனர்.
கனகா
இதற்கு விளக்கம் அளித்து கனகா வெளியிட்டுள்ள இன்னொரு வீடியோவில், “நான் சினிமாவில் நடிக்க விளம்பரம் தேடி வீடியோ வெளியிடவில்லை. சினிமாவை பற்றி இதுவரை எதுவும்
கற்றுக்கொள்ளாமல் இருந்த நான் புதிதாக கற்கலாமா என்று யோசிப்பதாக தெரிவித்து இருந்தேன். உடனே பலரும் நான் விளம்பரத்துக்காகவும், சினிமா வாய்ப்புக்காகவும் வீடியோவை
வெளியிட்டு இருப்பதாக விமர்சிக்கிறார்கள். உங்களுடன் பேசவே வீடியோ வெளியிட்டேன்” என்று கூறி உள்ளார்.
ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்ற ஷங்கர் மகள்
ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்ற ஷங்கர் மகள்
விருமன்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமாகும் அதிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்ற ஷங்கர் மகள்
அதிதி ஷங்கர், ரஜினிகாந்த்
இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி, தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். இவர் தமிழில் நடிக்கும் முதல் படம் ‘விருமன்’. இப்படத்தை நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம்
மூலம் தயாரிக்கிறார். மருது, கொம்பன் போன்ற படங்களை இயக்கி பிரபலமான முத்தையா இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நடிகை அதிதி, கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடந்தது. இப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகும்
அதிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், நடிகர் ரஜினிகாந்த், அதிதியை நேரில் அழைத்து வாழ்த்தி உள்ளார்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற நடிகை அதிதி,
அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இலங்கைக்கு விதிக்க பட்ட தடைகள் நீக்கம்
இலங்கைக்கு விதிக்க பட்ட தடைகள் நீக்கம்
இலங்கை அரசுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் விதித்த தடைகள் நீக்க பட்டுள்ளன ,
இந்த தடை நீக்கத்தை அடுத்து இலங்கை உள்ளிட்ட 15 நாடுகளை சேர்ந்த பயணிகள்; குறித்த நாட்டுக்கு பயணிக்கலாம் என அறிவிக்க பட்டுள்ளது
யாழில் மருத்துவ பீட மாணவி சடலமாக மீட்பு
யாழில் மருத்துவ பீட மாணவி சடலமாக மீட்பு
யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி ஒருவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்..
மருத்துவ பீடத்தை சேர்ந்த சாருகா என்ற முதலாமாண்டு மாணவி ஒருவரே நேற்று மாலை இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
கற்றல் சுமை காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அவருடைய மரணத்துக்கான காரணம் இதுவரை உறுதியாக தெரியவரவில்லை.
சுன்னாகத்தினைச் சேர்ந்த குறித்த மாணவி உடுவில் மகளிர் கல்லூரியில் முதன்மையான மாணவியாக திகழ்ந்துள்ளார்.
குறித்த கல்லூரியில் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் மருத்துவத் துறைக்குத் தெரிவாகி பாடசாலைக்கு பெருமை சேர்த்தவர் என்றும் அண்மையில் வெளியாகிய பல்கலைக்கழக பரீட்சை
முடிவுகளிலும் நிறைவான புள்ளிகளைப் பெற்றிருந்தவர் என்றும் நெருக்கமான மருத்துவப்பீட மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்..
இலங்கையில் உணவு நெருக்கடிக்கு இடமில்லை
இலங்கையில் உணவு நெருக்கடிக்கு இடமில்லை
கொவிட் 19 வைரஸ் தொற்று பரவலினால் உலக நாடுகளைப் போன்று இலங்கையும் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது.
இலங்கையும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள போதிலும் இந்த வருட இறுதியில் 4 தசம் 5 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகத்தை எதிர்பார்ப்பதாக பிரதி நிதி அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
பிபிசி உலக சேவையுடன் இடம்பெற்ற நேர்காணலின் போது இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இது பற்றி மேலும் தெரிவிக்கையில், போதிய அளவிலான அத்தியாவசியப் பொருட்கள்
களஞ்சியங்களில் காணப்படுகின்றன இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பொருட்களை பதுக்கும்
நடவடிக்கைகளில் சில வர்த்தகர்கள் ஈடுபட்டார்கள். ஆனால் இவ்வாறான முயற்சிகளை தடுக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் ராஜாங்க அமைச்சர் கூறினார்.
அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பில் உள்ளதாக அரசாங்கத்திற்கு உத்தரவாதத்தை வழங்க முடியும் என்றும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்
மின்தகன மயானம் அமைப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்
மின்தகன மயானம் அமைப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் பிரதேச சபையில் நேற்று நடைபெற்றது!
நாளுக்கு நாள் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் கிளிநொச்சியில் மின்தகன மயானம் அமைப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல் நேற்று
பிற்பகல் வேளையில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றது
குறித்த மயானத்தை அமைக்க 25 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. அந்தத் தொகையில் ஒரு கோடி ரூபாவை (10 மில்லியன்) கிளிநொச்சியில் உள்ள வர்த்தகர் ஒருவர் வழங்க முன்வந்துள்ளார். புலம்பெயர் அமைப்பு ஒன்றும் உதவ முன்வந்துள்ளது.
குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வைத்தியகலாநிதி மு. சிறீதர், அதிபர்கள் ஆசிரியர்கள் கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர் .
மின்மையானம் அமைப்பதற்கான ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.
தலைவராக கிளிநொச்சி மாவட்ட முன்னாள் வர்த்தக சங்கத்தின் தலைவர் நவரட்ணராஜா செயலாளராக ஆசிரியரும் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினருமான சத்தியானந்தன்
பொருளாளராக அதிபர் விக்கினராஜா உபதலைவராக வர்த்தக சங்கத்தின் பொருளாளர் ஆனந்த வடிவேல் உபசெயலாளராக ரவி அவர்களும் உறுப்பினர்களாக வைத்தியகலாநிதி மு. சிறீதர்
கிளிநொச்சி சேவைச் சந்தையின் தலைவர் இரத்தினமணி மற்றும் ரவீந்திரன் ஆகியோரும் அக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.



கொரோனா மரண எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்தது
கொரோனா மரண எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்தது
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 157 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த அனைவரும் நேற்றைய தினம் (10) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,152 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 482,360 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 411,233 ஆக அதிகரித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவை மீறிய 669 பேர் கைது
ஊரடங்கு உத்தரவை மீறிய 669 பேர் கைது
இலங்கையில் பரவி வரும் கொரனோ நிகழ்வை அடுத்து பலத்த தடைகள் நடைமுறை படுத்த பட்டுள்ளன
அத தடைகளை மீறி செயல்பட்ட 669 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
தொடந்து தடைகள் விதிக்க பட்டுள்ளது
லண்டன் மிச்சம் திருமண வீட்டில் ஒலித்த புலிகள் பாட்டு – வீடியோ
லண்டன் மிச்சம் திருமண வீட்டில் ஒலித்த புலிகள் பாட்டு – வீடியோ
லண்டன் மிச்சம் பகுதியில் நேற்று 10 ஆம் திகதி இடம்பெற்ற தமிழர்கள் திருமண நிகழ்வு ஒன்றில்
தமிழீழ விடுதலை புலிகளின் பாடல்
(தமிழீழத்தின் அழகு தனி அழகு ) ஒன்று மிக கம்பீரமாக முழங்கியது
விடுதலை புலிகளின் செயல்பாடுகள் ,அவர் தம் எழுச்சி பாடல்களை முடங்க வைத்து ,எழுச்சிகளிற்கு தடை விதித்து வரும் சிங்கள அரச பயங்கவாதத்தினால் செயல் பாடுகள் முடக்கிவிட பட்டுள்ள நிலையிலும் ,
சில ஈழ எழுச்சி கொண்ட தமிழ் இசை பாடகர்கள் துணிவுடன் விடுதலை புலிகள் ,தமிழ் எழுச்சி பாடல்களைப் பாடி வருவது மிக பாராட்டிட வேண்டியதும் ,இவ் வாறானவர்களை நாம் ஊக்குவிக்க வேண்டிய தேவைபாடும் சமகாலத்தில் உள்ளது
ஐயா செல்லப்ப அவர்கள் உருகி உருகி பாடிய அந்த பாடலை அதே சுருதியுடன் இந்த பாடகர் திறனோடும்,உணர்வுடனும் பாடி அசத்தியுள்ளது எம்மை மெய் சிலிர்க்க வைத்துள்ளது ,மேலும் இந்த இசை ஒலிக்க
பின் புலத்தில் உதவிய ஒலி அமைப்பாளருக்கும் இவ்வேளையில் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம்
தொடரட்டும் உங்கள் பணி இவ்வாறான இசை பாடல்களை நமக்கு தொடராக அனுப்பி வையுங்கள் என்றும் பிரசுரிக்க தயங்க மாட்டோம்
- நிருபர் வன்னி மைந்தன் –
தமிழீழத்தின் அழகு தனி அழகு video click here
ஐ.நாவின் பொதுச் சபைக்கு கோட்டா பயணம்
ஐ.நாவின் பொதுச் சபைக்கு கோட்டா பயணம்
அமெரிக்க, நியூயோர்க்கில் செப்டெம்பர்21ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள்
சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முதன்முறையாக கலந்துகொள்ளவுள்ளார்.
ஜனாதிபதியாக தெரிவானதன் பின்னர், சர்வதேச கூட்டத் தொடர் ஒன்றில் பங்கேற்கும் முதல்
சந்தர்ப்பமும் இதுவாகும். பல நாடுகளின் அரச தலைவர்களுடன், இரு தரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்
அதன்போது, பொருளாதாரம், கல்வி, விவசாயம் உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில்
கலந்துரையாடுவர். ஜனாதிபதியுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர்
ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொழம்பகே ஆகியோரும் செல்வர்.
ஜனாதிபதியுடன் ஜனாதிபதியின் பாரியார் அயோமா ராஜபக்ஷவும் செல்லவுள்ளார். அவர்,
தனது சொந்தச் செலவில் இந்த விஜயத்தில் கலந்துகொள்கிறார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு
அறிவித்துள்ளது.
வௌிநாட்டு கப்பல் சுற்றிவளைப்பு
வௌிநாட்டு கப்பல் சுற்றிவளைப்பு
ஹெரோயின் போதைப்பொருள் தொகையை இலங்கைக்கு கடத்தி வந்த வௌிநாட்டு கப்பல் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு குறித்த கப்பல் சுற்றிவளைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ இதை தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு தெற்கு கடலில் இலங்கை கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த போதைப்பொருள் தொகை மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதன்போது கப்பலில் இருந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கப்பல் மற்றும் ஹெரோயின் தொகை இலங்கை கடற்பரப்புக்கு கடற்படையால் கொண்டு வரப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் குற்றங்களையும் விசாரிக்க வேண்டும்-சுமந்திரன்
விடுதலைப் புலிகளின் குற்றங்களையும் விசாரிக்க வேண்டும்-சுமந்திரன்
தமிழீழ விடுதலைப் புலிகளின் குற்றங்களையும் விசாரிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் ஐ.நா அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பவில்லை என தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார் .
இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட அலுவலகத்தில் இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையில் தமிழ் மக்கள் மீது அரசினால் மேற்கொள்ளப்பட்ட போர் குற்றங்களுக்கு நீதி கோரி உலக நாடுகளுடன், கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானத்தை கொண்டு வந்திருக்கின்றோம் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் எடுக்கப்பட்ட முயற்சியின் பயனாக கிடைத்தது அது அனைவரும் அறிந்த விடயமாகும்
ஆனால், தற்பொழுது இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக ஒரு விஷமப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது புலிகளால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களையும் விசாரிக்க கோரி சம்பந்தனால் ஆவணம் ஒன்று அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.. அது முற்றிலும் ஒரு பொய்யான விடயம்.
இந்த விடயத்தில் ஊடகங்களும் பொறுப்புணர்வோடு செயற்பட வேண்டும் அதாவது ஒரு விடயத்தை செய்தியாக பிரசுரிக்கும் போது அதனை ஆராய்ந்த பின் செய்தியாக பிரசுரிக்க
வேண்டும் அத்தோடு தற்பொழுது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது தமிழரசுக்கட்சி தனியாகச் செயற்படப்போகின்றது கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செயற்படுகிறது என அவ்வாறான ஒரு சம்பவமும் இடம் பெறாது.
இலங்கை தமிழரசுக் கட்சியானது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுடன் இணைந்து எந்த காலத்திலும் செயற்படுமே தவிர ஒருபோதும் தனித்து செயற்படுவதற்கு தயாராக இல்லை என்றார்.
அதே போல எந்தளவுக்கு இணைந்து செயல்பட முடியுமோ அந்தளவுக்கு இணைந்து செயற்படுகின்றோம் அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய
கட்சிகள் எம்முடன் நல்ல உறவாக உள்ளார்கள். அவர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனேயே இணைந்து செயற்படுகின்றோம் என கூறுகின்றார்கள்
நாங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒற்றுமையாக செயற்படுகின்றோம் எனினும் , கூட்டாகச் செயற்படும் போது பல பிரச்சனைகள், முரண்பாடுகள் ஏற்படும். ஆனால், தமிழ்
மக்களுக்காக பயணிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரிந்தோ அல்லது தனித்தோ செயற்படவில்லை என்றார்.
4 தினங்களுக்கு முன்னர் காணாமல் போன பெண்னொருவர் மீட்பு
4 தினங்களுக்கு முன்னர் காணாமல் போன பெண்னொருவர் மீட்பு
நுவரெலியா டின்சின் தோட்டத்தின் வனப்பகுதிக்குள் தனது தயாருடன் ஞாயிற்றுக்கிழமை (05) விறகு சேகரிக்கச் சென்ற வேளையில் காணாமல் போயிருந்த ஜே.பாலன் காத்முனா தரணி என்னும் (25) வயது யுவதியை தேடும் பணிகளை இரண்டு அதிகாரிகள் மற்றும் 22 இராணுவ
சிப்பாய்களை அடங்கிய 3 வது இலங்கை இராணுவ சிங்கப்படையணியினரால் பொலிஸார் மற்றும் தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து ஆரம்பித்திருந்த நிலையில் குறித்த யுதவியை
நேற்று முன்தினம் (9) மாலை 6.30 மணியளவில் மீட்டு உடனடியாக நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அடர்ந்த வனப்பகுதிக்குள் மோசமான வானிலை நிலவிய போதிலும் தேடுதல் பணிகளை முன்னெடுத்த குழுவினர் வனத்திற்குள் முற்றாக வரண்டு கிடக்கும் பகுதியொன்றுக்குள் இருந்து
குறித்த யுவதியை மீட்டுள்ளனர். 535 கே, பம்பரகல, அளுத்கொலனிய, சாந்திபுர என்னும் முகவரியில் வசிக்கும் குறித்த யுவதி தனது தாயுடன் விறகு சேகரிக்க அந்தப் பகுதிக்குச்
சென்றிருந்த நிலையில் அவர் வீட்டிற்கு வந்து சேரவில்லை என்பதால் அவரது தாயார் மகள் இருக்கும் இடத்தை கண்டறிவதற்கான உதவிகளை நாடடியிருந்தார்.
தகவல் கிடைத்தவுடன் சில மணிநேரங்களுக்குள் மேற்படி ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. கடந்த நான்கு தினங்களாக தேடுதல் பணிகளில் ஈடுபட்டிருந்த தேடுதல்
குழுவினருக்கு தோட்ட தொழிலாளர்களும் ஒத்துழைப்புடன் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டதோடு தற்பொழுது நுவரெலியா பொலிஸாரால் விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டன.
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி, 11 வது படைப்பிரிவின் தளபதி மற்றும் 112 வது
பரிகேட் தளபதியின் வழிகாட்டலுக்கமைய 3 வது இலங்கை இராணுவ சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரியின் தலைமையில் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.








