பாடசாலைகளை திறப்பது தொடர்பில் தீர்மானம்
பாடசாலைகளை திறப்பது தொடர்பில் தீர்மானம்
கிராமப்புறங்களில் உள்ள 100க்கும் குறைந்தளவான மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட 3,000 பாடசாலைகளை முதல் கட்டமாக திறப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் காணொளி தொழில்நுடபம் ஊடாக நேற்று நடைபெற்ற
கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தில் இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது
அதன்படி, கிராமப்புறங்களில் உள்ள 100க்கும் குறைந்தளவான மாணவர்கள் எண்ணிக்கையை
கொண்ட 3,000 பாடசாலைகளை முதல் கட்டமாக திறப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்கான பொறுப்பை சுகாதார மற்றும் கல்விதுறைசார் அதிகாரிகளைக் கொண்ட தொழிநுட்ப குழு ஒன்றிடம் ஒப்படைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
2020 மற்றும் 2021 ஆகிய வருடங்களில் பாடசாலைகள் மூடப்பட்டதால், சுமார் 7 இலட்சம் மாணவர்களுக்கு ஆரம்பக் கல்வியும், பல மாணவர்களுக்கு முன்பிள்ளை பருவ கல்வியும்
கிடைக்காமல் போனதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது
ஈராக்கில் இருந்த்து கட்டம் கட்டமாக விலக்க படும் அமெரிக்கா இராணுவம்
ஈராக்கில் இருந்த்து கட்டம் கட்டமாக விலக்க படும் அமெரிக்கா இராணுவம்
ஈராக்கிய நாட்டில் இருந்து அமெரிக்கா படைகள் கட்டம் கட்டமாக விலக்க படுகிறது
இதற்கேற்ப கடந்த நகர்வில் பலநூறு இராணுவத்தினர் அங்கிருந்து அகற்ற பட்டுள்ளதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன
ஈரானில் கொரனோ தாண்டவம் 465 பேர் மரணம்
ஈரானில் கொரனோ தாண்டவம் 465 பேர் மரணம்
உலகளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
பல்லாயிரம் பேர் மரணித்தனர்
ஈரானில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 465 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
இரு பெண்களை கடித்து குதறிய நாய்
இரு பெண்களை கடித்து குதறிய நாய்
அவுஸ்ரேலியா தெற்கு சிட்னி பகுதியில் இரு பெண்களை நாய் ஒன்று கடித்து குதறியது
மேற்படி நாயின் கடி காயங்களுக்கு உள்ளான அவர்கள் , அவசர உலங்கு வானூர்தி மூலம் அழைக்க பட்டு மருத்துவமனைக்கு மாற்றம் பெற்றனர்
குறித்த சம்பவம் தொடர்ப்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
நார்வே தூதரகத்தைக் கைப்பற்றிய பின்னர் தலிபான் செய்த அட்டூழியம்
நார்வே தூதரகத்தைக் கைப்பற்றிய பின்னர் தலிபான் செய்த அட்டூழியம்
தலிபான், வெளிநாடுகளின் தூதர கட்டிடங்களை எதுவும் செய்ய மாட்டோம் என்று உறுதியளித்திருந்தனர். ஆனால் அவர்களின் செயல்பாடு அதற்கு மாறாக உள்ளது.
காபூலில் உள்ள நார்வே தூதரகத்தைக் கைப்பற்றிய பின்னர் தலிபான் செய்த அட்டூழியம்
நார்வே தூதரகத்தில் தலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது தலிபான் அமைப்பு. தற்போது அரசமைப்பதில் தலிபான் அமைப்பு தீவிரம் காட்டி வருகிறது.
அதே நேரத்தில் தலிபான்களின் பழமைவாத கொள்கைகளாலும் நடவடிக்கைகளாலும் கொதிப்பில் உள்ள ஒரு பகுதி மக்கள், அவர்களுக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதனால் ஆப்கானிஸ்தானில் அரசியல் ஸ்திரமற்றத் தன்மை நிலவி வருகிறது.
இந்நிலையில் காபூலில் இருக்கும் நார்வே நாட்டுத் தூதரகத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான், பல அட்டூழியங்களை அங்கு நிகழ்த்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Taliban has now taken over the Norwegian Embassy in Kabul. Say they will return it to us later. But first wine bottles are to be smashed and childrens’ books destroyed. Guns apparently less dangerous. Foto: Aftenposten, Norway
— Ambassador Sigvald Hauge (@NorwayAmbIran) September 8, 2021
இது குறித்து ஈரான் நாட்டுக்கான நார்வே தூதர் சிக்வால்டு ஹாக், ‘தலிபான்கள், தற்போது காபூலில் இருக்கும் நார்வே தூதரகத்தைக் கைப்பற்றியுள்ளனர். எங்கள் நாட்டுத் தூதரகத்தை மீண்டும் ஒப்படைப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். அதே நேரத்தில் அவர்கள் அங்கிருக்கும் ஒயின் பாட்டில்களை உடைத்துள்ளனர். சிறுவர்களுக்கான புத்தகங்களை அழித்துள்ளனர். அவர்களைப் பொறுத்தவரை துப்பாக்கிகள் மிக ஆபத்துக் குறைவானவை போல’ என்று வருத்தத்துடன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் தலிபான், வெளிநாடுகளின் தூதர கட்டிடங்களை எதுவும் செய்ய மாட்டோம் என்று உறுதியளித்திருந்தனர். ஆனால் அவர்களின் செயல்பாடு அதற்கு மாறாக உள்ளது.
கவர்ச்சி… இணையத்தை தெறிக்கவிட்ட சமந்தா
கவர்ச்சி… இணையத்தை தெறிக்கவிட்ட சமந்தா
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதுவரை காட்டாத கவர்ச்சி… இணையத்தை தெறிக்கவிட்ட சமந்தா
சமந்தா
முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், விஷால் உள்ளிட்ட பலருடன் சேர்ந்து நடித்தவர் சமந்தா. தற்போது இவர் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில்
நடித்து வருகிறார். மேலும், விக்னேஷ் சிவனின் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ மற்றும் தெலுங்கு படத்திலும் சமந்தா நடித்து வருகிறார்.
சமந்தா
சமூக வலைத்தளத்தில் சமந்தா வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும். இந்நிலையில், சமந்தாவின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் சமூக
வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் சமந்தா இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியான புகைப்படங்கள் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
சங்கர் பக்கம் இனிமேல் தலை வைத்து படுக்க மாட்டேன் – வடிவேலு அதிரடி
சங்கர் பக்கம் இனிமேல் தலை வைத்து படுக்க மாட்டேன் – வடிவேலு அதிரடி
சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் சங்கர் பற்றி நடிகர் வடிவேலு பேசி இருக்கிறார்.
சங்கர் பக்கம் இனிமேல் தலை வைத்து படுக்க மாட்டேன் – வடிவேலு அதிரடி
வடிவேலு – சங்கர்
நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் வடிவேலு பேசும்போது, நான் நடிக்காமல் இருந்த நேரத்தில், கொரோனா வந்து என் பிரச்சனையை
சாதாரணமாக ஆக்கிவிட்டது. அந்த நேரத்தில் மக்களுக்கு நான் நடித்த காமெடி காட்சிகள் கைகொடுத்தது.
தொடர்ந்து நான்கு படத்தில் நடிக்க இருக்கிறேன். எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் சுபாஷ் கரண், சபாஷ் கரணாக மாறிவிட்டார். இந்த நேரத்தில் கடவுளுக்கு நன்றி, மக்களுக்கு நன்றி. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி.
வடிவேலு
எனக்கு எண்டே கிடையாது. நான் கால் வச்ச இடத்தில் எல்லாம் கண்ணிவெடி வச்சாங்க.. எல்லாத்திலயும் தப்பித்து விட்டேன். என் மீது வந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் பொய்.
இனிமேல் சங்கர் தயாரிப்பில், இயக்கத்தில் நடிக்க மாட்டேன். அதுபோல் வரலாற்று படத்தில் நடிக்க மாட்டேன், என்றார்.
நடிகர் விவேக் மரணம் -விசாரணை நடத்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
நடிகர் விவேக் மரணம் -விசாரணை நடத்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
நடிகர் விவேக்கிற்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட விவகாரத்தில் உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை என்று புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
நடிகர் விவேக் மரணம் -விசாரணை நடத்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
நடிகர் விவேக்
நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்தது தொடர்பாக விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன், தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு புகார் மனு அனுப்பியிருந்தார்.
நடிகர் விவேக்கிற்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட விவகாரத்தில் உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை
என்றும், எனவே இது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்டுகொண்டார்.
இந்த புகார் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், சமூக ஆர்வலரின் புகார் மனு மீது 8 வார காலத்திற்குள் விசாரணை நடத்தி, அது குறித்த
அறிக்கையை புகார்தாரருக்கு தெரிவிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையம் கூறி உள்ளது.
சிவஞானம் சிறீதரன் அவர்களுடைய இன்றைய ஊடக சந்திப்பு video
சிவஞானம் சிறீதரன் அவர்களுடைய இன்றைய ஊடக சந்திப்பு video
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுடைய ஊடக சந்திப்பு
இன்றைய தினம்(10/09/21) பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகமான அறிவகத்தில் காலை 10 மணிக்கு நடைபெற்றது.
நடிகர் சௌந்தரராஜா வீட்டில் விசேஷம்
நடிகர் சௌந்தரராஜா வீட்டில் விசேஷம்
நடிகர் சௌந்தரராஜா தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘இடி முழக்கம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் சௌந்தரராஜா வீட்டில் விசேஷம்… குவியும் வாழ்த்துக்கள்
சௌந்தரராஜா
தமிழ் சினிமாவில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருபவர் சௌந்தரராஜா. இவர் சுந்தர பாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், ஜிகர்தண்டா, தெறி, பிகில், ஜகமே தந்திரம் போன்ற படங்களில் கவனிக்க வைக்கும் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘இடி முழக்கம்’ என்ற படத்தில் சௌந்தரராஜா நடித்து வருகிறார்.
நடிகர் சௌந்தரராஜா, தமன்னா என்பவரை 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது தமன்னா கர்ப்பமாக இருக்கிறார்.
இந்நிலையில் சௌந்தரராஜா வீட்டில் தமன்னாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி எளிமையாக நடந்துள்ளது.
இதில் உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்துக் கொண்டு சௌந்தரராஜா – தமன்னா தம்பதியை வாழ்த்தி இருக்கிறார்கள்.
தங்க செயின் பரிசளித்து வாள்வீச்சு வீராங்கனையை பாராட்டிய சசிகுமார்
தங்க செயின் பரிசளித்து வாள்வீச்சு வீராங்கனையை பாராட்டிய சசிகுமார்
வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவியை நடிகர் சசிகுமார் சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை இயக்குனர் இரா.சரவணன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தங்க செயின் பரிசளித்து வாள்வீச்சு வீராங்கனையை பாராட்டிய சசிகுமார்
சசிகுமார், பவானி தேவி
தமிழகத்தை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி, சமீபத்தில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு சில புள்ளிகள் வித்தியாசத்தில் பதக்க வாய்ப்பை இழந்தார்.
இருப்பினும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை அழைத்து பாராட்டினார்.
இந்நிலையில் நடிகரும், இயக்குனருமான சசிகுமார், வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவியை நேரில் சந்தித்து அவருக்கு தங்க செயின் அணிவித்து பாராட்டி உள்ளார். இந்த தகவலை
கத்துக்குட்டி படத்தின் இயக்குனர் இரா.சரவணன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது: “வென்றால் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவோம்; தோற்றால், பார்க்கக்கூட மாட்டோம். எல்லோர் இயல்பும் இதுதான் என்றாலும்,
நல்லோர் இயல்பு வேறல்லவா? ஒலிம்பிக் வாள் சண்டையில் பதக்கம் இழந்த பவானி தேவியை சந்தித்து, தங்க செயின் அளித்து வாழ்த்தி இருக்கிறார் நடிகர் சசிகுமார். நல்லமனம் வாழ்க” என்று குறிப்பிட்டுள்ளார்.
சந்திரமுகி 2-ம் பாகத்தில் வடிவேலு
சந்திரமுகி 2-ம் பாகத்தில் வடிவேலு
சந்திரமுகி படத்தின் முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகத்திலும் காமெடி முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது.
சந்திரமுகி 2-ம் பாகத்தில் வடிவேலு?
வடிவேலு
ரஜினியின் ‘சந்திரமுகி’ 2005–ம் ஆண்டு திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பி.வாசு இயக்கிய இந்த படத்தில் ரஜினியுடன் பிரபு, ஜோதிகா, நாசர், வடிவேலு, நயன்தாரா, மாளவிகா
உள்பட பலர் நடித்திருந்தனர். இதில் ரஜினியுடன் வடிவேலு இணைந்து நடித்த காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இயக்குனர் பி.வாசு அடுத்ததாக இயக்க உள்ள சந்திரமுகி படத்தின் 2-ம் பாகத்திலும் வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. முதல் பாகத்தை போல் இரண்டாம்
பாகத்திலும் காமெடி முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடிவேலு
சந்திரமுகி படத்தின் 2-ம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ்
நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற டிசம்பர் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம்.
உத்தரகாண்ட் புதிய ஆளுநராக குர்மீத் சிங் நியமனம்
உத்தரகாண்ட் புதிய ஆளுநராக குர்மீத் சிங் நியமனம்
உத்தரகாண்டின் ஆளுநராக பதவி வகித்து வந்த பேபி ராணி மவுரியா தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
உத்தரகாண்ட் புதிய ஆளுநராக குர்மீத் சிங் நியமனம்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல் மந்திரி புஷ்கர்சிங் தாமி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இந்த மாநிலத்தின் 7-வது ஆளுநராக 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ம் தேதி முதல்
பதவி வகித்து வந்தவர் பேபி ராணி மவுரியா (65). இவர் நேற்றுமுன்தினம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அவர் அனுப்பி வைத்தார்.
இவர் மார்கரெட் ஆல்வாவுக்கு பின்னர் அந்த மாநிலத்தில் பதவி வகித்த 2-வது பெண் ஆளுநர் ஆவார். இன்னும் 2 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ள நிலையில், பேபி ராணி மவுரியா பதவி விலகி இருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ள உத்தரவில், உத்தரகாண்டின் ஆளுநராக ஓய்வுபெற்ற லெப்டினென்ட் ஜெனரல் குர்மீத் சிங் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என ராஷ்டிரபதி பவன் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், அசாம் ஆளுநராக பதவி வகித்து வரும் ஜகதீஷ் முகி கூடுதலாக, நாகாலாந்து ஆளுநர் பொறுப்பினை ஏற்க உள்ளார்.
நாகாலாந்து ஆளுநராக செயல்பட்டு வந்த ஆர்.என். ரவி தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் விமானப்படை விமானங்களை தரையிறக்கி ஒத்திகை
தேசிய நெடுஞ்சாலையில் விமானப்படை விமானங்களை தரையிறக்கி ஒத்திகை
சுகோய்-30எம்கேஐ போர் விமானம், ஏஎன்-32 ராணுவ போக்குவரத்து விமானம், எம்ஐ-17வி5 ஹெலிகாப்டர் ஆகியவற்றையும் நெடுஞ்சாலையில் வெற்றிகரமாக தரையிறக்கி சோதனை செய்தனர்.
எல்லை அருகே இறங்குதளம்… தேசிய நெடுஞ்சாலையில் விமானப்படை விமானங்களை தரையிறக்கி ஒத்திகை
அவசரகால இறங்குதளத்தில் தரையிறங்கும் போர் விமானம்
அவசர காலங்களில் இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் மற்றும் இதர விமானங்களை தரையிறக்கும் வகையில், ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலை
மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தேசிய நெடுஞ்சாலை-925ல் சத்தா-காந்தவ் இடையிலான 3 கிமீ பகுதியை அவசர காலங்களில் விமானங்களை தரையிறக்கும் பகுதியாக மாற்றி உள்ளது.
பாகிஸ்தான் எல்லை அருகே அமைந்துள்ள இந்த இறங்குதளத்தை மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின்
கட்கரி ஆகியோர் இன்று திறந்து வைத்தனர். அதன்பின்னர், மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி மற்றும் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் ஆகியோரை விமானப்படை
விமானத்தில் அமர வைத்து, விமானத்தை அவசரகால இறங்குதளத்தில் தரையிறக்கி ஒத்திகை பார்த்தனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜ்நாத் சிங்
சுகோய்-30எம்கேஐ போர் விமானம், ஏஎன்-32 ராணுவ போக்குவரத்து விமானம், எம்ஐ-17வி5 ஹெலிகாப்டர் ஆகியவற்றையும் நெடுஞ்சாலையில் வெற்றிகரமாக தரையிறக்கி சோதனை
செய்தனர். இதன்மூலம், அந்த நெடுஞ்சாலையானது, துணை ராணுவ விமான தளமாக செயல்படுவதற்கு தயார் நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விமானப்படை
விமானங்களை அவசரமாக தரையிறக்க பயன்படுத்தப்படும், முதல் தேசிய நெடுஞ்சாலை இது என்பது குறிப்பிடத்தக்கது..
இந்நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பார்மரில் உள்ளதைப் போன்று மொத்தம் 20 அவசரகால தரையிறக்கும் வசதிகள் நாடு முழுவதும் உருவாக்கப்படுகின்றன
என்றார். மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் உதவியுடன் பல ஹெலிபேடுகளும் உருவாக்கப்படுவதாக கூறிய ராஜ்நாத் சிங், நமது பாதுகாப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்த இது ஒரு முக்கியமான படியாகும் என்றார்.
‘சர்வதேச எல்லைக்கு அருகில் இதுபோன்ற அவசரகால இறங்கு தளங்களை உருவாக்குவதன் மூலம், நமது நாட்டின் ஒற்றுமை, பன்முகத்தன்மை மற்றும் இறையாண்மையை பாதுகாக்க, என்ன
விலை கொடுத்தாலும் துணிந்து நிற்போம் என்ற செய்தியை வழங்கியுள்ளோம். அவசரகாலத்தில் விமானங்களை தரையிறக்கும் வசதியை உருவாக்குவது மிகுந்த நம்பிக்கையை உருவாக்குகிறது.
போர்க் காலங்களில் மட்டுமல்லாமல் இயற்கை பேரிடர் காலங்களிலும் இது உதவியாக இருக்கும்’ என்றும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.
ஜப்பானில் தற்போது அமலில் இருக்கும் அவசர நிலையானது வரும் 12-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
ஜப்பானில் தற்போது அமலில் இருக்கும் அவசர நிலையானது வரும் 12-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
ஜப்பானில் அவசர நிலை பிரகடனம் செப். 30 வரை நீட்டிப்பு
ஜப்பான் அவசரநிலை
ஜப்பானில் சமீப காலமாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தற்போது அமலில் இருக்கும் அவசர நிலையானது, வரும் 12-ம் தேதியுடன் முடிவடையவிருந்த நிலையில், இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜப்பான் தலைநகர் டோக்கியோ மற்றும் 18 இதர பகுதிகளில் அறிவிக்கப்பட்ட அவசர நிலை பிரகடனம் செப்டம்பர் இறுதி வரை நீட்டித்து அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கடந்த மே மாதம் ஜப்பானின் ஒகினாவா பகுதியில் அறிவிக்கப்பட்ட கொரோனா கால ஊரடங்கு படிப்படியாக பல பகுதிகளுக்கு நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக, ஜப்பான் பிரதமர் கூறுகையில், கொரோனா பாதித்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகவே உள்ளது.
பல மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் காலியாக இல்லை. எனவே, மக்கள் கொரோனா பரவல் கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
உடுப்பிட்டி கிராமத்தில் பதற்றம் – இராணுவம் குவிப்பு
உடுப்பிட்டி கிராமத்தில் பதற்றம் – இராணுவம் குவிப்பு
உடுப்பிட்டி கிராமத்தில் இரண்டு பகுதியினருக்கு இடையே இடம்பெற்று வந்த மோதல் ஊர்ப் பிரச்சினையாக மாறியதையடுத்து பொலிஸாரால் கோரப்பட்டதற்கு அமைய இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதனால் அந்தக் கிராமத்தில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
உடுப்பிட்டி இலகடி மற்றும் வன்னிச்சி அம்மன் கோவில் வேலிந்ந தோட்டம் பகுதியைச் சேர்ந்த இருதரப்பினர் இடையே இடம்பெற்று வந்த மோதல் கடந்த சில நாள்களாக ஊர்ப் பிரச்சினையாக மாறியது.
இந்த மோதலில் சிலர் தலைமறைவாகிய நிலையில் வல்வெட்டித்துறை பொலிஸாரின் அழைப்பின் பேரின் இன்றிரவு இராணுவத்தினர் சுற்றிவளைத்து பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.
அதனால் அந்தக் கிராமத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்-2 நாள் சிசுவுக்கு கொரோனா
யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்-2 நாள் சிசுவுக்கு கொரோனா
யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிறந்து இரண்டு நாட்களேயான சிசுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் கொரோனா தனிமைப்படுத்தல் விடுதியில் பராமரிக்கப்பட்டுவரும் சிசுவுக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை கொரோனா ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அச்சிசுவுக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
புலிகளுக்கு எதிராக விசாரணை: ’தமிழரசு கடிதம்
புலிகளுக்கு எதிராக விசாரணை: ’தமிழரசு கடிதம்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதும் விசாரணையை வலியுறுத்துவதாகக் கூறப்படும் கடிதமொன்றை, எனக்கு தெரிய மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தமிழரசுக் கட்சி சார்ந்து அனுப்பியதாக இல்லை என, வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.
அதை மட்டும் தன்னால் உறுதியாக கூற முடியுமெனவும் அவ்வாறு எழுதினால் தான் அதனை வெளிப்படுத்துவதாகவும், அவர் கூறினார்.
யாழ்ப்பாணத்தில், நேற்று (08) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், தான் தமிழரசு பாரம்பரியத்தில் வந்தவனெனவும் சேம் சைட் கோலடிக்கும் தேவை தனக்கு கிடையாதெனவும் கூறினார்.
எது நியாயமோ, எது சரியோ, அதை யார் செய்தாலும் சரி என்பேன் எனத் தெரிவித்த அவர், அதே பிழை என்றால், பிழை என்று கூறுவதே, தன்னுடைய பொறுப்பெனவும் கூறினார்.
இனி தான் பயப்படமாட்டேன் எனத் தெரிவித்த அவர், இதுவரை தான் அடக்கி வாசித்ததாகவும் இதனால், தன் தலையில் மிளகாய் அரைக்கலாம் என்று சிலர் நினைக்கிறார்கள் எனவும் கூறினார்.
ஒரு சிலரை தாக்குவதாக நினைத்துக்கொண்டு தமிழரசுக் கட்சியை தாக்குகின்றனர் எனத் தெரிவித்த சிவஞானம், ‘தமிழரசுக் கட்சியை ஓரங்கட்ட நினைப்பது பகல் கனவு. எந்த கொம்பனாலும் அதனை அழிக்க முடியாது. பங்காளி கட்சிகள் போகப் போகிறோம் என முடிவெடுத்தால் அதை நாங்கள் தடுக்க முடியாது. ஆனால், அவர்கள் அவ்வாறான முடிவொன்றை எடுக்கமாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன்’ என்றும் கூறினார்.
இதைத் தொடர்ந்து, தமிழரசுக்கட்சி மனித உரிமை ஆணைக்குழுவுக்கு கடிதம் எழுதியது தொடர்பாக, ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போது, ‘என்னை பொறுத்தவரையில் ஊடகச் செய்திகளைப் பார்க்கும் பொழுது, சில செய்திகளில் உண்மை இல்லை என்றே தெரிகிறது’ என பதிலளித்தார்.
இந்தக் கேள்விக்கு தொடர்ந்து பதிலளித்த சிவஞானம் கூறியதாவது,
‘தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதும் விசாரணையை வலியுறுத்துவதாகக் கூறப்படும் கடிதமொன்றை எனக்கு தெரிய மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தமிழரசுக் கட்சி சார்ந்து அனுப்பியதாக இல்லை. அதை மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும். அவ்வாறு எழுதினால் நான் அதனை வெளிப்படுத்துவேன்.
கூட்டமைப்பு தேசிய தலைவரால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். ஆகவே, அது உடைந்து போவதை நான் தனிப்பட்ட முறையில் விரும்பமாட்டேன்’ என்றார்.
நீர் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது – அமைச்சர் வாசுதேவ
நீர் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது – அமைச்சர் வாசுதேவ
சுபீட்சத்தின் தொலைநோக்கு’ கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக 2025 ஆம் ஆண்டளவில் அனைவருக்கும் தூய குடிநீரை வழங்கும் நோக்கில் பல திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நீர் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது.தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள காலத்தில் நீர் கட்டணத்தை செலுத்துவதற்கு சலுகைக் காலத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்றும் அமைச்சர் கூறினார்
2025 ஆம் ஆண்டளவில் அனைவருக்கும் தூய குடிநீர் என்ற தொனிப்பொருளில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த வியத்தை குறிப்பிட்டார்.
நீர் விநியோகிக்கும் விடயத்தை அரசியலாக்க எவருக்கும் இடமளிக்க போவதில்லை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
‘நீரையும், நீர் மூலங்களையும்’ பாதுகாக்கும் வேலைத்திட்டம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் பரிட்சார்த்த செயற்திட்டம் குருவிட்ட பிரதேச செயலக பிரிவில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம்: உலக நாடுகளில் இலங்கை முன்னணியில்
தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம்: உலக நாடுகளில் இலங்கை முன்னணியில்
கொவிட் 19 வைரசு தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தில் உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கை முன்னணியில் இருப்பதாக மூத்த சரவ்தேச ஆய்வாளர் விஜித்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது
பொதுமக்களின் கடமையாகும். கட்சி பேதமின்றி இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அனைவரதும் பொறுப்பாகும் என்றும் அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.












