Posted in இலங்கை செய்திகள்

இலங்கை மத்திய வங்கி ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமனம்

இலங்கை மத்திய வங்கி ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமனம்

2021 செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், ஜனாதிபதி கோட்டாபய

ராஜபக்ஷ அவர்களினால், இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அவர் தனது கடமைகளை, இம்மாதம் 15ஆம் திகதியன்று பொறுப்பேற்கவுள்ளார்.

பிரசித்திபெற்ற பட்டயக் கணக்காளரான அஜித் நிவாட் கப்ரால் அவர்கள், இதற்கு முன்னர் அமைச்சின் செயலாளராகக்

கடமையாற்றியுள்ளதோடு, சுமார் 9 வருடக் காலப்பகுதி வரை, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Posted in Uncategorized

    தலிபான்கள் கட்டு பாட்டு பகுதியில் கார் குண்டு தாக்குதல்

    தலிபான்கள் கட்டு பாட்டு பகுதியில் கார் குண்டு தாக்குதல்

    ஆப்கானிஸ்தான் Kunduz மாநில பகுதியில் இடம் பெற்ற கார் குண்டு தாக்குதலில் சிக்கி
    நால்வர் பலியாகியுள்ளனர்

    மேலு பல டசின் பேர் படுகாயமடைந்துள்ளனர்

    குறித்த நாடு முழுவதும் தலிபான்கள் வசம் வீழ்ந்துள்ள நிலையில் இந்த தாக்குதல்கள் தற்போது அதிகரித்து வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

      Posted in Uncategorized

      போலீசாரை போட்டு தாக்கிய வாலிபன் – முதல்ல இதை பாருங்க video

      போலீசாரை போட்டு தாக்கிய வாலிபன் – முதல்ல இதை பாருங்க video

      அவுஸ்ரேலியா சிட்னி Jacobs Street in Bankstown. பகுதியில் ஆண் ,பெண் அடங்கிய மூன்று காவல்துறை ஊழியர்கள் மீது நபர் ஒருவர் திடீர் தாக்குதலை நடத்தினர் ,மேற்படி தாக்குதல்

      காட்சியை நபர் ஒருவர் படம் பிடித்து வெளியிட்ட நிலையில் அது தற்போது சமூக வலைத்தளங்கள் முதல் சர்வதேச ஊடகங்கள் வரை வைரலாகி வருகிறது

      மேற்படி தாக்குதலை நடத்திய ஆப்பிரிக்கா நாநாட்டை சேர்ந்த நபர் கைது செய்ய பட்டுள்ளார்

      பலத்த அடிகாயங்களுக்கு உள்ளான் மூன்று காவல்துறை சிப்பாய்களும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

      click here full video

      Posted in உலக செய்திகள்

      பற்றி எரிந்த வீடு – கருகி இறந்த 5 உயிர்கள்

      பற்றி எரிந்த வீடு – கருகி இறந்த 5 உயிர்கள்

      அமெரிக்கா northern Ohio பகுதியில் திடீரென வீடு ஒன்று தீ பற்றி எரிந்துள்ளது ,
      இதன் பொழுது அந்த வீட்டுக்குள் இருந்த ஐவர் உடல் கருகி பலியாகினர் ,

      மேலும் நான்கு
      சிறுவர்கள் அதி தீ காயங்களுக்கு உள்ளான நிலையியல் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

      மேற்படி தீ சம்பவம் தொடரப்பிலான தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

        Posted in மருத்துவம்

        மசாஜ் செய்துகொள்ளும் முறைகள்

        மசாஜ் செய்துகொள்ளும் முறைகள்

        அன்றாட பணிகளுக்கு மத்தியில் சுய மசாஜ் செய்து கொள்வதன் மூலம் மன அழுத்தத்தை 50 சதவீதம் வரை குறைக்க முடியும் என்று புதிய ஆய்வு கூறுகிறது.

        இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

        மசாஜ் செய்வதற்கு அதற்குரிய மையங்களைத்தேடி செல்லவேண்டியதில்லை. ஒவ்வொருவரும் சுயமாகவே செய்துகொள்ளலாம். அதன் மூலம் வலி, மன அழுத்தம், சோர்வு போன்றவற்றை

        நீக்கலாம். அன்றாட பணிகளுக்கு மத்தியில் சுய மசாஜ் செய்து கொள்வதன் மூலம் மன அழுத்தத்தை 50 சதவீதம் வரை குறைக்க முடியும் என்று புதிய ஆய்வு கூறுகிறது. மசாஜ் செய்வது

        ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். நரம்புகளை வலுப்படுத்தும். தசை இறுக்கத்தை குறைக்கும். தொடர்ந்து மசாஜ் செய்து வந்தால் ரத்த வெள்ளைஅணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் பெருகும்.

        சுய மசாஜ் செய்துகொள்ளும் முறைகள்:

        கண் மசாஜ்: லேப்டாப், கணினியில் அமர்ந்தபடி தொடர்ச்சியாக வேலை செய்யும்போது கண்களுக்கு அழுத்தம் உண்டாகும். காலப்போக்கில் கண் பார்வை பலவீனமடையும்.

        இதனால் கண்களுக்கு மசாஜ் செய்வது நல்லது. உள்ளங்கைகளை நன்றாக தேய்த்து மசாஜ் செய்ய

        வேண்டும். சிறிதளவு வெப்பம் உண்டானதும் கண்களில் ஒற்றியபடி சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். அப்படி செய்தால் கண்களில் கதகதப்பை உணரலாம்.

        மார்பு மசாஜ்: இரு கைகளையும் மார்புக்கு அருகே எதிரெதிரே வைத்தபடி தோள்பட்டையில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

        மார்பிலும் மென்மையாக மசாஜ் செய்யலாம். அப்படி மசாஜ் செய்வது மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்க உதவும். மன அமைதியை உணரலாம்.

        வயிறு மசாஜ்: சாப்பிட்டு முடித்த பிறகு கைவிரல்களை வயிற்றில் மேல் பகுதியில் வைத்தபடி கடிகார சுழற்சியை போல வட்ட வடிவில் வயிற்று பகுதியை வருடி மசாஜ் செய்ய வேண்டும்.

        அப்படி மசாஜ் செய்யும்போது சாப்பிட்ட உணவு அதே திசையில் சுழன்று குடலுக்கு இதமளிக்கும். அதனால் செரிமானம் எளிதாக நடைபெறும்.

        கை மசாஜ்: காலை கடன்களை முடித்த பிறகு கிரீம் அல்லது லோஷன் தடவி கைகளை நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும். பின்பு விரல்களை கொண்டு உள்ளங்கையில் நன்றாக தேய்த்து மசாஜ்

        மசாஜ் செய்துகொள்ளும் முறைகள்

        செய்ய வேண்டும். வட்ட வடிவமான இயக்கத்தில் மசாஜை தொடர வேண்டும். கட்டை விரலை

        மட்டுமே பயன்படுத்தியும் மசாஜ் செய்யலாம். இப்படி மசாஜ் செய்வது சரும அமைப்பை மேம்படுத்தும். ரத்த ஓட்டத்தையும் துரிதப்படுத்தும்.

        கழுத்து மசாஜ்: நாற்காலியில் அமர்ந்து வேலை செய்பவர்கள் கழுத்துக்கு பின் பகுதியில் கைவிரல்களை அழுத்தி மசாஜ் செய்யலாம். கழுத்தையொட்டிய பகுதியில் உள்ளங்கைகளை

        அழுத்தி மேல் நோக்கியும், கீழ்நோக்கியும் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். பின்பு தலையை இடது புறமாக சாய்த்து கழுத்து தோள்பட்டை வரை தேய்க்க வேண்டும். பின்பு மறு பக்கத்திலும்

        தலையை சாய்த்து மசாஜ் செய்ய வேண்டும். தினமும் இரண்டு மூன்று முறை இவ்வாறு செய்துவந்தால் கழுத்துவலி எட்டிப்பார்க்காது.

          Posted in மருத்துவம்

          பக்க விளைவுகளை ஏற்படுத்தும் பச்சை காய்கறிகள்

          பக்க விளைவுகளை ஏற்படுத்தும் பச்சை காய்கறிகள்

          கேரட்டை சாப்பிடும்போது, ​​அதன் அளவை கவனிப்பது மிகவும் முக்கியம். அதிக அளவு கேரட்டை உட்கொண்டால் சருமத்தின் நிறம் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமாக மாறக்கூடும்.

          பக்க விளைவுகளை ஏற்படுத்தும் பச்சை காய்கறிகள்
          பச்சை காய்கறிகள்


          கொரோனா பரவல் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்வதற்காக பலரும் காய்கறிகள், பழங்களை அதிகம் சாப்பிட தொடங்கி இருக்கிறார்கள்.

          அவை உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கக்கூடியவை. ஆனாலும் சில காய்கறிகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் நன்மையை விட தீங்குதான் விளைவிக்கும். அத்தகைய காய்கறிகள் பற்றி பார்ப்போம்.

          காலிபிளவர்

          முட்டைகோஸ் குடும்பத்தை சேர்ந்த காலிபிளவர், பிராக்கோலி, முட்டைகோஸ் போன்றவற்றை பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக பலரும் சாலட்டுகளில் இந்த

          காய்கறிகளை சேர்த்து பச்சையாகவே சாப்பிடுகிறார்கள். அப்படி சாப்பிடுவது வாயு தொல்லை மற்றும் அஜீரண பிரச்சினையை ஏற்படுத்தும். காலிபிளவரை பச்சையாக சாப்பிடுபவர்களும்

          பக்க விளைவுகளை ஏற்படுத்தும் பச்சை காய்கறிகள்

          இருக்கிறார்கள். இந்த காய்கறிகளில் வயிற்றில் கரையாத ஒருவகை சர்க்கரை இருக்கிறது. சமைத்து உட்கொண்டால் மட்டுமே அந்தவகை சர்க்கரை எளிதாக கரையும்.

          கத்திரிக்காய்

          கத்திரிக்காயை பச்சையாக சாப்பிடுவது வாந்தி, தலைசுற்றல் அல்லது வயிற்றுப் பிடிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக கத்தரிக்காயில் காணப்படும் சோலனைன், நரம்பியல் மற்றும் இரைப்பை

          குடல் பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே, கத்தரிக்காயை எப்போதும் சமைத்துதான் உண்ண வேண்டும். பாதி வேகவைத்த நிலையில் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

          பீட்ரூட்

          பீட்ரூட் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதற்கும், உடல் எடையை குறைப்பதற்கும் உதவும். இதனை சிலர் சாலட்டுகள் மற்றும் சாண்ட்விச்களில் கலந்து சாப்பிடுகிறார்கள்.

          பலர் பீட்ரூட்டை சாறு எடுத்து பருகுகிறார்கள். அது உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் என்றாலும் அளவோடுதான் பருக வேண்டும். பீட்ரூட்டை அதிகமாக உட்கொள்ளும்போது சிறுநீர் சிவப்பு

          அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் வெளியேறும். இதற்கு காரணம் பீட்ரூட்டிற்குள் காணப்படும் மூலக்கூறுகள்தான். அதுபற்றி பயப்படத்தேவையில்லை என்றாலும் பீட்ரூட்டை குறைந்த அளவு உட்கொள்வதுதான் நல்லது.

          காளான்கள்

          வைட்டமின் டி அதிகம் காணப்படும் சிறந்த உணவுப்பொருட்களில் ஒன்றாக காளான்கள் கருதப்படுகிறது.

          இதனை உட்கொள்ளும்போது சிலருக்கு சருமத்தில் ஒவ்வாமை பிரச்சினை ஏற்படும். அத்தகைய சூழ்நிலையில், காளான்களை முழுமையாக சமைத்து சாப்பிடுவது நல்லது.

          கேரட்

          கேரட்டில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் கேரட்டை சாப்பிடும்போது, ​​அதன் அளவை கவனிப்பது மிகவும் முக்கியம்.

          அதிக அளவு கேரட்டை உட்கொண்டால் சருமத்தின் நிறம் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமாக மாறக்கூடும்.

          ஏனென்றால், கேரட்டில் பீட்டா கரோட்டின் உள்ளது. இது உடலில் அதிகமாக உள்நுழைந்துவிடும். ஆனால் ரத்தத்தில் கலக்காமல் தோலிலேயே படிந்துவிடும்.

          அதன் காரணமாக கால்கள், கைகள் மற்றும் உள்ளங்கால்கள் போன்ற பகுதிகளில் நிற மாற்றம் தென்படும்.

            Posted in சினிமா

            அந்த நடிகருக்காக ஒன்று சேர்ந்த சூர்யா-கார்த்தி

            அந்த நடிகருக்காக ஒன்று சேர்ந்த சூர்யா-கார்த்தி

            முன்னணி நடிகர்களாக இருக்கும் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் பிரபல நடிகருக்காக ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள்.

            பிரபல நடிகருக்காக ஒன்று சேர்ந்த சூர்யா – கார்த்தி
            கார்த்தி – சூர்யா


            ‘குற்றம் 23’ படத்தை அடுத்து அருண் விஜய்யும், இயக்குனர் அறிவழகனும் மீண்டும் இணைந்து பணியாற்றியுள்ள படம் ‘பார்டர்’. இப்படத்தில் நடிகைகள் ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல்

            ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்து இருக்கிறார்கள். சாம் சி.எஸ். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

            இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை முன்னணி நடிகர்களாக இருக்கும் சூர்யா,

            கார்த்தி மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

            அருண் விஜய்

            இந்த டிரைலர் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி உள்ளது. மேலும், யூடியூப்பிலும் டிரெண்டிங்கில் இடம் பெற்றுள்ளது.

              Posted in Uncategorized

              ரஜினியை தொடர்ந்து காட்டுக்கு செல்லும் பிரபல நடிகர்

              ரஜினியை தொடர்ந்து காட்டுக்கு செல்லும் பிரபல நடிகர்

              பியர் கிரில்ஸுடன் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் ரஜினி கலந்துக் கொண்டதை தொடர்ந்து பிரபல நடிகர் ஒருவர் பங்கேற்று இருக்கிறார்.

              ரஜினியை தொடர்ந்து காட்டுக்கு செல்லும் பிரபல நடிகர்
              ரஜினி – பியர் கிரில்ஸ்


              டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலின் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்றதாகும். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் அடர்ந்த காட்டுப்பகுதியில்

              ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கு இருந்து எப்படித் தப்பி வருவது என்பதை விளக்கி ஆவணப்படமாக வெளியிட்டு வருகிறார்.

              இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, இந்தியப் பிரதமர் மோடி ஆகியோர் ஏற்கனவே பங்கேற்றுள்ளனர்.

              மேலும் நடிகர் ரஜினிகாந்தும் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, வனப்பகுதிக்கு சென்றார். அங்கு கிரில்ஸுடன் பல்வேறு அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்.

              இந்த நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் இந்நிகழ்ச்சியில் கலந்து

              கொண்டுள்ளார். இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் மாலத்தீவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.

                Posted in சினிமா

                நம்பாதீங்க… எல்லாம் போலி… வடிவேலு அதிரடி

                நம்பாதீங்க… எல்லாம் போலி… வடிவேலு அதிரடி

                தமிழ் சினிமாவில் ரீ- என்ட்ரி கொடுக்க தயாராகி வரும் நடிகர் வடிவேலு, தன்னைப் பற்றி சமூக வலைத்தளத்தில் வரும் புகைப்படங்கள் பற்றி கூறியிருக்கிறார்.

                நம்பாதீங்க… எல்லாம் போலி… வடிவேலு அதிரடி
                வடிவேலு


                தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுவுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர். இம்சை அரசன் 24-ம் புலிகேசி

                படத்தில் நடிக்க அவர் மறுத்ததால் இயக்குனர் ஷங்கர் அளித்த புகாரின் பேரில் வடிவேலுவை

                புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக படங்களில் வடிவேலு நடிக்கவில்லை.

                சமீபத்தில் அவர் மீதான தடை நீக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார் வடிவேலு. அதன்படி சுராஜ் இயக்கும் படத்தில் முதலில் நடிக்க உள்ளார் வடிவேலு,

                இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

                வடிவேலு

                இந்நிலையில், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலும் எனக்கு கணக்கு கிடையாது, எனது பெயரில் வெளியாகும் பதிவுகள் போலியானவை என்று நடிகர் வடிவேலு கூறியிருக்கிறார்.

                  Posted in சினிமா

                  சூரி இல்ல திருமண விழாவில் கொள்ளை

                  சூரி இல்ல திருமண விழாவில் கொள்ளை

                  முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் சூரியின் இல்ல திருமண விழாவில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

                  சூரி இல்ல திருமண விழாவில் கொள்ளை – போலீசில் புகார்
                  சூரி


                  தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது.

                  இவரது அண்ணன் முத்துராமலிங்கத்தின் மகள் திருமண விழா கடந்த 9ம் தேதி மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

                  சூரி முன் நின்று திருமணத்தை நடத்தி வைத்தார். திருமணத்திற்கு நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கருணாஸ், சீமான் உள்ளிட்ட பலர் நேரில் சென்று மணமக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.

                  சூரி

                  இந்நிலையில், அந்த திருமணத்தில் 10 சவரன் மதிப்பிலான நகை கொள்ளை போனதாக

                  கீரைத்துறை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

                    Posted in Uncategorized

                    நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

                    நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


                    உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நகைக்கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

                    நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
                    தங்க நகை
                    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

                    சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அவர் கூறியதாவது:

                    • கூட்டுறவு வங்கிகளில் ஒரு குடும்பத்திற்கு 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
                    • உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நகைக்கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும்.

                    இவ்வாறு அவர் கூறினார்.

                    ரூ.6 ஆயிரம் கோடி அளவிற்கான நகைக்கடன் தள்ளுபடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

                      Posted in Uncategorized

                      அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 11 பேருக்கு கொரோனா

                      அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 11 பேருக்கு கொரோனா

                      அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக, சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

                      காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில், தொற்று உறுதியாகியுள்ளது.

                      6 பொலிஸ் கொன்ஸ்டபிள், 2 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் 2 பொலிஸ் சார்ஜன்ட் உட்பட 10 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

                      இவர்களில் சிலர், கோப்பாய் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

                      இந்நிலையில், பொதுமக்கள் தேவையற்று பொலிஸ் நிலையம் செல்வதைத் தவிர்த்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

                      செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
                      Posted in இலங்கை செய்திகள்

                      காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு

                      காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு

                      பொலிஸ் விசேட அதிரடிப்படையில் பணியாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

                      குறித்த நபர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                      பொலிஸ் விசேட அதிரடிப்படையில் பணியாற்றிய அவர், புத்தளம் – அநுராதபுரம் வீதியில் உள்ள விசேட அதிரடிப்படை முகாமில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

                      மினுவங்கொட பகுதியை சேர்ந்த 36 வயதுடைய குறித்த நபர் தன்னுயிரை மாய்த்துக்

                      கொண்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. புத்தளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

                      Posted in Uncategorized

                      எகிறும் படுகொலைகள் – மிதக்கும் சடலங்கள்

                      எகிறும் படுகொலைகள் – மிதக்கும் சடலங்கள்

                      மஹியங்கனை மொரகெட்டிய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நேற்று (12) நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

                      மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடும் இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதிலில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது,

                      மொரகெட்டிய  வேவத்த பகுதியை சேர்ந்த 59 வயதுடைய நபர் இதன்போது உயிரிந்துள்ளார்.

                      சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

                      இதேவேளை, பலாங்கொடை மெதகந்தவத்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நேற்று (12) இரவு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

                      அயல்வீட்டினருடன் ஏற்பட்ட முரண்பாட்டில் குறித்த நபர் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

                      மெதகந்தவத்த  பகுதியை சேர்ந்த 59 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                      சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

                      இந்த கொலை சம்பங்கள் தொடர்பில் அந்தந்த பிரசேதத்துக்கு பொறுப்பான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

                      Posted in Uncategorized

                      இராஜினாமா செய்த எம்.பி மீண்டும் எம்.பியாகிறார்

                      இராஜினாமா செய்த எம்.பி மீண்டும் எம்.பியாகிறார்

                      தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தவர், மீண்டும் சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளார்.

                      தற்போதைய நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்காக, தன்னுடைய தேசியப் பட்டியல் எம்.பி பதவியை, ஜயந்த கெட்டகொட இராஜினாமா செய்தார்.

                      இந்நிலையில், மற்றுமொரு தேசியப் பட்டியல் எம்.பியான அஜிட் நிவாட் கப்ரால், தன்னுடைய பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன

                      . அவர், மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் பதவி​யேற்கவுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.

                      அஜிட் நிவாட் கப்ராலின் வெற்றிடத்துக்கே, ஜயந்த கெட்டகொட மீண்டும் நியமிக்கப்படவுள்ளார் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

                      Posted in இலங்கை செய்திகள்

                      மன்னார் மாவட்டத்தில் 1960 கொவிட் தொற்றாளர்கள்

                      மன்னார் மாவட்டத்தில் 1960 கொவிட் தொற்றாளர்கள்

                      மன்னார் மாவட்டத்தில் இதுவரை மொத்தமாக 1960 தொற்றாளர்கள் அடையாளம்

                      காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

                      மன்னார் மாவட்டத்தில் சனிக்கிழமை (11) மேலும் புதிதாக 95 கொரோனா தொற்றாளர்கள்

                      அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கடந்த 11 நாட்களில் மாவட்டத்தில் 276 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் ரி.வினோதன் குறிப்பிட்டார்.

                      மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்ளுள் 22பேர் உயிரிழந்துள்ளனர்.

                      Posted in Uncategorized

                      ஐக்கிய நாடுகளின் சபையின் 48வது கூட்டத் தொடர் ஆரம்பம்

                      ஐக்கிய நாடுகளின் சபையின் 48வது கூட்டத் தொடர் ஆரம்பம்

                      இலங்கை உள்ளிட்ட பல நாடுகளின் மனித உரிமை முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு செய்வதற்காக ஐக்கிய நாடுகள்
                      மனித உரிமைகள் சபையின் 48வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகின்றது.

                      இலங்கை நேரப்படி பிற்பகல் 2.00 மணிக்கு கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது.

                      இதன் போது மனித உரிமை கூட்டத் தொடரின் 46வது கூட்டத் தொடரின் போது இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட இன நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை மேம்பாடு தொடர்பிலான யோசனைகள் தொடர்பில்


                      இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் தமது கருத்துக்களை முன்வைக்க உள்ளார்.

                      கூட்டத் தொடரின் 47 உறுப்பு நாடுகளும் இதனை முன்வைக்க உள்ளன. இது தொடர்பிலான கருத்தாடல்களும் இடம்பெறவுள்ளன. இதன் போது சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் பல

                      கருத்துக்களை முன்வைக்க உள்ளதுடன் அரசாங்கம் சார்பில் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி இது தொடர்பில் விடயங்களை முன்வைக்க உள்ளார்.

                      இலங்கையைத் தவிர ஆப்கானிஸ்தான், நிக்கரகுவா, எத்தியோப்பியா, மியன்மார் மற்றும் யெமன் போன்ற நாடுகளின் மனித உரிமை விடயம் தொடர்பிலும் ஆணையாளர் தனது கருத்துக்களை முன்வைப்பார்.

                      Posted in Uncategorized

                      களியாட்ட விடுதிக்குள் 3000 கஞ்சா செடிகள் – மடக்கிய போலீஸ்


                      களியாட்ட விடுதிக்குள் 3000 கஞ்சா செடிகள் – மடக்கிய போலீஸ்

                      பிரிட்டன் Leysdown. பகுதியில் இயங்கி வந்த பிரபல இரவு


                      விடுதி ஒன்றுக்குள் இரகசியமாக அமைக்க பட்ட அறை ஒன்றுக்குள் வைத்து கஞ்சா செடிகள் வளர்க்க பட்டுள்ளது

                      மேற்படி கஞ்சா செய்கையை மேப்பம் பிடித்த போலீசார் திடீர் சுற்றி வளைப்பை நடத்தினர்
                      அப்பொழுது அதற்குள் இருந்து மூவாயிரம் செடிகள் கண்டு பிடிக்க பட்டன

                      மேற்படி பயிர் செய்கையில் ஈடுபட்ட ஐவர் கைது செய்ய பட்டுள்ளனர்

                        Posted in Uncategorized

                        ஆப்கான் இராணுவ கமாண்டர் பிரிட்டனில் கைது

                        ஆப்கான் இராணுவ கமாண்டர் பிரிட்டனில் கைது

                        ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி இடம்பெற்று வரும் நிலையில் அரச இராணுவத்தின்

                        கமாண்டோ படைக்கு தளபதியா விளங்கிய ஒருவர் பிரிட்டன் மன்ஸிஸ்டர் பகுதியில் தாக்கி இருந்த வேளை பிரிட்டன்


                        காவல்துறையினர் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்ய பட்டுள்ளார்


                        தொடந்து மூன்று நாடுகளாக தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இவர் சிறையில் அடைக்க படலாம் என சுயாதீன தகவல்கள் தெறிவிக்கின்றான்

                          Posted in Uncategorized

                          ஜெயலலிதா சொத்து கொள்ளை – சிக்குவாரா எடப்பாடி ..?- video

                          ஜெயலலிதா சொத்து கொள்ளை – சிக்குவாரா எடப்பாடி ..?- video

                          எடப்பாடி பழனி சாமியின் ஆட்சியில் இடம்பெற்ற கொட நாடு கொள்ளை வழக்கு மீள கிளற பட்டு வரும் நிலையில்


                          இந்த கொள்ளையில் சசிகலா உள்ளிட்டவர்கள் சிக்குவார்கள் என இந்த ஆய்வு கூறுகிறது பாருங்கள்

                          click here full video