Posted in சினிமா

வேதாளம் ரீமேக்கில் இணைந்த தமன்னா

வேதாளம் ரீமேக்கில் இணைந்த தமன்னா

தமிழில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வேதாளம் திரைப்படம் தற்போது ‘போலா ஷங்கர்’ என்கிற பெயரில் தெலுங்கில் ரீமேக் ஆகிறது.

வேதாளம் ரீமேக்கில் இணைந்த தமன்னா
தமன்னா


சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2015ம் ஆண்டில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘வேதாளம்’. இப்படம்

தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் அஜித் வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். தங்கை வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு ‘போலா ஷங்கர்’ என பெயரிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க நடிகை தமன்னா ஒப்பந்தமாகி உள்ளார். ஏற்கனவே சிரஞ்சீவியுடன் ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தில் இணைந்து நடித்திருந்த

தமன்னா, தற்போது இரண்டாவது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் 11-ந் தேதி பூஜையுடன் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

    Posted in Uncategorized

    அமெரிக்காவில் வேட்டி-சேலை அணிந்து தமிழில் பாட்டுப்பாடிய தமிழர்கள்

    அமெரிக்காவில் வேட்டி-சேலை அணிந்து தமிழில் பாட்டுப்பாடிய தமிழர்கள்

    புளோரிஸ் யுனைடெட் மெதடிஸ்ட்’ தேவாலயத்தில் தமிழ் குடும்பங்களை சேர்ந்த பெண்கள்

    பாரம்பரிய முறைப்படி சேலை, பாவாடை-தாவணி அணிந்தவாறும், ஆண்கள் வேட்டி-சட்டையிலும் பங்கேற்றனர்.

    அமெரிக்காவில் உள்ள தேவாலயத்தில் வேட்டி-சேலை அணிந்து தமிழில் பாட்டுப்பாடிய தமிழர்கள்
    அமெரிக்காவில் உள்ள தேவாலயத்தில் வேட்டி-சேலை அணிந்து தமிழில் பாட்டுப்பாடிய தமிழர்கள்

    அமெரிக்காவின் வெர்ஜினியாவில் உள்ள ஹென்டன் என்ற இடத்தில் தமிழர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.

    ஹென்டன் நகரில் பிரசித்தி பெற்ற ‘புளோரிஸ் யுனைடெட் மெதடிஸ்ட்’ தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் வழக்கம்போல பிரார்த்தனை நடந்துகொண்டிருந்தது. அப்போது, தமிழ்

    குடும்பங்களை சேர்ந்த பெண்கள் பாரம்பரிய முறைப்படி சேலை, பாவாடை-தாவணி அணிந்தவாறும், ஆண்கள் வேட்டி-சட்டையிலும் பங்கேற்றனர்.

    இதையடுத்து அவர்கள், தேவாலயத்தில் உள்ள பீடத்தில் நின்று தமிழ் பாடலை தங்களுக்கே

    உரித்தான பாணியில் ஒருமித்த குரலில் பாடினர். இதனை தேவாலயத்தில் பிரார்த்தனையில் பங்கேற்ற அமெரிக்கர்கள் மற்றும் பிற நாடுகளை சேர்ந்தவர்களும் ரசித்து பாராட்டினர்.

      Posted in உலக செய்திகள்

      கட்சியில் சேருங்கள் – பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அழைப்பு

      கட்சியில் சேருங்கள் – பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அழைப்பு


      பருவநிலை மாட்டின் இடையே பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட்டை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

      எங்கள் கட்சியில் சேருங்கள் – பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த இஸ்ரேல் பிரதமர்
      இத்தாலி பிரதமருடன் பிரதமர் மோடி

      ரோமில் நடந்த ஜி20 மாநாட்டை முடித்துக் கொண்டு கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் பருவநிலை மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

      பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட பல்வேறு உலக நாட்டு தலைவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

      மாநாட்டின் இடையே இந்திய பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்களை தனித்தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

      அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட்டை இந்திய பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது பிரதமர் மோடியிடம் கைகுலுக்கிய நப்தலி பென்னெட், எங்கள் நாட்டில் நீங்கள் மிகவும்

      பிரபலமான நபர். எனவே, எங்கள் கட்சியில் வந்து சேர்ந்து கொள்ளுங்கள் என சிரித்தபடி அழைப்பு விடுத்தார். இதைக் கேட்ட பிரதமர் மோடியும் சிரித்தார்.

      அதன்பின், இருவரும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

        இது முறையோ …?

        இது முறையோ …?

        மெல்லென விரியும் கிழக்கு -முன்னே
        மெலிந்தது அதன் விளக்கு
        ஒத்திகை பார்த்தே பின்னே
        ஒளியிடல் இன்றே விலக்கு

        அழையா இல்லம் நுளைந்து
        ஆடை உள்ளே புகுந்து
        துயிலை உரிப்பது முறையோ – இந்த
        துணிவை தந்தது யாரோ …?

        பாருக்கு நீயோ விலக்கு -இந்த
        பகலும் இரவும் விளக்கு
        உன்னை வைத்தே இந்த
        உலகில் பிறந்தது கணக்கு

        உயிரை படைத்தவன் கடவுள் – இந்த
        உயர்வை படைத்தவன் கடவுள்
        நிலைகளே செய்தே நன்றே
        நிகழ்வுகள் வைத்தான் அன்றே

        இரவும் பகலும் இரண்டு – அந்த
        இன்பமும் துன்பமும் இரண்டு
        ஏழையும் செல்வமும் இரண்டு – இந்த
        இயல்புகள் திரிப்பு நன்றோ ..?

        வன்னி மைந்தன்
        ஆக்கம் 02-11-2021

          Posted in Uncategorized

          இலங்கை தமிழர்களுக்கு,இந்தியாவில் வாழ்விடம்

          இலங்கை தமிழர்களுக்கு,இந்தியாவில் வாழ்விடம்

          இலங்கை தமிழர்களுக்கு 3,510 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய

          முதலமைச்சர் ஸ்டாலின், ‘தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் ஒரு தாய் மக்கள் தான்,’ எனப் பேசியுள்ளார்.

          வேலூர் மாவட்டம் மேல் மொணவூரில் இலங்கை தமிழர்களுக்காக ரூ.142 கோடி செலவில் 3,510

          வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று அடிக்கல் நாட்டி முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:

          ஒவ்வொரு முறை திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி பொறுப்பேற்றதும் இலங்கை தமிழர்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் கட்சி

          தி.மு.க., தான். கடந்த 10 ஆண்டுகளாக அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசாங்கம் இலங்கை தமிழர்களுக்காக எந்த திட்டங்களையும் செய்யவில்லை.

          இலங்கை தமிழர் நல வாழ்வு திட்டங்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முகாம்களில் உள்ள இலங்கை தமிழ் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசாங்கமே ஏற்கும்.

          தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் ஒரு தாய் மக்கள் தான்; நாம் அனைவரும் தமிழினத்தை

          சேர்ந்தவர்கள், கடல் தான் நம்மை பிரிக்கிறது. இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்டங்கள் மேலும் தொடரும். இலங்கை தமிழர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல.

          தி.மு.க., அரசாங்கம் இலங்கை தமிழர்களுக்கு என்றைக்கும் துணை நிற்கும். என்னை உங்களின் உடன்பிறப்பாக ஏற்றுக்கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்..

          Posted in இலங்கை செய்திகள்

          பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் பணி கொழும்பு இராணுவ வைத்தியசாலையில்

          பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் பணி கொழும்பு இராணுவ வைத்தியசாலையில்

          சுகாதார அமைச்சின் பரிந்துரைக்கமைய இராணுவத்தினரால் 3 ஆவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் தேசிய வேலைத்திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கைகள் கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் நேற்று (01) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

          முன்னனி சுகாதாரத்துறை ஊழியர்கள் உட்பட முப்படை, பொலிஸார், சுகாதார மற்றும் சுற்றுலாத்துறை மற்றும் தெரிவுசெய்யப்பட்ட ஏனைய முன்கள ஊழியர்களும் இத்திட்டத்தில் இணைத்து கொள்ளவுள்ளனர்.

          இத்திட்டம் நேற்று காலை பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட்-19 பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

          இந்நிகழ்வில் மூன்றாவது தடுப்பூசியாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சுற்றுலா, விமான நிலையம் மற்றும் ஏனைய துறைகளில் தொற்று நோய் தடுப்பு பணிக்காக முன்னணியிலிருந்து பணிபுரியும் அனைவருக்கும் வழங்கப்படும் என்று பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட்-19 பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

          ஆறு மாதங்களுக்குப் முன்பாக தடுப்பூசிகள் இரண்டினையும் பெற்றுக்கொண்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்க முடியும் என்றும், தற்போதும் நாளாந்தம் 500 – 600 வரையான தொற்றாளர்கள் கண்டறியப்படும் அதேவேளை சுமார் 14,000 வரை தனிமைப்படுத்தலில் உள்ளமையால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியிலும் பொதுமக்கள் சுகாதார கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமெனவும் வலியுறுத்தினார்.

          பூஸ்டர் தடுப்பூசிகளாக பைஸர் தடுப்பூசியை தொற்று நோய் பரவல் தடுப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் முன்னணி பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்ற ஒழுங்கில் வழங்க தீர்மானித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

          Posted in இலங்கை செய்திகள்

          இறால் வளர்ப்பாளர்களுக்கு கடன் சலுகை

          இறால் வளர்ப்பாளர்களுக்கு கடன் சலுகை

          இரால் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில் வனமி இறால் வளர்ப்பாளர்களை ஊக்குவிப்பதற்கு கடன் சலுகை திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

          வனமி இறால் வளர்ப்பாளர்களை ஊக்குவிப்பதற்கு தேவையான மூலதனங்களை வழங்குவதற்காக அரச வங்கிகள் மூலம் சலுகை ரீதியான கடன் முறைகளை நடைமுறைப்படுத்துவதற்காக கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

          இது தொடர்பாக 01.11.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

          1. இறால் பண்ணை வளர்ப்பை ஊக்குவிப்பதன் மூலம் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கிலான கடன் சலுகை முறையொன்றை நடைமுறைப்படுத்தல்

          2020 ஆம் ஆண்டில் 8,000 மெட்ரிக்தொன் அளவிலான எமது நாட்டு இறால் உற்பத்தியை 2025 ஆம் ஆண்டளவில் 50,000 மெட்ரிக்தொன்களாக அதிகரிப்பதற்கு இலங்கை தேசிய நீரியல் வேளாண்மை அபிவிருத்தி அதிகாரசபை திட்டமிட்டுள்ளது. 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் இறால்

          வளர்ப்பை அதிகரிக்கும் நோக்கில் வனமி இறால் வளர்ப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த இறால் அதிக வளர்ச்சி வேகத்துடன் கூடிய, நோயால் பீடிக்கப்படும் தன்மை குறைவான, சிறிய தடாகங்களில் வளர்க்கும் போது அதிக அடர்த்தியாக விடக்கூடியதாக இருப்பதால் அதிகளவிலான

          அறுவடையைப் பெற்றுக் கொள்வதற்கான இயலுமை காணப்படுகின்றது. குறித்த இறால் வகை ஒரு வருடத்தில் மூன்று போகங்கள் வளர்ப்பை மேற்கொள்வதற்கு இயலும். ஆனாலும் அடர்த்தியுடன் வளர்ப்பை மேற்கொள்வதற்காகவும், ஆகவே அதிகளவில் தடாகத்தில் சேர்கின்ற

          கனிமக்கழிவுகளை அகற்றுவதற்கான வசதிகளை வழங்குவதற்காக வளர்ப்புக்காக பயன்படுத்தப்படும் வழக்கமான சேற்றுத் தடாகம் அதிக அடர்த்தியுடன் கூடிய பொலிஎத்தலீன் பயன்படுத்தப்படும் நவீனப்படுத்தல் அவசியமாகும். மேலும், அதற்குச் சமாந்தரமாக, அதிகரிக்கும்

          இறால் அறுவடைகளை ஏற்றுமதிக்கான களஞ்சியப்படுத்தல் வசதிகள், அதன் மூலம் பெறுமதிசேர் உற்பத்திகளை பதனிடுவதற்காக இறால் பதினிடல் நிலையத்தின் இயலளவை அதிகரிப்பதற்கும், அவற்றை புதிய தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி நவீனமயப்படுத்த வேண்டிய தேவையும்

          உள்ளது. அதற்கமைய, வனமி இறால் வளர்ப்பாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் தேவையான மூலதனங்களை வழங்குவதற்காக அரச வங்கிகள் மூலம் சலுகை ரீதியான கடன் முறைகளை

          நடைமுறைப்படுத்துவதற்காக கடற்றொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

          Posted in இலங்கை செய்திகள்

          பரீட்சைகளை நடத்துவதற்கான புதிய நேர அட்டவணை

          பரீட்சைகளை நடத்துவதற்கான புதிய நேர அட்டவணை

          கொவிட் தொற்றால் பிற்போடப்பட்ட 2021 ஆம் ஆண்டு பரீட்சைகளை நடத்துவதற்கான புதிய நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

          5 ஆம் தரம் புலமைப்பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத்தராதர (உயர்தரம்) பரீட்சை மற்றும் கல்விப் பொதுத்தராதர (சாதாரண தரம்) பரீட்சை ஆகியவற்றை நடத்துவதற்காக கல்வி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தப்பட்ட குறித்த நேர அட்டவணைகளுக்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.

          இது தொடர்பாக 01.11.2021 அன்று நடைபொற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

          1. கொவிட் – 19 பெருந்தொற்று நிலைமையால் பிற்போடப்பட்ட பரீட்சைகளை நடாத்துவதற்கான நேரஅட்டவணை

          2021 ஆம் ஆண்டு கொவிட்-19 பெருந்தொற்று நிலைமையால் 06 மாதங்களின் பின்னர் முழுமையாக 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக 2021 ஒக்ரோபர் மாதம் 25 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளதுடன், கல்விப் பொதுத்தராதர (சாதாரண தர) மற்றும் கல்விப் பொதுத்தராதர (உயர்தர) மாணவர்களுக்காக 2021 நவம்பர் மாதம் 08 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன. அதற்கமைய, பரீட்சைகளில் தோற்றுவதற்காகவுள்ள மாணவர்களுக்கு பாடசாலைகள் திறக்கபட்;ட பின்னர் கல்வி நடவடிக்கைகளை பூரணப்படுத்துவதற்காக போதுமானளவு காலம் வழங்கப்பட வேண்டியுள்ளது. குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டில் குறித்த பரீட்சைகளை நடாத்துவதற்கான திருத்தப்பட்ட நேர அட்டவணைகள் கல்வி அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நேர அட்டவணைகளுக்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.

          5 ஆம் தரம் புலமைப்பரிசில் பரீட்சை
          2022 ஜனவரி மாதம் 22 ஆம் திகதி சனிக்கிழமை

          கல்விப் பொதுத்தராதர (உயர்தரம்) பரீட்சை
          2022 பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம்
          2022 மார்ச் மாதம் 05 ஆம் திகதி சனிக்கிழமை வரை

          கல்விப் பொதுத்தராதர (சாதாரண தரம்) பரீட்சை
          2022 மே மாதம் 23 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம்
          2022 யூன் மாதம் 01 ஆம் திகதி புதன்கிழமை வரை

          Posted in இலங்கை செய்திகள்

          இந்திய உயர்ஸ்தானிகர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தார்

          இந்திய உயர்ஸ்தானிகர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தார்

          இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்கள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களை பாராளுமன்றத்தில் நேற்று (01) சந்தித்தார்.

          பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அவர்களும் இதன்போது கலந்துகொண்டிருந்தார்.

          கொவிட் நிலைமையை வெற்றிகரமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தமை தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் அரசாங்கத்துக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

          இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் இலங்கைக்கு வழங்கிவரும் ஒத்துழைப்புக்கள் தொடர்பில் சபாநாயகர் தனது நன்றியை தெரிவித்ததுடன், இருதரப்பு உறவுகளை பல்வேறு துறைகளிலும் மேலும் விருத்தி செய்வது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது

          Posted in சினிமா

          விக்ரம் படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஆரம்பித்த கமல்

          விக்ரம் படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஆரம்பித்த கமல்

          நடிகர் கமல் தனது பிறந்தநாளை முன்கூட்டியே விக்ரம் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.

          விக்ரம் படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஆரம்பித்த கமல்
          பிறந்தநாள் கேக் வெட்டும் கமல்


          கமல் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின்

          படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

          படக்குழுவினர்

          நடிகர் கமல் தனது பிறந்தநாளை நவம்பர் 7 ஆம் தேதி கொண்டாட இருக்கிறார். இதையொட்டி விக்ரம் படக்குழுவினர் இன்றே படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள். இந்த

          கொண்டாட்டத்தின் போது, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் பகத் பாசில், நடன இயக்குன

          ர் சாண்டி, நடிகை காயத்ரி, ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன், ராஜ்கமல் பிலிம்ஸ் நாராயணன், இணை தயாரிப்பாளர் மஹேந்திரன் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்..

            Posted in சினிமா

            இந்தியன் பட நடிகைக்கு கொரோனா

            இந்தியன் பட நடிகைக்கு கொரோனா

            கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக இந்தியன் பட நடிகை தெரிவித்துள்ளார்.

            இந்தியன் பட நடிகைக்கு கொரோனா பாதிப்பு
            ஊர்மிளா மடோன்கர்


            தமிழில் இந்தியன் மற்றும் இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களில் நடித்து இருப்பவர் நடிகை ஊர்மிளா மடோன்கர். இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மும்பை

            வடக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். அதன்பிறகு அந்த கட்சியில் இருந்து விலகி, சிவசேனாவில் இணைந்தார்.

            இந்தநிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட தகவலில், “எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் நலமாக

            உள்ளேன். வீட்டில் என்னை தனிமைப்படுத்தி கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.” என கூறியுள்ளார்

              Posted in சினிமா

              புனித் ராஜ்குமார் உதவியில் படித்து வந்த 1800 மாணவர்களின் கல்விச் செலவை ஏற்றார் விஷால்

              புனித் ராஜ்குமார் உதவியில் படித்து வந்த 1800 மாணவர்களின் கல்விச் செலவை ஏற்றார் விஷால்

              மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு எனிமி படக்குழுவினர் இரங்கல் தெரிவித்ததோடு, அவரது புகைப்படத்துக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

              புனித் ராஜ்குமார் உதவியில் படித்து வந்த 1800 மாணவர்களின் கல்விச் செலவை ஏற்றார் விஷால்
              புனித் ராஜ்குமார், விஷால்


              மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், சிறந்த நடிகராக வலம் வந்தது மட்டுமின்றி, பல்வேறு சமூக நலப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். 45 இலவசப் பள்ளிகள், 26 ஆதரவற்றோர் இல்லங்கள், 19

              கோசாலை மற்றும் 16 முதியோர் இல்லங்கள் ஆகியவற்றை நடத்தி வந்த புனித், 1800 மாணவர்களின் கல்விச் செலவையும் ஏற்றிருந்தார்.

              இந்நிலையில், புனித் ராஜ்குமார் உதவியில் படிக்கும், 1800 மாணவர்களின் கல்விச் செலவை அடுத்தாண்டு முதல் தான் ஏற்க உள்ளதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார். ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற எனிமி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இதனை கூறினார்.

              புனித் ராஜ்குமார் புகைப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஷால்
              புனித் ராஜ்குமார் புகைப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஷால்

              மேலும் இந்நிகழ்ச்சியில், மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு எனிமி படக்குழுவினர் இரங்கல் தெரிவித்ததோடு, அவரது புகைப்படத்துக்கும் மலர் தூவி அஞ்சலி

              செலுத்தினர். விஷால் நடித்துள்ள எனிமி படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

                Posted in Uncategorized

                இருளர் பழங்குடி மாணவர்களின் கல்வி நலனுக்காக ரூ.1 கோடி வழங்கினார் சூர்யா

                இருளர் பழங்குடி மாணவர்களின் கல்வி நலனுக்காக ரூ.1 கோடி வழங்கினார் சூர்யா

                தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, ஜெய் பீம் படத்தில் பழங்குடி மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார்.

                இருளர் பழங்குடி மாணவர்களின் கல்வி நலனுக்காக ரூ.1 கோடி வழங்கினார் சூர்யா
                முதல்வர் முன்னிலையில் காசோலை வழங்கிய சூர்யா


                சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படம் நாளை நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது. த.செ.ஞானவேல் இயக்கி இருக்கும் இப்படம் இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை

                மற்றும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. நடிகர் சூர்யா, பழங்குடி

                மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.

                இந்நிலையில், இருளர் பழங்குடியை சேர்ந்த மாணவர்களின் கல்வி நலனுக்காக சூர்யாவின் 2டி நிறுவனம் சார்பில் ரூ.1 கோடி வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ரூ.1

                கோடிக்கான காசோலையை நடிகர் சூர்யா வழங்கினார். அப்போது ஜோதிகா, துர்கா ஸ்டாலின் மற்றும் இருளர் பழங்குடியை சேர்ந்த மக்கள் சிலரும் உடனிருந்தனர். நடிகர் சூர்யாவின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன

                  Posted in Uncategorized

                  கோட்டாவை ஓடவைத்த தமிழர்கள் – பறந்த புலிக்கொடி

                  கோட்டாவை ஓடவைத்த தமிழர்கள் – பறந்த புலிக்கொடி

                  பிரிட்டன் ஸ்கொட்லாந்து கிளாஸ்க்கோ பகுதிக்கு வருகை தந்த இலங்கை அதிபரும் தமிழ் இன


                  படுகொலையாளியுமான கோட்டாயாவுக்கு எதிராக ஆயிரக்கணக்கில் தமிழர்கள் திரண்டு தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்

                  இவ்வேளை அவரை தூக்கில் போடு என கோஷங்கள் முழங்கின ,இது கோட்டாவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது ,


                  புலிகளின் செயல் திறன்களை மழுங்கடித்து விட்டதாக ஏப்பம் இட்ட இவருக்கு இந்த மக்கள் ஒன்று கூடல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                  அங்கு திரண்ட மக்களை சிங்கள உளவுத்துறை படம் பிடித்து சென்றுள்ளதாம்

                    Posted in உலக செய்திகள்

                    இந்துக்களுக்கு அயோத்தி பயணம் இலவசம் – கெஜ்ரிவால்

                    இந்துக்களுக்கு அயோத்தி பயணம் இலவசம் – கெஜ்ரிவால்


                    கோவா சென்றுள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசுகையில் காங்கிரசும், பா.ஜ.க.வும் ஊழல் கட்சிகள் என தெரிவித்தார்.

                    இந்துக்களுக்கு அயோத்தி பயணம் இலவசம் – கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதி
                    அரவிந்த் கெஜ்ரிவால்

                    உத்தர பிரதேசம், கோவா, மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ், பா.ஜக கட்சிகள் நேருக்கு நேர் மோதிய மாநிலங்களில்

                    காங்கிரஸ் வலுவிழந்து காணப்படுகிறது. மேலும், மத்தியில் பா.ஜ.க.வை எதிர்த்து வலுவான கூட்டணி அமைக்க முடியாமல் தவிக்கிறது.

                    இதற்கிடையே, ஆம் ஆத்மி கட்சியும் இந்த களத்தில் குதித்துள்ளது. கோவாவில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும் போட்டியில் இறங்கியுள்ளது.

                    இந்நிலையில், கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையாக டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கோவா சென்றார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

                    காங்கிரசும், பா.ஜ.க.வும் ஊழல் கட்சிகள். அதனால் தான் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேச காங்கிரஸ் அஞ்சுகிறது. பா.ஜ.க. குறித்து பேசினால் சிறைக்குச் செல்ல நேரிடும் என காங்கிரசுக்கும் தெரியும்.

                    கடந்த 10 ஆண்டாக பா.ஜ.க. ஆட்சியில் காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் முதல் மந்திரிகள் மீதோ, அமைச்சர்கள் மீதோ ஏன் ஒரு வழக்கு கூட இல்லை என தெரிகிறதா?

                    இரு கட்சிகளும் கூட்டுசேர்ந்து செயல்படுகின்றன. இருவரில் யார் ஆட்சிக்கு வந்தாலும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என ஒப்பந்தமிட்டுள்ளன.

                    கோவாவில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்துக்களை அயோத்திக்கும், கிறிஸ்தவர்களை வேளாங்கண்ணிக்கும், முஸ்லிம்களை அஜ்மீர் ஷெரீப்புக்கும், சாய்பாபாவை வணங்குபவர்களை

                    ஷீரடி சாய்பாபா கோவிலுக்கும் யாத்திரை செல்ல இலவசமாக ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      இரண்டு ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதல் – பெரும் விபத்து

                      இரண்டு ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதல் – பெரும் விபத்து

                      இரண்டு புகையிரதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                      ராகம மற்றும் பேரலந்த புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                      பாரிய அளவில் எந்தவொரு விபத்தும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

                        Posted in இலங்கை செய்திகள்

                        மாட்டு திருடர்களை மடக்கிய காவல்துறை

                        மாட்டு திருடர்களை மடக்கிய காவல்துறை

                        திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சர்தாபுர பிரதேசத்தில் சிறிய

                        லொறியொன்றில் நேற்று (31) அதிகாலை 4.30 மணியளவில் இறைச்சிக்காக கடத்திச் செல்லப்பட்ட 16 மாடுகளை தாம் மீட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

                        அத்தோடு, மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி பரிமுதல் செய்யப்பட்டு, லொறியின் ஓட்டுநரையும் உதவியாளரையும் கைதுசெய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

                        மீட்கப்பட்ட 16 மாடுகளில் 10 ஆண் மாடுகளும் 6 பசுக்களும் அடங்குவதாகவும் கைது

                        செய்யப்பட்டவர்களையும் மீட்கப்பட்ட மாடுகளையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

                          Posted in இலங்கை செய்திகள்

                          யாழில் ஒன்று கூடி பேசிய கோட்டா அடிமைகள்

                          யாழில் ஒன்று கூடி பேசிய கோட்டா அடிமைகள்


                          வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ ஜீவன் தியாகராஜா அவர்களுக்கும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட

                          ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று பு நேற்று (31.10.2021) இடம்பெற்றது.


                          இச்சந்திப்பில், புதிய ஆளுநர் அவர்களுக்கு அங்கஜன் இராமநாதன் அவர்கள் வாழ்த்துக்களை

                          தெரிவித்ததுடன், வடக்கில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக இருவரும் கலந்துரையாடினார்கள்.

                            Posted in Uncategorized

                            இலங்கையில் வெள்ளம் – இருவர் மரணம் -314 வீடுகள் சேதம்

                            இலங்கையில் வெள்ளம் – இருவர் மரணம் -314 வீடுகள் சேதம்

                            இலங்கைக்கு அருகில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் சீரற்ற காலநிலை நிலவுகின்றது.

                            பொதுமக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் 5 மாகாணங்களில்;, 6 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

                            6 மாவட்டங்களில்இ ஆயிரத்து 273 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 119 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும் மழை காரணமாக பதுளை மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

                            . முல்லைத்தீவு மாவட்டத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (31) மாலை தெரிவித்தது.

                            இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 334 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.


                            நாளைய தினமும் நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

                            Posted in Uncategorized

                            பிரிட்டனில் முழங்கிய கோட்டா – இது முக்கியமாம்

                            பிரிட்டனில் முழங்கிய கோட்டா – இது முக்கியமாம்

                            இயற்கைக்கு எதிராக மனிதர்கள் செயற்படுவதற்குப் பதிலாக, அதனோடு மிகவும் இணைந்துச் செயற்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள்,

                            நிலையான அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட புதிய விவசாயப் புரட்சியொன்று அவசியம் என்று எடுத்துரைத்தார்.

                            ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இடம்பெற்று வரும் COP: 26 என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டுக்கு இணையாக “நைதரசனை மீண்டும் கண்டுபிடித்தல், காலநிலை மாற்றம், சுகாதார உயிரியல் பன்முகத்தன்மை மற்றும் நிலையான பொருளாதாரத்துக்கான தீர்வுகள் மற்றும் இணைச் செயற்பாடுகள்” என்ற தலைப்பின் கீழ் இலங்கை ஏற்பாடு செய்திருந்த விசேட கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

                            அந்நாட்டு நேரப்படி, நேற்று (31) மாலை 5.00 மணிக்கு இந்தக் கருத்தரங்கு நடைபெற்றது.

                            நிலையான அபிவிருத்தியே தமது அரசாங்கத்தின் கொள்கைக் கட்டமைப்பாகும் என்று எடுத்துரைத்த ஜனாதிபதி அவர்கள், காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சாசனத்துக்கமைய, இலங்கையின் புதுப்பிக்கப்பட்ட தேசிய நிர்ணயங்கள் மற்றும் அபிலாஷைகள் என்பன நன்கு பிரதிபலிக்கின்றன என்று குறிப்பிட்டார்.

                            நவீன, விஞ்ஞான பொறிமுறைகள் மற்றும் பண்டைய வழிமுறைகள் ஊடாக, சுற்றாடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதே, தற்போது எமக்கு உள்ள சவாலாகக் காணப்படுகின்றது. இலங்கையில் விவசாயிகளிடையே, பல தசாப்தங்களாக சிறுநீரக நோய் பரவுவது பாரிய பிரச்சினையாக உள்ளது. இரசாயனப் பசளையை அதிகளவில் பயன்படுத்துவதே இதற்கு மிக முக்கிய காரணமாகியுள்ளது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், இச்சூழ்நிலையிலேயே இரசாயனப் பசளை இறக்குமதியைக் குறைப்பதற்கும் சேதன விவசாயத்தை அதிகளவில் ஊக்குவிப்பதற்கும் எமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது” என்றும் குறிப்பிட்டார்.

                            “இச்செயற்பாடுகள் பாரியளவில் பாராட்டப்பட்டாலும், ஒருசில விமர்சனங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் முகங்கொடுத்து வருகின்றோம். இரசாயனப் பசளைப் பயன்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கும் குழுக்களுக்கு மத்தியில், அதிகளவில் பசளையைப் பயன்படுத்தி விளைச்சலை அதிகரித்துக்கொள்ளும் வழிவகைகளைக் கையாளப் பழகியிருக்கும் விவசாயிகளும் இதனை எதிர்க்கின்றனர். இலங்கையின் சிறந்த விவசாய உரிமைகளை அவதானிக்கும்போது, இந்நிலை மிகவும் வருத்தத்துக்குரியது” என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

                            அபிவிருத்தி அடைந்துவரும் நாடு என்ற வகையில் முகங்கொடுத்து வருகின்ற வளப் பற்றாக்குறைக்கு மத்தியிலேயே, சுற்றாடல் தொடர்பான இலங்கையின் முற்போக்கு நிகழ்ச்சி நிரல் செயற்படுத்தப்படுகிறது என்று தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அபிவிருத்தித் திட்டங்களோடு அவ்வாறான நிகழ்ச்சி நிரல் ஒன்றை நடைமுறைப்படுத்துவதென்பது, விசேடமாக நோய்த் தொற்றின் பின்னர் அபிவிருத்தி அடைந்துவரும் அனைத்து நாடுகளுக்கும் பாரியதொரு சவாலாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.

                            அவ்வாறான நாடுகளுக்கான அபிவிருத்தி உதவிகள், தொழில்நுட்பப் பரிமாற்றல்கள், திறன் அபிவிருத்தி, முதலீடுகள் மற்றும் நிதி உதவிகளையும் இயலுமான பங்களிப்புகளையும் அபிவிருத்தி அடைந்த நாடுகள் வழங்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அவற்றில் வர்த்தகத்துக்கு பாரியதொரு பொறுப்பு உள்ளதோடு மேலாண்மைக்காக முதலீடு செய்யும்போது, பாரியதொரு பிரதிபலன் கிடைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

                            எதிர்காலச் சந்ததியினருக்காகவே, இந்தப் பூமியின் பாதுகாவலர்களாக நாம் அனைவரும் இன்று வாழ்ந்து வருகின்றோம் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இயலுமான வகையில் அதற்குப் பங்களித்து, சுகாதார நலனை உறுதி செய்துகொள்வதற்காக அனைவரும் ஒன்றிணைந்துச் செயற்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

                            அனைவரும் ஒற்றுமையாகவும் நல்லெண்ணத்துடனும் இதனை நடைமுறைப் படுத்துவோமாயின், மக்களுக்கும் எமுது பூமிக்கும் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் மேலும் தெரிவித்தார்.

                            100 சதவீதமளவில் பசுமை விவசாயத்துக்கு மாறுவதற்கான தீர்மானத்தை எடுத்துள்ள உலகின் முதல் நாடாக இலங்கை இருப்பதாகக் குறிப்பிட்ட சுற்றாடற்றுறை அமைச்சர் மஹிந்த அமரவீர, காலநிலை மாற்றத்துக்கான சிறந்த தீர்மானத்துடன்கூடிய பசுமை – சமூகப் பொருளாதாரத்தை உருவாக்குவதே அதன் நோக்கமாகும் என்றும் குறிப்பிட்டார்.

                            வரலாற்றுக் காலம் முதல் தற்போது வரை முன்னெடுக்கப்பட்டுள்ள நைதரசன் தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக விஞ்ஞானிகளுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்த அமைச்சர், நைதரசன் கண்டுபிடிக்கப்பட்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் இலங்கையும் அந்தச் சவாலை வெற்றிகொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

                            சர்வதேச நைதரசன் முகாமைத்துவக் கட்டமைப்பின் பணிப்பாளர் பேராசிரியர் மார்க் ஸட்ன் அவர்கள், “நைதரசன் மற்றும் காலநிலை” என்ற தலைப்பின் கீழ் உரையாற்றினார்.

                            “காலநிலைக்கு முகங்கொடுப்பதற்கான இயலுமை மற்றும் ஒத்துப்போதல் தொடர்பாக இலங்கையின் எதிர்பார்ப்புகள் COP: 26 மற்றும் அதனைக் கடந்த” என்ற தலைப்பின் கீழ், சுற்றாடற்றுறை அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க கருத்து தெரிவித்ததோடு, ஐக்கிய இராச்சியத்துக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிரிசேனவும் தமது கருத்துக்களை முன்வைத்தார்.