முகமலையில் 316 ஏக்கர் காணிவிடுவிப்பாம் – இராணுவம்
முகமலையில் 316 ஏக்கர் காணி விடுவிப்பாம் – இராணுவம்
சிங்கள அரச பயங்கரவாத இராணுவத்தால் ஆக்கிரமிக்க பட்ட தமிழர் பகுதிகளில் உள்ள 316 ஏக்கர் காணியினை தாம் விடுத்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது
முகமாலை கிராமசேவர் பிரிவில் உள்ள காணிகள் இவ்வித விடுவிக்க பட்டுள்ளனவாம்
இந்த பகுதியில் இராணுவத்தின் முன்னரங்க வேலிகள் அமைக்க பட்டு உக்கிர சமர் இடம்பெற்ற பகுதி என்பது இங்கே குறிப்பிட தக்கது
சிரியா மீது இஸ்ரேல் விமானங்கள் அகோர ஏவுகணை தாக்குதல்
சிரியா மீது இஸ்ரேல் விமானங்கள் அகோர ஏவுகணை தாக்குதல்
சிரியாவின் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேலிய போர் விமானங்கள் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தின
இதில் எதிரிகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது
லெபனான் போராளிகள் சிரியாவுக்குள் இருந்து ஆயுத கடத்தலில் ஈடுபட்டுள்ளதால் இந்த தாக்குதல் மேற்கொள்ள பட்டதாக தெரிவிக்க படுகிறது
வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமானம் – பலர் மரணம்
வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமானம் – பலர் மரணம்
ரஷியாவில் பறந்து கொண்டிருந்த இலகு ரக பயணிகள் விமானம் ஒன்று திடீரென ராடரில் இருந்து மறைந்தது
இதனை அடுத்து மேற்படி விமானத்தை தேடும் பணிகள் ஆரம்பிக்க பட்டன
இதன் பொழுது காட்டு பகுதியில் ஒன்றில் வீழ்ந்து நொறுங்கிய நிலையில் விமானம் கண்டு பிடிக்க பட்டது
கால நிலை சீர்கேட்டினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது
இதில் ஐவர் சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர் ,காயமடைந்த நிலையில் இருவர் மீட்க பட்டுள்ளனர்
பனிப்புகார் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
அமெரிக்கா கப்பலை சிறை பிடித்த ஈரான் இராணுவம் – முறுகல் உச்சம்
அமெரிக்கா கப்பலை சிறை பிடித்த ஈரான் இராணுவம் – முறுகல் உச்சம்
ஓமான் வளைகுடா பகுதியில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்காவுக்கு சொந்தமான எண்ணெய்
கப்பல் ஒன்றினை ஈரானிய இராணுவத்தினர் சிறை பிடித்துள்ளனர்
மேற்படி கப்பலை ராடாரில் கண்காணிக்கும் இராணுவம் முதல் அதிரடி நடவடிக்கையாக உலங்குவானூர்தி மூலம் சென்று கப்பலுக்குள் இராணுவம் தரை இறங்குகிறது
அதன் பின்னர் வேக படகுகள் சுற்றி வளைத்து கப்பலை தமது கட்டு பாட்டுக்குள் கொண்டு வருகின்றன
பின்னர் கப்பல் அவர்களது பாதுகாப்பு பகுதிக்கு நகர்த்தி செல்ல படுகிறது
மேற்படி காணொளியினை அமெரிக்கா இராணுவ தலைமையகமான பென்டகோன் வெளியிட்டுள்ளது
மத்திய கிழக்கில் அமெரிக்கா எண்ணெய் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.246 கோடி மோசடி
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.246 கோடி மோசடி
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.246 கோடி முறைகேடு- மத்திய மந்திரி எல்.முருகன் பேட்டி
மத்திய மந்திரி எல்.முருகன்
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை இணை மந்திரி எல்.முருகன், சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் (100 நாள் வேலை திட்டம்) கீழ் தமிழக அரசுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை மத்திய அரசு வழங்கவில்லை என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
இந்த திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டில் தமிழகத்துக்கு ரூ.6 ஆயிரத்து 565 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கான நிலுவைத்தொகை ரூ.1,178 கோடியை விடுவிக்க
வேண்டும் என்று அக்டோபர் 27-ந் தேதி மத்திய ஊரக வளர்ச்சித்துறை மந்திரியை தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நேரில் சந்தித்து வலியுறுத்தியபோது ஒரு வாரத்தில் நிலுவைத்தொகை விடுவிக்கப்படும் என்று மத்திய மந்திரி உறுதி அளித்தார்.
ஆனால் 5 நாட்களிலேயே, தமிழக அரசு கோரியதைவிட அதிகமாக ரூ.1,361 கோடி நிதி விடுவிக்கப்பட்டது.
மத்திய அரசை களங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்துகின்றனர். தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் சுமார் ரூ.246 கோடி அளவுக்கு
முறைகேடு நடந்துள்ளதாக தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை வெறும் ரூ.1 கோடியே 85 லட்சம் வரை மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு 2 ஆயிரத்து 500 லட்சம் மனித வேலை நாட்கள் ஒதுக்கப்பட்டபோதிலும், தமிழக அரசு 2 ஆயிரத்து 190 லட்சம் மனித வேலை நாட்களை மட்டுமே
பயன்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின்படி மாவட்டத்துக்கு ஒரு குறைதீர் அதிகாரி, சமூக தணிக்கை குழு நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் அதுபோன்று எந்த ஒரு அதிகாரியும் நியமிக்கப்படவில்லை.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 23 தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவருகிறது.
கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் குறித்த விவரங்களை தமிழக அரசிடம் மத்திய அரசு கோரியபோதிலும், கடந்த மாதம் 25-ந் தேதி வரை தமிழக அரசு இந்த விவரங்களை அளிக்கவில்லை. தமிழக அரசின் அலட்சியப் போக்கால் மீனவர்கள் விடுவிக்கப்படுவது தாமதமாகி வருகிறது.
கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திருச்சியில் என்னைச் சந்தித்து முறையிட்டனர். மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள்.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடி
தலைமையிலான மத்திய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம்கூட நடைபெறவில்லை.
கடல்சார் மசோதாவால் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அனைத்து கடலோர மாநிலங்கள் மற்றும் மீனவ சங்கங்களின் ஆலோசனை பெறப்பட்டு அனைவரையும் திருப்திப்படுத்தும் விதத்தில் இதற்கான சட்டம் கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது சென்னை பத்திரிகை தகவல் மையத்தின் இயக்குனர் பி.குருபாபு உடன் இருந்தார்.
சாமி கும்பிடட விஷால் – எதுக்கு தெரியுமா ..?
சாமி கும்பிடட விஷால் – எதுக்கு தெரியுமா ..?
தீபாவளி தினத்தில் எனிமி திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், தனது வேண்டுதலை நடிகர் விஷால் நிறைவேற்றி இருக்கிறார்.
வேண்டுதலை நிறைவேற்றிய விஷால்
விஷால்
விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘எனிமி’. ஆனந்த் சங்கர் இயக்கி இருக்கும் இப்படத்தில் ஆர்யா, மிர்ணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்
. இப்படம் தீபாவளி தினத்தில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், படக்குழுவினர் புரமோஷன் பணிகளை சென்னையில் முடித்து விட்டு, ஐதராபாத்தில் பட வெளியீட்டு நிகழச்சிகளில் பங்கேற்றனர்.
விஷால்
இதற்கிடையில், நடிகர் விஷால் தன் நெடுநாள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக திருப்பதி பெருமாளை தரிசிக்க சென்றுள்ளார். கடந்த வருடமே திருப்பதி சென்று கடவுளை தரிசிக்க
திட்டமிட்டிருந்தார். ஆனால் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக அவரால் செல்ல
முடியவில்லை. திருப்பதி சென்ற அவர் கீழ் திருப்பதியிலிருந்து மேல்திருப்பதிக்கு மலையில் நடந்தே சென்று ஏழுமலையானை தற்போது தரிசனம் செய்து இருக்கிறார்.
விஜய்சேதுபதி மீது தாக்குதல் video
விஜய்சேதுபதி மீது தாக்குதல் video
முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி மீது பெங்களூரு விமானநிலையத்தில் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
பெங்களூரு விமான நிலையத்தில் விஜய்சேதுபதி மீது தாக்குதல்…. வைரலாகும் வீடியோ
விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் சமீபத்தில் சூப்பர் டீலக்ஸ்
படத்திற்காக டெல்லி சென்று தேசிய விருது பெற்றார். அதன்பின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்நிலையில் படப்பிடிப்புக்காக பெங்களூரு சென்றிருக்கிறார் விஜய் சேதுபதி. அங்கு விமான நிலையத்தில் விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் விஜய்
சேதுபதியை ஒருவர் தாக்க வரும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது
கோல்டன் விசா பெற்றார் திரிஷா
கோல்டன் விசா பெற்றார் திரிஷா
ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா பெற்ற திரிஷா, முதல் தமிழ் நடிகை இந்த சலுகையை பெற்றிருப்பது சந்தோசம் அளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா பெற்றார் திரிஷா
திரிஷா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பர் திரிஷா. இவருக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கியுள்ளது. முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், தொழில் வல்லுநர்கள்
மற்றும் அறிவியல், அறிவு மற்றும் விளையாட்டுத் துறையில் உள்ள சிறப்புத் திறமையாளர்கள்
கோல்டன் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். கோல்டன் விசா ஐந்து அல்லது 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் மற்றும் தானாகவே புதுப்பிக்கப்படும்.
கோல்டன் விசா பெற்ற திரிஷா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டான் விசாவை பெறும் முதல் தமிழ் நடிகை என்பது மகிழ்ச்சி அளிக்கிறது’’ எனப் பதிவிட்டுள்ளார்.
ஷாருக் கான், போனி கபூர், அர்ஜூன் கபூர், மோகன்லால், மம்மூட்டி, துல்கர் சல்மான் போன்
சினிமா நட்டசத்திரங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசாவை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழீழத்தை கண்ட பின்னரே நான் மரணிப்பேன் செல்லப்பா உருக்கம் – வீடியோ
தமிழீழத்தை கண்ட பின்னரே நான் மரணிப்பேன் செல்லப்பா உருக்கம் – வீடியோ
தமிழீழத்தின் தேசிய பாடல்களில் முதல்வராக விளங்கி வரும் செல்லப்பா அவர்கள்
மரணமானதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரப்பட்டு வந்தன ,ஆனால் தற்போது அவர்
உயிருடன் உள்ளேன் என நேரலையில் தோன்றி செய்தியை வெளியிட்டுள்ளார்
தமிழீழத்தை கண்டே பின்னரே நான் மரணிப்பேன் என செல்லப்பா உருக்கம்
சாரதியை அடித்து துன்புறுத்தி நிர்வாணமாக்கிய சிங்கள பொலிஸ்
சாரதியை அடித்து துன்புறுத்தி நிர்வாணமாக்கிய சிங்கள பொலிஸ்
இலங்கையில் ஆளும் கோட்டபாய அரசில் சாரதி ஒருவர் கைது செய்ய பட்டு துன்புறுத்த பட்டு நிர்வாணமாக்க பட்ட விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மேற்படி சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் .
கடையில் கொத்துரொட்டி சண்டை – கொலையில் முடிந்த பரிதாபம்
கடையில் கொத்துரொட்டி சண்டை – கொலையில் முடிந்த பரிதாபம்
இலங்கை பத்தேகம- நாகொட பிரதேசத்தில் உள்ள கடையொன்றில் கொத்துரொட்டி சாப்பிட வந்த வாலிபனுக்கும் அந்த கடை உரிமையாளருக்கும் இடையில்இடம்பெற்ற சண்டையில் உணவு அருந்த வந்த வாலிபர் அடித்து கொலை செய்ய பட்டுள்ளார்
இந்த சம்பவத்தில் கொட்டல் உரிமையாளரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்
மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
- ஐக்கிய அரபு அமீரகம் வரும் நெதன்யாகு ஈரான் எச்சரிக்கை
- நெதன்யாகுவை ‘போர்க் குற்றவாளி’ என கத்தார் பிரதமர் சாடினார்
- ஈரானில் கலவரத்தை உருவாக்க இஸ்ரேல் அமெரிக்கா சதி
- காசா முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டார்
- நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய ஞானசார தேரருக்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது
வேகமாக பரவும் நோய் – மக்களுக்கு எச்சரிக்கை
வேகமாக பரவும் நோய் – மக்களுக்கு எச்சரிக்கை
கிழக்கு மாகாணத்தின் சில இடங்களில் குறிப்பாக ஓட்டமாவடி, வாழைச்சேனை மற்றும் ஏறாவூர் பகுதிகளில் இருந்து வயிற்றோட்டம் காரணமாக அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சிறுவர்கள் மாத்திரம் இன்றி பெரியவர்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். எனவே இது தொடர்பில் அவதானம் தேவை என கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஷ்ட
விரிவுரையாளரும் மட்டு. போதனா வைத்தியசாலையின் விசேட குழந்தை நல வைத்திய நிபுணருமான டொக்டர் விஜி திருக்குமார் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்: “இதன் அறிகுறிகளாக காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்றோட்டம்
காணப்படும். சில சமயம் இரத்தம் கலந்த சளியுடன் வயிற்றோட்டம் காணப்படும். இது ஒருவகை பற்றீரியா தொற்றினால் ஏற்படுகிறது.
“சில சமயம் வயிற்றோட்டம் இல்லாமல் அல்லது குறைவான வாந்தி, வயிற்று வலி மற்றும் வயிறு ஊதுதல் போன்ற குணங்குறிகளுடன் தோன்றலாம்.
“சிறுவர்கள், உணவு மற்றும் நீர் அருந்துவது குறைவாகவும் நீர் இழப்பு அதிகமாகவும் இருப்பதால் சோர்வு மற்றும் மயக்க நிலை ஏற்படும்.
“எனவே, இவ்வாறான அறிகுறிகள் ஏற்பட்டால் தாமதிக்காமல் வைத்தியசாலையை நாடுவது அவசியம்.
“மேலும், கொரோனா தொற்றின் பின் சிறுவர்களுக்கு ஏற்படுகின்ற Miss-C எனப்படும் பல்தொகுதி அழற்சி நோய் நிலையின் போதும் காய்ச்சல் மற்றும் வயிற்றோட்டம் போன்ற அறிகுறிகள்
தோன்றும். எனவே, உங்கள் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு காணப்படுமாயின் விரைவாக வைத்தியசாலையை நாடுதல் சாலச்சிறந்தது” என்றார்
வடக்கு தமிழர்களுக்கு இந்தியா உதவும் என அறிவிப்பு
வடக்கு தமிழர்களுக்கு இந்தியா உதவும் என அறிவிப்பு
போரினால் பாதிக்க பட்ட வடக்கு தமிழர்களுக்கு இந்திய மாபெரும் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறை படுத்தி உதவும் என இந்தியா தூதர் யாழில் தெரிவித்துள்ளார்
வடபகுதியின் புதிய ஆளுனருடன் இடம்பெற்ற சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்க பட்டுள்ளது
வீடு பெற்றுத்தருவகக மோசடி புரிந்த நபர் கைது
வீடு பெற்றுத்தருவகக மோசடி புரிந்த நபர் கைது
இலங்கையில் அரச வீடுகளை பெற்று தருவதாக கூறி மக்களிடம் பணமோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் காவல்துறையினரால கைது செய்ய பட்டுள்ளார்
பாதிக்க பட்டடவர்கள் மக்களுக்கு வழங்கிய தகவலை அடுத்து இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது
குறிப்பிட தக்கது
செல்லப்பா மரணமானதாக போலியான செய்தி பரப்பல் – குடும்பத்தினர் கவலை
செல்லப்பா மரணமானதாக போலியான செய்தி பரப்பல் – குடும்பத்தினர் கவலை
தமிழத்தின் தேசிய குரலாக ஒலித்து வரும் பாசறைப்பானார் செல்லப்பா அவர்கள்
மரணமானதாக போலியான செய்திகள் பரப்ப பட்டு வருகின்றன
அவர் உடல் நலம் குன்றி இருந்தமைஉண்மை தான் ஆனால் தற்போது அல்ல எனவும் ,வேண்டும்
என விஷமிகள் திட்டமிட்டு இவ்வாறான செய்திகள் பரப்ப பட்டு வருவதாக அவரது குடும்பத்தினர் நமக்கு
தெரிவித்தனர்
நலமுடன் ஐயா அவர்கள் உள்ளது மிக பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,விரைவில் பல
பாடல்களை அவர் நமக்கு வழங்குவார் என எதிர்பார்க்கலாம்
பிரான்சில் கத்தியுடன் உலவிய நபர் சுட்டு கொலை
பிரான்சில் கத்தியுடன் உலவிய நபர் சுட்டு கொலை
பிரான்ஸ் பாரிஸ் பகுதியில் உள்ள தொடரூந்து நிலையம் ஒன்றின் அருகே கத்தியுடன் நடமாடிய நபர் ஒருவர் காவல்துறையால் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார்.
மேற்படி சம்பவம் தொடர்பில் பொலிசார் தெரிவிக்கையில் உளவுத்துறைக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து உசார் நிலையில் போலீசா வைக்கபட்டிருந்த நிலையில் மேற்படி நபர் கொலை செய்ய பட்டுளளார்
இவர் தீவிரவாத செயலுடன் தொடர்பு பட்டவர் என எதிர் பார்க்க பாடுகிறது ,மேற்படி சம்பவம் பிரான்ஸ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இராணுவ மருத்துமனை மீது தாக்குதல் 25 பேர் பலி -50 பேர் காயம்
இராணுவ மருத்துமனை மீது தாக்கல் 25 பேர் பலி -50 பேர் காயம்
ஆப்கான் தலைநகர் காபூல் பகுதியில் அமைந்துள்ள Sardar Mohammad Daud Khan இராணுவ
மருத்துவமனை மீது நடத்த பட்ட பெரும் குண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூட்டு தாக்குதலில்
சிக்கி சம்பவ இடத்தில 26 பேர் பலியாகினர் மேலும் ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் பாடுகாயமடைந்துள்ளனர்
இந்த தாக்குதல் உயிர் சேதம் மேலும் அதிகரிக்கலாம் எனஅஞ்ச படுகிறது ,இதுவரை இந்த
தாக்குதலுக்கு எவரும் உரிமை கோரவில்லை
செல்போன்களால் ஏற்பட போகும் உடல் நல பாதிப்பு
செல்போன்களால் ஏற்பட போகும் உடல் நல பாதிப்பு
செல்போன், கணினி போன்றவற்றில் அதிக நேரம் செலவிடும் நபர்களுக்கு மனிதர்களை முகத்தோடு முகம் பார்த்து இயல்பாக பேசும் திறனும், உண்மையான மனித தொடர்பியல் சார்ந்த திறன்களும் குறைகின்றன.
காலம் மாற மாற, புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கேற்றவாறு நோய்களும் வித விதமாக தோன்றி உருமாறுகின்றன. எலும்புகள் தொடர்பாக எத்தனையோ உடல் நல கோளாறுகள் ஏற்கனவே உண்டு.
அது தற்சமயம் வாட்ஸ்-அப் பைட்டிஸ் என்ற புதிய பெயரோடு புழக்கத்துக்கு வந்திருக்கிறது. இது வாட்ஸ்-அப் அதிகம் பயன்படுத்துகிறவர்களுக்கு ஏற்படும் பிரச்சினை என்பதால் அதையே
பெயரிலும் வைத்துவிட்டார்கள். எனவே இது வாட்ஸ்-அப் பயன்படுத்துகிற அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய அவசியமாகிறது.
செல்போன் வருவதற்கு முன்பு தட்டச்சு எந்திரத்தில் அதிக நேரம் தட்டச்சு செய்பவர்களுக்கு அனைத்து விரல்களிலும் தேய்மானம் ஏற்பட்டு தசை மற்றும் எலும்புகளில் பிரச்சினைகள் ஏற்படுவதை ‘ஸ்டெனோகிராபர் தம்ப் டிசார்டர்’ என்று சொல்வது உண்டு. செல்போனில் வாட்ஸ்-
அப் போன்ற செயலிகளில் நாம் அதிக நேரம் தொடர்ந்து டைப் செய்து சாட்டிங் செய்கிற போது, நமது கையில் உள்ள விரல்களை அதிக அளவு பயன்படுத்துவதோடு நீண்ட நேரம் தலையை குனிந்த நிலையில் இருக்கிறோம்.
இதனால் உடல் நல பாதிப்பு ஏற்படக் கூடும். சிலர் செல்போனில் டைப் செய்வதற்கு ஒரு கையை மட்டுமே பயன்படுத்துவது உண்டு. இதனால் ஒரு கையில் மட்டும் அதிக பாதிப்பு ஏற்படும். இதற்கு பதிலாக இரண்டு கைகளாலும் டைப் செய்கிற போது கைகளில் ஏற்படுகிற பாதிப்புகள் சற்று
குறைய வாய்ப்புள்ளது. அதேபோல செல்போனின் அளவு பெரிதாக பெரிதாக டைப் செய்கிற பகுதி பெரிதாவதால் சற்று சுலபமாக டைப் செய்யலாம். டேப்லெட், லேப்டாப் போன்ற சற்று பெரிய திரையை உடைய கருவிகளை கீழே வைத்து பயன்படுத்தும் போது அதிக அளவு தலையை குனிந்து இருப்பதால் தோள்பட்டை, கழுத்து பகுதிகளில் அதிக வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தசைகள், எலும்புகள் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுவதோடு நீண்ட நேரம் செல்போன் மற்றும் கணினி திரைகளை பார்த்து கொண்டிருப்பதால் கண்கள் உலர்ந்து விடுகின்றன. இதுபோன்ற
டிஜிட்டல் திரைகளில் இருந்து வெளிப்படும் நீலநிற ஒளிக்கதிர்களால் தற்காலிக கண்பார்வை குறைபாடு ஏற்படுவதோடு கண் விழித்திரை குறைபாடும் உண்டாகிறது. இரவு நேரங்களில்
தூக்கத்தை தவிர்த்து இந்த கருவிகளை பயன்படுத்துவதால் தூக்கக் குறைபாடுகள் மற்றும் நினைவுத்திறன் குறைபாடுகள் ஏற்படுகின்றன.
செல்போன், கணினி போன்றவற்றில் அதிக நேரம் செலவிடும் நபர்களுக்கு மனிதர்களை முகத்தோடு முகம் பார்த்து இயல்பாக பேசும் திறனும், உண்மையான மனித தொடர்பியல் சார்ந்த
திறன்களும் குறைகின்றன. மேலும் இதனால் அதிக கோபமும், அதிக மன அழுத்தமும் உண்டாகிறது.
குழந்தை பருவத்தில் இதுபோன்ற டிஜிட்டல் திரைகளை அதிக அளவு பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு கவனக்குறைவு, மொழியை கற்றுக்கொள்ளும் திறனில் பிரச்சினை
ஏற்படுவதோடு கண்ணில் கிட்டப்பார்வை கோளாறு ஏற்படவும் வழிவகுக்கிறது. மேலும் இது குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் பிரச்சினை ஏற்படவும் காரணமாகிறது. பெற்றோர்
குழந்தைகளிடம் அதிக நேரம் செலவிடுவதை தவிர்த்து வருவதோடு, அவர்களை அமைதிப்படுத்துவதற்காக செல்போனை கொடுத்து பழக்கப்படுத்துவதால், நாளடைவில் அவர்கள் அதற்கு அடிமை யாகிவிடும் நிலை உண்டாகிறது.
சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் படைத்த சாதனை
சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் படைத்த சாதனை
முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயனின் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது.
சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் படைத்த சாதனை
டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன்
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் டாக்டர். பிரியங்கா மோகன்
ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தில் வினய், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, அர்ச்சனா, தீபா, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
திரையரங்குகளில் வெளியான இப்படம் 25வது நாளை எட்டியுள்ளது. அதே சமயம் இப்படம் தியேட்டரில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருப்பதாக படக்குழுவினர்
அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
தொழில் தொடங்கினார் வனிதா
தொழில் தொடங்கினார் வனிதா
நடிகை வனிதா விஜயகுமார் கைவசம் ‘அனல் காற்று’, ‘2 கே அழகானது காதல்’, ‘அந்தகன்’, ‘அநீதி’, ‘பிக்கப் டிராப்’ போன்ற படங்கள் உள்ளன.
புதிதாக தொழில் தொடங்கினார் வனிதா
வனிதா
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் வனிதா. ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர், கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் பீட்டர்பால் என்பவரை 3-
வது திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கினார். பின்னர் சில மாதங்களிலேயே அவரை குடிகாரர்
என்று உதறித் தள்ளி மேலும் பரபரப்பு ஏற்படுத்தினார். இதையடுத்து தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த வனிதா, தற்போது சினிமாவில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
வனிதா
இவர் கைவசம் ‘அனல் காற்று’, ‘2 கே அழகானது காதல்’, ‘அந்தகன்’, ‘அநீதி’, ‘பிக்கப் டிராப்’ போன்ற படங்கள் உள்ளன.
இவ்வாறு பிசியான நடிகையாக வலம்வரும் வனிதா, தற்போது புதிதாக தொழில் தொடங்கி உள்ளார். பெண்களுக்கான ஆடை, அணிகலன்கள், அழகுசாதன பொருட்கள் ஆகியவற்றை
உள்ளடக்கிய கடையை அவர் புதிதாக திறந்துள்ளார். இதையறிந்த ரசிகர்கள் வனிதாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.












