Posted in சினிமா

திட்டுவதற்கு வாய்ப்பே தரவில்லை – பாரதிராஜா

திட்டுவதற்கு வாய்ப்பே தரவில்லை – பாரதிராஜா

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை இயக்கிய பாரதிராஜா, வெளியாக இருக்கும் ஒரு படத்தை பார்த்து புகழ்ந்து பேசி இருக்கிறார்.

திட்டுவதற்கு வாய்ப்பே தரவில்லை – பாரதிராஜா
பாரதிராஜா


மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குனர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன்.

சினிமா விமர்சகராக இருந்து, இயக்குனராக மாறியுள்ள மாறன் இயக்கிய படம் எப்படி இருக்கும்

என்பதால் ரசிகர்கள், திரையுலகினர் என இருதரப்பினரிடமும் இந்தப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

ஆன்டி இண்டியன் வரும் டிச-1௦ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், சிறப்புக் காட்சித்

திரையிடலில் இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், சேரன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பார்த்து ரசித்தனர்.

இந்த படத்தைப் பார்த்துவிட்டு பாரதிராஜா பேசும்போது, “எடுக்கின்ற திரைப்படங்களை எல்லாம் இந்த புளூ சட்டை மாறன் இப்படி நையாண்டி செய்து விமர்சனம் பண்ணி வருகிறானே..

இவன் ஒரு படம் எடுக்கட்டும் பார்க்கலாம் என நினைத்தேன். படத்தையும் எடுத்து விட்டான். நம்பிக்கை இல்லாமல் தான் இந்தப் படத்தை பார்த்தேன்.

பாரதிராஜா
மாறனை பாராட்டும் பாரதிராஜா

ஏதாவது ஒரு இடத்திலாவது அவனுக்குப் பதிலடி தருவதற்கு இடம் கிடைக்குமா என எதிர்பார்த்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பை எனக்கு இந்தப் படம் தரவே இல்லை. இத்தனை

நாட்கள் மற்ற திரைப்படங்களை விமர்சித்து வந்த புளூ சட்டை மாறன், தான் அதற்கு தகுதியான நபர் தான் என நிரூபித்துவிட்டான்’’ என்றார்.

    Posted in சினிமா

    எங்கள் துறையை விட்டு விடுங்கள் – பாரதிராஜா

    எங்கள் துறையை விட்டு விடுங்கள் – பாரதிராஜா

    ஜெய் பீம்’ பட விவகாரத்தில் சூர்யாவுக்கு ஆதரவாக இயக்குநர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    எங்கள் திரைத்துறையை விட்டு விடுங்கள் – பாரதிராஜா வேண்டுகோள்
    பாரதிராஜா
    த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெய் பீம்’. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும் விதமான காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறி அது தொடர்பான அறிக்கையை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக ‘ஜெய் பீம்’ படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ரூ.5 கோடி இழப்பீடு தர வேண்டும் என்றும் கோரி வன்னியர் சங்கம் சார்பில் வழக்கறிஞர் மூலம் நேற்று சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு இயக்குநர் பாரதிராஜா ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

    சகோதரர் அன்புமணிக்கு வணக்கம்,

    இன்று பேசப்படும் ஏற்றத்தாழ்வு, சமூக நீதி போன்றவற்றை யாரும் பேசத் துணியாத காலகட்டத்தில் ஒரு களப் போராளியாக, படைப்பாளியாக நின்று திரைப்பதிவாக்கம் செய்த உரிமையில் உங்களுக்கு உங்கள் பாரதிராஜா எழுதுகிறேன். திரைத்துறை என்பது எல்லாவற்றையும் பேசக்கூடியது. கல்வி, காதல், மோகம், சரி, தவறு, சமூக சீர்திருத்தம் இப்படி மனித வர்க்கம் சந்திக்கும் எல்லா நிகழ்வுகளையும் படம்பிடித்து மக்களிடமே முன் வைக்கும் ஒரு இயங்குதளம்.

    பெரும்பாலும் சினிமா என்ற இயங்குதளம் மக்களை நல்வழிப்படுத்தவே முயற்சிக்கும். அதனால்தான் கதாநாயகன் நல்லவனாக சித்தரிக்கப்படுகிறான். பல சமூக, அரசியல் மாற்றங்களின் பங்களிப்பாக சினிமா இருந்திருக்கிறது.

    பல வாழ்க்கைப் படைப்புகள் நம் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. அது மக்கள் முன்னிலையில் வைக்கப்படும்போது உண்மை எது? தவறு எது? எனத் தெரிந்தே அவர்கள் அதை வரவேற்றோ, புறந்தள்ளியோ வருகின்றனர்.

    அப்படி ஒரு படைப்பாக வரவேற்கப்பட்டதே ‘ஜெய்பீம்’. அன்பு பிள்ளைகள் சூர்யா-ஜோதிகாவால் தயாரிக்கப்பட்டு தம்பி ஞானவேல் இயக்கத்தில் வெளிவந்த படம்.

    கடந்த கால சம்பவங்களைப் படமாக்கும் போது.. அதை படமாகப் பார்த்துவிட்டு சமூக மாற்றத்திற்கு அது எவ்வகையில் பயனாகும் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். அதில் பூதக்கண்ணாடியை அணிந்துகொண்டு குற்றம் பார்க்கத் தொடங்கினால் எந்த ஒரு படைப்பும் எளியோருக்காக பேசாமல் முடங்கிவிடும்.

    இன்றைய எளியோர்களின் சமத்துவ அதிகாரத்திற்காக அன்றே பேசியது நாங்கள்தான். அன்று என் படம் ‘வேதம் புதிது’ முடக்க முயற்சித்தபோது புரட்சித்தலைவர் உடன் நின்றார். அந்த படைப்பு எத்தகைய தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தியது? அது போன்றதொரு படைப்புதான் ‘ஜெய் பீம்’ படமும். இதை படைப்பாக மட்டுமே பார்க்க முயன்றால் நீங்களும், உங்கள் தந்தையும் போராடும் அதே எளியவர்களுக்கான போராட்டம்தான் இது.

    தம்பி சூர்யாவைப் பொருத்தவரையில் யாரையும் காயப்படுத்தும் தன்மை கொண்டவரல்ல. கல்வி, எளியவர்களுக்கான உதவி என நகர்ந்துகொண்டிருப்பவர். ஒரு இயக்குநரின் சேகரிப்பிற்கு தன்னையும் தன் நிழலையும் தந்து உதவியுள்ளவர். அவருக்கு எல்லோரும் சமம். யாரையும் ஏற்ற இறக்கத்தோடு கண்காணிப்பவரல்ல. தன்னால் எங்கேனும் ஒரு மாற்றம் நிகழுமா? எனப் பார்ப்பவர்.

    சூர்யா

    அவரை ஒரு சமூகத்திற்கு எதிரானவராக சித்தரிப்பதும் அவர் மீதான வன்மத்தையும் வன்முறையை ஏவிவிடுவதும் மிகத்தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். ஒரு படைப்பின் சுதந்திரத்தை அதன்படியே விட்டுவிடுவது இன்னும் அதிகமான நல்ல படைப்புகளைக் கொண்டுவர உதவும்.

    சினிமாவை விட இங்கு கவனம் செலுத்த நிறைய வேலைகள் இருக்கின்றன. சமூக மாற்றங்களுக்கான உங்கள் போராட்டங்களே நிறைய உள்ளது. தங்கள் தகுதிக்கு நீங்கள் இங்கு வரவேண்டாமே.

    நடுவண் அரசு, மாநில அரசு, சார்ந்திருக்கும் மக்களுக்கான இட ஒதுக்கீடு பிரச்சனைகள் போன்ற எத்தனையோ இடங்களில் உங்களின் குரல் ஒலிக்கட்டும். எங்கள் திரைத்துறையை விட்டுவிடுங்கள். யாருக்குப் பயந்து படம் எடுக்க வேண்டும் எனத் தெரியவில்லை.

    இப்படியே போனால் ஒவ்வொரு அரசியல்வாதிகளின் வாசல்களிலும் எங்கள் படைப்பாளிகள் கதை சொல்லக் காத்திருக்க வேண்டுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. வம்படியாக திணித்தோ, திரித்தோ அப்படத்தில் எந்த கருத்துருவாக்கமும் செய்யவில்லை.

    நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மாற்றங்களும் செய்யப்பட்டிருக்கிறது. திரைத்துறையை அதன் இயல்பில் இயங்க விட கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கருத்துக்களை எப்போதும் செவிகொடுத்து கேட்கும் மனநிலையில் உள்ள மனிதனுடன் ஏன் தேவையற்ற வார்த்தைப் போர்? ஒரு அலைபேசியில் முடிந்திருக்க வேண்டியதும் சிறு தவறுகளைச் சுட்டிக் காட்டித் தீர்க்க வேண்டியதுமான இப்பிரச்சனையை எதிர்காற்றில் பற்றியெரியும் நெருப்புத் துகளாக்கியது ஏன் எனப் புரியவில்லை.

    எதுவாக இருந்தாலும், எங்களோடு பேசுங்கள். சரியென்றால் சரிசெய்துகொள்ளும் நண்பர்கள் நாங்கள். எப்போதும் நட்போடு பயணப்படுவோம். நன்றி!

    எப்போதும் உங்கள் நட்புறவையே விரும்பும் பாரதிராஜா.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

      Posted in சினிமா

      நான் கேள்விப்பட்ட சிம்பு வேற, பழகிய சிம்பு வேற… பாரதிராஜா புகழாரம்

      நான் கேள்விப்பட்ட சிம்பு வேற, பழகிய சிம்பு வேற… பாரதிராஜா புகழாரம்

      நான் கேள்விப்பட்ட சிம்பு வேற, பழகிய சிம்பு வேற… இயக்குனர் பாரதிராஜா படவிழாவில் புகழ்ந்து பேசியிருக்கிறார்.

      நான் கேள்விப்பட்ட சிம்பு வேற, பழகிய சிம்பு வேற… பாரதிராஜா புகழாரம்
      பாரதிராஜா


      சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் ஈஸ்வரன். கிராமத்து

      பின்னணியில் சென்ட்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக

      ஈஸ்வரன் உருவாகி உள்ளது. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, நந்திதா,

      முனீஸ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன், யோகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

      இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் சுசீந்திரன், சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

      இதில் பாரதிராஜா பேசும்போது, நான் கேள்விப்பட்ட சிம்பு வேற, பார்த்து பழகிய சிம்பு வேற.. சிம்பு ஒரு ஒழுக்கமான மனிதர். ஏழு

      மணிக்கு படப்பிடிப்பு என்றால் 6.45 மணிக்கு படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விடுகிறார். ஒரே டேக்கில் சாதாரணமாக நடித்து விட்டு

      சென்று விடுகிறார். சிம்புக்கு எதுவும் மறைக்கத் தெரியாது. இப்போ சிம்புவை நான் ரொம்ப நேசிக்கிறேன். என்றார்.

      Posted in சினிமா

      பாரதிராஜா மீது விசாரணை

      பாரதிராஜா மீது விசாரணை

      தனிமைப்படுத்தும் விதியை இயக்குனர் பாரதிராஜா மீறினாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

      விதியை மீறியதாக பாரதிராஜா மீது விசாரணை
      பாரதிராஜா


      திரைப்பட இயக்குனர் பாரதிராஜா சென்னையில் இருந்து கடந்த வாரம் தேனிக்கு வந்தார். கொரோனா பாதிப்பு அதிகரித்து

      வருவதால் சென்னை சிவப்பு மண்டல பகுதியாக உள்ளது. அங்கிருந்து வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை

      செய்யப்பட்டு 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

      அந்த வகையில் சென்னையில் இருந்து தேனிக்கு வந்த இயக்குனர் பாரதிராஜாவும் தன்னை கொரோனா பரிசோதனைக்கு

      உட்படுத்திக் கொண்டார். சுகாதாரத்துறையினர் வேண்டுகோளை ஏற்று அவரும் தன்னை தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

      இந்நிலையில் போடி அருகே முந்தல் சோதனை சாவடியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட சுகாதாரத்துறை அலுவலர்

      ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் இயக்குனர் பாரதிராஜாவுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் அந்த

      புகைப்படத்தில், கொரோனா தடுப்பு பணியின் போது குரங்கணி சென்று திரும்பிய இயக்குனர் பாரதிராஜாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் என்று கருத்தையும் பதிவிட்டுள்ளார்.

      இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தனிமைப்படுத்தும் விதிமுறையை இயக்குனர்

      பாரதிராஜா மீறினாரா? என்ற சர்ச்சையை இந்த புகைப்படம் உருவாக்கி உள்ளது. இதுகுறித்து தேனி அல்லிநகரம் நகராட்சி

      சுகாதார அலுவலர் அறிவுச்செல்வத்திடம் கேட்டபோது, “இயக்குனர் பாரதிராஜா தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக்

      கொண்டார். ஆனால், தனிமைப்படுத்திக் கொண்ட காலக்கட்டத்தில் குரங்கணிக்கு சென்றாரா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம்” என்றார்.