ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு – கொலையா ..?
ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு – கொலையா ..?
நுவரெலியா, ருவான் எலியா, பிளாக்பூல் ஆற்றில் விழுந்து உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம்
இன்று (08) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா, ருவான் எலியா, பன்சல வீதியைச் சேர்ந்த 78 வயதுடைய புஞ்சிபண்டாரகே மெனிகாமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது மகள் மற்றும் மருமகன்களுடன் வீட்டில் தங்கியிருந்த நிலையில் இரவு உறங்கிக்
கொண்டிருந்த தாய் காலையில் பார்க்கும் பொழுது வீட்டில் இல்லை என உயிரிழந்த பெண்ணின் மகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வீட்டிற்கு அருகில் உள்ள பிளாக்பூல் ஆற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தமைக்கான
காரணம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசேட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயிலில் மோதுண்டு பலியான குடும்பம்
ரயிலில் மோதுண்டு பலியான குடும்பம்
வட்டவளை- ரொசல்ல ரயில் நிலையத்துக்கு அண்மையில், ரயிலுடன் மோதுண்டதில், தாய், தந்தை மற்றும் மகன் ஆகிய மூவரும் பலியாகியுள்ளனர்.
பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உடரட்ட மெனிக்கே ரயில் மோதுண்டே இம்மூவரும் மரணித்துள்ளார்.
அவர்கள், ரயிலுக்கு பாய்ந்துள்ளனரா? என்பது தொடர்பிலும் விசாரணைகள்
முன்னெடுக்கப்படுகின்றன என பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்த மூவரும் மஸ்கெலியா- சாமிமலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த மூவரும் உயிரழப்பதற்கு முன்னர், ரொசல்ல ரயில் நிலையத்தில் பணியாற்றும் ஒருவரிடம்,
ரயில் வரும் நேரம் குறித்து வினவி விட்டு, ரொசல்ல ரயில் நிலையத்திலிருந்து வட்டவளை ரயில் நிலையம் நோக்கி நடந்துள்ளனர்.
உயிரிழந்த மூவரில் ஒருவர் 40 வயதுடைய சாந்தகுமார் ராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சிந்து சிறுமிகளை காணவில்லை – தேடும் போலீஸ்
வத்தேகம – மீகம்மன பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் இருந்து ஐந்து சிறுமிகள் காணாமல்
போயுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இந்த சிறுமிகள் சிறுவர் இல்லத்திற்கு அருகிலுள்ள கல்வி நிலையத்திற்கு கல்வி கற்க சென்ற
நிலையில், காணாமல் போயுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
காணாமல் போனவர்களில் ஒருவர் நாவலப்பிட்டியில் உள்ள அவரது வீட்டில் இருப்பதாக தமக்கு
தகவல் கிடைத்துள்ளதாகவும், அவரை வத்தேகம பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வருமாறு பாதுகாவலருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மற்ற நான்கு சிறுமிகளும் 16-18 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் நேற்று மதியம் வரை சிறுமிகள் தொடர்பில் எந்த தகவலையும் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் பொலிஸார் குறிப்பட்டுள்ளனர்.
ஒமிக்ரோன் வைரஸ் வகையின் 32 திரிபுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஒமிக்ரோன் வைரஸ் வகையின் 32 திரிபுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
டெல்டா மற்றும் அல்பா வைரஸ் வகைகளின் பிறழ்வுகளின் எண்ணிக்கையை விடவும் ஒமிக்ரோன்
பிறழ்வின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின்
வைரஸ் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ஜூட் ஜயமக தெரிவித்துள்ளார்.
சமூகத்தில் ஓமிக்ரோன் திரிபின் பரவல் மற்றும் தனிநபர் மீதான அதன் தாக்கம் குறித்தும்
உறுதியான அறிக்கையை வெளியிட போதுமான தரவுகள் இன்னும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பத்து ஆயிரம் பேருக்கு வேலை
பத்து ஆயிரம் பேருக்கு வேலை
க.பொ.த சாதாரணதரத்தைப் பூர்த்தி செய்த ஒரு இலட்சம் மாணவர்களுக்கான ஆட்சேர்ப்பு
வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி, நுண் நிதி, சுயதொழில் மற்றும்
தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே ஷெஹான் சேமசிங்க இதை தெரிவித்தார். மேலும் குறிப்பிடுகையில்,
2015 – 2019 காலப்பகுதியில் அரச சேவைக்கு வழங்கப்பட்ட மொத்த வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை 22,145 ஆகும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பின்னர் அபிவிருத்தி உத்தியோகத்தர்
சேவைக்கு மாத்திரம் 60,000 பட்டதாரி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், க.பொ.த சாதாரண தரம் வரை படித்த அல்லது க.பொ.த சாதாரண தர பரீட்சையில்
சித்தியடையாத 100,000 இளைஞர், யுவதிகளை இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டம்
ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்
போலீசார் மீது கைக் குண்டு தாக்குத்தல்
போலீசார் மீது கைக் குண்டு தாக்குத்தல்
பாகிஸ்தான் காவல்துறையினரை இலக்கு வைத்து நடத்த பட்ட கைக்குண்டு தாக்குதலில் சிக்கி
இருவர் படு காயமடைந்துள்ளனர்
மேற்படி தாக்குதலை அடுத்து குறித்த பகுதி சுற்றிவளைக்க பட்டு தேடுதல் முடுக்கி விட பட்டுள்ளது
ரஷியாவில் துப்பாக்கி சண்டை -இருவர் மரணம் – மூவர் காயம்
ரஷியாவில் துப்பாக்கி சண்டை -இருவர் மரணம் – மூவர் காயம்
ரசிய அ தலைநகர் மோஸ்க்கோவில் அரச கட்டடம் மீது நபர் ஒருவர் திடீர் துப்பாக்கி சூட்டு
தாக்குதலை நடத்தினர் ,இதில் சம்பவ இடத்தில இருவர் பலியாகினர் ,மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்
உயிரிழப்பு அதிகம் ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது ,மேற்படி தாக்குதலுக்குரிய
காரணம் உடனடியாக தெரியவில்லை ,விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன
வீழ்ந்துநொறுங்கிய அமெரிக்கா விமானம் – விசாரணையில் இராணுவம்
வீழ்ந்துநொறுங்கிய அமெரிக்கா விமானம் – விசாரணையில் இராணுவம்
அமெரிக்கா இராணுவத்தின் முக்கிய உளவு பார்க்கும் ,ஆள் இல்லா விமானம் ஒன்று அமெரிக்கா
மெஸ்சிக்கோ
எல்லை பகுதியில் வீழ்ந்து நொறுங்கியுள்ளது
மேற்படி விமான விபத்து தொடர்பில் பூரண விசாரணைகளை அமெரிக்கா இராணுவம் ஆரம்பித்துள்ளது
சமீப நாட்களாக பல நாடுகளின் இராணுவ வானூர்திகள் வீழ்ந்து நொறுங்கி வருகின்றமை குறிப்பிட தக்கது
சவூதி ஊடகநபரை கொன்ற கொலையாளி – பிரான்சில் கைது
சவூதி ஊடகநபரை கொன்ற கொலையாளி – பிரான்சில் கைது
துருக்கியில் வைத்து சவூதி நாட்டு முக்கிய ஊடக நபரை கொலை புரிந்த கொலை குற்றவாளி
பிரான்சில் வைத்து பிரான்ஸ் காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளார்
சவுதி மன்னர் ஒருவருடன் தொடர்புகளை பேணி வந்த நபர்களினால் இவர் படு கொலை
செய்ய பட்டுள்ளதாக முன்னர் செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் மேற்படி நபர் கைது செய்ய பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
நடிகரின் தம்பியுடன் நடிக்கும் சஞ்சிதா ஷெட்டி
நடிகரின் தம்பியுடன் நடிக்கும் சஞ்சிதா ஷெட்டி
சூது கவ்வும், பிட்சா 2, ரம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை சஞ்சிதா ஷெட்டி, பிரபல நடிகரின் தம்பியுடன் நடிக்க இருக்கிறார்.
பிரபல நடிகரின் தம்பியுடன் நடிக்கும் சஞ்சிதா ஷெட்டி
சஞ்சிதா ஷெட்டி
இயக்குநர் அமீர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சொந்தமாக ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறார்.
அவரது நடிப்பில் நாற்காலி, வாடிவாசல் போன்ற படங்கள் தயாரிப்பில் இருக்கும் நிலையில்,
திடீரென்று புதிய படத்தை தயாரித்து நடிக்க இருப்பதாக அவரே தெரிவித்திருக்கிறார்.
யுவன் ஷங்கர் ராஜா இசையில், சினேகனின் பாடல் வரிகளில் ஒரு பாடல் பதிவு வெற்றிகரமாக நிறைவடைந்து இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
சஞ்சிதா ஷெட்டி
அமீர் – சஞ்சிதா ஷெட்டி – சத்யா
கதையின் நாயகர்களாக அமீர் மற்றும் ஆர்யாவின் தம்பி சத்யாவும் நடிக்க, நாயகியாக சஞ்சிதா
ஷெட்டி மற்றும் வின்சென்ட் அசோகன், தீனா, சரண் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். மௌனம்
பேசியதே, ராம், பருத்திவீரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து எங்களுடைய இப்படத்தின்
ஒளிப்பதிவை ராம்ஜி செய்கிறார். கலை இயக்கம் வீரமணி, படத்தொகுப்பு அஹமது, ”அதர்மம்”,
”பகைவன்” ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ரமேஷ் கிருஷ்ணன் இயக்குகிறார்.
நடிக்க தயாராகும் விஜயகாந்த்
நடிக்க தயாராகும் விஜயகாந்த்
நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருக்கிறார்.
மீண்டும் நடிக்க தயாராகும் விஜயகாந்த்
விஜயகாந்த்
இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தில் பல்வேறு அதிரடி
மாற்றங்களைச் செய்து வருகிறார். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில்
முக்கியமான கதாபாத்திரத்தில் விஜயகாந்தை நடிக்க வைக்க இருக்கிறார்.
விஜய் மில்டன் ஏற்கனவே கன்னடத்தில் சிவராஜ்குமாரை வைத்து ஒரு அதிரடிப்படத்தை எடுத்து
முடித்திருக்கிறார். இப்போது விஜய் ஆண்டனியை வைத்து எடுத்து வரும் தமிழ்ப் படத்தில்தான்
விஜயகாந்த்தை ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்க வைக்கக் கேட்டிருக்கிறார்.
விஜயகாந்த்
இதே படத்தில் சரத்குமார் ஒரு கேரக்டரில் நடித்து முடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் வெடி பொருட்கள் மீட்பு
கிளிநொச்சியில் வெடி பொருட்கள் மீட்பு
கிளிநொச்சி, உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து
பெருந்தொகையான எறிகணைகள் மற்றும் வெடி பொருட்கள் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி உமையாள்புரம் சோலை நகர்ப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை எறிகணை
ஒன்றினை வீட்டுக்குள் வைத்து கிறைன்டரினல் வெட்டியபோது குறித்த எறிகணை வெடித்ததில் 25
வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்ததுடன் 13 வயதுடைய சிறுவன் ஒருவனும்
படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் .
இந்த நிலையில் ஏற்கனவே சம்பவம் இடம்பெற்ற வீட்டில் ஒரு சில வெடி பொருட்கள் அன்றைய
தினம் அடையாளம் காணப்பட்டன தொடர்ந்து விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும்
மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த வீட்டிலிருந்தும் வீட்டு வளவுக்குள் இருந்தும் பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
காதலியின் நிர்வாணப்படத்தை இணையத்தில் வெளியிட்ட காதலன் கைது
காதலியின் நிர்வாணப்படத்தை இணையத்தில் வெளியிட்ட காதலன் கைது
காதலியின் நிர்வாண படத்தை, இணையளத்தில் தரவேற்றம் செய்துவிட்டு, தலைமறைவாகியிருந்த காதலன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மொனராகலை ஒக்கம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்வெட்டமண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது காதலியை அறையொன்றுக்கு அழைத்துச் சென்ற காதலன், அங்கு அப்பெண்ணை
துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். அதன்பின்னர். எடுக்கப்பட்ட நிர்வாணப் படத்தை, இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அதன்பின்னர், அங்கிருந்து தலைமறைவாகி கொழும்பில் மறைந்து இருந்துள்ளார். எனினும்,
விசாரணைகளை முன்னெடுத்த மொனராகலை குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் குழுவினர்,
பாதிக்கப்பட்ட யுவதி பேசுவதைப் போல, தொலைப்பேசி அழைப்பை எடுத்து, இளைஞனை ஒக்கம்பிட்டியவுக்கு வரவழைத்துள்ளனர்.
.ஒக்கம்பிட்டிய வீட்டுக்கு. இளைஞன் வரும்போது, இடைநடுவிலேயே மறித்த பொலிஸார், அவரை
கைது செய்துள்ளனர். இவர், பல பெண்களை ஏமாற்றி துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
அச்சம்பவங்களுக்காக தேடப்பட்டவர் என்றும் அறியமுடிகின்றது.
அவர், பல பெண்களை காதலித்துள்ளார். அந்த காதலிகளை நிர்வாணமாக புகைப்படம் எடுத்தும்,
வீடியோக்களை எடுத்தும் வைத்துள்ளார். அவற்றை, உறவினர்கள் மற்றும்
இணையத்தளங்களுக்கும் அனுப்பிவைத்துள்ளார் என்பதும் விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக,புத்தள பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்..
இலங்கை இராணுவத்தின் 59 ஆவது படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் எச்.எல்.வி.எம் லியனகே நியமனம்
இலங்கை இராணுவத்தின் 59 ஆவது படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் எச்.எல்.வி.எம் லியனகே நியமனம்
மேஜர் ஜெனரல் எச்.எல்.வி.எம் லியனகே இலங்கை இராணுவத்தின் 59 ஆவது படைத் தளபதியாக இன்று (7) முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி
ஜெனரல் சவேந்திர சில்வாவின் பரிந்துரைகளுக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய
ராஜபக்ஷவினால் மேஜர் ஜெனரல் லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.
கஜபா படைப்பிரிவின் மேஜர் ஜெனரல் விகும் லியனகே, இந்த புதிய நியமனத்திற்கு முன்னர்
இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையின் கட்டளைத் தளபதியாக கடமையாற்றினார்.
இராணுவத்தின் 58 ஆவது தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவுக்குப் பின்னர் அவர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்
அடுத்த வருடம் பிரதமர் பதவியில் மாற்றம்
அடுத்த வருடம் பிரதமர் பதவியில் மாற்றம்
எதிர்வரும் அடுத்த வருடத்தில் பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து எந்தவித
பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளர் வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
இன்று (07) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை
அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் இதில் எந்தவித அடிப்படையும் இல்லை இது
உண்மைக்கு புறம்பான கூற்று என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பிரியந்த குமார தியவடனவின் குடும்பத்திற்கு 2.5 மில்லியன்
பிரியந்த குமார தியவடனவின் குடும்பத்திற்கு 2.5 மில்லியன்
பிரியந்த குமார தியவடனவின் இழப்பால் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மனைவி மற்றும்
பிள்ளைகளின் நலன் கருதி மனிதநேய அடிப்படையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக ஊழியர் நலனோம்புகை நிதியத்தின் மூலம் 2.5 மில்லியன்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரியந்த குமார தியவடனவின் இழப்பு குறித்து அமைச்சரவை இணைப்பேச்சாளர் வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரண தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.
இன்று (07) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நேற்றைய தினம் அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அனைத்து அமைச்சர்களும் பிரியந்த குமார தியவடனவின் இழப்பிற்கு தமது அனுதாபத்தை தெரிவித்துள்ளர் என்றும் ரமேஷ் பத்திரண மேலும் குறிப்பிட்டார்.
2.5 மில்லியன்களை வழங்குவது குறித்து 06.12.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
- பாகிஸ்தான் சியல்கொட் பிரதேசத்தில் மனிதநேயமற்ற வகையில் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடன அவர்களுக்கான பணத்தொகை வழங்கல்
பாகிஸ்தான் சியல்கொட் பிரதேசத்தின் தொழிற்சாலையொன்றில் முகாமையாளராக பணிபுரிந்து வந்த பிரியந்த குமார தியவடன அவர்கள் 2021 திசம்பர் மாதம் 03 ஆம் திகதி கொலைகாரக்- கும்பலால் மனிதநேயமற்ற வகையில் கொலை செய்யப்பட்டுள்ளார். புலம்பெயர் பணியாளராக 11 வருடங்களுக்கு மேலாக அவர் இலங்கைப் பொருளாதாரத்திற்கு வழங்கிய ஒத்துழைப்பைக்
- கருத்தில் கொண்டு, அவருடைய இழப்பால் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மனைவி
- மற்றும் பிள்ளைகளின் நலன் கருதி மனிதநேய அடிப்படையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப்
- பணியக ஊழியர் நலனோம்புகை நிதியத்தின் மூலம் 2.5 மில்லியன்களை வழங்குவதற்காக தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வவுனியாவுக்கு ஆபத்து -அச்சத்தில் மக்கள்
வவுனியாவின் பல்வேறு பகுதிகளில், வெளிமாவட்டத்தில் இருந்து வந்து வர்த்தக நடவடிக்கையில்
ஈடுபட்டு வருவதுடன், கொரோனா விதிமுறைகளை அனைத்தும் மீறப்பட்டு வருகின்றன. இதனால், இங்கு தொற்றுகள் அதிகரிக்கும் நிலைமைகள் மீண்டும் உருவாகியுள்ளன.
இந்த நிலையில், இந்நடவடிக்கையை உடன் தடுத்து நிறுத்தி, மீண்டும் அதிகரிக்கும்
தொற்றுக்களைத் தடுத்து நிறுத்துவதற்குரிய ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எவையும் இடம்பெறவில்லை.
நகரசபையின் கனவத்துக்கு கொண்டு செல்லப்பட்டும், எவ்விதமான தீர்வுகளும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
வவுனியாவுக்கு வெளிமாவட்டங்களில் இருந்து வாகனங்களில் வரும் வர்த்தகர்கள்,தமது வர்த்தக
நடவடிக்கைகளை ரயில் நிலையம், இலுப்பையடி போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
வவுனியாவை தளமாகக் கொண்டு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வர்த்தகர்கள்
நகர சபையினருக்கு வரி உட்பட வர்த்தக நிலையங்கள், ஊழியர்களுக்கு பெரும் தொகைப்
பணங்களை செலவிட்டு, வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
அத்துடன், வெளிமாவட்டத்திலிருந்து வருபவர்களினால் மீண்டும் தொற்றுக்கள் அதிகரிக்கும்
நிலைமைகளும் மீள உருவாகியுள்ளது . இதனால், நகரில் மீண்டும் ஒரு முடக்கம் ஏற்படும்
நிலைமைகளும் காணப்படுகின்றனர் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
வீழ்ந்து நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி
வீழ்ந்து நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி
பாகிஸ்தான் காஸ்மீர் பகுதி எல்லையோரமாகி பறப்பில் ஈடுபட்ட பாகிஸ்தான் இராணுவத்திற்கு
சொந்தமான உலங்கு வானூர்தி ஒன்று திடீரென வீழ்ந்து நொறுங்கியது ,இதன் பொழுது அதில்
பயணித்த இரண்டு விமானிகள் பலியாகியுள்ளனர்
எனினும் இது விபத்து அல்ல எனவும் இந்தியா இராணுவம் சுட்டு வீழ்த்தி இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது
வெடித்து சிதறிய குண்டு 11 பேர் மரணம் – 22 பேர் காயம்
வெடித்து சிதறிய குண்டு 11 பேர் மரணம் – 22 பேர் காயம்
சோமாலிய Baidoa பகுதியில் ரிமோர்ட் கொன்றால் மூலம் நடத்த பட்ட வெடி குண்டு தாக்குதலில்
சிக்கி சம்பவ இடத்தில 11 பேர் பலியாகினர் ,மேலும் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது ,இராணுவம்
குவிக்க பட்டு தேடுதல் நடவடிக்கை முடக்கிவிட பட்டுள்ளது
சவூதி தலைநகர் மீது ஏவுகணை தாக்குதல்
சவூதி தலைநகர் மீது ஏவுகணை தாக்குதல்
சவூதி தலைநகர் மீது ஏமன் இராணுவத்தினர் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தினர்
மூன்று ஏவுகணைகள் ஏவப்பட்டன ,ஆயினும் அவை சவுதி விமான எதிர்ப்பு ஏவுகணைகளினால்
சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது







