Tag: ரணில்
ரணில் தலதா மாளிகையில் வழிபாடு
ரணில் தலதா மாளிகையில் வழிபாடு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் காலை கண்டி வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்குச் சென்று சமயக்கிரியைகளில் ஈடுபட்டார்.
தலதா மாளிகைக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்கள், கண்டி நகரபிதா திரு.கேசர சேனநாயக்க மற்றும் அமைச்சர்களினால் வரவேற்கப்பட்டு தலதா மாளிகையின் பிரதான நுழைவாயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல மற்றும் நான்கு மகா தேவாலய பஸ்நாயக்க நிலமேமார் வரவேற்றனர்.
அதன் பின்னர், தலதா மாளிகையில் புனித தந்ததாது பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் மேல்மாடிக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள், அங்கு மலர்
அஞ்சலி செலுத்தி சமய வழிபாடுகளில் ஈடுபட்டு மகா சங்கத்தினரின் ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.
சமய வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், தலதா மாளிகையில் சிறப்பு விருந்தினர்களுக்காக
ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்துக்குக்குச் சென்று நினைவுக் குறிப்பேட்டில் நினைவுக் குறிப்பொன்றை இட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இன்று பிற்பகல் மல்வத்து – அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்திக்க உள்ளார்.
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அலுத்கமகே, திலும்
அமுனுகம, குணதிலக ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர், ஜனாதிபதி ஆலோசகர் ருவன் விஜயவர்தன, ஐ.தே.க பொதுச் செயலாளர்
பாலித ரங்கே பண்டார, முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க, ஐக்கிய லக் வனிதா.
முன்னணியின் தலைவி சாந்தினி கோன்கஹகே, கம்பளை நகரபிதா சமந்த அனுரகுமார
உள்ளிட்ட கண்டி மாவட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி திரு ரணில் விக்கிரமசிங்கவிற்கு இந்திய பிரதமர் வாழ்த்து
ஜனாதிபதி திரு ரணில் விக்கிரமசிங்கவிற்கு இந்திய பிரதமர் வாழ்த்து
இலங்கை ,கொழும்பு ; இலங்கையில் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள திரு ரணில் விக்கிரமசிங்கவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து தெரிவித்து இந்திய பிரதமர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அந்த கடித்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
அதி மேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாராட்டுக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
நிறுவனமயப்படுத்தப்பட்ட ஜனநாயக வழிமுறைகள்,நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்புரீதியான கட்டமைப்பு ஆகியவற்றின் ஊடாக ஸ்திரத்தன்மை
மற்றும் பொருளாதாரமீட்சியை அடையவிரும்பும் இலங்கைமக்களின் முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிக்குமென பிரதமர் மீண்டும்வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தியா இலங்கை இடையிலான நெருக்கமானதும், தொன்மைவாய்ந்ததும், நட்புரீதியிலானதுமான உறவை வலுவாக்கவும் மக்களின்
பரஸ்பர நலனுக்காகவும் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
- பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்
- காஸ்பியன் கடலில் கப்பல் மீது தாக்குதல்
- இலங்கை முழுவதும் தனித்தனி சாலை விபத்துகளில் 4 வயது குழந்தை உட்பட நால்வர் பலி
- நௌல் புயல் கரையைக் கடந்ததால் தெற்கு சீனா முழுவதும் கனமழை
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 81500 ஐத் தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை 61
தேசிய அரசு தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து அதிகாரபூர்வ அழைப்பு எவருக்கும் வரவில்லை மனோ கணேசன்
தேசிய அரசு தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து அதிகாரபூர்வ அழைப்பு எவருக்கும் வரவில்லை மனோ கணேசன்
இலங்கை ,கொழும்பு ; தேசிய அரசு அல்லது சர்வ கட்சி அரசு அமைப்பது தொடர்பில், அரசாங்கத்திடமிருந்து எமக்கு இதுவரை அதிகாரபூர்வ அழைப்பு எதுவும் வரவில்லை. ஏனைய எதிர்கட்சிகளுக்கும் அதிகாரபூர்வ அழைப்புகள்
வரவில்லை. ஆகவே அதற்குள் “பேச்சுகள் நடக்கின்றன; அமைச்சர்கள் ஆகிறார்கள்” என்பவையெல்லாம் வெறும் சுவாரசிய செய்திகளாக மட்டுமே இருக்கின்றன. ஆனால், நாடு இன்று இருக்கும் அவதி நிலையில், ரணில்
விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவர அவகாசம் கொடுக்க வேண்டும் எனவும், அவசரப்பட்டு எதிர்ப்பு அரசியல்
ஆர்ப்பாட்டங்களை செய்யக்கூடாது எனவும், தமிழ் முற்போக்கு கூட்டணி நம்புகிறது என கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திடமிருந்து அதிகாரபூர்வ அழைப்பு எவருக்கும் வரவில்லை மனோ கணேசன்
இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியதாவது,
தேசிய அரசு அல்லது சர்வ கட்சி அரசு அமைப்பது தொடர்பில் அதிகாரபூர்வ அழைப்பு வரவில்லை. ஆனால், கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்னிடமும், ஏனைய கட்சி
தலைவர்களிடமும் நேரடியாக இது பற்றி கூறினார். ஆனால், கட்சிகளுக்கு சர்வ கட்சி அரசு அமைப்பது தொடர்பில், அரசாங்கத்திடமிருந்து அதிகாரபூர்வ அழைப்பு வரவேண்டும்.
அதன் பிறகு நாம் எமது கட்சிகள் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் குழுக்கள் மத்தியில் இதுபற்றி பேசுவோம். அதேபோல் ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமைக்குழுவிலும் பேசுவோம்.
இதுதான் ஒரு பொறுப்புள்ள நேர்மையுள்ள ஜனநாயக அரசியல் கட்சி செய்ய வேண்டிய முறைமை.
அரசாங்கத்திடமிருந்து அதிகாரபூர்வ அழைப்பு எவருக்கும் வரவில்லை மனோ கணேசன்
அதை நாம் செய்வோம். எமது முடிவுகளை எமக்கு வாக்களித்து தெரிவு செய்துள்ள, எமது மக்களின் நலன்களை முன்னிட்டு, நாம் ஒற்றுமையாக எடுப்போம்.
அதேவேளை, நாடு இன்று இருக்கும் அவதி நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவர அவகாசம் கொடுக்க வேண்டும் எனவும்,
அவசரப்பட்டு எதிர்ப்பு அரசியல் ஆர்ப்பாட்டங்களை செய்யக்கூடாது எனவும் தமிழ் முற்போக்கு கூட்டணி திடமாக நம்புகிறது.
அதுவே எங்கள் மக்களின் நிலைப்பாடாகவும் இருக்கிறது. பெரும்பான்மை அரசியல் கட்சிகளின் நலன்களை சார்ந்து மாத்திரம் தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் செய்யாது.
அரசில் சேருகிறோமோ, இல்லையோ, புதிய அரசியலமைப்பு தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள
அமைச்சருடன் நாம், மலையக தமிழ் இலங்கையர்களின் அரசியல் அபிலாஷைகளை முன் வைப்போம்.
அடுத்து வரும் அரசியலமைப்பு திருத்தத்தில் எமது மக்களின்
எதிர்பார்ப்புகளை இடம்பெறச்செய்ய எம்மால் ஆனதை நாம் பொறுப்புடன் செய்வோம்.
அமெரிக்கா தூதர் ரணிலுடன் திடீர் சந்திப்பு
அமெரிக்கா தூதர் ரணிலுடன் திடீர் சந்திப்பு
இலங்கை ,கொழும்பு ; இலங்கைக்கான அமெரிக்கா தூதர் ஜூலி சங் மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவுக்கு இடையில் திடீர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்ற முதல் நாள் போராட்டக்கார்கள் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது.
இந்த தாக்குதலை வன்மையாக கண்டித்த அவர் இலங்கையின் எதிர்கால நடவடிக்கை தொடர்பில் ஆராய்ந்தார் .
மேலும்அமெரிக்காவின் முக்கிய கண்டிப்பான தகவலையும் ரணிலிடம் வழங்கி சென்றுள்ளார் .
அமெரிக்கா தூதுவரின் விரைவான சந்திப்பு இலங்கைக்கு முக்கிய விடயத்தை அமெரிக்கா வலியுறுத்தி சென்றுள்ளதை காணமுடிகிறது .
ராஜபக்ஸவின் கைப்பாவை அரசாங்கம் ரணிலை தாக்கிய சஜித் பிரேமதாசா
ராஜபக்ஸவின் கைப்பாவை அரசாங்கம் ரணிலை தாக்கிய சஜித் பிரேமதாசா
ராஜபக்ஸவின் கைப்பாவை அரசாங்கத்தின் வழமையான மிருகத்தனம் மற்றும் உத்தியோகபூர்வ வன்முறையைப் பயன்படுத்தி, தற்போதைய “ராஜபக்ஸ நிழல்
அரசாங்கம்” இன்று காலை காலிமுகத்திடல் அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக கோழைத்தனமான மற்றும் வன்முறைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
அதனைப் செய்தியிட வந்த பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் அங்கவீனமான போர்வீரர்களும் அந்த மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு
முகங்கொடுக்க நேரிட்டதோடு இந்த தாக்குதல் உண்மையான அர்த்தத்திலயே கொடூரமான உத்தியோகபூர்வ வன்முறையாகும்.
புதிய ஜனாதிபதி பதவிக்கு வந்து ஒரு நாள் கழிவதற்குள் இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலைத் தொடுத்துள்ளதுடன் தனது எதிர்கால ஆட்சியின் தன்மை என்பதை இதன் மூலம் உணர்த்த முற்பட்டுள்ளார் என்றால், இவ்வாறான அட்டூழியங்களுக்கு
அப்பாற்பட்ட பலமிக்க அரசாங்கங்கள் மக்கள் சக்தியால் வீட்டுக்கு அனுப்பப்பட்டதை அவருக்கு நினைவூட்ட விரும்புகின்றோம்.
அந்தந்த சிவில் போராட்டத்தின் போராளிகள் ஆக்கிரமித்திருந்த இடங்கள் அனைத்தையும் மீள கையளித்து கொண்டிருக்கும் போதும், அதற்குள்,
பாதுகாப்புப் படையினர் விடியற்காலையில் புகுந்து, “உயர் உத்தரவுப்படி” இந்த கோழைத்தனமான
தாக்குதலை நடத்தியுள்ளனர். ராஜபக்ஸ அரசை வீட்டுக்கு அனுப்ப முற்படுவதற்கு எதிராக வெறியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது
எங்களுக்குத் தெரியாது, ஆனால் அது அவ்வாறு இல்லை என்று நினைக்க எந்த காரணமும் இல்லை.
ராஜபக்ஸவின் கைப்பாவை அரசாங்கம் ரணிலை தாக்கிய சஜித் பிரேமதாசா
போராடுவதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் நாட்டு மக்களுக்குள்ள ஜனநாயக உரிமையை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம்.
அரச சொத்துக்கள் மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்தாமல், வன்முறைக்குப் பதிலாக நாகரீகமான போராட்டங்களுக்காக நாங்கள் தொடர்ந்து முன் நிற்கிறோம்.
ஒரு புறம் தற்போதைய ஜனாதிபதி ஆட்சிக்கு வருவதற்கு வழி வகுத்தது காலிமுகத்திடல் உட்பட இந்நாட்டு மக்கள் முன்னெடுத்த போராட்டத்தின் விளைவினாலாகும்.
எனினும் இந்த போராட்டம் அவரை ஜனாதிபதியாவதற்கு சிறிதும் ஊக்கமளிக்கவில்லை என்றாலும், அதன் மூலம் அவர் அதிகாரத்தைப் பெற்றார்.
தான் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து 12 மணித்தியாலங்கள் செல்வதற்கு முன் அதனை ஜனாதிபதி மறந்து விட்டார் என்பது வருத்தமளிக்கிறது என்பதோடு,
ஒருவேளை ராஜபக்ஸ ஆட்சி கவிழ்க்கப்பட்டமைக்கு போராட்டம் காரணமாக அமைந்ததன் கோபமாக கூட இருக்கலாம்.
முன்னைய ராஜபக்ஸ அரசாங்கம் நாகரீக நாடாக எழுந்து நிற்பதற்கான எல்லா சந்தர்ப்பங்களையும் அழித்தொழித்தது என்பதோடு, அதுவே தற்போதைய “ராஜபக்ஸ நிழல் அரசாங்கத்தில்” நடக்க ஆரம்பித்துள்ளது.
ராஜபக்ஸ வெறியை விடவும் தீவிர வெறியாக மாறியிருப்பது தான் வித்தியாசமாக உள்ளது.
இந்த நாடு எவ்வளவு பாதாளப் படுகுழியில் வீழ்ந்துள்ளது என்பதை புரிந்து கொள்வதற்குப் பதிலாக, தனது அதிகாரத் திட்டத்திற்காக மட்டுமே செயல்படும் இந்த
“ராஜ்பக்ஸவின் நிழல் அரசாங்கம்” மக்களின் அடிப்படை உரிமையான எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையையும், சுதந்திரத்தையும் மீறியுள்ளதோடு, ஊடகவியலாளர்களுக்கு உரித்தான சுதந்திரத்தையும் கொடூரமான முறையில் மீறியுள்ளது.
ஆயுதம் ஏந்தியவர்கள், அங்கவீனர்கள் மற்றும் பொதுமக்கள் மீது ஆயுதம் ஏந்தி தாக்குதல் நடத்திய உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற அனைத்து
அதிகாரிகளுக்கும் எதிராக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதோடு, இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு உத்தரவிட்ட அனைவருக்கும் எதிராக உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இந்த வெறுக்கத்தக்க மற்றும் கோழைத்தனமான தாக்குதலால் நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம் என்பதோடு, தாக்குதலின் உள்ளார்ந்த வெறுப்புடன் அதைக்
கண்டிக்கிறோம். நமது நாட்டை கோத்திர நிலைக்கு தள்ள முயலும் “ராஜபக்ஸ நிழல் அரசுக்கு” எதிராக முழு நாடும் எழுந்து நிற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அரசுக்கு வலியுறுத்துகிறோம்!
சஜித் பிரேமதாஸ – எதிர்க்கட்சி தலைவர்
ரணில் தலைமையில் புதிய அமைச்சரவை நியமனம்
ரணில் தலைமையில் புதிய அமைச்சரவை நியமனம்
இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் புதிய அமைச்சரவை தெரிவு இடம்பெற்ற வண்ணம் உள்ளது
கொழும்பு-7, ப்ளவோர்ஸ் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த அமைச்சரவை நியமனம் இடம்பெறுகிறது.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தெரிவின் பொழுது பேரம் பேச்சுக்களின் பொழுது பேரம் பேச பட்ட விடயங்கள் தற்போது அமைச்சரவை நியமனத்தில் இடம்பெறுகிறது குறிப்பிட தக்கது.
ராஜபக்சாக்களுக்கு நான் நண்பன் இல்லை ரணில் கூவல்
ராஜபக்சாக்களுக்கு நான் நண்பன் இல்லை ரணில் கூவல்
இலங்கை கொழும்பு ; இலங்கையில் எட்டாவது புதிய ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்துள்ள ரணில் விக்கிரமசிங்க தான் ராஜபக்சக்கள் நண்பன் இல்லை என தெரிவித்துள்ளார் .
மொட்டு கட்சியின் ஆதரவுடன் மகிந்தவின் ஆசிர்வாதத்துடன் ஜனாதிபதியாக தெரிவான ரணில் விக்கிரமசிங்க ராஜபக்சக்கள் நண்பன் இல்லை என்கின்ற தகவல் மக்களை சிரிப்பில் மூழ்கடித்துள்ளது.
எரிபொருள் கப்பல் வருகை அரசியல் நடத்தும் ரணில்
ரணில் வீடு முன்பாக பொலிஸ் மக்கள் மோதல் 26 பேர் காயம்
இதெல்லாம் அரசியலில் சகயமப்பா என்பதை ரணிலின் இந்த காமடி பேச்சில் தெரியப்படுத்த பட்டுள்ளது.
இலங்கை புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ள நிலையில் மக்களை குஷி படுத்த ரணில் இவ்விதம் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது .
ரணிலுக்கு ஒட்டு போட்டவர்களும் ரணிலும் வீட்டுக்கு செல்வார் மக்கள்அறிவிப்பு
ரணிலுக்கு ஒட்டு போட்டவர்களும் ரணிலும் வீட்டுக்கு செல்வார் மக்கள்அறிவிப்பு
இலங்கை ,கொழும்பு ; இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்ட ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவருக்கு வாக்களித்த 134 பேரையும் வீட்டுக்கு அனுப்புவோம் என போராட்ட காரர்கள் தெரிவித்துள்ளனர் .
மக்கள் விரோதி மற்றும் ராஜபக்ச குடும்பத்தை பாதுகாக்க மகிந்தாவினால் நியமிக்க பட்ட ரணில் விக்கிரமசிங்க முப்பது நாளுக்குள் வீட்டுக்கு செல்வார் என போராட்ட கார்கள் தெரிவித்துள்ளனர் .
மேலும் ரணில் விக்கிரமசிங்காவிற்கு வாக்களித்த 134 பேரையும் மக்கள் கவனித்து கொள்வார்கள் என்கின்றனர்.
எங்கள் ஆதரவு ரணிலுக்கு மைத்திரி குத்துக்கரணம்
அவ்வாறு எனினம் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பிக்கள் உள்ளிட்ட 134 எம்பிக்கள் வீடுகள் போராட்ட காரர்களினால் முற்றுகையிட பட போகிறது .
மேலும் இலங்கையில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டு விட்டார்.
நீங்கள் உங்கள் வேலைகளை பாருங்கள் என போராட்டக்கார்களை பார்த்து மகிந்த ராஜபக்ச கேவலமாக கூறிய வார்த்தை. போராட்ட கார்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது.
ரணிலுக்கு ஒட்டு போட்டவர்களும் ரணிலும் வீட்டுக்கு செல்வார் மக்கள்அறிவிப்பு
வரும் வாரம் அளவில் போராட்டம் மீளவும் உக்கிரம் பெறும் என எதிர் பார்க்க படுகிறது .
மக்கள் போராட்டத்தை முன்னெடுப்பவர்களை குறிவைத்து கைது செய்யும் நகர்வில் ரணில் உத்தரவு வழங்கவுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
போராட்டக்காரர்கள் கூறுவது போன்று மீளவும் நாடு முடக்க பட்டால்
இலங்கை வரலாற்றில் குறைந்த நாட்கள் ஜனாதிபதியாக அங்கம் வகித்த பெருமை ரணிலுக்கு சாரும் என்பதை அடித்து கூறலாம் .
கோட்டபாயா பிடியில் ரணில் அரசியல் சதுரங்கம் ஆரம்பம்
கோட்டபாயா பிடியில் ரணில் அரசியல் சதுரங்கம் ஆரம்பம்
இலங்கையில் மக்களினால் துரத்த பட்ட ஒருவர் இலங்கையின் ஜனாதிபதியான வரலாறு இடம்பெற்றுள்ளது .
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக விளங்கிய ரணில் விக்கிரமசிங்க தனது பாராளுமன்ற உறுப்பு அங்கத்துவத்தை இழந்த நிலையில் இன்று இலங்கையின் ஜனாதிபதியானார் .
யாரும் சற்றும் எதிர் பார்த்திராத அரசியல் சித்து விளையாட்டில் ரணில் வென்று முடி சூடினார் .
பேரம் பேச்சுக்களின் அடிப்படையில் வாக்குகள் சிதறடிக்க பட்டு அரியணையில் அமர்ந்தார் .
இந்த அரியணை ஏற்றத்திற்காக பல கோடிகள் பேரம் பேச்சில் மாற்ற பட்டுள்ளன .
தனது ஜனாதிபதி ஆசையையும் வரலாற்றில் இலங்கை ஜனாதிபதி என்கின்ற கீரீடத்தையும் ரணில் தட்டி சென்றுள்ளார் . எனினும் இவரது ஆட்சி 18 மாதங்களில் கவிழ்க்க படும் நிலையே உள்ளது.
அதன் பின்னர் பொது தேர்தலை சந்திக்க வேண்டும்.
இதற்குள்ளாக கொந்தளித்த மக்களை குஷி படுத்த வேண்டும் மீளவும் இயல்பு நிலைக்கு நாட்டை அழைத்து செல்ல வேண்டும் .
அவ்விதம் வென்றால் மட்டுமே தனது கட்சியை காப்பாற்றி கொள்வதுடன் மேலும் மக்கள் நன்மதிப்பை பெற்றுக்கொள்ள முடியும்.
ஆனால் மக்கள் விதிக்கும் கோரிக்கை என்னவென்றால் ராஜபக்ச அரசின் லஞ்ச ஊழல் மோசடி விசாரிக்க பட வேண்டும் .
மேலும் அவர்கள் கொள்ளையடித்த பணம் மீள நாட்டுக்கு கொண்டுவரப் படவேண்டும் ராஜபக்சாக்கள் சிறையில் அடைக்க படவேண்டும்
இவ்வாறான பலத்த சவாலுக்கு மத்தியில் ரணில் போராட்டம் இடம்பெறுகிறது.
தான் ஜனாதிபதியானேன் என்ற மமதையை ரணில் விக்கிரமசிங்காவில் காண முடியவில்லை .மேலும் எதிர்கால நெருக்கடியை எவ்வாறு கையாள போகிறார் என்பதே ரணில் உடல் அசைவில் அவதானிக்க முடிகிறது .
தனக்கு எதிராக கொதித்துள்ள மக்களுக்கு ரணில் விக்கிரமசிங்க என்ன செய்ய போகிறார் …?
கோட்டாவை போல ரணிலும் விரட்டியடிக்க படுவாரா..? அல்லது மக்கள் போராட்டத்தை நீர்த்து போக வைப்பாரா ..?
மக்கள் கொதிப்பு இவ்விதம் எழுந்தால் ரணில்விக்கிரமசிங்கா கோட்டாவை போல விரட்டியடிக்க படுவார் என்பதே களநிலவரம் .
மக்கள் கோரிக்கைக்கு கட்டு பட்டு பதவி விலகும் நிலையே ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏற்படும் என்பதை இப்பொழுதே இங்கே பதிந்து வைக்கிறோம் .
மக்களை கட்டாய படுத்த பல இலவச அறிவிப்புகளை ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்வார் ,அதில் மயங்கி மக்கள் ரணிலை மக்கள் ஏற்று கொள்வார்களா என்பதே சந்தேகமாக உள்ளது .
கடன் தள்ளுபடி என்பன இதனை காண்பிக்கிறது .ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியான மறு மணித்தியாலம் சர்வதேச நாணய நிதியம் பேசிட அழைக்கிறது .
அவ்வாறு எனின் ரணில் விக்கிரமசிங்காவின் நிகழ்ச்சி நிரலின் கீழ் யாவும் நடக்கிறது என்பதை இதன் மூலம் கணிக்க முடிகிறது .
ரணில் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் தள்ளாடும் புதிய அரசு
ரணில் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் தள்ளாடும் புதிய அரசு
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பாரளுமன்றினால் நியமிக்க பட்டுள்ள ரணில் விக்கிரசிங்கா ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடிக்க தயாராகிறது .
நரி ரணில் குட்டையை குழப்பி மீனை பிடித்து ஆட்சியில் ஏறி அமர்ந்தார் .அதே குட்டையை மீள குழப்பிட மக்கள் போராட்டம் தயாராகி வருகிறது.
இரும்பு கரம் கொண்டு பிரதமர் மற்றும் ஜனாதிபதி மாளிகைகள் என்பன பாதுகாப்பு இறுக்கம் மேற்கொள்ள பட்டுள்ளது .
ரணில் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் தள்ளாடும் புதிய அரசு
கோட்டாவை துரத்தி ஜனாதிபதியாகும் ரணில் ஆட்டத்தை ஆரம்பித்தார்
இருந்த பொழுதும் இந்த இராணுவ தடைகளை உடைத்து மக்கள் போராட்டம் வெடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது.
ரணில் ஜனாதிபதி என்ற அறிவிப்பு போராட்ட காரர்கள் மத்தியில் கொதிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ளது .
பொம்மை ரணில் ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றுவதில் தனது நாட்களை கழிப்பார் என்கின்ற நிலையில் மக்கள் போராட்டம் மீள வெடிக்க தயாராகி வருகிறது.
இவ்வாறு ரணில் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தால் இலங்கையில் குறுகிய நாட்கள் ஜனாதிபதியாக அங்கம் வகித்தவர் என்ற பெருமையை ரணில் தட்டி செல்வர் என்பதாகும்.
இவ்வாறு எனினும் 18 மதங்களில் ரணில் ஆட்சி கவிழ்க்க படும் நிலையே உள்ளது.
டலஸ் இலங்கையின் ஜனாதிபதி ஆட்சி நிலைக்குமா ரணில் விடுவாரா
டலஸ் இலங்கையின் ஜனாதிபதி ஆட்சி நிலைக்குமா ரணில் விடுவாரா
இலங்கை ;இன்று ஆரம்பமாகியது ஒரு ஒருமித்த பயணத்தின் தொடங்கமாகும் எனவும், பாராளுமன்னத்திற்கு அப்பால் மக்களின் வாழ்வை கட்டியெழுப்பும்
போராட்டத்திற்காக தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட தீர்மானித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இத்தருணத்தில் நாட்டு மக்களுக்காக வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவித்த அவர்,இந்நாட்டின் அரசியலுக்கு உண்மையான புதிய கலாச்சாரத்தை அறிமுகப்படுத்த தன்னை அர்ப்பணிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
டலஸ் இலங்கையின் ஜனாதிபதி ஆட்சி நிலைக்குமா ரணில் விடுவாரா
இந்நாட்டு மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை வென்றெடுத்த வன்னம் பத்தொன்பதாவது அரசியலமைப்பு திருத்தத்தை மீண்டும்
அமுல்படுத்துவதற்கும், நாட்டை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் முன்னோக்கி கொண்டு செல்வதற்காக அர்ப்பணிப்புடன்
இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,இந்நாட்டு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதே ஒரே
நோக்கம் எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,அதற்காக தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.
இடைக்கால ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழியப்பட்ட டலஸ் அழகப்பெரும மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர்
கலந்து கொண்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (19) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இடைக்கால ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நாளை இடம் பெறுகிறது என்பதோடு,
இதில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்பன தமது ஆதரவை நாடாளுமன்ற உறுப்பினர்
டலஸ் அழகப்பெருமவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ரணிலை விரட்டுவோம் மக்கள் முழக்கம் கொதிக்கும் இலங்கை
ரணிலை விரட்டுவோம் மக்கள் முழக்கம் கொதிக்கும் இலங்கை
இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கா அதிகாரத்தில் இருப்பதை அனுமதிக்க முடியாது என இலங்கை போராட்ட காரர்கள் அறிவித்துள்ளனர்.
தொடர்ந்தும் அதி உயர் பதவியில் நாட்டை மேலும் ரணில் விக்கிரமசிங்க ஆள முனைந்தால் அவருக்கு எதிராக பாரிய போராட்டத்தை முன்னெடுப்போம்.
பல் நாட்டு அரசுடன் இணைந்து அதிகாரத்தை தக்கவைத்து கொள்ள ரணில் விக்கிரமசிங்க கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர் .
ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றிடவும் மேலும் நாட்டை கீழ்நோக்கி செல்லும் நிலைக்கு எடுத்து செல்ல பிற் படுத்தப்பட்ட சிந்தனைக்குள் ஊறியுள்ள ரணில் முயல்வார் .
ரணிலை விரட்டுவோம் மக்கள் முழக்கம் கொதிக்கும் இலங்கை
அதனால் அவரை அந்த பதவியில்; இருந்து விரட்டும் வரை நாம் போராடுவோம் என்கின்றனர் மக்கள் .
இவ்வாறான மக்கள் போராட்டங்கள் இலங்கையில் தொடர்ந்தால் இலங்கை மேலும் சோமாலியாக மாறும் நிலை ஏற்படும் என மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் மன்றம் விரும்பாத ஒருவர் ஜனாதிபதி நிலையில் அங்கம் வகிப்பதை முற்றாக கைவிட வேண்டும் என அந்த போராட்ட கார்கள் தெரிவித்துள்ளனர்.
எரிபொருளை நாட்டுக்குள் எடுத்து அதனை நிவர்த்தி செய்துவிட்டால் மக்கள் போராட்டம் அமைதியாகிவிடும் என்பதால் எரிபொருளில் மற்றும் எரிவாயு விநியோகத்தை150 ரூபாவுக்குள் மக்களுக்குவிற்பனை செய்திடும் நரி தந்திரத்தில் ரணில் ஈடுபட்டுள்ளார்.
இது தனது அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள்வும் மக்கள் எழுச்சியை மழுங்கடிக்க ரணில் விக்கிரமசிங்க போட்டுள்ள மகா நரி திட்டங்களில் இதுவும் ஒன்று என போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர் .
முட்டாள் கோட்டாவும் பொம்மை ரணிலும் எமக்கு வேண்டாம் மக்கள் முழக்கம்
முட்டாள் கோட்டாவும் பொம்மை ரணிலும் எமக்கு வேண்டாம் மக்கள் முழக்கம்
இலங்கையில் ஆளும் ஜனாதிபதி முட்டாள் கோட்டாவும் , பொம்மை பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவும் நமக்கு வேண்டாம் என மக்கள் குழு அறிவித்துள்ளது.
ரணில் இலங்கையின் ஜனாதிபதியாக வர முடியாது ,மக்கள் ஆதரவு இன்றி பின் கதவால் பிரதமர் ஆன பொம்மை ரணிலும் எமக்கு தேவையில்லை.
புதியவர் நியமிக்க பட வேண்டும். அவரும் 12 மதத்திற்கு பின்னர் தேர்தல் மூலம் தேர்வு செய்ய பட வேண்டும் என்கின்ற பல விடயங்களை மக்கள் குழு பரிந்துரைத்துள்ளது .
நாடு தழுவிய ரீதியில் தமிழர் சிங்களவர்கள் முஸ்லீம்கள் என மக்கள் திரண்டு நடத்திய போராட்டம் காரணமாக இலங்கை பதட்டத்தில் உறைந்துள்ளது.
கோட்டாபய ஜனாதிபதி இல்லை. அவரது குடும்பத்தில் அவன் ஒரு முட்டாள் .என தலைமை பிக்கு ஒருவர் கடுமையாக சாடினார்.
அவர் பதுங்கு குழிக்குள் அல்லது இராணுவ முகாமில் மக்களுக்கு பயந்து மறைந்து உள்ளார் .
இந்த முட்டாளும் பொம்மையும் எமக்கு வேண்டாம் என மக்கள் மன்றம் பகிரங்கமாக அறிவித்துள்ளது.
இவர்கள் எங்கு பதுங்கி இருந்தாலும் உடனே பதவி விலகுவதாக அறிவிக்க வேண்டும் .
இல்லை எனின் மக்களை எழுச்சி இதனை விட மோசமானதாக அமையும் என்கிறது மக்கள் குழு.
கோட்டா மாளிகையை தேடி வந்தோம். ஆனால் அவர் அங்கிருந்து தப்பி விட்டார் .
இதன் மூலம் மக்கள் சொல்ல வந்த செய்தியை அவர் புரிந்திருப்பார்.
எனவே உடனே முட்டாளும் ,பொம்மையும் பதவி விலக வேண்டும் என இவர்கள் இடித்துரைத்துள்ளனர்.
போர் கீரோ கோட்டா முட்டாளானர் ,அரசியல் சாணக்கியர் ரணில் பொம்மை ஆனார் .
மக்கள் மன்றில் மனதில் நடந்த சகிப்பு தன்மை அற்று போனதன் வெளிப்பாடாக இவை காணப்படுகிறது
இன்று இவர்களுக்கு நாளை நம்ம கிழட்டு சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் இதுபோல நடக்கும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு ரணில் உத்தரவு
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு ரணில் உத்தரவு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு இடையில் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
களுத்துறை, கம்பஹா, காலி மற்றும் இரத்தினபுரி மாவட்ட செயலாளர்களுடன் இது தொடர்பான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக திறைசேரி நடவடிக்கை திணைக்களம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக பிரதமரின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மாவட்ட செயலாளர்கள் ஊடாக நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்குமாறும்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொது திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்
யானை கட்சி உறுப்பினருக்கு கொலை மிரட்டல்!
யானை கட்சி உறுப்பினருக்கு கொலை மிரட்டல்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி
உறுப்பினர் முத்துசாமி முகுந்தகஜன் அவர்களுக்கு கொலை மிரட்டல்
விடுக்கப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று 26 பிரதேச சபை உறுப்பினர் செய்த முறைப்பாட்டின்
அடிப்படையில் மாங்குளம் பொலிசாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்

- காஸ்பியன் கடலில் கப்பல் மீது தாக்குதல்

- இலங்கை முழுவதும் தனித்தனி சாலை விபத்துகளில் 4 வயது குழந்தை உட்பட நால்வர் பலி

- நௌல் புயல் கரையைக் கடந்ததால் தெற்கு சீனா முழுவதும் கனமழை

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 81500 ஐத் தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை 61

ஒரு ட்ரில்லியன் ரூபாயை அச்சடிக்க ரணில் உத்தரவு
ஒரு ட்ரில்லியன் ரூபாயை அச்சடிக்க ரணில் உத்தரவு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மத்திய வங்கியினால் மேலும்
ஒரு ட்ரில்லியன் ரூபாயை அச்சடிக்க ரணில் உத்தரவு பிறப்பித்துள்ளார்
இவ்விதமான செயல்பாடு மேலும் நாட்டை பலவீன படுத்தி சிக்கலை ஏற்படுத்தும் என
பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்
நிதி அமைச்சராக ரணில் பதவி ஏற்பு
நிதி அமைச்சராக ரணில் பதவி ஏற்பு
இலங்கையில் பிரதமராக விளங்கி வரும் ரணில் விக்கிரமசிங்க புதிய நிதி அமைச்சராக பதவி ஏற்றுள்ளார்
ஜனாதிபதி கோட்டா முன்பாக இவர் இந்த பதவியினை ஏற்றுள்ளார்
எதிர் வரும் ஆறு வாரத்தில் புதிய வரவு செலவு அறிக்கையை இவர் சமர்ப்பிப்பார் என எதிர் பார்க்க படுகிறது
ரணிலுக்கும் மொட்டுக்கும் இடையில் சண்டை தீவிரம்
ரணிலுக்கும் மொட்டுக்கும் இடையில் சண்டை தீவிரம்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையே முதலாவது முரண்பாடு முதல் நாளன்றே தோற்றியுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றதன் பின்னர், பாராளுமன்றம் இன்று (17) முதன்முறையாக கூடியது.
இந்நிலையில், நாளொன்றை வீணடிப்பதைத் தவிர்க்க, பெண் எம்.பி ஒருவரை பிரதி
சபாநாயகராக ஏகமனதாக நியமிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எம்.பி.க்களிடம் கேட்டுக் கொண்டார்.
எனினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஆண் எம்.பி ஒருவரின் பெயரை பிரேரித்து முன்மொழிந்தது. இது, பாராளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்புக்கு வழிவகுத்தது.
பிரதி சபாநாயகருக்கு ரோகினி கவிரத்னவின் பெயரை எதிர்க்கட்சிகள் முன்மொழிய, ஸ்ரீ லங்கா பொதுஜ பெரமுன.
அஜித் ராஜபக்ஷவை முன்மொழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்கள் ஆதரவு ரணிலுக்கு மைத்திரி – குத்துக் கரணம்
எங்கள் ஆதரவு ரணிலுக்கு மைத்திரி – குத்துக் கரணம்
இலங்கையில் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கா நியமிக்க பட்டதை அடுத்து
அவருக்கு நாம் ஆதரவு வழங்க மாட்டோம் என மைத்திரி அணி தெரிவித்து வந்தது
தற்போது நாட்டின் தேவை கருதி தாம் ரணிலுக்கு ஆதரவு வழங்குவதாக மைத்திரி அறிவித்துள்ளார்
- பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்
- காஸ்பியன் கடலில் கப்பல் மீது தாக்குதல்
- இலங்கை முழுவதும் தனித்தனி சாலை விபத்துகளில் 4 வயது குழந்தை உட்பட நால்வர் பலி
- நௌல் புயல் கரையைக் கடந்ததால் தெற்கு சீனா முழுவதும் கனமழை
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 81500 ஐத் தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை 61
ரணில் வீடு செல்ல வேண்டும் – மக்கள் அவர் வீடு முன்பாக போராட்டம்
ரணில் வீடு செல்ல வேண்டும் – மக்கள் அவர் வீடு முன்பாக போராட்டம்
இலங்கையில் ஆளும் கோட்டா அரசுக்கு முண்டு டு கொடுத்து ஆட்சி நடத்தி வரும் ரணில் விக்கிரமசிங்கவும் கோட்டா ,மகிந்தா போல வீடு செல்ல வேண்டும் என மக்கள் கோரி வருகின்றனர் .
இவ்வாறான கோரிக்கையுடன் ரணில் விக்கிரமசிங்கா ,வீடு முன்பாக சிங்கள மக்கள் போராட்டம் ஒன்றை நடத்தி வருகின்றனர் .
இந்த போராட்டத்தை அடுத்து அவர் கடுப்பில் உறைந்துள்ளாராம்.
தற்போது பலத்த இராணுவ காவல்துறை படதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது .






