உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்
Posted in இலங்கை செய்திகள்

உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக விரிவான விசாரணை நடத்தி அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக அமைச்சரவை உபக்குழுவொன்றை

நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், பெப்ரவரி மாத இறுதிக்குள் இந்த முன்மொழிவை அமைச்சரவையில் சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில், கடந்த 7ஆம் திகதி விவசாய அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

உமா ஓயா திட்டத்திற்காக நிலம் மற்றும் சொத்துக்களை கையகப்படுத்தியவர்களிடமிருந்து இதுவரை நிவாரணம் வழங்காதவர்களுக்கு நிவாரணம் வழங்குதல், திட்ட கட்டுமானத்தின் போது மண் சரிவு மற்றும்

வெடிப்புகள் காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குதல், பயிர் இழப்பீடு பெறாதவர்களுக்கு பயிர் இழப்பீடு வழங்குதல், நீர் திட்டங்கள் மூலம் குடிநீரை இழந்தவர்களுக்கு சுத்தமான நீரை வழங்குதல்,

குத்தகைதாரர்களுக்கு செலுத்தப்படாத வாடகை பணத்தை வழங்குதல், வீடுகள் முழுமையாக சேதமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குதல், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து முழுமையான ஆய்வின் பின்னர் நடவடிக்கை

எடுத்தல், உமா ஓயா தாழ்நில மக்களுக்கு நீர்ப்பாசன நீர் மற்றும் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக ஹல்பிட்டிகல நீர்த்தேக்கத்தை நிர்மாணித்தல், முழு உமா ஓயா திட்டத்திலும் நடந்த மோசடி, ஊழல், முறைகேடுகள் மற்றும்

சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து முழுமையான விசாரணை நடத்துதல் போன்ற விடயங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தால் மத்திய மலைநாட்டில் ஏற்படும் மண் அரிப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும், அதன்படி, இந்த

நோக்கத்தை அடைய அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை வழங்க அமைச்சரவை உபக்குழுவை நியமிப்பது பொருத்தமானது என்று அமைச்சர் லால் காந்த பரிந்துரைத்தார்.

வன்னி மைந்தன் டிக் டாக் ஊடாக வெள்ள நிவாரண உதவி |அள்ளி கொடுத்த அண்ணா |வெள்ளம் நிவாரணம்
Posted in உளவு செய்திகள்

வன்னி மைந்தன் டிக் டாக் ஊடாக வெள்ள நிவாரண உதவி |அள்ளி கொடுத்த அண்ணா |வெள்ளம் நிவாரணம்

வன்னி மைந்தன் டிக் டாக் ஊடாக வெள்ள நிவாரண உதவி |அள்ளி கொடுத்த அண்ணா |வெள்ளம் நிவாரணம்

வன்னி மைந்தன் டிக் டாக் ஊடாக வெள்ள நிவாரண உதவி |அள்ளி கொடுத்த அண்ணா |வெள்ளம் நிவாரணம்

வீடியோ

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இலங்கை திரும்பினார்
Posted in இலங்கை செய்திகள்

அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கு நிவாரணம்

அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கு நிவாரணம்

அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு அரசாங்கத்தினால் முடிந்த அனைத்து நிவாரணங்களும் வழங்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ‘போரினால் பாதிக்கப்பட்ட இராணுவத்தினருக்கு மின்சார மோட்டார் சைக்கிள் வழங்கும்’ நிகழ்விலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அதன்படி அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 17 மில்லியன் ரூபா செலவில் 50 மின்சார மோட்டார் சைக்கிள்கள் இதன்போது வழங்கப்பட்டன.

நிகழ்வில் அடையாள அம்சமாக அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் சிலருக்கு ஜனாதிபதியால் மின்சார சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் ஒருமைப்பாட்டையும், சுயாதீனத் தனைமையையும் பாதுகாக்க உயிரைப் பணயம் வைத்து போராடிய இராணுவ வீரர்களுக்கு நன்றி கூறினார்.

அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கான மேலும் 76 மின்சார மோட்டார் சைக்கிள்களை கொள்வனவு செய்வதற்கான நிதி ஒதுக்குவதாக உறுதியளித்த ஜனாதிபதி, மற்றைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு இராணுவ வீரர்களின் நலனுக்காக உயர்வான அர்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

Featured

Loading...
Posted in இலங்கை செய்திகள்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு ரணில் உத்தரவு

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு ரணில் உத்தரவு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட

மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு இடையில் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

களுத்துறை, கம்பஹா, காலி மற்றும் இரத்தினபுரி மாவட்ட செயலாளர்களுடன் இது தொடர்பான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக திறைசேரி நடவடிக்கை திணைக்களம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக பிரதமரின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட செயலாளர்கள் ஊடாக நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்குமாறும்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொது திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்

    Posted in இலங்கை செய்திகள்

    தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்களில் வாழும் குடும்பங்களுக்கு நிவாரணம்

    தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்களில் வாழும் குடும்பங்களுக்கு நிவாரணம்

    நுவரெலியா மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்களில் வாழும் குடும்பங்களுக்கு

    நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலகொட தெரிவித்துள்ளார்.

    நுவரெலியா மாவட்டத்தில் அங்குராந்கெத்த, ரன்தெட்டிய, வலப்பனே நில்தண்டாஹின்ன, நோர்வூட் இன்ஜஸ்டி

    கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும், ஹட்டன் பொலிஸ் பிரிவின் புரொடைஸ் தோட்ட மேற்பிரிவிற்கும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    குறித்த பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் சிலவற்றை திறப்பதற்கு அனுமதி

    வழங்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை கொவிட் தொற்றுக்கு இலக்கான சுமார் இரண்டாயிரம் பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

      Posted in இலங்கை செய்திகள்

      நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை

      நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை

      பல துறையினருக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும்

      உயர்கல்வி, தொழில் நுட்பம், புத்தாக்கம் மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தனதெரிவித்துள்ளார்.

      சிறிய மற்றும் நடுத்தர தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு நிதி வசதியை வழங்குவதற்கும், மூடப்பட்ட நெல் ஆலைகளை மீள

      திறப்பதற்கும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 20ஆம் திகதியிலிருந்து பெரும்போகத்திற்குத் தேவையான உரத்தை

        கொள்வனவு செய்வதற்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

        அரசாங்கத்தினால் உறுதிசெய்யப்பட்ட மேலதிக 16 வகைக்கான உற்பத்திகளை ஊக்குவித்தல். மக்கள் வங்கியினால் அஸ்வென்ன

        என்ற (அறுவடை) பெயரில் 30 இலட்சம் ரூபா வரையில் விசேட கடன் முறையொன்றை அறிமுகப்படுத்துதல் மற்றும் 200 விசேட கொத்து

        உர விவசாய கிராமங்களை ஏற்படுத்வும் திட்டமிடப்பட்டுள்ளது 50 பசுமை பூங்கா மற்றும் அறுவடைகளை விற்பனை செய்யும் 200

        விற்பனை நிலையங்களை ஏற்படுத்துதல். இம்முறை ஐந்து லட்சத்து 23 ஆயிரம் ஹெக்டெயர் விளைச்சலுக்காக ஒரு லட்சத்து 50 ஆயிரம்

        விவசாயிகளுக்கு உரம் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

        நிவாரணம் வழங்குவதற்கு
        நிவாரணம் வழங்குவதற்கு