கோட்டபாயா பிடியில் ரணில் அரசியல் சதுரங்கம் ஆரம்பம்

Spread the love

கோட்டபாயா பிடியில் ரணில் அரசியல் சதுரங்கம் ஆரம்பம்

,

இலங்கையில் மக்களினால் துரத்த பட்ட ஒருவர் இலங்கையின் ஜனாதிபதியான வரலாறு இடம்பெற்றுள்ளது .


ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக விளங்கிய ரணில் விக்கிரமசிங்க தனது பாராளுமன்ற உறுப்பு அங்கத்துவத்தை இழந்த நிலையில் இன்று இலங்கையின் ஜனாதிபதியானார் .

யாரும் சற்றும் எதிர் பார்த்திராத அரசியல் சித்து விளையாட்டில் ரணில் வென்று முடி சூடினார் .


பேரம் பேச்சுக்களின் அடிப்படையில் வாக்குகள் சிதறடிக்க பட்டு அரியணையில் அமர்ந்தார் .

இந்த அரியணை ஏற்றத்திற்காக பல கோடிகள் பேரம் பேச்சில் மாற்ற பட்டுள்ளன .

தனது ஜனாதிபதி ஆசையையும் வரலாற்றில் இலங்கை ஜனாதிபதி என்கின்ற கீரீடத்தையும் ரணில் தட்டி சென்றுள்ளார் . எனினும் இவரது ஆட்சி 18 மாதங்களில் கவிழ்க்க படும் நிலையே உள்ளது.

அதன் பின்னர் பொது தேர்தலை சந்திக்க வேண்டும்.

இதற்குள்ளாக கொந்தளித்த மக்களை குஷி படுத்த வேண்டும் மீளவும் இயல்பு நிலைக்கு நாட்டை அழைத்து செல்ல வேண்டும் .

அவ்விதம் வென்றால் மட்டுமே தனது கட்சியை காப்பாற்றி கொள்வதுடன் மேலும் மக்கள் நன்மதிப்பை பெற்றுக்கொள்ள முடியும்.

ஆனால் மக்கள் விதிக்கும் கோரிக்கை என்னவென்றால் ராஜபக்ச அரசின் லஞ்ச ஊழல் மோசடி விசாரிக்க பட வேண்டும் .

மேலும் அவர்கள் கொள்ளையடித்த பணம் மீள நாட்டுக்கு கொண்டுவரப் படவேண்டும் ராஜபக்சாக்கள் சிறையில் அடைக்க படவேண்டும்

இவ்வாறான பலத்த சவாலுக்கு மத்தியில் ரணில் போராட்டம் இடம்பெறுகிறது.

தான் ஜனாதிபதியானேன் என்ற மமதையை ரணில் விக்கிரமசிங்காவில் காண முடியவில்லை .மேலும் எதிர்கால நெருக்கடியை எவ்வாறு கையாள போகிறார் என்பதே ரணில் உடல் அசைவில் அவதானிக்க முடிகிறது .

தனக்கு எதிராக கொதித்துள்ள மக்களுக்கு ரணில் விக்கிரமசிங்க என்ன செய்ய போகிறார் …?


கோட்டாவை போல ரணிலும் விரட்டியடிக்க படுவாரா..? அல்லது மக்கள் போராட்டத்தை நீர்த்து போக வைப்பாரா ..?

மக்கள் கொதிப்பு இவ்விதம் எழுந்தால் ரணில்விக்கிரமசிங்கா கோட்டாவை போல விரட்டியடிக்க படுவார் என்பதே களநிலவரம் .

மக்கள் கோரிக்கைக்கு கட்டு பட்டு பதவி விலகும் நிலையே ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏற்படும் என்பதை இப்பொழுதே இங்கே பதிந்து வைக்கிறோம் .

மக்களை கட்டாய படுத்த பல இலவச அறிவிப்புகளை ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்வார் ,அதில் மயங்கி மக்கள் ரணிலை மக்கள் ஏற்று கொள்வார்களா என்பதே சந்தேகமாக உள்ளது .

கடன் தள்ளுபடி என்பன இதனை காண்பிக்கிறது .ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியான மறு மணித்தியாலம் சர்வதேச நாணய நிதியம் பேசிட அழைக்கிறது .

அவ்வாறு எனின் ரணில் விக்கிரமசிங்காவின் நிகழ்ச்சி நிரலின் கீழ் யாவும் நடக்கிறது என்பதை இதன் மூலம் கணிக்க முடிகிறது .

    Leave a Reply