Tag: மரணம்
யாழில் தாயுடன் சென்ற மகன் – லொறி சக்கரத்தில் நசிந்து மரணம்
யாழில் தாயுடன் சென்ற மகன் – லொறி சக்கரத்தில் நசிந்து மரணம்
யாழ்ப்பாணம் சத்திர சந்தி பகுதியில் தாயுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த
ஏழுவயது சிறுவன் ஒருவன் வேகமாக வந்த லொறி மோதியதில் அதன் சக்கரத்தில்
நசிந்து பலியாகியுள்ள சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது
இலங்கையில் வீதி விதிமுறைகளை பின்பற்றாது வாகன ஓட்டிகள் செல்வதால்
இவ்விதமான விபத்து சம்பவங்கள் அதிகரித்து செல்கிறது
டீசலுக்கு வரிசையில் காத்திருந்தவர் மரணம்
டீசலுக்கு வரிசையில் காத்திருந்தவர் மரணம்
இலங்கையில் எரிபொருள் நிலையம் ஒன்றில் நீண்ட வரிசையில் ஒரு மணிநேரமாக காத்திருந்த
நபர் ஒருவர் மரணமாகியுள்ளார்
இவருடன் இதுவரை நான்கு பேர் இவ்விதம் மரணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிட தக்கது
இயக்குனர் பாபா விக்ரம் காலமானார்
இயக்குனர் பாபா விக்ரம் காலமானார்
கலைஞர் கதை, வசனத்தில் “கலைஞரின் கண்ணம்மா” படத்தை இயக்கிய இயக்குனர் பாபா விக்ரம் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
இயக்குனர் பாபா விக்ரம் காலமானார்
பாபா விக்ரம்
முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் கதை வசனத்தில் மீனா பிரேம்குமார் நடித்த “கலைஞரின் கண்ணம்மா” படத்தை தயாரித்து இயக்கியவர் எஸ் எஸ் பாபா விக்ரம். 2005-ல் வெளிவந்த அந்த படம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
அந்தப் படத்தைத் தொடர்ந்து கருணாஸ், கோவை சரளா, நாசர், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்த “பொம்மை நாய்கள்” என்ற படத்தை தயாரித்து இயக்கினார். தற்போது
இமான் அண்ணாச்சி நடிப்பில் “அதிர்ஷ்டம்” என்ற படத்தை தயாரித்து இயக்கி வந்தார். உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த பாபா விக்ரம் தென்காசி மாவட்டம்
ஆழ்வார்குறிச்சியில் தனது மனைவி லட்சுமி, மகள் கண்ணம்மா ஆகியோருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று (8.4.2022) மாலை 5 மணி அளவில் மரணம் அடைந்தார். அவருடைய உடல் இன்று காலை 11 மணி அளவில் அடக்கம் செய்யப்பட்டது. ஆழ்வார்குறிச்சியில்
அன்ன பாபா ஆலயம் என்ற பெயரில் சாய்பாபாவுக்கு
ஓர் ஆலயத்தை நிறுவி வழிபாடு செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரயில் நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல் -சிதறிய 50 உடல்கள்
ரயில் நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல் -சிதறிய 50 உடல்கள்
கிழக்கு உக்கிரேன் Kramatorsk பகுதி ரயில்வே நிலையம் மீது ரசிய இராணுவம்
நடத்திய ஏவுகணை தாக்குதலில் சிக்கி ஐம்பது மக்கள் பலியாகினர்
மேலும் பல டசின் பேர் படுகாயமடைந்துள்ளனர்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் இருந்து ரசியா நீக்க பட்ட 24
மணித்தியாலத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
12.000 ரசிய இராணுவம் சுட்டு கொலை
12.000 ரசிய இராணுவம் சுட்டு கொலை
உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் இரண்டு வாரங்கள் கடந்து போர் தொடர்ந்து
வருகிறது ,இந்த போரில் இதுவரை ரசியா தரப்பில் 12 ஆயிரம் இராணுவம் பலியாகியுள்ளதாக உக்கிரேன்தெரிவித்துள்ளது
ரசிய தாக்குதலில் தமது தரப்பில் 4 ஆயிரம் பேர் மட்டுமே இறந்துள்ளதாக உக்கிரேன்
தெரிவிக்கிறது ,எனினும் ரசியாவை விட உக்கிரேனுக்கும் இழப்பும் அதிகமாகும் என நமப படுகிறது
உக்கிரேன் இராணுவம் ரயா இராணுவத்திடம் சரண் அடையும் நிலை ஏற்பட போகிறது
,கீவ் நகர் தற்போது மூன்று முனைகள் ஊடக சுற்றிவளைக்க பட்டு அகோர தாக்குதல்கள் நடத்த பட்டு வருகின்றன
இதுவரை இல்லாத அளவுக்கு எறிகணைகள் குண்டு மழை பொழிந்த வண்ணம் ரசியா படைகள் நெருங்கி வருகின்றன ,விரைவில் உக்கிரேன் நாட்டு அதிபர் தப்பி ஓடவோ
12.000 ரசிய இராணுவம் சுட்டு கொலை
அன்றி தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது
இருதரப்பும் அவர் தம் இழப்புக்களை ட மறைத்து எதிர் தரபிற்கே இழப்புக்கள் என முழங்கிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
- வன்னி மைந்தன் –
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன
- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்
- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை
- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்
- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்
- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி
- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது
- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு
- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி
- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்
- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்
- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்
- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை
- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு
- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்
இலங்கையில் நாள் தோறும் விபத்தில் 35 பேர் மரணம்
இலங்கையில் நாள் தோறும் விபத்தில் 35 பேர் மரணம்
இலங்கையில் நாள்தோறும் இடம் பெறுகின்ற பல்வேறு பட்ட விபத்துக்களில் சிக்கி முப்பத்தி ஐந்து
பேர் பலியாகிய வண்ணம் உள்ளதுடன் ,35 ஆயிரம் பேர் படுகாயமடைந்து வைத்யசாலைகளில்
அனுமதிக்க பட்டு வருகின்றனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
மேற்படி விடயம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
பிரிட்டனில் ஒரே நாளில் 148 000 பேர் பாதிப்பு 143 பேர் மரணம் அமெரிக்கா 869 மரணம்
பிரிட்டனில் ஒரே நாளில் 148 000 பேர் பாதிப்பு 143 பேர் மரணம் அமெரிக்கா 869 மரணம்
பிரிட்டனில் கடந்த தினம் 148 ஆயிரம் பேர் கொரனோ நோயினால் பாதிக்க பட்டும் ,சுமார் 143 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 842 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்
அமெரிக்கா
இதே போன்று அமெரிக்காவில் 233,485 பேர் பாதிக்க பட்டும் 869 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 16 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்
இந்தியா
இதே போன்று இந்தியாவில் ,6,358 பேர் பாதிக்க பட்டும் 293 பேர் பலியாகியுள்ளனர்
ரஷியாவில் 305,155 பேர் பாதிக்க பட்டும் 937பேர் பலியாகியுள்ளனர்
தொடர்ந்து நோயின் தாக்குதல் தீவிரமாகி வருவதால் பிரிட்டன் உள்ளிட்ட பல நாடு முழு அடைப்புக்கு வரும் சில தினங்களில் இடம்பெற கூடும் என முக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன
கொரானாவுக்கு இலங்கையில் 22 பேர் மரணம்
கொரானாவுக்கு இலங்கையில் 22 பேர் மரணம்
இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 22 பேர்
பலியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
மேலும் நோயானது பரவாமல் தடுக்க பல பாதுகாப்பு வழிமுறைகள் பேணப்பட்டு வருகின்ற
பொழுதும் நோயினை கட்டு படுத்த முடியாது அரசு திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது
லண்டனில் Co op கடைக்குள் வீழ்ந்து இறந்த நபர்
லண்டனில் Co op கடைக்குள் வீழ்ந்து இறந்த நபர்
லண்டனுள் புகழ் பெற்றதும் அதிக மக்கள் பாவனையில் உள்ள வர்த்தக நிலையாமாக விளங்கும் Co-op
கடைக்குள் நபர் ஒருவர் வீழ்ந்துள்ளார் ,அவர் வீழ்ந்ததும் தலையில் பலமான
அடிகாயங்களுக்கு உள்ளான நிலையில் , அவர் இறந்துள்ளார்
அம்புலன்ஸ் சேவை விரைந்து வந்த பொழுதும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை ,மதியம்
2,30 மணியளவில் Walderslade பகுதியில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது
படகு கவிழ்ந்து 29 பேர் மரணம் – கண்ணீரில் குடும்பம்
படகு கவிழ்ந்து 29 பேர் மரணம் – கண்ணீரில் குடும்பம்
நையீரியாவில் படகு கவிழ்ந்து 29 பேர் பலியாகியுள்ளனர் ,அதிக எண்ணிக்கையில் பயணிகளை
ஏற்றியதே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது
காணாமல் போனவர்களை தேடும் பணிகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன ,மீட்க பட்ட பலர்
தற்போது மருத்துவ மனையில் சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்
மேற்படி விபத்து தொடர்பிலான புலன் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
வீடுகளை அடித்து நொறுக்கிய புயல் – 4 பேர் மரணம் -19 பேர் காயம்
வீடுகளை அடித்து நொறுக்கிய புயல் – 4 பேர் மரணம் -19 பேர் காயம்
துருக்கியில் மணிக்கு 129 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயலின் கோர தாண்டவத்தில் சிக்கி
வீட்டு கூரைகள் அடித்து செல்ல பட்டன ,பயன் தரும் மரங்கள் உள்ளிட்டவை வீழ்ந்து முறிந்துள்ளன
இந்த அனர்த்தத்தில் சிக்கி இதுவரை நால்வர் பலியாகியுள்ளனர் ,மேலும் 19 பேர்
படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவ மனை வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன
உணவாக சமையல்காரர் படியில் இருந்து வீழ்ந்து மரணம்
உணவாக சமையல்காரர் படியில் இருந்து வீழ்ந்து மரணம்
இலங்கை நீர்கொழும்பு பகுதியில் உள்ள பிரபல உணவாகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த
பிரதான சமையல்காரர் மாடியில் இருந்து வீழ்ந்து பலியாகியுள்ளார் ,இவரது மரணம் தொடர்பில்
விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
இலங்கையில் 27 பேர் கொரனோவால் மரணம்
இலங்கையில் 27 பேர் கொரனோவால் மரணம்
இலங்கையில் கடந்த தினம் கொரனோ நோயில் சிக்கி 27 பேர் பலியாகியுள்ளனர் என சுகாதார
அமைச்சு தெரிவித்துள்ளது .
இதுவரை 14 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது
வெடித்த குண்டு – சிதறிய மனித உடல்
வெடித்த குண்டு – சிதறிய மனித உடல்
சிரியாவில் திடீரென கடை தொகுதி ஒன்றுக்கு முன்னாள் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது
,இதன் பொழுது சம்பவ இடத்தில் இருவர் பலியாகினர் ,மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்
,காயமடைந்தவர்களில் சிறார்களும் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது ,இதுவரை இந்த குண்டு
தாக்குதலுக்கு யாரும் உரிமை கோரவில்லை
இலங்கையில் கொரனோவில் சிக்கி 24 பேர் மரணம்
இலங்கையில் கொரானாவில் சிக்கி 24 பேர் மரணம்
இலங்கையில் மூன்றாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இருபத்தி
நான்கு பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 522 பேருக்கு மேல் பாதிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து வேகமாக இந்த நோயானது பரவி வருவதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க
பட்டுள்ளது
யாழில் கொரானாவுக்கு சிக்கி 4 பேர் மரணம்
யாழில் கொரானாவுக்கு சிக்கி 4 பேர் மரணம்
தென்மராட்சிப் பகுதியில் கொரோனாப் பரவல் மிகத் தீவிரம் பெற்றுள்ளதுடன், கடந்த 16 நாள்களில் மாத்திரம் 118 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, 04 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
தினமும் சராசரியாக 8 முதல் 10 தொற்றாளர்கள் என்றளவில் எண்ணிக்கை உயரத் தொடங்கிவிட்டதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
சுகாதார நடைமுறைகளை மக்கள் இறுக்கமாகப் பின்பற்றாமை காரணமாக சமூகத்தில் தொற்று தீவிரமாகப் பரவியிருப்பதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுவதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவரும் நோய் அறிகுறிகளுடன் தாமாக வந்து அன்டிஜன பரிசோதனைக்கு தம்மை உட்படுத்திக்கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இலவச துரித அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் அறிவித்துள்ளனர்.
அது குறித்து அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட இடங்களில் வசிப்பவர்கள் கொரோனா அறிகுறிகள் தென்படுமாயின், உடனடியாக தங்களை சுய தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்.
“அத்தோடு, காலதாமதமின்றி கொடிகாமம் பிரதேச வைத்தியசாலை, வரணி பிரதேச வைத்தியசாலை அல்லது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் துரித அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுங்கள்.
“இவற்றுக்கு மேலதிகமாக சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய மூன்று தினங்களும் காலை 8.30 மணிக்கு குறித்த பரிசோதனை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகன் இறந்து நான்கு நாளில் தாய் மரணம்
மகன் இறந்து நான்கு நாளில் தாய் மரணம்
மாரடைப்பு காரணமாக, மகன் இறந்து நான்கு நாள்களில் அவரது தாய் உயிரிழந்த சம்பவம்
மாத்தளை- பலாபத்வல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் 41 வயதான கிர்ஷாந்தனும் அவரது தாயாரான 59 வயதான பொன்செல்வி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகனது இறப்பையடுத்து, குறித்த தாய் திடீரென நோய்வாய்ப்பட்டு நேற்று உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் மாத்தளை பிரதேச இளைஞர்கள் மத்தியில் பிரபல்யமானவர் என்றும்
பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
தாய் மற்றும் மகனது இறுதிக்கிரியைகள் இன்று மாத்தளை- வாவன்னாவத்த பொது மையானத்தில் இடம்பெறவுள்ளது.
காலநிலை சீர் கேட்டில் சிக்கி ஐவர் மரணம்
காலநிலை சீர் கேட்டில் சிக்கி ஐவர் மரணம்
இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலை சீர்கேட்டில் சிக்கி இதுவரை ஐவர் பலியாகியுள்ளனர் ,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்
வெள்ள பெருக்கில் சிக்கிய மக்கள் தற்காலிக தங்கும் இடங்களில் தங்க வைக்க பட்டுள்ளனர்
கொரனோவுக்கு இலங்கையில் 15 பேர் மரணம்
கொரனோவுக்கு இலங்கையில் 15 பேர் மரணம்
இலங்கையில் நேற்றைய (03) தினம் மேலும் 15 பேர் கொரோனா வைரசு தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதி செய்திருப்பதாக அரசாங்க தகவல்
திணைக்களம் இன்று (04) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது:
இலங்கையில் புதிய நோய் ஒருவர் மரணம்
இலங்கையில் புதிய நோய் ஒருவர் மரணம்
நாட்டில் முதற்தடவையாக கொவிட்019 நிமோனியாவுடன் தொடர்புடைய கறுப்பு பூஞ்சை தொற்றுக்குள்ளான ஒருவர் மரணமடைந்துள்ளார். இது எமது நாட்டில் கறுப்பு பூஞ்சை தொற்றால் ஏற்பட்ட முதலாவது மரணமாகும்.
காலி – கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த எல்பிட்டிய பகுதியை சேர்ந்த 56 வயதான ஒருவரே கறுப்பு பூஞ்சை தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார் என கராப்பிட்டிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய விசேட நிபுணர் ரொஹான் பீ. ருவன்புர தெரிவித்தார்.
கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி குறித்த நபர் உயிரிழந்துள்ளார்
சடலம் மீதான பிரேத பரிசோதனையை மேற்கொண்ட உதவி சட்ட வைத்திய அதிகாரி தன்தெனிய ஆராய்ச்சி, மேலதிக பரிசோதனைக்காக உடற்பாகங்களை அரச மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதற்கமைய, நேற்று (21) வௌியிடப்பட்ட மேலதிக பரிசோதனை அறிக்கைக்கு அமைய, உயிரிழந்த நபரின் சுவாசப்பையை அண்மித்த பகுதியில் கறுப்பு பூஞ்சை தொற்றியிருந்ததாக, அரச மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பூஞ்சை நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் பிரிமாலி ஜயசேகர உறுதி செய்துள்ளார்.
கொவிட்-19 நிமோனியாவுடன் தொடர்புடைய கறுப்பு பூஞ்சை தொற்றுக்குள்ளானவர்கள் இதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட போதிலும், இதனால் உயிரிழந்த முதலாவது நபராக குறித்த
நபர் காணப்படுவதாக கராப்பிட்டிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய விசேட நிபுணர் ரோஹான் பீ. ருவன்புர தெரிவித்துள்ளார்.























