Posted in இலங்கை செய்திகள்

பள்ளத்தில் வீழ்ந்த வாகனம் 11 பேர் காயம்

பள்ளத்தில் வீழ்ந்த வாகனம் 11 பேர் காயம்

இலங்கை ;கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா உடப்புஸ்சலாவ பிரதான வீதியின் 12 ஆவது மைல் கல்லுக்கு உட்பட்ட சந்ரகாந்தி தோட்ட ஐஸ்

பீளிக்கு அருகில் உள்ள பள்ளத்தில் கெப் ரக லொரி ஒன்று பாரிய பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இன்று (21) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 11 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் இவர்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த கெப் ரக லொரி பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 200 அடி பள்ளத்திற்கு உருண்டு சென்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சம்பவம்

குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் கந்தப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.டி.விக்கிரமசிங்ஹ தெரிவித்தார்.

பள்ளத்தில் வீழ்ந்த வாகனம் 11 பேர் காயம்

இந்த லொரியானது பூண்டுலோயா பகுதியிலிருந்து ஹைபொரஸ்ட் பகுதிக்கு மரணவீடு ஒன்றுக்கு செல்வதற்காக 11 பேருடன் காலை பயணித்துள்ளது.

பின் மீண்டும் பூண்டுலோயா நோக்கி குறித்த லொரி இன்று மாலை பயணிக்கையிலே இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது சாரதி உட்பட 11 பேர் பயணித்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பலத்த காயங்கள்

ஏற்பட்ட நிலையில் நுவரெலியா மாவட்ட
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    Posted in உலக செய்திகள்

    நோர்வேயில் துப்பாக்கி சூடு 2 பேர் மரணம் 14 பேர் காயம்

    நோர்வேயில் துப்பாக்கி சூடு 2 பேர் மரணம் 14 பேர் காயம்

    நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் மக்கள் மீது நடத்த பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கி சம்பவ இடத்தில இருவர் பலியாகினர் மேலும் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர் .

    காயமடைந்தவர்கள் அவசர காவுவண்டிகள் மூலம் மருத்துவ மனைக்குஎடுத்து செல்ல பட்டு சிகிச்சை வழங்க பட்டு வருகிறது.

    இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான காரணம் தெரியவரவில்லை .துப்பாக்கி கி சூடு நடத்தியதில் ஒருவர் மட்டுமே சம்பந்த பட்டுள்ளதாக

    தெரிவிக்கும் நோர்வே பொலிஸார் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் .

    பாதகமான காலநிலைக்கு மத்தியில் இந்த சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

      Posted in உலக செய்திகள்

      ரயில் விபத்து 17 பேர் பலி – 30 பேர் காயம்

      ரயில் விபத்து 17 பேர் பலி – 30 பேர் காயம்

      ஈரான் நாட்டில் Mashhad-Yazd பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த பதினேழு பேர் சம்பவ இடத்தில் பலியாகினர்

      மேலும் முப்பது பேர் படு காயமடைந்துள்ளனர் ,இந்த ரயில் விபத்து இடம்பெறும் பொழுது 380 பயணிகள் அவ்வேளை பயணம் செய்துள்ளனர்

      எனினும் ஏனைய மக்கள் உயிரை சேதங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினார்,இந்த ரயில் விபத்தில் காயமடைந்த மக்களை உடனடியாக மீட்டெடு மருத்துவமனைக்கு எடுத்து செல்ல இரண்டு இராணுவ உலங்குவானூர்திகள் பயன் படுத்த பட்டுள்ளன

      அந்த உலங்குவானூர்திகள் மூலம் காயமடைந்த மக்கள் அவசர சிகிச்சைக்கு அழைத்து செல்ல பட்டனர்


      இந்த மனிதாபிமான உதவிகளை ஈரானிய இராணுவத்தினர் மேற்கொண்ட செயல் ஈரான் மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது

      ஈரான் நாட்டில் இடம்பெற்ற இந்த திடீர் ரயில் விபத்து சம்பவம் உள்ளூர் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

      ஈரானில் இதுபோன்ற மிக பெரும் ரயில் விபத்து இடம் பெற்று பலநூறு மக்கள் பலியாகினர் ,

      அதுபோல இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் திட்டமிடப்பட்ட தீவிரவாத செயலா அல்லது தண்டவாளங்களில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இடம்பெற்ற சம்பவமா என்பது தொடர்பில் துரித விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

      ரயில் விபத்து 17 பேர் பலி – 30 பேர் காயம்


      ஈரானின் உள்ளக கட்டமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி அதன் ஊடாக மக்கள் புரட்சியை கிளறி ஈரான் ஆளும் அரசை ஆட்சியில் இருந்து துரத்திட அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு சதிகளில் ஈடுபட்ட வண்ணம் உள்ளன

      அவ்வாறான அபாயகாரமான நிலைகள் உள்ள நிலையில், இவ்விதம் மக்கள் உயிர்களோடு விளையாடியுள்ள இந்த ரயில் விபத்து பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

      இந்த ரயில் விபத்தில் பலியான மக்களுக்கு அரசு இழப்பீடுகள் வழங்க வேண்டும் என பரிந்துரைக்க பட்டுள்ளது

      ஈரானில் இடம்பெற்ற இந்த ரயில் விபத்து அதில் இடம்பெற்ற மக்கள் பலி மற்றும் காயங்கள் தொடர்பிலான முழுமையான விசாரணை அறிக்கை வெளியாகும் பொழுதே இந்த விபத்து உண்மை நிலை மக்களுக்கு தெரிய வரும் என எதிர் பார்க்க படுகிறது

        Posted in இலங்கை செய்திகள்

        யாழில் புயல் – ஒருவர் மரணம் – 10 பேர் காயம்

        யாழ். மாவட்டத்தில் புதன்கிழமை வீசிய காற்று காரணமாக 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டதோடு ஒருவர் உயிரிழந்துள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த

        முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்தார்.

        யாழில் வீசிய கடும் காற்றினால் கோப்பாய், நல்லூர், காரைநகர் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த குடும்பங்களே பாதிக்கப்பட்டுள்ளன.

        கோப்பாய் J 286 கிராம சேவையாளர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூவர், நல்லூர் J 97 கிராம சேவையாளர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

        மேலும், காரைநகர் J 41 கிராம சேவையாளர் பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர்
        என 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

          Posted in உலக செய்திகள்

          ரசியா எறிகணை தாக்குதலில் எரிந்த கட்டடம்

          ரசியா எறிகணை தாக்குதலில் எரிந்த கட்டடம்

          ரசியா எறிகணை தாக்குதலில் எரிந்த கட்டடம் ,உக்கிரன் Sievierodonetsk, Luhansk பகுதிகள் மீது ரசியா மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில்இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது .

          ரசியா எறிகணை தாக்குதலில் சிக்கி பன்னிரண்டு பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் நாற்பது பேர் படு காயமடைந்துள்ளனர்.

          இந்த எறிகணை தாக்குதலில் தொடர் அடுக்கு மாடி கட்டடங்கள் எரிந்து அழிந்துள்ளன .
          தொடர்ந்து உக்கிர மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

          ரசியா இராணுவம் மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து எறிகணை தாக்குதல் நாடத்திய வண்ணம் உள்ளதால் மக்கள் அச்சத்தில் அகதிகளாக இடம்பெயர்நத வண்ணம் உள்ளனர் .

            Posted in உலக செய்திகள்

            ரசியா உக்கிர தாக்குதல் 600 பேர் காயம் – மருந்து உதவியின்றி மக்கள் அவதி

            ரசியா உக்கிர தாக்குதல் 600 பேர் காயம் – மருந்து உதவியின்றி மக்கள் அவதி

            உக்கிரேன் மீது ரசியா இராணுவத்தினர் அகோர தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது.


            இவ்வேளை மரியபூல் பகுதியில் ரசியாவின் முற்றுகையில் சிக்கியுள்ள பகுதி ஒன்றில் சுமார் 600 க்கு மேற்பட்ட இராணுவம் மக்கள் காயமடைந்த நிலையில் தவித்து வருகின்றனர்.

            மேலும் அங்கு மருந்து ,மற்றும் உணவு பொருட்களை இன்றி மக்கள் இறந்த வண்ணம் உள்ளனர்.

            காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ வசதி இன்றி இறந்த வண்ணம் உள்ளதாக உக்கிரேன் தெரிவித்துள்ளது.

              Posted in Uncategorized

              கோட்டா கட்சி பாராளும்னற உறுப்பினர் உள்ளிட்ட ஐவர் படுகொலை – 173 பேர் காயம்

              கோட்டா கட்சி பாராளும்னற உறுப்பினர் உள்ளிட்ட ஐவர் படுகொலை – 173 பேர் காயம்

              இலங்கையில் ஆளும் சகோதர்கள் ஆட்சிக்கு எதிராக மக்கள் அமைதி வழியில் போராடி வந்தனர்


              இவர்களது இந்த போராட்டத்திற்குள் புகுந்து மகிந்த குண்டர்கள் தாக்குதலை நடத்தினர்

              ,இதனால் ஆத்திரமுற்ற மக்கள் திடீரென ஒன்றுகூடி மகிந்த குண்டர்கள் மீது தாக்குதலை நடத்தினர்

              இவ்விதம் இரு தரப்பும் மேற்கொண்ட மோதல்களில் சிக்கி இதுவரை ஆளும் கட்சியை சேந்த பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட ஐந்து பேர் பலியாகியுள்ளனர்

              மேலும் 173 பேர் படுகாயமடைந்துள்ளனர்

              எம்பிக்கள் ,அமைச்சர்கள் ,உள்ளிட்ட பத்து பேரது வீடுகள் தீக்கிரையாக்க பட்டுள்ளன ,தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது

                Posted in Uncategorized

                மகிந்த அணிகள் மக்கள் மோதல் – 173 பேர் காயம்

                மகிந்த அணிகள் மக்கள் மோதல் – 173 பேர் காயம்

                மகிந்தவின் ஆதரவு அணிகள் கழிமுக திடல் மற்றும் பிறிதொரு பகுதியில் இடம்பெற்ற


                கலவரத்தில் சிக்கி இதுவரை 173 பேர் காயமடைந்துள்ளனர்

                தனது குண்டர்களை ஏவி நாட்டில் அமைதியை குலைக்க முயற்சித்த மகிந்தாவுக்கு

                ,அதுவே எதிராக திரும்பியுள்ளதுடன் இவர்கள் பதவி விலகும் நிலை ஏற்பட்டுள்ளது

                தவறும் பட்சத்தில் அரச உடைமைகள் தீவைத்து எரிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது

                  Posted in Uncategorized

                  போலீசார் மக்கள் மோதல் – காவலரண் தீக்கிரை – 12 பேர் காயம்

                  போலீசார் மக்கள் மோதல் – காவலரண் தீக்கிரை – 12 பேர் காயம்

                  அம்பாறை அக்கரைப்பற்று பால முனை பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டு கொண்டிருந்த


                  போலீசாருக்கும் மக்களுக்கும் இடையில் பெரும் மோதல் ஒன்று இடம்பெற்ற்றுள்ளது

                  ஊந்துருளி ஒன்றை காவலரண் தடை வழியாக செல்ல போலீசார் அனுமதித்துள்ளனர்

                  ,எனினும் அந்த வண்டி விபத்தில் சிக்கியது ,இதனை அறிந்த ஊர் மக்கள் திரண்டு வந்து அங்கு கடமையில் இருந்த போலீசாரை தாக்கினர்

                  இதில் அதிகாரிகள் உள்ளிட்ட பண்ணிரெண்டு பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர்

                  போலீசார் நடத்திய துப்பாககி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார் ,தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது

                    Posted in Uncategorized

                    குண்டுகளினால் அதிரும் உக்கிரேன் -பலநூறு மக்கள் காயம்

                    குண்டுகளினால் அதிரும் உக்கிரேன் -பலநூறு மக்கள் காயம்

                    உக்கிரேன் கீவ் நகரை அண்மித்து ரசியா இராணுவம் ஏவுகணை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது ,இந்த ஏவுகணைகள் மக்கள் வாழ்விடங்களை இலக்கு.

                    வைத்து நடத்தப்படுகிறது என பாதிக்க பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்

                    இந்த குண்டு தாக்குதல்களில் சிக்கி பல, நூறு மக்கள் பலியாகியும் காயமடைந்து வருகின்றனர்.

                    இவர்கள் உயிரை காப்பாற்ற ஐநா உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் ,அடிபணிய மறுக்கும் உக்கிரேன் .

                    அதிபரை சிறை பிடிக்கும் நடவடிக்கையில் ரஷியா ஈடுபட்டுள்ளது .


                    கிட்டத்தட்ட பெரும் முற்றுகையில் உக்கிரேன் சிக்கியுள்ளது ,தொடர்ந்து ரசியா படைகள் முன்னேறிய வண்ணம் உள்ளது.

                      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                      ஒருநாள் அழுவாய் காத்திரு ..!

                      ஒருநாள் அழுவாய் காத்திரு ..!

                      சிறகை ஒடித்தேன்
                      சிறையில் அடைத்தாய்
                      ஏது செய்தேன்
                      என்று என்னை இழிந்தாய்

                      வலிகள் தாங்கி வாடி துடித்தேன்
                      விழியின் நீரில் உள்ளே குளித்தேன்
                      உணவு இன்றி ஒருநாள் தவித்தேன்
                      உறவை எண்ணி வெந்து தணிந்தேன்

                      உந்தன் திட்டம் இங்கு வென்றது
                      உள்ளம் இரண்டாய் இன்று ஆனது
                      காதல் ஒன்று முடிவு கண்டது
                      காலம் ஆறா காயம் தந்தது

                      நாளை சரிதம் வாழ்வு எழுதும் -உந்தன்
                      நக்கல் எல்லாம் இங்கே கிழியும்
                      உன்னை போல உன்னை வதைக்க
                      உள்ளம் என்னால் இன்று முடியும்

                      பழிகள் வாங்கும் நிலையில் இந்த
                      பாவி மனம் முனையவில்லை
                      செய்த வினையின் செயல்கள் பெறுவீர்
                      செவந்து விழிகள் நீரும் தவிப்பீர்

                      வாழ்வில் வசந்தம் இன்று இருண்டது
                      வழியை மாற்றும் நிகழ்வு நடந்தது
                      ஏதும் செய்தும் இன்று தோற்றாய்
                      எரியும் தணலில் ஒளியை காண்பாய் …!

                      வன்னி மைந்தன் ( ஜெகன் )
                      ஆக்கம் 18-04-2022

                      வன்னி மைந்தன் கவிதைகள்

                        Posted in உலக செய்திகள்

                        சாப்பாட்டு கடைக்குள் புகுந்த கார் – 11 பேர் காயம்

                        சாப்பாட்டு கடைக்குள் புகுந்த கார் – 11 பேர் காயம்

                        அமெரிக்கா Texas பகுதியில் உள்ள நாடமாடும் food truck in Austin, ஒன்றுக்குள் வேகமாக

                        பாயனித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அந்த லொறி கடைக்குள் மோதி சிதறியது


                        இதன் பொழுது அங்கு நின்ற பதினொரு மக்கள் படுகாயமடைந்தனர்

                        காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டனர் ,கார்

                        பலத்த சேதமடைந்துள்ளது குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                        அமெரிக்காவில் இவ்வாறான சம்பவங்கள் சாதாரண நிகழ்வுகளில் ஒன்றாக மாற்றம்

                        பெற்று வருகின்றமை கவனிக்க தக்கது

                          Posted in Uncategorized

                          இயக்கச்சியில் வீதியில் நின்றவரை மோதி தள்ளிய டிப்பர்

                          இயக்கச்சியில் வீதியில் நின்றவரை மோதி தள்ளிய டிப்பர்

                          இலங்கை இயக்கச்சி பகுதியில்15-12-2021 வீதியின் ஓரத்தில் மிதிவண்டியுடன் நின்றவரை

                          வேகமாக வந்த டிப்பர் வாகனம் ஒன்று மோதி ,தள்ளியது இதன் பொழுது இயக்கச்சி

                          சங்கத்தார் வயலை சேர்ந்தவரும் , தற்போது உசனில் வசித்து வருபவருமான செல்லத்தம்பி-

                          செல்வகுமார் என அழைக்க படும் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இந்த விபத்தில் சிக்கினார்

                          பலத்த காயமான நிலையில் தற்பொழுது யாழ்ப்பாண போதானா வைத்தியசாலையில் அவசர

                          சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார் ,இதுவரை அவர் கண் விழிக்கவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்

                          சாரதி பளை காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது ,இலங்கை

                          வீதி நடை முறைகளை பின்பற்ற தவறி சாரதிகள் வேகமாக பயணிப்பதே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது

                            Posted in Uncategorized

                            வீடுகளை அடித்து நொறுக்கிய புயல் – 4 பேர் மரணம் -19 பேர் காயம்

                            வீடுகளை அடித்து நொறுக்கிய புயல் – 4 பேர் மரணம் -19 பேர் காயம்

                            துருக்கியில் மணிக்கு 129 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயலின் கோர தாண்டவத்தில் சிக்கி

                            வீட்டு கூரைகள் அடித்து செல்ல பட்டன ,பயன் தரும் மரங்கள் உள்ளிட்டவை வீழ்ந்து முறிந்துள்ளன

                            இந்த அனர்த்தத்தில் சிக்கி இதுவரை நால்வர் பலியாகியுள்ளனர் ,மேலும் 19 பேர்

                            படுகாயமடைந்துள்ளனர்

                            காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவ மனை வட்டாரங்கள்

                            தெரிவித்துள்ளன

                              Posted in Uncategorized

                              பாடசாலை மீது துப்பாக்கி சூடு – ஆறு பேர் காயம்

                              பாடசாலை மீது துப்பாக்கி சூடு – ஆறு பேர் காயம்

                              அமெரிக்கா Colorado பாடசாலை ஒன்றின் மீது மர்ம நபர் ஒருவர் திடீர் துப்பாக்கி
                              சூட்டு தாக்குதலை நடத்தினார்

                              இதில் ஆறு மாணவர் படுகாயமடைந்துள்ளனர்


                              சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆயுத போலீசார் பாதுகாப்பை


                              பல படுத்தியதுடன் சந்தேக நபரை வேட்டையாடினர்

                              அமெரிக்காவில் என்றுமில்லாதவாறு தற்போது துப்பாக்கி


                              சூட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை
                              குறிப்பிட தக்கது

                                Posted in Uncategorized

                                வெடித்து சிதறிய குண்டுகள் – பலியான மனித உயிர்

                                ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகாமையில் இரானுவத்தின் வாகன அணியை இலக்கு வந்து நடத்த பட்ட தொடர் குண்டு

                                தாக்குதல்களில் சிக்கி இதுவரை ஐவர் பலியாகியும் ,எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர் .

                                பாதிப்பு

                                வாகனங்கள்,கட்டடங்கள் பலத்த சேதமாகியுள்ளன ,இந்த குண்டு தாக்குதல்களுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை

                                ,தலிபான் போராளிகள் அமைப்பே இதனை நடத்தி இருக்க கூடும் என நம்ப படுகிறது

                                இராணுவம் குவிப்பு

                                குண்டுகள் வெடித்த பகுதிகளில் மேலதிக இராணுவம் குவிக்க பட்டு ,பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளதுடன் தேடுதல்கள் ,சோதனைகள் முடுக்கிவிட பட்டுள்ளன

                                Posted in இலங்கை செய்திகள்

                                கிளிநொச்சியில் ரவுடிகள் மோதல் – ஒருவர் வெட்டி படுகொலை -மூவர் காயம்

                                தமிழ் ரவுடிகள் மோதல் -ஒருவர் வெட்டிக் கொலை -பலர் காயம் -தெரு ரவுடிகளான தமிழ் வாலிபர்கள்

                                ரவுடிகள் மோதல்
                                இலங்கை வடக்கு தமிழர் பகுதியாக விளங்கும் கிளிநொச்சி உமையாள்புரத்தில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற

                                மோதலில் ஒருவர் வெட்டி பாடுகொலை செய்யப்பட்டுள்ளார் ,மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் அரச அமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

                                இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய் தகராறு முற்றிய நிலையில் அவை திடீர் மோதலாக மாறி அதுவே படு கொலையில்

                                முடிந்துள்ளது ,மேற்படி குற்றவியல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்

                                அரசியல் வன்முறை

                                மகிந்த ஆட்சியின் பின்னரே இவ்வாறான தமிழர் குழுக்களுக்கு இடையில் குழு மோதல்கள் அதிகமாக உருமாற்றம் பெற்றுள்ளது

                                ,போதைவஸ்து மற்றும் ,அரசியல்,சாதிய பிரிவினைகள் உருவாக்கி வைக்க பட்டுள்ள குழுக்களினால் இந்த சாதியவாத மற்றும்,அரசியல்வாத மோதல்களும் இடம் பெற்று வருகின்றன

                                மேற்படி வன்முறை குழுக்களின் இந்த தாக்குதலினால் தமிழர் தேசம் பீதியில் உறைந்துள்ளது

                                20 இலங்கை செய்திகள் படிக்க இதில் அழுத்துங்க

                                Posted in Uncategorized இந்தியா செய்திகள் உலக செய்திகள்

                                வெடித்து சிதறிய பட்டாசு தொழில்சாலை -16 பேர் மரணம் -30 பேர் காயம்

                                வெடித்து சிதறிய பட்டாசு தொழில்சாலை கருகிய மனித உடல்கள் -கதறிய மக்கள் ,சுடுகாடாய் கிடக்கும் தொழில் சாலை

                                தமிழகம் சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு தொழில் சாலை ஒன்று திடிரென

                                வெடித்து சிதறியது ,இதன்பொழுது அங்கு பணிபுரிந்த பதினேழு

                                இது எப்படி இருக்கு ..? கிளிக் here

                                பேர் மரணமாகியும் மேலும் முப்பது பேர் படுகாயமடைந்தனர்

                                காயமடைந்தவர்களில் சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக

                                மருத்துவமனை வட்டாரங்க;ள் தெரிவித்துள்ளன

                                குறித்து வெடிவிபத்து தொடபில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ள பட்டுவருகின்றன

                                Posted in உலக செய்திகள்

                                இஸ்ரேலில் மக்கள் மீது கத்தி வெட்டு தாக்குதல் – போலீசார் குவிப்பு photo

                                இஸ்ரேலில் மக்கள் மீது கத்தி வெட்டு தாக்குதல் – போலீசார் குவிப்பு photo

                                இன்று செவ்வாய் க்கிழமை மத்திய இஸ்ரேலின் – Kfar Saba பகுதியில் வீதியால்

                                பயணித்து கொண்டிருந்த மக்களை இலக்கு வைத்து கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .


                                இதில் இரு பெண்கள் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுளள்னர்

                                    இந்த தீவிரவாத தாக்குதலை பலஸ்தீனத்தை சேர்ந்த நபர் ஒருவர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                                    இந்த மக்கள் மீதான தாக்குதலுக்கு பலஸ்தீன பகுதி மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்த கூடுமென எதிர் பார்க்க படுகிறது

                                    மேற்படி சம்பவம் அந்த நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                        Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

                                        கனடாவில் வாலிபன் மீது துப்பாக்கி சூடு-கொலையாளி தப்பி ஓட்டம்

                                        கனடாவில் வாலிபன் மீது துப்பாக்கி சூடு-கொலையாளி தப்பி ஓட்டம்

                                        இன்று வெள்ளிக்கிழமை ,காலை ஒரு மணியளவில், கனடா Etobicoke பகுதியில் அடுக்கு மாடி கட்டங்கள் அருகில் வைத்து இருபத்தி இரண்டு வயது வாலிபன் மீது

                                        மர்ம நபர்கள் திடீர் துப்பாக்கி சூட்டை நடத்தி விட்டு தப்பி ஒடியுள்ளனர் .

                                        பலத்த சூட்டு காயங்களுக்கு உள்ளான வாலிபர் அவசர சிகிச்சை பிரிவால் மீட்க பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க

                                        பட்டுள்ளார் .தற்பொழுது மிக ஆபத்தான நிலையில் உள்ளார் .

                                        கொலையாளிகளை கண்டு பிடிக்கும் பணியி டொரொண்டோ விசேட குற்ற புலானய்வு துறையினர் ஈடுபட்டுள்ளனர்

                                        இந்த சம்பவத்தை யாரவது கண்ணுற்றால் தமக்கு உதவும் படி மக்களிடம் உதவி கோர பட்டுள்ளது ,தற்போது மறைத்து வைக்க

                                        பட்ட கமராக்கள் வழி ஊடான சோதனைகள் இடம்பெறுகின்றன ,சில காணொளிக கிடைக்க பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                                        விரைவில் கொலையாளியை காவல்துறையினர் கைது செய்து விடுவார்கள் என எதிர் பார்க்க படுகிறது


                                        மேற்படி சுற்று வட்டாரங்களில் தொடர்தேடுதல் இடம் பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

                                        பாதிக்க பட்டவர் தமிழராக இருக்கலாம் என அஞ்ச படுகிறது ,எனினும் இதுவரை பாதிக்க பட்டவர் எந்த நாடு என்பதை போலீசார் தெரிவிக்கவில்லை

                                        கனடா பகுதியில் வாலிபன்
                                        கனடா பகுதியில் வாலிபன்