Tag: இலங்கை
அமைச்சரின் கால்களை நக்க வைத்து தமிழ் கைதிகள் வதை
அமைச்சரின் கால்களை நக்க வைத்து தமிழ் கைதிகள் வதை
இலங்கையின் சிறைச்சாலை அமைச்சர் ரோகன் ரத்வத்த அனுராதபுரம் சிறை சாலைக்கு சென்ற
பொழுது அங்கு தடுத்து வைக்க பட்டுள்ள தமிழ் கைதிகள் மூலம் அவரது கால் சப்பாத்து நக்கி சுத்த படுத்த பட்டது
இவ்வாறான கீழ்த்தரமான செயலில் செயல் பட்ட அவருக்கு எதிராக மக்கள் ,மற்றும் தமிழ் எம்பிக்கள் சிலர் கடும் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர்
மேற்படி சம்பவம் சர்வதேச அரங்கிற்கும் எடுத்து செல்ல பட்டுள்ளது
இளம் மனைவியை சுட்டு கொன்ற கணவர்
இளம் மனைவியை சுட்டு கொன்ற கணவர்
இலங்கை எம்பிலிபிட்டிய பகுதியில் 35 வயதுடைய இளம் மனைவியை கணவர் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் ,கொலையில் முடிவடைந்துள்ளது ,கணவர் கொலை
குற்ற சாட்டில் கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளார்
இலங்கையில் உணவு தட்டு பாடு ஏற்படலாம் – அபாய எச்சரிக்கை
இலங்கையில் உணவு தட்டு பாடு ஏற்படலாம் – அபாய எச்சரிக்கை
இலங்கையில் உணவு தட்டு பாடு ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது ,நாடு முழுதாக முடக்க
பட்டுள்ள நிலையில் மக்கள் தொழில் வாய்ப்பு இன்றி உள்ள நிலையிலும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
விரைந்து வரும் நாட்களில் இந்த நிலைகளை அவதானிக்க முடியும் என எதிர்வு கூற பட்டுள்ளது ,ஆனால் அரசோ அவ்வாறு ஏற்படாது என அறிவித்துள்ளமை இங்கே குறிப்பிட்ட தக்கது
இலங்கை வரும் ஐரோப்பிய குழு – ஜிஎஸ்பி+ நிறுத்த படும் வாய்ப்பு
இலங்கை வரும் ஐரோப்பிய குழு – ஜிஎஸ்பி+ நிறுத்த படும் வாய்ப்பு
இலங்கையில் ஆளும் அரசு தொடர்ந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வரும் நிலையில்
ஆண்டு தோறும் இலங்கைக்கு வழங்க படும் ஜிஎஸ்பி+ வரி சலுகை நிறுத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது
நாளை இலங்கை வரும் ஐரோப்பிய தூது குழுவினர் இது தொடர்பாக ஆராயவுள்ளனர்
இவர்கள் மேற்கொள்ளும் இந்த ஆய்வு நடவடிக்கையின் பின்னரே இலங்கைக்கு ஆப்பு வைக்க படும் ஆட்டம் ஆரம்பிக்க படுமா என்பதை அறிய முடியும் ,இதில் இலங்கைக்கு கடிவாளம் வழங்க
பட்டால் ,போர் குற்ற விசாரணைகள் துரித படுத்த படும் நிலை ஏற்படும் என்பதை அடித்து கூறலாம்
யாழில் கோயிலுக்கு வந்தவர் – ஆற்றில் சடலமாக மீட்பு
யாழில் கோயிலுக்கு வந்தவர் – ஆற்றில் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் தொண்டமனாரு பகுதியில் கோயிலுக்கு வருகை தந்த முதியவர் ஒருவர் அந்த நீரேரியில் குளிக்க முயன்ற பொழுது நீரில் அடித்து செல்ல பட்டு இறந்துள்ளார்
மீன் பிடிக்க வந்தவர்கள் சடலத்தை கண்ணுற்று காவல்துறைக்கு தெரிவித்த நிலையில் சடலம் மீட்க பட்டுள்ளது
மேற்படி சம்பவம் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஆற்றில் மிதந்த மனித சடலம் – நடந்தது என்ன ..?
ஆற்றில் மிதந்த மனித சடலம் – நடந்தது என்ன ..?
மட்டக்களப்பட்டு ஏறாவூர் பகுதியில் உள்ள வாவி ஒன்றில் இருந்து ஆணின் சடலம் மீட்க பட்டுள்ளது
இவர் படுகொலை செய்ய பட்டு ஆற்றுக்குள் வீச பட்டு இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது
சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
இலங்கையில் சமீப காலங்களாக நீர் நிலைகளில் மனித சடலங்கள் மிதந்து வருகின்றமை குறிப்பிட தக்கது
கிளிநொச்சியில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 34ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு!
கிளிநொச்சியில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 34ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு!
தியாக தீபம் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாளான இன்றைய
தினம் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் தியாகி திலீபன் அவர்கள் வீரச்சாவடைந்த நேரமான 10.48 மணிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் ஈகச்சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.
எமது உணர்வு! எமது உரிமை!



திலீபன் நினைவை நடத்த முல்லையில் தடை
திலீபன் நினைவை நடத்த முல்லையில் தடை
இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளின் மண் மீட்பு போரில் தண்னி ஈகம் செய்த தியாக தீபம்
திலீபனின் 34 ஆம் ஆண்டு நினைவு நாளை நினைவு கூற முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது
சட்டம் ஒழுங்கு கெட்டுவிட கூடாது என்பதற்காக இந்த தடை உத்தரவை பிறப்பிக்க பட்டுள்ளதாம்
தனிமையில் இருந்து பெண் வெட்டி கொலை – எகிறும் கொலைகள்
தனிமையில் இருந்து பெண் வெட்டி கொலை – எகிறும் கொலைகள்
இலங்கை வெலிக்கடை பகுதியில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவபர் மர்ம நபர்களினால் வெட்டி கொலை செய்ய பட்டுள்ளார்
இவரது அலறல் சதம் கேட்டு அயலவர்கள் ஓடி சென்று பார்த்த பொழுது அவர் சடலமாக காணப்பட்டுள்ளார் .
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
மகிந்த ,கோட்டா ஆட்சியில் இவ்வாறான படுகொலைகள் அதிகரித்து செல்கின்றமை இங்கே குறிப்பிட தக்கது
இலங்கையில் பிரிட்டன் நபர் – கொட்டலில் சடலமாக மீட்பு
இலங்கையில் பிரிட்டன் நபர் – கொட்டலில் சடலமாக மீட்பு
பிரித்தானிய நாட்டு குடிமகன் ஒருவர் இலங்கை கொட்டல் ஒன்றில் தங்கி இருந்த வேளை சடலமாக மீட்க பட்டுள்ளார்
இவர் சம்பவ தினம் அன்று முதல் தினம் விருந்து நிகழ்வு ஒன்றிற்கு கலந்து விட்டு கொட்டல் திரும்பிய நிலையில் இவ்வாறு சடலமாக மீட்க பட்டுள்ளார்
குறித்த நபரது மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன என போலீசார் தெரிவித்துள்ளனர்
காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் – கோட்டா அறிவிப்பு
காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் – கோட்டா அறிவிப்பு
காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொடுப்பார் என்றால், அவர்களை படுகொலை செய்தவர்களுக்கு என்ன தண்டனை வழங்குவார் என தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தின் நேற்றைய (22) பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், சரணடைந்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவேண்டுமென ஐ.நா. சாசனத்தில் கூறப்பட்டுள்ளது. ஐ.நா.வுக்கு சென்றுள்ள
கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் கொடுக்கப் போவதாக கூறுகின்றார்.
அப்படி என்றால் கண் கண்ட சாட்சிகளுடன் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் எல்லாம் கொல்லப்பட்டார்கள் என்றே ஜனாதிபதி கூறுகிறார் எனவும் அவர் தெரிவித்தார்,
கொல்லப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ்கள் என்றால், கொன்றவர்களுக்கு என்ன தண்டனையை கொடுப்பீர்கள் என்றும் வினவினார்.
பாடசாலைகள் திறக்க படுமா – நாளை அறிவிப்பு
பாடசாலைகள் திறக்க படுமா – நாளை அறிவிப்பு
கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள்
முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில், பாடசாலைகளை மீளவும் திறப்பது தொடர்பில் நாளை (24) முக்கிய அறிவிப்பொன்று விடுக்கப்படவுள்ளது.
இதுதொடர்பில், இன்று பல கூட்டங்கள் இடம்பெறவுள்ளன. கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெறும் இந்தக் கூட்டங்களில் சுகாதார அதிகாரிகளும் பங்குபற்றுவர்.
பாடசாலைகளை திறப்பது தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானங்கள், கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் நாளை (24) அறிவிக்கப்படும்.
இலங்கை – காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து
இலங்கை – காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து
வடக்கு மற்றும் கிழக்கினை மையப்படுத்தி இலங்கை மற்றும் காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தினை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும்
பிரதமரின் இணைப்புச்செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோர் புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமியுடன் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
இரு நாட்டு மீனவர் பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு கண்டு, நல்லுறவை வளர்ப்பது தொடர்பாகவும்
இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
நாமல் ராஜபக்ஷ தலைமையில் விளையாட்டு மைதானங்கள் பொது மக்களிடம் கையளிப்பு
நாமல் ராஜபக்ஷ தலைமையில் விளையாட்டு மைதானங்கள் பொது மக்களிடம் கையளிப்பு
ஆரோக்கியமான தலைமுறையொன்றை கட்டி எழுப்பும் நோக்குடன் நாடளாவிய ரீதியில் 335 கரப்பந்தாட்ட விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட கரப்பந்தாட்ட மைதானங்கள் பல
இன்று(23) இளைஞர் மற்றும் விளையாட்டு ,அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மேற்பார்வை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டன .
கோமரன்கடவெல, குச்சவெளி நாவற்சோலை, திருகோணமலை பட்டணமும் சூழலும் வெள்ளைமணல் ,கந்தளாய் லீலாரத்ன மைதானம், சேருவில மற்றும் வெருகல் ஆகிய
பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்ட கரப்பந்தாட்ட மைதானங்கள் இவ்வாறு அமைச்சர் அவர்களினால் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டன.
ஒரு மைதானத்தை அபிவிருத்தி செய்வதற்கு 15 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கிராமிய மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக்குழு
தலைவருமாகிய கபில நுவன் அத்துகோரல, மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள, பிரதேச அரச அதிகாரிகள் உட்பட விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டனர்.
பறக்கும் படை வேட்டை -491 பேர் கைது
பறக்கும் படை வேட்டை -491 பேர் கைது
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 491 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 55 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 636 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, மேல் மாகாணத்தில் நுழைய முற்பட்ட 739 வாகனங்கள் மற்றும் 1072 பேர் மற்றும் வெளியேற முற்பட்ட 1195 பேர் மற்றும் 742 வானங்கள் நேற்று சோதனையிடப்பட்டுள்ளன.
68 மில்லியன் ரூபா கஞ்சா மீட்பு
68 மில்லியன் ரூபா கஞ்சா மீட்பு
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம்-நறுவிலிக்குளம் கடற்கரை
பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 68 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப் பொதிகளை நேற்று முன்தினம் (21) வங்காலைக் கடற்படையினர் மீட்டுள்ளனர்.
கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையிலேயே இக்கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது சுமார் 228 கிலோகிராம் நிறை கொண்ட கேரள கஞ்சாப் பொதிகள் மீட் கப்பட்டுள்ளதாகவும், எனினும் இது தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை வேட்டை -509 பேர் கைது
காவல்துறை வேட்டை -509 பேர் கைது
நாட்டில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 509 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று(21) காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த முந்தைய 24 மணித்தியாலங்களில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 76,145 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மேல் மாகாணத்தில் உள்ள 13 வீதித் தடைகளில் 2179 பேர் மற்றும் 730 வாகனங்கள் நேற்று(20) சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
முல்லைத்தீவில் மரத்தில் தொங்கிய பெண்ணின் சடலம்
இலங்கை
முல்லைத்தீவில் மரத்தில் தொங்கிய பெண்ணின் சடலம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட கொல்லவிளாங்குளம் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று (20) காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் இனம் காணப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மல்லாவி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
கணவனை பிரிந்த நிலையில் இரண்டு பிள்ளைகளுடன் ஆடைத்தொழில்சாலையில் பணியாற்றிவரும் 32 அகவையுடைய பிரதீபன் புஸ்பராணி எனும் இளம் குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை மற்றும் பி.சி.ஆர் முடிவுகளின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக மல்லாவி பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
சிறுவன் சுட்டு கொலை – விசாரணையில் பொலிஸ்
சிறுவன் சுட்டு கொலை – விசாரணையில் பொலிஸ்
வீரகெட்டிய, பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இதனை, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து, இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய நபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ள நிலையில் அவரை கைதுசெய்ய பொலிஸார் தேடுதல் மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன், சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.
குளத்தில் மிதந்த மனித சடலம்
குளத்தில் மிதந்த மனித சடலம்
வட்டவளை, லொனெக் தோட்ட பாற்பண்ணைக்கு அருகில் இருக்கும் குளத்திலிருந்து இளைஞர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை நீராட சென்றிருந்த இருவருமே இவ்வாறு இன்றுக்காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
முதலாவது சடலம் காலை 6.10க்கும் இரண்டாவது சடலம் 7 மணிக்கும் மீட்கப்பட்டுள்ளது.
இருவரில் ஒருவர் சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் மற்றையவர் வட்டவளை லொனெக் தோட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்த வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.
சிலாபம் பகுதியை சேர்ந்த 21 வயது மதிக்கதக்க சஜிந்த தில்சான் என்பவரும் லொனெக் தோட்டத்தைச் சேர்ந்த 41 வயது மதிக்க தக்க இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான சின்னையா ராஜா என்பவருமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.







