Tag: இலங்கை
யாழில் ஆவா குழுவினர் கைது
யாழில் ஆவா குழுவினர் கைது
யாழ்ப்பாணம் – பரமேஸ்வரா சந்திக்கு அருகில் வைத்து, ஆவா குழுவை சேர்ந்த நால்வர் போதைப்பொருளுடன், நேற்று (19) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து வாள், அவர்கள் பயணித்த கார் என்பவற்றை யாழ்ப்பாணம் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் என பொலிஸாரினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நல்லூர் – அரசடி பகுதியை சேர்ந்த முத்து என்பவர், நேற்று மாலை
, காரில் தனது நண்பர்களுடன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார் எனும் தகவல் கிடைத்ததை அடுத்து , பொலிஸ் புலனாய்வு பிரிவினர் அவர்களின் காரை பின் தொடர்ந்து பரமேஸ்வர சந்திக்கு அருகில் வைத்து வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.
இதன் போது காருக்குள் இருந்து 3 கிராம் ஹெரோய்னை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அதையடுத்து, காரில் இருந்த முத்து உள்ளிட்ட நால்வரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
வீடு புகுந்த்து ரவுடிகள் தாக்குத்தல் – பலர் காயம்
வீடு புகுந்த்து ரவுடிகள் தாக்குத்தல் – பலர் காயம்
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விடத்தல் தீவு, 5ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள், நேற்று (19) மாலை 6.30 மணியளவில், மது போதையில் அத்துமீறி நுழைந்த
சுமார் 15 பேர் கொண்ட குழுவினர், குறித்த வீட்டில் உள்ளவர்கள் அனைவரையும் கடுமையாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
இதில், குறித்த வீட்டின் உரிமையாளரான அன்டனி ஜோசப் (வயது 44) என்பவர் படுகாயமடைந்த நிலையில், பள்ளமடு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மன்னார் மாவட்ட
பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த வீட்டில் உள்ள 18 வயதுடைய இதய நோய் உள்ள யுவதி ஒருவரும்,15 வயதுடைய சிறுமி ஒருவரும் தாக்குதலுக்குள்ளான நிலையில், பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில், அடம்பன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தந்தையின் கண்ணை குற்றி கிழித்த மகன்
தந்தையின் கண்ணை குற்றி கிழித்த மகன்
தந்தையின் கண் ஒன்றை அவரது மகன், தனது கை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்துள்ள சம்பவமொன்று வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் பாடசாலை வீதியிலேயே இச்சம்பவம் சனிக்கிழமை (18) மாலை இடம்பெற்றுள்ளது.
தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணாமாக 67 வயதுடைய தனது தந்தையை கடுமையான முறையில் தாக்கி 19 வயதான மகன், தந்தையின் கண்ணை தோண்டி சிதைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த அகோர செயலுக்கு போதைவஸ்துப் பாவனையே காரணமாக அமைந்துள்ளது என்று பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இவ்வாறு கண் சிதைவடைந்து வெளியில் வந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்நபர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார். எனத் தெரிவித்த வாழைச்சேனை பொலிஸார், அவரது மகனை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
கணவனை அடித்து கொன்ற மனைவி – யாழில் நடந்த பயங்கரம்
கணவனை அடித்து கொன்ற மனைவி – யாழில் நடந்த பயங்கரம்
யாழ்ப்பாணம் – அரியாலை, பூம்புகார் பகுதியில், நேற்று (18) இரவு, குடும்பஸ்தர் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த துரைராசா செல்வராசா (வயது-32) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே, இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மேசன் தொழிலில் ஈடுபடும் குறித்த நபர், ஏழாலை மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த பெண்ணை, திருமணம் முடித்து, பூம்புகாரில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், குறித்த நபருக்கும் அரவது மனைவிக்கும் இடையில் நீண்ட நாள்களாக நீடித்து வந்த குடும்ப முரண்பாடு முற்றியதில், நேற்று இரவு, மனைவியால் அவர் திருவலைக் கட்டையால்
தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று, ஆரம்பக் கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
இதையடுத்து, இன்று (19) அதிகாலை யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணைக் கைதுசெய்தனர்.
திருவலைக் கட்டையால் கடுமையாகத் தாக்கப்பட்ட குடும்பத்தலைவரின் உடலில் 5க்கும் மேற்பட்ட காயங்கள் காணப்படுவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டிலிருந்து வேலைசெய்யும் அரச ஊழியர்களுக்கு எவ்வாறு சம்பளம் வழங்க முடியும் -அரசு கேள்வி
வீட்டிலிருந்து வேலைசெய்யும் அரச ஊழியர்களுக்கு எவ்வாறு சம்பளம் வழங்க முடியும் -அரசு கேள்வி
அரசாங்கத்திடம் பணம் இருக்கிறது பணமில்லாவிட்டால் வீட்டிலிருந்து வேலைசெய்யும் அரச ஊழியர்களுக்கு எவ்வாறு சம்பளம் வழங்க முடியும் – ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ
ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை தொடர்பான சம்பவம் குறித்து அரசாங்கம் விசாரணை நடத்தி வருகிறது. சம்பவம் நடக்கும் போது நான் அங்கு இருக்கவில்லை. எனவே அப்படி ஒரு
சம்பவம் அங்கு நடந்ததா இல்லையா என்பது பற்றி எனக்குத் தெரியாது. விசாரணை அறிக்கை வருவதற்கு முன்பதாக நான் கருத்துத் தெரிவித்தால் அது தவறு …
ஊரடங்கு உத்தரவை நீட்டிக்காதிருப்பது குறித்து அறிக்கை வெளியிட நான் ஒன்றும் மருத்துவர் கிடையாது. மருத்துவர்கள் மற்றும் பல்வேறு துறைசார் நிபுணர்கள் சொல்வதைக் கேட்டு ஜனாதிபதி சரியான முடிவுகளை எடுக்கிறார் …
அரசாங்கத்திடம் பணம் இருக்கிறது பணமில்லாவிட்டால் வீட்டிலிருந்து வேலைசெய்யும் அரச ஊழியர்களுக்கு எவ்வாறு சம்பளம் வழங்க முடியும்.
- ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ
ஜனாதிபதியின் சௌபாக்கிய நோக்கு கொள்கை பிரகடனத்தின் படி வீதிகளின் இருபுறமும் ஒரு மில்லியன் மரக்கன்றுகளை நடுவதற்கு முதலில் முடிவு செய்திருந்தோம். ஆனால் நாங்கள் இப்போது அதை இரண்டு மில்லியனாக அதிகரித்துள்ளோம். ஒரு இலட்சம் கிலோமீட்டர் வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் வீதியின் இருபுறமும் மரம் நடும் பசுமை கருத்திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மர நடுகை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாமன்கடை வீதியின் இருபுறமும் மரங்களை நடும் பணி இன்று ஆரம்பித்துள்ளோம். சிலர் இதுபோன்ற நிகழ்ச்சிகளைப் பார்க்க விரும்புவதில்லை. கண்டும் காணாதது போன்று இருப்பர். இதுதான் நம் நாட்டில் உள்ள எதிக்கட்சியாகும்.
லங்காகம வீதி அமைக்கப்படும்போது சிங்கராஜாவில் உள்ள அனைத்து மரங்களும் வெட்டப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் காடழிப்பு இடம்பெறுகிறதா என்று காண ஜனாதிபதி லங்காகமவுக்கு நேரில் சென்றார். இன்று அந்த வீதியின் வேலை முடிந்துவிட்டது. இப்பகுதியில் வசிக்கும் மக்களின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த முடிவையும் எங்கள் அரசு எடுக்காது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு பயனளிக்கும் வகையில் இந்த அபிவிருத்திப் பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அதனால் இன்று எதிர்க்கட்சிகள் கூறியவை அனைத்தும் முற்றிலும் பொய்யாகிவிட்டன. அவ்வப்போது ஏதாவது கருத்தை உருவாக்குவது தான் எதிர்க்கட்சிகளின் முக்கிய பங்காக இருக்கிறது.
தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் விடுத்த கோரிக்கை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.தேர்தல் ஒன்ற நடந்தால் எதிர்க்கட்சித் தலைவரின் நிலையை நன்றாக அறிந்து கொள்ள முடியும். ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டாம், பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்று சவால் விடுத்த தலைவர் தான் இந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச. அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் வரை, அது எங்கள் அரசுக்கு நல்லது. எனவே,சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராகவும் தற்போதைய அரசாங்கம் ஆட்சியிலும் இருக்கும் வரை நம் நாட்டு மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. எனவே, . சஜித் பிரேமதாச சொல்பவை வெறும் அரசியல் வார்த்தைகள் மாத்திரமே. அந்த வார்த்தைகளின் அர்த்தத்தில் எந்த உள்ளடக்கமும் இல்லை.
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை தூக்கு மேடைக்கு விஜயம் செய்த சம்பவம் மற்றும் அவரது ராஜினாமா குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
சிறைத்துறை அமைச்சர் என்ற வகையில் தூக்கு மேடையைப் பார்க்கச் செல்ல அவருக்கு உரிமை உள்ளது என்று நினைக்கிறேன். ஒரு அமைச்சர், இவ்வாறு இராஜினாமா செய்வது இதுவே முதல் முறை என்பதே மிகவும் சரியானது. உலகின் பல்வேறு நாடுகளில் இவ்வாறு நடந்துள்ளது. தவறு நடந்தால் மற்ற நாடுகளில் உள்ளவர்கள் ராஜினாமா செய்வார்கள்.இங்குள்ளவர்கள் இராஜினாமா செய்ய மாட்டார்கள் என்று அப்போது கூறப்பட்டது . இப்போது அவர் இராஜினாமா செய்யும்போது சட்டத்தை இன்னும் கடுமையாகச் செயல்படுத்த வேண்டுமாம். அமைச்சர் லொஹான் ரத்வத்தை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார். அவர் தவறு செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதனால், அவர் இராஜினாமா செய்தார். இது மிகவும் நல்ல விஷயம். அன்று மத்திய வங்கியை கொள்ளையடித்தவர்கள் இராஜினாமா செய்யவில்லை. சஜித் பிரேமதாச பல பில்லியன்களை திருடியதற்காக அவர் இராஜினாமா செய்தாரா? அவரது அமைச்சு ஊழியர்கள் அவரின் மனைவியின் சிகைஅலங்கார நிலையத்தில் வேலை செய்ததற்காக குறைந்தபட்சம் அவர் மன்னிப்பு கேட்டாரா? ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கீழ் இது போன்ற ஒன்று நடந்தது நல்ல விஷயம். இது கட்டுக்கோப்பான அரசாகும்.
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை தொடர்ந்து இரத்தினக்கல் மற்று ஆபரண கைத்தொழில் அமைச்சராக தொடந்து இருக்கிறார். அவர் குற்றவியல் குற்றச்சாட்டு உள்ளதே என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார். முதலில், இந்த குற்றச்சாட்டு தொடர்பாக முழுமையான விசாரணை தேவை. அது தொடர்பாக ஒரேயடியாக கூற முடியாது. அவர் இராஜினாமா செய்யாமல் ஜனாதிபதியும் இராஜினாமா செய்ய வேண்டாம் என்று கூறியிருந்தால் இன்று என்ன நடந்திருக்கும்? தற்போது இந்த சம்பவம் குறித்து அரசு விசாரணை நடத்தி வருகிறது, அந்த விசாரணை அறிக்கை வரும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டும். விசாரணை அறிக்கைக்கு முன் நான் ஒரு கருத்தை தெரிவித்தால் அது தவறு. நான் அங்கு இருக்கவில்லை. எனவே அப்படி ஒரு சம்பவம் அங்கு நடந்ததா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவர் இராஜினாமா செய்துள்ளார், இது ஒரு நல்ல விஷயம். இந்தப் போக்கு நல்லது என்று தான் நான் கருதுகிறேன்.
நமது நாட்டிற்கு எதிராக மனித உரிமை தொடர்பான பிரச்சனையொன்று இருக்கும் சமயத்தில் லொஹான் ரத்வத்தையின் இந்த செயற்பாடு எப்படி எமது நாட்டை பாதிக்கும் என ஒரு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
மனித உரிமைகள் பிரச்சினைகள் இன்று நேற்று வந்ததல்ல. இந்த நாட்டில் எப்போதும் இருந்து வரும் விடயம் அது. பிரபாகரன் படுகொலை
செய்யப்பட்ட நாளிலிருந்து இந்த மனித உரிமை பிரச்சினைகளுக்கு எமது அரசாங்கம் முகங்கொடுத்து வருகிறது. அது ஒன்றும் புதிதல்ல. இப்போது இந்தப் பிரச்சினையும் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. நாங்கள் இந்த பிரச்சினையை எதிர்கொள்வோம்.
கடந்த தேர்தலில் வெற்றிபெற ஈஸ்டர் தாக்குதல் உங்களுக்கு உதவியாக அமைந்ததாக கூறப்படுகிறது. . இதேபோன்ற தாக்குதல் மீண்டும் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளதல்லவா என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்,
அது அப்பட்டமான பொய்யாகும். எங்கள் அரசு தேசிய பாதுகாப்பை எதற்காகவும் விட்டுக் கொடுக்காது. . ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப் பட்டவுடன் இந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது. யார் என்ன செய்ய திட்டம் தீட்டினாலும் முயற்சித்தாலும் அதற்கு இடமளிக்கப்பட மாட்டாது, எங்களை விட முன்னேற்றமடைந்த நாடான நியூசிலாந்தில் என்ன நடந்தது. இலங்கையிலிருந்து சென்ற ஒருவர் தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தைப் போல், நமது அரசும் தேசிய பாதுகாப்பை பலிக்கடாவாக்க ஒரு போதும் தயாராக இல்லை. தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தும் எதையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நான் அதை மிகவும் பொறுப்புடன் கூறுகிறேன்.
உங்கள் அரசாங்கம் நிவாரணம் வழங்குவதாக தெரிவித்தாலும் இன்னும் மக்களுக்கு ஏன் நிவாரணம் வழங்கப்படவில்லை என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,
இந்த ஒன்றரை ஆண்டுகளில், முழு உலகமும் கோவிட் பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளது. பிரச்சினை வந்த போது, நாங்கள் மக்களுக்கு நிதி உதவி வழங்கினோம். நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது. சமுர்த்தி பெறுபவர்களுக்கு நாங்கள் தொடர்ந்து
நிவாரணம் வழங்கி வருகிறோம். இந்த அரசாங்கம் மக்களையும் பாதுகாத்து இந்தளவிலாவது பொருளாதாரத்தைம் பாதுகாப்பது பற்றி நாட்டு மக்களாகிய நாம் சிந்திக்க வேண்டும், இன்று நல்லாட்சி அரசாங்கம் இருந்திருந்தால் இந்த நாடு ஒரு கல்லறையாக மாறியிருக்கும். அபிவிருத்தி அடைந்திருந்த நாட்டின் பொருளாதாரத்தை அழித்த , மக்களை வீணாக இறக்க அனுமதித்த அரசாங்கமொன்றே கடந்த காலத்தில் இருந்தது. எதிர்க்கட்சி பல்வேறு விடயங்களை கூறுகின்றது. ஆனால் எங்கள் அரசாங்கம் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் . இந்தப் பேரழிவில் இருந்து தப்பிக்க தேவையான திட்டங்களை நாங்கள் ஏற்கனவே செய்துள்ளோம். தடுப்பூசியின் ஏற்றுவதில் உலகின் சிறந்த நாடுகளில் ஒன்றாக எமது நாடு மாறியுள்ளது.எங்களிடம் குறைபாடுகள் இருந்திருக்கலாம். இத்தகைய பேரழிவு எமது நாட்டிற்கு புதியது. அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே, எமது நாட்டின் பொருளாதாரம் நிச்சயம் வளர்ச்சியடையும் என்பதை நாம் நாட்டு மக்களிடம் கூறுகிறோம்.எத்தகைய பிரச்சினைகள் இருந்தாலும், எங்களிடம் அவற்றுக்கு தீர்வு உள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவர்ட் கப்ரால் மீண்டும் நியமிக்கப்பட்டது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
அஜித் நிவார்ட் கப்ரால் திறமைசாலி. அவர் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். அதற்காகஅவர் பாராளுமன்றத்திற்கு பொருத்தமானவர் அல்ல என்று அர்த்தமாகாது. அவர் பாராளுமன்றத்திற்கும் மத்திய வங்கிக்கும் பொருத்தமானவர். அதாவது இந்த நேரத்தில் அஜித் நிவார்ட் கப்ரால் போன்ற ஒருவர் மத்திய வங்கியின் ஆளுநராக இருப்பதே உகந்தது.அதனால் தான் சஜித் பிரேமதாஸாவும் ஹர்ஷாவும் இணைந்து அவரைத் தாக்குகிறார்கள். இதுதான் யதார்த்தம்.அவர்களுக்கு எதிராகவும் குற்றச் சாட்டுகள் உள்ளன. யார் மீது தான் குற்றச்சாட்டு இல்லை.என் மீது பதினொரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றம் சாட்டுவதும் சேறு பூசுவதும் எளிது. யதார்த்தத்தை எதிர்கொள்ள வேண்டும். தகுதியற்றவர்கள் தான் மத்திய வங்கியின் ஆளுநராக யார் வர வேண்டும் என்று கருத்துக் கூறுகிறார்கள்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இலங்கையின் குடியுரிமையை கூட இல்லாத ஓருவரே மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவர்கள் தான் இன்று மத்திய வங்கியின் ஆளுநராக யார் நியமிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறார்கள். இது நகைப்புக்குறிய விடயமாகும். எமது நாடு இந்த சவால்களை வெல்லும் என்பதை நாங்கள் தெளிவாகக் கூறுகிறோம். ஜனாதிபதி கோட்டாபய மிகச்சிறந்த ஆட்சியாளர். முதிர்ந்த பிரதமரான மகிந்த ராஜபக்சவின் தலைமையில் இந்த சவால்கள் அனைத்தையும் வெற்றிகரமாக எதிர்கொள்கண்டு வருகிறோம்.
துறைமுகம் போன்ற தேசிய வளங்களை மறுவிற்பனை செய்வதாக அரசு மீது குற்றம் சாட்டப்படுவது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எந்த தேசிய வளமும் விற்கப்படவில்லை. அது அப்பட்டமான பொய். நான் துறைமுக அமைச்சராகவும் இருந்தேன். அது ஒரு முதலீடு மாத்திரமே. முதலீட்டாளர்கள் இந்த நாட்டிற்கு வர வேண்டும். அவ்வாறின்றி ஒரு நாட்டை எப்படி முன்னேற்ற முடியும். முதலீட்டாளர்கள் இங்கு வந்து முதலீடு செய்யும் போது அவர்களுக்கு நாட்டின் வளங்களை விற்பனை செய்வதாக கூறுகிறார்கள். எதையாவது சொல்லத்தான் பார்க்கிறார்கள். அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம். கோவிட் பிரச்சனை இருப்பதால் அவர்கள் கொஞ்சம் ஆட்டம் போடுகிறார்கள். கோவிட் பிரச்சினை தீர்ந்த பின்னர் அவர்களின் அரசியல் அழிந்து விடும்.
ஊரடங்குச் சட்டத்தை நீடிக்க வேண்டும் என்று மருத்துவ சங்கங்கள் கூறுவது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், நானொன்றும் மருத்துவர் கிடையாது. ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பில் நான் கருத்துச் சொல்வதில் பயணில்லை. மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைசார் நிபுணர்களின் கருத்துக்களை பெற்று ஜனாதிபதி சரியான முடிவுகளை எடுப்பார். சரியான முடிவுகளை எடுப்பதற்காகத்தான் அறுபத்தொன்பது இலட்சம் மக்கள் அவருக்கு வாக்களித்தனர்.
அரசாங்கத்திற்கு தற்பொழுது பணப் பிரச்சினை இருக்கிறதா என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்.
அரசிடம் பணம் இருக்கிறது. பணமில்லாவிட்டால் வீட்டில் இருந்து வேலை செய்யும் அரசாங்க ஊழியரின் சம்பளத்தை எப்படி கொடுக்க முடியும். கடந்த அரசாங்கத்திடம் பணம் இருக்கவில்லை. நாங்கள் வங்குரோத்தடையவில்லை.
நாங்கள் இன்னும் அரச ஊழியர்களுக்கு உரிய திகதியில் சம்பளம் வழங்கி வருகிறோம் .எங்களிடம் வீணடிக்க பணம் இல்லை. எமது வருமானம் குறைந்த மட்டத்தில் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.ஆனால், அரசாங்கம் வங்குரோத்தடையவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
டபிள்யு.ஏ. சில்வா மாவத்தை முதல் பாமன்கடை பாலம் வரையான வீதியின் இருபுறமும் மரம் நடும் நிகழ்வில் அமைச்சர் மேற்கண்ட கருத்துக்களை தெரிவித்தார்.
நெடுஞ்சாலை அமைச்சின் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் இருக்கும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை இணைப்புத் திட்டத்தின் ஊடாக மரம் நடும் திட்டம் 2021-09-17 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டபிள்யூ.ஏ சில்வா மாவத்தையில் இருந்து பாமன்கடை பாலம் வரை வீதியின் இருபுறமும் மரங்கள் நடப்பட்டன.
இந்த நிகழ்வில் நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யு.ஆர். பிரேமசிறி, வீதி அபிவிருத்தி அதிகாரசபை தலைவர் சமிந்த அதாலுவகே, திட்டப்பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
மதுபானசாலைகளை திறக்க அனுமதி-குஷியில் குடி மகன்கள்
மதுபானசாலைகளை திறக்க அனுமதி-குஷியில் குடி மகன்கள்
அரசாங்கத்தின் அனுமதியின் பின்னரே நாடுபூராகவும் மதுபானசாலைகள் திறக்கப்பட்டதாக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் அனுமதியின்றி மதுபானசாலைகளை திறக்க முடியாதென்றும் அரசாங்கத்திடமிருந்து ஏதோவொரு வகையில் அனுமதி வழங்கப்பட்டதன் பின்னரே நாடுபூராகவுமுள்ள உரிமம் பெற்ற மதுபானசாலைகள் திறக்கப்பட்டன என்றார்.
கிராமங்களில் சட்டவிரோதமாக தயாரிக்கப்படும் மதுபானங்களை பலர் பருகுவதுடன், அது ஆராக்கியம் தொடர்பான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மதுபானசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
யாழில் வாலிபன் அடித்து கொலை – பீதியில் மக்கள்
யாழில் வாலிபன் அடித்து கொலை – பீதியில் மக்கள்
காங்சேன்துறை பொலிஸ் நிலையத்துக்கு அண்மையாக சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட இளம் குடும்பத்தலைவர் ஒன்றுக்கு மேற்பட்டவர்களினால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்த மல்லாகம் நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா, உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறியவதுடன், சடலத்தை உடற்கூற்றுப்
பரிசோதனையின் மருத்துவ ஆலோசனையின் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திலிருந்து 50 மீற்றர் தொலைவில் நேற்று (16) பிற்பகல் 3.30 மணி அளவில் வீதியோரம் சுயநினைவற்ற நிலையில் ஒருவர் மீட்கப்பட்டார்.
அவரை மீட்டு தெல்லிப்பழை ஆதார மருத்துவமனை வெளிநோயாளர் பிரிவில் சேர்த்த போது, உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டது.
சம்பவ இடத்தில் அவரது மோட்டார் சைக்கிள் வீதியில் தரித்து நின்றுள்ளது. சம்பவத்தில் நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த ம.ஜெனுசன் (வயது-24) என்ற ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்தார்.
சம்பவத்தை அடுத்து அங்கு திரண்ட உறவினர்கள் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்தனர்.
நண்பகல் இடம்பெற்ற இறுதிக் கிரியை வீடொன்றில் சிலருடன் அவர் முரண்பட்டுக் கொண்டார் என்றும் அவர்களே கொலை செய்துள்ளனர் என்றும் உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு மோப்பநாயுடன் தடயவியல் பொலிஸார் அழைக்கப்பட்டனர். ஆரம்ப
விசாரணைகளில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தாக்குதல் நடத்தியமைக்கான தடையங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கண்டறியும் விசாரணைகளை காங்கேசன்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
அமைச்சரின் வீட்டில் கைக்குண்டு
அமைச்சரின் வீட்டில் கைக்குண்டு –
நாரஹேன்பிட்டியவில் உள்ள தனியார் வைத்தியசாலையின் முதலாவது மாடியில், மலசலக்கூடத்தில் இருந்து எடுக்கப்பட்ட கைக்குண்டு, அமைச்சரின் வீடொன்றில் இருந்து எடுக்கப்பட்டது என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கொழும்பு-07 விஜேராம மாவத்தையில் உள்ள அமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தின் இலாச்சியில் இருந்தே அவை எடுக்கப்பட்டுள்ளன.
கைக்குண்டு மீட்கப்பட்டது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தடுத்துவைக்கப்பட்டுள்ள திருகோணமலை உப்புவேலி பிரதேசத்தை சேர்ந்தவரினால் வழங்கப்பட்ட வாக்குமூலத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டட நிர்மாணப்பணிகளில் பணியாற்றும் மேற்படி சந்தேகநபர், இன்றைக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர், அமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு திருத்தப் பணிகளுக்காக வந்துள்ளார்.
அங்குள்ள அறையொன்றின் மேசையின் இலாச்சியில் இருந்து கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் சிலவற்றை மீட்டுள்ளார்.
கைக்குண்டை இந்த சந்தேகநபர் வைத்துக்கொண்டதுடன், தோட்டாக்களை அவருடன் இருந்த மற்றுமொருவர் எடுத்துச் சென்றுள்ளார்.
தோட்டாக்களை எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் நபர் வசிப்பதாகக் கூறப்பட்ட மஹவ மற்றும் வெலிக்கந்த பிரதேசங்களுக்கு நேற்று (16) சென்றிருந்த விசேட விசாரணைப் பிரிவினர் அங்கு சோதனை நடத்தியுள்ளனர்.
கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்ட அந்த வீட்டில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் தற்போது வசித்துவருகின்றார். எனினும், தற்போதைய அமைச்சர் அந்த உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு வருகைதருவதற்கு முன்னரே, கைக்குண்டு மற்றும் தோட்டக்களை தான் எடுத்ததாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறையிலிருந்த தமிழ் அரசியல் கைதி விடுதலை
சிறையிலிருந்த தமிழ் அரசியல் கைதி விடுதலை
கைதுசெய்யப்பட்டு பல வருடங்கள் வழக்கு தாக்கல் செய்யப்படாமல் சிறையில் தடுத்து
வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால்
முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த நடேசு குகநாதன் என்பவரே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும்,
இறுதி யுத்தத்தின்போது 2009 மே மாதம் 18 ஆம் திகதி அவர் படையினரிடம் சரணடைந்திருந்ததாக குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
பின்னர் ஒரு மாதகாலமாக முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், அங்கிருந்து பயங்கரவாதத் தடுப்பு
பிரிவினரிடம் 2009 ஓகஸ்ட் மாதம் பாரப்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு, பின்னர் பூஸா தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
இதையடுத்து, நீதிமன்ற கட்டளைப்படி புனர்வாழ்வுக்கு உட்படுத்த தீர்ப்பளிக்கப்பட்டு, ஓராண்டு புனர்வாழ்வு நிறைவடைந்ததை அடுத்து,
கடந்த 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
பின்னர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் 2013 ஆம் ஆண்டு ஜுலை மாதம் மீண்டும் கைதுசெய்யப்பட்ட அவர்,
வழக்குத் தாக்கல் செய்யப்படாமல் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில்,
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று விடுதலை செய்யப்பட்டதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் கிளிநொச்சியில் அனுஷ்டிப்பு!
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் கிளிநொச்சியில் அனுஷ்டிப்பு!
இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து பன்னிரண்டு நாட்கள் நீராகாரம் அருந்தாமல் அகிம்சை வழியில் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்து வீரச்சாவைத்
தழுவிக்கொண்ட தியாகி திலீபன் அவர்களின் 34 ஆவது ஆண்டு நினைவு நாளின் தொடக்க நாளான இன்று கிளிநொச்சியில் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது…


இத்தாலியில் மகிந்தா – சிங்களவர்களுடன் சந்திப்பு
இத்தாலியில் மகிந்தா – சிங்களவர்களுடன் சந்திப்பு
இத்தாலியில் வாழும் இலங்கை மக்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பொன்று போலோக்னா நகரில் நேற்று (14) இடம்பெற்றது.
இத்தாலியின் பல்வேறு நகரங்களை பிரதிநிதித்துவப்படுத்தி வருகைத்தந்திருந்த இலங்கை பிரதிநிதிகள், பிரதமரை சந்தித்து விரிவாக கலந்துரையாடினர்.
கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியிலும் இவ்வாறு இத்தாலிக்கு விஜயம் செய்து இத்தாலியில் வாழும் இலங்கை மக்களை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கியமை குறித்து இலங்கை பிரதிநிதிகள் இதன் போது பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர்
பிரதமர் ஜனாதிபதியாகவிருந்த காலப்பகுதியில் இத்தாலி மற்றும் இலங்கைக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட இருதரப்பு நட்பு காரணமாக இதுவரை இத்தாலியில் வாழும் இலங்கை மக்களுக்கு கிடைக்கும் வசதிகள் தொடர்பிலும் அங்கு வருகை தந்திருந்த பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
மிலான் நகரில் இலங்கை கொன்சியூலர் அலுவலகம் அமைப்பதற்கு அப்போதைய ஜனாதிபதியாகவிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட தொலைநோக்கு செயற்பாடு
காரணமாக பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதில் இலங்கையர்கள் பலரது காலமும் பணமும் மிச்சப்படுவதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.
எதிர்காலத்தில் மீண்டும் இலங்கைக்கு திரும்பும் எதிர்பார்ப்புடன் காணப்படும் இத்தாலியிலுள்ள இலங்கை மக்களுக்கு இருபது ஆண்டு சேவை காலத்தின் பின்னர் அந்நாட்டில் வழங்கப்படும்
ஓய்வூதியத்தை தாய்நாட்டிற்கு திரும்பிய பின்னரும் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை பெற்றுத் தருமாறு அங்கு வருகைத்தந்திருந்த பிரதிநிதிகள் பிரதமரிடம் கேட்டுக் கொண்டனர்.
இதுதொடர்பாக இத்தாலி அரசாங்கத்துடன் கலந்துரையாடுமாறு பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிசை அச்சந்தர்ப்பத்திலேயே அறிவுறுத்தினார்.
ஜி 20 சர்வமத மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இத்தாலிக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் எதிர்வரும் சில தினங்கள் அங்கு தங்கியிருந்து இராஜதந்திர சந்திப்புகளிலும் ஈடுபடவுள்ளார்.
இந்த சந்திப்பில் போது வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இத்தாலிக்கான பதில் இலங்கை தூதுவர் சிசிர செனவிரத்ன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இலங்கையில் கொரனாவுக்கு சிக்கி 60 வயதிற்கு மேலானோர் அதிக மரணம்
இலங்கையில் கொரனாவுக்கு சிக்கி 60 வயதிற்கு மேலானோர் அதிக மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
அறுபது வயதிற்கு அதிகமானவர்கள் பலியாகியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது
நாள் தோறும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இலங்கையில் மரணமாகி வருகின்றமை குறிப்பிட தக்கது
மக்கள் காணிகளை அபகரிக்கும் காட்டு வாசிகள் – களத்தில் குதித்த சிறிதரன் எம்பி
மக்கள் காணிகளை அபகரிக்கும் காட்டு வாசிகள் – களத்தில் குதித்த சிறிதரன் எம்பி
வனவளத் திணைக்களத்தினரால் எல்லைப்படுத்தப்பட்டுள்ள ஜெயபுரம் மக்களின் காணிகளை நேரில் சென்று பார்வையிட்டார் சிறீதரன் எம்.பி!
கிளிநொச்சி மாவட்டம், பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் ஜெயபுரம் வடக்குப் பகுதியில், ஏறத்தாழ அறுபது குடும்பங்களுக்குச் சொந்தமான மேட்டுநிலப் பயிர்ச்செய்கைக் காணிகளை
வனவளத் திணைக்களத்தினர் எல்லைப்படுத்தியுள்ளதாக, பாதிக்கப்பட்ட மக்களால் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து, நேற்றுமுன்தினம் குறித்த காணிகளை அவர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
ஜெயபுரம் வடக்கு கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட திக்குவில், எத்தாவில், சுண்ணாவில், தும்புருவில் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 60 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் 1965 ஆம்
ஆண்டிலிருந்து திக்குவில் குளத்தை நீர் மூலமாகக் கொண்டு மேட்டுநிலப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். காலத்துக்குக்காலம் நடைபெற்ற இடப்பெயர்வுகளின் பாதிப்புக்களை
எதிர்கொண்டு, இறுதியாக 2010 ஆம் ஆண்டு மீள்குடியேறியதிலிருந்து இன்றுவரை அம்மக்கள் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவரும் குறித்த காணிகளை எல்லைப்படுத்தியுள்ள வனவளத்
திணைக்களத்தினர் அக்காணிகளில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முடியாதென மக்களைத் தடுத்து வருகின்றனர்.
ஆனால் அதே பகுதியில் தனது தந்தையாருக்குச் சொந்தமான 100 ஏக்கர் காணி உள்ளதாகக்கூறி, காடழித்து நிரந்தர அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டுவரும் தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களத் தனவந்தர் ஒருவருக்கு எதிராக வனவளத் திணைக்களத்தினர் எவ்வித எதிர்ப்பு
நடவடிக்கையையும் மேற்கொள்ளாத நிலையில், வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தமக்கு காணிகளை மீளப் பெற்றுத்தருமாறு அப்பகுதி மக்களால்
முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று நேற்றைய தினம் (2021.09.12) நேரில் சென்று குறித்த காணிகளைப் பார்வையிட்ட, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு கடிதங்களை அனுப்புவதன் மூலம் காணிகளை மீளப்பெற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார்.
இதன்போது, பூநகரி பிரதேசசபையின் ஜெயபுரம் வட்டார உறுப்பினர் சுப்பிரமணியம் சந்திரபோஸ், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஜெயபுரம் வட்டார அமைப்பாளர்
திரு.செல்வராஜ் குமாரவேல், ஓய்வுநிலை அதிபர் திரு.இரவீந்திரன் ஆகியோரும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது



பெண்ணை இறக்கிவிட்டு தப்பிய படகு சிக்கியது
பெண்ணை இறக்கிவிட்டு தப்பிய படகு சிக்கியது
இலங்கை பெண்ணை அரிச்சல்முனையிலுள்ள மணல் திட்டில் இறக்கிவிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட படகை தமிழக கரையோர பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றனர்.
அரிச்சல்முனை மணல் திட்டில் நிர்க்கதியாகியிருந்த போது அந்தப் பெண் கடந்த 5 ஆம்
திகதியன்று கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் நாடு திரும்ப முயற்சித்த அப்பெண் முல்லைத்தீவை சேர்ந்தவர் ஆவார்
இவர் சென்னையிலுள்ள உறவினர் வீட்டுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விமானம் மூலமாக சென்றிருந்த நிலையில், சட்டவிரோதமாக படகு மூலம் நாடு திரும்பும் நோக்கில் தரகர் ஒருவரின் உதவியை நாடியிருந்தார்.
இதற்கமைய, இராமேஸ்வரத்தில் இருந்து படகு மூலம் அரிச்சல்முனை பகுதிக்கு அழைத்துச்செல்லப்பட்ட அவர் அங்குள்ள மணல் திட்டில் இறக்கிவிடப்பட்டிருந்தார்.
இலங்கை படகிற்காக சுமார் 8 மணி நேரம் காத்திருந்த போதும் படகு வராத நிலையில், நிர்க்கதியாகியிருந்த பெண்ணை தமிழக கரையோர பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அவரது வாக்குமூலத்திற்கு அமைய, விசாரணைகளை முன்னெடுத்த தமிழக பொலிஸார்
அரிச்சல்முனைக்கு படகை செலுத்திய சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்.
ஐநாவின் கேள்விக்கு இன்று இலங்கை பதில்
ஐநாவின் கேள்விக்கு இன்று இலங்கை பதில்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது ‘நில-இயல்’ கூட்டத்தொடர் ஜெனிவாவில் நேற்று மாலை ஆரம்பமானது.
எதிர்வரும் எட்டாம் திகதி வரை இந்த கூட்டத் தொடர் இடம்பெறும். 40க்கும் மேற்பட்ட நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான நிபுணர்களும் நிறுவனங்களும் முன்வைத்துள்ள சுமார் 90 அறிக்கைகள் குறித்து இந்த பேரவைகள் கலந்துரையாடப்படும்.
30க்கும் மேற்பட்ட விவாதங்களும் இடம்பெறும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மைக்கல் பச்சிலட் பேரவையின் முதலாவது தினமான நேற்று தனது வருடாந்த அறிக்கை தொடர்பான புதுப்பிக்கப்பட்ட விடயங்களை முன்வைத்தார்.
இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் அவர் முன்வைத்த விடயங்கள் விசேட கவனத்தை ஈர்த்தது.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 16 எல்ரிரிஈ முன்னாள் உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டதை அவர் பாராட்டினார். ஜனாதிபதி சிவில்
நெல் சந்தைப்படுத்தும் சபை ,போட்டி விலையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு
நெல் சந்தைப்படுத்தும் சபை ,போட்டி விலையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு
தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் சிறுபோக நெல் அறுவடையில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக ஒரு கிலோ நாட்டரிசி நெல்லை 55ரூபாவுக்கு போட்டி விலையில்; நெல்
சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்யும் என்று அமைச்சரவை இணை பேச்சாளரும் பெருந்தோட்ட அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பதிரண தெரிவித்தார்..
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மகாநாடு இன்று (14) அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது அமைச்சர் இதனை
தெரிவித்தார். அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் மொஹான் சமரநாயக்க ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
சிறுபோக நெல் கொள்வனவு தொடர்பாக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
08.2021 சிறுபோக நெல் கொள்வனவு வேலைத்திட்டம்
2021 சிறுபோக அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், விவசாயிகளின் நெல் அறுவடையை போட்டி விலையில் கொள்வனவு செய்யும் நோக்கில் நாடு ஒரு கிலோ 55ஃ-
ரூபாவுக்கு நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் கொள்வனவு செய்வதற்கும், அவ்வாறு கொள்வனவு செய்யும் நெல்லை அரிசியாக்கி சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நுகர்வோருக்கு நியாயமான விலையில் விற்பனை செய்வதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
பிள்ளையார் கோவில் சுவரில் புத்தர் – வெடித்த சர்ச்சை
பிள்ளையார் கோவில் சுவரில் புத்தர் – வெடித்த சர்ச்சை
யாழ். பொஸ்கோ பாடசாலைக்கு அருகாமையில் உள்ள மாநகர சபைக்கு சொந்தமான பிள்ளையார் குளத்தைச் சுற்றி, பௌத்த கொடிகளில் காணப்படும் வர்ணங்களை ஒத்தவகையில் நிறம் தீட்டும் செயற்பாடு இடம்பெற்று வருகிறது.
உலக வங்கியின் நிதி அனுசரணையுடன், மீளப் புனரமைக்கப்பட்டு வருகின்ற பிள்ளையார் குளத்தின் சுற்று கம்பங்களுக்கே, இவ்வாறு பௌத்த கொடிகளில் உள்ள நிறங்களை பொறிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
1996ஆம் ஆண்டு 1.51(0.6063) ஏக்கராக இருந்த இந்தக் குளத்தின் பரப்பளவு 2013ஆம் ஆண்டு மீள அளக்கப்பட்ட போது, 1.26(0.5078) ஏக்கராக குறைவடைந்துள்ளமை தெரியவந்தது.
இவ்வாறான நிலையில், குறித்த குளம் தற்போது புனரமைக்கப்பட்டு வரும் நிலையில், குளத்திலிருந்து தூர்வாரப்பட்டு மண்ணை மீண்டும் குளத்தின் சுற்றுப்புறங்களில் கொட்டியதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தன.
இந்நிலையில், யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் அபிவிருத்திகள் தொடர்பில் கள ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, கடந்த வாரம் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறித்த பகுதிக்கு விஜயம் செய்திருந்தார்.
இவ்வாறான நிலையில், அவர் பார்வையிட்டு சென்ற நிலையில், இவ்வாறு இடம்பெறுவது பலருக்கும் சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.
சோதனைச் சாவடிகளில் கொரோனா தடுப்பூசி அட்டை பரிசோதனை
சோதனைச் சாவடிகளில் கொரோனா தடுப்பூசி அட்டை பரிசோதனை
மன்னாரில் உள்ள சோதனைச் சாவடிகளில் நாளை மறுதினம் (15 ஆம் திகதி) முதல் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்ட அட்டையை பரிசோதிக்க நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு பீ.சி.ஆர். அல்லது அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் முடிவுக்கு வருகின்ற நிலையில் உள்ளது.இதன் அடிப்படையில் இது வரையில் 71,396 பேர் முதலாவது கொரோனா தடுப்பூசியையும் , 56,363 பேர் இரண்டாவது தடுப்பூசியையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
30 வயதிற்கு மேற்பட்டவர்களில் முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 30 வீதமாகும், 2 வது தடுப்பூசியை பெற்றவர்களின் எண்ணிக்கை 68 வீதமாகும்
கடந்த வாரம் முதல் தெரிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களில் கடமையாற்றுகின்ற 30 வயதிற்கு இடைப்பட்ட வர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப் பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பமாக உள்ளது.
அத்தோடு விசேட தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்கான வேலைத்திட்டத்தின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன., தரவுகளும், சேகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.என்றும் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
கடந்த இரு நாட்களில் மன்னார் மாவட்டத்தில் 101 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இவர்களில் 66 பேர் நிலக்கண்ணி வெடி அகற்றும் நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் பணியாளர்கள்.
இவர்களில் அதிகமானவர்கள் மன்னார், வவுனியா,முல்லைத்தீவு,கிளிநொச்சி,யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
தற்போது வரை 1966 கொரோனா தொற்றாளர்களும்,இவ்வருடம் மாத்திரம் 1949 தொற்றாளர்களும்,இந்த மாதம் 282 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
புத்தாண்டு கொத்தணி உடன் தொடர்புடைய 1613 தொற்றாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் இதுவரையில் கொரோனா தொற்றாளர்களில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் கடைசியாக நேற்று ஞாயிற்றுக்கிழமை 63 வயதுடைய ஆண் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை 30 வயதிற்கு மேற்பட்ட தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத அனைவருக்கும் நாளையும்; தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது. கட்டையடம்பன் மகா வித்தியாலயத்தில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும்.
30 வயதிற்கு மேற்பட்டவர்களில் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு பீ.சி.ஆர். அல்லது அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் தொற்று உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டால் அவர்களை இடை நிலை சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும் என்றும் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் மேலும் தெரிவித்தார்.
இலங்கை மத்திய வங்கி ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமனம்
இலங்கை மத்திய வங்கி ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமனம்
2021 செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், ஜனாதிபதி கோட்டாபய
ராஜபக்ஷ அவர்களினால், இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அவர் தனது கடமைகளை, இம்மாதம் 15ஆம் திகதியன்று பொறுப்பேற்கவுள்ளார்.
பிரசித்திபெற்ற பட்டயக் கணக்காளரான அஜித் நிவாட் கப்ரால் அவர்கள், இதற்கு முன்னர் அமைச்சின் செயலாளராகக்
கடமையாற்றியுள்ளதோடு, சுமார் 9 வருடக் காலப்பகுதி வரை, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சூரி இல்ல திருமண விழாவில் கொள்ளை
சூரி இல்ல திருமண விழாவில் கொள்ளை
முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் சூரியின் இல்ல திருமண விழாவில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சூரி இல்ல திருமண விழாவில் கொள்ளை – போலீசில் புகார்
சூரி
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது.
இவரது அண்ணன் முத்துராமலிங்கத்தின் மகள் திருமண விழா கடந்த 9ம் தேதி மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
சூரி முன் நின்று திருமணத்தை நடத்தி வைத்தார். திருமணத்திற்கு நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கருணாஸ், சீமான் உள்ளிட்ட பலர் நேரில் சென்று மணமக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.
சூரி
இந்நிலையில், அந்த திருமணத்தில் 10 சவரன் மதிப்பிலான நகை கொள்ளை போனதாக
கீரைத்துறை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






