Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்
சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதியும், இனப்படு கொலையாளியுமாகிய கோத்தபாய இராஜபக்சவினை கைது செய்யக்கோரும் கையெழுத்து
போராட்டத்தில், பொதுமக்கள் இலகுவாக ஒப்பமிடும் வகையில் புதியதொரு இணைய தொடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.
குறித்த இந்த http://tgte-us.org/ இணையப்பகத்துக்கு சென்று (தொடுப்பு : https://tgte-us.org/?page_id=4340 ) இலகுவாக ஒப்பமிட முடியும் என அறிவித்துள்ள
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு, தாமதிக்காமல் ஒப்பமிட்டு நீதிக்கான போராட்டத்துக்கு வலுவூட்டுமாறு அனைவரையும் கோருவதாக தெரிவித்துள்ளது.
உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்துமாறு சிங்கப்பூர் சட்டமா அதிபரை நோக்கிய இந்தக் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்
இனப்படுகொலை, மானிடத்திற்கெதிரான குற்றம் மற்றும் போர்க் குற்றங்களைப் புரிந்ததற்கான நம்பத்தகுந்த சாட்சியங்கள் உள்ளதாக ஐக்கிய
நாடுகள் அறிக்கைகள் கூறியுள்ளன. 1948ம் ஆண்டு இன அழிப்புச் சட்டத்தின் கீழும், 1949ம் ஆண்டு ஜெனீவாச் சட்டங்களின் கீழும் மற்றும் 1977ம் ஆண்டு
Additional protocol 1 இன் கீழும் சர்வதேச சட்டங்களின் கீழ் சிங்கப்பூர் சட்டமா அதிபரினை நோக்கி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தமிழர் தாயகத்திலும் கோத்தாவை கைது செய்யக் கோரும் கையெழுத்துப் போராட்டம்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.
கோட்டபாய தாய்லாந்துக்கு தப்பி ஓடுகிறார்
கோட்டபாய தாய்லாந்துக்கு தப்பி ஓடுகிறார்
இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய இலங்கையில் இருந்து மக்களினால் துரத்த பட்ட நிலையில் தற்பொழுது சிங்கப்பூரில் தங்கியுள்ள இவர் தாய்லாந்துக்கு தப்பி ஓட திட்டமிட்டுளளார்.
சிங்கப்பூர் நாட்டில் கோட்டபாயவுக்கு பாதுகாப்பு வழங்க பாடுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக தாய்லாந்துக்கு கோட்டபாய செல்ல திட்டமிட்டுள்ளார் .
இலங்கைக்கு மீள வந்தால் அங்கு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் தாய்லாந்துக்கு செல்லும் நகர்வினை கோட்டபாய ஈடுபட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
மிரட்ட படும் போராட்ட காரர்கள் தொடரும் கைது
மிரட்ட படும் போராட்ட காரர்கள் தொடரும் கைது
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டமை மற்றும் பொதுமக்கள் போராட்டத்தின் போது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின் போது, கோட்டை இலங்கை வங்கிக்கு அருகில் சட்டவிரோதமாக ஒன்று கூடி பொதுச் சொத்துக்களுக்கு சேதம்
விளைவித்தமை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஜுலை 09 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தின் போது கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மிரட்ட படும் போராட்ட காரர்கள் தொடரும் கைது
குறித்த சந்தேக நபர் கொஸ்வத்த பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய நபர் எனவும், அவர் (08) பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை,இன்னுமொரு நபர் பொதுமக்கள் போராட்டத்தின் போது கொழும்பில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்குள் பலவந்தமாக நுழைந்த குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஜூலை 09ஆம் திகதி அலரிமாளிகையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் பொலிஸாரால்
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து குறித்த சந்தேகநபர்
கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் 19 முதல் தொடர்ச்சியாக மண்ணெண்ணெய் விநியோகம்
ஆகஸ்ட் 19 முதல் தொடர்ச்சியாக மண்ணெண்ணெய் விநியோகம்
ஆகஸ்ட் மாதம் 19ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக மண்ணெண்ணையை விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், கடந்த நான்கு வாரங்களாக மீனவர்களுக்கு தேவையான மண்ணெண்ணையை விநியோகிக்க முடியவில்லை.
இருப்பினும், தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் சுத்திகரிப்பு நிலையம் செயற்பாட்டில் இல்லாததனால் மண்ணெண்ணையை தயாரிக்க முடியவில்லை.
இம்மாதம் 15ஆம் திகதி மசகு எண்ணெய் ஏற்றிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடைய உள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி இரண்டாவது கப்பலும் வந்தடைய
உள்ளது. எனவே, எதிர்வரும் 15ஆம் திகதி முதல் சுத்திகரிப்பு நிலையத்தை செயற்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
அதன்படி, இம்மாதம் 19ஆம் திகதி முதல் தொடர்ந்தும் மண்ணெண்ணையை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன்,
மண்ணெண்ணெய் விலையில் திருத்தம் மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஆயுதங்களை மீட்க சென்ற போது சந்தேக நபர் கற்சுரங்கத்தில் விழுந்து இறப்பு
ஆயுதங்களை மீட்க சென்ற போது சந்தேக நபர் கற்சுரங்கத்தில் விழுந்து இறப்பு
உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கடுவெல
பிரதேசத்தில் உள்ள கிரானைட் கற்சுரங்கம் ஒன்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபர் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை மீட்பதற்காக பொலிஸ் விஷேட அதிரடிப் படை அதிகாரிகள் அவரை கிரானைட்
கற்சுரங்கப்பகுதிக்கு அழைத்துச் சென்ற பொழுது மரணம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
34 வயதான “துவான்” என அடையாளம் காணப்பட்ட அவர், குற்றக் கும்பல் தலைவரான “அங்கொட லொக்காவின்” நெருங்கிய நண்பர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
யாழில் எரிவாயு விநியோகத்தில் குழப்பம்
யாழில் எரிவாயு விநியோகத்தில் குழப்பம்
யாழ். மாவட்டத்தில் உள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு சுமார் 1,000 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட செயலகத்தால்
அறிவிக்கப்பட்டதாக தெரிவித்து அரச உத்தியோகத்தர்கள் இன்று யாழ். பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் உள்ள அரச திறன் விருத்தி மையத்தில் ஒன்று கூடினர்.
இதன் போது குறித்த பகுதிக்கு வந்த பொதுமக்கள் சிலர் தமக்கு எரிவாயு சிலிண்டர்கள் வேண்டுமென கேட்ட நிலையில் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டது.
இதன்போது அங்கு நின்ற அதிகாரிகள் “அரச உத்தியோகத்தர்களுக்கு மட்டும் எரிவாயு வழங்கப்படுவதாக” தெரிவித்தனர்.
யாழில் எரிவாயு விநியோகத்தில் குழப்பம்
இதன் போது கருத்து தெரிவித்த பொதுமக்கள் தமது பிரதேசங்களில் எரிவாயுக்காக பெயர்களை பதிவு செய்த நிலையில் இவ்வாறு பெருமளவு
சிலிண்டர்களை அரச உத்தியோகத்தர்களுக்கு ஒரே தடவை வழங்குவது எவ் விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பினர்.
குறித்த விடயம் தொடர்பில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப் பிள்ளை மகேசன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதிபனை தொடர்பு கொண்டு கேட்டபோது, குறித்த பகுதியில் அரச
உத்தியோகத்தர்களுக்கு எரிவாயு விநியோகத்தை
மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கவில்லை என தெரிவித்தனர்.
ஆட்கடத்தல் தடுப்பு செயலணி விடுத்துள்ள விஷேட அறிவிப்பு
ஆட்கடத்தல் தடுப்பு செயலணி விடுத்துள்ள விஷேட அறிவிப்பு
இலங்கையில் உள்ள சில வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் வெளிநாட்டுக்கு ஊழியர்களை சுற்றுலா விசாவின் கீழ் பல்வேறு நாடுகளுக்கு
அனுப்புவதாகவும், பின்னர் அவற்றை வேலை விசாவாக மாற்றலாம் என்றும் கூறிவருகின்றனர்.
இதனால் இத்தொழிலாளர்கள் ஆட்கடத்தலுக்கு பலியாகி வருவதாகவும் எமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, குறிப்பாக மலேசிய குடிவரவு அதிகாரிகள் சுற்றுலா விசா வைத்திருப்பவர்களை சோதனை செய்ய கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர், கடந்த சில மாதங்களாக, நாட்டிற்குள் நுழைய
அனுமதிக்கப்படாத வெளிநாட்டு குடியேற்றவாசிகள் வாராந்தம் சுமார் 20 பேர் என்ற அடிப்படையில் விமான நிலையத்திலிருந்து நேரடியாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மலேசியாவை விட்டு வெளியேறுவதற்காக வழங்கப்பட்டிருந்த பொதுமன்னிப்பு காலம் 2022 ஜூன் மாதம் 30ஆம் திகதியுடன் முடிவடைந்துதுடன், மேலும் மலேசியாவில் உள்ள
சட்ட அமலாக்க முகவர்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனைகள் மூலம் செல்லுபடியாகும் விசா இல்லாத வெளிநாட்டினரைக் கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஆட்கடத்தல் தடுப்பு செயலணி விடுத்துள்ள விஷேட அறிவிப்பு
குறித்த குடியேற்றவாசிகள் விடுவிக்கப்பட்ட பின்னர் தங்களது சொந்த செலவில் அவர்கள் நாடுகடத்தப்படும் வரை அங்குள்ள குறிப்பிட்ட தடுப்பு தடுப்பு மையத்தில் வைக்கப்படுவார்கள்.
ஏமாற்றப்பட்டு மலேசியாவிற்கு அனுப்பப்படும் தொழிலாளர்கள் மோசடியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களால் மிகவும் மனிதாபிமானமற்ற நிலைமைகளின் கீழ் மிகக்குறைந்த சம்பளத்திற்கு மற்றும் எந்தவிதமான
தொழில் உத்தரவாதமும் இன்றி வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுவதாக தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது, “மலேசியாவுக்கான பயண விசாக்களை
வந்தவுடன் வேலை விசாவாக மாற்ற முடியாது” என்பதை மனதில் கொண்டு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை தேடும் அனைத்து வருங்கால
குடியேற்றவாசிகளையும், சட்டபூர்வமான மற்றும் உண்மையான வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட முகவர் நிலையங்கள்
மூலம் செல்லுமாறு செயலணி இலங்கைப் பிரஜைகளுக்கு அறிவுறுத்தி யுள்ளது.
மின்சார கட்டணம் நாளை முதல் அதிகரிப்பு
மின்சார கட்டணம் நாளை முதல் அதிகரிப்பு
இலங்கையில் நாளைமுதல் மின்சார கட்டணம் எழுபத்தி ஐந்து வீதத்தால் அதிகரிக்க படுவதாதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
எரிபொருள் விலைகள் குறைக்க பட்டுள்ளதாக அறிவிக்க பட்டு இரு நாட்களின் மின்சார கட்டணம் இவ்விதம் அதிகரிக்க படுவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாள் தோறும் பொருட்கள் விலை அதிகரித்து செல்லும் நிலையில் மின்சார விலை அதிகரிப்பல் மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர்.
ஆனால் ஆளும் ரணில் அரசோ அதை பற்றி கவலை படாது தனது அதிகாரத்தை தக்க வைத்து கொள்வதில் குறி வைத்து செயல் படுகிறார்.
விபத்தில் சிக்கிய வான் 12 பேர் காயம்
விபத்தில் சிக்கிய வான் 12 பேர் காயம்
மொனராகலை- பிபிலை வீதியின் தொடம்கொல்ல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக லொறியொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்து பிபிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிபிலை வெல்லஸ்ஸ தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற கரப்பந்து போட்டியில் கலந்துகொள்ள சென்ற கனுல்வெல முஸ்லிம் மஹா
வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
வீதியில் பணம் உரைமியாளரிடம் ஒப்படைத்த பொலிஸ்
வீதியில் பணம் உரைமியாளரிடம் ஒப்படைத்த பொலிஸ்
மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் சார்ஜன்ட் கிட்னண் குலேந்திரன் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் கடந்த 3.8.2022 அன்று பணப்பை ஒன்றை கண்டெடுத்துள்ளார்.
அதனை பரிசோதித்து பார்த்த போது 75520/- பணமும் ஏனைய பெறுமதியான ஆவணங்களும் காணப்பட்டுள்ளது. உடனே குறித்த உத்தியோகத்தர்
இவ்விடயத்தினை அவரது உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து அவர்கள்
முன்னிலையில் குறித்த பணத்தையும் ஆவணங்களையும் உரிய நபரிடம் சேர்த்துள்ளார்.
ரணில் அழைப்பை நிராகரித்த ஜேவிபி
ரணில் அழைப்பை நிராகரித்த ஜேவிபி
சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று நடைபெறவிருந்த கலந்துரையாடலில் தாம் பங்குகொள்ளப் போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது..
எனினும் ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் முன்மொழிவுகளை சமர்ப்பிக்க கட்சி தீர்மானித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
உத்தேச சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினருக்கும்
இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் காரை உடைத்த கம்பி பதறி ஓடிய மக்கள்
கொழும்பில் காரை உடைத்த கம்பி பதறி ஓடிய மக்கள்
இலங்கை கொழும்பு பகுதியில் உயர் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் நிர்மாண பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இதன் பொழுது கம்பி ஒன்று கழன்று வீழ்ந்ததில் கார் ஒன்று உடைந்து சேதமாகியுள்ளது .
நழல்வெளியாகி அவ்வேளை காட்டுக்குள் இருக்கவில்லை
இதனால் உயிர் சேதங்கள் தவிர்க்க பட்டுள்ளது.
குறிப்பிட்ட கட்டட நிர்மாண பணிகள் இடம்பெறும் பகுதி வழியாக மக்கள் செல்ல தடை விதிக்க படும் .
ஆனால் இங்கே அந்த நடமும் பின்பற்ற படவில்லை என்பத்தை காண முடிகிறது.
இராணுவ தலைமையகத்திற்கு பறந்த ரணில் விக்கிரமசிங்க
இராணுவ தலைமையகத்திற்கு பறந்த ரணில் விக்கிரமசிங்க
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அகுரேகொடவில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்திற்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார் .
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த திடீர் பயணம் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இராணுவத்தை ஏவி மக்கள் போராட்டங்களை நசுக்குவதில் குறியாக உள்ள ரணிலின் இந்த பயணம் ஏன் என்ற கேள்வியை எழுப்பி நிற்கிறது.
இலங்கை ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க
மக்களை அடக்கி ஒடுக்குவதில் குறிவைத்து செயல் பட்டு வருகின்றமை கவனிக்க தக்கது.
இலங்கைக்கு மனித உரிமை பேரவை கண்டனம்
இலங்கைக்கு மனித உரிமை பேரவை கண்டனம்
நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் அமைதியான போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கும், அவர்கள் தங்கள் குறைகளை கூறுவதை தடுப்பதற்கும் அவசரகாலச்
சட்டத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதை ஐநா மனித உரிமைகள் பேரவை கண்டித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் நிபுணர்கள் அறிக்கையொன்றில் இதனை சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கை அதிகாரிகள் ஏப்ரல் 2ஆம் திகதி முதல் தடவையாக அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியதாக அதில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கைக்கு மனித உரிமை பேரவை கண்டனம்
கடந்த ஜூலை 15ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதன் பின்னர், ஜூலை 17ஆம் திகதி மீண்டும் அவசரகாலச் சட்டம்
பிரகடனப்படுத்தப்பட்டு, ஜூலை 27ஆம் திகதி பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்று மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மீது பல தடவைகள் கவலை தெரிவித்த போதிலும் அது பலனளிக்கவில்லை என ஐக்கிய
நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மனித உரிமைகள் பேரவையானது அமைதியான முறையில் ஒன்றுகூடல் மற்றும் கருத்து தெரிவிப்பதற்கான உரிமையை சட்டரீதியாக
பயன்படுத்துவதை மீறும்
வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மேலும் கண்டிக்கிறது.
சட்டத்தில் அதிரடி திருத்தம் ஆட்டத்தை ஆரம்பித்த ரணில்
சட்டத்தில் அதிரடி திருத்தம் ஆட்டத்தை ஆரம்பித்த ரணில்
நாட்டில் அமுலில் இருக்கும் அவசரகாலச் சட்டத்தின் ஒழுங்கு விதிகள் சிலவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதொடர்பில்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
“தேடல் மற்றும் கைது” பற்றிய தண்டனைச் சட்டத்தின் சில பிரிவுகள் நீக்கப்பட்டன,
உயர்நீதிமன்றத்தில் தண்டனைக்கு விதிக்கப்பட்ட தண்டனைகள் நீக்கப்பட்டுள்ளன.
சட்டத்தில் அதிரடி திருத்தம் ஆட்டத்தை ஆரம்பித்த ரணில்
இயற்கைக்கு மாறான குற்றங்கள் (சரீர உடலுறவு), இயற்கையின் ஒழுங்கிற்கு எதிரான உடலுறவு, நபர்களுக்கிடையேயான மோசமான அநாகரீகச்
செயல்கள் (ஒரே பாலினத்தவர்களுக்கிடையேயான பாலியல் செயல்களை விசாரிக்கப் பயன்படுத்தப்படும் குற்றம்) மற்றும் கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் ஆகிய ஒழுங்குவிதிகளே நீக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஜூலை 18ஆம் திகதி அவசரகாலச்
சட்டம் அமுல்படுத்தப்பட்டு, அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில்
பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
விபத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர்
விபத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர்
வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் பயணித்த கார் நேற்று (7) மாலை மின் கம்பத்துடன் மோதி பாரிய விபத்துக்குள்ளாகியது. இதில் பயணித்தவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.
மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தலைமையில் இலவச மருத்துவ முகாம் இடம் பெற்றது.
குறித்த மருத்துவ முகாம் நிறைவடைந்து நானாட்டானில் இருந்து பயணிக்கும் போதே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தின் போது வாகனத்தின் முன் பகுதி முற்றாக சேதம் அடைந்துள்ளது.
முருங்கன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்
அனைத்து வாகன சட்ட விதிகளும் வழமைபோன்று
அனைத்து வாகன சட்ட விதிகளும் வழமைபோன்று
இன்று முதல் அனைத்து வாகன சட்ட விதிகளும் வழமைபோன்று இடம்பெறும் என பொலிசார் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவிக்கையில், வாகனங்களை மட்டுப்படுத்துதல், அபராதம் கட்டுவதற்கான சீட்டுக்களை விநியோகித்தல், மதுபோதையில் வாகன ஓட்டுனர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கை என்பன மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
நாடு தற்சமயம் வழமையான நிலைக்குத் திரும்பியுள்ளது. இன்றில் இருந்து பெருமளவிலான வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும். வேலைக்காக செல்வோரின் எண்ணிக்கையும்
இன்றில் இருந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கணவன் போதையில் மனைவியின் அறைக்குச் சென்ற நண்பன்
கணவன் போதையில் மனைவியின் அறைக்குச் சென்ற நண்பன்
மட்டக்களப்பில் நண்பன் ஒருவரின் மனைவியை திருமணம் கடந்த உறவில் ஈடுபட வருமாறு அழைத்து அவர் மீது தாக்குதல் நடாத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் 15 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (06) உத்தரவிட்டார்.
மட்டு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் திருமணம் முடித்து மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் நண்பன் ஒருவரின் வீட்டிற்கு அதே பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் சென்று வந்துள்ள நிலையில் சம்பவ தினமான கடந்த 3 ம் திகதி இரவு குறித்த நண்பனின் வீட்டிற்கு சென்ற இளைஞன் அங்கு கதைத்துக்கொண்டு இருந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த நபர் நண்பனுடன் இணைந்து மது அருந்திவிட்டு அவருடன் வீட்டின் வெளியில் படுத்துறங்கியதுடன் குறித்த இளைஞன் வீட்டின் மண்டபத்தில் உறங்கியுள்ளார்.
இதன்போது நண்பனின் மனைவி அறையில் கதவை பூட்டாது தனிமையில் உறங்கி கொண்டிருந்துள்ளார்.
இந்த நிலையில் நண்பனின் மனைவி உறங்கி கொண்டிருந்த அறைக்கு சென்ற இளைஞன் அவரை எழுப்பி தன்னுடன் திருமணம் கடந்த உறவில் ஈடுபட வருமாறு அழைத்துள்ளார்.
அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததையடுத்து அவரின் கன்னத்தில் அறைந்துவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இந்த நிலையில் மதுபோதையில் இருந்த கணவன் காலையில் நித்திரையில் இருந்து எழுந்த போது மனைவியின் முகத்தில் உள்ள வீக்கத்தை கண்டு வினவிய நிலையில் மனைவி நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் தம்பதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
அதன்படி, பொலிசார் குறித்த இளைஞனை நேற்று கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுத்திய நிலையில் அவரை
எதிர்வரும் 15 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
ஹட்டனில் சிறுத்தைப்புலி உயிரிழப்பு
ஹட்டனில் சிறுத்தைப்புலி உயிரிழப்பு
ஹட்டனில் சிறுத்தைப்புலி வலையில் சிக்கி உயிரிழந்துள்ளது.
அட்டன், டிக்கோயா – வனராஜா சமர்வில் தோட்டப்பகுதியில் உள்ள மரமொன்றில் ஏறிய சிறுத்தை புலியை உயிருடன் பிடிக்க எடுத்த நடவடிக்கை
தோல்வியடைந்ததாக.நல்லதண்ணி வனவிலங்குகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று (07.08.2022) காலையில் சமர்வில் தோட்ட பகுதியில் உள்ள மரக்கறி தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த வலையில் சிக்கி காயமடைந்த குறித்த
சிறுத்தை காயத்துடன் கம்பியில் அகப்பட்டவாறே மரத்தில் ஏறியுள்ளது.
நான்கு அடி நீளம் கொண்ட சிறுத்தை, மரத்தில் இருப்பதை அவதானித்த பிரதேசவாசிகள், அட்டன் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் சிறுத்தையை பிடிப்பதற்காக நல்லதண்ணி வனவிலங்குகள் அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
ஹட்டனில் சிறுத்தைப்புலி உயிரிழப்பு
சிறுத்தையை உயிருடன் பிடிக்கும் நடவடிக்கையில், நல்லதண்ணி வனவிலங்குகள் அலுவலக அதிகாரிகள் மற்றும் பொலிஸார் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சிறுத்தை ஏறிய மரமும் வெட்டப்பட்டது.
இதன்போது சிறுத்தையின் மீதே மரம் விழுந்ததால் சிறுத்தை உயிரிழந்ததாகவும் தெரிவித்த அதிகாரிகள் ,
இதுதொடர்பில் மேலதிக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மகிந்தா குடும்பத்தை பாதுகாக்கும் ரணில் கொதிக்கும் மக்கள்
மகிந்தா குடும்பத்தை பாதுகாக்கும் ரணில் கொதிக்கும் மக்கள்
இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தை பாதுகாப்பதால் ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுள்ளார் .
எம்பி பதவியை ரணில் விக்கிரமசிங்க இழந்து தவித்த நிலையில் இலங்கையின் ஜனாதியாக மாற்றம் பெற்றுள்ள ரணில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயா மற்றும் ராஜபாக்ஸ குடும்பத்தை பாதுகாப்பதில் குறியாக உளளார்.
இவர்களது சொத்துக்கள் மற்றும் அரசியல் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்கு ரணில் தொடர்ந்து உதவி வருகிறார்.
உலக நாடுகளில் எங்கும் தங்க முடியாத நிலையில் கோட்டபாய சிக்கி தவித்து வருகிறார் .
இவரை போர்க் குற்ற சாட்டில் கைது செய்து விடுவார்கள் என்கின்ற பீதியில் கோட்டபாய இலங்கை திரும்புகிறார்.
அவ்வாறு இலங்கை வரும் இவர்களை ஒட்டு மொத்தமாக காப்பாற்றுவதில் ரணில் விக்ரமசிங்க உதவி புரிந்து வருவதால் மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர்.
மகிந்தா குடும்பத்தினை பாதுகாக்க தவறினால் இரண்டு வருடஙக்ளுக்கு உள்ளாகவே ரணில் ஆட்சி கவிழ்க்க பட்டு அவர் ஜனாதிபதி பதவியை இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இதனால் ரணில் மகிந்த ராஜபக்ச குடும்பத்தை பாதுகாக்க வேண்டிய நிலையில் உள்ளார்




















