Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
வாக்காளர்கள் இம்முறை கவனமாக இருக்க வேண்டும்
வாக்காளர்கள் இம்முறை கவனமாக இருக்க வேண்டும்
வாக்காளர்கள் இம்முறை கவனமாக இருக்க வேண்டும் ,சில சிரேஷ்ட அரசியல்வாதிகள் தமது வருமான ஆதாரங்களை வெளியிட வேண்டியிருப்பதன் காரணமாக, இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
எனவே, வாக்களிக்கும் வேட்பாளர்களை தெரிவு செய்யும் போது வாக்காளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என, ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிறுவகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்தார்.
விசேட வர்த்தமானி வெளியீடு
விசேட வர்த்தமானி வெளியீடு
விசேட வர்த்தமானி வெளியீடு எல்பிட்டிய உள்ளுராட்சி சபையின் தலைவர் மற்றும் உப தலைவரை அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை, தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, அதன் தலைவராக கொழும்பு தந்திரிகே நிஷாந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக, வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உப தலைவராக, வகொட பத்திரகே சுமித் சந்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 26ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலில், எல்பிட்டிய உள்ளூராட்சி சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்டது.
மொத்தமுள்ள 17 தொகுதிகளில் 15இல் வெற்றி பெற்றுள்ளது.
மெல்போர்னுக்கு செல்லவிருந்த விமானம் இரத்து
மெல்போர்னுக்கு செல்லவிருந்த விமானம் இரத்து
மெல்போர்னுக்கு செல்லவிருந்த விமானம் இரத்து 290 பயணிகளுடன் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்குச் செல்லவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் தாமதமானதால், பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.
11 மணித்தியாலங்களுக்கும் மேலாக விமானம் தாமதமாக புறப்பட்டதாக, பயணிகள் தெரிவித்தனர்.
இந்த விமானம் இன்று அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த விமானம் இரத்து செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இதையடுத்து, துரிதமாக செயற்பட்டு, மெல்போர்ன் செல்ல விரும்பிய பயணிகள் வேறு விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
எஞ்சிய பயணிகள் ஹோட்டல்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கூடிய விரைவில் மெல்பேர்னுக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மேலும் தெரிவித்துள்ளது
சிறைச்சாலைக்குள் அலைபேசி மீட்பு
சிறைச்சாலைக்குள் அலைபேசி மீட்பு
சிறைச்சாலைக்குள் அலைபேசி மீட்பு புஸ்ஸ உயர்பாதுகாப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொடி லசி என அழைக்கப்படும் ஜனித் மதுஷங்கவின் சிறை வளாகத்தில் இருந்து, அலைபேசி மற்றும் பல உபகரணங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
பொடி லசி அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையின் சிறப்புப் பிரிவின் செல் எண் 42-ஐ அவசரமாக ஆய்வு செய்வதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவொன்று குறித்த இடத்திற்குச் சென்றுள்ளது.
இதன்போது, பொடி லசி தனது உடமையில் வைத்திருந்த அலைபேசி மற்றும் துணைக்கருவிகளை பின்புற ஜன்னல் வழியாக வீசியதாக, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
அதன்படி, அலைபேசி 1, சார்ஜர் 1, டேட்டா கேபிள், 01 ஹேண்ட் ஃப்ரீ உள்ளிட்ட உபகரணங்களை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக தடைசெய்யப்பட்ட உபகரணங்கள் புஸ்ஸ சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேலும் தெரிவித்தனர்.
1000 கோடி ரூபாய் மோசடி இருவர் கைது
1000 கோடி ரூபாய் மோசடி இருவர் கைது
1000 கோடி ரூபாய் மோசடி இருவர் கைது குருணாகலையை மையமாகக் கொண்டு பிரமிட் நிதி நிறுவனத்தை நடத்தி வைப்பாளர்களிடம் சுமார் 1000 கோடி ரூபாவை மோசடி செய்து நாட்டை விட்டு தப்பிச் சென்ற நிறுவனத்தின்
உரிமையாளர், நிதி நிறுவனத்தின் பணிப்பாளராக இருந்த அவரது மனைவி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, வௌ்ளிக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
52 வயதான குருணாகலைச் சேர்ந்த இவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த நிலையில்,
மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வௌ்ளிக்கிழமை (08) அதிகாலை 12.00 மணியளவில் வந்தடைந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் வருகை தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு
திணைக்கள அதிகாரிகள் சாளரத்திற்குச் செல்வதற்கு முன்னர் அவரை கைது செய்தனர்.
சந்தேக நபரை அழைத்துச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் காத்திருந்த நிதி நிறுவனத்தின்
பணிப்பாளரான 42 வயதுடைய அவரது மனைவியும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
“ஜேடி’ஸ் பிசினஸ் ஸ்கூல்” என்ற பிரமிட் நிதி நிறுவனத்தை நிறுவி, சுமார் 2,500 வைப்பாளர்களை ஏமாற்றி, குருநாகல் நகரின் மையத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி, அந்தப் பகுதியில் இரண்டு பெரிய நிலங்களை வாங்கி,
இயக்குநர் ஒருவரின் பெயரில் இலங்கையில் உள்ள 03 முக்கிய வங்கிகளின் இந்த நிதி நிறுவனத்துக்குச் சொந்தமான 11 கணக்குகள் பராமரிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
- ஓமானுடன் ஹோர்முஸ் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நெருங்கிவிட்டதாக ஈரான் அதிகாரி கூறுகிறார்

- ஈரானில் இரண்டு மொஸாட் உளவாளிகளை தூக்கு

- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் ஏவுகணைகளையும், பாஸ்பரஸ் குண்டுகளையும் வீசின

- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

சாவகச்சேரி சந்தையில் பதற்றம்/ வைத்தியருக்காக ஒன்று திரண்ட மக்கள்
சாவகச்சேரி சந்தையில் பதற்றம்/ வைத்தியருக்காக ஒன்று திரண்ட மக்கள்
சாவகச்சேரி சந்தையில் பதற்றம்/ வைத்தியருக்காக ஒன்று திரண்ட மக்கள்,மருத்துவரை துரத்திய ஈபிடி , நடந்த திக் திக் சம்பவம் .
காணொளியில் முழுமையான விபரங்கள் .
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

அர்ச்சுனாவை துரத்திய பொலிஸ்
அர்ச்சுனாவை துரத்திய பொலிஸ்
அர்ச்சுனாவை துரத்திய பொலிஸ் ,யாழ்ப்பாணம் கொடிகாமம் சந்தைக்கு தேர்தல் பரப்புரைக்கு சென்ற அர்ச்சுனா இராமநாதனை இலங்கை போலீசார் பின் தொடர்ந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .
தேர்தல் பரப்புரையில் எதாவது இடையூறு ஏற்படுகிறது என்பதை கண்காணிக்கவே இந்த விடயம் இடம்பெற்றதாக ,அதன் ஊடக காணமுடிகிறது .

நேரிய அரசியல் பயணத்தில் பயன்படும் இவ்வேளையில் இவர்களது இந்த நடவடிக்கை என்பது மிக முக்கியமான பங்காக காணப்படுகிறது .
அதனால் அர்ச்சுனா வெற்றியை தடுக்கும் நகர்வில் எதிரிகள் பல நாசகார செயல்களை நடத்திட ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது .
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

- அரசுத் தாவலுக்கு ஹர்ஷா மறுப்பு

- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

3000 இற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரத்து
3000 இற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரத்து
3000 இற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரத்து ,இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 3,000 இற்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் 3,249 சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
சாரதிகள் செய்த பல்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றங்களால் முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணைகளுக்கு அமைவாக, குறித்த சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

விலைகளை மதிப்பாய்வு செய்ய வர்த்தக அமைச்சு தீர்மானம்
விலைகளை மதிப்பாய்வு செய்ய வர்த்தக அமைச்சு தீர்மானம்
விலைகளை மதிப்பாய்வு செய்ய வர்த்தக அமைச்சு தீர்மானம் ,ரூபாவின் பெறுமதி வலுப்படுத்தப்பட்டமையை கருத்தில் கொண்டு, பேக்கரி மற்றும் உணவக பொருட்களின் விலைகளை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த பொருட்களின் விலை குறைப்பு சதவீதம் குறித்து, நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு மக்கள் முறைப்பாடு செய்துள்ளதாகவும், அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ரூபாய் மதிப்பு வலுப்பெற்றதையும், மூலப்பொருள் விலை குறைப்பையும் பயன்படுத்தி பேக்கரி மற்றும் உணவக உரிமையாளர்கள் மக்களுக்கு உரிய விலையை வழங்குகிறார்களா என்பது, குறித்து தற்போது ஆராயப்படுகிறது.
அதேநேரம், பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தை அழைத்து விலை குறைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளது.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை ,நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் எதிர்வரம் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பாடசாலைகள் மூடப்படுவதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, மீண்டும் பாடசாலைகள் எதிர்வரும் 18ஆம் திகதி திறக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஓமானுடன் ஹோர்முஸ் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நெருங்கிவிட்டதாக ஈரான் அதிகாரி கூறுகிறார்

- ஈரானில் இரண்டு மொஸாட் உளவாளிகளை தூக்கு

- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் ஏவுகணைகளையும், பாஸ்பரஸ் குண்டுகளையும் வீசின

- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

லொறி விபத்து:ஒருவர் பலி அறுவர் காயம்
லொறி விபத்து:ஒருவர் பலி அறுவர் காயம்
லொறி விபத்து:ஒருவர் பலி அறுவர் காயம் இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தபளை – கொங்கொடியா பகுதியில், இன்று காலை இடம்பெற்ற விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளதாக, இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தப்பளை பிரதான நகரில் இருந்து கொங்கோடியா பகுதிக்கு மர்க்கறி சேகரித்து ஏற்றச்சென்ற டிப்பர் லொறியொன்று, பாதையை விட்டு விலகி, சுமார் 30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக, இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் 43 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த 6 பேரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து இராகலை பொலிஸா மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
- ஓமானுடன் ஹோர்முஸ் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நெருங்கிவிட்டதாக ஈரான் அதிகாரி கூறுகிறார்

- ஈரானில் இரண்டு மொஸாட் உளவாளிகளை தூக்கு

- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் ஏவுகணைகளையும், பாஸ்பரஸ் குண்டுகளையும் வீசின

- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

திடீர் சோதனையில் 2 பெண்கள் உட்பட 28 பேர் கைது
திடீர் சோதனையில் 2 பெண்கள் உட்பட 28 பேர் கைது
திடீர் சோதனையில் 2 பெண்கள் உட்பட 28 பேர் கைது ,கடலோர பொலிஸ் பிரிவின் மூன்று பிரதேசங்களில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 2 பெண்கள் உட்பட 28 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களில் 12 சந்தேக நபர்கள் இருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஜம்பட்டா வீதி, புனித அந்தோணி வீதி மற்றும் ரத்னம் வீதி 44 தோட்டப் பகுதிகளை உள்ளடக்கிய வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த நடவடிக்கையின் போது, சந்தேகநபர்களிடம் இருந்து 12,900 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 5,900 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 10 கிராம் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்ட சுமார் 40 வீடுகள் மற்றும் வீதியில் பயணித்த சந்தேகத்திற்கிடமான நபர்களை முழுமையாக
சோதனையிட்டதில் குறித்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறக்குறைய 2 மணித்தியாலங்கள் நீடித்த இந்த நடவடிக்கைக்கு “அமாய்” என்ற மோப்ப நாயும் பயன்படுத்தப்பட்டதுடன், விசேட அதிரடிப்படை
அதிகாரிகள் உட்பட சுமார் 50 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இந்த நடவடிக்கையில் கலந்துகொண்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
துப்பாக்கிகளை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு
துப்பாக்கிகளை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு
துப்பாக்கிகளை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு ,பாதுகாப்பு அமைச்சகத்தால் வழங்கப்பட்ட உரிமம் கொண்ட துப்பாக்கிகளை மீண்டும் கையளிக்க வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நவம்பர் 21ஆம் திகதிக்கு முன்னர் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
துப்பாக்கிகளை மீண்டும் கையளிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு ஒரு மாத கால அவகாசம் வழங்கியதுடன் அந்த காலம் இன்றுடன் நிறைவடையவிருந்தது.
எவ்வாறாயினும், முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்டு, காலத்தை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர் பாதுகாப்பிற்காக உரிமத்துடன் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை பரிசீலனை செய்த பின்னர், மீளப்பெறுவதைக் கருத்தில் கொண்டு துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
கடற்படையின் வெலிசறையில் அமைந்துள்ள அரசாங்கத்தின் வர்த்தக வெடிபொருள் களஞ்சியத்திற்கு இந்த துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
எனினும் பெருமளவிலான மக்கள் துப்பாக்கிகளை மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதுவரை துப்பாக்கிகளை ஒப்படைக்காத நபர்களுக்கு குறித்த துப்பாக்கிகளை ஒப்படைப்பதற்காக இவ்வாறு கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து விளக்கம்
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து விளக்கம்
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து விளக்கம் ,முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி சகல பொலிஸ் அதிகாரிகளுக்கும் மருந்து வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட
அதிகம் என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (06) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு செலவு தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை விவரித்தார்.
அதற்காக நூற்றுக்கும் அதிகமான பொலிஸ் மற்றும் படை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் சில ஜனாதிபதிகளுக்கு 180 வரையான பாதுகாப்பு அதிகாரிகள் கடமையாற்றுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு அதிகாரிகள் மாத்திரமன்றி பாதுகாப்பு வாகனங்கள், பஸ், டிபன்டர் ரக வாகனங்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள், அம்பியூலன்ஸ் வண்டி என சகலதும் வழங்கப்பட்டுள்ளதுடன் சராசரியாக
பொலிஸ் பாதுகாப்பு வழங்குதல் மற்றும் ஏனைய பராமரிப்பு செயற்பாடுகளுக்காக 1,100 மில்லியன் ரூபா வரை செலவிடப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்கட்டினார்.
ஒரு வருடத்திற்கு செலவாகும் இந்த செலவு பொலிஸ் வைத்தியசாலையின் ஒரு வருடத்திற்கான செலவை விட அதிகம் என குறிப்பிட்ட அமைச்சர், இவ்வாறான செயற்பாடுகளை மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். அதற்காக குழு
ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், குழுவின் சிபாரிசுக்கு இணங்க எதிர்காலத்தில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்றும், அந்த அமைச்சரவை பத்திரத்திற்கு இணங்க சகல முன்னாள்
ஜனாதிபதிகளுக்குமான சலுகை முறைகள் மற்றும் பாதுகாப்புடன் தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
மேலும் விசேட பாதுகாப்பு தேவைப்பாடு உள்ள முன்னாள் ஜனாதிபதிகளுக்காக விசேட பாதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் விபரித்தார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு நீக்கப்படவில்லை என்றும், அவருக்கு ஏற்கனவே 57 பாதுகாப்பு அதிகாரிகள் காணப்படுவதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

போதகரின் மற்றுமொரு கார் சிக்கியது
போதகரின் மற்றுமொரு கார் சிக்கியது
போதகரின் மற்றுமொரு கார் சிக்கியது ,சட்டவிரோதமாக சொகுசு கார் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட போதகரின் வாகன முற்றத்தில் இருந்து மற்றுமொரு சொகுசு கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கண்டி கல்தென்ன ஆலயத்தின் போதகர் அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இந்தக் காரைக் புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட சொகுசு காரின் இலக்கத்தை கொண்ட மற்றுமொரு கார் இது குருநாகல் – ஹெட்டிபொல பிரதேசத்தில் இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்ததையடுத்து, குறித்த வாகனம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

அர்ச்சுனாவுக்கு வந்த சோதனை |இப்படியும் மக்கள்
அர்ச்சுனாவுக்கு வந்த சோதனை |இப்படியும் மக்கள்
அர்ச்சுனாவுக்கு வந்த சோதனை |இப்படியும் மக்கள் ,வெடித்து பறந்த வாதம் .
முழுமையாக இந்த காணொளியை கேட்டு பாருங்கள் .
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

மலையக மக்களின் இருப்புக்காக காங்கிரஸ்
மலையக மக்களின் இருப்புக்காக காங்கிரஸ்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இருப்பதால்தான் மலையகத்தில் காணிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. காங்கிரஸ் இல்லாவிட்டால் காணிகள் என்றோ பறிபோய் இருக்கும். எனவே, மலையக மக்களின் இருப்புக்காக,
பாதுகாப்புக்காக காங்கிரஸ் வேட்பாளர்களை நிச்சயம் வெற்றி பெறவைக்க வேண்டும் என்று இதொகாவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.
மஸ்கெலியா பகுதியில் இன்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் ரமேஷ் மேலும் கூறியவை வருமாறு ,
‘ நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்த வேளை, வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்டு வழிநடத்தியவர்தான் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
அதனால்தான் ஜனாதிபதி தேர்தலின் போது அவரை ஆதரிக்குமாறு அறிவித்திருந்தோம்.
அதுமட்டுமல்ல அவர் தலைமையிலான ஆட்சியில் குறுகிய காலப்பகுதிக்குள் மலையகத்துக்கு பல சேவைகளை பெற்றுக்கொடுக்க முடிந்தது. காணி உரிமையை வழங்குவதற்குரிய நிதி ஒதுக்கப்பட்டது. சம்பள பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நாட்டையும் பாதுகாத்து, மலையகத்துக்குரிய அபிவிருத்திகளுக்கான உதவிகளையும் ரணில் விக்கிரமசிங்க வழங்கினார்.
எமது மக்கள் அவருக்கு வாக்களித்தனர். ஏனையோர் வாக்களிக்கவில்லை. அதனால் பெரும்பான்மையை பெறமுடியாமல் போனது.
தற்போது பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் எமது மக்கள் ஏன் இதொகா வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும்? இதொகாதான் மக்களுக்காக குரல் கொடுக்கும், மக்களுக்காக சேவைகளை செய்துள்ளது. உரிமையுடன்
வாக்கு கேட்பதற்குரிய தகுதி எமக்குதான் உள்ளது. காங்கிரஸ் இல்லாவிட்டால் மலையகத்தில் காணிகளெல்லாம் பறிபோய் இருக்கும்.
நாம் தேர்தல் காலத்தில் மட்டும் மக்கள் மத்திக்கு வரவில்லை. என்றும் மக்களுடன்தான் இருக்கின்றோம்.
ஆனால் தேர்தல் காலத்தில் மட்டும் தோட்டங்களுக்கு வருபவர்கள்தான் காங்கிரஸ் எதையும் செய்யவில்லை என விமர்சித்துக்கொண்டுள்ளனர்.
தபால்மூல வாக்களிப்பில் எமது அரச ஊழியர்களில் 75 வீதமானோர் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கே வாக்களித்துள்ளனர்.
ஏனெனில் எமது மக்களுக்கு அரச சேவையில் வேலைகளை பெற்றுக்கொடுத்ததும் காங்கிரஸ்தான். எனவே, உதிரிகளுக்கு வாக்களித்து, வாக்குகளை சிதறடிக்காமல், சிந்தித்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.
தேர்தல் ஆணைக்குழுவில் விசேட சந்திப்பு
தேர்தல் ஆணைக்குழுவில் விசேட சந்திப்பு
தேர்தல் ஆணைக்குழுவில் விசேட சந்திப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் இன்று (06) தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் சம்பந்தமாக விரிவாக ஆராயும் வகையிலேயே மேற்படி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் இன்று (06) இடம்பெறவுள்ள மேற்படி பேச்சுவார்த்தையில் அனைவரும்
பங்கேற்கவேண்டுமென, ஆணைக்குழுவினால் அனைத்து உதவி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

- ஜெயவர்தனபுர மருத்துவமனையில் தலைமை வெற்றிடத்தால் நோயாளிகளுக்கு ஆபத்து

- கண்டியின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு காரணமாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

ஒரே அரசியல் கட்சி நாங்கள்தான் சஜித்
ஒரே அரசியல் கட்சி நாங்கள்தான் சஜித்
ஒரே அரசியல் கட்சி நாங்கள்தான் சஜித் ஜனரஞ்சக அரசியல் பாதையை உருவாக்குவதே தமது கட்சியின் நோக்கம் என சர்வஜன அதிகாரத்தின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு சர்சஜன அதிகாரம் புதிய பார்வையை கொண்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கம்பஹாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போதே திலித் ஜயவீர இதனைத் தெரிவித்தார்.
“இலங்கையில் மீண்டும் ஒரு நல்லதொரு அரசியலை உருவாக்குவதற்கான அரசியல் இயந்திரம் சர்வஜன அதிகாரமே. ஒரு நல்ல அரசியல் கட்சி, உங்களை நேசிக்கும் பாசமுள்ள அரசியல் கட்சியாக இதை உருவாக்குவோம்.
இந்த அதிகாரத்தின் ஊடாக முன்பு போல பிறருக்காக அரசியல் மேற்கொள்ளும் மனிதர்களுக்கான அரசியலையே நாம் உருவாக்க நினைக்கிறோம்.
சலுகைகளை அனுபவிக்கவோ அல்லது பிற நன்மைகளைப் பயன்படுத்தவோ அரசியல் செய்யவில்லை.உண்மையான மனிதாபிமான முகமும்
அணுகுமுறையும் கொண்ட அரசியலாக, நமது அரசியல் இயக்கம் மிகக் குறுகிய காலத்தில் முதிர்ச்சியடைந்து இன்று உயிர்ப்புடன் இருக்கும் ஒரே அரசியல் கட்சி.
இன்று அனைத்து மதங்களையும் இனங்களையும் ஒன்றுபட்ட தேசியத்தில் ஒன்றிணைக்கும் பயணத்தை எம்மால் மேற்கொள்ள முடிந்துள்ளது.
- ஓமானுடன் ஹோர்முஸ் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நெருங்கிவிட்டதாக ஈரான் அதிகாரி கூறுகிறார்

- ஈரானில் இரண்டு மொஸாட் உளவாளிகளை தூக்கு

- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் ஏவுகணைகளையும், பாஸ்பரஸ் குண்டுகளையும் வீசின

- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை

சந்திரிக்காவின் பாதுகாப்பு நீக்கப்படவில்லை
சந்திரிக்காவின் பாதுகாப்பு நீக்கப்படவில்லை
சந்திரிக்காவின் பாதுகாப்பு நீக்கப்படவில்லை ,முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு நீக்கப்படவோ அல்லது குறைக்கப்படவோ இல்லையென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“முன்னாள் ஜனாதிபதிகள் குறிப்பாக சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் பாதுகாப்பு நீக்கப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார். அப்படி எந்த நீக்கமும்
செய்யப்படவில்லை. 30 வரை குறைக்கப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார். அது தவறு. அவருக்கு தற்போது 57 பேர் வழங்கப்பட்டுள்ளனர்.”