காதல் முறிவால் உயிரை மாய்த்த யுவதி
Posted in இலங்கை செய்திகள்

காதல் முறிவால் உயிரை மாய்த்த யுவதி

காதல் முறிவால் உயிரை மாய்த்த யுவதி

காதல் முறிவால் உயிரை மாய்த்த யுவதி ,மொனராகலை நக்கல்லை யொவுன் கிராமத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியை ஒருவர் தனது வீட்டில் வைத்து தன் உயிரை மாய்த்துக்கொண்டு உயிரிழந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்றுள்ளது.

மொனராகலை நக்கல்லை யொவுன் கிராமம், நக்கலவத்தை பாரதி முன்பள்ளியின் ஆசிரியராக பணிபுரிந்த 29 வயதுடைய ராமச்சந்திரன் இந்திராதேவி என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவருடைய காதல் முறிவு காரணமாகவே உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

செவ்வாய் நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு
Posted in இலங்கை செய்திகள்

செவ்வாய் நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு

செவ்வாய் நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு

செவ்வாய் நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு ,நவம்பர் 14 ஆம் திகதியன்று நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை (11) நள்ளிரவுடன் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதனிடையே, தேர்தல் அலுவலகங்களை அகற்றுவதற்கு புதன்கிழமை (12) நள்ளிரவு வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பொதுத் தேர்தல் காலத்தில் சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் பொய்ப் பிரசாரங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவில் 5 அதிகாரிகள் அங்கம் வகிக்கின்றனர்.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக ஊடகங்கள் ஊடாக ஒரு கட்சி அல்லது வேட்பாளருக்கு எதிராக பதிவிடப்படும் தவறான பிரச்சாரங்கள்

தொடர்பில் கண்காணிபடவுள்ளது. பொய்ப் பிரசாரங்களை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் வகையிலான பதிவுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

பொதுத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் 50 பேர் ஈடுபடவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஏற்கனவே இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் கண்காணிப்பாளர்களும் எதிர்வரும் நாட்களில் வருகைதரவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் அழைப்பிற்கிணங்க மேலும் 08 நாடுகளின் தேர்தல்

கண்காணிப்பாளர்களும் வருகை தரவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் குறிப்பிட்டார். சார்க் வலய நாடுகள் மற்றும் ரஷ்யாவை பிரதிநிதித்துவப்படுத்தி அவர்கள் இலங்கைக்கு வரவுள்ளனர்.

இதேவேளை, இம்முறை பொதுத் தேர்தலில் அரச சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்படுகின்றமை மிகக் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மதுபானசாலைகளுக்கு பூட்டு
Posted in இலங்கை செய்திகள்

மதுபானசாலைகளுக்கு பூட்டு

மதுபானசாலைகளுக்கு பூட்டு

மதுபானசாலைகளுக்கு பூட்டு ,பொதுத்தேர்தல் காரணமாக நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 14 ஆம் திகதி பொதுத்தேர்தல் காரணமாகவும், 15 ஆம் திகதி பௌர்னமி தினத்தை முன்னிட்டும் மதுபானசாலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தினங்களில் அனுமதிச்சட்டத்தை மீறும் மதுபானசாலைகள் மற்றும் ஏனைய சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் சட்டத்தை கடுமையாக நடைமுறைபடுத்துமாறு மதுவரித்திணைக்கள ஆணையாளர் நாயகம் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கிடையில், நிலுவையில் உள்ள மதுபான உரிமங்களை புதுப்பிப்பதற்கு வருமான வரியை செலுத்தாத நிறுவனங்களுக்கு இம்மாதம் 30ம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ள து.

இந்த நிறுவனங்களில் 04 நிறுவனங்கள் தொடர்பில் மதுவரித்திணைக்களம் அதிக கவனம் செலுத்தியுள்ளதுடன் அந்த நிறுவனங்களின் அனுமதிப்பத்திரங்கள் இடைநிறுத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விருப்பு வாக்குகளை வழங்க வேண்டும் என்பது இனவாதம் அல்ல
Posted in இலங்கை செய்திகள்

விருப்பு வாக்குகளை வழங்க வேண்டும் என்பது இனவாதம் அல்ல

விருப்பு வாக்குகளை வழங்க வேண்டும் என்பது இனவாதம் அல்ல

விருப்பு வாக்குகளை வழங்க வேண்டும் என்பது இனவாதம் அல்ல ,அது இன பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் இன உரிமை ஆகும். உண்மையில், நடைமுறையில் உள்ள தேர்தல் முறையின் விருப்பு வாக்கு என்ற முறைமை அதைதான் வலியுறுத்துகிறது.

அதிலும் மிக குறிப்பாக தமிழர்கள் சிறுபான்மையாக வாழும் கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி,கண்டி, கம்பஹா, பதுளை ஆகிய மாவட்டங்களில் தமிழ் வாக்காளர்கள் தமது விருப்பு வாக்குகளை தமிழ் வேட்பாளர்களுக்கு மாத்திரம் வழங்குவது அத்தியாவசியமாகும். இதுவே எமது

பிரதிநிதித்துவத்தை பெற்று கொள்ள உள்ள ஒரே வழி. இதைதான் விகிதாசார தேர்தல் முறையும் வலியுறுத்துகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.

கொழும்பு கொச்சிக்கடை ஜம்பட்டா வீதியில் ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய ​அவர்:

தமிழர்கள் சிறுபான்மையாக வாழும் கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி, கண்டி,கம்பஹா, பதுளை ஆகிய மாவட்டங்களில் தமிழ் வாக்காளர்கள் கடை பிடிக்க வேண்டிய செயன்முறைமையை நான் எளிமையாக விவரிக்க

விரும்புகிறேன். முதலில் நமது வாக்காளர்கள், தமது மாவட்டங்ளில் போட்டி இடும் தமிழ் வேட்பாளர்களில் வெற்றி பெறக்கூடிய அணி எது, அதன் சின்ன்னம் எது என தீர்மானிக்க வேண்டும்.

இதன் பின்னர், அந்த அணிக்குள்ளே இருக்கும் தமிழ் வேட்பாளரின் அல்லது வேட்பாளர்களின் விருப்பு வாக்கு இலக்கங்களை கண்டறிய வேண்டும். இதன் பின்னர் தேர்தலின் போது வாக்கு சீட்டில், தாம் தெரிவு செய்துள்ள

சின்னத்துக்கு புள்ளடி இட வேண்டும். பின்னர் தமிழ் வேட்பாளர்களின் விருப்பு வாக்கு இலக்கங்களுக்கு புள்ளடி இட வேண்டும். இதோடு இந்த வாக்களிக்கும் கடமை முடிகிறது. என தெரிவித்தார்.

தமிழ் வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகளை அளித்த பின்னர் விருப்பு வாக்குகள் மீதமாக இருக்குமானால், அந்த விருப்பு வாக்கை அந்த அணியின்

தலைமை வேட்பாளருக்கு அளிக்கலாம். அளிக்காமலும் விடலாம். மூன்று விருப்பு வாக்குகளையும் பயன்படுத்த வேண்டும் என்பது கட்டாயமல்ல.

முதலில், நாம் போட்டி இடும் தொலைபேசி சின்னத்துக்கு புள்ளடி இடுவது கட்டாயம். பின்னர் தமிழ் வேட்பாளரின் விருப்பு வாக்கை அளியுங்கள். கொழும்பில் மனோ கணேசன்-11, லோஷன்-13, கேகாலையில் பரணி-5,

இரத்தினபுரியில் சந்திரகுமார்-6, கம்பஹாவில் சசிகுமார்-18,கண்டியில் பாரத்-4, பதுளையில் பகிதரன்-4 ஆகிய விருப்பு வாக்கு இலக்கங்களுக்கு மாத்திரம் வாக்களித்து விட்டு வாக்களிக்கும் பணியை முடிவு செய்யலாம்.

தமிழர்கள் சிறுபான்மையாக வாழும் கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி, கண்டி, கம்பஹா, பதுளை ஆகிய மாவட்டங்களில் இதுவே நமது பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய எம் முன் உள்ள ஒரே ஜனநாயக வழியாகும்

உலக நாயகன் கமல்ஹாசன் திடீரென அறிவித்துள்ளார்
Posted in இலங்கை செய்திகள்

உலக நாயகன் கமல்ஹாசன் திடீரென அறிவித்துள்ளார்

உலக நாயகன்’ உள்ளிட்ட அடமொழிகளைத் துறப்பதாக நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் திடீரென அறிவித்துள்ளார்.

மேலும், தன்னை இனி ‘கமல்ஹாசன்’ அல்லது ‘KH’ என்று அழைத்தாலே போதும் என்று சினிமாத் துறையினர், ஊடகவியலாளர்கள், கட்சியினர், அரசியல்வாதிகள், இந்திய மக்கள் என அனைவருக்கும் வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (11) தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: என் மீது கொண்ட அன்பினால் ‘உலக நாயகன்’ உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள்.

மக்கள் கொடுத்து சக கலைஞர்களாலும், ரசிகர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இப்படிப்பட்ட பாராட்டுச் சொற்களால் மகிழ்ந்திருக்கிறேன். உங்கள் இந்த அன்பால் நெகிழ்ந்தும் இருக்கிறேன். உங்களின் பிரியத்தின் மீது எனக்கு மாறாத நன்றியுணர்வும் உண்டு.

சினிமாக் கலை, எந்தவொரு தனி மனிதனையும் விட பெரியது. அந்தக் கலையில் மேலும் மேலும் கற்றுக் கொண்டு பரிணாமம் அடைய விரும்பும் ஒரு மாணவன் தான் நான்.

பிறக் கலைகளைப் போலவே சினிமாவும் அனைவருக்குமானது; அனைவராலும் ஆனது. திறமையான கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், நல்ல ரசிகர்கள் ஒன்றிணைந்துதான் சினிமா உருவாகிறது.

கலையை விட கலைஞன் பெரியவன் இல்லை என்பது என் ஆழமான நம்பிக்கை. கற்றது கைமண் அளவு என்பதை உணர்ந்தவனாகவும், தொடர்ச்சியான முன்னகர்வில் நம்பிக்கை கொண்டு உழைத்து உயர்பவனாகவும் இருப்பதே எனக்கு உவப்பானது.

அதனால்தான் நிறைய யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வர நேர்ந்தது. மேலே குறிப்பிடதுபோன்ற பட்டங்களையும், அடைமொழிகளையும் வழங்கியவர்களுக்கு எந்த மரியாதைக்குறைவும் வந்துவிடாத வண்ணம், அவற்றைத் துறப்பது என்பதே அது.

எனவே என் மீது பிரியம் கொண்ட அனைவருக்கும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். இனிவரும் காலத்தில் என் ரசிகர்களும், ஊடக நண்பர்களு, திரைத்துறையச் சார்ந்தவர்களும், மக்கள் நீதி மய்ய கட்சித் தொண்டர்களும்,


க இந்தியர்களும் என் கமல்ஹாசன் என்றோ கமல் என்றோ KH என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்று


கேட்டுக் கொள்கிறேன். இத்தனை காலமாக நீங்கள் என்மேல் காட்டிவரும் அன்புக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்கிறேன்.


சக மனிதன் என்கிற ஸ்தானத்தில் இருந்தும், சினிமாவை நேசிக்கிற நம் அனைவரிலும் ஒருவனாகவே நான் இருக்க வேண்டும் என்கிற என்

எண்ணத்தில் இருந்தும் இந்த வேண்டுகோள் வெளிப்படுகிறது என்பதைப்
புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்
Posted in இலங்கை செய்திகள்

வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்

வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்

வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் சிறுவர்களுக்கு மத்தியில் காய்ச்சல் அதிகரித்து வருவதாக ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஏறக்குறைய மூன்று நாட்களுக்கு காய்ச்சல் நீடித்தால் அது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் கூறியுள்ளார்.

“அண்மைய நாட்களாக குழந்தைகளுக்கு இடையில் வைரஸ் காய்ச்சல் அதிகரித்துள்ளது. இது இருமல் மற்றும் சளியுடன் கூடிய காய்ச்சலாகும். மேலும், டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

எனவே இருமல், சளி, காய்ச்சல், உடல்வலி, வாந்தி இருந்தால் வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறியாகும்.
எனவே, மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், உரிய இரத்தப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.” என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

லேக்ஹவுஸ் கட்டிடத்தில் கார் மோதி விபத்து
Posted in இலங்கை செய்திகள்

லேக்ஹவுஸ் கட்டிடத்தில் கார் மோதி விபத்து

லேக்ஹவுஸ் கட்டிடத்தில் கார் மோதி விபத்து

லேக்ஹவுஸ் கட்டிடத்தில் கார் மோதி விபத்து ,கொழும்பு லேக்ஹவுஸ் கட்டிடத்தின் நுழைவாயிலுக்கு அருகில் கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் சொத்துக்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை கட்டிடத்தின் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள சீமெந்து சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதி தூங்கியதால் கார் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவத்தில் சாரதி காயமின்றி உயிர்தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் கொழும்பு – கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு ஜெனரல்களுக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தடை
Posted in இலங்கை செய்திகள்

இரண்டு ஜெனரல்களுக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தடை

இரண்டு ஜெனரல்களுக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தடை

இரண்டு ஜெனரல்களுக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தடை ,சூடானின் துணை ராணுவப் படையைச் சேர்ந்த இரண்டு ஜெனரல்களுக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது.


துணை ராணுவக் குழுவின் செயல்பாட்டுத் தலைவர் மற்றும் மேற்கு டார்ஃபர் தளபதி ஆகியோர் பயணத் தடை மற்றும் சொத்து முடக்கம் ஆகியவற்றால் அறைந்துள்ளனர்.

வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்கள் மூலம் நாட்டை சீர்குலைத்ததற்காக சூடானின் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படையின் (RSF) இரண்டு ஜெனரல்களை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் குழு அனுமதித்துள்ளது.

மொஹமட் ஹம்டன் “ஹெமெட்டி” டகாலோ மற்றும் சூடான் ஆயுதப் படைகளின் (SAF) தலைவர் அப்தெல் ஃபத்தா அல் ஆகியோருக்கு இடையேயான

அதிகாரப் போட்டியின் விளைவாக, ஏப்ரல் 15, 2023 அன்று வெடித்த சூடானில் தற்போதைய போரில் முதல் ஐ.நா. தடைகள் இவை. -புர்ஹான்

RSF இன் நடவடிக்கைகளின் தலைவரான ஒஸ்மான் மொஹமட் ஹமீத் மொஹமட் மற்றும் மேற்கு டார்ஃபர் கமாண்டர் அப்தெல் ரஹ்மான் ஜுமா பர்கல்லா மீது சர்வதேச பயணத் தடை மற்றும் சொத்து முடக்கம்

ஆகியவற்றை விதிக்க ஆகஸ்ட் மாத இறுதியில் செய்யப்பட்ட அமெரிக்காவின் முன்மொழிவுக்கு UNSC இன் சூடான் தடைகள் குழு வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டது.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின்படி, இந்த திட்டத்தை ஆய்வு செய்ய அதிக நேரம் தேவைப்படுவதால், இந்த நடவடிக்கை ரஷ்யாவால் தாமதமானது என்று இராஜதந்திரிகள் தெரிவித்தனர்.

குழு ஒருமித்த கருத்துடன் செயல்படுகிறது.

மே மாதம், அமெரிக்க கருவூலத் துறை முகமது மற்றும் குழுவின் மத்திய டார்ஃபர் தளபதி அலி யாகூப் ஜிப்ரில் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது.

மன்னிப்பு கேட்ட அர்ச்சுனா |இணைந்த வன்னி மைந்தன் |மகிழ்ச்சியில் மக்கள்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

மன்னிப்பு கேட்ட அர்ச்சுனா |இணைந்த வன்னி மைந்தன் |மகிழ்ச்சியில் மக்கள்

மன்னிப்பு கேட்ட அர்ச்சுனா |இணைந்த வன்னி மைந்தன் |மகிழ்ச்சியில் மக்கள்

மன்னிப்பு கேட்ட அர்ச்சுனா |இணைந்த வன்னி மைந்தன் |மகிழ்ச்சியில் மக்கள் ,வன்னிமைந்தன் அர்ச்சுனா மோதல் முற்று பெற்றது .

காணொளியில் விபரம்

வீடியோ

பட்டாசு கொளுத்தியவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

பட்டாசு கொளுத்தியவர் கைது

பட்டாசு கொளுத்தியவர் கைது

பட்டாசு கொளுத்தியவர் கைது ,பட்டாசுகளை கொளுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், ஒருவரை ஹட்டன் பொலிஸார்,சனிக்கிழமை (09)​கைது செய்தனர்.

தேர்தல் விதிமுறைகளை மீறி பட்டாசு கொளுத்தி, பெருந்திரளான மக்களுடன் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த ஜனநாயக ஆதரவு மக்கள் குரல் கட்சியின் வேட்பாளர் அனுஷா சந்திரசேகரன் மற்றும் பலருக்கும்

பொலிஸார் எச்சரித்தனர். சனிக்கிழமை (09) இடம்பெற்ற இந்த சம்பவத்தை அடுத்து பட்டாசை கொளுத்தினர் என்றக் குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை ஹட்டன் பொலிஸார் கைது செய்தனர்.

ஒன்லைன் பணமோசடி59 பேர்கைது
Posted in இலங்கை செய்திகள்

ஒன்லைன் பணமோசடி59 பேர்கைது

ஒன்லைன் பணமோசடி59 பேர்கைது

ஒன்லைன் பணமோசடி59 பேர்கைது ,வெளிநாட்டு பிரஜைகளைக் குறிவைத்து நடாத்தப்பட்டு வந்த பெரும் ஒன்லைன் நிதி மோசடி ஒன்றை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) சைபர் கிரைம் பிரிவு

கண்டுபிடித்துள்ளதுடன் குறித்த மோசடிகளை நடாத்திய நிறுவனத்தின் இரண்டு தலைவர்கள் உட்பட 59 நபர்களையும் கைது செய்துள்ளது.

சந்தேகநபர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (08) கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் வெளிநாட்டு பிரஜைகளிடமிருந்து குறித்த குழு சுமார்

ரூ.300 மில்லியன் வரை மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உறுதியளித்து உள்ளுர் நிறுவனம் ஒன்று கொரிய பிரஜை ஒருவரிடம் ரூ.300 மில்லியன் பணமோசடி செய்துள்ளதாக தென் கொரியத் தூதரகம்

முறைப்பாடொன்றைப் பதிவு செய்ததன் பின்னர் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

ஹெவ்லொக் வீதியிலுள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து இந்த மோசடி நடத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் அங்கு 23 பெண்கள் உட்பட 59 இலங்கையர்களை அதிகாரிகள் கைது செய்தனர்.

சந்தேக நபர்கள், அவர்களில் சிலர் பன்மொழி பேசுபவர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் என்ற போர்வையில் முதலீட்டாளர்களை குறிவைக்க பணியமர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. நிதி என்ன

செய்யப்பட்டது என்பது தெரியாமல் பணியமர்த்தப்பட்டதால், இந்த மோசடி குறித்து தங்களுக்குத் தெரியாது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

விசாரணையைத் தொடர்ந்து, நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் முகாமையாளர் கைது செய்யப்பட்டதில், கட்டிடம் 9 மில்லியன் ரூபாய்க்கு

வாடகைக்கு விடப்பட்டது தெரியவந்தது. முதலீடுகளை ஈர்ப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட போலி ஆவணங்களையும் இருந்து கணினிகளில் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இயக்குனர் மற்றும் முகாமையாளரை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், பிறர் தலா 1 மில்லியன் ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மதிலை கவிழ்த்து வீட்டுக்குள் நுழைந்த பஸ்
Posted in இலங்கை செய்திகள்

மதிலை கவிழ்த்து வீட்டுக்குள் நுழைந்த பஸ்

மதிலை கவிழ்த்து வீட்டுக்குள் நுழைந்த பஸ்

மதிலை கவிழ்த்து வீட்டுக்குள் நுழைந்த பஸ் ,வீதியை விட்டு விலகிய தனியார் பஸ்ஸொன்று அருகில் உள்ள வீடொன்றின் மதிலை கவிழ்த்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம்,

பதுளை- மஹியங்கனை பிரதான வீதியில் படலபிட்டிய பிரதேசத்தில் பலகொல்ல எனுமிடத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) காலை இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் பஸ்ஸின் சாரதிக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ் விபத்துக்குள்ளான போது, வீட்டில் ஒரு சிறு குழந்தை மற்றும் ஒரு தம்பதி இருந்ததாகவும், ஆனால் அவர்கள் ஒரே அறையில் இருந்ததால்,

குடியிருப்பாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ் விபத்துக்குள்ளான வேளையில் பஸ்ஸில் சுமார் 30 பேர் பயணித்ததாகவும், தினமும் பயணிக்கும் இந்த பேருந்தில் பாடசாலை ஆசிரியர்கள், அலுவலக

ஊழியர்கள் என பலரும் பயணித்ததாகவும், ஆனால் ஞாயிற்றுக்கிழமை (10) குறைந்த எண்ணிக்கையான பயணிகளே பயணித்தனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தில் தம்பதி பலி
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கி பிரயோகத்தில் தம்பதி பலி

துப்பாக்கி பிரயோகத்தில் தம்பதி பலி

துப்பாக்கி பிரயோகத்தில் தம்பதி பலி ,காலி வீதி, அம்பலாங்கொடை – உரவத்த பிரதேசத்தில், இன்று (10) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், கணவன் மனைவி இருவரும் உயிரிழந்துள்ளதாக, அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த இருவரும் அம்பலாங்கொடை – மாதம்பே, தேவகொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் அம்பலாங்கொடையில் இருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது, இனந்தெரியாத ஆயுததாரிகள் மோட்டார் சைக்கிளில் வந்து

அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர்

தாமரை கோபுர வளாகத்தில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

தாமரை கோபுர வளாகத்தில் துப்பாக்கிச்சூடு

தாமரை கோபுர வளாகத்தில் துப்பாக்கிச்சூடு

தாமரை கோபுர வளாகத்தில் துப்பாக்கிச்சூடு ,தாமரை கோபுர வளாகத்தில் இடம்பெற்ற இசைக் கச்சேரியின் போது இனந்தெரியாத நபர் ஒருவரால்,

பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 29 வயதுடைய பாதுகாப்பு உத்தியோகத்தர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாக்காளர்கள் இம்முறை கவனமாக இருக்க வேண்டும்
Posted in இலங்கை செய்திகள்

வாக்காளர்கள் இம்முறை கவனமாக இருக்க வேண்டும்

வாக்காளர்கள் இம்முறை கவனமாக இருக்க வேண்டும்

வாக்காளர்கள் இம்முறை கவனமாக இருக்க வேண்டும் ,சில சிரேஷ்ட அரசியல்வாதிகள் தமது வருமான ஆதாரங்களை வெளியிட வேண்டியிருப்பதன் காரணமாக, இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

எனவே, வாக்களிக்கும் வேட்பாளர்களை தெரிவு செய்யும் போது வாக்காளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என, ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிறுவகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்தார்.

விசேட வர்த்தமானி வெளியீடு
Posted in இலங்கை செய்திகள்

விசேட வர்த்தமானி வெளியீடு

விசேட வர்த்தமானி வெளியீடு

விசேட வர்த்தமானி வெளியீடு எல்பிட்டிய உள்ளுராட்சி சபையின் தலைவர் மற்றும் உப தலைவரை அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை, தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, அதன் தலைவராக கொழும்பு தந்திரிகே நிஷாந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக, வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உப தலைவராக, வகொட பத்திரகே சுமித் சந்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 26ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலில், எல்பிட்டிய உள்ளூராட்சி சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்டது.

மொத்தமுள்ள 17 தொகுதிகளில் 15இல் வெற்றி பெற்றுள்ளது.

மெல்போர்னுக்கு செல்லவிருந்த விமானம் இரத்து
Posted in இலங்கை செய்திகள்

மெல்போர்னுக்கு செல்லவிருந்த விமானம் இரத்து

மெல்போர்னுக்கு செல்லவிருந்த விமானம் இரத்து

மெல்போர்னுக்கு செல்லவிருந்த விமானம் இரத்து 290 பயணிகளுடன் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்குச் செல்லவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் தாமதமானதால், பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.

11 மணித்தியாலங்களுக்கும் மேலாக விமானம் தாமதமாக புறப்பட்டதாக, பயணிகள் தெரிவித்தனர்.

இந்த விமானம் இன்று அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது, ​​தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த விமானம் இரத்து செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இதையடுத்து, துரிதமாக செயற்பட்டு, மெல்போர்ன் செல்ல விரும்பிய பயணிகள் வேறு விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எஞ்சிய பயணிகள் ஹோட்டல்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கூடிய விரைவில் மெல்பேர்னுக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மேலும் தெரிவித்துள்ளது

சிறைச்சாலைக்குள் அலைபேசி மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

சிறைச்சாலைக்குள் அலைபேசி மீட்பு

சிறைச்சாலைக்குள் அலைபேசி மீட்பு

சிறைச்சாலைக்குள் அலைபேசி மீட்பு புஸ்ஸ உயர்பாதுகாப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொடி லசி என அழைக்கப்படும் ஜனித் மதுஷங்கவின் சிறை வளாகத்தில் இருந்து, அலைபேசி மற்றும் பல உபகரணங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

பொடி லசி அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையின் சிறப்புப் பிரிவின் செல் எண் 42-ஐ அவசரமாக ஆய்வு செய்வதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவொன்று குறித்த இடத்திற்குச் சென்றுள்ளது.

இதன்போது, ​​பொடி லசி தனது உடமையில் வைத்திருந்த அலைபேசி மற்றும் துணைக்கருவிகளை பின்புற ஜன்னல் வழியாக வீசியதாக, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

அதன்படி, அலைபேசி 1, சார்ஜர் 1, டேட்டா கேபிள், 01 ஹேண்ட் ஃப்ரீ உள்ளிட்ட உபகரணங்களை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக தடைசெய்யப்பட்ட உபகரணங்கள் புஸ்ஸ சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேலும் தெரிவித்தனர்.

1000 கோடி ரூபாய் மோசடி இருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

1000 கோடி ரூபாய் மோசடி இருவர் கைது

1000 கோடி ரூபாய் மோசடி இருவர் கைது

1000 கோடி ரூபாய் மோசடி இருவர் கைது குருணாகலையை மையமாகக் கொண்டு பிரமிட் நிதி நிறுவனத்தை நடத்தி வைப்பாளர்களிடம் சுமார் 1000 கோடி ரூபாவை மோசடி செய்து நாட்டை விட்டு தப்பிச் சென்ற நிறுவனத்தின்

உரிமையாளர், நிதி நிறுவனத்தின் பணிப்பாளராக இருந்த அவரது மனைவி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, வௌ்ளிக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

52 வயதான குருணாகலைச் சேர்ந்த இவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த நிலையில்,

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வௌ்ளிக்கிழமை (08) அதிகாலை 12.00 மணியளவில் வந்தடைந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் வருகை தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு

திணைக்கள அதிகாரிகள் சாளரத்திற்குச் செல்வதற்கு முன்னர் அவரை கைது செய்தனர்.

சந்தேக நபரை அழைத்துச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் காத்திருந்த நிதி நிறுவனத்தின்

பணிப்பாளரான 42 வயதுடைய அவரது மனைவியும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

“ஜேடி’ஸ் பிசினஸ் ஸ்கூல்” என்ற பிரமிட் நிதி நிறுவனத்தை நிறுவி, சுமார் 2,500 வைப்பாளர்களை ஏமாற்றி, குருநாகல் நகரின் மையத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி, அந்தப் பகுதியில் இரண்டு பெரிய நிலங்களை வாங்கி,

இயக்குநர் ஒருவரின் பெயரில் இலங்கையில் உள்ள 03 முக்கிய வங்கிகளின் இந்த நிதி நிறுவனத்துக்குச் சொந்தமான 11 கணக்குகள் பராமரிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சாவகச்சேரி சந்தையில் பதற்றம்/ வைத்தியருக்காக ஒன்று திரண்ட மக்கள்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

சாவகச்சேரி சந்தையில் பதற்றம்/ வைத்தியருக்காக ஒன்று திரண்ட மக்கள்

சாவகச்சேரி சந்தையில் பதற்றம்/ வைத்தியருக்காக ஒன்று திரண்ட மக்கள்

சாவகச்சேரி சந்தையில் பதற்றம்/ வைத்தியருக்காக ஒன்று திரண்ட மக்கள்,மருத்துவரை துரத்திய ஈபிடி , நடந்த திக் திக் சம்பவம் .

காணொளியில் முழுமையான விபரங்கள் .

வீடியோ