மெல்போர்னுக்கு செல்லவிருந்த விமானம் இரத்து
Posted in இலங்கை செய்திகள்

மெல்போர்னுக்கு செல்லவிருந்த விமானம் இரத்து

மெல்போர்னுக்கு செல்லவிருந்த விமானம் இரத்து

மெல்போர்னுக்கு செல்லவிருந்த விமானம் இரத்து 290 பயணிகளுடன் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்குச் செல்லவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் தாமதமானதால், பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.

11 மணித்தியாலங்களுக்கும் மேலாக விமானம் தாமதமாக புறப்பட்டதாக, பயணிகள் தெரிவித்தனர்.

இந்த விமானம் இன்று அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது, ​​தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த விமானம் இரத்து செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இதையடுத்து, துரிதமாக செயற்பட்டு, மெல்போர்ன் செல்ல விரும்பிய பயணிகள் வேறு விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எஞ்சிய பயணிகள் ஹோட்டல்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கூடிய விரைவில் மெல்பேர்னுக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மேலும் தெரிவித்துள்ளது