ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல் ,அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார

திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடல், முன்னர் அறிவிக்கப்பட்ட 44% வரியை 30% ஆகக் குறைத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முடிவை அடுத்து,

இலங்கையின் நிலைப்பாடு மற்றும் எதிர்கால உத்திகளை ஆராய்வதற்காக நடத்தப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, மத்திய

வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.ஏ.

விமலேந்திராஜா, மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ ஆகியோர் கலந்துகொண்டனர்.

சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை
Posted in இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை ,2025 ஜூலை மாதத்தின் முதல் ஆறு நாட்களில் (ஜூலை 1 முதல் 6 வரை) 36,002 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்த ஆண்டு இதுவரை இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,204,046 ஆக உள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டில், 12 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஓகஸ்ட் மாதத்தில் பதிவாகியிருந்தனர்.

இந்த ஆண்டு, முந்தைய ஆண்டை விட வேகமாக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவது சுற்றுலாத் துறையில் மீட்சியை பிரதிபலிக்கிறது.

ஜூலை மாதத்தின் முதல் ஆறு நாட்களில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவிலிருந்து 8,053 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்,

இதனைத் தொடர்ந்து, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 3,562 பேர், அவுஸ்திரேலியாவிலிருந்து 2,674 பேர், மற்றும் சீனாவிலிருந்து 2,362 பேர் இலங்கைக்கு வந்துள்ளனர்.

T20 போட்டி டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன
Posted in இலங்கை செய்திகள்

T20 போட்டி டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன

T20 போட்டி டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன

T20 போட்டி டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன ,சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இன்று (10) நடைபெறவிருக்கும் இருபதுக்கு

20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக, டிக்கெட் விற்பனை நிலையங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும், விற்பனைக்கு இனி டிக்கெட்டுகள் எதுவும் இல்லை என்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

டிக்கெட் வைத்திருப்பவர்கள் மைதானத்திற்குள் பிரவேசிக்க மாலை 5 மணி முதல் வாயில்கள் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.

கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாக உள்ளது.

பால் மா விலை அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

பால் மா விலை அதிகரிப்பு

பால் மா விலை அதிகரிப்பு

பால் மா விலை அதிகரிப்பு .இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

அதேபோல், 01 கிலோ பால் மா பொதி ஒன்றின் விலை 250 ரூபாவால் அதிகரித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திடம் வேண்டுகோள்
Posted in இலங்கை செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திடம் வேண்டுகோள்

எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திடம் வேண்டுகோள்

எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திடம் வேண்டுகோள் ,உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மைகளைக் கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க அரசாங்கத்திடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்தார்.

பாராளுமன்றில் இன்று கருத்து தெரிவித்த அவர், 2021, 2023, மற்றும் 2024 ஆம் ஆண்டு விவாதங்களில் இவ்விவகாரம் குறித்து பல கேள்விகளை

எழுப்பியதாகவும், உண்மையைக் கண்டறிய தெளிவான வேலைத்திட்டம் தேவை என்றும் கூறினார்.

2024 ஏப்ரலில் கார்டினல் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் சட்ட நிபுணர்களுடன் கலந்துரையாடி, 6 அம்ச முன்மொழிவுகளை

முன்வைத்ததாகவும், இந்த 6 அம்சங்கள் குறித்து பாராளுமன்றத்திலும் கருத்து வெளியிட்டுள்ளேன் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

*தேசிய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய விசேட விசாரணை ஆணைக்குழு அமைத்தல்.

*நிரந்தர விசாரணை அலுவலகம் தாபித்தல்.

*விசாரணைக்கான வேலைத்திட்டம் உருவாக்குதல்.

*சட்டமா அதிபரால் குற்றவியல் வழக்குகள் தாக்கல் செய்தல்.

*விசேட நீதிமன்றம் தாபித்தல்.

*அரச வழக்கறிஞர் அலுவலகம் அமைத்தல்.

இவை அரசியல்மயமாக்கப்படுவதாகவும், கடந்த காலங்களில் அதிகாரிகள் மீது அழுத்தங்கள், பழிவாங்கல்கள் மூலம் விசாரணைகள் தடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

ஸ்கொட்லாந்து யார்ட், எப்.பி.ஐ ஆகியவற்றின் ஆதரவுடன் நேர்மையான விசாரணை மூலம் உண்மையைக் கண்டறிய வேண்டும் என்றும், கத்தோலிக்க சமூகத்திற்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

முறையான மாற்றம் இல்லையெனில், கார்டினல் மற்றும் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கலாம் எனவும், உண்மைக்காக ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் முன்நிற்கும் எனவும் தெரிவித்தார்.

சஜித் இன்று எழுப்பிய கேள்வி
Posted in இலங்கை செய்திகள்

சஜித் இன்று எழுப்பிய கேள்வி

சஜித் இன்று எழுப்பிய கேள்வி

சஜித் இன்று எழுப்பிய கேள்வி ,இறக்குமதி செய்யப்பட்ட 323 கொள்கலன்கள் சுங்க பரிசோதனைகள் இல்லாது விடுவிக்கப்பட்டதாக வெளியான செய்தி தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைக் குழு அறிக்கையின் பரிந்துரைகளின் கீழ், பரிந்துரை 4 இன் 3 ஆவது பந்தி இவ்வாறு குறிப்பிடுகிறது:

சுங்கத் திணைக்களத்தின் அனைத்துப்பிரிவுகளுக்கும்

“இவ்வாறு நல்லெண்ணத்துடன் கொள்கலன் நெரிசலைக் குறைக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தால், இந்த நடைமுறை குறித்து முறையாக சுங்கத் திணைக்களத்தின் அனைத்துப்

பிரிவுகளுக்கும் அறிவித்து, சுங்கப் பகுதியிலிருந்து வெளியேறிய பின்னர் அது குறித்து ஏனைய சுங்க விசாரணைப் பிரிவுகள் மூலம் சோதனைக்கு உட்படுத்தி

“சிவப்பு” என வகைப்படுத்தப்பட்ட கொள்கலன்களை பௌதீக ரீதியான பரிசோதனை செய்யாததன் ஊடாக ஏற்படக்கூடிய அபாயத்தைக் குறைத்துக்கொள்ள முடிந்திருக்கும்.”

இந்த பரிந்துரையின் மூலம், முழு செயல்முறையும் நல்லெண்ணமின்றியே மேற்கொள்ளப்பட்டது என்பதைக் குறிக்கிறது. இதன் பிரகாரம், நான் பின்வரும் கேள்விகளை எழுப்புகிறேன்.

(01). 12.06.2025 அன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட 323 சந்தேகத்திற்குரிய இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்கள் குறித்த

விசாரணை அறிக்கை

விசாரணை அறிக்கை இன்னும் பகிரங்கப்படுத்தப்படாததற்கான காரணங்கள் யாது ? இந்த அறிக்கையை முழுமையாக பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்ய அரசாங்கம் எப்போது நடவடிக்கை எடுக்கும் ?

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அவர்களே வெளிக்கொணர்ந்தார். ஆனால் அரசாங்கமே இதைச் செய்திருக்க வேண்டும்.

(02). 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும், 2025 ஆம் ஆண்டின் முற்பகுதியிலும் துறைமுக நடவடிக்கைகளில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக கப்பல்கள் திரும்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பான பிரச்சினைகளைத்

க்க அமைச்சர் ஒருவரது தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு குழுவொன்று நியமிக்கப்பட்டதா? இந்தக்

குழுவின் பரிந்துரைகள் யாது ? இதன் பிரகாரம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாது ?

(03). சிவப்பு மட்டுமல்லாது, மஞ்சள் நிறமும் குறிக்கப்பட்ட கொள்கலன்களை முறையான பரிசோதனை இல்லாமல் விடுவிக்க, விடயத்துக்குப் பொறுப்பான

அமைச்சரிடமிருந்தோ அல்லது அரசாங்க தரப்பிலிருந்தோ ஏதேனும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதா ? அல்லது, இறக்குமதியாளர்களிடமிருந்து அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதா ?

(04). குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 323 கொள்கலன்கள் எந்தெந்த நாடுகளிலிருந்து வந்தன ? அவற்றில் காணப்பட்ட பண்டங்கள் (பொருட்கள்)

தொடர்பான ஆவணத்தை இந்த சபையில் சமர்ப்பிக்க முடியுமா? இவற்றை இறக்குமதி செய்த நிறுவனங்கள் யாது ?

13 சந்தர்ப்பங்களில், 2218 கொள்கலன்கள் பௌதீக சோதனை இல்லாமல் விடுவிக்கப்பட்டன. இதில் 999 சிவப்பு என வகைப்படுத்தப்பட்ட

கொள்கலன்களும், மஞ்சள் நிறம் என வகைப்படுத்தப்பட்ட 1219 கொள்கலன்களும் இதில் அடங்கும். இது தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து தெளிவான பதிலை எதிர்பார்க்கின்றேன்.

(05). சுங்கப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் மீதான சுங்க வரிகளை முறையாக அறவிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதா? அவ்வாறு அறவிடப்பட்டது என்பதற்கு தரும் உத்தரவாதம் யாது ?

(06). 23.01.2025 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களில் போதைப்பொருளோ அல்லது சட்டவிரோதப் பொருட்களோ இருந்தால் அதனை அரசாங்கம் பொறுப்பேற்கும் என்று

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் தெரிவித்தார். இந்தக் கூற்று இன்னும் செல்லுபடியாகுமா ?

(07). குழு முன்மொழிந்த 12 பரிந்துரைகளின் பிரகாரம் அரசாங்கம் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் யாது ?

(08). இது தொடர்பாக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா? அவ்வாறானால், அவற்றின் முன்னேற்றங்கள் யாது ? இந்த சம்பவத்திற்கான பொறுப்புக்கூறலிருந்து அரசாங்கம் தப்பிக்க

முடியுமா? இதற்கு அரசியல் அதிகாரம்படைத்தவர்கள் பொறுப்பாக இருந்தால், அவர்கள் தொடர்பில் எடுக்கும் நடவடிக்கைகள் யாது ?

(09). இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க அரசாங்கத்தின் உத்தேச புதிய கொள்கைகள் அல்லது சட்டத் திருத்தங்கள் யாவை?

கையிருப்பு சொத்துக்களில் வீழ்ச்சி
Posted in இலங்கை செய்திகள்

கையிருப்பு சொத்துக்களில் வீழ்ச்சி

கையிருப்பு சொத்துக்களில் வீழ்ச்சி

கையிருப்பு சொத்துக்களில் வீழ்ச்சி ,இலங்கை மத்திய வங்கியின் வாராந்திர பொருளாதார சுட்டெண் அறிக்கைக்கு அமைய, 2025 ஜூன் மாதத்திற்கான

கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி

உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி 6,080 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

2025 மே மாதத்தில் இந்த பெறுமதி 6,286 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது.

இதேவேளை, கடந்த ஜூன் மாதத்தினுள் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி 3.3 சதவீதத்தால் அதாவது 206 மில்லியன் அமெரிக்க டொலர்களால் வீழ்ச்சியடைந்துள்ளது.

அந்நிய செலாவணி இருப்பு

விசேடமாக, அந்நிய செலாவணி இருப்பு 6,231 மில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து 6,023 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்ததே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

ஜப்பான் தென்கொரிய பொருட்களுக்கு 25%வரிவிதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஜப்பான் தென்கொரிய பொருட்களுக்கு 25%வரிவிதிப்பு

ஜப்பான் தென்கொரிய பொருட்களுக்கு 25%வரிவிதிப்பு

ஜப்பான் தென்கொரிய பொருட்களுக்கு 25%வரிவிதிப்பு ,தென் கொரியா மற்றும் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

வரிவிதிப்பு எதிர்வரும் ஒகஸ்ட் 1 முதல் அமலுக்கு

இந்த வரிவிதிப்பு எதிர்வரும் ஒகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என்று ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அனுப்பிய கடிதங்களின் நகல்களையும் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் ட்ரம்ப் கூறியிருப்பதாவது: “வரும் ஒகஸ்ட் 1 முதல் அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் ஜப்பான் / கொரியா ஆகிய நாடுகளின் அனைத்து வகையான பொருட்களுக்கும் தனித்தனியாக 25 சதவீத வரி விதிக்க

உள்ளோம். உங்கள் நாடுகளுடன் எங்களுக்கு உள்ள வர்த்தக பற்றாக்குறை ஏற்றத்தாழ்வை நீக்குவதற்கு இந்த 25% வரி என்பது மிகவும் குறைவு என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஏதேனும் காரணத்துக்காக உங்கள் வரிகளை உயர்த்த

நீங்கள் முடிவு செய்தால், நீங்கள் எவ்வளவு எண்ணிக்கையில் உயர்த்தத் தேர்வுசெய்தாலும், அது நாங்கள் வசூலிக்கும் 25 சதவீதத்தில் சேர்க்கப்படும்” இவ்வாறு ட்ரம்ப் அந்த கடிதங்களில் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா

இந்த கடிதங்கள் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா மற்றும் தென் கொரிய அதிபர் லீ ஜே-மியுங் இருவருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிரிக்ஸ் கூட்டமைப்பின் அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் எச்சரித்திருந்தார். அமெரிக்க நிர்வாகம் புதிய வரி விதிப்பு மற்றும்

திருத்தப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அதிகாரபூர்வமாக கடிதம் அனுப்பும் என்று கூறியிருந்தார். அதன்

முதல்கட்டமாக தற்போது ஜப்பான் மற்றும் தென்கொரியாவுக்கு ட்ரம்ப் கடிதம் அனுப்பியுள்ளார்.

பொலிஸ் சேவையில் 28000 வெற்றிடங்கள்
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் சேவையில் 28000 வெற்றிடங்கள்

பொலிஸ் சேவையில் 28000 வெற்றிடங்கள்

பொலிஸ் சேவையில் 28000 வெற்றிடங்கள் தற்போது பொலிஸ் சேவையில் 28,000 வெற்றிடங்கள் உள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி

இன்று (08) பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தற்போது பொலிஸ் அதிகாரிகளின் பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்தார்.

அதன்படி, பொலிஸ் சேவையில் நிலவும் 5,000 வெற்றிடங்களுக்காக உடனடியாக ஆட்சேர்ப்பு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும்,

அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பொலிஸ் பரிசோதகர்

தற்போது உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், 5,000 கீழ்நிலை ​

பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கிடையில், விசாரணை தரத்தில் உள்ள 1,500 அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.

இது மிக பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

5வயது சிறுவன் திடீர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

5வயது சிறுவன் திடீர் மரணம்

5வயது சிறுவன் திடீர் மரணம்

5வயது சிறுவன் திடீர் மரணம் ,மித்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜூலம்பிட்டிய பகுதியில் திடீர் நோய் நிலைமை காரணமாக ஐந்து வயது சிறுவன் ஒருவன் நேற்று (07) உயிரிழந்துள்ளான்.

சிறுவன் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த போது திடீரென மயக்கமடைந்துள்ளார். இதனை தொடர்ந்து, உடனடியாக சிறுவன் கட்டுவான பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர், மேலதிக சிகிச்சைக்காக வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

மஹேஷிவிஜேரத்னவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மஹேஷிவிஜேரத்னவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

மஹேஷிவிஜேரத்னவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

மஹேஷிவிஜேரத்னவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு ,இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர்

மஹேஷி விஜேரத்னவை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு சந்தேக நபர்களையும் பிணையில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.

முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் காயம்

முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் காயம்

முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் காயம் ,வெல்லவாய பொலிஸ் பிரிவின் மூன்றாம் தூண் பகுதியில், எல்ல-வெல்லாவாய பிரதான வீதியில், முச்சக்கர வண்டி ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்தில்

கோடீஸ்வர தொழிலதிபர் கொலை
கோடீஸ்வர தொழிலதிபர் கொகோடீஸ்வர தொழிலதிபர் கொலைலை

கதிர்காமத்திற்கு யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.

விபத்தில் இரண்டு பெண்கள் மற்றும் சாரதி காயமடைந்து வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆபத்தான நிலையில்

அவர்களில் ஒருவர், ஆபத்தான நிலையில், மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பண்டாரவளை, அம்பதண்டேகம பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

2027முதல் இலங்கையில் புதிய வரி
Posted in இலங்கை செய்திகள்

2027முதல் இலங்கையில் புதிய வரி

2027முதல் இலங்கையில் புதிய வரி

2027முதல் இலங்கையில் புதிய வரி ,2027 ஆம் ஆண்டு முதல் சொத்து வரி ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

வரி முறை 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அறிக்கை

இந்த வரி முறை 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நாணய நிதியம் சமீபத்தில் இலங்கை தொடர்பாக வெளியிட்ட தனது ஊழியர் மட்ட அறிக்கையில் இது குறித்து அறிவித்துள்ளது.

இந்த புதிய சொத்து வரியை விதிப்பதற்குத் தேவையான அடிப்படை நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், தரவு சேகரிப்பு

பணிகளில் சிறிது தாமதம் இருந்த போதிலும், செப்டம்பர் மாதத்திற்குள் அந்தப் பணிகள் முடிவடையும் என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டுகிறது.

சொத்துக்களின் மதிப்பை மதிப்பீடு செய்வதற்கும் வரி கணக்கிடுவதற்கும் டிஜிட்டல் தரவு முறைமை ஒன்று உருவாக்கப்படவுள்ளதுடன், 2026 ஆம் ஆண்டு

முடிவடைவதற்கு முன்னர் அதற்கு தேவையான அனைத்து தரவுகளும் தயாரிக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சொத்து வரி விதிப்பு முறைகள்

2027 ஆம் ஆண்டில் இந்த புதிய வரியை அமுல்படுத்துவதற்கு சொத்து வரி விதிப்பு முறைகள் குறித்து ஒருங்கிணைந்த கலந்துரையாடல்கள் அவசியம் என சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவிக்கிறது.

இதற்கிடையில், டிஜிட்டல் சேவைகளுக்கு ஒக்டோபர் 12 ஆம் திகதி முதல் 18% பெறுமதி சேர் வரி (VAT) விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் அறிக்கைகள்

உண்மையற்றவை என தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

அந்த வரி விதிப்பு 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட ஒரு யோசனையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் முதல் திகதி முதல் அமுலுக்கு வரவிருந்த அந்த வரி விதிப்பு ஒக்டோபர் மாதம் முதல் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் அனில் ஜயந்த குறிப்பிட்டார்.

கோடீஸ்வர தொழிலதிபர் கொலை
Posted in இலங்கை செய்திகள்

கோடீஸ்வர தொழிலதிபர் கொலை

கோடீஸ்வர தொழிலதிபர் கொலை

கோடீஸ்வர தொழிலதிபர் கொலை ,கட்டுனேரியில் ஒரு கோடீஸ்வர தொழிலதிபரை கொலை செய்து, சிரிகம்பள பகுதியில் உள்ள கார் கழுவும் இடத்தில் உள்ள கழிவுநீர் தாங்கிக்குள் அவரது உடலை வீசிய குற்றச்சாட்டில்

இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட 19 வயதான சகோதரர், வாகன பழுதுபார்க்கும் நபராவார். அதே நேரத்தில் அவரது 15 வயது தம்பி மாரவிலாவில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலையில் படித்து வருகிறார்.

கோடீஸ்வர தொழிலதிபரின் கொலையில் முக்கிய சந்தேக நபராகக் கருதப்படும் 20 வயது இளைஞரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்

அடிப்படையில் பாடசாலை மாணவனும் அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புத்தளம் – மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய வர்த்தகர் ஒருவர் ஜூன் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து காணாமல்போயுள்ளதாக வென்னப்புவை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காணாமல்போன வர்த்தகரின் கார் வென்னப்புவை பிரதேசத்தில் உள்ள

அவரது 20 வயதுடைய நண்பனின் வீட்டிலிருந்து கடந்த வியாழக்கிழமை (03) கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்த கைதுசெய்யப்பட்ட வர்த்தகரின் நண்பனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி இரவு

வர்த்தகரும் அவரது 5 நண்பர்களும் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த போது வர்த்தகருக்கும் நண்பர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் வர்த்தகர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர் நண்பர்கள் அனைவரும் இணைந்து வர்த்தகரின் சடலத்தை வென்னப்புவை, சிறிகம்பொல பிரதேசத்தில் உள்ள வாகனங்களை

பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றின் கழிவு நீர் குழிக்குள் வீசியதாக வர்த்தகரின் நண்பன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மாணவனை தாக்கிய மாணவன்
Posted in இலங்கை செய்திகள்

மாணவனை தாக்கிய மாணவன்

மாணவனை தாக்கிய மாணவன்

மாணவனை தாக்கிய மாணவன் பத்தரமுல்லையில் உள்ள ஒரு பிரபலமான தேசிய பாடசாலையின் 11 ஆம் தர மாணவன் ஒருவன் அதே பாடசாலையில்

உள்ள மற்றொரு மாணவனால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த 3 ஆம் திகதி மதியம் 12.05 மணியளவில் மூன்று மாணவர்களுடன் வந்த 11 ஆம் தர மாணவன் இந்த தாக்குதலை மேற்கொண்டதோடு, தாக்குதலுக்கு இலக்கான மாணவரின் காது சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், இந்த தாக்குதலின் விளைவாக காதில் காயம் ஏற்பட்ட மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க பாடசாலை நிர்வாகம்

எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், மாணவனை வைத்தியசாலையில் அனுமதிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையை தொடர்புகொண்டு வினவிய போது, குறித்த மாணவன் இன்று (07) செவிப்புலன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் பெற்றோர் இது தொடர்பாக தலங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர். பாடசாலை நேரத்தில்

மாணவன் மீது இவ்வளவு கடுமையான தாக்குதல் நடந்துள்ள பின்னணியில், பாடசாலை நிர்வாகம் மாணவனை சிகிச்சைக்கு அனுப்பாமல் கடமை தவறி செயற்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவன் ஒரு திறமையான இசைக்கலைஞர் என்றும், அவரது காதில் ஏற்பட்ட காயம் அவரது எதிர்காலத்தை கடுமையாக

பாதிக்கும் என்றும் கூறிய மாணவனின் தாயார், சட்டத்தின் மூலம் நீதி கோருவதாகவும் கூறினார்.

“எங்களுக்கு இழப்பீடு தேவையில்லை. என் மகனுக்கு நடந்தது இன்னொரு பிள்ளைக்கு நடக்கக்கூடாது என்பதற்காக நான் சட்ட நடவடிக்கை எடுக்க விரும்புகிறேன். ஏனென்றால், இவ்வாறான சந்தர்ப்பத்தில் என் மகன் மீது

கத்தியால் குத்தி இருந்தால் என்ன நடந்திருக்கும்? அதனால்தான் நான் சட்டத்தின்படி செயல்பட விரும்புகிறேன். எனக்கு பணம் முக்கியமில்லை. நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.”

இருப்பினும், இது குறித்து நாங்கள் விசாரித்தபோது, ​​சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபர், தாக்குதல் குறித்து மறுநாள் காலையில் தனக்குத்

தெரிவிக்கப்பட்டதாகவும், பாடசாலை நிர்வாகம் இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட நால்வர்மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட நால்வர்மீட்பு

கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட நால்வர்மீட்பு

கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட நால்வர்மீட்பு ,எத்துகால கடலில் நீராடச்சென்ற நான்கு பேர் கடல் அலையில் சிக்கி, கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவம் நேற்று (6) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ்

சம்பவத்தின் போது அவ்விடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உயிர்காப்பு பிரிவு அதிகாரிகளான பொலிஸ் கண்காணிப்பாளர் அனுராத,

பொலிஸ் கான்ஸ்டபிள் லக்‌ஷான்

பொலிஸ் கான்ஸ்டபிள் லக்‌ஷான் (99177) மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் விஜேசிங்க (105320) ஆகியோர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டவர்களை காப்பாற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 20, 21, 22 மற்றும் 34 வயதுடைய வெயங்கொட, புடலுஓயா மற்றும் நமுனுகுல பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

துமிந்த திசாநாயக்கவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்
Posted in இலங்கை செய்திகள்

துமிந்த திசாநாயக்கவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

துமிந்த திசாநாயக்கவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

துமிந்த திசாநாயக்கவுக்கு தொடர்ந்து விளக்கமறியல் ,முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூலை 15ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று (7) அவர் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பெண்ணொருவரின் பயணப் பையில்

கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தங்க

முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பில், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் மே மாதம் 23ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி மே மாதம் 20ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது,

மேலும் இது தொடர்பாக இரண்டு பெண்களும் ஆணொருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

விசாரணைகளின் போது வௌியான தகவல்

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் போது வௌியான தகவல்களுக்கு அமைய, முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டார்.

தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தம்
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தம்

தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தம்

தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தம் ,தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இன்று (07) முதல் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக, ஆணைக்குழுவின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, வாக்காளர் பதிவு தகவல்களைச் சரிபார்த்தல், இணையவழி பதிவு, வாக்காளர் அறிக்கைகளைப் பெறுதல் மற்றும் ஏனைய மாவட்டங்களுடனான

அனைத்து இணைவழி சேவைகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விசேட சோதனை 120பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

விசேட சோதனை 120பேர் கைது

விசேட சோதனை 120பேர் கைது

விசேட சோதனை 120பேர் கைது ,சப்ரகமுவ மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 120 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேகாலை மற்றும் இரத்தினபுரி பொலிஸ்

எம்பிலிப்பிட்டிய, சீதாவகபுர, கேகாலை மற்றும் இரத்தினபுரி பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கி இந்த விசேட சோதனை நடவடிக்கை நேற்று (6) முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 7 பேரும், மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 19 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த விசேட சோதனை நடவடிக்கையில் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் உட்பட 900இற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.

டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்
Posted in இலங்கை செய்திகள்

டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்

டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்

டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல் ,முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு பாதாள உலகக் கும்பல் தலைவர் ஒருவரிடமிருந்து தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பதில் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு

இது தொடர்பில் அவர் பதில் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 5 ஆம் திகதி டுபாயில் வசிக்கும் ஒரு பாதாள உலகக் கும்பல் தலைவரிடமிருந்து முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன.

அதில் அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாக கூறப்படுகிறது.

டிரான் அலஸ் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது, ​​நாட்டை விட்டு தப்பிச் சென்ற பாதாள உலகத் தலைவர்கள் மற்றும் அவர்களுடன்

தொடர்புடைய நபர்களை மீண்டும் அழைத்து வர உத்தரவுகளைப் பிறப்பித்ததாகக் கூறி, இந்தக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக ‘அத தெரண’ பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் வினவியது.

பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்

முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இது தொடர்பில் தன்னிடம் முறைப்பாடு அளித்துள்ளதாக குறிப்பிட்டார்.

அதன்படி, அனைத்து பிரிவுகளுக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.