ரஷிய வீரர்களை கொல்ல உக்ரைனுக்கு உதவும் அமெரிக்க உளவுத்துறை

Spread the love

ரஷிய வீரர்களைஉக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 20 பொதுமக்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

லைவ் அப்டேட்ஸ்: ரஷிய வீரர்களை கொல்ல உக்ரைனுக்கு உதவும் அமெரிக்க உளவுத்துறை
அமெரிக்கா- உக்ரைன்

05.05.2022

9.40: போரில், ரஷிய வீரர்களை கொல்வதற்கு உக்ரைனியப் படைகளுக்கு அமெரிக்க உளவுத்துறை உதவியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஷியாவின் எதிர்பார்க்கப்படும் துருப்பு நினைவுகள், இருப்பிடம், ரஷியாவின் நடமாடும் ராணுவ தலைமையகம் உள்பட பிற விவரங்கள் குறித்து உக்ரைனுக்கு அமெரிக்க உளவுத்துறை உதவியதாக கூறப்படுகிறது.

06.40: உக்ரைனில் உள்ள 6 ரயில் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், உக்ரைன் படைகளுக்கு வெளிநாட்டு ஆயுதங்களை வழங்க இந்த ரயில் நிலையங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் உருக்கு ஆலை பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றத்தை அனுமதிக்க ரஷியா போர் நிறுத்தத்தை அறிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

05.20: ரஷிய படைகளால் முற்றுகையிடப்பட்ட தென்கிழக்கு நகரமான மரியுபோல் உள்பட நான்கு நகரங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட உக்ரைன் பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக ஐநா மனிதாபிமான அமைப்பின் தலைவர் ஓஸ்னாட் லுப்ரானி தெரிவித்துள்ளார்.

மரியுபோல், மன்ஹுஷ், பெர்டியன்ஸ்க், டோக்மாக் மற்றும் வாசிலிவ்காவைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் தாங்கள் அணிந்திருந்த ஆடைகளைத் தவிர வேறெதுவும் இல்லாமல் வெளியேறியதாக அவர் கூறியுள்ளார்.

03.50: மரியுபோல் நகரில் அசோவ்ஸ்டல் உருக்கு ஆலை அமைந்துள்ள பகுதியில் ரஷிய படையினருக்கும், உக்ரைன் ராணுவ வீரர்களுக்கும் இடையே 2வது நாளாக கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக உக்ரைன் ராணுவ தளபதி டெனிஸ் புரோகோபென்கோ தெரிவித்துள்ளார்.

எதிரிகளின் முன்னேற்றத்தை கட்டுப்படுத்த ரத்தம் சிந்தும் இந்த சண்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ள தமது வீரர்களை நினைத்து பெருமைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

02.40: மரியுபோல் நகரில் உள்ள அசோவ்ஸ்டல் உருக்கு ஆலை பகுதியில் காயமடைந்த நிலையில் பதுங்கியிருக்கும் உக்ரைன் மக்களை காப்பாற்ற உதவுமாறு, ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்டுக் கொண்டுள்ளார்.

குட்டரெஸ் உடன் தொலைபேசி மூலம் பேசிய அவர், ஆபத்தில் உள்ள எங்களது மக்களின் உயிர்கள் எங்களுக்கு முக்கியம் என்றும், அவர்களை காப்பாற்ற உதவுமாறு கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் உருக்கு ஆலை பகுதியில் இருந்து நூறுக்கும் மேற்பட்ட பொதுமக்களை பத்திரமாக மீட்டு அழைத்துச் சென்றதற்காக ஐ.நா. மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்க நிர்வாகிகளுக்கும் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

01.30: உக்ரைனில் ராணுவம் அல்லாத இலக்குகள் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்துவதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைனை கைப்பற்றும் ரஷியாவின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால், பள்ளிகள், மருத்துவமனைகள், குடியிருப்புகள் மற்றும் போக்குவரத்து மையங்கள் உள்ளிட்ட ராணுவம் அல்லாத இலக்குகளை குறி வைத்து ரஷிய படைகள் வெடி குண்டு மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்துவதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சக டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.

12.20: உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 20 பொதுமக்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக அந்த பிராந்திய போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் அந்த பகுதியில் இதுவரை மீட்கப்பட்டுள்ள மொத்த உடல்களின் எண்ணிக்கை 1,235 ஆக உயர்ந்துள்ளது. இதில் பெரும்பாலானோர் ரஷிய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளதாகவும்,
இன்னும் 282 உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர் கொல்ல உக்ரைனுக்கு உதவும் அமெரிக்க உளவுத்துறை

    Author: நலன் விரும்பி

    Leave a Reply