Posted in மருத்துவம்

தூக்கத்தில் பற்களை கடிப்பது ஏன்

தூக்கத்தில் பற்களை கடிப்பது ஏன்

பலருக்கும் அதிலும் குறிப்பாக இளவயது பெண்களுக்கு தூக்கத்தில் நறநறவென பற்களை கடிக்கும் பழக்கம் இருக்கிறது. இது பல

நேரங்களில் அருகில் படுத்திருப்பவர்களின் தூக்கத்தை கெடுத்து விடும். இப்படி பற்களை கடிப்பது ஏன்? என கேட்கலாம்.

மன அழுத்தத்துக்கான வடிகால் இல்லாமல் போகும்போதுதான் இந்த பிரச்சினை ஏற்படுகிறது என்கிறார்கள், மருத்துவர்கள்.

வெறுப்பு, கோபம், இயலாமை, ஏமாற்றம் என்று பல்வேறான மன அழுத்தங்களுக்கு தீர்வு காணாமல், மனதுக்குள்ளேயே போட்டு

புதைத்துக்கொண்டால், அவை தூக்கத்தின் போது இப்படி வெளிப்படும் என்கிறார்கள், உளவியலாளர்கள்.

பொதுவாக டீன்-ஏஜ் பருவத்தில் இருப்பவர்கள்தான் இந்த பிரச்சினையில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களின் மன அழுத்தத்திற்கு தேர்வு பயம் முக்கிய காரணமாக இருக்கிறது.

அதற்கடுத்து காதல் விவகாரங்களும் சேர்ந்து கொள்கிறது. பிரச்சினை என்னவென்று தெரிந்துகொண்டால் தீர்ப்பதும் சுலபம்.

தூக்கத்தில் பற்களை கடிப்பது ஏன்

பற்கள் தொடர்ந்து இப்படி நறநறவென்று அரைபடுவதால் நாளடைவில் கீழ்த்தாடையின் முன்பற்கள் தேய்ந்து, கூச ஆரம்பித்துவிடும். எந்தவொரு இனிப்பான உணவையும், சூடான

அல்லது குளிர்ச்சியான பானங்களையும் சாப்பிட முடியாது. வெகுநாட்கள் இந்த பிரச்சினை தொடர்ந்தால் தாடையின் சதைகள் இறுகி முகத்தின் அமைப்பே குலைந்து போய்விடும். தாடை

எலும்பை மண்டை ஓட்டோடு இணைத்திருக்கும் மூட்டு பகுதியும் பாதிக்கப்பட்டு வலி உண்டாக்கும்.

தூக்கத்தில் பற்களை கடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் தற்காலிக தீர்வாக ‘சாப்ட் ஸ்ப்லின்ட்’ என்ற கிளிப்பை பயன்படுத்தலாம். படுக்கப்போகும்போது மட்டும் இதை பற்களில்

பொறுத்திக்கொள்ளலாம். இதன் மூலம் பற்களின் கீழ் தாடையும் மேல் தாடையும் ஒட்டாமல், உரசாமல் தடுக்கலாம். ஆனாலும் இது நிரந்தரமான தீர்வு அல்ல.

மன அழுத்தத்துக்கான காரணத்தை தேடி, அதை சரி செய்த பிறகே இந்த பிரச்சினையில் இருந்து முழுமையாக வெளிவர முடியும்.

இதற்கு மனநல ஆலோசகரின் அறிவுரை, யோகா, தியானம் போன்ற வழிமுறைகளை நாடலாம்..

    Posted in மருத்துவம்

    உடல் எடையை குறைக்க

    உலகிலேயே நியூசிலாந்தில்தான் இந்த பழம் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. நியூசிலாந்து நாட்டு மக்களை ‘கிவிஸ்’ என்று செல்லமாக அழைப்பது உண்டு.

    உடல் எடை

    ‘கிவி’ என்று இந்த பழத்திற்கு பெயர் ஏற்பட்டதும் அதன் தொடர்ச்சிதான். நியூசிலாந்துதான் ‘கிவி’ பழத்தை அதிகம் விளைவிக்கும் நாடு என்றாலும், அந்த பழத்துடன் பாரம்பரிய

    தொடர்பு கொண்ட நாடு சீனா. அதனால் இந்த பழத்துக்கு ‘சீனத்து நெல்லிக்கனி’ என்ற மற்றொரு பெயரும் உண்டு. பல ஆயிரம்

    ஆண்டுகளாக கிவி பழமானது சீனாவில் விளைவிக்கப்படுகிறது. தவிர, இத்தாலியிலும் இது விளைகிறது.

    இந்தியாவுக்குள் கிவி பழங்களை இறக்குமதி செய்ய வேண்டியது இருப்பதால் அதன் விலை சற்று அதிகமாக இருக்கிறது. ஆனாலும், அந்த பழத்தில் உள்ள நிறைந்த மருத்துவக் குணங்களுக்காக அவற்றை நாம் சாப்பிடலாம். ‘

    இதை சாப்பிடுங்க

    கிவி’ பழத்தில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவு. உடலின் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இதை விரும்பி சாப்பிடலாம். வைட்டமின் ‘சி’ அதிகம் கொண்ட இந்தப் பழம், மனிதனுக்கு நோய்

    தடுப்பாற்றல் சக்தியை அதிகம் தரக்கூடியது. உடலில் பொட்டாசியத்தின் அளவு குறைந்தால், இதயத் துடிப்பில் சீரற்ற

    நிலை ஏற்படக்கூடும். கிவி கனியில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், இந்த சத்தானது இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.

    மாரடைப்பு தடுப்பு

    மாரடைப்பை தடுப்பதிலும் கிவி முக்கிய பங்காற்றுகிறது. இதய தமனிகளில் ரத்தக் கட்டி உருவாகாமல் தடுக்கவும் ‘கிவி’ பழம் உதவுகிறது. குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு தேவையான

    போலேட் என்ற சத்தும், ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலமும் மற்ற பழங்களைவிட கிவி பழத்தில் மிகவும் அதிக அளவில் உள்ளது. கிவி பழம், இனிப்பானதுதான் என்றாலும், அதன் சர்க்கரை குறியீடின்

    அளவானது மிகவும் குறைவு. அதனால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மற்ற பழங்களைப் போன்று விரைவாக

    அதிகமாக்காமல், கொஞ்சமாகவும் நிலையாகவும் நிலை நிறுத்துவதால், நீரிழிவு நோயாளிகள் இதை உண்ணலாம் என டாக்டர்கள் கூறுகிறார்கள்.

    மலச்சிக்கலுக்கு மருந்து

    மலச்சிக்கலுக்கு மருந்தாக கிவி பயன்படுகிறது. இந்த பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கலை மிகவும் எளிதாக

    அகற்ற முடியும். சருமத்தை இளமைப் பொலிவுடன் வைத்திருக்கவும் உதவுகிறது.

    Posted in மருத்துவம்

    வயாகரா’ ஆண்மைக் குறைபாட்டை போக்குமா?

    வயாகரா கண்டு பிடிக்கப்பட்டவுடன் மாத்திரை மூலமாக ஆண்மைக் குறைவை சரி செய்துவிடலாம் என்ற எண்ணம் உலகம் முழுவதும் உருவானது.

    வயாகரா

    ஆனால் ‘வயாகரா’ பற்றி அறிந்திராத அதிர்ச்சியான விஷயங்கள் உள்ளன. அவை என்ன தெரியுமா?

    உலக அளவில் கண்டுபிடிக்கப்பட்ட மாத்திரைகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, வயாகரா. ஆண்களின் பாலியல்

    செயல்பாட்டை மேம்படுத்தும் இந்த மாத்திரைகளை பெரும்பாலான நாடுகளில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ‘ஆண்கள்

    சமூகத்திற்கு கிடைத்த அற்புதம்’ என்றும் இதனை புகழ்கிறார்கள். ஆனால் இது கண்டு பிடிக்கப் பட்ட விதம் ரொம்பவும் வினோதமானது.

    பன்னாட்டு மருந்து

    பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்று, இதய நோயுள்ளவர்களுக்கு ரத்தத்தை அதிகமாக இதயத் தினுள் செலுத்தும் புதிய மருந்தைக் கண்டுபிடிப்பதில் ஈடுபட்டிருந்தது.

    அவர்கள் கண்டுபிடித்த மருந்தின் பெயர் ‘சில்டெனபில் சிட்ரேட்’. அதனை மூவாயிரம் பேர் களுக்குக் கொடுத்து ஆய்வு செய்ததில்,

    அந்த மருந்து தோல்விக்குரிய ஒரு கண்டுபிடிப்பு என தெரியவந்தது. அதாவது இதயத்திற்குள் அது அதிக அளவில் ரத்தத்தை செலுத்தவில்லை.

    அதே நேரத்தில் அந்த மருந்தை உட்கொண்டவர்கள் தங்களுடைய உடலுறவில் இன்பம் அதிகரித்ததாகக் கூறினர். உடனே அந்த நிறுவனம் அதனை ஆண்மைக் குறைவு உள்ளவர்களுக்கான

    மருந்தாக ஆராய்ச்சி செய்து, மேம்படுத்தி வயாகரா என்ற பெயரில் வெளியிட்டது. உலகம் முழுவதும் அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

    ஆண்மைக் குறைபாட்டை போக்க

    ஆண்மைக் குறைபாட்டை போக்க பலவகையான மருந்துகள் உள்ளன. எதனால் ஆண்மைக் குறைவு ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்து அதற்காக பரிந்துரை செய்யப்படும் மருந்தும் மாறுபடும்.

    ஆனால், வயாகரா கண்டு பிடிக்கப்பட்டவுடன் மாத்திரை மூலமாக ஆண்மைக் குறைவை சரி செய்துவிடலாம் என்ற எண்ணம் உலகம் முழுவதும் உருவானது. அதுவே, பரபரப்புக்கு ஒரு காரணம்.

    வயாகரா சாப்பிடுவதன் மூலம் ரத்த ஓட்டம் குறிப்பிட்ட பகுதிக்கு பாய்ந்து விறைப்புத்தன்மையை ஏற்படுத்துகிறது.

    இதனால் பல்வேறு விதமான பின்விளைவுகளும் தோன்றின. தலைசுற்றல், வாந்தி, மயக்கம், கண்பார்வை மங்குதல் போன்றவை ஏற்பட்டன. இதய நோயுள்ளவர்கள் உயிர் இழக்கும் அபாயமும்

    ஏற்பட்டது. அதனால் வயாகராவை டாக்டரின் பரிந்துரையின்றி உட்கொள்ளக்கூடாது. நோயில்லாத அமெரிக்க ஆண்களில் நிறைய பேர் இதனை கண்டபடி பயன்படுத்தியதால், பெண்களுக்கு எதிரான

    பாலியல் வன்முறைகள்

    பாலியல் வன்முறைகள் அதிகரித்ததாகவும் அப்போது தகவல்கள் வெளியாகின. எய்ட்ஸ் நோய்-பால்வினை நோய்கள்

    பெருகியதாகவும் கூறப்பட்டது. வயாகரா மாத்திரையை நோயாளிகள் யாரும் பயன்படுத்திவிடக்கூடாது. தற்போது

    ஆண்மைக் குறைவுக்கு அதைவிட சக்திமிக்க, பின்விளைவுகளற்ற மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.

    Posted in மருத்துவம்

    பெண்களின் மார்பகத்தில் இவ்வளவு விஷயம் இருக்க

    பெண்களின் மார்பகத்தில் இவ்வளவு விஷயம் இருக்க

    பெண்களின் மார்பகங்கள் கவர்ச்சிக்கானவை அல்ல. தாய்மைக்கானவை. ஒவ்வொரு பெண்ணும் தாயாகி, தனது குழந்தைகளுக்கு பாலூட்ட படைக்கப்பட்ட உறுப்புகள் அவை. அதே

    நேரத்தில் பெண்கள் தங்கள் இதர உறுப்புகளை பாதுகாத்து, பராமரித்து, அழகுபடுத்த அக்கறை செலுத்துவதுபோல் இதிலும் கவனம் செலுத்தவேண்டும்.

    பெண்களுக்குள் இளம் வயதில் அதிக கேள்விகளை எழுப்பும் உறுப்பாகவும், மனக் குழப்பங்களை உருவாக்கும் உறுப்பாகவும் மார்பகங்கள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    அதாவது சிறிய மார்பகங்களை கொண்ட பெண்கள், தங்களுக்கு அவை பெரிதாகிவிட்டால் தங்கள் உடல் அமைப்பு கச்சிதமாக அமைந்துவிடும் என நினைக்கிறார்கள்.

    அதுபோல் பெரிய மார்பகத்தால் அவதிப்படுகிறவர்கள் தங்களுக்கு சிறியதாகிவிட்டால் பெரும் மகிழ்ச்சி ஏற்படும் என்று நம்புகிறார்கள்.

    இவை இரண்டிற்கும் இடைபட்ட நிஜங்களையும், அதற்குரிய ஆபரேஷன்களை பற்றியும் பெண்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

    மார்பகங்களை பெரிதாக்குவதற்கு ஜெனரல் அனஸ்தீஸ்யா கொடுத்து மயக்க நிலைக்கு கொண்டு சென்று, வெளிப்படையாக தழும்புகள் தெரியாத அளவுக்கு மார்புகளின் அடிப்பகுதியிலோ,

    அக்குள் பகுதியிலோ கீறலை ஏற்படுத்துவார்கள். அதன் உள்ளே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிலிக்கான் இம்பிளான்டினை

    செலுத்துவார்கள். அதனால் மார்பகங்கள் பெரிய தோற்றத்தினை பெறும். சிலிக்கான் இம்பிளான்ட் எனப்படும் பலூன்கள் முழுவட்டம்,

    அரைவட்டம், உருண்டை போன்ற பலதரப்பட்ட வடிவங்களில் கிடைக்கின்றன. இவை பத்து முதல் பதினெட்டு வருடங்கள் வரை பலன்கொடுக்கும்.

    தரமற்ற பலூன்களை மார்பகத்திற்குள் பொருத்திவிட்டால், அவை மார்புக்குள்ளே உடைந்து அவைகளில் இருக்கும் திரவம் பரவிவிடும். சிலிக்கான் பலூனில் மிக நுண்ணிய ஓட்டைகள் இருந்தாலும்

    சிலிக்கான் திரவம் வெளியேறி உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பொருத்தப்படும் சிலிக்கான் பலூன்கள் சில வருடங்கள் ஆனதும் சுருண்டு மடங்கிவிடுவதும் உண்டு. சில பெண்களின் உடல்

    திசுக்கள் சிலிக்கானுக்கு எதிராக செயல்பட்டு அதனை சுற்றிலும் திட்டுப்போன்ற படலத்தை உருவாக்கிவிடவும் செய்யும். சிலருக்கு இந்த இணைப்பினை உருவாக்கிய பின்பு மார்பின் உள்ளே வலியும்,

    கிருமித்தொற்றும் உருவாகிவிடும். இதை எல்லாம் நன்றாக ஆராய்ந்த பின்பே பெண்கள் சிலிக்கான் இம்பிளான்ட் செய்துகொள்வது பற்றி இறுதி முடிவு எடுக்கவேண்டும்.

    வயதாகும்போது பெரும்பாலான பெண்களுக்கு இயல்பாகவே உடல் எடை அதிகரிக்கும். அப்போது மார்பகத்தின் அளவும் அதிகரித்துவிடும். அதனால் அவர்களது உடல் மெருகு குலைவதோடு

    மட்டுமல்லாமல், வேறு பல உடல்சார்ந்த அவஸ்தைகளும் ஏற்படும். தொடர்ச்சியாக கழுத்து, முதுகு, தோள்பட்டை வலி ஏற்படலாம். பெண்கள் தங்கள் பெரிய மார்பகங்களை ஆபரேஷன் மூலம்

    சிறிதாக்கலாம். அதற்கு ‘பிரெஸ்ட் டிடெக்‌ஷன்’ என்று பெயர். அதோடு மார்பகத்தை மேல்நோக்கி தூக்கி நிலைநிறுத்தும் ‘பிரெஸ்ட் லிப்ட்’டும் செய்யலாம்.

    சில மணிநேரம் நடக்கும் இந்த ஆபரேஷனில் சில பின்விளைவுகளும் உண்டு. காயத்தில் தொற்று உருவானால்

    பாதிப்பு ஏற்படும். ஆபரேஷனுக்கு பிறகு தாய்ப்பால் புகட்டுவது சிரமமாகும். மார்பக காம்புகளில் தொடு உணர்ச்சியும் குறையும்.

    சில பெண்களுக்கு மார்பக காம்புகள் உள்அமுங்கிய நிலையில் இருக்கும். அதனால் கணவருடன் திருப்தியான தாம்பத்ய உறவு கொள்ள முடியாது என்றும், எதிர்காலத்தில் தங்கள் குழந்தைக்கு

    பால்புகட்ட முடியாது என்றும் கருதுகிறார்கள். அதெல்லாம் தவறான நம்பிக்கைகள். மார்பக காம்பு உள்அமுங்கியிருந்தால் ‘ஸ்கின் கிரீம்’ பயன்படுத்தி, உள்வட்டத்தில் இருந்து நிதானமாக தினமும் 15 முதல்

    30 நிமிடங் கள் மசாஜ் செய்துவரவேண்டும். அதிலும் சரியாகாவிட்டால் சிறிய அளவிலான ஆபரேஷன் தேவைப்படும்.

    இதை நினைத்து பெண்கள் மனக்கலக்கம் அடையவேண்டியதில்லை.

    பெண்களில் சிலருக்கு மார்பகம் சரிந்து காணப்படும். சிலருக்கு சிறிய பை போன்றும் தோன்றும். அவர்களுக்கு ‘பிரெஸ்ட் லிப்ட்’, ‘போடோக்ஸ்’, ‘திரெட் லிப்ட்’ போன்றவை பலன்தரும். மார்பகத்தில்

    இளமையை தக்கவைக்க பிரெஸ்ட் லிப்ட் செய்கிறார்கள். அதன் பின்பு அவர்கள் ‘சப்போர்ட் பிரா’ அணிய வேண்டியதிருக்கும். மார்பகம் ஓரளவுதான் தொங்கிய நிலையில் இருக்கிறது என்றால்

    ‘போடோக்ஸ்’ என்ற ஊசி மருந்து போதுமானது. மார்பக சருமத்தின் அடியில் பிரத்யேக நூலை செலுத்தி மேல்நோக்கி தூக்கி நிறுத்துவது ‘திரெட் லிப்ட்’ எனப்படுகிறது. இது தற்காலிக பலனையே தரும்.

    மார்பகங்களை எதிர்கால சந்ததிக்கு தேவையான உணவினை வழங்க இயற்கை படைத்திருக்கிறது. தாய்மையின் அடையாளமாக

    திகழும் அவைகளை ஆரோக்கியத்தோடும், அழகோடும் பராமரிப்பது மிக அவசியம்.

    Posted in மருத்துவம்

    கட்டிப்பிடித்தபடி தூங்கினால் அதுக்கு நல்லது

    ஆரோக்கிய வாழ்வுக்கு தூக்கம் முக்கிய அங்கம் வகிக்கிறது. தூங்கும் போது இதை பிடித்துக்கொண்டு தூங்கினால் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்று அறிந்து கொள்ளலாம்.

    தூக்கம்
    ஆரோக்கிய வாழ்வுக்கு தூக்கம் முக்கிய அங்கம் வகிக்கிறது. இரவு நன்றாக தூங்கியும் காலையில் சோர்வாக எழுந்தால் தூங்கும் முறை அதற்கு காரணமாக இருக்கலாம். படுக்கையில் முதுகு பகுதிக்கு

    அழுத்தம்கொடுத்து தூங்குவது, வயிற்றுப்பகுதிக்கு அழுத்தம்கொடுத்து குப்புறப்படுத்து தூங்குவது, இடதுபுறம், வலதுபுறம் திரும்பிப்படுப்பது என தூங்கும் விதம் மாறுபடுகிறத

    தலையணை

    தலையணையை கட்டிப்பிடித்து தூங்குவது, காலில் தலையணையைவைத்து தூங்குவது, ஒரு காலை தூக்கியபடி தூங்குவது என பலவிதமான முறைகளை நிறையபேர் கையாள்கிறார்கள்.

      முதுகை பின்னோக்கி சாய்த்து தூங்குவது, இடதுபுறமாக உடலை திருப்பி தூங்குவதுதான் தூக்கத்தில் சிறந்த நிலையாக கருதப்படுகிறது. வயிற்றுப்பகுதியை படுக்கையில்

      அழுத்திக்கொண்டு தூங்குவது குடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல என்றும் கூறப்படுகிறது. அறிவியல் ரீதியாக எந்த தூக்க முறை சிறந்தது என்று பார்ப்போம்.

      • முதுகுப் பகுதியை சாய்த்து நேராக படுப்பது சிறந்த நிலையாக கருதப்படுகிறது. அப்போது முதுகு மற்றும் தலை பகுதியை நேராக வைத்திருப்பதும் உடலுக்கு நல்லது. அதற்கு காரணம், இந்த நிலையில் தூங்கும்போது உடலின் அனைத்து பாகங்களின் எடையும் ஒரே மாதிரியாக இருக்கும். மேலும் எலும்புகள் மற்றும் தசைகளுக்கு எந்தவிதமான அழுத்தமும் ஏற்படாது. படுக்கை நேரத்தில் உடலில் உள்ள பல நரம்புகள் ஒருங்கிணைக்கப்படுவதால் உடலின் ரத்த ஓட்டத்தை மூளை சீராக கட்டுப்படுத்தும்.
      • உடலை சுருட்டிக்கொண்டு படுக்க விரும்புபவர்கள் இடது பக்கமாக திரும்பி தூங்கலாம். பெரும்பாலானோர் இந்த நிலையில்தான் படுப்பதற்கு விரும்புகிறார்கள். அவ்வாறு படுப்பதால் உடலுக்கு முக்கிய உறுப்பாக இருக்கும் இதயத்திற்கும், அதை சார்ந்த இதய கட்டமைப்புகளுக்கும் பெரிய அளவில் அழுத்தம் ஏற்படாது.
        • வலது பக்கத்தில் தூங்குவது அவ்வளவு மோசமான நிலை அல்ல. ஆனால் தொடர்ந்து அப்படியே தூங்கும்போது ரத்த நாளங்களுக்கும், ரத்த ஓட்டத்திற்கும் இடையூறு ஏற் படலாம். இது தவிர நுரையீரலும் அழுத்தத்திற்கு உள்ளாகலாம். நெஞ்செரிச்சல், அசி டிட்டி பாதிப்புக்குள்ளாகுபவர்கள், கர்ப்பிணி பெண்கள் வலது பக்கமாக ஒருக்களித்து தூங்கக்கூடாது.
        • வயிற்று பகுதியை படுக்கையில் அழுத்திக்கொண்டு குப்புறப்படுத்து தூங்குவது சரியான நிலை அல்ல. அப்படி தூங்கும்போது வாய், கைகளை உள்புறமாக வைத்திருப்பது
        • உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த முறையில் தூங்கும்போது உறுப்புகளின் அத்தியாவசிய செயல்பாடுகள் தடைபடக்கூடும். சில சமயங்களில் உடல் வலி மற்றும் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.
          • ஒரு காலை மேலே தூக்கிக்கொண்டு தூங்குவதும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதனால் இடுப்பு பகுதிக்கு பாதிப்பு நேரும். மேலும் காலை தூக்கும்போது இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்வதற்கும் ரத்த நாளங்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். முதுகுவலி ஏற்படும் சமயத்தில் இந்த நிலையில் சில மணி நேரம் தூங்கலாம். ஆனால் நீண்ட நேரம் தூங்குவது நல்லதல்ல.
          Posted in மருத்துவம்

          புகைப்பழக்கம் மனைவியின் கருவைப் பாதிக்கும்

          புகைப்பழக்கம் மனைவியின் கருவைப் பாதிக்கும்

          கணவரிடம் புகைப்பழக்கம் இருந்தால் அது மனைவியின் கருவைப் பாதிக்கும். புகையில் உள்ள நச்சுப் பொருள்கள் ஆண்களின் உயிரணுக்களைப் பாதிப்பதால், அவர்களுக்கு குறைபாடான

          பிறவிக் குறைபாடு

          அணுக்கள் உருவாகும். அதன் மூலம் மனைவி கர்ப்பம்தரிக்கும்போது பிறவிக் குறைபாடு கொண்ட குழந்தை

          பிறக்கும் சூழ்நிலை ஏற்படலாம். குழந்தை எடை குறைவாகவும் பிறக்க நேரிடும். புகையிலையின் பாதிப்பு உள்ளவர்களின்

          எடை குறைவு

          குழந்தை, அப்பழக்கம் இல்லாதவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளைவிட இருநூறு கிராம் குறைவான எடையுடன் இருக்கும்.

            கணவர் வெளியிடும் புகையை மனைவியும் சுவாசிக்கும் சூழ் நிலை உருவாகும். மனைவி கர்ப்பிணியாக இருக்கும்போது, சுவாசத்தின் வழியாக உள்ளே செல்லும் நிக்கோட்டின் நச்சு கருவில் உள்ள

            குழந்தையைப் பாதிக்கும். சிகரெட்டில் உள்ள கார்பன் மோனாக்சைடு, மனைவியின் ரத்த ஓட்டத்தில் கலப்பதால் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு குறையும். இதனால்

            குழந்தைக்குச் செல்லும் ஆக்சிஜனில் பற்றாக்குறை தோன்றும். இதன் விளைவாக, குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்கும் சூழ்நிலை உருவாகலாம்.

            பிரசவத்தின்போது சிக்கல்

            அதோடு பிரசவத்தின்போது, தாய் வேறு சில நெருக்கடியான கட்டங்களையும் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். அதனால் மனைவி ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்று

            விரும்புகிறவர்களும், எதிர்கால வாரிசு நலமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்களும் புகைப்பிடிக்கும் பழக்கத்தில்

            இருந்துவிடுபடவேண்டும். அவர்கள் அந்த பழக்கத்தில் இருந்து விடுபடுவது, அவர்களது எதிர்கால சந்ததியின் சிறப்பான வாழ்க்கைக்கு வழங்கும் பரிசாக இருக்கும்.

            உறவுக்குள் திருமணம் செய்து தவிர்க்கவும்

            அதுபோல் உறவுக்குள் திருமணம் செய்து கொள்வதையும் முடிந்த அளவு தவிர்த்திடவேண்டும். உறவுக்குள் திருமணம் செய்து கொள்ளும்போது ரத்தம் வழியாக பல பரம்பரை நோய்கள்

            கடத்தப்படுவதால் எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். அந்த ஜோடிகளுக்குள் ரத்தப்பொருத்தம் சரியாக அமையாவிட்டால், பெண்ணின் வயிற்றிலே குழந்தை இறக்கும்

              நிலையும் ஏற்படலாம். இப்படி பலவிதமான சிக்கல்கள் இருப்பதால் பெரும்பாலானவர்கள் உறவுக்குள் திருமணம் செய்து கொள்ள விரும்புவதில்லை.

              திருமணமான இளம்பெண்களில்

              திருமணமான இளம்பெண்களில் பலர் தொடக்கத்தில் தாங்கள் கருத்தரித்திருப்பதையே அறியாதவர்களாக இருக்கிறார்கள். சில அறிகுறிகளை வைத்து கர்ப்பமாகியிருப்பதை உணர்ந்து

              கொள்ளலாம். மாதவிலக்கு தள்ளிப்போகுதல், குமட்டல், உடல் நலன் குன்றியிருப்பது போன்ற உணர்வைத் தரும் மசக்கை, அடிக்கடி சிறுநீர் பிரிதல், புண்ணோ- எரிச்சலோ இல்லாமல்

              வெள்ளைப்படுதல், வாசனையைக் கண்டால் தலைச்சுற்று போன்றவை முக்கியமான அறிகுறிகளாகும்.

              மார்பகங்களில் மாற்றங்கள்

              கர்ப்பமாகிவிட்டால் மார்பகங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உருவாகும். மார்பகங்கள் பெரியதாவதோடு வலி மற்றும் உறுத்தல்

              தோன்றும். மார்பக நரம்புகள் புடைத்தும், காம்புகள் கறுப்பாகியும், முன்பக்கம் சற்று நீட்டியவாறும் மாறும். மலச்சிக்கல் இருப்பது

                போன்ற உணர்வு ஏற்படும். புளி, களிமண் அல்லது ஐஸ்கட்டி போன்ற வழக்கத்துக்கு மாறான பொருள்களை சுவைக்கும் ஆசை ஏற்படலாம்.

                வயிறு பெருத்தல்

                இவைதவிர, நாட்கள் செல்லும்போது வயிறு பெருத்தல், கரு நெளிதல் போன்ற அறிகுறிகளும் தென்படும். அனைவருக்கும் ஒரே

                மாதிரியான அறிகுறி ஏற்படும் என்று சொல்லமுடியாது. கர்ப்பத்தை துல்லியமாக அறிந்துகொள்ள அதற்குரிய பரிசோதனையை பெண்கள் மேற்கொள்ளவேண்டும்.

                  Posted in மருத்துவம்

                  சிறுநீர் தொற்று பாதிப்பை தடுக்க இதை சாப்பிடுங்க

                  சுரைக்காய் இளநீர் ஜூஸ் சிறுநீர் தொற்று பாதிப்பை சரிப்படுத்தும். ரத்தத்தில் யூரியாவின் அளவை சீராக வைத்துக்கொள்ள உதவும்.

                  ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க துணை புரியும். சிறுநீரகத்தையும், ஈரலையும் பாதுகாக்கும். மூச்சுதிணறலையும் சரிசெய்யும்.

                  தேவையான பொருட்கள் :

                  சுரைக்காய் – ¼ கிலோ
                  புதினா – சிறிதளவு
                  இளநீர் – 200 மி.லி

                  செய்முறை:

                  சுரைக்காயின் மேற்பரப்பு தோலை முழுவதுமாக நீக்கிக்கொள்ளவும்.

                  பின்னர் பொடியாக நறுக்கி மிக்சியில் போட்டு அதனுடன் புதினா சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

                  அதனுடன் இளநீர் சேர்த்து வடிகட்டி பரிமாறவும்.

                  தேவையெனில் இந்து உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.

                  ஆரோக்கிய பலன்:

                  சிறுநீர் தொற்று பாதிப்பை சரிப்படுத்தும். ரத்தத்தில் யூரியாவின் அளவை சீராக வைத்துக்கொள்ள உதவும். ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க துணை புரியும். சிறுநீரகத்தையும், ஈரலையும் பாதுகாக்கும். மூச்சுதிணறலையும் சரிசெய்யும்.

                  குறிப்பு:

                  இது குளிர்ச்சி தன்மை அதிகம் கொண்டது. சளி பிடித்திருந்தால் இதை பருகக்கூடாது. கர்ப்பிணிகள் குறைந்த அளவிலே பருகவேண்டும்.

                  Posted in மருத்துவம்

                  காய்கறிகளை சமைக்கும் முன் இதை செய்ய மறக்காதீங்க

                  காய்கறிகளை சமைக்கும் முன் இதை செய்ய மறக்காதீங்க காய்கறிகளை விளைவிக்கும் தோட்டங்களில், விளைச்சலுக்காகவும், அவைகளை பூச்சி, வண்டுகள் தாக்காமல்

                  இருக்கவும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பர். அதை அப்படியே சமைத்து சாப்பிட்டால் விஷத்தின் தாக்குதல் ஏற்பட்டு, பல்வேறு

                  நோய்கள் தோன்றும். எனவே சமைப்பதற்கு முன், காய்கறிகளை நன்றாக கழுவ வேண்டும்.

                  புதினா, கறிவேப்பிலை, கீரை போன்றவற்றை சமைக்கும் முன்பு, ஒரு லிட்டர் தண்ணீரில் 20 மில்லி வினிகர் கலந்த திரவத்தில் அல்லது

                  ஒரு லிட்டர் தண்ணீரில் 30 கிராம் அளவுக்கு புளி கலந்த திரவத்தில் அவைகளை பத்து நிமிடம் வைத்திருங்கள். பின்பு நன்றாக அலசி

                  எடுத்துவிட்டு மீண்டும் தண்ணீரில் சுத்தமாக கழுவி பயன்படுத்துங்கள்.

                  முட்டைகோஸ் வாங்கியதும் அதன்மேல் பகுதியில் இருக்கும் மூன்று அல்லது நான்கு அடுக்கு இதழ்களை அப்புறப்படுத்திவிடுங்கள்.

                  பின்பு நீரில் கழுவிவிட்டு, சுத்தமான துணியால் துடைத்துவிட்டு பயன்படுத்துங்கள்.

                  நெல்லிக்காய், கோவக்காய், புடலை போன்றவைகளை மென்மையான ஸ்கிரப் பேடு பயன்படுத்தி தேய்த்து கழுவுங்கள். பின்பு முதலில் சொன்ன ஏதாவது ஒரு திரவத்தில் பத்து நிமிடம் முக்கிவைத்துவிட்டு, துடைத்து பயன்படுத்துங்கள்.

                  மல்லித்தழையில் வேர் பகுதியை நீக்கிவிட்டு, சமையலுக்கு பயன்படுத்தும் பகுதியை மட்டும் தனியாக கிள்ளி எடுங்கள். அதை டிஸ்யூ பேப்பரிலோ, காற்று புகத்தகுந்த காட்டன் துணியிலோ சுற்றி

                  , பிளாஸ்டிக் பாத்திஇஇரத்த ில் கொட்டி பிரிட்ஜில் வைத்திருங்கள். உபயோகப்படுத்துவதற்கு பத்து நிமிடம் முன்பு வினிகர் கலவையில்

                  முக்கிவைத்து, பின்பு நன்றாக தண்ணீரில் கழுவி பயன்படுத்துங்கள்.

                  முருங்கைக்காய், பீட்ரூட், கேரட் போன்றவற்றை நன்றாக அலசி தண்ணீரில் கழுவுங்கள். பின்பு தண்ணீரை துடைத்துவிட்டு, காட்டன்

                  துணியை சுற்றி பிரிட்ஜில் வையுங்கள். உபயோகிப்பதற்கு முன்பு வெளியே எடுத்து, மேல் தோலை சுரண்டி விட்டு மீண்டும் கழுவி பயன்படுத்துங்கள்.

                  வெண்டைக்காய், கத்தரி, வெள்ளரி, பாகற்காய், சுரைக்காய்களை பிரஷ் மூலம் லேசாக உரசி தண்ணீரில் கழுவுங்கள். சில தடவை

                  தண்ணீரில் அலசி, வினிகர் அல்லது புளி திரவத்தில் பத்து நிமிடங்கள் முக்கிவைத்து, கழுவி பயன்படுத்துங்கள்.

                  பூண்டு, சிறிய வெங்காயம், இஞ்சி போன்றவைகளில் இருக்கும் மேல் தோலை நீக்கிவிட்டு நீரில் கழுவிவிட்டு உபயோகப்படுத்தவேண்டும்.

                    Posted in மருத்துவம்

                    தலைவலி வர காரணம் என்ன தெரியுமா..?

                    தலைவலி வர காரணம் என்ன தெரியுமா..?

                    தலைவலி வர காரணம் இது தான் – உடனே இதனை சரி செய்ய இதனை பண்ணுங்க பறந்து போயிடும்

                    ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கும் நோய்களுள் ஒன்றாக ஒற்றைத் தலைவலி விளங்குகிறது. தலைவலிக்கும், ஒற்றைத்தலைவலிக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

                    சாதாரண தலைவலி கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும். ஆரம்பத்தில் வலி அதிகமாக இருந்தாலும் படிப்படியாக

                    திருமணத்திற்கு முன்பு பெண்கள் செய்யும் அந்த விடயம்

                    சத்து நிறைந்த அவல்

                    குறைந்துவிடும். ஆனால் ‘மைக்ரேன் ஹெட்டேக்’ எனப்படும் ஒற்றைத்தலைவலி லேசாக வலிக்க ஆரம்பித்து பிறகு தலையே வெடித்துவிடும் அளவுக்கு கொடூரமாக மாறிவிடும்.

                    இந்த தலைவலி ஒவ்வொருவருடைய உடல்நிலையை பொறுத்து மாறு படக்கூடியது. சிலருக்கு சில மணி நேரம் வலி இருக்கும். சிலருக்கு காலை முதல் மாலை வரை பாடாய் படுத்திவிடும்.

                    சிலருக்கு இரவில் தூங்கி எழுந்தால்தான் சரியாகும். ஒற்றைத்தலைவலி வந்தால் ஓரிரு நாட்கள் வரை

                    அவதிப்படுபவர்களும் இருக்கிறார்கள். வலி இருக்கும் சமயத்தில் ஒவ்வொரு நொடியும் ரண வேதனையை அனுபவிக்க வைத்துவிடும்.

                    பெரும்பாலும் ஒற்றைத் தலைவலி ஒரு பக்கத்தில்தான் வலியை ஏற்படுத்தும். சிலருக்கு இரண்டு பக்கமும் வலிக்கும். அந்த சமயத்தில் கண் இமை பகுதிகளில் வலியின் தாக்கம் அதிகமாக

                    இருக்கும். இரவில் நன்றாக தூங்காமல் இருப்பது, சரியான நேஇரத்தில் உணவு சாப்பிடாதது, பசித்தாலும் குறைவாக

                    சாப்பிடுவது போன்றவை ஒற்றைத்தலைவலிக்கான பொதுவான காரணங்கள்.

                    சிலருக்கு காரணத்தை கண்டறிய முடியாதபடி பலவிதமான அறிகுறிகளை வெளிப்படுத்தும். குறிப்பிட்ட நாள் இடைவெளியில் அடிக்கடி வந்து கொண்டேஇருக்கும். ஒவ்வொரு முறை வரும்போதும்

                    நீண்ட நேரம் வலி இருந்து கொண்டிருக்கும். வலி அதிகரிக்கும்போது கண் இமைகளில் கடும் பாதிப்பு உண்டாகும். சிலருக்கு பார்வை

                    தெளிவாக தெரியாது. தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்ற பாதிப்புகளும் ஏற்படும்.

                    ஒற்றைத் தலைவலி நீடித்துக்கொண்டிருந்தால் மூளை நரம்புகள் பாதிப்படையும். நாளடைவில் மறதி ஏற்படும். மன அழுத்தத்திற்கு ஆளானாலும் அடிக்கடி இந்த தலைவலி வரும். மலச்சிக்கல்,

                    அடிக்கடி சிறுநீர் கழிப்பது ‘மைக்ரேன்’ தலைவலிக்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகளாகும். தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா

                    யாருக்காவது ஒற்றைத்தலைவலி இருந்தால் பரம்பரை ரீதியாகவும் பின் தொடர்ந்து வரும்.

                    வேலைப்பளு அதிகரிக்கும்போது டென்ஷன் அதிகமாகி அதன் காரணமாகவும் உண்டாகும். அப்போது வெளிச்சத்தை பார்த்தால் கண்கள் கூசும். சிலர் தலைவலி என்றதும் கண்களில் தான்

                    பிரச்சினை இருப்பதாக நினைப்பார்கள். தொடர்ந்து ஒற்றைத் தலைவலி இருப்பவர்கள் எம்.ஆர்.ஐ ஸ்கேன், சி.டி ஸ்கேன் போன்ற

                    பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது. அதன் மூலம் மூளை சார்ந்த பிரச்சினைகள் எதுவும் இருக்கிறதா என்பதை கண்டறிந்து சிகிச்சை பெறலாம்.

                    Posted in மருத்துவம்

                    மாதவிடாய் காலத்தில் என்னென்ன உணவுமுறைகளை சாப்பிட வேண்டும்

                    மாதவிடாய் நாட்களில் வலி, வீக்கம், பதற்றம், மனச்சோர்வு, முதுகுவலி போன்ற பாதிப்புகளை பெரும்பாலான பெண்கள் எதிர்கொள்கிறார்கள். மாதவிடாயின்போது ஈஸ்ட்ரோஜன்

                    ஹார்மோன் அளவு கூடும். புரோஜெஸ்டிரானும் உயர்ந்து செரிமான செயல்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மாதவிடாய்

                    நெருங்குவதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன்பே அதற்கான அறிகுறிகள் தென்படும். மாதவிடாய் காலத்தில் என்னென்ன உணவுமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் தெரியுமா?

                    • உப்பில் சோடியம் உள்ளது. அது மாதவிடாய் காலகட்டத்தில் உடலில் உள்ள தண்ணீரின் அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். அதன் காரணமாக வயிற்று பகுதியில் வலி உண்டாகும். எனவே
                    • அந்த நாட்களில் உப்பின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும்
                    • . மேலும் உப்பு சேர்க்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள்,
                    • சோடியம் கலந்த உணவுகளையும் தவிர்த்துவிட வேண்டும்.

                    • காபி பருகுவதும் வலியை அதிகப்படுத்திவிடும். மாதவிடாய் கால பிற நோய்த்தொற்று அறிகுறிகளையும் அதிகப்படுத்திவிடும்
                    • என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. காபி உட்கொள்வதற்கு
                    • பதிலாக தண்ணீர் அதிகம் பருக வேண்டும். அது உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்க உதவும். உடலில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்ற உதவும்.
                    • காய்கறிகள், கீரை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வாழைப்பழங்கள், வெண்ணெய், தக்காளி போன்ற பொட்டாசியம் நிறைந்த உணவு
                    • களை உட்கொள்ள வேண்டும். இவை வலியை குறைக்க உதவும். மேலும் உடலில் சோடியத்தின் அளவை சமநிலைப்படுத்தவும்
                    • பொட்டாசியம் உதவும். தேவையற்ற கழிவுகளை சிறுநீர் வழியாக அதிகம் வெளியேற்றவும் வழிவகுக்கும். மாதவிடாய் நாட்கள் நெருங்கும்போதே இத்தகைய உணவு பழக்கத்தை பின்பற்ற தொடங்கிவிட வேண்டும்.
                    • வெள்ளை மாவு மற்றும் பதப்படுத்தப்பட்ட சர்க்கரைகளில் இருக்கும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை அதிகரிக்கும். அதனால் இன்சுலின்
                    • அளவும் அதிகமாகும். சிறுநீரகங்களும் அதிக சோடியத்தை
                    • தக்கவைக்கும் நிலை உருவாகும். எனவே மாதவிடாய் சமயத்தில் கார்போஹைட்ரேட் கலந்த உணவுகளை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது.
                    • உடற்பயிற்சி செய்வதையும் அந்த நாட்களில் தவிர்க்கக்கூடாது. சிறிது நேரம் செய்யும் உடற்பயிற்சிகள் கூட உடலுக்கு இதமளிக்கும். வலி, வீக்கம், தசைபிடிப்பு, எரிச்சல் போன்ற
                    • பிரச்சினைகளை கையாளவும் உதவும். அதற்காக கடினமான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டியதில்லை. வீட்டுக்குள் கூட நடைப்பயிற்சி செய்யலாம். வீட்டு வேலைகளையும் செய்யலாம். பாலசனா, உத்ராசனா, புஜங்காசனா போன்ற யோகாசனங்களையும் செய்யலாம்.
                    Posted in மருத்துவம்

                    அடிக்கடி மீன் நிறைய சாப்பிட்ட இது நடக்கும்

                    அடிக்கடி மீன் நிறைய சாப்பிட்ட இது நடக்கும்

                    மீனில் புரதம், வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள்

                    நிறைந்துள்ளன. தினமும் மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

                    அடிக்கடி மீன் நிறைய சாப்பிட்ட இது நடக்கும்

                    • மீன்களில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளை மற்றும் கண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. உடல் எடையை சீராக பராமரிக்கவும் உதவும்.
                    • தினமும் மீன் சாப்பிட்டு வந்தால் இதயம் மற்றும் ரத்தக்குழாய்களில் ஏற்படும் பிரச் சினைகளை கட்டுப்படுத்தலாம். இது இதயத்திற்கு இதமானது.
                    • மீனில் இருக்கும் வைட்டமின் டி எலும்புகள், பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவும். தினமும் ஏதாவதொரு மீன் சாப் பிடுவதன் மூலம் வைட்டமின் டி சத்துக்களின் தேவையை பூர்த்தி செய்துவிடலாம்.
                    • மீன் சாப்பிடுவது மன ஆரோக்கியத்திற்கும் நல்லது. மனச்சோர்வு, மன அழுத்தத்திற்கு ஆளாகுபவர்கள் தினமும் மீன் சாப்பிட்டு
                    • வரலாம். மீனில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி போன்றவை மனநல பிரச்சினைகளை தடுக்க உதவும்.
                    • மீனில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை குறைப்பதோடு அவை சேருவதையும்
                    • தடுக்கும். முடக்குவாதத்தில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியை குறைப்பதற்கு மீன் உணவுகளை சாப்பிட வேண்டும்.
                    • மீன் சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். ஆழ்ந்த தூக்கத்தை வரவழைக்கும். சருமத்தின் ஆரோக்கியத்திற்கும்
                    • உதவும். தினமும் மீன் சாப்பிடுகிறவர்கள் அளவுக்கு அதிகமாக அதனை சாப்பிடக்கூடாது.
                      Posted in மருத்துவம்

                      திருமணத்திற்கு முன்பு பெண்கள் செய்வது இதுவாம்

                      திருமணம் நடப்பதற்கு முன்பு பெண்கள் இதனை உடனே செய்ய வேண்டுமாம் .அப்படி செய்தால் அதற்கு நல்லதாம்

                      நன்றாக சாப்பிடுவது, ஓய்வு என்ற பெயரில் அதிக நேரம் தூங்குவது, வேலை என்று வந்துவிட்டால் ஓய்வே எடுக்காமல் கடுமையாக உழைப்பது போன்றவை இளம்பெண்களின்

                      வழக்கமாகிக்கொண்டிருக்கிறது. அதனால் அவர்கள் பெரும்பாலும் தங்கள் உடல் பராமரிப்பு பற்றி நினைத்துப்பார்ப்பதே இல்லை. ஆனால் திருமணம் நிச்சயமாகும்போது அவர்களுக்கு தங்கள்

                      உடலை பற்றிய ஆர்வம் அதிகமாக வந்துவிடுகிறது. அப்போது அவர்கள் உடல் எடை அதிகமாக இருந்தால் ரொம்பவே கவலைப்படுகிறார்கள். ஜிம் எங்கே இருக்கிறது என்று

                      தேடிப்போகிறார்கள். உணவுக் கட்டுப்பாட்டு நிபுணர்களை நாடிச் செல்கிறார்கள். நேரத்திற்கு தூங்கவும், உடலை பராமரிக்கவும் திடீர் அக்கறை செலுத்துகிறார்கள்.

                      திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டால், அடுத்து திருமணத்திற்கு மூன்றில் இருந்து ஆறு மாதங்கள் வரை இடைவேளை கிடைக்கிறது. அந்த காலகட்டத்தை அவர்கள் முழுமையாக உடலை பராமரிக்க

                      ஒதுக்கிக்கொள்ளவேண்டும். முதலில் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளவேண்டும். அதற்காக பட்டினி கிடந்துவிடக்கூடாது. உடல் எடையை குறைப்பதற்காக பட்டினி கிடந்தவர்களின் உடல்

                      பல்வேறு மோசமான பின்விளைவுகளை சந்தித்திருக்கிறது. பட்டினி கிடந்தால் தசை நெகிழ்ந்து, சருமமும் சுருங்கிவிடும். அதனால்

                      முறையான உணவுக் கட்டுப்பாட்டோடு உடலுக்கு தேவையான சரியான உடற்பயிற்சியையும் மேற்கொள்ளவேண்டும்.

                      திருமணத்திற்கு தயாராகும் இளம்பெண்கள் ஸ்டிரன்த்தனிங் டிரைனிங், கார்டியோ எக்ஸசைஸ் ஆகிய இருவகை பயிற்சிகளை பெறவேண்டும். ஸ்டிரன்த்தனிங் என்பது தசைகளை

                      வலுப்படுத்துவதற்கான பயிற்சியாகும். கார்டியோ பயிற்சி என்பது உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைப்பதற்கானதாகும். ட்ரெட் மில், சைக்கிளிங், ஓடுதல், நடனமாடுதல், ஏரோபிக்ஸ் செய்தல்

                      போன்றவை கார்டியோ வகை பயிற்சிகள். உடற்பயிற்சி நிபுணர் ஒருவரின் ஆலோசனையோடு தினமும் இதனை செய்துவந்தால்

                      உடலில் இருக்கும் கொழுப்பு குறைந்து, கட்டுடல் உருவாகும். உடலின் தேவைக்கு தக்கபடி இருவகை பயிற்சிகளையும் பெண்கள் தொடர்ந்து செய்துவரவேண்டும்.

                      சில நாட்கள் இந்த பயிற்சியை பெற்றதும் பெண்களுக்குள் சோம்பேறித்தனம் எட்டிப்பார்க்கும். ‘இன்று வேண்டாம் நாளை

                      உடற்பயிற்சி செய்துகொள்ளலாம்’ என்ற எண்ணம் தோன்றும். அதை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு அன்றாடம் பயிற்சி செய்தால் எடை குறைவதோடு, உடலும் கட்டுக்கோப்பாக மாறும்.

                      ஜிம்முக்கு போய் உடற்பயிற்சியை மேற்கொள்ள வாய்ப்பில்லாதவர்கள் ட்ரெட் மில், சைக்கிளிங் போன்றவைகளுக்குரிய கருவிகளை வாங்கி வீட்டிலேவைத்து

                      பயிற்சி மேற்கொள்ளலாம். மாடிப்படிகளில் ஏறி இறங்குவது, ஸ்கிப்பிங் போன்றவைகளையும் செய்யலாம்.

                      திருமணம் நிச்சயமான பின்பு மணமகனும், மணமகளும் பிசியாகிவிடுவார்கள். அதனால் அவர்கள் ‘காலை முழுவதும் மற்ற வேலைகள் இருக்கிறது. அதனால் எல்லா வேலைகளையும்

                      முடித்துவிட்டு மாலையில் உடற்பயிற்சி செய்துகொள்ளலாம்’ என்று நினைத்து தள்ளிவைத்துவிடக் கூடாது. தள்ளிவைத்து விட்டால் அன்று பயிற்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும். புது

                      மணத்தம்பதிகளுக்கு ஆரோக்கியம் மிக முக்கியம். அதனால் உடற்பயிற்சியை தள்ளிப்போடவேண்டாம். தினமும்

                      அதிகாலையிலே அவர்கள் உடற்பயிற்சியை செய்துமுடித்துவிட வேண்டும். மணப்பெண்ணுக்கு மட்டுமல்ல, மணமகனுக்கும் உடற்பயிற்சி அவசியம்.

                      Posted in மருத்துவம்

                      சாப்பிடுவதற்கு முன்பு சானிடைசர் பயன்படுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா ..?

                      நாம் சாப்பிடுவதற்கு முன்பு சானிடைசர் பாவித்தால் அதனால் உடலுக்கு ஏன்னா தீங்கு நடக்கும் தெரியுமா

                      கொரோனா வைரசிடம் இருந்து தற்காத்துக்கொள்வதில் முக கவசமும், சானிடைசரும் முக்கிய பங்கு வகிக்கின்றன. வைரஸ்களை கொல்வதற்கு சானிடைசர் உதவினாலும் அதனை

                      சற்று கவனமாக கையாள வேண்டும். தொடர்ந்து பயன்படுத்தும்போது சில தொல்லைகள் ஏற்படக்கூடும். சானிடைசரில் 60 சதவீதத்திற்கும் அதிகமாக ஆல்கஹால்

                      கலந்திருப்பதால் வைரஸ்களை திறம்பட கொல்லும். ஆனால் சில சானிடைசர்களில் ஆல்கஹாலுக்கு பதிலாக டிரைக்ளோசான் என்ற

                      வேதிப்பொருள் கலக்கப்படுவதால் கவனமாக பார்த்து வாங்க வேண்டும். விரும்பிய விளையாட்டு

                      டிரைக்ளோசான் என்ற வேதிப் பொருள் பூச்சி கொல்லி மருந்துகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. அதனால் அதில்

                      விஷத்தன்மையும் கலந்திருக்கிறது. அது மக்களின் பொதுவான பயன்பாட்டிற்கு ஏற்றது அல்ல.

                      முள்ளி வாய்க்கால் மண்ணில்

                      அத்தகைய சானிடைசர்களை அடிக்கடி பயன்படுத்தும்போது அவை உடலில் உறிஞ்சப்பட்டால் தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகள் பாதிப்புக்குள்ளாகும். தசைகள் மற்றும் ஈரலுக்கும்

                      பாதிப்பை ஏற்படுத்தும். சாப்பிடுவதற்கு முன்பு சானிடைசர் பயன்படுத்தி கைகழுவுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

                      அதிலுள்ள வேதிப்பொருட்கள் உடலுக்குள் சென்று, செரிமான மண்டலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். குழந்தைகளின் நோய்

                        எதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கவைத்துவிடும். சிலர் சானி டைசரை கொண்டு முக கவசத்தை கழுவும் வழக்கத்தையும் பின்பற்றுகிறார்கள். அது ஆபத்தானது.

                        அதில் இருக்கும் வேதிப்பொருட்கள் முக கவசத்தில் கலந்துவிடும். அதனை மறுபடியும் உபயோகிக்கும் போது சுவாசம் சார்ந்த

                        பிரச்சினைகள் ஏற்படலாம். வெளி இடங் களுக்கு செல்லும்போது தவிர்க்க முடியாத பட்சத்தில் மட்டும் சானிடைசர் பயன்படுத்துங்கள்

                        Posted in மருத்துவம்

                        செக்ஸ் தொல்லையால் அவதி படும் குண்டு மனிதர்கள்

                        விரும்பியது போல செக்ஸ் செய்திட முடிய அவதி படும் குண்டான ஆண் பெண்கள ,செக்ஸ் தொல்லை என்ன பண்ணலாம்

                        நாம் வாழும் இந்த உலகம், குண்டான மனிதர்களால் நிரம்பி வழியப்போகிறது. கிட்டத்தட்ட இப்போது 50 கோடி பேர் அளவுக்கு அதிகமான உடல் எடையோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

                        அதாவது நூறு பேரில் பத்துபேர் உடல் எடை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். முன்பெல்லாம் பிரசவத்திற்கு பின்புதான் பெண்களின் உடல் எடை அதிகமாகும் என்ற கருத்து

                        இருந்தது. இப்போது பள்ளியில் படிக்கும் பருவத்திலே, பூப்படையும் காலத்திலே சிறுமிகள் அதிக எடைகொண்டவர்களாக இருக்கிறார்கள். கல்லூரிப்பருவத்திலும், கல்யாண

                        காலகட்டத்திலும் பெண்கள் குண்டாக இருப்பது தொடர்ந்துகொண்டிருக்கிறது. உலக அளவில் ஆண்களைவிட பெண்களே பெருமளவில் அதிக எடை கொண்டவர்களாக இருக்கின்றனர்.

                        இந்தியாவில் நகரப்பகுதிகளில் வாழும் மக்களில் 5.5 சதவீதம் ஆண்களும், 12.6 சதவீதம் பெண்களும் அதிக எடை கொண்டவர்கள். இதில் நகரக் குடிசைவாசி ஆண்கள் 1.9 சத வீதம், பெண்கள் 7.2.

                        சதவீதம். கிராமங்களில் அதிக எடை உள்ளவர்கள் குறைவு. ஆண்கள் 1.6 சதவீதம், பெண்கள் 3.8 சத வீதம். சமூக நிலையும், பொருளாதார நிலையும்கூட அதிக உடல் எடைக்கு காரணமாகிறது.

                        உயர் சமூகப் பொருளாதார அந்தஸ்தில் இருக்கும் பெண்களின் அதீத உடல் எடை 10.4 சதவீதமாக இருக்கிறது. குறைந்த சமூகப்பொருளாதார அந்தஸ்தில் இருக்கும் பெண்களில் 0.9

                        சதவீதம் மட்டுமே அதிக எடை கொண்டவர்கள் இருக்கிறார்கள். சமூகப் பொருளாதார அந்தஸ்து உயரும்போது எடுத்துக் கொள்ளும் உணவில் உள்ள கலோரிகளின் அளவும் அதிகரிக்கிறது. ஏழைகள்

                        அதிக கலோரி கொண்ட உணவுகளை உண்பதில்லை. உண்டாலும், அவர்கள் உழைக்கும் வர்க்கமாக இருப்பதால் கலோரி எளிதாக செலவாகிவிடுகிறது.

                        விளையாட விடுங்கோ படி

                        குறைந்த கலோரிகள் உள்ள உணவு, அதிக நார்ச்சத்துள்ள உணவு, அதிகம் குடிநீர், புகைத்தல்- மதுபானம் அருந்துவதை தவிர்த்தல் ஆகியவற்றை தவறாது கடைப்பிடித்தாலே உடல் எடையைக்

                        குறைக்கலாம். உடல் எடையை குறைப்பதற்கான வாய்ப்புகள் இப்போது அதிகமாக இருக்கின்றன. ஆனால் அதை தொடர்ச்சியாக கடைப்பிடிப்பவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள்.

                        மாயாஜாலம்போல் அதிரடியாக உடல் எடையை குறைக்கவேண்டும் என்ற எண்ணமே பலரிடமும் இருக்கிறது. அப்படி அதிரடியாக உடல்

                        எடையை குறைப்பது ஆபத்தான செயல் என்பதை பலரும் புரிந்துகொள்வதில்லை.

                        கணவாய் பிரட்டல் video

                        உடல் எடையை குறைக்க 1 மணி நேரம் வேகமாக நடத்தல், ஜாகிங் ஆகியவற்றுடன் ஆரோக்கியமான சமச்சீரான உணவு

                        பெரியவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக வேகமாக நடப்பது இருதய நோய்கள், மாரடைப்பு வரும் வாய்ப்புகளையும் குறைக்கும்.

                        அதீத உடல் எடை காரணமாக உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பெண்களை அது அதிகமாக தாக்குகிறது. தற்போது பெரும்பாலான பெண்கள் மாதவிலக்கு பிரச்சினைகளால்

                        அவதிப்படுகிறார்கள். அதற்கு அதிக உடல் எடை ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது. அதிக உடல் எடை, அதீத உதிரப்போக்கு

                        அல்லது குறைந்த உதிரப்போக்கு ஏற்பட காரணமாக இருக்கிறது. அதிக உடல் எடை கொண்ட குழந்தைகள் சிறு வயதிலேயே பூப்படையும் நிலையும் உருவாகிறது.

                        இப்போது ஆணும், பெண்ணும் அதிக எடையுடன் இருப்பதால், கல்யாண வாழ்க்கையில் இணையும் ‘எடை கூடிய தம்பதிகளின்’ எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதிக எடைகொண்ட

                        தம்பதிகளின் பாலியல் வாழ்க்கை அவ் வளவு திருப்திகரமாக அமைவதில்லை. குண்டான உடல் அவர்களது பாலியல் செயல்பாடுகளுக்கு தடையாக இருக்கிறது.

                        மனது நிறைய ஆசை இருந்தாலும், அதை நிறைவேற்ற பெரும்பாலன நேரங்களில் உடல் ஒத்துழைக்காத நிலை தோன்றுகிறது. விரும்பியதுபோல் எல்லாம் அவர்களால் பாலியல்

                        உறவு நிலைகளை மாற்றிக்கொள்ளவும் முடிவதில்லை. அதனால் அவர்களுக்கு பாலியல் உறவு மீது சலிப்பும், விரக்தியும் தோன்றுகிறது. அப்படிப்பட்டவர்களில் 20 சதவீதம் பேர் வரை

                        பாலியல் உறவுகளில் இருந்து விலக விரும்புகிறார்கள். அப்போது அவர்கள் தங்கள் பாலியல் தேவைகளுக்காக நீலப்படங்களை

                        பார்க்கத் தொடங்குகிறார்கள். அதுவே அவர்களை, அதற்கு அடிமையாக்கிவிடுகிறது. அதனால் மனஉளைச்சல் ஏற்பட்டு மனோரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

                        உடல் எடை அதிகரித்தவர்கள் எண்ணிக்கை இப்போது உயர்ந்துகொண்டிருப்பதால், அவர்களை கருத்தில்கொண்டும் பாலியல் நிபுணர்கள் செயல்படுகிறார்கள். அவர்கள் பாலியல்

                        உறவை மேம்படுத்திக்கொள்ளவும், உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும் வழிகாட்டுகிறார்கள். அவர்களுக்கு தக்கபடியான

                        உணவு வகைகளையும் பரிந்துரைக்கிறார்கள். மனோரீதியாக அவர்கள் பாலியல் நாட்டம் கொள்ள தேவையான ஆலோசனை மற்றும் சிகிச்சைகளும் வழங்குகிறார்கள்.

                        உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க…

                        உடல் எடை என்பது அதிரடியாக கிடுகிடுவென உயர்வதில்லை. வெகுகால உணவுப் பழக்கமும், பல வருட வாழ்வியல் முறைகளும் படிப்படியாக உடல் எடையை உயர்த்துகிறது என்பதை

                        உணர்ந்துகொள்ளுங்கள். அதனால் ஒவ்வொருமுறை உணவுக்காக வாயை திறக்கும்போதும் உங்களுக்கு அது தேவைதானா?

                        தேவையில்லாமல் ருசிக்காக அதை திணிக்கிறீர்களா என்பதை நினைத்துப்பாருங்கள்.

                        உணவின் அளவைக் குறையுங்கள். சாப்பிட்ட உணவும் உடலில் அப்படியே கொழுப்பாக படிந்துவிடாத அளவுக்கு என்ன செய்யவேண்டும் என்றும் சிந்தியுங்கள்.

                        வயது கூடும்போது உடலில் உள்ள கூடுதல் கலோரிகளை எரிக்கும் சக்தி குறையும் என்பதை கவனத்தில்கொள்ளுங்கள்.

                        உடலுழைப்பு குறையும்போது உடல் எடை அதிகரித்துவிடும் என்பதால், உடலை வேலைக்கு பழக்குங்கள். உடலை சொகுசுக்கு அடிமையாக்கிவிடாதீர்கள்.

                        தைராய்டு நோய் காரணமாக ஹார்மோன் அளவுகளில் சீரற்ற நிலை தோன்றுவதாலும் உடல் எடை அதிகரிக்கும். அதனால் தேவைப்படும்போது மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.

                        பெண்கள் கர்ப்பத்தடை மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்வதாலும் உடல் எடை அதிகரிக்கக்கூடும்.

                        மூளையில் இருக்கும் ஹைபோதாலமஸ், பசி மற்றும் பாதுகாப்பு உணர்வைத் தூண்டுகிறது. இதன் காரணமாகவே திருப்தி ஏற்பட்ட

                        பிறகே உண்பதை நிறுத்து கின்றனர். அதனால் பாதி அளவு திருப்தி ஏற்பட்டதும் சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள்.

                        குழந்தைகளுக்கு தாய்மார்கள் அதிக உணவை ஊட்டிக்கொண்டே இருப்பது, அவர்களது உடல் உடை அதிகரிக்க காரணமாகிவிடுகிறது.

                        அதிக கொழுப்பு சத்துள்ள பீட்சா, பர்கர், கேக், குளிர்பானங்கள் அருந்துவதால் உடல் எடை கூடும்.

                        தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும்போதும் ஏதாவது உணவைக் கொறித்துக்கொண்டே இருப்பது மிக தவறானது. இதனால் உடல் எடை வேகமாக அதிகரித்துவிடுகிறது.

                        உணவை வீணாக்கக்கூடாது என்ற உணர்வில் பெண்கள் மீதம் இருப்பதையும் சாப்பிடுவது தவறான முன்னுதாரணம். பெண்கள் உடல் எடையால் அவதிப்பட இது முக்கிய காரணம்.

                        புகைத்தல் மற்றும் மதுபானம் அருந்துதல் போன்ற பல காரணங்களாலும் உடல் குண்டாகிறது.

                        Posted in மருத்துவம்

                        கழுத்து வலியால் அவதியா அப்ப இதை பண்ணுங்க

                        கழுத்து வலியால் அவதியா அப்ப இதை பண்ணுங்க

                        ஆரோக்கியமான உணவு, தூக்கம் எப்படி முக்கியமோ, அதுபோல

                        உடற்பயிற்சியும் முக்கியம். இந்த மூன்றையும் சரியான முறையில்

                        பின்பற்றினால், உடல்நலக்குறைவும் வலிகளும் வராது. இந்த வார்ம்

                        அப் மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் ரத்தம் சீராகச்

                        செல்ல உதவும். மூளை செல்கள் புத்துயிர் பெறும். கழுத்து வலி குறைவதை உணர முடியும். இறுக்கங்கள் நீங்கும்.

                        வார்ம் அப் நிலையில், உட்கார்ந்தபடியே கண்களைத் திறந்து,

                        ஆழமாக மூச்சை இழுத்துக்கொள்ள வேண்டும். மெதுவாக மூச்சு

                        கழுத்து வலியால் அவதியா அப்ப இதை பண்ணுங்க

                        விட்டபடியே இடதுபுறமாகக் கழுத்தைத் திருப்பி, மூச்சை உள் இழுத்தபடி பழைய நிலைக்கு வந்து, மூச்சை வெளியேவிட வேண்டும்.

                        கழுத்தைத் திருப்பும்போது, இரண்டு விநாடிகள் அப்படியே வைத்திருக்க வேண்டும். இதேபோல், வலதுபுறம், மேல், கீழ் எனக்

                        கழுத்தைத் திருப்பி பயிற்சி செய்ய வேண்டும். கழுத்தை மட்டும் திருப்ப வேண்டும். இந்தப் பயிற்சியை மூன்று முறை செய்ய வேண்டும்.

                        பலன்கள்: மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் ரத்தம் சீராகச் செல்லும். மூளை செல்கள் புத்துயிர் பெறும். கழுத்து வலி

                        குறைவதை உணர முடியும். இறுக்கங்கள் நீங்கும். இதனை

                        தொடர்ந்து செய்தால் கழுத்து வலி குறைந்து நேரான தோற்றத்தை பெற முடியும்.

                          Posted in மருத்துவம்

                          முகப்பரு தழும்புகளை போக்க இதை பண்ணுங்க

                          முகப்பரு தழும்புகளை போக்க இதை பண்ணுங்க

                          முகப்பருக்கள் வந்தாலே முகத்தின் அழகு பொலிவிழந்து போய்விடும். சிலருக்கு பருக்கள் இருந்த இடங்களில் தழும்புகள்,

                          புள்ளிகள் மறையாமல் இருக்கும். சில சமயங்களில் வலி, வேதனைகளை ஏற்படுத்தும். முக அழகை கெடுக்கும் முகப்பரு

                          தழும்புகளை எளிய வீட்டு வைத்தியங்கள் கொண்டே போக்கிவிடலாம்.

                          • எலுமிச்சை சாறை பஞ்சுவில் ஒற்றி தழும்பு இருக்கும் இடத்தில் தடவிவிட்டு சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வரலாம்
                          • . மேலும் எலுமிச்சை சாறுடன் சிறிதளவு பால், பாதாம் எண்ணெய், தேன் கலந்து குழைத்து முகப்பரு தழும்புகள் இருக்கும் இடத்தில்
                          • தினமும் தடவி வந்தால் ஒரு வாரத்தில் நல்ல மாற்றத்தை காணலாம்.
                          • வெந்தயத்தையும் முகப்பரு தழும்பை போக்க உபயோகிக்கலாம். சிறிதளவு வெந்தயத்தை நீரில் போட்டு கொதிக்கவைத்து, அந்த
                          • நீரை பஞ்சுவில் முக்கி தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவி வர வேண்டும். தினமும் இவ்வாறு செய்து வந்தால் தழும்புகள்
                          • விரைவில் மறைந்துவிடும்.
                          • சந்தனமும் தழும்புகளை போக்கும் தன்மை கொண்டது.
                          • முகப்பரு தழும்புகளை போக்க இதை பண்ணுங்க
                          • சந்தனக்கட்டையை இரவில் நீரில் ஊறவைத்துவிட்டு காலையில் நன்றாக உரசி, பஞ்சுவில் முக்கி தழும்புகள் இருக்கும் இடத்தில்
                          • தடவ வேண்டும். தினமும் இருமுறை செய்து வந்தால் ஒருவாரத்தில் தழும்புகள் மறைய தொடங்கிவிடும்.
                          • சந்தன கட்டையில் ரோஸ் வாட்டர் ஊற்றி தேய்த்து அந்த விழுதை இரவில் தூங்க செல்லும் முன்பு தழும்புகள் இருக்கும் இடத்தில்
                          • தடவிவிட்டு காலையில் எழுந்ததும் முகத்தை கழுவிவிடலாம். தினமும் இவ்வாறு செய்துவந்தால் தழும்புகள் மறைந்துவிடும்.
                          • ஆப்பிள் சிடேர் வினிகரையும் உபயோகிக்கலாம். சிறிதளவு ஆப்பிள் சிடேர் வினிகருடன் அதே அளவு நீர் கலந்து பஞ்சுவில்
                          • முக்கி தழும்புகளில் தடவி வரலாம்.
                          • கற்றாழை ஜெல்லையும் தழும்புகள் இருக்கும் இடத்தில்
                          • தடவிவிட்டு அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம்.
                          • தொடர்ந்து கற்றாழை ஜெல்லை பயன்படுத்தி வந்தால் தழும்புகள் விரைவாகவே மறைந்துவிடும்.
                            Posted in மருத்துவம்

                            இதய நோய் வராமல் தடுக்க இதை சாப்பிடுங்க

                            இதய நோய் வராமல் தடுக்க இதை சாப்பிடுங்க

                            தமனியை சுற்றி கொழுப்புகள் படிவதை தடுத்து இதயத்தின் செயல்பாடுகளை

                            மேம்படுத்த உதவும். புளி ஜூஸை தொடர்ந்து பருகுபவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும்.

                            இதய நோய் வராமல் தடுக்கும் புளி ஜூஸ்
                            புளி ஜூஸ்
                            உடலில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்வதிலும் புளியின்

                            பங்களிப்பு முக்கியமானது. தமனியை சுற்றி கொழுப்புகள் படிவதை

                            தடுத்து இதயத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த உதவும். புளி ஜூஸை தொடர்ந்து பருகுபவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும்.

                            தேவையான பொருட்கள்

                            புளிச் சாறு – அரை கப்
                            நாட்டு சர்க்கரை அல்லது தேன் – தேவையான அளவு
                            எலும்பிச்சை துண்டுகள் – 1
                            தண்ணீர் – விருப்பத்திற்கு ஏற்ப

                            இதய நோய் வராமல் தடுக்க இதை சாப்பிடுங்க

                            செய்முறை

                            புளியங் பழத்தில் கொடைகளை நீங்கி விட்டு புளிச்சாற்றை பிழித்து அதை நாட்டு சர்க்கரை அல்லது தேனோடு கலந்து கொள்ள வேண்டும்.

                            தேவையான அளவு குளிர்ந்த நீரை அந்த கரைசலில் சேர்க்க வேண்டும்

                            எலுமிச்சை துண்டுகளை அதில் பிழிந்து விட்டு, ஐஸ் க்யூப்களை கலந்து நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும்.

                            இப்போது சத்தான புளி ஜூஸ் ரெடி.

                            Posted in மருத்துவம்

                            பசியை போக்க இதை சாப்பிடுங்க

                            பசியை போக்க இதை சாப்பிடுங்க

                            தொற்று நோய்களுக்கு எதிராக போராட முடியாமல் நோய் எதிர்ப்பு திறனை குறைவாக கொண்டவர்கள் மோர் பருகுவது அவசியம்.

                            இதிலிருக்கும் ஆரோக்கியமான பாக்டீரியா, கார்போஹைட்ரேட் மற்றும் லாக்டிக் அமிலம் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.


                            தொற்று நோய்களுக்கு எதிராக போராட முடியாமல் நோய் எதிர்ப்பு திறனை குறைவாக கொண்டவர்கள் மோர் பருகுவது அவசியம்.

                            இதிலிருக்கும் ஆரோக்கியமான பாக்டீரியா, கார்போஹைட்ரேட் மற்றும் லாக்டிக் அமிலம் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆயுர்வேதத்தில், மோர் சாத்விக உணவாக

                            கருதப்படுகிறது. தயிரில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பானம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அதிகமாக சாப்பிட்டோ, கார உணவை சாப்பிட்டோ அசிடிட்டி பிரச்சினையை

                            எதிர்கொள்பவர்கள் ஒரு டம்ளர் மோர் பருகலாம். வயிற்றுக்கு நன்மை பயக்கும். கூந்தல் மற்றும் சருமத்திற்கும் ஆரோக்கியம்

                            சேர்க்கும். மோரின் ஐந்து ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம்.

                            எடை இழப்பு: உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு மோர் சிறந்த பானமாகும். இதில் ஊட்டச்சத்துக்களும், நொதிகளும் நிறைந்திருக்கின்றன. கலோரிகள் மிகவும் குறைவு. கொழுப்பு

                            பசியை போக்க இதை சாப்பிடுங்க

                            அறவே இல்லை. உடலுக்கு உடனடி ஆற்றலை கொடுக்கும். நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ளவும் உதவும். மோரில் கால்சியம்,

                            பொட்டாசியம், புரதம், வைட்டமின்கள் உள்ளிட்ட பல தாதுக்களும் உள்ளன. பசியைக் கட்டுப்படுத்தும் சிறந்த பானமாகவும் இது விளங்குகிறது.

                            நீரிழப்பு: உடலில் இருந்து அதிகப்படியான திரவம் வெளியேறும் போது, உடல் ஒட்டுமொத்த ஆற்றலையும் இழக்கக்கூடும். சிலருக்கு மயக்கமும் உண்டாகும். நீரிழப்புதான் அதற்கு காரணமாகும்.

                            வியர்வை, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை நீரிழப்புக்கான பொதுவான அறிகுறிகள். கோடையில் நீரிழப்பைத் தவிர்க்க உப்பு, சீரகம், கருப்பு மிளகு ஆகியவற்றை சேர்த்து மோர்

                            தயாரித்து பருகலாம். இவற்றில் இருக்கும் அதிகப் படியான எலக்ட்ரோலைட்டுகள் நீரிழப்பை ஈடு செய்ய உதவும்.

                            லுவான எலும்புகள்: தினமும் உடலுக்கு 1000 மி.கி கால்சியம் தேவை. ஒரு கப் மோர் சுமார் 284 மில்லி கிராம் கால்சியத்தை கொண்டுள்ளது. இதன் மூலம் அன்றாட கால்சியம் தேவைகளில் 28

                            சதவீதத்தை பூர்த்தி செய்துவிடலாம். வயதாகும்போது எலும்புகளின் அடர்த்தி குறையும். கால்சியம் அதிகம் கொண்ட உணவுப் பொருட்களை உட்கொண்டு வந்தால் எலும்புகள் வலுவடையும்.

                            ரத்த அழுத்தம்: மருத்துவ வழிகாட்டுதல் களின்படி, 130/80 என்ற அளவீட்டில் ரத்த அழுத்தம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மோரில் பயோ ஆக்டிவ் புரதம் ஏராளமாக காணப்படுவதாக ஒரு ஆய்வில்

                            கண்டறியப்பட்டுள்ளது. இது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். தினமும் மோர் பருகுவதன் மூலம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். இதயம் சார்ந்த பிரச்சினைகளும் ஏற்படாது.

                            மலச்சிக்கல்: வாய்வு மற்றும் மலச்சிக்கல் பிரச்சினையை போக்குவதற்கு பண்டைய காலங்களில் இருந்து மோர் பயன்படுத்தப்படுகிறது. குடல் பிரச்சினைகளை சரிசெய்து

                            மலச்சிக்கலை நீக்கிவிடும். மேலும் செரிமான அமைப்பை சரிசெய்யவும் மோர் உதவும்

                              Posted in மருத்துவம்

                              உதடு வெடிப்பதை தடுக்க இதை பண்ணுங்க

                              உதடு வெடிப்பதை தடுக்க இதை பண்ணுங்க

                              உதடுகள் வேகமாக வறட்சி அடைவதை தவிர்க்க தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி ‘லிப் பாம்’ உபயோகிக்கலாம். அதனை வீட்டிலேயே தயார் செய்வது பற்றி பார்ப்போம்.

                              உதடு வறட்சி அடைவதை தடுக்க தேங்காய் எண்ணெயை எப்படி பயன்படுத்தலாம்?
                              உதடு வறட்சி அடைவதை தடுக்க தேங்காய் எண்ணெயை எப்படி பயன்படுத்தலாம்?


                              அலுவலகத்திலோ, வீட்டிலோ குளிர்சாதன வசதி கொண்ட அறையில் அமர்ந்திருந்தாலும் கூட உதடுகளில் வறட்சி நிலவக்கூடும். ஏனெனில் குளிர்சாதன பெட்டிகளில் இருந்து

                              வெளியேறும் காற்றில் குளிர்ச்சி நிலவினாலும் அது சருமத்தை உலரும் தன்மைக்குத்தான் மாற்றக்கூடும். உதடுகள் வேகமாக

                              வறட்சி அடைவதை உணரமுடியும். அதை தவிர்க்க தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தி ‘லிப் பாம்’ உபயோகிக்கலாம். அதனை வீட்டிலேயே தயார் செய்வது பற்றி பார்ப்போம்.

                              ஒரு டேபிள்ஸ்பூன் வாஸ்லைனை மைக்ரோ ஓவனில் வைத்து உருகவைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் அரை டேபிள்ஸ்பூன்

                              தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் அதனை குளிரவைத்து உதட்டில் தடவி வரலாம்.

                              தேங்காய் எண்ணெயுடன் கற்றாழையை சேர்த்தும் பயன்படுத்தலாம். ஒரு கிண்ணத்தில் தலா ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய், கற்றாழை ஜெல் மற்றும் தேன் மெழுகு

                              உதடு வெடிப்பதை தடுக்க இதை பண்ணுங்க

                              கலந்து கொள்ளவும். அதனை மைக்ரோ ஓவனில் வைத்து நன்றாக உருகவிடவும். பின்னர் அதனை சிறிய பாட்டிலில் அடைத்து குளிரவைத்து உதட்டில் தடவி வரலாம்.

                              வாணலியில் தலா ஒரு டேபிள்ஸ்பூன் தேன் மெழுகு, தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் ஊற்றி நன்றாக

                              கிளறவும். அவை அனைத்தும் உருகி ஒன்றாக கலந்ததும் இறக்கி பாட்டிலில் அடைத்து குளிரவைத்து உதட்டுக்கு பயன்படுத்தலாம்.

                              ஒரு டேபிள்ஸ்பூன் தேன் மெழுகை வாணலியில் உருக்கி அதனுடன் அதே அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துக்கொள்ளவும். இந்த

                              கலவையில் லாவண்டர் எண்ணெய் 10 சொட்டுகள் ஊற்றி நன்றாக கலக்கவும். அதனை பாட்டிலில் ஊற்றி குளிரவைத்தும் உதட்டுக்கு உபயோகிக்கலாம்.

                              மேலே கூறியவற்றை பின் தொடருங்கள் வாழ்வு வளமாகவும் என்பதை இதனூடாக கண்டு மகிழ்ந்திருப்பீர்கள் .

                                Posted in மருத்துவம்

                                இருமல் ஜலதோஷத்தை குணமாக்க இதை சாப்பிடுங்க

                                இருமல் ஜலதோஷத்தை குணமாக்க இதை சாப்பிடுங்க

                                இந்த இஞ்சி கசாயம் இரவில் அருந்தி படுத்தால், நிம்மதியாக தூங்கலாம். மூக்கடைப்பு, இருமல், தொண்டைப்புண், ஜலதோஷம் போன்ற பல பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது.

                                இருமல், ஜலதோஷத்தை குணமாக்கும் இஞ்சி கஷாயம்
                                இஞ்சி கஷாயம்
                                பெரும்பாலானவர்கள் இப்போது அதிக நேரம் ஒரே இடத்தில்

                                அமர்ந்து டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

                                அதனால் உடல் வலி தோன்றும். அந்த உடல் வலி மட்டுமின்றி இருமல், தும்மல், மூச்சு அடைப்பு போன்றவைகளை குணப்படுத்தும்

                                ஆற்றல் இஞ்சிக்கு இருக்கிறது. மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அதனை மேம்படுத்தும் சக்தியும் இஞ்சிக்கு உண்டு.

                                இஞ்சியை கஷாயம் வைத்து பருகுவது நல்லது. ஒரு துண்டு இஞ்சியை எடுத்துக்கொள்ளுங்கள். நன்றாக தோலை சீவிவிட்டு அம்மியில் வைத்து நசுக்குங்கள். அதை அப்படியே தண்ணீரில்

                                இருமல் ஜலதோஷத்தை குணமாக்க இதை சாப்பிடுங்க

                                போட்டு கொதிக்கவிடுங்கள். நன்றாக கொதித்த பின்பு இதமான சூட்டில் சிறிதளவு பனைவெல்லம் அதில் கலந்து பருகுங்கள்.

                                இங்கே எனது குழந்தைகளுக்கு சளி பிடித்துள்ளது . இந்த வானிலை மாற்றம் எளிதாக சளி பிடிக்க வைத்து விடுகிறது . இந்த இஞ்சி

                                கசாயம் இரவில் அருந்தி படுத்தால் ,நிம்மதியாக தூங்கலாம் . மூக்கடைப்பு ,இருமல்,தொண்டைப்புண் ,ஜலதோஷம் போன்ற பல

                                பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது .முயற்சி செய்து பாருங்கள் …நிச்சயம் பலன் அளிக்கும் .

                                தேவையான பொருட்கள் :

                                இஞ்சி – 1 துண்டு
                                மிளகு -1 மற்றும் 1/2 ஸ்பூன்
                                மல்லி -1 மற்றும் 1/2 ஸ்பூன்
                                வெல்லம் – 2 ஸ்பூன்
                                தண்ணீர் – 1 மற்றும் 1/2 கப்

                                செய்முறை :

                                இஞ்சியை தோல் சீவி வைக்கவும்.

                                இஞ்சி, மிளகு, மல்லி இவற்றை கொரகொரப்பாக பொடித்துக்கொள்ளவும்

                                இவற்றுடன் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, வடிகட்டி பரிமாறவும்.

                                இதனுடன் பால் கலந்தும் குடிக்கலாம்