அடிக்கடி மீன் நிறைய சாப்பிட்ட இது நடக்கும்

Spread the love

அடிக்கடி மீன் நிறைய சாப்பிட்ட இது நடக்கும்

மீனில் புரதம், வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள்

நிறைந்துள்ளன. தினமும் மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

அடிக்கடி மீன் நிறைய சாப்பிட்ட இது நடக்கும்

  • மீன்களில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளை மற்றும் கண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. உடல் எடையை சீராக பராமரிக்கவும் உதவும்.
  • தினமும் மீன் சாப்பிட்டு வந்தால் இதயம் மற்றும் ரத்தக்குழாய்களில் ஏற்படும் பிரச் சினைகளை கட்டுப்படுத்தலாம். இது இதயத்திற்கு இதமானது.
  • மீனில் இருக்கும் வைட்டமின் டி எலும்புகள், பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவும். தினமும் ஏதாவதொரு மீன் சாப் பிடுவதன் மூலம் வைட்டமின் டி சத்துக்களின் தேவையை பூர்த்தி செய்துவிடலாம்.
  • மீன் சாப்பிடுவது மன ஆரோக்கியத்திற்கும் நல்லது. மனச்சோர்வு, மன அழுத்தத்திற்கு ஆளாகுபவர்கள் தினமும் மீன் சாப்பிட்டு
  • வரலாம். மீனில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி போன்றவை மனநல பிரச்சினைகளை தடுக்க உதவும்.
  • மீனில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை குறைப்பதோடு அவை சேருவதையும்
  • தடுக்கும். முடக்குவாதத்தில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியை குறைப்பதற்கு மீன் உணவுகளை சாப்பிட வேண்டும்.
  • மீன் சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். ஆழ்ந்த தூக்கத்தை வரவழைக்கும். சருமத்தின் ஆரோக்கியத்திற்கும்
  • உதவும். தினமும் மீன் சாப்பிடுகிறவர்கள் அளவுக்கு அதிகமாக அதனை சாப்பிடக்கூடாது.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *