Posted in மருத்துவம்

முகப்பருவை நீக்கும் வழிகள்

முகப்பருவை நீக்கும் வழிகள்

முகப்பருக்கள் வராமல் தவிர்ப்பதற்கு சரும ஆரோக்கியத்துக்கு ஏற்ற உணவுகளை உட்கொள்வது அவசியமானது.

பருவம் அடைந்த பெண்களிடையே தற்போது பரவலாகக் காணப்படும் பிரச்சினை, கருப்பை நீர்க்கட்டி. டீன்-ஏஜ் முதல் 45 வயது வரை உள்ள பெண்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்படும் ஹார்மோன் கோளாறு

இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இதன் மூலம், கருமுட்டைகள் முதிர்ந்து வெளிவராமல், திரவங்கள் அடங்கிய குமிழ்களாக கருமுட்டைப் பையில் தங்கிவிடும்.

இதனால் உடலில் பல பிரச்சினைகள் உண்டாகும். அவற்றுள் முக்கியமானது முகப்பருக்கள் வருவது.

தோலுக்கு அடியில் அமைந்துள்ள ‘செபேஷியஸ்’ சுரப்பியில் இருந்து ‘சீபம்’ எனும் எண்ணெய்ப் பொருள் சுரக்கிறது. தோலின் மினுமினுப்புத் தன்மைக்கு இதுவே காரணம். மாசு மற்றும் தூசு போன்றவை இதில் படிந்து, சருமத் துளைகளை அடைத்துக்

கொள்ளும்போது ‘சீபம்’ வெளிவர முடியாமல் தேங்கி நிற்கும். இதனால் பாக்டீரியா போன்ற கிருமிகளால் தொற்று ஏற்பட்டு சருமத்தில் பருக்கள் உருவாகின்றன.

இவ்வாறு உண்டாகும் முகப்பருக்களை நீக்குவதற்கான வழிகளைப் பற்றி பார்க்கலாம்.

முகப்பருக்கள் வராமல் தவிர்ப்பதற்கு சரும ஆரோக்கியத்துக்கு ஏற்ற உணவுகளை உட்கொள்வது அவசியமானது. தக்காளி, பிராக்கோலி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கீரை

வகைகள், மீன், எலுமிச்சைப் பழம் போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கும்போது சருமம் வறண்டு போகாமல் நீரேற்றத்துடன் இருக்கும்.

கிரீன் டீ குடிப்பதன் மூலம் உடல் எடை குறைவதோடு, முகப்பரு பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும். கிரீன் டீயில் இருக்கும் ‘பாலிபீனால்’ எனும் மூலக்கூறு, கிருமித்தொற்றுக்களை அழிக்கும் தன்மை கொண்டது. இது முகப்பருக்கள் உண்டாவதைத் தடுக்கும்.

தேனில் உள்ள பொருட்கள் பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை கொண்டவை. இரவில் உறங்கச் செல்வதற்கு முன்பு, சில சொட்டு தேனை முகத்தில் தடவி காலையில் குளிர்ந்த

முகப்பருவை நீக்கும் வழிகள்

நீரில் முகத்தை கழுவலாம். பருவினால் முகத்தில் ஏற்படும் வீக்கத்தை தடுக்கக்கூடிய ஆற்றல் தேனிற்கு உண்டு.

வேப்பிலைப் பொடியுடன் மஞ்சள் தூள், சந்தனம் சேர்த்து நீர்விட்டு குழைத்து பருக்களின் மீது பூசி வந்தால் விரைவில் குணமாகும்.

அருகம்புல் பொடி, குப்பைமேனி இலைப்பொடி இரண்டையும் சமஅளவு எடுத்து தண்ணீர் ஊற்றிக் குழைத்து பருக்களின் மீது தடவலாம். தொடர்ந்து ஒரு வாரம் இவ்வாறு செய்து வந்தால் பருக்கள் நீங்கி சருமம் பளிச்சிடும்.

முகப்பருக்களை நீக்குவதற்கு முடிந்தவரை ரசாயனங்களைத் தவிர்த்து, இயற்கை முறைகளைப் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்.

    Posted in மருத்துவம்

    முகப்பரு வந்தால் இதை பண்ணுங்க

    முகப்பரு வந்தால் இதை பண்ணுங்க

    சரியாக நேரத்திற்கு உணவு சாப்பிடவில்லை என்றால் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் உருவாகும். இது முகப்பரு தோன்ற வழிவகுக்கும். எனவே குறிப்பிட்ட நேரத்தில் கொஞ்சமாகவாவது உணவை எடுக்க வேண்டும்.

    முகப்பரு வந்தால் கடைபிடிக்க வேண்டியவை
    முகப்பரு

    • நிறைய தண்ணீர் அருந்துதல் வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு அல்லது ஐந்து லிட்டராவது தண்ணீரை குடிக்க வேண்டும்.
    • ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து முறை வெறும் நீரால் முகம் கழுவுதல் வேண்டும்.
    • முகத்தை கழுவும்போது காலை மற்றும் மாலை நேரத்தில் மட்டும் ரோஸ் வாட்டரில் முகம் கழுவினால் சருமத்தில் உண்டான சூடு குறைந்து குளிர்ச்சி கிடைக்கும்.
    • ஜெல் பேஸ், ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்துதல் வேண்டும்.
    • பயத்தம் பருப்பு அல்லது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் குளியல் பொடி கொண்டும் முகத்தைக் கழுவலாம்.
    • வெயில் நேரத்தில் வெளியில் செல்லும் போது முகத்தை மூடி வெயில் நமது சருமத்தை நேரடியாகத் தாக்காதவாறு பாதுகாப்பாகச் செல்ல வேண்டும்.
    • வெளியில் செல்லும்போது சூரிய ஒளி நேரடியாகத் தாக்காதவாறு சன் க்ரீம்களை பயன்படுத்தலாம். இது சருமத்தை சற்று பாதுகாக்கும்.
    • கைபேசிகள் வழியாக வெளியேறும் ரேஷர் கதிர்கள் முகத்தை தாக்கும் தன்மை கொண்டது. எனவே கைபேசி பயன்பாட்டை குறைப்பதுடன், தூங்கும்போது அருகில் வைப்பதை தவிர்த்தல் வேண்டும்.
    • சாலிட்டிரிக் ஆயில் அல்லது டீ ட்ரீ ஆயில் உள்ள ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்தினால் முகப்பரு கட்டுப்பாட்டுக்குள் வரும்.
    • முகப்பரு வந்தால் இதை பண்ணுங்க
    • ஆலுவேரா சருமத்திற்கு மிகவும் உகந்தது. ஆலுவேரா ஜெல்லை நன்றாக மசித்து அத்துடன் கஸ்தூரி மஞ்சள் அரை ஸ்பூன் இணைத்து முகத்தில் பேக் போடலாம்.
    • ஆலுவேராவில் உள்ள ஜெல் சருமத்தில் உள்ள எண்ணைத் தன்மையை இழுப்பதுடன், கஸ்தூரி மஞ்சள் முகப்பருவை கட்டுப்படுத்தும்.
    • வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து இரண்டையும் அரைத்து, அத்துடன் வெந்தயம் எசன்ஸ் சேர்த்து முகத்தில் மாஸ்க் போடலாம். இதுவும் முகப்பருவை கட்டுப்படுத்தும்.
    • அதிகமாக பழம் மற்றும் பழச்சாறுகளை உணவாக எடுக்கலாம். காய்கறிகளையும் அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்.
    • சரியாக நேரத்திற்கு உணவு சாப்பிடவில்லை என்றால் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் உருவாகும். இது முகப்பரு தோன்ற வழிவகுக்கும்.
    • எனவே குறிப்பிட்ட நேரத்தில் கொஞ்சமாகவாவது உணவை எடுக்க வேண்டும்.
      Posted in மருத்துவம்

      மலச்சிக்கல் முகப்பருக்கள் வராமல் தடுக்க இதை சாப்பிடுங்க

      மலச்சிக்கல் முகப்பருக்கள் வராமல் தடுக்க இதை சாப்பிடுங்க

      மலச்சிக்கல் முகப்பருக்கள் தோன்ற முக்கியக் காரணம் என்பதால், மலச்சிக்கல் வராமல் தடுக்க கொய்யா, கீரைகள், தக்காளி, கேரட், வெண்டைக்காய் முதலியவை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

      தினமும் ஒரு ஆரஞ்சு பழம் அல்லது ஒரு க்ளாஸ் ஆரஞ்சு ஜூஸ் பருகலாம். இது உங்கள் சருமத்தில் உள்ள நச்சுக்களை சுத்தம் செய்ய உதவுகிறது.

      பருப்புகள்:

      பாதாம், அக்ரூட் பருப்புகள், முந்திரி, பிஸ்தா ஆகிய அனைத்தும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டிருக்கின்றன.

      அவை ஆரோக்கியமான கொழுப்புகளாகும். எனவே அது தோல் அடுக்குகளில் தேங்கியுள்ள ஆரோக்கியமற்ற எண்ணெய்களை அகற்றுவத்தால் உங்களை சூடாக வைத்திருக்கும்.

      பச்சை காய்கறிகள்:

      கீரை, முட்டைக்கோஸ், வெந்தயம், கடுகு போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துகொள்ளுங்கள். பின்பு உங்கள் சருமத்தில் ஏற்படும் அதீத மாற்றங்கள் உங்களுக்கே வியப்பை ஏற்படுத்தும்.

      பீன்ஸ்:

      துத்தநாகம் பெரும்பாலும் முகப்பருவிற்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் சருமத்திற்கு இயற்கையாகவே இது பயனளிக்கிறது.

      உருளைக்கிழங்கு மற்றும் கேரட்:

      இவற்றில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளதால் வியர்வை சுரப்பிகளை சுருக்கவும், துளை அளவைக் குறைக்கவும், பாக்டீரியா தொற்றுகளைக் குறைக்கவும் உதவுகின்றன.

      கொழுப்பு, அயோடின், புரோமைடு போன்ற சத்துக்கள் அதிகம் கலந்த உணவுப் பொருள்களை அளவோடு சாப்பிட வேண்டும். மேலும் எண்ணெய் பொருள்கள் , எண்ணெயில் பொறித்த உணவுப் பொருள்களை உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

      மலச்சிக்கல் முகப்பருக்கள் வராமல் தடுக்க இதை சாப்பிடுங்க

      கொழுப்பு மிகுந்த பொருள்கள் சாக்லேட், ஐஸ்கிரீம், வெண்ணெய் ஆகியவற்றை அளவோடு சாப்பிடுவது நல்லது.

      இரவு படுக்கைக்குப் போகும் போது,வெந்நீர் பருக வேண்டும். காலையில் எழுந்ததும்,பல் துலக்கி குளிர்ந்த நீரைப் பருகவும். இவ்வாறு செய்வதால் உடல் உஷ்ணம் குறைந்து முகப்பருவை வராமல் தடுக்கலாம்.

      காரம், உப்பு, புளி, மாமிச உணவுகள், மசாலாப் பொருள்கள் முதலியவற்றை அளவோடு சேர்த்துக் கொள்வது நல்லது. மலச்சிக்கல் முகப்பருக்கள் தோன்ற முக்கியக் காரணம் என்பதால்,

      மலச்சிக்கல் வராமல் தடுக்க கொய்யா, கீரைகள், தக்காளி, கேரட், வெண்டைக்காய் முதலியவை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. குறிப்பாக நார்ச்சத்து அதிகமுள்ள பொருளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

        Posted in மருத்துவம்

        முகப்பரு தழும்புகளை போக்க இதை பண்ணுங்க

        முகப்பரு தழும்புகளை போக்க இதை பண்ணுங்க

        முகப்பருக்கள் வந்தாலே முகத்தின் அழகு பொலிவிழந்து போய்விடும். சிலருக்கு பருக்கள் இருந்த இடங்களில் தழும்புகள்,

        புள்ளிகள் மறையாமல் இருக்கும். சில சமயங்களில் வலி, வேதனைகளை ஏற்படுத்தும். முக அழகை கெடுக்கும் முகப்பரு

        தழும்புகளை எளிய வீட்டு வைத்தியங்கள் கொண்டே போக்கிவிடலாம்.

        • எலுமிச்சை சாறை பஞ்சுவில் ஒற்றி தழும்பு இருக்கும் இடத்தில் தடவிவிட்டு சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வரலாம்
        • . மேலும் எலுமிச்சை சாறுடன் சிறிதளவு பால், பாதாம் எண்ணெய், தேன் கலந்து குழைத்து முகப்பரு தழும்புகள் இருக்கும் இடத்தில்
        • தினமும் தடவி வந்தால் ஒரு வாரத்தில் நல்ல மாற்றத்தை காணலாம்.
        • வெந்தயத்தையும் முகப்பரு தழும்பை போக்க உபயோகிக்கலாம். சிறிதளவு வெந்தயத்தை நீரில் போட்டு கொதிக்கவைத்து, அந்த
        • நீரை பஞ்சுவில் முக்கி தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவி வர வேண்டும். தினமும் இவ்வாறு செய்து வந்தால் தழும்புகள்
        • விரைவில் மறைந்துவிடும்.
        • சந்தனமும் தழும்புகளை போக்கும் தன்மை கொண்டது.
        • முகப்பரு தழும்புகளை போக்க இதை பண்ணுங்க
        • சந்தனக்கட்டையை இரவில் நீரில் ஊறவைத்துவிட்டு காலையில் நன்றாக உரசி, பஞ்சுவில் முக்கி தழும்புகள் இருக்கும் இடத்தில்
        • தடவ வேண்டும். தினமும் இருமுறை செய்து வந்தால் ஒருவாரத்தில் தழும்புகள் மறைய தொடங்கிவிடும்.
        • சந்தன கட்டையில் ரோஸ் வாட்டர் ஊற்றி தேய்த்து அந்த விழுதை இரவில் தூங்க செல்லும் முன்பு தழும்புகள் இருக்கும் இடத்தில்
        • தடவிவிட்டு காலையில் எழுந்ததும் முகத்தை கழுவிவிடலாம். தினமும் இவ்வாறு செய்துவந்தால் தழும்புகள் மறைந்துவிடும்.
        • ஆப்பிள் சிடேர் வினிகரையும் உபயோகிக்கலாம். சிறிதளவு ஆப்பிள் சிடேர் வினிகருடன் அதே அளவு நீர் கலந்து பஞ்சுவில்
        • முக்கி தழும்புகளில் தடவி வரலாம்.
        • கற்றாழை ஜெல்லையும் தழும்புகள் இருக்கும் இடத்தில்
        • தடவிவிட்டு அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம்.
        • தொடர்ந்து கற்றாழை ஜெல்லை பயன்படுத்தி வந்தால் தழும்புகள் விரைவாகவே மறைந்துவிடும்.