Category: மருத்துவம்
மருத்துவம் உடலில் ஏற்படும் நோய்கள் எவ்வாறு பரவுகிறது ,அதனை எவ்விதம் தடுப்பது என்பது தொடர்பான குறிப்புக்கள் இந்த மருத்துவம் பகுதியில் பகிர படுகிறது
கழுத்தை சுற்றி கருப்பாக இருக்கா அப்ப இத போடுங்க
கழுத்தை சுற்றி கருப்பாக இருக்கா? அப்ப இத போடுங்க
சுகாதாரத்தில் அக்கறை செலுத்தவில்லை என்றாலும் அல்லது ஒவ்வாமை காரணமாகவும் கழுத்தை சுற்றிலும் கருமை வரலாம். அப்படி வந்துவிட்டால் எப்படி நீக்குவது என்று பார்க்கலாம்.
கற்றாழையில் சதையை மட்டும் தனியாக எடுத்து தினமும் முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து ஊற வையுங்கள். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் சரியாகும்.
ஆப்பிள் சிடர் வினிகரில் பஞ்சை நனைத்து கழுத்தை சுற்றிலும் தடவி வர கருமை நீங்கும்.
பாதாம் எண்ணெயை இரவு தூங்கும் முன் கழுத்தை சுற்றிலும் தேய்த்து மசாஜ் செய்துவிட்டு அப்படியே தூங்கிவிடுங்கள். மறுநாள் காலை சுடுதண்ணீரில் கழுவிவிடுங்கள். தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும்.
தயிரை கழுத்தை சுற்றிலும் தடவிக்கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவிவிடுங்கள். தினமும் செய்ய கருமை நீங்கும்.
கருமை நிறத்தை நீக்குவதில் உருளைக்கிழங்கு சாறு ஆற்றல் மிக்கது. எனவே உருளைக்கிழங்கு சாறை கழுத்தை சுற்றிலும் தேய்த்து 20 நிமிடங்கள் ஊற வையுங்கள். பின் தண்ணீரில் கழுவிவிடுங்கள்.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி
- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை
- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது
- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி
புகைப்பழக்கம் மாரடைப்பை ஏற்படுத்தும்
புகைப்பழக்கம் மாரடைப்பை ஏற்படுத்தும்
புகைப்பழக்கம் மாரடைப்பை ஏற்படுத்தும் என்றாலும், பெண்களின் உடலமைப்பு காரணமாக அவர்கள் எளிதாக மாரடைப்பு, ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
காலமாற்றம், நவீன வாழ்க்கை, பெண்களும் வேலைக்கு செல்லுதல், ஐ.டி வாழ்க்கைமுறை போன்ற காரணங்களால் பெண்களிடையேயும் புகைப்பிடிக்கும் பழக்கம் நகரங்களில் அதிகரித்துள்ளது.
புகைப்பழக்கம் மாரடைப்பை ஏற்படுத்தும் என்றாலும், பெண்களின் உடலமைப்பு காரணமாக அவர்கள் எளிதாக மாரடைப்பு, ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
ஆய்வினை மேற்கொண்டவர்கள் 40 முதல் 69 வயதுள்ள 5 லட்சம் பேரை ஆய்வுக்குட்படுத்தினர். இதயம் மற்றும் ரத்த நாள நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லாததை தொடக்கத்தில்
உறுதிப்படுத்திக் கொண்டனர். இவர்களை 7 வருடங்கள் வரை தொடர்ந்து கண்காணித்ததில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மாரடைப்பு முதல் தடவை ஏற்பட்டது தெரிய வந்தது. அவர்களில், 29%-வினர் பெண்களாக இருந்தனர்.
புகைப்பழக்கம் இல்லாத ஆண்கள், அப்பழக்கம் உடைய ஆண்கள் ஆகியோரை ஒப்பிட்டுப் பார்க்கும்போது சிகரெட் பழக்கம் உடைய ஆண்களுக்கு குறைந்தது 2 தடவையாது மாரடைப்பு
வரும் அபாயம் இருப்பது தெரிய வந்தது. அதேவேளையில், பெண்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, புகைப்பழக்கம் அற்ற மகளிரைவிட, சிகரெட் பழக்கம் உள்ள பெண்களுக்கு இது 3 தடவையாக அதிகமாக இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த ஆய்வின் மூலம், புகைப்பிடித்தல் காரணமாக ஆண்களைவிட பெண்களுக்கு 83% உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பதும், டைப்-1 நீரிழிவு நோயின் தாக்கம் ஆடவரைவிட பெண்களுக்கு 3
மடங்கு அதிகமாகவும், டைப்-2 நீரிழிவு பாதிப்பு, மகளிருக்கு ஆண்களைவிட 47%-ம் அதிகமாக இருப்பதும் தெரிய வந்தது.
‘‘பெண்களிடம் அதிகரித்து வரும் மாரடைப்பு குறித்து இதன் மூலம் புரிந்துகொள்ள முடிந்தது. இதன்மூலம் சிகரெட் பழக்கத்தை நிறுத்துவதற்கு உதவ முடியும் என்பதையும் வலியுறுத்துவதாக
இந்த ஆய்வு அமைந்தது’ என்கிறார்கள் இதுபற்றி கருத்து தெரிவித்திருக்கும் ஆய்வுக்குழுவினர். புதுமையான இந்த ஆய்வு முடிவுகள் பிரிட்டனில் இருந்து வெளியாகும் BMJ என்ற இதழில் வெளியாகின.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி
- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை
- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது
- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி
பெண்களிடம் இருக்கும் ஆபத்தான பழக்கங்கள்
பெண்களிடம் இருக்கும் ஆபத்தான பழக்கங்கள்
நீரின்றி அமையாது உலகு என்பது போல பெண்ணின்றி அமையாது குடும்பம்.ஒரு குடும்பம் சிறந்து விளங்க வேண்டுமென்றால் அந்த குடும்பத்தின் பெண் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
பொதுவாகவே பெண் என்பவள் மற்றவர்களை கவனித்துக்கொண்டு தன் உடல் நலத்தையும் ஆரோக்கியத்தையும் எப்பொழுதுமே கண்டுகொள்வதில்லை.
அதிலும் முக்கியமாக இந்த 5 பழக்கங்களை அவர்கள் கண்டுகொள்வதே இல்லை. அதைப்பற்றி என்ன என்பதனை பார்ப்போம்.
1.வேலைச்சுமையால் எப்பொழுதும் வேலையையே நினைத்துக்கொண்டு இருப்பதாலும் அவர்கள் நீர் அருந்துவதை மறந்து விடுகின்றனர்.ஆண்களைக் காட்டிலும் பெண்கள் மிகக் குறைவான நீரை
அருந்துகின்றனர் என்று ஒரு ஆய்வு கூறுகின்றது. தாகத்தின் போது நம் உடலுக்கு ஏற்ப போதுமான நீரை அவ்வப்போது குடித்து விடவேண்டும்.
- வேலைக்கு செல்லும் பெண்கள் ஆகட்டும் வீட்டில் இருக்கும் பெண்கள் ஆகட்டும் காலை உணவு என்பதனை நேரத்திற்கு பெண்கள் அதிகம் எடுத்துக்கொள்வது இல்லை.
- இதனால் அவர்கள் பலவிதமான உடல் சார்ந்த பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.முடிந்த அளவு காலை உணவை நேரத்திற்கு எடுத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
பெண்களிடம் இருக்கும் ஆபத்தான பழக்கங்கள்
- நேரமின்மையால் உடலுக்குத் தேவையான உடற்பயிற்சி பெண்கள் செய்வது இல்லை. வீட்டு வேலை செய்வதே உடற்பயிற்சி தானே என்றும் கேட்கும் பெண்களுக்கு, அது உடற்பயிற்சி அல்ல
- . வீட்டு வேலையினால் உங்க கலோரிகள் எரிக்கப்படுவது இல்லை. எனவே பெண்கள் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சியை மேற்கொள்வது மிக மிக அவசியமாகிறது.இது உங்களின் ஆரோக்கியத்திற்கு அவசியம் ஆகிறது.
- பெண்கள் நொறுக்கு தீனி அதிகமாக சாப்பிடுவது வழக்கமாக இருக்கும். அதிலும் குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் நொறுக்கு தீனியை வாயில் போட்டு மென்று கொண்டே இருப்பர்.
- இதனால் உடலில் கொழுப்பு அதிகரிப்பது போன்ற பல உடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- பெண்களைப் பொறுத்தமட்டில் ஒரே மாதிரியான உணவு வகைகளை எடுத்துக் கொள்வர். நியூட்ரிஷன் சார்ந்த பழவகைகளை அவர்கள் பெரும்பாலும் எடுத்துக்கொள்வது இல்லை.
- ஆனால் பெண்கள் ஆண்களைக் காட்டிலும் பழங்களை அதிகம் உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் மாதவிடாயின் போது உதிரப்போக்கு ஏற்பட்டு மிகவும் வலிமை இழந்து போகாமல் இருக்க நீங்கள் உண்ணும் பழ வகைகள் உங்களை பேணிக்காக்கும்.
பெண்களே நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் உங்கள் குடும்பம் ஆரோக்கியமாக இருக்கும். எனவே உங்கள் வாழ்வில் இந்த அறிந்து பழக்கங்களை கட்டாயமாக்க முயற்சி செய்யுங்கள்.
பெண்களை அதிகம் பாதிக்கும் வெள்ளைப்படுதல்
பெண்களை அதிகம் பாதிக்கும் வெள்ளைப்படுதல்
பருவம் அடைந்த பெண்களின் மாதவிலக்கு நாட்களுக்கு முன்னதாகவும், கருவுற்றிருக்கும் சமயத்திலும் வெள்ளைப்படுதல் பிரச்சனை ஏற்படுகிறது. பெரும் நோயாக இல்லாவிட்டாலும் சரிவரக்கவனிக்காவிட்டால் கர்ப்பப்பையை இழக்கும் அபாயம் கூட ஏற்படக்கூடும்.
பெண்களை அதிகம் பாதிக்கும் வெள்ளைப்படுதல்…அலட்சியம் வேண்டாம்….
வெள்ளைப்படுதல்
இன்றைய சூழலில் பெண்கள் அதிகமாக சந்திக்கும் பிரச்சனை வெள்ளைப்படுதல் ஆகும்.
பருவம் அடைந்த பெண்களின் மாதவிலக்கு நாட்களுக்கு முன்னதாகவும், கருவுற்றிருக்கும் சமயத்திலும் வெள்ளைப்படுதல் பிரச்சனை ஏற்படுகிறது. பெரும் நோயாக இல்லாவிட்டாலும்
சரிவரக்கவனிக்காவிட்டால் கர்ப்பப்பையை இழக்கும் அபாயம் கூட ஏற்படக்கூடும். 15 வயது முதல் 45 வயது வரையிலான பெண்களே இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள்.
பெண்கள் பிறப்புறுப்பில் அமிலத்தன்மை கொண்ட நிறமற்ற லேசான பிசுபிசுப்பு தன்மை கொண்ட திரவம் இயற்கையாக சுரந்து கிருமித் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும்.
தொற்று ஏற்பட்டால் அந்த பகுதியில் சுரக்கும் திரவத்தின் அமிலத்தன்மை, காரத்தன்மையாக மாறும்.
பெண்களை அதிகம் பாதிக்கும் வெள்ளைப்படுதல்
அதனால் வெள்ளை, சிவப்பு, மஞ்சள், பச்சை என அந்த திரவம் வெளிப்படும். சிலருக்கு பிறப்புறுப்பில் அரிப்பும், துர்நாற்றமும் கூட ஏற்படலாம்.
இவை ஒரு வாரத்திற்கு மேல் நீடித்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
தவறான உணவுப்பழக்கங்கள், கெட்டுப்போன உணவு பொருட்களை உண்ணுதல், சுகாதாரமற்ற உள்ளாடைகள் அணிதல், சுயஇன்பம் பழக்கம், மாதவிடாயை தூண்டும் மருந்துகளை உண்ணுதல், ஊசைச்சதை, ரத்தசோகை, அதிக உடல் சூடு, உடலுறவில் அடிக்கடி ஈடுபடுதல் ஆகியவற்றால்
இந்த பிரச்சனை ஏற்படலாம். மேலும் கோபம், வருத்தம், வெறுப்பு, மன உளைச்சல், தூக்கமின்மை போன்றவையும் காரணமாக இருக்கக்கூடும்.
சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழிப்பது, பிறப்புறுப்பை சுத்தமாக பராமரிக்காதது ஆகியவையும் முக்கிய காரணங்கள்.
மாதவிடாய் காலத்திலும், உடலுறவுக்கு பின்பும் பிறப்புறுப்பை சுத்தமாக பராமரிப்பது முக்கியம். பருத்தி துணிகளால் ஆன உள்ளாடைகளை அணிவது சிறந்தது. நீண்ட நாட்களாக கருத்தடை
சிகிச்சை பெறுபவர்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படலாம். கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துபவர்கள் மருந்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.
சித்த மருத்துவர் ஆலோசனை பெற்று கீழா நெல்லியை அரைத்து பசும்பாலில் கலந்து 7 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
உளுந்து, பார்லி இரண்டையும் தலா 100 கிராம் எடுத்து கொண்டு மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் தலா 10 கிராம் அளவு சேர்த்து பொடியாக அரைத்து கஞ்சி காய்ச்சி தினமும் ஒருமுறை குடித்து வரலாம்.
தினமும் எலுமிச்சை சாத்துக்குடி, ஆரஞ்சு ஆகிய ஏதேனும் ஒன்றின் ஜூஸ் அருந்தலாம். அவற்றில் உள்ள வைட்டமின் டி, ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகியவை பாக்டீரியா வளர்ச்சியை தடுப்பதுடன், அந்தரங்க உறுப்பில் ஏற்படும் துர்நாற்றதையும் அகற்றி விடும்.
வீட்டு வைத்தியத்தை மேற்கொண்டாலும் கூட வெள்ளைப்படுதலுக்கான காரணத்தை மருத்துவபரிசோதனை மூலம் கண்டறிந்து தகுந்த சிகிச்சை பெறுவதே பல சிக்கல்களை தடுக்கும்
.
பிரசவத்துக்கு பிறகான தளர்ந்த மார்பகங்கள்
பிரசவத்துக்கு பிறகான தளர்ந்த மார்பகங்கள்
பிரசவத்துக்கு பிறகு மார்பகங்கள் தளரத்தான் செய்யும். உடல் எடை அதிகரித்த பின், வயதாக வயதாக மார்பகங்கள் (Sagging Breast) தளர்வடையும். மார்பகங்கள் தளர்வடையாமல் இருக்க சில வழிகள் உள்ளன. அதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
மார்பகங்கள் தளர்வடைய நிறைய காரணங்கள் உள்ளன. வயதாக, வயதாக மார்பகங்களை தாங்கும் தசைகள் பலவீனமாகும்.
பிரசவத்துக்கு பின் குழந்தைகளுக்கான மார்பகங்களில் பால் சுரக்கும். அப்போது மார்பகங்கள் பெரிதாகின்றன.
குழந்தைக்கு நீங்கள் தாய்ப்பால் தருவதை
நிறுத்திய பிறகு, பால் சுரப்பது நிற்கும். இப்போதும் மார்பகங்கள் தளர்வடையும். உடல் எடையை குறைக்க முயற்சித்தால் மார்பகங்களை ஓரளவுக்கு தளர்வடையாமல் தடுக்கலாம். கர்ப்பமான
பின் மார்பகங்களின் அளவு பெரிசாகும் பிரசவத்துக்கு பின் பால் ஊட்டுவதை நிறுத்திய பின் மார்பகங்களின் அளவில் மாற்றம் நடக்கும். இதனால் சருமத்தில் உள்ள தசைகள் தளர்வடைகின்றன.
பிரசவத்துக்கு பிறகான தளர்ந்த மார்பகங்கள்
உடல் எடையை குறைக்க திட்டமிட்டால் மாதம் 2-3 கிலோ என மெதுவாக, நிதானமாக பயிற்சி செய்து உடல் எடையை குறைக்கலாம்.
ஒரே மாதத்தில் அதிக ஒர்க் அவுட் செய்து 5 அல்லது 5 + கிலோக்கு மேல் குறைக்க முயற்சி செய்தால் மார்பகங்கள் தளர்ந்துவிடும். சிகரெட் பிடிக்கும்
பழக்கம் இருப்பவர்களுக்கு, விரைவில் மார்பகங்கள் தளரும். புற்றுநோய் வரும் வாய்ப்புகளும் அதிகம். அதிக உடல் எடை இருந்தால் அதைக் குறைக்க பாருங்கள்.
அதிக குண்டாக இருந்தால், பெரிய மார்பகங்களாக மாறி கொண்டே வரும். தளர்வதும் விரைவில் ஏற்படும். சரியான அளவில் பிராவை அணிவது நல்லது. இரவில் தூங்கும்போது மட்டும் பிராவை தவிர்க்கலாம்.
தாய்மார்களின் மார்பகங்கள் தளராமல் இருக்க இயற்கை வழிகள்…
புஜங்காசனா
புஜங்கா என்றால் கோப்ரா (பாம்பு). பாம்பு படம் எடுத்தால் எப்படி இருக்குமோ அதுபோல பார்ப்பதற்கு தெரியும் இந்த ஆசனத்தின் செயல்முறை.
குப்புறப் படுத்துக்கொள்ளுங்கள். கால்கள் சரியாக நீட்டி இருக்கட்டும். கைகள் பக்கவாட்டில் இருக்க வேண்டும். உங்களது கைகளை தோள்பட்டைக்கு அருகில் கொண்டு வாருங்கள்.
அப்படியே மெதுவாக மூச்சு இழுத்தபடி தலை, தோள்பட்டை, மார்பகங்கள், நெஞ்சு, வயிறு பகுதியை தூக்குங்கள். இடுப்பு, தொடை, கால்கள் தரையிலே பதிந்திருக்க வேண்டும். 10 நொடி
மூச்சை ஹோல்ட் செய்த பின் பிறகு மெதுவாக மூச்சைவிட்டபடி முன்னே இருந்த அதே நிலையில் கீழே படுத்துக் கொள்ளுங்கள்.
இதுபோல 3 முறை செய்யுங்கள்.
இந்த ஆசனம் தளர்ந்த மார்பகங்களை டைட்டாகும். குறைந்தது 3-4 மாதங்கள் வரை சரியாக செய்து வந்தால் பலன் கிடைக்கும்.
ஐஸ் மசாஜ்
ஐஸ் மசாஜ் செய்தால் தளர்ந்த தசைகள் மீண்டும் டைட்டாக உதவும். 2 ஐஸ் கட்டிகளை துணியில் வைத்து, கட்டி, ஒரு மார்பகத்துக்கு ஒரு நிமிடம் வரை மசாஜ் செய்யுங்கள்.
அதற்கு மேல் செய்தால், மறுத்துபோகிவிடும். எனவே ஒரு நிமிடம் போதும். சர்குலர் மோஷனாக மசாஜ் செய்ய வேண்டும்.
உலர்ந்த, சாஃப்டான துணியால் துடைத்து விட்டு, சரியான அளவில் இருக்கும் பிராவை அணிந்து கொள்ளுங்கள். பின்னே சாய்ந்த சேர் அல்லது தலையணை வைத்தோ 30 நிமிடங்களுக்கு சாய்ந்து கொள்ளுங்கள்.
இதுபோல தினமும் 2 முறை செய்யுங்கள். 3 மாதம் கழித்து உங்களுக்கு மாற்றம் தெரியும்.
ஆலிவ் எண்ணெய்
உள்ளங்கையில் தேவையான ஆலிவ் எண்ணெயை ஊற்றிக் கொள்ளுங்கள். நன்றாக உள்ளங்கையை தேய்த்துக் கொள்ளுங்கள்.
இப்போது கீழிருந்து மேலாக 15 நிமிடங்கள் வரை
மிதமாக மசாஜ் செய்யுங்கள். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். செல்களை ரிப்பேர் செய்யும். வாரத்துக்கு நான்கு முறை இந்த மசாஜை செய்யலாம்.
ஆலிவ் எண்ணெய்க்கு பதிலாக பாதாம் எண்ணெய், அவகேடோ எண்ணெய் கூட பயன்படுத்தலாம்.
வெள்ளை முட்டை மாஸ்க்
ஒரு வெள்ளை முட்டையில், வெங்காய ஜூஸ் கலந்து அதை மார்பகங்களில் தடவி 30 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். வாரம் இருமுறை செய்து வரலாம்.
நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை…
அதிகமான டயட்டில் இருக்கவே கூடாது.
உணவை சாப்பிடாமல் தவிர்க்க கூடாது.
நேரம் கிடைக்கும் நீச்சல் அடிக்கலாம்.
ஜாக்கிங், ரன்னிங் போன்றவை செய்ய வேண்டாம்.
வாக்கிங் சென்றால் சரியான டைட்டான பிராவை அணிந்து கொள்ளுங்கள்.
எப்போதும் நேராக நிமிர்ந்து உட்காருங்கள்.
கூன்போட்டு நடக்க வேண்டாம்.
ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிடுங்கள்.
பிராவை சரியான அளவில் அணிவது மிக மிக முக்கியம்.
முடி உதிர்தலை கட்டுப்படுத்த-இதை சாப்பிடுங்க
முடி உதிர்தலை கட்டுப்படுத்த-இதை சாப்பிடுங்க
முடியின் ஆரோக்கியத்தை கொண்டே அவரது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை தீர்மானித்துவிடலாம். அதனால் முடிஉதிர்வு பிரச்சினையை எதிர்கொண்டால் உடனே அதற்கு தீர்வு காண்பதற்கு முயற்சிக்க வேண்டும்.
மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, கர்ப்பம், சூரிய ஒளியில் அதிக நேரம் செலவிடுவது, ரத்தசோகை, ஹைப்போ தைராய்டிசம், வைட்டமின் பி குறைபாடு, ரசாயனம் கலந்த பொருட்களை
கூந்தலுக்கு அதிகம் பயன்படுத்துவது போன்றவை முடி உதிர்வதற்கான பொதுவான காரணங்கள். அதேநேரத்தில் முடியின் ஆரோக்கியத்தை கொண்டே அவரது ஒட்டுமொத்த உடல்
ஆரோக்கியத்தை தீர்மானித்துவிடலாம். அதனால் முடிஉதிர்வு பிரச்சினையை எதிர்கொண்டால் உடனே அதற்கு தீர்வு காண்பதற்கு முயற்சிக்க வேண்டும்.
முடி உதிர்தலை கட்டுப்படுத்தும் உணவுகள்:
உலர்ந்த அத்திப்பழம்: கூந்தல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்துக்கள் அத்திப்பழத்தில் உள்ளன. அவை ரத்த ஓட்டத்தை தூண்டி முடி வளர்ச்சியை விரைவுபடுத்தும்.
அத்திப்பழத்தில் அதிக அளவு கால்சியமும் உள்ளது. இது தலை முடியை உருவாக்கும் கொலாஜன் உருவாகுவதற்கு முக்கிய பங்களிக்கிறது. இரவில் 2-3 உலர்ந்த அத்திப்பழங்களை ஊற
வைத்துவிட்டு காலையில் தண்ணீருடன் சேர்த்து சுவைக்கலாம். இரண்டு மாதங்கள் இவ்வாறு சாப்பிட்டு வந்தால் கூந்தல் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் உருவாகும்.
கருப்பு உலர் திராட்சை: ஊறவைத்த கருப்பு உலர் திராட்சையில் இரும்பு சத்து அதிகம் இருக்கிறது. இது தலையில் ரத்த ஓட்டத்தை சீராக பராமரிப்பதற்கும், மயிர்கால்களின் வளர்ச்சிக்கும்
உதவுகிறது. கருப்பு திராட்சை முடி உதிர்வதை தடுக்கும் சக்திகொண்டது. 7-8 கருப்பு உலர் திராட்சையை இரவு முழுவதும் ஊறவைத்துவிட்டு காலையில் நீரை வடிகட்டிவிட்டு உட்கொள்ளலாம்.
முடி உதிர்தலை கட்டுப்படுத்தும் உணவுகள்
கறிவேப்பிலை: இதில் ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகம் உள்ளன. அவை தலையில் ஈரப்பதத்தை தக்கவைப்பதோடு இறந்த மயிர்கால்களை நீக்கவும் உதவுகின்றன. கருவேப்பிலையில் இருக்கும் பீட்டோ கரோட்டின் மற்றும் புரத சத்துக்கள் முடி உதிர்வதை தடுக்கக்கூடியவை.
முடிக்கு வலிமையும் அளிக்கும். கருவேப்பிலை சமையலில் உபயோகிப்பதோடு மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கு முன்பாக 10 கறிவேப்பிலை இலைகளை உட்கொள்வது சிறந்த பலனை தரும்.
பூசணி: பொட்டாசியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் பூசணியில் நிறைந்துள்ளன. அவை கூந்தல் ஆரோக்கியத்திற்கும், முடி வளர்ச்சிக்கும் உதவும்.
முடி உதிர்தலை கட்டுப்படுத்த-இதை சாப்பிடுங்க
கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு துத்தநாகம் உதவும். மேலும் இறக்கும் மயிர்க்கால்களை அகற்றவும், மீண்டும் அதில் வலுவான முடி வளர்ச்சிக்கும் வித்திடும்.
ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் முடி வளர்ச்சியை தூண்டவும் உதவும். பூசணிக்காய் விதைகளை ஊட்டச்சத்துக் களின் புதையல் என்றே ஊட்டச்சத்து நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.
பூசணி விதையை சாப்பிடலாம். குறிப்பாக அளவுக்கு அதிகமாக டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் சுரந்து வழுக்கை நோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் சிறிதளவு பூசணி விதைகளை இரவில் ஊறவைத்து காலையில் உட்கொள்ளலாம்.
முள்ளங்கி : முடி உதிர்தல், முடி பலவீனம், முடி வெடிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு முள்ளங்கி இலைகள் நிவாரணம் தரும். கூந்தலில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்து முடி உதிர்வதற்கான
கேரட் ஜூஸுடன் முள்ளங்கி இலைகளை சேர்த்து பருகலாம்.
சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு அறிந்துகொள்வது எப்படி
சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு அறிந்துகொள்வது எப்படி
உங்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதா, இல்லையா என்பதை கண்டறிவது எப்படி என்று டாக்டர் நந்திதா அருண் விளக்கம் அளித்துள்ளார்.
நமக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதா, இல்லையா என்பது குறித்து மக்களிடையே பல்வேறு சந்தேகங்கள் உள்ளது. இந்த சந்தேகத்திற்கு கிண்டியில் உள்ள டாக்டர்
ஏ.ராமச்சந்திரன் நீரிழிவு மருத்துவமனையில் நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வரும் டாக்டர் நந்திதா அருண் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது,
சர்க்கரை நோயை கண்டறிய டாக்டர் ஏ.ராமச்சந்திரன் நீரிழிவு மருத்துவமனையில் டயாபட்டிக் ரிஸ்க் ஸ்கோர்( Diabetes Risk Score) என்று முறை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முறை மிகவும்
எளிமையானது. இந்த முறையில் இரத்த பரிசோதனை செய்யாமலேயே உங்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதா, இல்லையா என்பதை அறிந்து கொள்ள முடியும்.
சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு அறிந்துகொள்வது எப்படி
முதலாவது முறையில் உங்கள் வயது அடிப்படையில் கணக்கிடப்படும். 2-வது பாரம்பரியம் முறையில் உங்கள் தாய், தந்தை, உடன் பிறந்தவர்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் அதன் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்படும்.
டயாபட்டிக் ரிஸ்க் ஸ்கோர்
3-வது உங்களது BMI அல்லது உடல் எடை கணக்கிடப்படும். 4-வதாக உங்கள் இடுப்பின் அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடப்படும்
5வது உடற்பயிற்சி செய்யாதவர்கள், அதிக நேரம் அமர்ந்தே வேலை செய்பவர்களுக்கு என்ற அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும்.
இந்த மதிப்பெண்களை கூட்டிப்பார்த்தால் வரும் மதிப்பெண் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் இருந்தால் உங்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதா, இல்லையா என்பதை ரத்த பரிசோதனை செய்யாமல் எளிய முறையில் கண்டுபிடித்து விடலாம்.
நோயானது உடலில் பரவாது தடுத்திட உணவு பழக்கம் மற்றும் உட்கொள்ளும் உணவு முறைகளும் முக்கிய அகாரணமாக அமைகிறது
இந்த மதிப்பெண் அதிகமாக இருக்கும் பட்சத்தில் உங்கள் மருந்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளலாம்.
வாய்வுத் தொல்லை வராமல் தடுக்க இதை சாப்பிடுங்க
வாய்வுத் தொல்லை வராமல் தடுக்க இதை சாப்பிடுங்க
உணவில் சேர்த்துக்கொள்ளும் இஞ்சி, பூண்டு உணவு செரிமானமாக உதவுகிறது. வயிற்றுப்போக்கு, வயிறு உப்புசம், வாய்வுத் தொல்லைகள் போன்றவை வராமல் தடுக்கிறது.
வாய்வுத் தொல்லை வராமல் தடுக்கும் சட்னி
பூண்டு இஞ்சி மிளகாய் சட்னி
தேவையான பொருட்கள்
பூண்டு – 12 பற்கள்
இஞ்சி – அரை கப்
காய்ந்த மிளகாய் – 10
உப்பு மற்றும் எண்ணெய் – தேவையான அளவு
புளி – நெல்லிக்காய் அளவு
வெல்லத்துருவல் – அரை டீஸ்பூன்
வாய்வுத் தொல்லை வராமல் தடுக்க இதை சாப்பிடுங்க
கடுகு மற்றும் உளுந்து – தலா 1 டீஸ்பூன்
செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் இஞ்சி, பூண்டு, மிளகாய் போட்டு வதக்கவும்.
இத்துடன் உப்பு, புளி சேர்த்து வதக்கி ஆறவிடவும்.
வதக்கிய பொருட்களுடன் சிறிது நீர், வெல்லத்துருவல் சேர்த்து மிக்சியில் அரைத்து கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து சேர்க்கவும்.
காரசாரமான பூண்டு இஞ்சி மிளகாய் சட்னி ரெடி.
பெண்களே பிறப்புறுப்பில் துர்நாற்றமா
பெண்களே பிறப்புறுப்பில் துர்நாற்றமா
பெண்கள் எப்போதுமே தங்களின் பிறப்புறுப்பை சுத்தமாகவும், துர்நாற்றமின்றியும் வைத்துக் கொள்ளாவிட்டால் அவ்விடத்தில் துர்நாற்றம் மட்டுமின்றி, தொற்றுகளும் ஏற்பட்டு தீவிரமான பிரச்சனையை சந்திக்கக் கூடும்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் சுத்தமாக இருப்பது தான் பிடிக்கும். அப்படி சுத்தம் என்று வரும் போது அதில் அனைத்து உறுப்புகளும் அடங்கும்.
மேலும் பெண்கள் எப்போதுமே தங்களின் பிறப்புறுப்பை சுத்தமாகவும், துர்நாற்றமின்றியும் வைத்துக் கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால், அவ்விடத்தில் துர்நாற்றம் மட்டுமின்றி, தொற்றுகளும் ஏற்பட்டு தீவிரமான பிரச்சனையை சந்திக்கக் கூடும்.
குறிப்பாக பெண்கள் உறவில் ஈடுபடும் போது தன் துணை முகம் சுளிக்காதவாறு தன் மீது எந்த ஒரு துர்நாற்றமும் வரக் கூடாது என்று அதிக சுத்தத்தைப் பின் பற்றுவார்கள்.
இப்படி பிறப்புறுப்பை சுத்தமாகவும், துர்நாற்றமின்றியும் வைத்துக் கொள்ள நிறைய பொருட்கள் கடைகளில் விற்கப்பட்டாலும், அவை சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
பெண்களே பிறப்புறுப்பில் துர்நாற்றமா
ஆகவே எந்த ஒரு பக்க விளையும் ஏற்படாமல் இருக்க, பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள என்ன வழி உள்ளது என்று ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
எலுமிச்சை மிகவும் சிறப்பான துர்நாற்றத்தைப் போக்க உதவும் பொருள். அத்தகைய எலுமிச்சையின் இலையைப் பயன்படுத்தி பிறப்புறுப்பை சுத்தம் செய்தால், துர்நாற்றம் வீசுவது நீங்கும்.
ஏனெனில் எலுமிச்சையின் இலையில் லிமோனின் என்னும் பொருள், பிறப்புறுப்பில் எவ்வித தொற்றுகளும் வராதவாறு நல்ல சிறப்பான பாதுகாப்பை வழங்கும்.
மேலும் எலுமிச்சையின் இலை பிறப்புறுப்பில் pH-ன் அளவை சீராக பராமரித்து, பிறப்புறுப்பை ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் பராமரிக்கும்.
ஆப்பிள் சீடர் வினிகரை பெரிய டப்பில் உள்ள குளிக்கும் நீரில் சிறிது கலந்து, அந்த நீரில் 15 நிமிடம் உட்கார வேண்டும். இதனால் ஆப்பிள் சீடர் வினிகர் பிறப்புறுப்பை சுத்தம் செய்து விடும்.
அதிலும் ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அசிடிக் பிறப்புறுப்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
கற்றாழையின் ஜெல்லை எடுத்து, அதனை 1 கப் நீரில் கலந்து, பின் அந்த நீரைக் கொண்டு பிறப்புறுப்பை கழுவ வேண்டும்.
இப்படி தினமும் செய்து வந்தால், பிறப்புறுப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவது நீங்கும்.
பேக்கிங் சோடாவும் பிறப்புறுப்பில் இருந்து வீசும் துர்நாற்றத்தைப் போக்கும். அதற்கு குளிக்கும் டப்பில் உள்ள நீரில் 1/2 கப் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, அந்த நீரில் 20 நிமிடம் உட்கார்ந்து
வந்தால், பேக்கிங் சோடா உடலின் pH அளவை சீராக்கி, உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவது நீங்கும். தினமும் தயிரை பிறப்புறுப்பில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில்
கழுவ வேண்டும். இதனால் பிறப்புறுப்பில் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு குறைவதோடு. துர்நாற்றமும் குறையும்.
நெல்லிக் காய் சாற்றினை நீரில் கலந்து, அதனைக் கொண்டு பிறப்புறுப்பைக் கழுவ வேண்டும்.
இப்படி தினமும் ஒருமுறை செய்து வந்தால், துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கலாம், வெந்தயம் பெண்களுக்கு மிகவும் நல்லது.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி
- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை
- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது
- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி
உடலில் கொழுப்பு சேர்வதற்கான காரணம் என்ன தெரியுமா
உடலில் கொழுப்பு சேர்வதற்கான காரணம் என்ன தெரியுமா
கர்ப்பகாலத்தில் விரிவடையும் வயிற்று தசை பகுதிகள் சுருங்காமல் இருப்பது கொழுப்பு சேர்வதற்கு காரணமாகிவிடுகிறது. அதிகப்படியான கொழுப்பை குறைப்பதற்கான எளிய வழிமுறைகள்!
பெரும்பாலான பெண்களுக்கு குழந்தை பிறந்ததும் வயிறு பெரிதாகிவிடுகிறது. வயிற்றை சுற்றிலும் கொழுப்பு படிவதே அதற்கு காரணம். இது ‘பேபி கொழுப்பு’ என்று அழைக்கப்படுகிறது.
கர்ப்பகாலத்தில் விரிவடையும் வயிற்று தசை பகுதிகள் சுருங்காமல் இருப்பது கொழுப்பு சேர்வதற்கு காரணமாகிவிடுகிறது. அதிகப்படியான கொழுப்பை குறைப்பதற்கான எளிய வழிமுறைகள்!
தூக்கம்: 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களை 16 ஆண்டுகளாக கண்காணித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 5 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களின் உடல் எடை அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தூக்கம் உள்ளுறுப்புகளில் சேர்ந்திருக்கும் கொழுப்புகளுடன் தொடர்புடையது என்பதும் தெரியவந்துள்ளது.
உடல் பருமன், கொழுப்பு பிரச்சினையை தவிர்ப்பதற்கு 7 மணி நேர தூக்கம் அவசியமானது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உடலில் கொழுப்பு சேர்வதற்கான காரணம் என்ன தெரியுமா
புரோபயாடிக் பயன்பாடு: புரோபயாடிக்குகள் நல்ல பாக்டீரியாக்களை கொண்டவை. அவை செரிமான மண்டலம் சீராக செயல்படு வதற்கு உதவும்.
அத்துடன் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் வலிமைப்படுத்தும் தன்மை கொண்டவை.
இந்த பாக்டீரியாக்கள் சமநிலையுடன் உடல் எடையை ஒழுங்குபடுத்தவும், வயிற்றில் உள்ள கொழுப்பை கரைக்கவும் உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. லாக்டோ பேசில்லஸ்
பெர்மென்டம், லாக்டோபேசில்லஸ் அமைலோவோரஸ், லாக்டோபேசில்லஸ் கேஸ்ஸரி போன்ற லாக்டோபேசில்லஸ் குடும்பத்தை சேர்ந்த பாக்டீரியாக்கள் வயிற்றில் உள்ள கொழுப்பை கரைத்து கட்டுக்கோப்பான உடல்வாகுவை கட்டமைக்க உதவும் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
எடை தூக்கும் பயிற்சி: இந்த பயிற்சியை மேற்கொள்வது தசைகளை வலுவாக்குவதற்கு வழிவகுக்கும். அதற்காக கடினமான எடைகளை தூக்கி பயிற்சி மேற்கொள்ள வேண்டியதில்லை.
கைக்கு அடக்கமான உபகரணங்களை கொண்டே பயிற்சிகளை தொடரலாம். ஏரோபிக் பயிற்சிகளை மேற்கொள்வதும் பொருத் தமானது. இவை உள்ளுறுப்புகளில் சேர்ந்திருக்கும் கொழுப்பை கட்டுப்படுத்துவதற்கும் உதவும்.
வெள்ளை சர்க்கரை: இது உடல் உறுப்புகளுக்கு கெடுதல் விளைவிக்கக்கூடியது. உடலில் சர்க்கரை அதிகமாக சேர்ந்தால் இதய நோய்கள், நீரிழிவு, உடல் பருமன், கல்லீரல் நோய்கள் ஏற்படலாம்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் சர்க்கரை அதிகமாக உள்ள உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். மற்றவர்கள் வழக்கமாக பயன்படுத்தும் சர்க்கரையின் அளவை பாதியாக குறைத்துக்கொள்ள வேண்டும்.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி
- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை
- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது
- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி
உடல் எடை குறைய வேண்டுமா? அப்ப இத டீ குடிங்க
உடல் எடை குறைய வேண்டுமா? அப்ப இத டீ குடிங்க
இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் உடல் பருமன் தொல்லையால் அவதிப்படுகின்றனர். இவர்கள் இயற்கையான வழிகளில் தேவையில்லாத உடல் எடையைக் குறைக்கக் கருஞ்சீரகம் உதவுகின்றது.
உடல் எடை குறைய வேண்டுமா? அப்ப இந்த டீ குடிங்க…
கருஞ்சீரக டீ
தேவையான பொருட்கள்
கருஞ்சீரகம் – 2 ஸ்பூன்
புதினா – ஒரு கைப்பிடியளவு
இஞ்சி – 1 இஞ்ச் அளவு
தேன் – 2 ஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து தண்ணீர் சூடேறியதும் அதில் 2 ஸ்பூன் கருஞ்சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
உடல் எடை குறைய வேண்டுமா? அப்ப இத டீ குடிங்க
அப்படி கொதித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இஞ்சியைத் தோல் சீவி நன்கு நசுக்கி (தட்டி) அதில் போட வேண்டும்.
அதன்பின் அடுப்பை சிறு தீயில் குறைத்துக் கொண்டு, அதில் புதினா இலைகளையும் கொஞ்சம் ஒன்றிரண்டாக நசுக்கியோ கசக்கியோ அதில் போட்டு கொதிக்க விட வேண்டும். புதினா போட்டு இரண்டு நிமிடங்களில் அடுப்பை நிறுத்திவிட வேண்டும்.
இப்போது டீ பாதி தயாராகிவிட்டது.
இதை வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு டம்ளர் டீக்கு அரை எலுமிச்சை போதுமானதான இருக்கும். அரை எலுமிச்சையை பிழிந்து விட்டு அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு கலக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் குடியுங்கள். அதேபோல் மாலையோ இரவிலோ இன்னொரு கிளாஸ் குடிக்க வேண்டும்.
காலையிலேயே மொத்தமாகப் போட்டு வைத்துக் கொண்டு, குடிக்கிற பொழுது மட்டும் எலுமிச்சை மற்றும் தேன் சேர்த்துக் கொள்ளலாம்.
தவறில்லை. முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. இதை சூடாக மட்டும் தான் குடிக்க வேண்டும்.
அதனால் ஏற்கனவே போட்டு வைத்த டீயை குடிப்பதாக இருந்தால் ஒவ்வொரு முறையும் சூடுபடுத்திக் குடிக்க வேண்டும்.
இந்த எடை குறைக்கும் பானத்தைக் குடிக்கும் காலங்களில் டீ, காபியை எக்காரணத்தைக் கொண்டும் குடிக்கக் கூடாது.
வெயிலால் கருமையடைந்த முகத்தை பொலிவாக்க இதை பண்ணுங்க
வெயிலால் கருமையடைந்த முகத்தை பொலிவாக்க இதை பண்ணுங்க
பேரன் லவ்லி, எலுமிச்சை பழச்சாறு, தக்காளி பழச்சாறு, சர்க்கரை இவ்வளவுதான். ஒரு சிறிய கிண்ணத்தில் 1 ஸ்பூன் அளவு ஃபேரன் லவ்லி எடுத்து போட்டுக் கொள்ளுங்கள்
. அதில் 2 சொட்டு எலுமிச்சை பழச்சாறு, 1/2 ஸ்பூன் தக்காளி பழச்சாறு, சர்க்கரை 1/2 ஸ்பூன் இந்த பொருட்களை சேர்த்து நன்றாக அடித்துக் கலக்க வேண்டும். சர்க்கரை கரைந்து விடும்.
அப்படி இல்லை என்றால் சர்க்கரையை பொடி செய்து போட்டுக் கொள்ளலாம். முகத்தில் தடவ பேஸ்ட் பக்குவத்தில் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதை உங்களுடைய முகம்
- கணவரை கத்தியால் குத்திய மனைவி
- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை
முழுவதும் அப்ளை செய்து விட்டு வெறும் 10 நிமிடம் கழித்து கழுவிப் பாருங்கள். உங்களுடைய முகம் சட்டென வெள்ளையாக மாறி இருக்கும்.
திடீரென்று இன்று இரவு ஏதாவது பார்ட்டிக்கு செல்ல வேண்டும். மறுநாள் காலை விசேஷங்களுக்கு செல்லவேண்டும் பியூட்டி பார்லர் செல்வதற்கு நேரம் இல்லை
கணவரை அறிமுகம் செய்த பிரபல நடிகை
என்றால் இந்த டிப்ஸ் உங்களுக்கு மிகமிக உபயோகமானதாக இருக்கும். நிறைய நேரம் வெயிலில் இருந்துவிட்டு முகம் கருமையாக
வெயிலால் கருமையடைந்த முகத்தை பொலிவாக்க இதை பண்ணுங்க
மாறி இருந்தால் அந்த கருநிறம் உடனே மாறும். உங்களுடைய கை பகுதி, கழுத்துப் பகுதி முதுகில் கழுத்து பக்கம் வெயில் படும் இடம் இருக்கும் அல்லவா? அந்த இடம் இப்படியாக வெயில் பட்டு
கருமையான இடங்களில் இதை ஒருமுறை போட்டாலும் உடனடியாக சன் டோன் நீங்கிவிடும். வெயில் காலத்திற்கு இந்த குறிப்பு உங்களுக்கு அடிக்கடி தேவைப்படும்.
இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் போடுவதற்கு முன்பு முகத்தில் இருக்கும் மேக்கப்பை மட்டும் சுத்தமாக நீக்கிவிடுங்கள். முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுவி துடைத்து விட்டு அதன் பின்பு
இந்த ஃபேரன் லவ்லி ஃபேஸ் பேக்கை அப்ளை செய்து பாருங்கள். எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது. எல்லா வகையான சருமத்திற்கும் இது ஏதுவாக அமையும் என்பதை கவனத்தில் கொள்க .
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

பிரவத்திற்கு பின் கூந்தல் உதிர்வா
பிரவத்திற்கு பின் கூந்தல் உதிர்வா
முடி கொட்டுவது என்பது பெரிய பிரச்சனை. அதுவும் பிரசவத்துக்கு பிறகான முடி கொட்டுதல் பிரச்சனை அதிகமாக இருக்கும். இதை வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு எப்படி சமாளிக்கலாம் என்று பார்க்கலாம்.
பிரவத்திற்கு பின் கூந்தல் உதிர்வா? இந்த ஹேர் பேக் போடுங்க…
ஹேர் பேக்
முடி கொட்டுவது என்பது பெரிய பிரச்னை. அதுவும் பிரசவத்துக்கு பிறகான முடி கொட்டுதல்
பிரச்னை அதிகமாக இருக்கும். இதை எப்படி சமாளிக்கலாம். உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே புதுமையான புரோட்டீன் ஹேர் பேக் தயாரிக்க முடியும். அதை இப்பதிவில் பார்க்கலாமா…
புரோட்டீன் ரிச் ஹேர் பேக்
தேவையானவை
வாழைப்பழம் – 1 மீடியம் அளவு
தயிர் – 3 டேபிள் ஸ்பூன்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
இதையெல்லாம் சேர்த்து மிக்ஸியில் அடித்து பேஸ்டாக்கி அதை முடியில் மண்டையின் வேர்கால்களில் நன்றாக தடவ வேண்டும்.
20 நிமிடங்கள் கழித்து மிதமான ஷாம்பு போட்டு கழுவலாம். கண்டிஷனர்கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.
சுடுநீர், இளஞ்சூடான நீரில் குளிக்க வேண்டாம். வாரம் ஒரு முறை இந்த ஹேர் மாஸ்க் போட்டு கொள்ளலாம்.
பலன்கள்
முடி பிளவுகள் தடுக்கப்படும். முடி உதிர்தல் நிற்கும். முடிக்கு தேவையான சத்துகள் கிடைத்து ஆரோக்கியமாகும்.
பார்வைத்திறனை திருடும் கண் விழி விறைப்பு
பார்வைத்திறனை திருடும் கண் விழி விறைப்பு
பார்வைத்திறனை திருடும் நோயாக கண்விழி விறைப்பு நோய் இருக்கிறது என்றும், ஆரம்ப நிலையிலேயே இதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் பிராந்திய மருத்துவ இயக்குனர் டாக்டர் ஆர்.கலாதேவி சதீஷ் தெரிவித்தார்.
கண்விழி விறைப்பு நோயினால் ஏற்படும் பார்வை திறன் இழப்பை முற்றிலுமாக ஒழிப்பதே உலக கண்விழி விறைப்பு நோய் வாரமாக கடைப்பிடிப்பதின் முக்கிய குறிக்கோள் ஆகும்.
இந்த ஆண்டு ‘‘உலகம் ஒளிமயமானது, உங்கள் பார்வையை காத்திடுங்கள்’’ என்பதே உலக கண்விழி விறைப்பு நோய் வாரத்தின் கருப்பொருளாக இருக்கிறது. அந்த வகையில் கணிவிழி
விறைப்பு நோய் குறித்து டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் பிராந்திய மருத்துவ இயக்குனர் டாக்டர் ஆர்.கலாதேவி சதீஷ் கூறியதாவது:-
பார்வைத்திறனை திருடும் கண் விழி விறைப்பு
கண்விழி விறைப்பு நோய் வராமல் தடுப்பதற்கான முன்நடவடிக்கைகள் என்று எதுவும் இல்லை.
ஆரம்ப நிலையில் எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாத கண்விழி விறைப்பு நோயினால், பார்வைத் திறன் இழப்பு வராமல் தடுப்பதற்கு ஒரே வழி, அதனை தொடக்க நிலையிலேயே
பாதிப்பை கண்டறிந்து சரிசெய்வது தான். கண்ணுக்கு தெரியாமல் சத்தமின்றி பார்வைத்திறனை திருடும் இந்த நோய்க்கு உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
கண்புரை நோய் மற்றும் சிகிச்சையளிக்கப்படாத ஒளிக்கதிர் விலக்க குறைபாடுகளுக்கு அடுத்ததாக இந்தியாவில் பார்வைத்திறன் இழப்புக்கு காரணமான நோயாக கண்விழி விறைப்பு நோய் இருக்கிறது. இந்த நோய் அதிக சிக்கலானது மற்றும் ஆபத்தானது. கண்ணுக்குள் அழுத்தம்
அதிகரிக்கும் போது இது நிகழ்கிறது. கண்ணின் முன்புற பகுதிக்குள் இருக்கும் தெளிவான திரவத்தின் உற்பத்தி விகிதம் இயல்பானதாக இருக்கின்ற காலம் வரை இந்த அழுத்தமானது அதன்
வெளியேறல் விகிதத்துக்கு நிகரானதாக இருக்கும். இந்த திரவத்தை எடுத்துச்செல்கிற பாதைகளில் அடைப்பு ஏற்படும்போது கண்ணுக்குள் அழுத்தம் அதிகரிக்கும்.
மேலும் மூளைக்கு தகவல்களை அனுப்பும் விழி நரம்பையும் சேதப்படுத்துகிறது.
பார்வைத்திறன் இழப்பு
எந்தவொரு வயது பிரிவில் உள்ள நபரையும் கண் விழி விறைப்பு நோய் தாக்கலாம். கண்விழி விறைப்பு நோய்க்கு சுமார் 2.3 சதவீதம் வாழ்நாள் இடர்வாய்ப்பு மக்களுக்கு
இருப்பதாக அறியப்படுகிறது. குடும்பத்தில் கண்விழி விறைப்பு நோய் இருந்த வரலாறு, நீரிழிவு நோய்
பார்வைத்திறனை திருடும் கண் விழி விறைப்பு
உள்ளவர்கள் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஒளிக்கதிர் விளக்க குறைபாடுள்ள நபர்கள் மற்றும் ஸ்டெராய்டு மருந்துகள், கண் சொட்டு மருந்துகள், மாத்திரைகள் மற்றும் சரும கிரீம்களை பயன்படுத்துபவர்கள் இந்த இடர்வாய்ப்புள்ளவர்களாக கருதப்படுகிறார்கள்.
இத்தகைய நபர்கள் ஒவ்வொரு ஆண்டும் கண்விழி விறைப்பு நோய் தங்களுக்கு இருக்கிறதா? என்பதற்கான பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்.
ஆரம்ப நிலையிலேயே கண்விழி விறைப்பு நோய் இருப்பது கண்டறியப்படுமானால், பார்வை திறன் இழப்பை தவிர்க்க அல்லது குறைக்க தேவையான சிகிச்சைகளை பெற முடியும். இதுவரை 12 மில்லியன் நபர்களை இந்த நோய் பாதித்திருக்கிறது.
பெண்கள் வயதுக்கு வரப்போவதை உணர்த்தும் அறிகுறிகள்
பெண்கள் வயதுக்கு வரப்போவதை உணர்த்தும் அறிகுறிகள்
பெண்கள் தங்கள் அழகை ஆராதித்தாலும், அத்தகைய அழகுக்காக தங்கள் உடல் எத்தகைய மாற்றங்களை சந்தித்திருக்கிறது? ஒவ்வொரு உறுப்புகளும் வளர்ச்சியை பெற என்ன காரணம்?
அந்த வளர்ச்சியால் உடலுக்கு என்ன பலன்? திருமணத்திற்கு பின்பு வாழ்க்கையை ரசித்து அனுபவிக்க பெண்களின் உடல் உறுப்புகள் எப்படி காரணமாக இருக்கின்றன? தாய்மை அடைய
அந்த உறுப்புகள் அவளுக்கு எப்படி உதவுகின்றன? என்பதெல்லாம் பெரும்பாலான பெண்களுக்கு தெரியாத ரகசியங்களாகவும், அதிசயங்களாகவும்தான் இருக்கின்றன.
பெண்களின் உடலில் அதிசயிக்கத்தக்க அளவில் பெரிய மாற்றங்கள் அவர்கள் வயதுக்கு வரும்போதுதான் நிகழ்கிறது. இப்போது பத்துவயதிலே சில சிறுமிகள் வயதுக்கு
பெண்கள் வயதுக்கு வரப்போவதை உணர்த்தும் அறிகுறிகள்
வந்துவிடுகிறார்கள். ஆனால் அவர்கள் 20 வயதுக்குரிய உடல் வளர்ச்சியை பெற்றிருக்கிறார்கள்.
10 வயது பெண்ணுக்கு, 20 வயதுக்குரிய உடல் வளர்ச்சி ஏற்படுவது அவளுக்கான பிரச்சினையாக மட்டும் இல்லாமல் சமூகத்திற்கான பிரச்சினையாகவும் மாறிவிடுகிறது.
இப்போது பெரும்பாலான பெற்றோர்கள் ஒரு குழந்தையே போதும் என்று முடிவு செய்துவிடுகிறார்கள்.
அந்த ஒரே ஒரு குழந்தையும் பெண்ணாக இருந்தால், அதை செல்லக் குழந்தையாக்கி விரும்பியதை எல்லாம் வாங்கிக்கொடுக்கிறார்கள். ருசிக்காக அளவுக்கு
அதிகமான கொழுப்பு அடங்கிய உணவை சிறுமிகள் சாப்பிடும்போது அவர்களது உடல், தேவைக்கு அதிகமான வளர்ச்சியை பெற்றுவிடுகிறது.
அப்போது அவர்களது கொழுப்பில் இருந்து ‘லெப்டின்’
என்ற ஹார்மோன் உருவாகும். அதுவே மூளையில் தூண்டுதலை உருவாக்கி, பால்ய வயதிலேயே சிறுமிகள் பருவமடைந்துவிடும் சூழலை உருவாக்குகிறது.
பருவமடைதல் என்பது திடீரென்று உடலுக்குள் நடக்கும் ‘மேஜிக்’ போன்ற நிகழ்வு அல்ல. உடலுக்குள் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் அதற்குரிய வளர்ச்சி மாற்றங்கள் படிப்படியாக நடந்துகொண்டிருக்கும்.
அவை அத்தனையும் இயற்கையான முறையில் நடந்து முடிந்துவிட்டது
என்பதை பருவமடைதல் வெளிப்படையாக உணர்த்துகிறது. பெண்களைப் பொறுத்தவரையில் மார்பக வளர்ச்சி, மறைவிடங்களில் ரோம வளர்ச்சி, இனப்பெருக்க உறுப்புகளின் மேம்பாடு, உடல்
பெண்கள் வயதுக்கு வரப்போவதை உணர்த்தும் அறிகுறிகள்
உயரமாகுதல், பூசி மெழுகினாற்போன்று அழகு கூடுதல் போன்றவைகள் அவர்கள் வயதுக்கு வரப்போவதை உணர்த்தும் அறிகுறிகளாக அமைகின்றன.
ஒரு சிறுமி வயதுக்கு வந்துவிட்டாள் என்றால், அப்போதே அவளது இனப்பெருக்க உறுப்புகள் வளர்ச்சி நிலையை அடைந்துவிட்டன என்று அர்த்தம்.
அடுத்த ஒன்று அல்லது இரண்டு வருடத்தில் அந்த உறுப்புகள் முழு வளர்ச்சியை எட்டிவிடும். அப்போது அவளது உடலும், எண்ணங்களும்
குழப்பத்துடன் காணப்படும். அவளது குழப்பத்தை ஒருசிலர் தவறாக பயன்படுத்திக்கொள்ளக்கூடும்.
அதனால்தான் 13, 14 வயதிலேயே ஒருசில சிறுமிகள் கர்ப்பிணியாகிவிடும் சமூக அவலமும் நடக்கிறது.
ஒரு சிறுமி எத்தனை வயதாக இருந்தாலும், அவள் உடல் பிரமிக்கவைக்கும் வளர்ச்சியை பெற்றிருந்தாலும், பெற்றோர் மட்டும்தான் அவளை எப்போதும் தங்கள் மகளாகப் பார்ப்பார்கள்.
ஆனால் சமூகமும் தன் கண்களால் அப்படித்தான் பார்க்கும் என்று பெற்றோர்கள் கருதுவது தவறு.
சிறிய வயதிலேயே அதிக உடல் வளர்ச்சியை பெற்றிருக்கும் சிறுமிகளை சமூகத்தின் எல்லா கண்களும் நல்லவிதமாக பார்ப்பதில்லை.
முன்பு 15 வயதுகளில் பெண்கள் பருவமடைந்தார்கள். இப்போது பத்து வயதில்கூட வயதுக்கு வந்துவிடுகிறார்கள்.
அது அவர்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. சிறுவயதிலே உங்கள் மகள் வயதுக்கு வருவதை தவிர்க்கவேண்டும் என்றால், நாலைந்து வயதில் இருக்கும் உங்கள் மகள்களை இப்போதே கவனித்து வளருங்கள்.
மகள்களுக்கு கண்ட உணவுகளையும் வாங்கிக்கொடுக்கவேண்டாம். சிறுவயதிலே வயதுக்கு வரும் சிறுமிகளில் பெரும்பாலானவர்கள் உயரம் குறைந்தவர்களாக, குட்டையாக, பருத்த உருவம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
எதிர்காலத்தில் அவர்களுக்கு பல்வேறு விதமான ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படும் என்பதால், குண்டான சிறுமிகளை மைதான வெளி விளையாட்டுகளில் ஈடுபடுத்துங்கள்.
ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மற்றும் பொருத்தமான உணவுப் பழக்கங்களை கடைப்பிடிக்கச்செய்யுங்கள்.
பொருத்தமான வயதில் பருவமடையும் பெண்களின் உடல் நலமும், மனநலமும் சிறப்பாக இருக்கும்.
அவர்களது உடலும் கட்டுக்கோப்பான அழகுடன் காணப்படும். திருமணத்திற்கு பிறகு அவர்கள் தாய்மை அடைவதிலும் நெருக்கடிகள் தோன்றாது.
இறுக்கமான பிரா அணிந்தால் இந்த பிரச்சனைகள் வரலாம்
இறுக்கமான பிரா அணிந்தால் இந்த பிரச்சனைகள் வரலாம்
தூங்கும்போது பிரா அணியலாமா என்னும் கேள்வி பல பெண்களிடம் இருக்கிறது. ஆனால் எதுவாயினும் அது அவர்களுடைய சௌகரியத்தைப் பொருத்தது என சிலர் கருத்துக்களை முன்
வைப்பார்கள். அது அவரவர் விருப்பம் என்பதை விட அவ்வாறு செய்வதால் மருத்துவ ரீதியாக நல்லதா கெட்டதா என்னும் வாதமும் முன் வைக்கப்படுகிறது.
உண்மையில் மருத்துவர்களின் வாய் வழியில் இரவு பிரா அணிவதால் மார்பகங்கள் தளர்வடைவதை தவிர்க்கலாம் என்கின்றனர். ஆனால் அலுவலகம் செல்லும் பெண்கள் நாள்
முழுவதும் இறுக்கமான பிராவை அணிந்திருப்பதால் வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக அதை கழட்டி எறிவதைதான் பெரிய ரிலீஃபாக நினைக்கின்றனர். எனவே அவர்கள் சௌகரியத்தைதான் பெரிதாக நினைக்கின்றனர்.
இறுக்கமான பிரா அணிந்தால் இந்த பிரச்சனைகள் வரலாம்
பொதுவாக மார்பகங்கள் தளர்வடைதல் என்பது வயது செல்ல செல்ல இயற்கையாக நிகழக்கூடியது. அதை பிரா அணிவதால் தடுக்கமுடியாது.
இருப்பினும் தளர்ந்து தொங்கும் மார்பகங்கள் பெண்களுக்கு சங்கடத்தையும், அசௌகரியத்தையும் கொடுக்கலாம்.
எனவே இதுபோன்ற பிராக்கள்தான் அவர்களுக்கான வரமாக உள்ளது. அதேபோல் பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்களுக்கும் பிரா அணிவது சௌகரியத்தை தரும். இரவு புரண்டு படுக்கும்போது அவை அதிக வலியை தரலாம். எனவே பிரா நல்ல சாய்ஸாக இருக்கும்.
எதுவாயினும் உங்களுக்கு ஃபிட்டான , சரியான அளவிலான பிராக்களை அணியுங்கள். காட்டன்
துணியால் ஆனா பிரா அணிவது காற்றோட்டமாக இருக்கும். இறுக்கமான பிரா அணிவது வேறு ஏதேனும் பக்கவிளைவுகளை உண்டாக்கலாம்.
சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலா அப்ப இந்த வைத்தியம் பலன் தரும்
சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலா அப்ப இந்த வைத்தியம் பலன் தரும்
சிறுநீர் கழிக்கும் போது சிலருக்கு எரிச்சல் ஏற்படும். இதற்கு பொதுவான காரணம் என்னவென்றால் கிருமிகள் சிறுநீர் வடிகுழாயின் மூலமாக உடலினுள் நுழையும் போது தொற்று ஏற்படுத்தும்
. சிறுநீர் பாதையில் வளர்ச்சியடையும் பாக்டீரியாக்களின் விளைவாக அதனை சுற்றியுள்ள திசுக்களில் வீக்கம் ஏற்படுத்துவதன் காரணமாக, வலி மற்றும் எரிச்சல் உண்டாகிறது.
இது தவிர, உடலில் நீர் வறட்சி, சிறுநீரக கற்கள், கல்லீரல் பிரச்சனை, அல்சர், விந்து அல்லது விரைகளில் உள்ள தொற்றுநோய்,
பால்வினை நோய், நீரிழிவு, ஊட்டச்சத்துக் குறைவு, குறுகிய சிறுநீர் பாதை போன்றவையும் காரணம் ஆகும்.
எரிச்சலுக்கான தீர்வு என்ன?
உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், சிறுநீரானது அடர்ந்த மஞ்சள் நிறத்தில் வருவதோடு, எரிச்சலோடும் இருக்கும்.
சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலா அப்ப இந்த வைத்தியம் பலன் தரும்
ஆகவே ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை 2-3 டம்ளர் தண்ணீர் குடிப்பதை பழக்கமாக கொள்ள வேண்டும்.
சிட்ரஸ் பழத்தின் ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் ஆகியவை சிறுநீர் எரிச்சலை சரிசெய்யும், ஏனெனில் சிட்ரஸ் பழங்கள் பாக்டீரிய கிரிமிகளை அழிக்கவல்லது.
தேங்காய் நீர் உடலில் ஏற்படும் நீர்வறட்சியை தடுக்க வல்லது. அதிலும் இதை உடலில் நீர் வறட்சியின் போது 2-3 டம்ளர் குடித்து வந்தால்,
அந்த எரிச்சலானது போய்விடும். இதனால் வலியுடன் சிறுநீர் வெளியேறுவது குணமாகும்.
ஒரு டம்ளர் தண்ணீருடன், 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூளை சேர்த்து, இரவில் படுக்கும் முன் ஊற வைத்துவிட்டு, மறுநாள் காலையில், அதில் சர்க்கரை சேர்த்து குடித்தால் சிறுநீர் எரிச்சல் சரியாகிவிடும்
வாரத்தில் 4 முறை மீன் சாப்பிட்டால் இந்த நோய் வராது
வாரத்தில் 4 முறை மீன் சாப்பிட்டால் இந்த நோய் வராது
வாரத்திற்கு நான்கு முறை மீன் வகை உணவுகளை சாப்பிடுவது இந்த நோயை கட்டுப்படுத்தும் என்பதும் ஆய்வில்
தெரியவந்துள்ளது. பெண்கள் மீன் சாப்பிடுவதன் மூலம் இந்த நோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
உலகளவில் அதிகமாக உயிரிழப்பை ஏற்படுத்தும் முக்கிய நோய்களுள் ஒன்றாக புற்றுநோய் அமைந்திருக்கிறது.
அதனை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை பெறுவதும் சவாலான
விஷயமாக இருக்கிறது. ஒருசில உணவு வகைகளை தவறாமல் சாப்பிட்டு வருவதன் மூலம் புற்றுநோயை தடுக்க முடியும்.
பூண்டிற்கு புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் சக்தி
இருக்கிறது. மார்பகம், மூளை, நுரையீரல், கணையம், வயிறு போன்ற பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுவதை இது தடுக்கும்.
பிரோக்கோலிக்கும் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இருக்கிறது. அதை நீராவியில் வேகவைத்து சாப்பிடுவது சிறந்தது. அதில் சூப், சாலட் தயாரித்தும் சாப்பிடலாம்.
சிட்ரஸ் பழ வகைகளை தினமும் சாப்பிட்டு வருவது வாய், தொண்டை, வயிற்று புற்றுநோய் வராமல் தடுக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக எலுமிச்சம் பழத்தை தவறாமல்
சேர்த்துக்கொள்ள வேண்டும். காலை உணவுடன் அரை கப் புளூபெர்ரி பழம் சாப்பிட்டும் வரலாம். அது புற்றுநோய் செல்களை

கட்டுப்படுத்தி சேதமடைந்த செல்களின் வளர்ச்சிக்கு துணைபுரியும்.
வாரத்திற்கு நான்கு முறை மீன் வகை உணவுகளை சாப்பிடுவது ரத்த புற்றுநோயை கட்டுப்படுத்தும் என்பதும் ஆய்வில்தெரியவந்துள்ளது. பெண்கள் மீன் சாப்பிடுவதன் மூலம்
கருப்பை புற்றுநோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். தினமும் இரண்டு கப் கருப்பு டீ பருகுவதும் நல்லது. கிவி பழத்திலும்
புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டிஆக்சிடெண்ட் நிரம்பியுள்ளது. அதில் கொழுப்பும் குறைவாகவே இருக்கிறது.
வெங்காயத்தை தவறாமல் உணவில் சேர்ப்பதன் மூலம் 50 சதவீத புற்றுநோய் பாதிப்பில் இருந்து விடுபட்டுவிடலாம். ஆப்பிளுக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை இருக்கிறது. அவகோடா
, முளைகட்டிய தானியங்கள், முட்டைக்கோஸ், தக்காளி, கேரட், செர்ரி பழம், மக்காச்சோளம், பேரீச்சம்பழம், முட்டை, இஞ்சி,
திராட்சை, காளான், பட்டாணி, மாதுளை போன்றவற்றை சாப்பிட்டு வருவதும் புற்றுநோயை தடுக்க உதவும்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் இவற்றை எல்லாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்
கர்ப்ப காலத்தில் பெண்கள் இவற்றை எல்லாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்
கர்ப்ப காலத்தில் பெண்கள் இந்த விஷயங்களை கண்டிப்பாக செய்யக்கூடாது. அப்படி செய்தால் அது கருவை பாதிக்கும். கர்ப்ப காலத்தில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.
கருவுற்ற 10 – 16 வாரங்களில் கரு சிதைவு ஏற்பட மன உளைச்சலும் ஒரு காரணம். எனவே பயம், பதற்றம், கோபம், வஞ்சம்
ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். மசக்கையை தடுக்க மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்க்கலாம்.
அடிக்கடி தாம்பத்திய உறவு, அலைச்சல், அதிக எடை, சற்று இறுக்கமான ஆடைகள் அணிவது நீண்டநேரம் கண் விழிப்பது,
பிளாஸ்டிக் சேர் மற்றும் நைலான் சேரில் உட்கார்வது, மலம், சிறுநீரை அடக்குவது, பட்டினியாக இருப்பது போன்றவற்றை செய்யக் கூடாது.
கர்ப்ப காலத்தில் பெண்கள் இவற்றை எல்லாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்
தூங்கிக்கொண்டிருக்கும் கர்ப்பிணிகளை சத்தம்போட்டு பயமுறுத்தி எழுப்பக்கூடாது. சிறுநீரை அடக்குவதால் சிறுநீரகக்
கற்கள், சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படும். எண்ணெய் குளியல், எண்ணெய் மசாஜ் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள் நல்ல நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக நார்ச்சத்து
நிறைந்த பழங்கள் மற்றும் காய் வகைகள், மேலும் குறிப்பாக கீரை வகைகளை உணவில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆட்டிறைச்சி, பன்றி, மாட்டிறைச்சி போன்ற சிவப்பு மாமிச வகைகளை தவிர்ப்பது நல்லது. மேலும் சீஸ் அதிகம் கலந்த
உணவையும் தவிர்க்க வேண்டும். இவை ஜீரணம் ஆக அதிக நேரம் எடுப்பதோடு, சில உபாதைகளையும் உண்டாக்கக் கூடும்.
பகலில் தூங்குதல் கூடாது. இதனால் இரவில் தூக்கம் வராமல் மன உளைச்சல் ஏற்படும். உயரமான கட்டிடங்களுக்கு செல்லுதல், படியில் அடிக்கடி ஏறுதல், காலடி சத்தம் கேட்கும்படி பலமாக
நடப்பது, வாகனங்களில் பயணம் செய்வது, தலைக்கு மேல் எடை தூக்குவது போன்றவற்றை செய்யக் கூடாது.
காபி மற்றும் தேநீர் போன்றவற்றை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. இவை உடலில் ரத்தசோகை மற்றும் வேறு சில உபாதைகளை உண்டாக்கக் கூடும்.
விக்கல் கொட்டாவி தும்மல் வந்தால் இந்த நோயுக்கான அறிகுறி
விக்கல் கொட்டாவி தும்மல் வந்தால் இந்த நோயுக்கான அறிகுறி
விக்கல், தும்மல், கொட்டாவி… போன்றவை நமக்கு ஏன் ஏற்படுகிறது என தெரியுமா…? இவை அனைத்துமே, உடல் நமக்கு கொடுக்கும் சிக்னல்கள்.
எதற்காக இத்தகைய சிக்னல்களை, உடல் நமக்கு கொடுக்கிறது என தெரிந்து கொள்வோமா..?
கொட்டாவி
மிகவும் சலிப்பு தட்டிய வேலையைத் திரும்பத் திரும்பச் செய்யும்போது, நாள் முழுக்க ஒரே ஆசிரியர் பாடம் நடத்தும்போது
நம்மை அறியாமலேயே கொட்டாவி வந்துவிடும். மூளைக்கு அதிக ஆக்ஸிஜனை அனுப்புவதற்காகத்தான் உடல் இப்படிச் செய்கிறது
என்பதில் உண்மையில்லை. மூளை அதிகம் சூடாகும்போது கொட்டாவி வரும். இதன் மூலமாக, மூளை தன்னை
இயல்புநிலைக்கு மாற்றிக்கொள்கிறது. வெப்ப மாற்றங்கள் நிகழும் பகுதியில் இருந்தாலும், கொட்டாவி வரும்.
விக்கல்
நீங்கள் மிக வேகமாகச் சாப்பிடுகிறீர்கள் என்பதை உணர்த்தத்தான் உடல் விக்கலை வெளிப்படுத்துகிறது. அதேபோல அளவிற்கு
அதிகமாக சாப்பிடுதல், மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற காரணங்களாலும், விக்கல் ஏற்படும்.
திடீர் விழிப்பு
நன்றாக தூங்கிக்கொண்டிருக்கிறீர்கள். திடீரென்று அதிர்ச்சி அடைந்த மாதிரி சத்தத்தை எழுப்பியபடி எழுகிறீர்கள். இப்படி
உங்களுக்கு நடந்திருந்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலி! மூளை, நம்மை மரணத்தில் இருந்து காப்பாற்றத்தான் இப்படிச் செய்திருக்கிறது
என்கிறது, ஆராய்ச்சி முடிவுகள். நாம் தூங்கும்போது நாடித்துடிப்பு, இதயத்துடிப்பு போன்றவை குறைந்திருக்கும். தசைகளின் இயக்கம் குறைவாகி, அவை ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும். இதன்
விக்கல் கொட்டாவி தும்மல் வந்தால் இந்த நோயுக்கான அறிகுறி
காரணமாக நாம் இறந்துவிட்டதாக உடல் மூளைக்கு சிக்னல் அனுப்பும். நாம் இன்னும் இறக்கவில்லை என்பதை உணர்ந்துகொள்ளும் மூளை சுதாரித்துக்கொண்டு நம்மை எழுப்பிவிடும்.
விரல்களில் தோல் சுருக்கம்!
தண்ணீரில் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் கையை நனைத்து வைத்துவிட்டு எடுத்துப் பார்த்தால், விரல்களில் உள்ள தோல்
சுருங்கிப்போயிருக்கும். ஆறு, ஏரி அல்லது நீச்சல் குளத்தில் நீண்ட நேரம் ஆட்டம் போட்டுவிட்டு வெளியே வரும்போது, இந்தச் சுருக்கங்களை நீங்கள் கவனித்து இருக்கலாம். ‘கை விரல்களின்
அழகு போய்விட்டதே..!’ என்று வருத்தப்பட்டு இருக்கலாம். ஈரமான கையால் ஒரு பொருளைத் தொடும்போது, அது நழுவிச்
செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்தச் சுருக்கங்களை உடல் உருவாக்குவதால்தான் எந்தப் பொருளையும் நன்றாக பற்றிப் பிடித்துக்கொள்ள நம்மால் முடிகிறது.
சோம்பல் முறித்தல்!
இரவில் நாம் தூங்கியவுடன் நமது தசைகள் ஓய்வு எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கும். காலையில் சோம்பல் முறிப்பதன் மூலம் உடல் இந்த தசைகளையும் தூக்கத்திலிருந்து எழுப்பிவிடுகிறது.
சோர்வாக இருக்கும்போதும் நாம் சோம்பல் முறிப்போம். இதனால் தசைகளுக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து, அவை சுறுசுறுப்பாகும்.
உடல்தான் தனக்குள் எவ்வளவு அதிசயங்களை ஒளித்து வைத்திருக்கிறது!
தும்மல்
பாக்டீரியா, அலர்ஜியை ஏற்படுத்தும் பொருட்கள், தூசுக்கள் போன்றவை மூக்குக்குள் செல்லும்போது நம்மை அறியாமலேயே தும்மல் வந்துவிடும்.
பாதிப்பு ஏற்படுத்தும் பொருட்களை ஆரம்பத்திலேயே ஒழித்துக்கட்டிவிட உடல் செய்யும் நல்ல நடவடிக்கை இது.






