தலைவலி வர காரணம் என்ன தெரியுமா..?

Spread the love

தலைவலி வர காரணம் என்ன தெரியுமா..?

தலைவலி வர காரணம் இது தான் – உடனே இதனை சரி செய்ய இதனை பண்ணுங்க பறந்து போயிடும்

ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கும் நோய்களுள் ஒன்றாக ஒற்றைத் தலைவலி விளங்குகிறது. தலைவலிக்கும், ஒற்றைத்தலைவலிக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

சாதாரண தலைவலி கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும். ஆரம்பத்தில் வலி அதிகமாக இருந்தாலும் படிப்படியாக

திருமணத்திற்கு முன்பு பெண்கள் செய்யும் அந்த விடயம்

சத்து நிறைந்த அவல்

குறைந்துவிடும். ஆனால் ‘மைக்ரேன் ஹெட்டேக்’ எனப்படும் ஒற்றைத்தலைவலி லேசாக வலிக்க ஆரம்பித்து பிறகு தலையே வெடித்துவிடும் அளவுக்கு கொடூரமாக மாறிவிடும்.

இந்த தலைவலி ஒவ்வொருவருடைய உடல்நிலையை பொறுத்து மாறு படக்கூடியது. சிலருக்கு சில மணி நேரம் வலி இருக்கும். சிலருக்கு காலை முதல் மாலை வரை பாடாய் படுத்திவிடும்.

சிலருக்கு இரவில் தூங்கி எழுந்தால்தான் சரியாகும். ஒற்றைத்தலைவலி வந்தால் ஓரிரு நாட்கள் வரை

அவதிப்படுபவர்களும் இருக்கிறார்கள். வலி இருக்கும் சமயத்தில் ஒவ்வொரு நொடியும் ரண வேதனையை அனுபவிக்க வைத்துவிடும்.

பெரும்பாலும் ஒற்றைத் தலைவலி ஒரு பக்கத்தில்தான் வலியை ஏற்படுத்தும். சிலருக்கு இரண்டு பக்கமும் வலிக்கும். அந்த சமயத்தில் கண் இமை பகுதிகளில் வலியின் தாக்கம் அதிகமாக

இருக்கும். இரவில் நன்றாக தூங்காமல் இருப்பது, சரியான நேஇரத்தில் உணவு சாப்பிடாதது, பசித்தாலும் குறைவாக

சாப்பிடுவது போன்றவை ஒற்றைத்தலைவலிக்கான பொதுவான காரணங்கள்.

சிலருக்கு காரணத்தை கண்டறிய முடியாதபடி பலவிதமான அறிகுறிகளை வெளிப்படுத்தும். குறிப்பிட்ட நாள் இடைவெளியில் அடிக்கடி வந்து கொண்டேஇருக்கும். ஒவ்வொரு முறை வரும்போதும்

நீண்ட நேரம் வலி இருந்து கொண்டிருக்கும். வலி அதிகரிக்கும்போது கண் இமைகளில் கடும் பாதிப்பு உண்டாகும். சிலருக்கு பார்வை

தெளிவாக தெரியாது. தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்ற பாதிப்புகளும் ஏற்படும்.

ஒற்றைத் தலைவலி நீடித்துக்கொண்டிருந்தால் மூளை நரம்புகள் பாதிப்படையும். நாளடைவில் மறதி ஏற்படும். மன அழுத்தத்திற்கு ஆளானாலும் அடிக்கடி இந்த தலைவலி வரும். மலச்சிக்கல்,

அடிக்கடி சிறுநீர் கழிப்பது ‘மைக்ரேன்’ தலைவலிக்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகளாகும். தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா

யாருக்காவது ஒற்றைத்தலைவலி இருந்தால் பரம்பரை ரீதியாகவும் பின் தொடர்ந்து வரும்.

வேலைப்பளு அதிகரிக்கும்போது டென்ஷன் அதிகமாகி அதன் காரணமாகவும் உண்டாகும். அப்போது வெளிச்சத்தை பார்த்தால் கண்கள் கூசும். சிலர் தலைவலி என்றதும் கண்களில் தான்

பிரச்சினை இருப்பதாக நினைப்பார்கள். தொடர்ந்து ஒற்றைத் தலைவலி இருப்பவர்கள் எம்.ஆர்.ஐ ஸ்கேன், சி.டி ஸ்கேன் போன்ற

பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது. அதன் மூலம் மூளை சார்ந்த பிரச்சினைகள் எதுவும் இருக்கிறதா என்பதை கண்டறிந்து சிகிச்சை பெறலாம்.

Leave a Reply