Posted in இலங்கை செய்திகள்

நான் சிறப்பாக செயல்படுவேன் – அடித்து விடும் சஜித் பிரேமதாசா

நான் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு விட்டால் இலங்கையை ஆண்ட ஆட்சியாளர்கள் எவரும் செய்திடாத விடயங்களை துணிவுடனும் ,அர்ப்பணிப்புடனும் செயல்படுத்துவேன் என சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார் ,பிரேமதாசா தந்தை புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கினார் என்பது குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

சுதந்திர கட்சியின் மத்திய குழு கூடியது – சந்திரிக்காவிற்கு ஆப்பு ..?

சுதந்திர கட்சியின் மத்திய குழு கூடியது – சந்திரிக்காவிற்கு ஆப்பு ..?

இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை அடுத்து கட்சிகள் கூடி தமது திட்டம் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள கூடி பேசி வருகின்ற்னர் ,அவ்விதம் சுதந்திர கட்சியின் மத்திய குழு இன்று கூடுகிறது ,இதன் பொழுது கட்சிக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க படலாம் என தெரிவிக்க பட்டதை அடுத்து சந்திரிக்கா கட்சியின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்து நீக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையை தாக்கவுள்ள புயல் – மக்களுக்கு எச்சரிக்கை

வங்கக்கடல் பகுதியி தாழமுக்கம் நிலவுதால் இலங்கை கடற்கரை பகுதிகளை புயல் தக்க கூடும் என தெரிவிக்க பட்டுள்ளது ,கடலோர பகுதியில் உள்ள மக்கள் இந்த வேகமான காற்று கடக்கும் பொழுது விழிப்பாக இருக்கும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

போலி நாணய தாள்களுடன் ஐவர் மடக்கி பிடிப்பு

தென் இலங்கை ப்குதியில் சட்ட்திற்கு புறம்பாக இலங்கை வந்த போலி நாணய தாள் மாற்றும் கும்பல் ஒன்று காவல்துறையால் அதிரடியாக கைது செய்ய பட்டுள்ளனர் ,கைதானவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க பட்டுள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

இன்னுமொரு மியன்மாரை உருவாக்க வேண்டாம்-முசுலீம்கள் கூவல்

இன்னுமொரு மியன்மாரை உருவாக்கிவிடவேண்டாம் என்று எல்லோரும் கூறி வருகின்றார்கள். நான் கூறுகின்றேன் இன்னுமொரு மியன்மார் அல்ல நாம் மியன்மாரில்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இதிலிருந்து நாம் விடுபடவும், எமது சிறுபான்மை சமூகத்தை பாதுகாப்பதற்காகவும் அன்னம் சின்னத்தை வெற்றிபெறச் செய்யவேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொத்துவில் பிரதேச சபையின் உறுப்பினர் முன்னாள் உதவித் தவிசாளர் ஏ.எம்.எம்.தாஜுதீன் தெரிவித்தார்.

பொத்துவில் பிரதேச அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மத்திய குழு ஏற்பாட்டில் புதிய ஜனநாயக ஐக்கிய முன்னனியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவை ஆதரித்த செய்தியாளர் சந்திப்பு நேற்று (03) அறுகம்பே தனியார் விடுதியில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

வட கிழக்கிலுள்ள சிறுபான்மையினரை நன்றாக புரிந்து கொண்டுள்ள வேட்பாளர் என்றால் அது சஜீத் என்கின்றவராவார். நாட்டின் தலைமகனாக வருவதற்கான சகல தகுதியும் அவருக்குண்டு. அவரின் தகப்பனார் காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் வழிகாட்டலின் கீழ் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டவர் என்றால் அது மிகையாகாது.

1990 ஆண்டு காலப்பகுதியில் பொத்துவில் பகுதிக்கு அரசியல்வாதிகள் மட்டுமல்ல பொதுமக்களும் வருவதற்கு பயந்துகொண்டிருந்த அந்த அசாதாரண காலங்களில் ரணசிங்க பிரேமதாச என்கின்ற எமது நாட்டின் தலைமகன் பொத்துவில் பிரதேச மக்களை சந்தித்து அவர்களுக்கான இலவச மின்சார இணைப்பை வழங்கி பொத்துவில் பிரதேசத்துக்கு ஒரு வெளிச்சத்தை வழங்கிய ஒரு தைரியமானவர் என்பதை எமது பொத்துவில் மக்கள் எவரும் எளிதில் மறந்து விடவில்லை, மறந்து விடவும் மாட்டார்கள் என நான் நம்புகின்றேன்.

ஜனாதிபதி வேட்பாளராக அவருடைய மகன் சஜித் பிரேமதாச இன்று களமிறங்கியுள்ளார். அவரின் தந்தை விட்டுச் சென்ற சேவைகள் எங்கு நிறுத்தப்பட்டதோ அந்த இடத்திலிருந்து அந்த சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காகவேதான் அவர் ரணசிங்க பிரேமதாசவின் பாதணிகளை அணிந்து அவரைப் போன்றே ஆடைகளையும் அணிந்து தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார்.

மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில்தான், சிறுபான்மை மக்களாகிய முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடாத்தப்பட்டன. இனவாத கருத்துக்களையும், தாக்குதல்களையும் மேற்கொள்ளும் மாபெரும் இனவாத முகவர்களான உதய கம்மன்வில, ரத்ண தேரர், ஞானசார தேரர், கருணா அம்மான், பிள்ளையான் போன்ற அனைத்து இனவாத குழுக்களும் ஒன்றாக இணைந்துள்ள கட்சியாகவே தான் இன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி காணப்படுகின்றது என்பதை எமது சிறுபான்மையான சமூகம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது என்பதை நான் இந்த இடத்தில் ஞாபகமூட்ட விரும்புகின்றேன் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

சஜீத் பிரேமதாசவை ஜனாதிபதியாக கொண்டு வரவேண்டும் என்பதற்காக தனித் தனியாகவும், குழு குழுவாகவும், கட்சி கட்சியாகவும், கட்சிகள் இணைந்த ஒரு கூட்டணியாகவும் பல முயற்சிகள் இன்று நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சஜீத் பிரேமதாசவை ஜனாதிபதியாக கொண்டு வருவதற்கு எமது பொத்துவில் பிரதேச மக்கள் நன்றி மறக்காதவர்கள் என்பதை இந்தத் தேர்தலில் வெளிக்காட்டுவார்கள் என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.

Posted in இலங்கை செய்திகள்

கமராக்கள் மூலம் வன்முறைகளை கண்காணிக்கிறோம் – போலீசார் அறிவிப்பு

இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஏற்படும் வன் முறைகளை தடுப்பதற்கு தாம் கமராக்கள் மூலம் கண்காணித்து வருவதாக போலீஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார் .வன்முறைகள் அதிகரித்து செல்வதை தடுக்கும் முகமாக இந்த செயல்முறை நகர்வுகள் மேற்கொள்ள படுவதாக அவர் தெரிவித்துள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் நடத்திட –15ம் திகதி பாடசாலைகள் விடுமுறை -கல்வி அமைச்சு

தேர்தல் நடத்திட –15ம் திகதி பாடசாலைகள் விடுமுறை -கல்வி அமைச்சு- எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை அடுத்து நவம்பர் 15 ஆம் திகதி அணைத்து பாடசாலைகளும் விடுமுறை விட படுகிறது என தேர்தல் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது

Posted in இலங்கை செய்திகள்

வடக்கில் தமிழர்கள் காணிகள் இரண்டு வருடத்தில் விடுவிக்க படும் – ரணில் கூப்பாடு

,,தா,ம் ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் எதிர் வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் வடக்கில் தமிழர்கள் காணிகள் விடுவிக்க படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார் ,இவர்களது ஆட்சி காலத்தில் ல் ஏன் அந்த காணிகள் விடுவிக்க படவில்லை என்பதற்கு இவர் பதில் கூறவில்லை ,மேலும் இராணுவம் வடக்கு பகுதியில் இருந்து விலகாது என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

தமிழக மீனவர்கள் எங்கள் எதிரி சிங்கள கடற்படை

தமிழக மீனவர்கள் எங்கள் எதிரி சிங்கள கடற்படை

இந்தியா தமிழக மீனவர்கள் எங்கள் எதிரி என சிங்கள கடற்படை மிரட்டல் பாணியில் தெரிவித்துள்ளது .

இந்திய தமிழக மீனவர்களுக்கு சிங்கள கடற்படை விடுத்துள்ள மிரட்டல் தமிழக மீனவ

மக்கள் கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கை அரசுக்கு சொந்தமான கச்சத்தீவு கடல்பகுதிக்குள் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபடுவது சட்டவிரோதமானது என சிங்கள கடற்படை தமிழக மீனவர்களுக்கு எச்சரித்துள்ளது .

அவ்வாறு அத்து மீறி மீன் பிடியில் ஈடுபடும் மீனவர்கள் அதிரடியாக எதிரி போல கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க படுவார்கள் என சிங்கள கடற்படை மிரட்டல் விடுத்துள்ளது .

எதிரி மீனவர்களாக தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை பார்ப்பதில் இருந்து இந்தியா இலங்கைக்கு இடையில் முறுகளை ஏற்படுத்தியுள்ளது .

தமிழக மீனவர் எங்கள் எதிரி என சிங்கள கடற்படை மற்றும் அதன் ஆளும் இலங்கை அரசு செயல் பாடுகள் இடித்து கூறுகிறது .

சிங்கள தேசம் தமிழர்கள் தங்கள் பரம எதிரி தமிழர்கள் என்றவாறு பயணிப்பது வேதனை தரும் ஒன்றாக உள்ளதாக சமூக நலவாதிகள் கருத்துரைத்துள்ளனர் .

    கொத்து ரொட்டி லண்டனில் ரோட்டு கடையில் அசத்தும் தமிழ் பெண்
    Posted in இலங்கை செய்திகள்

    சஜித் பிரேமதாசாவுக்கே தமது ஆதரவு தமிழரசு கட்சி

    சஜித் பிரேமதாசாவுக்கே தமது ஆதரவு தமிழரசு கட்சி

    இலங்கையில் இடம்பெறவுள்ள தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்கே தமது ஆதரவு என தமிழரசு கட்சி தமிழரசு கட்சியானது அறிவித்துள்ளது .

    ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான வேட்ப்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு தமது ஆதரவை வழங்கும் என தமிழரசு கட்சியின் கூட்டத்தில் இன்று ஏகமனதாக அறிவிக்க பட்டுள்ளது.

    ,தமிழ் காட்சிகளில் முதல் அதிரடி அறிவிப்பாக இந்த கட்சியிடம் இருந்து இவ்விதம் முதல் அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது .

    இந்த திடீர் ஆதரவும் கூட்டிணைவும் முன்னர் எதிர்பார்த்த ஒன்றே என்பது கருத்தாக உள்ளது .

    சஜித் பிரேமதாசாவுக்கே தமது ஆதரவு என்ற இலங்கை தமிழரசு கட்சி ஆதரவு நிலை எதிர் தரப்பு அரசியல் களத்தில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது .

    சஜித் பிரேமதாசாவுக்கு வழங்க படும் தமது ஆதரவு ஊடாக தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு கண்டு விடலாம் என்பது தமிழரசு கட்சி கொள்கை நிலையாக உள்ளது .

      கொத்து பரோட்டா ரோட்டு கடை சுவையில் வாங்க செய்யலாம் Parotta in Tamil /SAMAYAL TAMIL
      Posted in இலங்கை செய்திகள்

      விவசாயிகளுக்கு ஐஸ் வைக்கும் கோட்டபாய

      விவசாயிகளுக்கு ஐஸ் வைக்கும் கோட்டபாய

      இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் விவசாயிகளுக்கு ஐஸ் வைக்கும் கோட்டபாய பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது .

      அதன் வேட்பாளர்களும் கடுமையான பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

      இதில் கூட்டம் ஒன்றில் பேசும் பொழுது கோட்டபாய ராஜபக்ஸே தான் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு வழங்க படும் பொருட்களுக்கு வரி விலக்க படும் என கோட்டபாய வாக்குறுதிகளை அள்ளி விதைத்து வருகின்றார் .

      விவசாயிகளுக்கு திடீர் ஐஸ் வைக்கும் கோட்டபாய ராஜபக்ஸே பிரச்சாரா பீரங்கி வேட்டு தாக்குதல் அதிக வாக்குகளை பெற்று கொள்ளும் நோக்கம் கொண்டவை .

      அதனை இலக்கு வைத்தே கோட்டபாய ராஜபக்ஸே தனது அரசியல் ஆடுகளத்தை ஆட்டி வருகிறார் .

        Posted in இலங்கை செய்திகள்

        ஆயுதங்களுடன் நபர் ஒருவர் மடக்கி பிடிப்பு

        ஆயுதங்களுடன் நபர் ஒருவர் மடக்கி பிடிப்பு

        இலங்கை பூண்டுலோயா பகுதியில் ஆயுதங்களுடன் நடமாடிய நபர் ஒருவர் காவல்துறையால் மடக்கி பிடிக்க பட்டுள்ளார் .

        கைதானவர் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் .

        இவர் எவ்விதம் இந்த இந்த ஆயுதங்கள் பெற்று கொண்டார் என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

        காவல்துறை மேற்கொள்ளும் விசாரணையில் இருந்து இருந்தே பின்புலத்தில் செயல் படும் ஆயுத வியாபார கும்பல் தொடர்பான விடயங்கள் தெரிய வரும் என எதிர் பார்க்க படுகிறது .

        எதிரிகளை கொலை செய்யும் நோக்குடன் இந்த ஆயுதங்கள் எதிரி குழுவால் வழங்க பட்டு இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது .

          Posted in இலங்கை செய்திகள்

          யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை

          யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை

          யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் மருத்துவ பீடத்தில் கல்வி கற்ற மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

          குறித்த மாணவன் கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்ட போதிலும் அவரின் சடலம் நேற்று (03) கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

          யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அந்த மாணவன் தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அதனை பரிட்சித்த வீட்டார் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டமையை அறிந்துள்ளனர்.

          யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் மருத்துவ பீடத்தில் 4 ஆம் ஆண்டில் கல்விக் கற்ற இந்த மாணவன் மன்னார் பள்ளிமுனையை சேர்ந்தவராவார்.

          நியூமன் என்ற 26 வயதான மாணவனே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

            Posted in இலங்கை செய்திகள்

            விமல் வீரவன்சா கைது ஒத்தி வைப்பு

            விமல் வீரவன்சா கைது ஒத்தி வைப்பு

            இலங்கையில் மகிந்தவின் வாயாக செயல் பட்டு வரும் விமல் வீரவன்சா கைது ஒத்தி வைப்பு இடம்பெறுள்ளது .

            விமல் வீரவன்சாவுக்கு எதிராக தொடுக்க பட்ட வழக்கு எதிர்வரும் மாசி மாதம் 17 ம் திகதி வரை ஒத்தி வைக்க பட்டுள்ளது .

            இலங்கையில் ஏற்படவுள்ள தேர்தலை அடுத்து இந்த கைது சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றமை குறிப்பிட தக்கது .

            விமல் வீரவன்சா கைது ஒத்தி வைப்பு நடவடிக்கை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் கட்டளையின் கீழ் செயல்படுவதாக நோக்க படுகிறது .

              Posted in இலங்கை செய்திகள்

              காவல்துறையால் 35.702 பேர்அதிரடியாக கைது

              காவல்துறையால் 35.702 பேர்அதிரடியாக கைது

              இலங்கையில் இந்த வருடம் முழுவதுமாக இதுவரை சுமார் 35.702 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

              இவர்களிடம் இருந்து 1638 கிலோ போதை வாஸ்து என்பன மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

              இலங்கையில் அதிகரித்து வரும் போதைவஸ்து பாவனைகள் மற்றும் அதனால் பெருகி வரும் குற்ற செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது .

                Posted in இலங்கை செய்திகள்

                சுதந்திர கட்சிக்கு எதிராக செயல்படுவர்கள் மீது கடும் நடவடிக்கை

                சுதந்திர கட்சிக்கு எதிராக செயல்படுவர்கள் மீது கடும் நடவடிக்கை

                இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நகர்வுகள் சூடு பிடித்துள்ள நிலையில் சுதந்திர கட்சிக்கு எதிராக செயல்படுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க படும் என மிரட்டல் விடுக்க பட்டுள்ளது .

                சுதந்திர கட்சிக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க படும் என அந்த கட்சி அதிரடியாக அறிவித்துள்ளது .

                தமது கட்சிக்கு எதிராக செயல்படுவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள படும் என அடித்து கூற பட்டுள்ளது .

                  Posted in இலங்கை செய்திகள்

                  பல ஜனாதிபதிகள் வழங்காத தீர்வு என்னால் வழங்கப்படும் – சஜித் சூளுரை

                  பல ஜனாதிபதிகள் வழங்காத தீர்வு என்னால் வழங்கப்படும் – சஜித் சூளுரை

                  பல ஜனாதிபதிகள் வழங்காத தீர்வு என்னால் வழங்கப்படும் என சஜித் சூளுரை விடுத்துள்ளார் .

                  காலி, மாபலகம பகுதியில் நேற்று (03) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் கலந்து கொண்ட சஜித் பிரேமதாச இவ்விதம் கருத்து தெரிவித்தார்.

                  இதன் போது வௌ்ள நீரே மாபலகம பகுதியில் மக்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினை என சஜித் பிரேமதாசா சுட்டிக்காட்டினார்.

                  இதனால் அரசாங்க பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவரை இப்பகுதிக்கு அனுப்பி இங்கு ஏற்படும் வௌ்ள நீர் அபாயத்தை கட்டுப்படுத்த திட்டம் ஒன்றை வகுத்து வருகின்றோம் என சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

                  நான் நாட்டின் ஜனாதிபதியாக ஆட்சிக்கு வந்தால் பல ஜனாதிபதிகள் வழங்காத தீர்வு என்னால் வழங்கப்படும் என சஜித் பிரேமதாச சூளுரைத்துள்ளார் .

                    இட்லி தோசைக்கு பதிலாக 10 நிமிடத்தில் ஈசியான டிபன் sidedish தேவையில்லை| உடனடி டிபன்|No sidedish டிபன்
                    Posted in இலங்கை செய்திகள்

                    காலியில் கோர விபத்து 2 பெண்கள் பலி- 7 பேர் படுகாயம்

                    காலியில் கோர விபத்து 2 பெண்கள் பலி- 7 பேர் படுகாயம்…!

                    காலி – அகுரெஸ்ஸ வீதியின் இமதுவ அகுலுகங்க சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

                    மின்சார சபைக்கு சொந்தமான லொறி ஒன்றும் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றும்

                    ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                    விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 7 பேர் காயமடைந்த நிலையில், கராபிட்டிய

                    வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

                      Posted in இலங்கை செய்திகள்

                      கோட்டா வேண்டாம் வெள்ளைவான் வேண்டாம் ரணில்

                      கோட்டா வேண்டாம் வெள்ளைவான் வேண்டாம் ரணில்

                      இலங்கை தேர்தலில் அன்னத்துக்கு வாக்களித்தால்,கோட்டா  இல்லை  வெள்ளை வான் இல்லை என யாழில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் ரணில் தமிழில் உரையாற்றினார்.

                      முன்னர்  ஊருக்குள் வெள்ளை வான்  தான் வந்தது  ஆனால் இன்று எமது ஆட்சியில்  தொலைபேசி அழைப்பு கொடுத்தவுடன் அவசர சேவை ஆம்புலன்ஸ் தான்   வருகின்றது என உரையாற்றியுள்ளார் .

                      கோட்டா வேண்டாம் வெள்ளைவான் வேண்டாம் எனக்கு ஒட்டு போடுங்கள் என்கிறார் ரணில் விக்கிரமசிங்கே .

                        Posted in இலங்கை செய்திகள்

                        யாழ் நாகவிகாரை சென்று வழிபட்ட ரணில் குழு- யாழில் பிரச்சாரம் ஆரம்பம்..!

                        யாழ் நாகவிகாரை சென்று வழிபட்ட ரணில் குழு- யாழில் பிரச்சாரம் ஆரம்பம்..!

                        தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் பொருட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் யாழிற்கு விஜயம் செய்துள்ளனர்

                        யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க இன்று காலை யாழ் நாகவிரையில் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்.

                        ஐனாதிபதி தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்காக வடக்கிற்கு நேற்று விஐயம் செய்துள்ள பிரதமர் தலைமையிலான குழுவினர் யாழில் தங்கியிருந்து பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

                        இன்று காலையில் யாழ் நகரிலுள்ள நாகவ்விகாரைக்கு சென்று விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன் போது நாகவிகாரையின் விகாராதிபதியையும் சந்தித்து கலந்துரையாடினார்.