Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
இலங்கையில் ஜேர்மன் நாட்டு பெண் மரணம்
இலங்கையில் ஜேர்மன் நாட்டு பெண் மரணம்
இலங்கையில் வெளிநாட்டு கப்பலில் வருகை தந்த ஜெர்மன் நாட்டு பெண்
ஒருவர் தற்பொழுது பலியாகியுள்ளார் என இலங்கை அறிவித்துள்ளது
வைரஸ் நோயினால் அடையாளம் காணப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்திய
பொழுதும் இவர் மரணமாகியுள்ளார் என இலங்கை தெரிவித்துள்ளது
இலங்கையில் இதுவரை 214 பேர் பாதிக்க பட்டும் ஏழுபேர்
மரணமடைந்துள்ளது குறிப்பிட தக்கது

மருத்துவ ஊழியர்களை ஏற்றி சென்ற பேரூந்து விபத்து
மருத்துவ ஊழியர்களை ஏற்றிசென்ற பேரூந்து விபத்து
இலங்கையில் மருத்துவ ஊழியர்களை காவியபடி படி பயணித்த, பயணிகள்
பேரூந்து ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியதில் ,பேரூந்து பலத்த சேதமடைந்துள்ளது
எனினும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
இலங்கை சீனா தூதரக டிவிட்டர் கணக்கு முடக்கம் – அதிர்ச்சியில் சீனா
இலங்கை சீனா தூதரக டிவிட்டர் கணக்கு முடக்கம் – அதிர்ச்சியில் சீனா
இலங்கையில் உள்ள சீனா தூதரகத்தின் டுவிட்டர் கணக்கு அதிரடியாக
முடக்கம் செய்யப் பட்டுள்ளது ,சீனாவில் இருந்து இலங்கைக்கு வழங்க
பட்ட கொரனோ சோதனை கருவிகள் போலியானவை எனசீனா தூதரகத்திடம் இலங்கை அறிவித்ததது .
அதற்கு டுவிட்டரில் பதிவேற்ற பட்ட பதில் ஒன்றின் காரணமாக இந்த
திடீர் முடக்கம் ஏற்பட்டுள்ளது ,சீனா மீது இலங்கையை போல
அமெரிக்காவும் கடும் கோபத்தில் உள்ளமை குறிப்பிட தக்கது

வெளிநாட்டு கப்பலில் வந்த மாலுமிக்கு கொரனோ
வெளிநாட்டு கப்பலில் வந்த மாலுமிக்கு கொரனோ
சர்வதேச கொள்கலன் கப்பலான MSC TARANTO கப்பலில் பணியாற்றிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பதாக
ஏற்பட்ட சந்தேகத்தில் அவரை மேலதிக மருத்துவ பரிசோதனைக்கு மற்றும் சிகிச்சைக்காக இன்று (2020 ஏப்ரல் 13) காலை கொழும்பு
துறைமுகத்திற்கு கொண்டு வர இலங்கை கடற்படை நடவடிக்கையை மேற்கொண்டது.
லைபீரியாவைச் சேர்ந்த கொள்கலன் கப்பலான MSC TARANTO என்ற கப்பலுக்கு சேவைகளை வழங்கும் உள்ளூர் நிறுவனமான MSC
லங்காவால் சந்தேகத்திற்குரிய ஊழுஏஐனு-19 நோயாளி ஒருவர் குறித்த கப்பலில் இருப்பதாகவும் அவரை இலங்கையில்
இறக்கிவிடுமாறும் கோவிட் -19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்திடம் கோரியுள்ளது. அதன்படி, கடற்படைத் தளபதி வைஸ்
அட்மிரல் பியால் டி சில்வாவின் மேற்பார்வையின் கீழ்இ பாதுகாப்பு அமைச்சின் ஒப்புதலுடன்இ 36 வயதான பிலிப்பைன்ஸ் நாட்டைச்
சேர்ந்த சோலிஸ் ரியான் என்ற நபரை இன்று கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வர இலங்கை கடற்படை உடனடி நடவடிக்கை எடுத்தது.
கடற்படையின் வேதியியல்இ உயிரியல்இ கதிரியக்க மற்றும் அணுசக்தி (Chemical, Biological, Radiological and Nuclear) அவசரநிலை
பதிலளிப்பு பிரிவு கொழும்பு துறைமுகத்திலிருந்து சுமார் 05 கடல் மைல் தொலைவில் உள்ள கப்பலை அணுகி, சுகாதார
நிபுணர்களால் அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நோய்வாய்ப்பட்ட நபரை கரைக்கு கொண்டு வந்தது.
இதனையடுத்துஇ ‘சுவாசரிய’ ஆம்புலன்ஸ் சேவையால் நோயாளியை கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு
செல்வதற்கு முன்பு அவர் துறைமுக வளாகத்திலேயே கிருமி நீக்கம் செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் விரைந்த இராணுவ தளபதி – நடந்தது என்ன ..?
யாழ்ப்பாணம் விரைந்த இராணுவ தளபதி – நடந்தது என்ன ..?
இலங்கை இராணுவ தளபதி சவேந்திர சிலாவ் திடீரென யாழ்ப்பாண
கடல் படை கட்டளை தலைமையகத்திற்கு பயணம் செய்தார்
இவரது இந்த திடீர் பயணம் ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது
வடக்கு
கடற்படை கட்டளை தலைமையகம் சென்ற இவர் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்
கொரனோ நோயின் தாக்குதல் எதிர் காலத்தில் அதிகரிக்கலாம் என்ற
நிலையில் இவரது இந்த திடீர் பயணம் அமைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

லண்டனில் பொலிசாரால் தமிழர் கைது video
லண்டனில் பொலிசாரால் தமிழர் கைது
லண்டனில் கொரனோ வைரஸ் காரணமாக மக்களை தேவையற்று வெளியில் நடமாட வேண்டாம் என தெரிவிக்க பட்டிருந்தது ,
அவ்வாறான வேளையில் தமிழர் ஒருவர் மதம் பரப்பும் நடவடிக்கையில் ஈடுபட்ட பொழுது காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார் .
காவல்துறையினர் எடுத்து கூறிய பொழுதும் அவர்களுடன் இவர் தர்க்கம் புரிந்த நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது
மக்களுக்கு இடையூறு இல்லாது இதனை புரிய வேண்டும் என விதிகள் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இவரை முகநூலில் மக்கள் கடுமையாகி விமர்சித்து வருவதை அவதானிக்க முடிகிறது .
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது click here video இதில அழுத்தி காணொளி பார்க்க

கொரனோ தொற்று – 27 மருத்துவ ஊழியர்கள் தனிமை படுத்தல்
கொரனோ தொற்று – 27 மருத்துவ ஊழியர்கள் தனிமை படுத்தல்
இலங்கையில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி
இதுவரை ஏழுபேர் பலியாகினர் ,மேலும் 217 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இந்த நோயாளிகளுக்கு சிச்சை வழங்கிய மருத்துவ ஊழியர்கள் 27 பேர் தற்போது தனிமை படுத்த பட்டுள்ளனர் .
இவர்களுக்கு கொரனோ நோயானது இருக்கலாம் என்ற நிலையில் இந்த
அவசர தனிமை படுத்தல் இடம் பெற்றுள்ளது எதிர் வரும் இருவாரங்களில்
இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதால் மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

காவல்துறைக்கு மூன்று கொரனோ தடுப்பு முகாம்கள் அமைப்பு
காவல்துறைக்கு மூன்று கொரனோ தடுப்பு முகாம்கள் அமைப்பு
இலங்கையில் கொரனோ நோயானது காவல்துறையினருக்கு ஏற்படும்
பட்சத்தில் அவர்களை தனிமை படுத்த மூன்று தனிமை படுத்தல் முகாம்கள் அமைக்க பட்டுள்ளது என தெரிவிக்க பட்டுள்ளது
எதிர் வரும் நாட்களில் இந்த நோயானது வேகமாக பரவும் அபாயம் உள்ளது
என கருதும் இலங்கை சுகாதர அமைப்பு இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையில் தம்மை ஈடுபடுத்தியுள்ளது குறிப்பிட தக்கது

இலங்கையில் 214 பேர் கொரனோவால் பாதிப்பு
இலங்கையில் 214 பேர் கொரனோவால் பாதிப்பு
இலங்கையில் இதுவரை கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி
214 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் இன்று நான்கு பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்
இதுவரை ஏழுபேர் இறந்துள்ளனர் ,தொடர்ந்து பதின் மூவாயிரத்து மேற்பட்டவர்கள்
தனிமை படுத்த பட்டுள்ளனர் ,எதிர்வரும் நாட்களில் இந்த
நோயானது வேகமாக பரவும் அபாயம் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
தமிழர் கடல் பகுதி எங்கும் இராணுவம் குவிக்க பாட்டு இறுக்கமான கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ளது

வெளிநாடுகளில் கொரனோவில் சிக்கி 35 தமிழர்கள் பலி
வெளிநாடுகளில் கொரனோவில் சிக்கி 35 தமிழர்கள் பலி
ஐரோப்பா ,கனடா,அமெரிக்கா ,அவுஸ்ரேலியா ,தழுவிய நிலையில் வேகமாக பரவி வரும் கொரனோ
நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை முப்பத்தி ஐந்து இலங்கையர்கள் பலியாகியுள்ளனராம்
இதில் அதிகமானவர்கள் தமிழர்கள் ஆவர் .
இந்த விபரங்கள் இதுவரை கொரனோ நோயில் சிக்கி இறந்தவர்கள் என சமூக வலைத்தளங்கள் மூலம் உறுதி படுத்த பட்ட பகிர்வுகள் மூலம் கண்டறிய பட்டுள்ளது
ஆனால் ,அவதானிப்பின் பிரகாரம் அறுபது இலங்கையர்கள் வரை பலியாகியுள்ளனர் .கொரனோவால் இறந்த பொழுதும் ,அதனை
மறைத்து அறிவிக்க படாத மரணங்களும் உள்ளன ,அவற்றை வைத்து நோக்கும் பொழுதே இந்த திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது
கொரனோ நோயால் இறந்தால் தம்முடன் தொடர்பு கொள்ளும் மக்கள் ஒதுக்கி விடுவார்கள் எனவும் ,அது ஏதோ எயிட்ஸ் நோய்
போன்ற தொன்று என்ற கருதும் நம்ம தமிழர்கள் சிலர் ,இவ்வாறானமரணங்களை கவுரவ நிலை காரணமாக மறுத்து வருகின்றனர் என பேச படுகிறது
இது தமிழர் தேசத்திற்கு ஏற்பட்ட மிக பெரும் இழப்பாக பார்க்க படுகிறது
பிரிட்டனில் அதிக மரணகள் நிகழ்ந்துள்ளன .
தமிழர் கடைகளில் பணியாற்றி வந்த நபர்கள்,மற்றும் டாக்சி சாரதிகளே இறந்தவர்களில் அதிகமாக காண படுகின்றனர்
மக்களே அலட்சிய போக்கினை கைவிட்டு ,வீட்டில் தங்கி இருங்கள் ,வெளியே செல்லாதீர்கள் ,இது அரசின் அவசர தொடர் எச்சரிக்கை
,மேலும் நான்கு வாரஙகளுக்கு லக் டவுன் நீடிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

தமிழர் பகுதியில் கடற்படை தீவிர ரோந்து – அவர்களை பிடிக்க வேட்டை ஆரம்பம்
தமிழர் பகுதியில் கடற்படை தீவிர ரோந்து – அவர்களை பிடிக்க வேட்டை ஆரம்பம்
இலங்கை தமிழர் தாயாக பகுதிகள் எங்கும் சிறப்பு கண்காணிப்புக்குள் இலங்கை கடல்,படை கொண்டு வந்துள்ளது
,இவர்களுக்கும் உதவியாக விமான படையினரும் ஈடுப்படுத்த ப்பட்டுள்ளனர்
சட்ட விரோத அகதிகள் இலங்கைக்குள் நுளைந்து அவருகின்றனர் என்ற தகவல் கிடைக்க பெற்றதை அடுத்து இந்த தீவிர கண் கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ளது
தமிழர்களே இந்தியாவில் இருந்து கடல்வழியாக இலங்கை திரும்புகின்றனர் என்ற தகவலின் அடிப்படையில் சிங்கள கடல்
படையினர் வடக்கு ,வடகிழக்கு ,மேற்கு,கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ளதுடன் ,
இந்தியா கடற்படையினருக்கும் இது தொடர்பாக தாம் அறிவித்துள்ளதாகக் இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்
உண்மை அதுவல்ல என்பதும் பெரும் போதைவஸ்து கடத்தல் இடம்பெறுகிறது ,அதனை தடுக்கவும் ,அந்த பெரும் மாபியா
போதை வஸ்து கும்பல் கடத்தலை முறியடிக்கவும் இந்த வேட்டையில் கடற்படை ஈடுபட்டுள்ளது என்பதே நமது அவதானிப்பு
அகதிகளை பிடிக்க எதற்கு இவ்வித அடுக்கு பாதுகாப்பபு…?,மக்கள் காதில் பூ சுற்றும் இலங்கை கடல் படையின் இந்த கபடி விளையாட்டு .காதில பூ கந்தசாமி .புத்தம் சரணம் கச்சாமி……

ஊரடங்கு சட்டத்தை அலட்சியம் செய்து சுற்றித் திரிந்த 25,031 பேர் கைது
ஊரடங்கு சட்டத்தை அலட்சியம் செய்து சுற்றித் திரிந்த 25,031 பேர் கைது
இலங்கையில் அரசினால் விதிக்க பட்டிருந்த ஊரடங்கு சட்டத்தை அல்டசியம்
செய்து வீதிகளில் சுற்றி திருந்த சுமார் இருபத்தி ஐந்தாயிரத்து முப்பத்தி
ஒரு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப் பட்டவர்களில்
வாகனங்களில் பயணித்தவர்கள் வாகனங்களும் பறிமுதல் செய்யப் பட்டுள்ளதுடன்
விதிகளை மீறி செயல் பட்டனர் என்ற குற்ற சாட்டில் ஐநூறு ரூபா முதலான தண்டமும் அறவிட பட்டுள்ளது
மேலும் இவ்வாறு வீதிகளில் சுற்றுவார்கள் கைது செய்ய பட்டு தனிமை
படுத்தல் முகாம்களில் அடைத்து வைக்க படுவார்கள் என அரசு எச்சரித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

கொரனோ நோயின்றி 60 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு
கொரனோ நோயின்றி 60 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு
இலங்கையில் கொரனோ நோயின் தாக்குதல் பீதியில் கைது செய்யப்பட்டு
தனிமை படுத்தி வைக்க பட்டிருந்த 60 பேர் இன்று அவர்தம் வீடுகளுக்கு அனுப்பி வைக்க பட்டுள்ளனர்
14 நான்கு முதல் இருபத்தி நான்கு நாட்கள் சிறப்பு முகாம்களில் தனிமை
படுத்தலுக்கு உள்ளாக்க பட்டு வந்த இவர்களே இப்பொழுது இவ்விதம்
விடுதலை செய்ய பட்டுள்ளனர் என இலங்கை இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
மேலும் 17 முகாம்களில் பல்லாயிரம் மக்கள் தனிமை படுத்தலுக்கு
உள்ளாக்க பட்ட நிலையில் உள்ளமை குறிப்பிட தக்கது

கள்ள சாராயம் தயாரித்த கும்பல் மடக்கி பிடிப்பு
கள்ள சாராயம் தயாரித்த கும்பல் மடக்கி பிடிப்பு
இலங்கையில் ஊரடங்கு வேளையில் கட்டுக்குள் மறைந்திருந்து கள்ள
சாராயம் காய்ச்சிய கும்பல் ஒன்றை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
வடி சாராயங்களை அதிக விலைக்கு மேற்படி நபர்கள் விற்று வருகின்றனர்
மதுபான சாலைகள் பூட்ட பட்டுள்ள நிலையில் இந்த சாராயங்களு தற்பொழுது
மவுசு ஏற்பட்டுள்ளது ,பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய
தகவலை அடுத்து இவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

கொரனோ வதந்தி பரப்பிய ஏழுபேர் அதிரடி கைது – மக்கள் வாய்க்களிற்கு பூட்டு
கொரனோ வதந்தி பரப்பிய ஏழுபேர் அதிரடி கைது – மக்கள் வாய்க்களிற்கு பூட்டு
இலங்கையில் ஏற்பட்டுள்ள வைரஸ் நெருக்கடி நிலை தொடர்பாக உண்மைக்கு
புறம்பான செய்திகளை பரப்பிய ஏழு பேரை தம் கைது செய்துள்ளதாக இலங்கை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்
போலி செய்திகளை பரப்பி மக்களை பீதி கொள்ள வைத்த மேற்படி ஏழுபேரும்
கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்ட பின்னர்
நீதிமன்றில் முன்னிலை ப்படுத்தப்படவுள்ளனர்
இலங்கையில் ஏற்படும் பாதிப்புக்களை அரசு மூடி மறைத்து வருவதாக
விமர்சனங்கள் பலமாக மக்களினால் முன் வைக்க பட்டு வருகிறது
அவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பவர்களை வதந்தி பரப்பினார்கள் என போலீசார் கைது செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது
மக்களை காப்பாற்றுவதே என் நோக்கு – புத்தாண்டு செய்தியில் கோட்டபாய
மக்களை காப்பாற்றுவதே என் நோக்கு – புத்தாண்டு செய்தியில் கோட்டபாய
நாட்டுக்கும் மக்களுக்கும் ஏற்படும் எந்தவொரு சவாலுக்கும் முகம்கொடுப்பதற்கு
தன்னார்வமாக ஒன்றுபடும் எமது மக்கள் இந்த பண்டிகை காலத்திலும் சமூக
இடைவெளியை பேணி வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்கு அர்ப்பணிப்புடன்
செயற்படுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகின்றேன்.
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாழில் மக்களுக்கு உதவும் இராணுவம்
யாழில் மக்களுக்கு உதவும் இராணுவம்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையிலும் நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக யாழ்
மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்களை
விநியோகிப்பதற்கு யாழ் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் அதிகாரிகளுக்கு
யாழ் பாதுகாப்புப்படை தலைமையகத்தில் உள்ள படையினர் உதவி அளித்தனர்.
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சமுர்த்தி உதவி பெறுவோர், சிறுநீரக
நோயாளர்கள், அங்கவீனமுற்றோர், சிரேஷ்ட பிரஜைகளுக்கான உதவி பெறுவோர்
ஆகியோருக்கு நிவாரண நிதியுதவியினை பகிர்ந்தளிக்க படையினரால் உதவியளிக்கப்பட்டது.
யாழ் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் இத்திட்டத்தின் ஊடாக நிதி உதவியைப் பெற்றுக் கொடுக்குமாறு
யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரிவுகள், பிரிகேட்கள், மற்றும் இராணுவ முகாம்கள் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு படை கட்டளைத்
தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரியவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கேற்ப அரச அதிகாரிகளினால் அங்கீகரிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு இத்திட்டத்தின்கீழ் ரூ. 5000 வழங்கப்படவுள்ளது.
அரசு அதிகாரிகளுடன் இணைந்து படையினரும் தெரிவுசெய்யப்பட்ட பயனாளர்களுக்கு வீடு வீடாகச் சென்று
வினியோக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி 203 பேர் பாதிப்பு
இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி 203 பேர் பாதிப்பு
இலங்கையில் நிலவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை 203 பேர்
பாதிக்க பட்டுள்ளனர் .ஏழுபேர் பலியாகியுள்ளனர் .
மேலும் பதின் மூன்றாயிரத்துக்கு மேற் பட்டவர்கள் நோயின்
சந்தேகத்தில் தனிமை படுத்த பட்டுள்ளனர்
மேலும் தனிமை பட்டவர்கள் தொடர்பில் அவர்க்ளின் தற்கால நிலைகள்
தொடர்பில் ஆராய்வதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்

இலங்கையில் கொரோனாவால் இறந்தால் இப்படித் தான் அடக்கம் செய்யவேண்டும் -அரசு அறிவிப்பு
இலங்கையில் கொரோனாவால் இறந்தால் இப்படித் தான் அடக்கம் செய்யவேண்டும் -அரசு அறிவிப்பு
புதிய கொரோனா வைரஸ் தொற்று நோயினால் மரணிப்பவரின் பூதவுடல் ,
தகனம் செய்யப்பட வேண்டிய முறை தொடர்பில், விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர். பவித்ரா வன்னியாரச்சியினால்
வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானியில் குறிப்பிபடப்பட்டுள்ள கட்டளைகளுக்கு
அமைய தகனம் செய்யப்பட வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கிளிநொச்சியில் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் தமிழர் சடலமாக மீட்பு
கிளிநொச்சியில் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் தமிழர் சடலமாக மீட்பு
இலங்கை கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியில் தமிழர் ஒருவர் இறந்த நிலையில் ஆற்றுக்குள் இருந்து சடலமாக மீட்க பட்டுளளார்
இரு தினங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து வெளியில் சென்ற இவர் மீள திரும்பவில்லை ,தற் பொழுது சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இவர் அடித்து கொலை செய்ய பட்ட நிலையில் இவ்விதம் ஆற்றுக்குள் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளதாக ஊர்வாசிகள் தெரிவிக்கின்றனர்
ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கொலை செய்ய பட்டுள்ளார் .
போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்







