Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
தீயில் எரிந்த 14 வீடுகள் – கண்ணீரில் மக்கள்
தீயில் எரிந்த 14 வீடுகள் – கண்ணீரில் மக்கள்
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எபோட்ஸிலி தோட்டத்தில் 14 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பில் நேற்றிரவு (02) 7
மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 வீடுகள் முற்றாக எரிந்து தீக்கிரையாகின. மேலும் 5 வீடுகளுக்கு பகுதியளவு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால் 50 இற்கும் மேற்பட்டவர்கள் நிர்க்கதியாகியுள்ளனர். இவர்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி உரிய
இடமொன்றில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
குறித்த தோட்டத்தில் கோவிலுக்கு அருகிலுள்ள நெருங்குடியிருப்பிலேயே இவ்வாறு தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
ஊரடங்கால் மக்கள் வீட்டுக்குள் இருக்கையில் திடீர் தீபரவல் ஏற்பட்டதால் மக்கள் பதறியடித்துக்கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு ஓடிவந்தனர்.
இதனையடுத்து பொலிஸாருக்கும், தீயணைப்பு பிரிவினருக்கும் தகவல் வழங்கப்பட்டது. இதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்த
அட்டன், டிக்கோயா நகரசபையின் தீயணைப்பு பிரிவினர், மக்களுடன் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினர்.
இதற்கிடையில் அப்பகுதியில் மக்கள் குவிந்ததால், சமூக இடைவெளியை பின்பற்றி உரிய வகையில் இருக்குமாறு பொலிஸாரால் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.
இத்தீவிபத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படாதபோதிலும், பெருமளவில் பொருட் தேசங்கள் ஏற்பட்டுள்ளன. வீட்டு
உபகரணங்கள், முக்கிய ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள்
தீக்கிரையாகியுள்ளன என்று மக்கள் தெரிவித்தனர். ஒரு சில பொருட்கள் மாத்திரமே மக்களால் பாதுகாக்ககூடியதாக இருந்தது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியபபடவில்லை. பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன

கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை 705 ஆக அதிகரித்துள்ளது..
சுகாதார பிரிவு இன்று காலை இதுதொடர்பாக குறிப்பிடுகையில் நோயாளர்களில் 172 பேர் குணமடைந்து வைத்திய சாலைகளில் இருந்து வெளியேறியிருப்பதாக தெரிவித்துள்ளது.
கொரோனா COVID -19 பரம்பலின் தரவுகள்
புதுப்பிக்கப்பட்டது 2020-05-03 06:59:19
705
உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்
526
சிகிச்சை பெறும் நோயாளிகள்
0
புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்
172
குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை
7
இறப்பு எண்ணிக்கை

கொரனோவால் குணமடைந்தவர் – மீளவும் பாதிப்பு
கொரனோவால் குணமடைந்தவர் – மீளவும் பாதிப்பு
ஜா – எல கபாலாகந்த பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட கொவிட் 19 தொற்றுக்கு இலக்கான நபர் பூரண குணமடைந்து
வீட்டுக்கு சென்ற ஒருவர் மீண்டும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.
இத்தாலியில் இருந்து வருகை தந்த ஒருவருடன் நெருங்கிய உறவை பேணிய ஒருவரே மீண்டும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.
இவர் கடந்த 16 ஆம் திகதி அவர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீட்டுக்கு சென்றிருந்தார்.
அவ்வாறு சென்ற அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டிருந்தார்.
எனினும் குறித்த நபர் கடந்த 30 ஆம் திகதி தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே அவர் மீண்டும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவை உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த நபரின் குடும்ப உறுப்பினர்களும் 21 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையில் வாலிபனை செருப்பால அடிக்கும் தமிழ் பெண் – வீடியோ
இலங்கையில் வாலிபனை செருப்பால அடிக்கும் தமிழ் பெண் – வீடியோ
இலங்கையில் மட்டக்களப்பு வீதியால் சென்ற பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் ஒருவரை மடக்கி பிடித்து
அவனை செருப்பால் அடிக்கும் காட்சி இது
இதில் அந்த பெண் செய்த செயல் சரி எனின் சரி எனவும் ,பிழை எனின் பிழை எனவும் வாதிடுக ,ஆனால் அடிவாங்கிய நபர் அந்த பெண்ணை சும்மா விடுவாரா ..?
பெண்ணின் காலில் வீழ்ந்து மன்னிப்பு கேட்கும் வாலிபரை இப்படி கொடூரமாக போட்டு தாக்கும் பெண்ணின் செயல் கண்டிக்க வேண்டியது .
சட்டத்தை இவர்கள் கையில் எடுத்தால் ,இலங்கை நீதிமன்ரறம் என்ன அப்பமா சுட்டு விக்கிறது என நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்
தற்போது மீள இந்த காணொளி வைரலாகி வருகிறது – இதில் அழுத்தி வீடியோ பார்க்க

பிரான்ஸ்,கனடா மருத்துவர்களுக்கு உணவளித்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !படம் உள்ளே
பிரான்ஸ்,கனடா மருத்துவர்களுக்கு உணவளித்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !படம் உள்ளே
கொரோனா வைரஸ் பெருந்தொற்று மனிதகுலத்திற்கு பெரும் உயிரச்சுறுத்தலாக மாறியுள்ள இவ்வேளையில், இதனை
எதிர்கொள்ளும் வகையில் உலகத் தமிழர்களுக்கான சிறப்புக்குழுவினை ( Corona – Tamils Task Force) நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைத்து செயற்படத் தொடங்கியுள்ளது.
கொரோனா நெருக்கடி நீண்டகாலத்துக்கு நீடிக்க இருக்கின்ற நிலையில், தமிழர்களின் நலன்களின் அடிப்படையில்
உடனடியானதும், நீண்டகாலத்துக்குமான செயற்திட்டங்களை வகுத்து தமிழர் தாயகம், புலம்பெயர் தமிழர்கள், உலகத் தமிழர்கள் என செயற்படத் தொடங்கியுள்ளது.
மருத்துவம், விழிப்பு, பொருளாதாரம், சுற்றுச்சூழல், சமூகம், அரசியல் என பல்வேறு பரிமாணங்களில் கொரோனாக்காலம்,
கொரோனாவுக்கு பிந்திய காலம் என தனது செயற்திட்டத்தை கொரோனா – தமிழர்கள் சிறப்புக்குழு வகுத்து வருகின்றது.
குறிப்பாக கொரோனா வைரஸ் பெருந்தொற்று இலங்கைத்தீவில் இனம்காணப்பட்ட உடனேயே, அது தொடர்பிலான விழிப்பு
பிரச்சாரங்களை தமிழர் தாயகம் எங்கும் உள்நாட்டு தொண்டு அமைப்புக்கள் வழியே மேற்கொள்ளப்பட்டதோடு, ஒரு தொகுதி
முதியவர்களுக்கு உள்ளுரில் தயாரிக்கப்பட்ட சுவாச்சகவசங்களும் வழங்கப்பட்டன.
தொடர்ந்து ஊரடங்கு உத்தரவினால் வீடுகளில் முடங்கியுள்ள வறியநிலை மக்களுக்கு உணவுப்பொதிகள், அத்தியாவசிய
பொருட்களும் வழங்கப்பட்டு வருவதோடு, மக்களை சுயநிறைவுடன் எதிர்காலத்தில் இருக்கும் வகையில் வீட்டுத் தோட்டங்களை ஊக்குவிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றது.
இதேவேளை கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக களமாடிவரும் சுகாதாரப் பணியாளர்களுக்கு உணவுகளை வழங்கி
தமிழர்களின் நன்றியினையும் தோழமையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் செயலாற்றி வருகின்றது.
கனடாவின் ரொன்ரோவின் பெரும்பாகத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு உணவுப்பொதிகளை வழங்கும் பொருட்டு, முதற்கட்டமாக உணவுப்பொதிகள் வழங்கபட்டன. இதுபோல்
பிரான்சிலும் தலைநகர் பரிசில் Hôpital Bicêtreமருத்துமவனையின் அவரசப்பிரிவு சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டன.
கொரோனாவுக்கு எதிராக போராடிவரும் தேசங்களுக்கு தமிழர்களின் தோழமையினை நல்லெண்ணத்தோடு இவைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம் புலம்பெயர் தேசங்களில் கொரோனாவுக்கு இரையாகியுள்ள தமிழர்களின் விபரங்களையும் திரட்டி ஆவணப்படுத்தும் பணியிலும் இச்சிறப்புக்குழு ஈடுபட்டுள்ளது.

பிரான்ஸ் கனடா 


கற்பழிக்க படும் பெண்கள் – மர்மமாக நடக்கும் தற் கொலைகள் – அதிர்ச்சி வீடியோ
கற்பழிக்க படும் பெண்கள் – மர்மமாக நடக்கும் தற் கொலைகள் – அதிர்ச்சி வீடியோ
இலங்கையில் போர் முடிவடைந்த பின்பும் , போரால் பாத்திக்க பட்ட பெண்கள் தொடர்ந்து பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்க பட்டு வருவதாக முக்கிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது
நிறுவனங்களில் மேலதிக வேலைக்கு உட்படும் பெண்கள் அங்கு பணிபுரியும் ,நிறுவனர்கள்,அதிகாரிகளினால் ,பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த படுகின்றனர்
அதனால் மன வீரக்தி அடைந்த பெண்கள் தாமாகவே தூக்கு போட்டு பலியாகும் சம்பவங்கள் அதிகரித்து செல்ல படுகிறது
இவர்கள் இவ்வாறு பாதிக்க பாடுகின்றனர் ,என்பதனை இந்த விவரண காட்சி வெளியிடுகிறது .
பணியிடங்களில் 45 வீதமான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த படுகின்றனர் என்ற திடுக்கிடும் தகவலே இதுவாக உள்ளது
வேலைக்கு செல்லும் பெண்களில் எதனை பேர் இவ்விதம் பாதிக்க படமால் உள்ளனர் ..?
அதனை ஏற்று கொண்டு தமது குடும்பத்தை பாதுகாக்க எத்தனை பேர் சகித்து அதற்குள் தம்மை புதைத்து பயணிக்கின்றனர் ….?
கேள்வியோடே விடை தந்து நகர்கிறது இந்த காணொளி .இதுவே இன்றைய இலங்கையின் நிலவரம்

யாழில் கள்ள சாராயம் காய்ச்சிய கும்பல் மடக்கி பிடிப்பு
யாழில் கள்ள சாராயம் காய்ச்சிய கும்பல் மடக்கி பிடிப்பு
கசிப்பு உற்பத்தி செய்யப்படும் இடம் பொலிஸாரால் சுற்றிவளைப்பு
கோப்பாய், குப்பிளாவத்தையில் சட்டத்துக்குப் புறம்பாக கசிப்பு உற்பத்தி
செய்யப்படும் இடம் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது.
எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
அங்கு 45 லீற்றர் கசிப்பு, 150 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு
பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டன என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோப்பாய், சாவகச்சேரி, வட்டுக் கோட்டை
மற்றும் அச்சுவேலி பொலிஸ் பிரிவுகளில் கசிப்பு உற்பத்தி பெரியளவில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை

- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை

- கடற்படைத் தளபதி இந்திய உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி

- எம்பிலிப்பிட்டிய காகித ஆலை வளாகத்தில் தீ விபத்து

- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது

- குருண்டி ராஜமகா விகாரையில் காவல்துறை பாதுகாப்பு

- அனுராதபுர புனித நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஜனாதிபதி உத்தரவு

- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை

- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை

- கடற்படைத் தளபதி இந்திய உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி

- எம்பிலிப்பிட்டிய காகித ஆலை வளாகத்தில் தீ விபத்து

- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது

- குருண்டி ராஜமகா விகாரையில் காவல்துறை பாதுகாப்பு

- அனுராதபுர புனித நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஜனாதிபதி உத்தரவு

- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

பெண்ணோடு உலாவிய காவல்துறை அதிகாரி க்கு – ஆப்பு
பெண்ணோடு உலாவிய காவல்துறை அதிகாரி பதவி நீக்கம்
இலங்கையில் காவல்துறை அதிகாரி ஒருவர் தனிமை படுத்தல் விதிகளுக்கு
முரணாக பெண் ஒருவரை அழைத்து வந்து நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்த
வேளையில் அவர் ,தனிமை படுத்தல் விதிகளை மீறினார் என்ற
குற்ற சாட்டில் பதவி விலக்கல் செய்ய பட்டுள்ளார்
மேலும் அதே பெண்ணும் இவரும் தனி நபர்களாக தனிமை படுத்த பட்டுள்ளனர் ,
இந்த செயல்பாடுகள் இலங்கை காவல்துறைக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுளளது

புலனாய்வு கட்டமைப்பின் கீழ் கொவிட் 19 (COVID 19) முழுமையாக இல்லாதொழிக்க முடியும். அரச புலனாய்வுப் பிரிவு
புலனாய்வு கட்டமைப்பின் கீழ் கொவிட் 19 (COVID 19) முழுமையாக இல்லாதொழிக்க முடியும். அரச புலனாய்வுப் பிரிவு
30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது போன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலமைத்துவத்தின்
எண்ணக்கருவிற்கு அமைவாக கொவிட் 19 வைரசை நாட்டில் முழுமையாக இல்லாதொழிக்க முடியும் என்ற நம்பிக்கை உண்டு
என்று அரச புலனாய்வு பிரிவின் உதவிப் பணிப்பாளர் பராக்கிரம சில்வா தெரிவித்தார்.
சுகாதாரத்துடன் தொடர்புபட்ட இந்த நோய் தொற்றை தடுப்பதில் புலனாய்வு பிரிவு மேற்கொண்டு வரும் நடவடிக்கையில்
தனிப்பட்டவர்களின் பிரத்தியோக தகவல்களுக்கு எந்தவித குந்தகமும் ஏற்படாது. இதற்கான உறுதியை எம்மால் தெரிவிக்க
முடியும். எமது பணி நோயை இல்லாதொழிப்பதற்கு சுகாதார பிரிவின் நோயை தடுப்பதற்கான முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகும் என்று அவர் தெரிவித்தார்.
அரசாங்க தொலைக்காட்சி ஒன்றிற்கு இன்று காலை வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயங்களை தெரிவித்தார்.
தற்பொழுது இந்த வைரசு தொற்று நாட்டில் முழுமையாக
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளுளோம். நாட்டிலிருந்து இதனை முழுமையாக
இல்லாதொழிப்பதற்கான வலிமை சுகாதார பிரிவைப் போன்று பாதுகாப்பு தரப்பினருக்கும் இருப்பதாகவும் அவர் கூறினார்.
உலகில் புலனாய்வுத் துறையில் முன்னணியில் விளங்கும்
நாடுகளைப் போன்று இலங்கைப் புலனாய்வுப் பிரிவும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்தார். உலகில் இஸ்ரேல் போன் நாடுகள் புலனாய்வுத்
துறையில் முன்னணியில் திகழ்கின்றன. இருப்பினும் இவ்வாறான நாடுகளின் புலனாய்வு விடயங்களை நாம் பின்பற்றவில்லை. எமது நாட்டுக்கென புலனாய்வு சேவையொன்று எம்மிடம் உண்டு. இதன்
மூலமே எவறாலும் முடிவுக்கு கொண்டு வரமுடியாத என்று தெரிவிக்கப்பட்ட 30 வருட கால யுத்தத்தை நாம் வெற்றிகரமாக நிறைவு செய்தோம். இதற்கு தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய
ராஜபக்ஷ அப்போது தலமை தாங்கினார். அவரது எண்ணக்கருவிற்கு அமைவாக விடயங்களின் அடிப்படையிலே தற்பொழுது இந்த
கொவிட் 19 தொற்றை இல்லாதொழிப்பதற்கு புலனாய்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
குற்றச்செயல்கள் போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றிலேயே புலனாய்வு பிரிவினர் பாரிய நடவடிக்கைகளில்
மேற்கொள்கின்றனர். கொவிட் 19 எஎன்பது சுகாதார துறையுடன் சம்பந்தப்பட்ட நோய்த தொடர்பான விடயமாகும். இதில் இலங்கை
புலனாய்வு பிரிவு தமது பணியை எவ்வாறு முன்னெடுக்கின்றது குறித்து அவர் விவரித்தார்.
கடந்த ஓரிரு தினங்களில் 400 கொவிட் 19 நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டிருந்த நிலையில் இந்த எண்ணிக்கை திடீரென 600 ஆக அதிகரித்தது. இதற்கான காரணத்தை
விளக்குகையில், இந்த நோய் மார்ச் மாத காலப்பகுதியிலே இலங்கையில் வேகமாக பரவ ஆரம்பித்தது. இதற்கு முன்னதாக நாம் இந்த நோய் எவ்வாறு எத்துறைகள் மூலம் பரவ ஆரம்பித்தது
என்பதை 31 கொத்து அடிப்படையில் வகுத்து கொண்டோம். அதன் அடிப்படையில் சுற்றுலா பயணிகள், இரத்தினக்கல் வர்த்தகம், போதைப்பொருள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்,
விசேடமாக இத்தாலி போன்ற நாடுகளில்ருந்து வந்தவர்கள், சுதுவெல்ல பகுதியில் போதைப்பொருள் பாவணையில் ஈடுபட்டிருந்தவர்கள் போனற பிரிவுகளின் அடிப்படையில் நாம்
எமது புலனாய்வு நடவடிக்கைகளை நாம் விரிவுபடுத்தினோம். இதற்கமைவாக விசேடமாக சுதுவெல்ல பகுதியில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டிருந்தவர்கள் இந்த
நோயினால் பரிக்கப்பட்டிருந்ததை அடையாளங் கண்டோம். இவர்களுள் ஒருவர் கிராண்ட்பாஸ் பகுதியில் போதைப் பொருளை பெற்றுள்ளார். இதனை விற்பனை செய்தவருக்கு கொரோனா
தொற்று இருக்கவில்லை ஆனால் போதைப்பொருளை வாங்கியவருக்கு கொரோனா தொற்று காணப்பட்டுள்ளது. இவர்கள் மூலம் போதைப் பொருள் விற்பனை செய்தவர் தொடர்பு
கொண்டவர்கள் உள்ளிட்ட பல்வேறு மட்டத்தில் நாம் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு தகவல்களை பெற்று சுகாதாரப் பிரிவினருக்கு வழங்கினோம் என்றும் அவர் தெரிவித்தார்.
சுதுவெல்ல பகுதியில் அடையாளங் காணப்பட்ட கொவிட் 19 நோயாளி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் கடற்படையினர் அந்தப் பகுதியை முடக்குவதிலும் பாதுகாப்பு
வேலியை அமைப்பதிலும் தீவிரமாக ஈடபட்டிருந்தனர். இதனாலேயே வெலிசறை கடற்படை வீரர்கள் இந்த நோய்த்தொற்றக்குள்ளார்கள். இவர்களில் சிலர் விடுமுறையில்
வீடுகளுக்குச் சென்றிருந்தனர். இந்த கடற்படை முகாம் தனிமைப்படுத்தப்பட்டது. விடுமுறையில் சென்றிருந்த கடற்படை வீரர்கள் தொடர்புபட்டிருந்த குடும்ப உறுப்பினர்கள், நெருக்கமாக
பழகியவர்கள், அயலவர்கள் உள்ளிட்டவர்கள் அடங்கலாக சுமார் 800 பேரை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதார நடவடிக்கைகளுக்குமாக சுகாதார அதிகாரிகள் ஒழுங்குகளை
மேற்கொண்டனர். வெலிசறை முகாமில் 2000 வீரர்கள் இருக்கின்றனர். விடுமுறையில் சென்றிருந்தவர்கள் 500 பேர். முகாமைச் சேர்ந்த வீரர்கள் தமது முன்னைய முகவரியில் அல்லாது
வேறு இடங்களில் வசித்து வந்துள்ளனர். அதாவது திருமணத்திற்குப் பின்னர் இந்த இடமாற்றம் இடம்பெற்றுள்ளது. இவர்கள் அனைவரது
தகவல்களும் திரட்டப்பட்டன. என்றும் அவர் விபரித்தார். தற்பொழுது 88 233 பேர் தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேல்மாகாணத்தில் கொரோனா நோய் – சுகாதார சேவைகள் பணிப்பாளர்
மேல்மாகாணத்தில் கொரோனா நோய் – சுகாதார சேவைகள் பணிப்பாளர்
மேல்மாகாணத்தில் கொரோனா (கொவிட் 19) நிiலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாக சுகாதார
சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
தற்பொழுது மேல் மாகாணத்தில் பெரும் எண்ணிக்கையில் பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இது வரையில் பல்வேறு நோய் அனர்த்த குழுக்கள் தெரிவு செய்யப்பட்டு பிசீஆர்
பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இருப்பினும் நிலைமை மேலும் 100 சதவீதமாக கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக
தெரிவிக்க முடியாது. இந்த கட்டுப்பாடு எமது கையிலிருந்து நழுவிச் செல்லவில்லை என்பதுடன் கட்டுப்பாடுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாக பொறுப்புடன் தெரிவிக்க முடியும்.
எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி வரையில், திங்கட்கிழமையளவில் நாட்டு நிலைமையை வழமையான நிலமைக்கு கொண்டு வரமுடிகின்றமை அல்லது இல்லாமை தொடர்பில் எதிர்வுகூற
முடியாது. இருப்பினும் வெசாக் காலப்பகுதி வரை இந்த கடுங்கண்காணிப்பை முன்னெடுக்க வேண்டி ஏற்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க
சுட்டிக்காட்டினார். இதன் பின்னர் மேலும் சில காலம் செல்லும் வரையில் சுகாதரர ஆலோசனைகளை பின்பற்றுவதன் மூலம்
ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதாக நாளாந்த கடமைகளை மேற்கொள்வது கட்டாயமாகும்.
நேற்றைய (30.04.2020) தினத்தில் 1397 Pஊசு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பரிசோதனைகளுக்கு அமைவாக நோய்த் தொற்றுக்குள்ளானவர்கள் கண்டுபிடிக்கப்படுகின்றமை
சிறிய எண்ணிக்கையிலாகும். இருப்பினும் Pஊசு பரிசோதனை நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பொதுவான எண்ணிக்கை 1500 ஆக தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். இந்த பரிசோதனைகளுக்கு
உட்படுத்தப்படும் குழுக்கள் எவை என்பது எதிர்நோக்கும் நிலைமைக்கு அமைய தீர்மானிக்கப்படும். தேவையேற்படுமாயின் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பீசுPஆர் பரிசோதனையின்
எண்ணிக்கையை 3000 வரையில் அதிகரிப்பதற்கு தற்பொழுது ஆற்றல் உண்டு. பல்கலைக்கழக கட்டமைப்பு இந்த பரிசோதனைகளை மேற்கொள்வதினால் தொடர்ந்து
மேற்கொள்ளப்படும் பரிசோதனை எண்ணிக்கைகளை இவ்வாறு அதிகரிப்பதற்கு ஆற்றல் கிட்டியுள்ளது. சீனாவினால் நன்கொடை என்ற ரீதியில் கிடைக்கப்பெற்ற உபகரண தொகுதிகளைப் போன்று,
பயன்படுத்தப்படும் எத்தகைய பீசுPஆர் பரிசோதனை உபகரணங்களாக இருந்த போதிலும் அவற்றின் துல்லியமா செயற்பாடுகள் தொடர்பாக அடிக்கடி பரிசோதனை
(எயடனைவைல) மேற்கொள்ளப்படும். இதனால் பரிசோதனைகளின் பெறுபேறுகள் தொடர்பில் தாம் திருப்திக் கொள்வதாகவும் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இருப்பினும் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான தாக்கத்திற்கான முக்கிய சாதகமாவது பொதுமக்களினால் தொடர்ந்தும் சுகாதார
ஆலோசனைகளை உரிய முறையில் கடைப்பிடிப்பதே ஆகும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 690
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 690
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளது..
நோயாளகளில் 162 பேர் குணமடைந்து வைத்திய சாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
COVID-19 பரம்பலின் தரவுகள்
புதுப்பிக்கப்பட்டது 2020-05-01 22:03:44
690
உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்
521
சிகிச்சை பெறும் நோயாளிகள்
25
புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்
162
குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை
7
இறப்பு எண்ணிக்கை

மணல் கொள்ளை -கப்பம் தர மறுத்ததால் மக்களை தாக்கிய போலீஸ் video
மணல் கொள்ளை -கப்பம் தர மறுத்ததால் மக்களை தாக்கிய போலீஸ்
யாழ்பாணடம் வடமராட்சியில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட குழுக்களுக்கு இடையில் தற்போது நேரடி மோதல் ஒன்று இடம்பெற்றுளளது
இந்த மோதலின் பின்புலத்தில் காக்கி சட்டைகள் மறைந்து உள்ளதும்
,அவர்களுக்கு மணல் கொள்ளையர்கள் லொறி ஒன்றுக்கு குறித்த தொகை ஒன்று கப்பமாக வழங்கி வருகின்றனர் .
இவர்கள் அதிகம் கேட்ட பணத்தினை வழங்க மறுத்ததினால் ,இவர்களின்
மணல் ஏற்றுமதியை தடுக்கும் நோக்குடன் போலீசாரை ஏவிவிட்டு இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது
பிரபல அரசியல் கட்சி ஒன்றின் கீழ் இயங்கும் இந்த மணல் கொள்ளை மாபியா வர்த்தகதிற்கு முன்னாள் அமைச்சர் ஒருவர் தலைமை தாங்குகிறார்
அந்த பண பங்கீடு காரணமாக இந்த மோதல் ,தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது
கோட்டபாய ஆட்சிக்கு வந்ததும் மணலை தாராளமாக அள்ளிடலாம் என தடை எடுத்தமை இங்கே குறிப்பிட தக்கது
அது தவிர சில ஊடகங்களுக்கு செய்தியாளர்களாக உள்ள சிலரும் இந்த மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்களாக உள்ளனர் .
அவர்களும் இவ்வாறு தமது எயமானர்களை காப்பாற்றும் நகர்விலும் ஈடுபட்டு எதிர் மறையான செய்திகளை வழங்கி வருகின்றனர்
மணல் கொள்ளை மாபியாக்கள் பின்புலத்தை இனியாவது சமூக நல அக்கறை கொண்டவர்கள் ,அவர்களிடம் உள்ள
காணொளிகளை வெளியிட்டு அந்த முக்கிய அரசியல் கட்சிகளின் முகமூடி கிழிக்க உதவுங்கள் ,
தேர்தலில் தோற்கடித்து விரட்ட உடனே புரியுங்கள் உறவுகளே. இது நமது வேண்டுதலாகும் .

புலிகள் பெயரை ஒழிக்க ஆரம்பிக்க பட்ட கஞ்சா ஒட்டுக்குழு -யாழில் கைவரிசை
புலிகள் பெயரை ஒழிக்க ஆரம்பிக்க பட்ட கஞ்சா ஒட்டுக்குழு -யாழில் கைவரிசை
யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் முக மூடி அணிந்த நிலையில் கையில்
வாள்கள்,மற்றும் கத்திகளுடன் வீடுகளுக்குள் நுழைந்தான் கொள்ளை
கும்பல் அங்கிருந்து தங்க நகைகள் ,மிதிவண்டிகள் என்பனவற்றை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றுள்ளன .
இவ்வாறு மூன்று வீடுகளில் இந்த கொள்ளை சமபவம் இடம்பெற்றுள்ளது ,
ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டிருந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது
இது பொலிஸாரின் ஆதரவுடன் இயங்கும் புலிகள் பெயரை ஒழிக்க ஆரம்பிக்க பட்ட கஞ்சா ஒட்டுக்குழுவே இந்த செயலில்
ஈடுபாட்டுள்ளதாக மக்கள் மத்தியில் பேச படுகிறது ,வீதிகள் எங்கும் காவல்துறையின்
சுற்றுக்காவல் நாடவடிக்கையில் ஈடுபடும் பொழுதே இந்த துணிகர கொலை
சம்பவம் இடம்பெற்றுள்ளது மக்கள் மத்தியில் சந்தேகத்தை அதிகரித்துள்ளது

காவல்துறை அதிகாரிகளின் விடுமுறைகள் இரத்து
காவல்துறை அதிகாரிகளின் விடுமுறைகள் இரத்து
இலங்கை காவல்துறை அதிகாரிகளின் விடுமுறைகள் யாவும் எதிர்வரும்
பதின் ஐந்தாம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளது
நாட்டில்
நிலவி வரும் அசாதாரண சூழ் நிலையிற் கருத்தில் கொண்டே இந்த இரத்து அமுலாக்க பட்டுள்ளது
என காவலதுறை தலைமையகம் அறிவித்துள்ளது

- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை

- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை

- கடற்படைத் தளபதி இந்திய உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி

- எம்பிலிப்பிட்டிய காகித ஆலை வளாகத்தில் தீ விபத்து

- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது

- குருண்டி ராஜமகா விகாரையில் காவல்துறை பாதுகாப்பு

- அனுராதபுர புனித நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஜனாதிபதி உத்தரவு

- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

யாழில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்த பெண்
யாழில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்த பெண்
யாழ்ப்பாண போதனா வைசத்திய சாலையில் இளம் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்தார்
இவ்வாறு குழந்தைகளை பிரசவித்த பெண் தீவிர மருத்துவ கண்காணிப்புக்கு
உள்ளாக்க பட்ட நிலையில் தற்போது தாயும் சேயும் வீடுகளுக்கு அனுப்பி வைக்க பட்டுள்ளனர்
ஒரே தடவையில் நான்கு குழந்தைகள் பிறந்த நிலையில் அந்த சிசுக்களை
பார்வையிட குறித்த பெண்ணின் வீட்டை அந்த கிராம மக்கள் முற்றுகையிட்டுள்ளதுடன் ,
அவர்களுக்கான அன்பளிப்புக்களும் குவிந்த வண்ணம் உள்ளது
ஒரு குடும்பத்தில் பிறந்த இந்த சிசுக்களினாலே அந்த கிராமமே மகிழ்ச்சியில் உறைந்துள்ளது

யாழில் பாண் விலை அதிகரிப்பு – அதிர்ச்சியில் மக்கள்
யாழில் பாண் விலை அதிகரிப்பு – அதிர்ச்சியில் மக்கள்
யாழ்ப்பாணத்தில் கடிந்த நள்ளிரவு முதல் உடனை அமுலுக்கு வரும் ஜீலையில்
450 கிலோ கிராம் பாணின் விலை மூன்று ரூபாவால் அதிரடியாக அதிகரிக்க பட்டுள்ளது
மக்களின் வாழ்வியல் சுமையை குறைப்பேன் என ஆளும் அரசு அறிவித்து
வந்த நிலையில் பாணின் விலை ஒரே தடவையில் மூன்று ரூபாவால் அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கொரனோ வேளையில் மக்கள் பெரிதும் வறுமையில் சிக்கியுள்ள காலப்பகுதியில்
இந்த பாணின் விலை அதிகரிக்க பட்டுள்ளது ,ஆளும் அரசு மீது மக்கள் விரக்தி கொள்ள வைக்கும் செயல் பாட்டை அதிகரித்துள்ளது
இது கோட்டபாய அரசு மக்கள் விரோதத்தை தாமாக வலிந்து உருவாககிய ஒன்றாக பார்க்கக் படுகிறது

ஊரடங்கு வேளை -மருந்துகள் இன்றி ஒரே கிராமத்தில் 30 பேர் பலி
ஊரடங்கு வேளை -மருந்துகள் இன்றி ஒரே கிராமத்தில் 30 பேர் பலி
இலங்கையில் கொரனோ வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்க பட்டிருந்தது
இந்த காலத்தில் மருந்துகள் கொள்வனவு செய்ய முடியாத நிலையில்
திடீர் நோய்களுக்கு உள்ளான சுமார் முப்பது பேர் காலி மாவட்டத்த்தில் மட்டும் பலியாகியுள்ளனர்
இதேபோல இயற்கையை மரணங்கள் நாடு தழுவிய ரீதியில் இடம்பெற்றுள்ளது ,
இவற்றை இணைத்தால் 300 மரணங்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
நாளாந்த மக்கள் இறப்பு விகிதம் தொடர்பில் உரிய புள்ளி விபரங்கள் வெளியிடப்படவில்லை

நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை
நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை
பல துறையினருக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும்
உயர்கல்வி, தொழில் நுட்பம், புத்தாக்கம் மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தனதெரிவித்துள்ளார்.
சிறிய மற்றும் நடுத்தர தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு நிதி வசதியை வழங்குவதற்கும், மூடப்பட்ட நெல் ஆலைகளை மீள
திறப்பதற்கும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 20ஆம் திகதியிலிருந்து பெரும்போகத்திற்குத் தேவையான உரத்தை
கொள்வனவு செய்வதற்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தினால் உறுதிசெய்யப்பட்ட மேலதிக 16 வகைக்கான உற்பத்திகளை ஊக்குவித்தல். மக்கள் வங்கியினால் அஸ்வென்ன
என்ற (அறுவடை) பெயரில் 30 இலட்சம் ரூபா வரையில் விசேட கடன் முறையொன்றை அறிமுகப்படுத்துதல் மற்றும் 200 விசேட கொத்து
உர விவசாய கிராமங்களை ஏற்படுத்வும் திட்டமிடப்பட்டுள்ளது 50 பசுமை பூங்கா மற்றும் அறுவடைகளை விற்பனை செய்யும் 200
விற்பனை நிலையங்களை ஏற்படுத்துதல். இம்முறை ஐந்து லட்சத்து 23 ஆயிரம் ஹெக்டெயர் விளைச்சலுக்காக ஒரு லட்சத்து 50 ஆயிரம்
விவசாயிகளுக்கு உரம் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு 649 பாதிப்பு
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு 649 பாதிப்பு
இலங்கையில் அதிகரித்து செல்லும் கொரனோ நோயின் தாக்குதலில்
சிக்கி இதுவரை 649 பேர் பாதிக்க பட்டுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
மேலும் இதுவரை இந்த நோயில் சிக்கி ஏழுபேர் பலியாகியுள்ளனர் ,
அது தவிர
இராணுவத்தில் 250 க்கும் மேற்பட்டவர்கள் தனிமை படுத்த பட்டுள்ளனர் ,
மீளவும் ஊரடங்கு நாடு தழுவிய நிலையில் பிறப்பிக்க பட்டுள்ளது ,இந்த
நோயானது தற்போது வேகமாக பரவி வருவதால் உயிரிழப்புக்கள் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது

பளை மத்திய கல்லூரி மாணவன் மாயம் -தேடும் பொலிஸ்
பளை மத்திய கல்லூரி மாணவன் மாயம் -தேடும் பொலிஸ்
கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியில் கல்வி கற்று வந்த முள்ளியாடியை சேர்ந்த
அனோச் எனும் மாணவன் கடந்த நான்கு நாட்களாக காணாமல் போயுள்ளார்
2109 ஆண்டு கா ,பொ ,சா ,பரீட்சை முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில்
திடீரென இவர் காணாமல் போயுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
உறவினர்கள் வீடுகளிலும் இவரை காணவில்லை என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர் .
மகனை காணாத துயரில் குடும்பத்தினர் கண்ணீரில் தவிக்கின்றனர் .
இவரை யாரவது கண்ணுற்றால் அவர்களது குடும்பத்தினருக்கோ ,அல்லது அருகில் உள்ள காவல்துறையினருக்கோ ,
அல்லது ஊடகங்களுக்கோ தெரிவிக்குமாறு மன்றாடி வேண்ட படுகிறது







