பிரான்ஸ்,கனடா மருத்துவர்களுக்கு உணவளித்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !படம் உள்ளே

Spread the love

பிரான்ஸ்,கனடா மருத்துவர்களுக்கு உணவளித்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !படம் உள்ளே

கொரோனா வைரஸ் பெருந்தொற்று மனிதகுலத்திற்கு பெரும் உயிரச்சுறுத்தலாக மாறியுள்ள இவ்வேளையில், இதனை

எதிர்கொள்ளும் வகையில் உலகத் தமிழர்களுக்கான சிறப்புக்குழுவினை ( Corona – Tamils Task Force) நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைத்து செயற்படத் தொடங்கியுள்ளது.

கொரோனா நெருக்கடி நீண்டகாலத்துக்கு நீடிக்க இருக்கின்ற நிலையில், தமிழர்களின் நலன்களின் அடிப்படையில்

உடனடியானதும், நீண்டகாலத்துக்குமான செயற்திட்டங்களை வகுத்து தமிழர் தாயகம், புலம்பெயர் தமிழர்கள், உலகத் தமிழர்கள் என செயற்படத் தொடங்கியுள்ளது.

    மருத்துவம், விழிப்பு, பொருளாதாரம், சுற்றுச்சூழல், சமூகம், அரசியல் என பல்வேறு பரிமாணங்களில் கொரோனாக்காலம்,

    கொரோனாவுக்கு பிந்திய காலம் என தனது செயற்திட்டத்தை கொரோனா – தமிழர்கள் சிறப்புக்குழு வகுத்து வருகின்றது.

    குறிப்பாக கொரோனா வைரஸ் பெருந்தொற்று இலங்கைத்தீவில் இனம்காணப்பட்ட உடனேயே, அது தொடர்பிலான விழிப்பு

    பிரச்சாரங்களை தமிழர் தாயகம் எங்கும் உள்நாட்டு தொண்டு அமைப்புக்கள் வழியே மேற்கொள்ளப்பட்டதோடு, ஒரு தொகுதி

    முதியவர்களுக்கு உள்ளுரில் தயாரிக்கப்பட்ட சுவாச்சகவசங்களும் வழங்கப்பட்டன.

    தொடர்ந்து ஊரடங்கு உத்தரவினால் வீடுகளில் முடங்கியுள்ள வறியநிலை மக்களுக்கு உணவுப்பொதிகள், அத்தியாவசிய

    பொருட்களும் வழங்கப்பட்டு வருவதோடு, மக்களை சுயநிறைவுடன் எதிர்காலத்தில் இருக்கும் வகையில் வீட்டுத் தோட்டங்களை ஊக்குவிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றது.

    இதேவேளை கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக களமாடிவரும் சுகாதாரப் பணியாளர்களுக்கு உணவுகளை வழங்கி

    தமிழர்களின் நன்றியினையும் தோழமையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் செயலாற்றி வருகின்றது.

    கனடாவின் ரொன்ரோவின் பெரும்பாகத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு உணவுப்பொதிகளை வழங்கும் பொருட்டு, முதற்கட்டமாக உணவுப்பொதிகள் வழங்கபட்டன. இதுபோல்

    பிரான்சிலும் தலைநகர் பரிசில் Hôpital Bicêtreமருத்துமவனையின் அவரசப்பிரிவு சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டன.

    கொரோனாவுக்கு எதிராக போராடிவரும் தேசங்களுக்கு தமிழர்களின் தோழமையினை நல்லெண்ணத்தோடு இவைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மறுபுறம் புலம்பெயர் தேசங்களில் கொரோனாவுக்கு இரையாகியுள்ள தமிழர்களின் விபரங்களையும் திரட்டி ஆவணப்படுத்தும் பணியிலும் இச்சிறப்புக்குழு ஈடுபட்டுள்ளது.

        Leave a Reply