Posted in இலங்கை செய்திகள்

திருட்டில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட நான்கு பேர் கைது

திருட்டில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட நான்கு பேர் கைது

இலங்கை காத்தான் குடி பகுதியில் உள்ள கைபேசி கடை ஒன்றுக்குள் புகுந்து

கொள்ளையில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

கைதானவர்கள் விசாரணையின் பின் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்

இந்த திருட்டில் முக்கிய நபர் தப்பி ஓடிய வண்ணம் உளளார்
இவர்களிடம் இருந்து எட்டு லட்சம் ரூபா பெறுமதியான கைபேசிகள் மீட்க பட்டுள்ளன

Posted in இலங்கை செய்திகள்

பணத்தை திருடும் ஆளும் ஆட்சியாளர்கள் – பொன்சேகா முழக்கம்

பணத்தை திருடும் ஆளும் ஆட்சியாளர்கள் – பொன்சேகா முழக்கம்

இலங்கையில் ஆளும் ஆட்சியாளர்கள் மக்கள் வயிற்றில் அடித்து பணத்தை திருடி

வருவதாக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்

தமிழர்கள் மீது படையெடுப்பை நடத்தி அந்த மக்களை கொன்று குவித்த மகிந்தவின்

நம்பிகையாளராக விளங்கியவர் பொன்சேகா என்பது குறிப்பிட தக்கது

    Posted in இலங்கை செய்திகள்

    62 மாணவர்களை விரட்டி குற்றிய குளவிகள்

    62 மாணவர்களை விரட்டி குற்றிய குளவிகள்

    இலங்கை மொனராகலை, எத்திமலை மகா வித்தியாலயத்தை சேர்ந்த அறுபத்தி

    இரண்டு மாணவர்கள் மற்றும் மூன்று ஆசிரியர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி மருத்துவனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

    ஒன்று கூடல் ஒன்றிற்காக ஒன்று கூடிய பொழுது அங்கிருந்த


    குளவி கூடு வீழ்ந்து சிதறியதால் பரவிய குளவிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

      Posted in இலங்கை செய்திகள்

      ஆளுமையுள்ள பெண்களுக்கு பாராட்டும் கௌரவமும்

      ஆளுமையுள்ள பெண்களுக்கு பாராட்டும் கௌரவமும்

      நாடும் தேசமும் அவளே” எனும் தொனிப் பொருளில் மகளிர் தின நிகழ்வு ஹலோ

      எப்.எம். தவிசாளர் எப்.எம்.சரீக் தலைமையில் நேற்று மாலை (13) திருகோணமலை குளக்கோட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

      இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண முன்னாள் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலபதி பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்

      (திருமதி) ஜே.ஜே.முரளிதரன் கௌரவ அதிதியாகவும், கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர்

      மற்றும் உப்புவெளி பொலிஸ் நிலைய பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பொஸிஸ்

      அதிகாரி ஏ.காயத்திரி ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

      இதன்போது, ஆளுமையுள்ள பெண்களின் திறமைகளைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி ஞாபகச் சின்னங்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

        Posted in இலங்கை செய்திகள்

        ஏழு மாதங்களில் பெட்ரோல் எரிவாயு முடிந்து விடும் – மின்சத்தி அமைச்சர்

        ஏழு மாதங்களில் பெட்ரோல் எரிவாயு முடிந்து விடும் – மின்சத்தி அமைச்சர்

        இலங்கையில் நிலவி வரும் பொருளாதர நெருக்கடி காரணமாக மக்கள் பெரிதும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர்

        எதிர் வரும் ஏழு மாதங்களுக்கு மட்டுமே தற்போது கையிருப்பில்


        உள்ளவை போதுமானது எனவும் அதன் பின்னர் அனைத்தும் தீர்ந்து விடும் என அவர் தெரிவித்துள்ளார்

          Posted in இலங்கை செய்திகள்

          பாடசாலைகளில் நீர்குடிக்க மக்கள் பணம் செலுத்த வேண்டும் – ஆசிரியர்கள் குற்றசாட்டு

          பாடசாலைகளில் நீர்குடிக்க மக்கள் பணம் செலுத்த வேண்டும் – ஆசிரியர்கள் குற்றசாட்டு

          இலக்கையில் உள்ள அரச பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் அங்கு

          நீர்குடிக்க பணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளது

          ஆளும் கோட்டாவின் ஆட்சியின் கீழ் பல்வேறு பட்ட துறைகள் நிதி இன்றி தள்ளாடி வருகிறது
          இதனால் இந்த இழிநிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்

            Posted in இலங்கை செய்திகள்

            சுற்றிவளைத்த பொலிஸ் -சிக்கிய 550 கிலோ கஞ்சா

            சுற்றிவளைத்த பொலிஸ் -சிக்கிய 550 கிலோ கஞ்சா –

            இந்திய கேரள பகுதியில் இருந்து ராமேஸ்வரம் ஊடாக கடத்தி வரப்பட்ட 550 கிலோ கேரள கஞ்சாவை போலீசார் மடக்கி பிடித்தனர்

            72 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சாவை கடத்திய நபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

            போலீசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்தே இந்த முற்றுகை இடம்பெற்றுள்ளது

              Posted in இலங்கை செய்திகள்

              யானைகள் அட்டகாசம் – 12 வீடுகளை அடித்து நொறுக்கு

              யானைகள் அட்டகாசம் – 12 வீடுகளை அடித்து நொறுக்கு

              மட்டக்களப்பு சம்மாந்துறை பகுதியில் உள்ள நான்கு கிராமங்களுக்குள் புகுந்த யானைகள்
              12 வீடுகளை அடித்து நொறுக்கியுள்ளது

              யானையின் இந்த கோர தாக்குதலில் சிக்கி வீடுகளைஇழந்து மக்கள் தவித்து

              வருவதுடன் குறித்த மக்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளனர்

                Posted in இலங்கை செய்திகள்

                மக்களை விரட்டி குற்றிய குளவி – 11 பேர் காயம்

                மக்களை விரட்டி குற்றிய குளவி – 11 பேர் காயம்

                இலங்கை கப்புத்தளை திட்ட பகுதியில் பணியாற்றி கொண்டிருந்த மக்கள் மீது

                திடீரென குளவிகள் தாக்குதலை நடத்தின இதில் 11 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்

                இவ்வாறான தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

                  Posted in இலங்கை செய்திகள்

                  ஆட்டோக்களை தூக்கி சென்ற போலீஸ்

                  ஹட்டன் நகர மத்தி மற்றும் நகரின் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஓட்டோக்களை அப்புறப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

                  ஹட்டன்- டிக்கோயா நகரசபையின் அனுமதியின்றி, நகரம் முழுவதும் ஓட்டோக்கள் நிறுத்தி வைக்கப்படுவதால், நகருக்கு ஏனைய வாகனங்களில் வருகைத் தருபவர்கள்

                  மற்றும் சாதாரண மக்கள் என அனைவரும் பல சிரமங்களுக்கு முகம்​கொடுப்பதுடன், கடும் வாகன நெரிசலும் ஏற்படுவதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

                  இதுதொடர்பில் நகர வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கிடைக்கபெற்ற முறைப்பாட்டுக்கு அமைய, நகர சபையிடம் அனுமதி பெற்ற ஓட்டோக்களை மாத்திரம்

                  நகரில் நிறுத்தி வைக்க ஹட்டன் போக்குவரத்து பொலிஸாரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

                  அத்துடன், அனுமதிபெறாத ஓட்டோக்களை ஓட்டோ நிறுத்துவதற்கு என ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் நிறுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

                  இதற்கு எதிராக செயற்படும் ஓட்டோ உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றம் ஊடாக சட்டநடவடிக்கை
                  எடுக்கவுள்ளதாக ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

                    Posted in இலங்கை செய்திகள்

                    118 நீதிபதிகளுக்கு இடமாற்றம்

                    நாடளாவிய ரீதியில் 118 நீதிபதிகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

                    இது தொடர்பில் நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் சன்ஜீவ சோமரத்தினவினால் உரிய வகையில் இடமாற்ற கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

                    எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ம் திகதியில் இருந்து இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வடக்கு கிழக்கில் உள்ள நீதவான் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

                    மல்லாகம் நீதிமன்றில் கடமையாற்றும் ஏ.ஜீ. அலெக்ஸ்ராஜா பருத்தித்துறை மாவட்ட நீதிவான் நீதிமன்றிற்கு மாற்றம் பெறவுள்ள்ளார்.

                    மல்லாகம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவானாக கடமையாற்றிய ஆனந்தராஜா யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றிற்கு மாற்றம் பெற்றுள்ளார்.

                    மட்டக்களப்பு மாவட்ட நீதிவானாக கடமையாற்றும் ரீ.கருணாகரன் வாழைச்சேணை மாவட்ட நீதிவானாக மாற்றம் பெறவுள்ளார்.

                    மன்னார் மாவட்ட நீதிவான் பீ.சிவகுமார் மல்லாகம் மாவட்ட நீதிவானாக இடமாற்றம் பெறவுள்ளார்.

                    மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.சீ.றிஸ்வான் பொத்துவில் மாவட்ட நீதிபதியாக இடமாற்றம் பெறவுள்ளார்.

                    வாழைச்சேணை மாவட்ட நீதிபதி எம்.எம் பசீல் மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியாக மாற்றம் பெறவுள்ளார்.

                    பருத்தித்துறை மாவட்ட நீதிபதி ஜீ.சைலயன் மல்லாகம் மாவட்ட மேலதிக நீதிவானாக இடமாற்றம் பெறவுள்ளார்.

                    யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றிற்கு மாற்றலாகி செல்லவுள்ளார்.

                    பொத்துவில் மாவட்ட நீதிபதி எம்.எச்.எம்.றவி கண்டி நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவானாக செல்லவுள்ளதாக
                    நீதிச்சேவை ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

                    Posted in இலங்கை செய்திகள்

                    மக்கள் வீதியிறங்க வேண்டிய நேரம் – மைத்திரி

                    மக்கள் வீதியில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த இரண்டு வருடங்களில்

                    அரசாங்கத்தின் தீர்மானங்களில் நாங்கள் ஈடுபடவில்லை என்று தெரிவித்தார்.

                    பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

                    அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று இந்த நாடு உணவு உட்பட பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.

                    எரிபொருள் விலை அதிகரிப்புடன் மக்கள் அரசியல்வாதிகளை நிராகரித்து வெகுஜன போராட்டங்களை நாடுகிறார்கள்.

                    13 கட்சிகள் இணைந்து இந்த அரசாங்கத்தை அமைத்த போது நானும் தலைவராக நியமிக்கப்பட்டேன், ஆனால் அதன் பின்னர் நான் எதிலும் ஈடுபடவில்லை.

                    சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தின் பின்னர் எனது அரசாங்கம் மாத்திரமே இந்த நாட்டுக்கு சரியான கொள்கையை கொண்டு வந்தது.

                    நான் நாட்டை ஜனநாயக ரீதியில் வழிநடத்தினேன். உலக நாடுகள் அனைத்தும் எனக்கு உதவியது.19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்து நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டினேன்.

                    ஆனால் ஊழலற்ற நாட்டைக் கட்டியெழுப்புவேன் என்று எதிர்பார்த்தபோதும் என்னால் அதைச் செய்ய முடியவில்லை“ என்றார்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      நாளைமுதல் பாடசாலைகள் ஆரம்பம்

                      சகல பாடசாலைகளும் நாளை முதல் வழமைபோன்று நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

                      இதுதொடர்பாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

                      இதற்கமைவாக மாணவர்களை வழமை போன்று பாடசாலைக்கு அழைக்க முடியும்.

                      கொவிட் தொற்றுடன் தொடர்புடைய ஏதாவது பிரச்சினைகள் எழுமாயின், வலய கல்விப் பணிப்பாளரின்
                      தீர்மானத்தின்படி அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      தள்ளாடும் இலங்கை – தரை மட்டமான பொருளாதரம்

                      தள்ளாடும் இலங்கை – தரை மட்டமான பொருளாதரம்

                      இலங்கையில் போரைவென்று தனி சிங்கள மக்களின் வாக்குக்கள் மூலம் நாட்டை

                      ஆட்சி புரிய அரியணையில் ஏறிய மகிந்த,குடும்பத்திற்கு தற்போது பெரும் நெருக்கடி நிலை தோன்றியுள்ளது

                      உல்லாச பயணிகளின் வருகையை மைய படுத்தி நாட்டை ஒட்டி சென்றவர்களுக்கு கொரோனா நோயின் காரணமாக அந்த மக்கள் வருகை வீழ்ச்சியடைந்தது

                      அதனை மையப்படுத்தி ஆரம்பிக்க்க பட்ட பல வேலைத்திட்டங்களும் கைவிட பட்டன ,

                      மிருகக்காட்சி சாலைகள் முதல் உணவகங்கள் ,கொட்டல்கள் என்பன மக்கள் இன்றி வெறித்து காணப்பட்டன

                      இதனால் நாடு பெரும் பின்னடவை சந்தித்தது ,பணத்தட்டுப்பாட்டை நிவர்தி செய்திட முடியாத நிலையில் இலங்கை திணறி வருகிறது

                      இவ்வேளை இதனை சீர் செய்திட விலைவாசிகள் அதிகரிக்க பட்டன ,அன்றாட கூலி மக்கள் முதல் செல்வந்தர்கள் வரை கதி கலங்கி போயுள்ளனர்

                      கோட்டாவுக்கு ஏன் வாக்கு போட்டோம் என்கின்ற நிலைக்கு மக்கள் தற்போது சிந்திக்க ஆரம்பித்து போராட்டங்களை நடத்த முனைகின்றனர்

                      இதுவே நாளடைவில் பெரும் ரணகளமாக ஆளும் ஆட்சிக்கு மக்கள் எதிர்ப்பு வலுக்கும் என அடித்து கூறலாம்

                      இலங்கையில் தலைகீழ் மாற்றம் ஒன்று விரைவில் ஏற்பட போகிறது

                      • வன்னி மைந்தன் –
                      Posted in இலங்கை செய்திகள்

                      கோட்டா அரசுக்கு எதிராக வெடிக்கும் போராட்டம் -கட்சி தாவும் பங்காளிகள்

                      கோட்டா அரசுக்கு எதிராக வெடிக்கும் போராட்டம் -கட்சி தாவும் பங்காளிகள்

                      ஆளும் கோட்டா ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடிக்க தயாராகி வருகிறது ,நாள்

                      தோறும் ஏற்ற படும் விலைவாசி மற்றும் அதனால் ஏற்படும் மக்கள் பாதிப்புக்களை

                      கருத்தில் கொள்ளாது மகிந்தகுடும்ப ஆட்சி நாட்டை சுடுகாடாக்கி வருகிறது

                      நாட்டினை முறையாக வழிநடத்த முடியாதது திணறி வருகிறது ,இதனால் சீற்றம் முற்றுள்ள முன்னாள் பங்காளிகளான அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் ஒன்று திரண்டு

                      மாபெரும் போராட்டங்களை தொடராக நடத்தவும் ,தொழில் சங்கங்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபடவும் நடவடிகை மேற்கொள்ள பட்டு வருகிறது

                      விரைவில் ஆளும் கோட்டா ஆட்சி கவிழ்க்க பட்டு புதிய கூட்டணி ஆட்சி ஒன்று அரங்கேறும் களம் ஒன்று தயாராகி வருகிறது

                      தாம் விரித்த வலையில் தாமேசிக்கி கொண்ட நிலையில் மகிந்த ஆட்சி சிக்கி தவிக்கிறது

                        Posted in இலங்கை செய்திகள்

                        மாணவனை நான்கு வருடங்களாக கற்பழித்த டீச்சர்

                        மாணவனை நான்கு வருடங்களாக கற்பழித்த டீச்சர்

                        இலங்கை கொழும்பு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பணியாற்றிய டீச்சர் ஒருவர்


                        16 வயது மாணவனை கடந்த நான்கு வருடங்களாக கற்பழித்து வந்துள்ளார்


                        குறித்த மாணவனுடன் அறுபதுக்கு மேற்பட்ட தடவை கொட்டல்கள்களில் தங்கி உல்லாசத்தை அனுபவித்து வந்துள்ளார்

                        மேலும் பாடசாலையின் கணனி அறையிலும் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளார்


                        மேற்படி சம்பவம் தற்போது அம்பலமான நிலையில் அவர் கைது செய்ய பட்டு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்

                        பல நாள் திருட்டு ஒரு நாள் சிக்கும் என்பது இதைத்தான் போலும்

                          Posted in இலங்கை செய்திகள்

                          மின்சார வேலியில் சிக்கி இருவர் மரணம் – கொதிப்பில் குடும்பம்

                          மின்சார வேலியில் சிக்கி இருவர் மரணம் – கொதிப்பில் குடும்பம்

                          இலங்கை நயினகாடு பகுதியில் சட்ட விரோத மின்சார வேலியில் சிக்கி இருவர் பலியாகியுள்ளனர்


                          வீட்டில் இருந்து விறகு சேகரிக்க சென்றவேளை இந்த விபத்தில் சிக்கி மரணித்துள்ளனர்

                          மரணமான இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தஹ் 13 வயது சிறுவர்கள் என தெரிவிக்க

                          பட்டுள்ளது ,குறித்த சிறுவர்கள் மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                            Posted in இலங்கை செய்திகள்

                            18 லட்சம் மின்சார கட்டணத்தை செலுத்த மறுக்கும் சிங்கள எம்பி

                            18 லட்சம் மின்சார கட்டணத்தை செலுத்த மறுக்கும் சிங்கள எம்பி

                            இலங்கை ஆளும் ஆட்சியில் எம்பியாக விளங்கி வரும் SJB MP Harin Fernando தனது

                            வீட்டுக்கு பாவித்து வந்த மின்சாரத்தின் கட்டணத்தை செலுத்த தவறியுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது

                            இவை சுமார் 18 லட்சம் ரூபாய்களை செலுத்த வேண்டும் என்வும் இதுவரை அதனை

                            இவர் செலுத்தவில்லை என தெரிவித்து அவரது மானத்தை வாங்கியுள்ளது

                            மக்களினால் தெரிவு செய்ய பட்ட பாராளும்னற உறுப்பினரே இவ்விதம் எனின்,

                            சாதாரண கூலி மக்கள் என்னதான் செய்வார்கள் என்பது இதில் இருந்து புலனாகிறது.

                              Posted in இலங்கை செய்திகள்

                              100 மில்லியன் டொலர் உதவியை இந்தியாவிடம் கோரியுள்ள இலங்கை

                              100 மில்லியன் டொலர் உதவியை இந்தியாவிடம் கோரியுள்ள இலங்கை

                              இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாத நெருக்கடியில் இருந்து நாட்டை மீள

                              கட்டியெழுப்ப உலக நாடுகளிடம் இலங்கை அவசர நிதி உதவியினை கோரியுள்ளது

                              இதற்கு அமைவாக தற்போது இந்தியாவிடம் ஒரு பில்லியன் அமெரிக்கா டொலர்களை கடனாக கேட்டுள்ளது

                              உணவு ,எரிபொருள்,மருத்துவ பொருட்கள் என்பன இதில் கொள்வனவு செய்ய பட போகிறது

                              ஓடி கடனை வாங்கி குவிக்கும் இலங்கை இதனை மீள செலுத்திட முடியா நிலையில் சிக்கும்
                              காலம் விரைவில் ஏற்படலாம் என்பது பொருளாதாரா நிபுணர்கள் கருத்தாக உள்ளது

                                Posted in இலங்கை செய்திகள்

                                சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சு – தப்புமா நாடு ..?

                                சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சு – தப்புமா நாடு ..?

                                இலங்கையில் வீழ்ச்சி அடைந்து செல்லும் பொருளாதார நிலை காரணமாக


                                அதனை நிவாரத்தி செய்திடும் முகமாக சர்வதேச நாணய நித்தியதுடன் பேச்சுக்களில் ஈடுபட இலங்கை நிதியமைச்சர் குழுவினர் செல்லவுள்ளனர்

                                இவர்களின் இந்த சந்திப்பின் பிரதான நோக்கம் கடன் தள்ளுபடி ,மேலும் உதவி திட்டங்கள் வழங்குதல் தொடர்பான ஒன்று என எதிர்வு கூற படுகிது

                                ஆனால் இலங்கையோ அவ்விதம் இல்லை என குத்துகரணம் அடிக்கிறது