கொழும்பில் பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம் - கொழும்பு மாநகர மக்களுக்கு மனோ கணேசன்
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம் – கொழும்பு மாநகர மக்களுக்கு மனோ கணேசன்

கொழும்பில் பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம் – கொழும்பு மாநகர மக்களுக்கு மனோ கணேசன்

வெள்ளவத்தை, பம்பலபிட்டி உட்பட கொழும்பு மாநகர மற்றும் மாவட்ட பொலிஸ் நிலையங்களினால், வீடு வீடாக கொண்டு வரப்படுவதாக கூறப்படும் பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம்.

இதுபற்றி சட்ட ஒழுங்கு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மாஅதிபர் விக்கிரமரத்ன ஆகியோருக்கு அறிவித்துள்ளேன். அவர்களும் இதை ஏற்றுக்கொண்டு உடன் நிறுத்துவதாக எனக்கு உறுதி அளித்துள்ளனர்.

ஜனாதிபதியின் பிரதம செயலாளர் சமன் இதுபற்றி பொறுப்பில் உள்ள சகலருக்கும் அறிவிப்பதாக எனக்கு உறுதி அளித்துள்ளார்.

“பொலிஸுக்கு அல்ல, எந்த ஒரு அரசு நிறுவனத்துக்கும், தனிப்பட்ட வீட்டு தகவல்களை கொடுக்க நாம் விரும்ப மாட்டோம்.

கொடுத்தால் அது எங்கெங்கு போகும் என எனக்கு தெரியும். மேலும் இது ஒரு பொலிஸ் ராஜ்யம் அல்ல. பொலிஸ் சட்டத்தில் பதிவு செய்ய இடம் இருக்கிறது.

கொழும்பில் பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம் – கொழும்பு மாநகர மக்களுக்கு மனோ கணேசன்

அது எனக்கு தெரியும். ஆனால், அதை விசேட அவசர காலங்களிலேயே பயன்படுத்த வேண்டும். எங்காவது சட்டத்தை மீறுபவர்கள் இருப்பார்கள் எனில் அவர்களை அடையாளம் கண்டு கைது செய்யுங்கள். விசாரியுங்கள்.

அதில் எனக்கு மாறுபட்ட கருத்தது இல்லை. ஆனால், பொதுவாக வீடு வீடாக போக வேண்டாம். இன்று போர் நடைபெறுகின்ற, சட்ட விரோத ஆயுத அமைப்புகள் செயற்படுகின்ற அவசர காலங்கள் அல்ல.

போர் காலத்திலும் நான் இங்கே தான் இருந்துள்ளேன். அந்த காலத்திலேயே இதை பொறுத்துக்கொள்ளாதவன், நான். இன்று இந்த சமாதான காலத்தில் இந்த பொலிஸ் படிவங்களை வீடு

வீடாக கொண்டு சென்று பதிவு செய்வதா? உடன் நிறுத்துங்கள்!”, என சம்பந்தபட்ட அரசியல், மற்றும் நிர்வாக தரப்பினரிடம் நான் கூறியுள்ளேன்.

“அரகல”காரர்களை கொழும்பில் வீடு வீடாக தேடுவதாக ஒரு பொலிஸ் நிலைய அதிகாரி என்னிடம் சொன்னார்.

அவருக்கு நான் என்ன பதில் கூறினேன் என்பதை பகிரங்கமாக கூற முடியாது. அரகலையை வெள்ளவத்தை, பம்பலபிட்டியில் தேட வேண்டாம் எனவும் இவருக்கு கூறினேன். அதை எங்கே தேட வேண்டும் எனவும் கூறினேன்.

கொழும்பில் எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் இத்தகைய நடவடிக்கை தொடருமானால், அவற்றை உடன் என் கவனத்துக்கு கொண்டு வாருங்கள் என

ஊடகங்களை கோருகிறேன். நமது மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பரமேஸ்வரன் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு வாருங்கள். நாம் உடன் நடவடிக்கை எடுப்போம்.

இதுபற்றி, . சந்திரா பெர்னாண்டோ,
கொழும்பு பிரதி பொலிஸ் மாதிபர் சந்திரக்குமார, வெள்ளவத்தை பொறுப்பதிகாரி பிரசாந்த சில்வா,


பம்பலபிட்டி பொறுப்பதிகாரி பத்மலால் ஆகியோருக்கும் அறிவித்துள்ளேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

மனைவியை அடித்து கொன்று கணவன் இலங்கையில் நடந்த பயங்கரம்
Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

மனைவியை அடித்து கொன்று கணவன் தப்பி ஓட்டம்

மனைவியை அடித்து கொன்று கணவன் தப்பி ஓட்டம்

மட்டக்களப்பு ஆரயம் பகுதியில் அறுபது வயதுடைய மனைவியை அடித்து கொன்றுவிட்டு கணவன் தப்பி ஓடியுள்ளார் .

கணவன் மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டு வருவதுண்டு .

இதனால் கணவன் மனவியை , விட்டு பிரிந்து சென்று தனிமையில் வசித்து வந்துள்ளார் .

சம்பவ தினம் அன்று கணவனை தேடி சென்ற மனைவி, சமாதானம் பேசி வீட்டுக்கு கணவரை அழைத்து வந்துள்ளார் .

மனைவியை அடித்து கொன்று கணவன் தப்பி ஓட்டம்

மனைவியுடன் தங்கிய கணவன் .திடீரென மனைவியை சரமாரியாக அடித்து கொன்று விட்டு தப்பி ஓடியுள்ளார் .

கொலை குற்ற சாட்டில் கணவன் கைது செய்யப் பட்டுள்ளார் .

இவர்களுக்கு ஏழு பிள்ளைகள் உள்ளன ,யாவரும் திருமணம் முடித்து சென்றதன் பின்னர் ,இந்த தம்பதிகள் தனிமையில் வசித்து வந்த பொழுதே, மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது .

இலங்கையை உலகம் நம்பாது போர்குற்றத்தில் இலங்கை சிக்கும்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையை உலகம் நம்பாது பீரிஸ் விசனம்

இலங்கையை உலகம் நம்பாது பீரிஸ் விசனம்

இலங்கையை உலகம் நம்பாது என, இலங்கையின் முன்னாள் வெளியுறவு மந்திரி பீரீஸ் விசனம் தெரிவித்துள்ளார் .

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் ,இலங்கை மீதான வாக்கெடுப்பு வெற்றி பெற்று, இங்கை தோல்வியடைந்த நிலையில் ,இந்த அறிவிப்பை பீரீஸ் வெளியிட்டுள்ளார் .

நல்லிணக்கம் பொறுப்பு கூறல்களுக்கு, இலங்கையால் வழங்க பட்ட தவணைகள் நீர்த்து போன நிலையில் ,இலங்கையை உலகம் நம்பாது என்கிறார் ஜீ எல் பீரீஸ் .

இலங்கையை உலகம் நம்பாது பீரிஸ் விசனம்

இவர் வெளியுறவு மந்திரியாக விளங்கிய பொழுதும், அங்கே பொய்களை கூறி காலத்தை கடத்தி , உலகத்தை ஏமாற்றி வந்துள்ள நிலையில் ,தற்போது கோட்டபாய மகிந்த குடும்பம் பெரும் போர் குற்ற சாட்டு நெருக்கடியில் சிக்கியுள்ளனர் .

அடுத்து வரும் ஐநா மனித உரிமை பேரவையில் ,இலங்கை பெரும் நெருக்கடியை சந்திக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

யாழில் வாள்வெட்டு பட்ட பகலில் நடந்த பயங்கரம்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வாள்வெட்டு ரவுடிகள் அட்டகாசம்

யாழில் வாள்வெட்டு ரவுடிகள் அட்டகாசம்

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் ஆட்டோ சாரதி மீது மர்ம ரவுடி கும்பல் ஒன்று வாள்வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளது .

இந்த ரவுடிகள் கும்பலின் வாள்வெட்டு தகுதலுக்கு உள்ளன ஆசாரதி பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளன நிலையில் ,யாழ்ப்பாண மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .

கோத்தபாயவின் ஆட்சியில் உருவாக்காகி வைக்க பட்ட ஆவ் கிளுவை தொடர்ந்து ,இவ்விதமான வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது.

மின்னல் தாக்கி பெண் பலி
Posted in இலங்கை செய்திகள்

மின்னல் தாக்கி வவுனியாவில் பெண் பலி

மின்னல் தாக்கி வவுனியாவில் பெண் பலி

மின்னல் தாக்கி வவுனியாவில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார் .
கடந்த தினம் மாலை 5 ,30 மணியளவில் இடம்பெற்ற மின்னல் தாக்குதலில் சிக்கிய இந்த பெண் பலியாகியுளளார் .

மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி பலியானவர் சடலம் மீட்க பட்டு, மரண பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்க பட்டுள்ளது .

இலங்கையில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி , நாள் தோறும் பல டசின் பேர் பலியாகிய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது.

யாழ்ப்பாணத்தில் வர்த்தகர்களுக்கு அபராத பணம் அறவீடு
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் வர்த்தகர்களுக்கு 25 லட்சம் தண்டம்

யாழ்ப்பாணத்தில் வர்த்தகர்களுக்கு 25 லட்சம் தண்டம்

யாழ்ப்பாணத்தில் வர்த்தகர்களுக்கு 25 லட்சம் ரூப்ப பணம் தண்டம் அறவிட பட்டுள்ளது .

தமது வர்த்தக நிலையங்களில் பொருள்களின், உற்பத்தி திகதி மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் பெயர்கள் ,காட்சி படுத்த தவறியமை .

யாழ்ப்பாணத்தில் வர்த்தகர்களுக்கு 25 லட்சம் தண்டம்

அரச கட்டுப்பாட்டு விலையை மீறி பொருள்கள் விற்றமை ,பழுதடைந்த பொருட்கள் விற்றமை ,உள்ளிட்ட மிக பெரும் குற்ற சாட்டுக்களின் அடிப் படையில் இந்த தண்ட பணம் அறவிட பட்டுள்ளது .

மக்களே நம் தமிழர் கடைகளுக்கு செல்லும் பொழுது ,உற்பத்தி திகதி மற்றும் காலாவதியான திகதிகள் ,சரியாக உள்ளனவா ,என்பதனையும் ,பொருட்களில் விலைகள் காலம் முடிவடைந்த பின்னரும் ,மாற்றி ஒட்டப்பட்டுள்ளதா என்பதனையும் கவனத்தில் கவனத்தில் கொண்டு பொருட்களை கொள்வனவு கொள்க .

கிளிநொச்சியில் காவல்துறை நிலயம் மக்களை உளவு பிறக்க நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் காவல்துறை நிலையம் புதிதாக திறப்பு

கிளிநொச்சியில் காவல்துறை நிலையம் புதிதாக திறப்பு

கிளிநொச்சியில் கவால்துறை நிலையம் ஒன்று புதிதாக திறக்க பட்டுள்ளது .
நேற்று கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் ,இந்த காவல்துறை நிலையம் உத்தியோக பூரவமாக திறந்து வைக்க பட்டுள்ளது .

இலங்கை அரச படைகள் ஆக்கிரமிப்பின் கீழ், வடக்கு மாகாணம் வீழ்ச்சியடைந்த பின்னர் ,மக்கள் சிவில் நிர்வாகத்தை மேம் படுத்தும் நோக்குடன் திறக்கப்பட்ட 61 வது காவல்துறை நிலையம் இது என்கிறது காவல்துறை .

கிளிநொச்சியில் காவல்துறை நிலையம் புதிதாக திறப்பு

மக்களை கண்காணிக்கும் நடவடிக்கையில் இந்த காவல்துறை நிலையங்கள் இயக்க படுகின்றன .,

வடக்கு பகுதியில் ஒவ்வொரு வீதியிலும் அல்லது ,ஒவ்வொரு கிரமத்தில் மூன்றுக்கு மேற்பட்ட உளவுத்துறையினர் இயக்க வைக்க படுகின்றனர் .

அந்த கிராமத்தில் இடம் பெறும் நிகழ்வுகள் மற்றும் ,தகவல்களை இந்த இரகசிய உளவு பிரிவினர் வழங்கி வருகின்றனர் .

இந்த உளவாளிகள் வேறு யாரும் அல்ல நம்ம தமிழர்கள் தான் என்கிறது விடயம் அறிந்த வட்டாரங்கள் .

இந்தியாவில் 40 கோட்ஸி மோசே புலிகள் திருட்டு
Posted in இலங்கை செய்திகள்

இந்தியாவில் 40 கோடியை கொள்ளையடித்த புலிகள் இந்திய அரசு பரப்புரை

இந்தியாவில் 40 கோடியை கொள்ளையடித்த புலிகள் இந்திய அரசு பரப்புரை

இந்தியாவில் பெண் ஒருவரின் பெயரில் உள்ள நாற்பது கோடி ரூபாவை ,ஐரோப்பாவில் இருந்து இயங்கி வரும் ,புலிகள் குழுவை சேர்ந்தவர்களினாலே கொள்ளையடிக்க பட்டுள்ளது என இந்தியா உளவுத்துறை தகவலை வெளியிட்டுள்ளது .

ஐரோப்பாவில் உள்ள புலிகளின் தலைமையினால், அனுப்பி வைக்க பட்டவர்கள் ,இந்தியா சென்று ,இந்தியர்கள் போலவே வேடமிட்டு , குழுவாக இணைந்து ,போலி ஆவணங்களை தயாரித்து நாற்பது கோடிரூபா இந்திய பணத்தை ஆட்டையை போட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .

இல்லாத புலிகள் மீது தற்போதும், சேறடிக்கும் நகர்வில் இந்தியா உளவுத்துறை ,மற்றும் இந்திய பார்ப்பனிய குழுக்கள் செயல் பட்டு வருகின்றன .

ஆனால் ,மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள புலிகள் தலைவர் பிரபாகரனும் ,அந்த அமைப்பின் சிவில் நிர்வாகத்தையும் இன்றுவரை மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் ,எதிர்ப்பார்த்த வண்னமே பயணிக்கின்றனர் .

சீனாவை இலங்கையில் நுழையவைத்து , இந்திய இறையாண்மைக்கு , ஆபத்தை உருவாக்கி வரும் இலங்கையை இந்திய, இனவாதம் இன்றும் நம்புவது வேடிக்கை தான் .,

தமிழர்கள் அழிந்தது போல இந்தியர்கள் அழிக்க படும் நிலை, விரைவில் உள்ளது, என்பதை இந்தியா உணர்ந்து கொள்ளும் என்பதே கள நிலவரமாக உள்ளது .

கோட்டபாய பசில் மகிந்தவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு - சிக்கிய கோட்டபாய
Posted in இலங்கை செய்திகள்

கோட்டபாய பசில் மகிந்தவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு – சிக்கிய கோட்டபாய

கோட்டபாய பசில் மகிந்தவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு – சிக்கிய கோட்டபாய

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச ,மகிந்த ராஜபக்ச ,நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது .

நடப்பாண்டில் இலங்கை எதிர் கொள்ளும் பொருளாத பிரச்சனைகளுக்கு ,இந்த கோட்டாபய ராஜபக்ச ,மகிந்த ராஜபக்ச ,நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகிய மூவர் பிரதான பங்கு வகித்தனர் என குற்றம் சுமத்த பட்டுள்ள நிலையில் ,இந்த விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

கோட்டபாய பசில் மகிந்தவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு – சிக்கிய கோட்டபாய

தற்போது கோட்டபாயாவுக்கு எதிரான விசாரணைகள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது .

இந்த அனுமதியை அடுத்து ,கோட்டாபய மீதான வழக்கு விசாரணைகள் தீவிர படுத்த படும் என எதிர் பார்க்க படுகிறது .

கோட்டபாய ராஜபக்ச பொறுப்புக்கூறல் விடயத்தில் தண்டிக்க பட்டால் ,அதுவே ரணிலுக்கு மகத்தான வெற்றியை பெற்று கொடுக்கும் .

மேலும் ஒரு முறை இலங்கையில் ஜனாதிபதியாகவும் வாய்ப்பை ரணில் விக்கிரமசிங்கா பெற்று கொள்வார் என எதிர் பார்க்கலாம் .

அதற்கான முன்னோட்ட அரசியல் சித்து விளையாட்டை ரணில் ஆரம்பித்து வைத்துள்ளார் எனபதை இவை காண்பிக்கிறது .

உரப்பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசு சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

உரப்பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசு சடலம் மீட்பு

உரப்பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசு சடலம் மீட்பு

ஆனமடுவ திவுல்வெவ பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து காணாமல் போன 4 வயது குழந்தை உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று மதியம், வீட்டில் இருந்து தனியாக வெளியே சென்ற குழந்தை கை, கால்கள் கட்டப்பட்டு உரப் பையில் சுற்றப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டு ஆனமடுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உரப்பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசு சடலம் மீட்பு

குழந்தையின் வீட்டில் இருந்து சுமார் 150 மீற்றர் தொலைவில் உள்ள முட்புதரில் குழந்தை சுற்றப்பட்டிருந்த உரப்பை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குழந்தையை கடத்தியமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விவசாய நடவடிக்கைகக்கு தேவையான டீசலை உடனடியாக வழங்குங்கள். -இம்ரான் எம் பி அரசாங்கத்திடம் வேண்டுகோள்
Posted in இலங்கை செய்திகள்

விவசாய நடவடிக்கைகக்கு தேவையான டீசலை உடனடியாக வழங்குங்கள். -இம்ரான் எம் பி அரசாங்கத்திடம் வேண்டுகோள்

விவசாய நடவடிக்கைகக்கு தேவையான டீசலை உடனடியாக வழங்குங்கள். -இம்ரான் எம் பி அரசாங்கத்திடம் வேண்டுகோள்

மீனவர்களுக்கு தேவையான மண்ணெண்ணெய், விவசாய நடவடிக்கைகக்கு தேவையான டீசலை உடனடியாக வழங்குங்கள். – இம்ரான் எம் பி அரசாங்கத்திடம் வேண்டுகோள்!

பைஷல் இஸ்மாயில் –

மிக அதிகமான மீனவர்கள் இருக்கின்ற மாவட்டமாக திருகோணமலை மாவட்டம் இருக்கின்றது. தற்போது நாடு இருக்கின்ற நிலைப்பாட்டின் காரணமாக அவர்கள் தங்களின் கடற்தொழிலை செய்வதற்குக்கூட மண்ணெண்ணெய் இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.

அவர்களின் தொழிலை செய்வதற்குத் தேவையான மண்ணெண்ணெய்யை உடனடியாக பெற்றுக்கொடுக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த புதன்கிழமை (5) பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது இந்த வேண்டுகோளை அரசாங்கத்திடம் விடுத்தார்.

அங்கு அவர் உரையாற்றுகையில், குறிப்பாக கிண்ணியா பிரதேசத்திற்கு சுமார் 260 க்கு மேற்பட்டு OFRP படகுகளுக்கும், 40 க்கு மேற்பட்ட சுருக்குவலை படகுகளுக்கும் அனுமதி கிடைப்பெற்று மீன்பிடி நடடிக்கையில் ஈடுபட்டு

வருகின்றனர். சுருக்குவலை படகுக்கு மாத்திரம் நாளொன்றிற்கு 4800 லீற்றர் மண்ணெண்ணெய் தேவைப்படுகின்றது. ஏனைய படகுகள் மற்றும்

கடற்தொழிற்பாடுகளுக்கு மொத்தமாக நாளொன்றிற்கு 12000 லீற்றர் தொடக்கம் 13000 லீற்றர் தேவைப்படுகின்றது.

இந்நிலையில் சுமார் ஒரு மாதமாக மண்ணெண்ணெய் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இறுதியாக செப்டம்பர் 10 ஆம் திகதி மண்ணெண்ணெய்

வழங்கப்பட்டதாகவும், அதன் பிற்பாடு தற்போது வரை வழங்கப்படாததால் மக்கள் அனைவரும் பல்வேறு சிக்கல்களையும் சவால்களையும் எதிர்நோக்குவதாகவும் தெரிவித்தார்.

எனினும், தற்போது கறுப்புச் சந்தையில் மண்ணெண்ணெய் ரூபா 800.00 முதல் 1200.00 வரை விற்கப்படுகிறது. கறுப்புச் சந்தை வியாபாரிகளுக்கு மண்ணெண்ணெய் எவ்வாறு கிடைக்கிறது என்ற கேள்வியையும் எழுப்பினார்.

கிழக்கு மாகாணத்தில் டீசல் தட்டுப்பாடு காரணமாக விவசாய நடவடிக்கைகளை


மேற்கொள்ள இயந்திரங்களை பயன்படுத்த முடியாமல் இருப்பதால், மீனவர்களைப்போல் விவசாயிகளும் பாதிக்கக்கப்பட்டுள்ளனர்.


இவர்களின் விடயத்தையும் கருத்திற்கொண்டு அரசாங்கம் மிக விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

இலங்கை வந்தடைந்தார் ரணில் விக்கிரமசிங்கா
Posted in இலங்கை செய்திகள்

நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்தை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் விளக்கினார்

நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்தை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் விளக்கினார்

அண்மைக்கால வரலாற்றில் நாடு எதிர்நோக்கிய பாரிய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்காக பழைய முரண்பாடுகளை மறந்து பொது வேலைத்திட்டத்தில் அனைவரையும் இணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.


நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான நான்கு கட்ட மூலோபாயத் திட்டத்தை அறிமுகப்படுத்திய ஜனாதிபதி, முதல் கட்டம் வெற்றியடைந்துள்ளதாகவும், இரண்டாவது கட்டத்திற்கான அடித்தளம் தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் இன்று (06) பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.

ஜப்பான்-பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கான விஜயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, கடன் மறுசீரமைப்புப் பணிகளில் மத்தியஸ்தராக ஜப்பான் முன்னணி வகிக்க உடன்பட்டிருப்பது

நல்லதொரு அறிகுறி எனவும், கடன் வழங்கிய நாடுகளின் மாநாட்டின் இணைத் தலைமை பொறுப்பை ஜப்பானுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

கடன் வழங்கி உள்ள இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட முக்கிய நாடுகளுடனும், ஏனைய கடன் வழங்குனர்களுடனும் நடத்தப்படும்

பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் தொடர்பிலும் மிக விரைவில் அவர்களுடன் பலதரப்பு இணக்கப்பாட்டை எட்டுவது குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், சிங்கப்பூர் பிரதமர் லீ ஷென் லோனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் பாராளுமன்றத்தில் விளக்கமளித்த ஜனாதிபதி,

கடந்த காலத்தில் கைவிடப்பட்ட சிங்கப்பூர்-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மீண்டும் புத்துயிர் பெறச் செய்ய வேண்டுமெனவும் இங்கு குறிப்பிட்டார்.

அதன் ஊடாக சிங்கப்பூருடன் நிலையான பொருளாதார அணுகுமுறையை ஏற்படுத்துவதன் வாய்ப்பு தொடர்பாகவும் தென்கிழக்காசியாவுடனான

நாட்டின் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு பற்றியும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

விவசாயத் துறை தொடர்பில் துரிதமாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களினால் கடந்த போகத்தில் எதிர்பார்த்ததை விட அதிக அறுவடையை பெற முடிந்ததாகவும், அடுத்த பெரும் போகத்தை எவ்வித

தடையுமின்றி வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு தேவையான விதைநெல் மற்றும் உரங்கள் என்பன தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மேலும் தெரிவித்தார்.

உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக துரித உணவு உற்பத்தி வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட

ஜனாதிபதி,பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கத்தைத் தடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.


பொருளாதார நெருக்கடிகளைத் தீர்க்கத் தேவையான எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் விளக்கினார்.

குறைந்த வருமானம் பெறும் 31 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள்
Posted in இலங்கை செய்திகள்

குறைந்த வருமானம் பெறும் 31 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள்

குறைந்த வருமானம் பெறும் 31 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள்

இலங்கையிலுள்ள குறைந்த வருமானம் பெறும் 31 இலட்சம் குடும்பங்களுக்கு நலன்புரி உதவிகள் வழங்கும் வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

‘எவரையும் கைவிடாதீர்’ எனும் தொனிப்பொருளில் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டத்தின் கீழ், சமுர்த்தி, முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோய் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் பயனடையும் குடும்பங்கள்

அல்லது தனிநபர்கள், மானியங்களை எதிர்பார்த்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியால்

பாதிக்கப்பட்டு அரசாங்க உதவியை எதிர்பார்க்கும் நபர்கள் ஆகியோருக்கு இந்த சலுகைகள் கிடைக்கும் என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான கால அவகாசம் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நலன்புரி நன்மைகள் சபையின் (www.wbb.gov.lk) இணையத்தளத்தில் இருந்து எவரும் உரிய விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர்,

புதிய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதன் ஊடாக தகுதியுள்ள அனைத்து பயனாளிகளையும் உள்வாங்க எதிர்பார்க்கிறோம். நலன்புரி நன்மைகள் சபையின் மூலம் தகுதியான அனைவருக்கும் நிவாரணங்கள் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு கொடுப்பனவுகளை குறைப்பதற்கு அரசாங்கம் தயாராவதாக சிலர் பொய்ப்பிரசாரம் செய்து வருகின்றனர்.

தற்போது நலன்புரித்திட்ட உதவிகள் பெறும் குழுக்களையும், நலன்புரித்திட்ட உதவிகளுக்காக காத்திருக்கும் குழுக்களையும் சரியான முறையில் உள்வாங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை நாம் விரைவில் செயல்படுத்துவோம். இந்த ஆண்டு இறுதிக்குள், அனைத்து தகவல்களையும் சேகரித்து, தேவையான, பொருத்தமான மற்றும் சரியான முறையில் கொடுப்பனவை வழங்க இருக்கிறோம்..

யாரையும் விட்டு விடாமல் இந்த கொடுப்பனவு வழங்க வேண்டும் என்ற தேசியப் பொறுப்பில் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம்.

தற்போது பொது உதவி, நலன்புரித்திட்ட உதவிகள் மற்றும் ஊனமுற்றோர் உதவித்தொகை பெறும் பலர் உள்ளனர்.

அவர்கள் பிரதேச செயலகத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும். தற்போது குறைந்த அளவிலான பயனாளிகள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். அதனால்தான் பதிவு காலத்தை நீடித்திருக்கிறோம்.

இதனை மேலும் நீடித்தால் பயனாளிகளுக்கு கொடுப்பனவு வழங்குவது இன்னும் தாமதமாகும்.எனவே இதை துரிதமாக முன்னெடுக்க வேண்டும்.

அதற்கு நமக்கு ஒரு தரவு கட்டமைப்பொன்று அவசியமாகிறது. விண்ணப்பங்களைப் பெற்று தரவு கட்டமைப்பொன்றை தயாரிக்க இருக்கிறோம்.

தற்போது உதவித்தொகை பெறுபவர்களும் கட்டாயம் தங்களை பதிவு செய்ய வேண்டும். இதை வெளிப்படைத் தன்மையுடன் செய்ய தரவு கட்டமைப்பை தயாரித்துள்ளோம்.

கிராமத்து இளைஞர்களுக்கும் இதில் பெரும் பொறுப்பு உள்ளது. கிராமத்தில் உள்ள ஆதரவற்ற மக்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு இந்த திட்டம் தொடர்பாக தெளிவுபடுத்த முடியும்.

முதியவர்கள், ஊனமுற்றோர், சிறுநீரக நோயாளிகள் மற்றும் ஆதரவற்ற குடும்பங்கள் கிராமங்களில் வாழ்கின்றன.

அவர்கள் அனைவரையும் இந்தத் தரவுக் கட்டமைப்பிற்குள் உள்வாங்கி அவர்களின் நலன்களை கவனிக்க நலன்புரி நன்மைகள் சபை எதிர்பார்க்கிறது.

விண்ணப்பம் கிடைக்கப் பெற்றதன் பின்னர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சென்று குறித்த குடும்பங்கள் தொடர்பில் ஆராய்ந்து மேலதிக நடவடிக்கைகளை எடுப்பார்கள்.

பின்தங்கிய குடும்பங்களுக்கு புள்ளிகள் வழங்கும் முறையொன்றும் ஆரம்பிக்கப்படும். அதன்படி, அவை தரவு கட்டமைப்பில் சேர்க்கப்படும்.

இந்த செயல்பாட்டின் கீழ் தெரிவுசெய்யப்படாதவர்களுக்கு மேன்முறையீடு செய்ய முடியும். தகுதியற்ற ஒருவர் இதில் சேர்க்கப்பட்டிருந்தால் ஆட்சேபனை முன்வைக்க முடியும்.

யாருடைய கொடுப்பனவுகளையும் குறைப்பதற்காக இந்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை.


வெளிப்படையான முறையில் நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படும்’’ என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியில் வட்டி அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை மத்திய வங்கியில் வட்டி எவ்வளவு தெரியுமா

இலங்கை மத்திய வங்கியில் வட்டி எவ்வளவு தெரியுமா

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது 2022 ஒத்தோபர் 05ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும்

முறையே 14.50 சதவீதம் மற்றும் 15.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது.

இத்தீர்மானத்தினை மேற்கொள்கையில் சபையானது அண்மைய பேரண்டப்பொருளாதார நிலைமைகள், எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திகள் மற்றும் பேரண்டப்பொருளாதார எறிவுகள் என்பவற்றினைக் பரிசீலனையில்

கொண்டது. தற்போது நிலவுகின்ற இறுக்கமான நாணய நிலைமைகள், குறைவடைந்து செல்கின்ற பணவீக்கத்தின் வேகம் மற்றும் உள்நாட்டு மற்றும்

உலகளாவிய காரணிகள் இரண்டினாலும் ஆதரவளிக்கப்பட்டு குறுகிய காலத்தில் எதிர்பார்க்கப்படும் பணவீக்க வீழ்ச்சிப் பாதை என்பவற்றினை சபை குறித்துக்காட்டியது.

இலங்கை மத்திய வங்கியில் வட்டி எவ்வளவு தெரியுமா

எதிர்வரும் காலப்பகுதியில் எதிர்பார்க்கப்டும் பணவீக்க வீழ்ச்சிப் பாதையினையடைவதற்கு நாணய நிலைமைகள் போதியளவில் இறுக்கமாகக் காணப்படுவதாக சபை அபிப்பிராயப்பட்டுள்ளது.

இறுக்கமான இறை வழிமுறைகள் ஏற்கனவே நடைமுறையிலுள்ள இறுக்கமான நாணயக்கொள்கை வழிமுறைகளின் தாக்கங்களை

முழுமையடையச்செய்து கூட்டுக்கேள்வி அழுத்தங்களின் ஏதேனும் கட்டியெழுப்புதலினை தணித்து அதன்மூலம் பணவீக்க எதிர்பார்க்கைகளை நிலைநிறுத்தி முதன்மைப்


பணவீக்கத்தினை நடுத்தர காலத்தில் இலக்கிடப்பட்ட 4-6 சதவீத மட்டத்திற்குக் கொண்டுவருவதில் துணைபுரியும்.

மின்சார பணம் செலுத்த மறுக்கும் தயாசிறி
Posted in இலங்கை செய்திகள்

மின்சார பணம் ஆறு லாட்சத்தை செலுத்த மறுக்கும் சிங்கள எம்பி

மின்சார பணம் ஆறு லாட்சத்தை செலுத்த மறுக்கும் சிங்கள எம்பி

இலங்கையின் முக்கிய எம்பியாக விளங்கி வரும் Dayasiri Jayasekera Rs. 637,448.38. மின்சார கட்டணத்தை செலுத்தும் படி ,மின்சாரவாரியம் அறிவித்துள்ளது .

இந்த பணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் ,தவறினால் அவரது வீட்டுக்குரிய ,மின்சாரம் துண்டிக்க படும் என மின்சார வாரியம் எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது .

இலங்கையில் மக்களை நல்வழி நடத்த வந்துள்ள எம்பிக்கள் ,அமைச்சர்கள் ஊழல் மோசடிகள் இவ்விதம் தலை விரித்தாடும் பொழுது ,நாடு எவ்வாறு முன்னேற்ற நிலைக்கு செல்லும் என்பதை மக்கள் மன்றே தீர்மானிக்க வேண்டும் .

மின்சார பணம் ஆறு லாட்சத்தை செலுத்த மறுக்கும் சிங்கள எம்பி

வெள்ளையர் நாடுகளில் எம்பியோ ,அரசனோ,ஆண்டியோ ,அவர்கள் பணத்தினை உடனே முறைப்படி செலுத்த வேண்டும் ,தவறின் தண்டம் அவர்கள் வீடு தேடி செல்லும் .

அதனால் தான் வெள்ளையர் நாடுகள் பொருளாதாரம் ,மற்றும் சட்டம் ,ஒழுக்கம் என்பனவற்றில் தலை சிறந்து விளங்குகிறது .

இலங்கையில் மக்கள் விழித்தெழாத வரைக்கும் ,இவ்வாறான மோசடி மன்னர்கள் நாடளுவதை தவிர்க்க முடியாது .

அதற்கு இலங்கை மக்கள் மேற்குலக ,வெள்ளையர்கள் நாட்டின் சட்டம் ,ஒழுங்கு,வாழ்க்கை தரத்தை படிக்க வேண்டும் .

யாழ்ப்பாணத்தில் 13 சிறுமி கர்ப்பம்
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் 13 சிறுமியை கர்ப்மாக்கிய 73 வயது தத்தா

யாழ்ப்பாணத்தில் 13 சிறுமியை கர்ப்மாக்கிய 73 வயது தத்தா

இலங்கை யாழ்ப்பாணத்தில் 13 சிறுமியை 73 வயது தாத்தா ஒருவர் கர்பமாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது .

பாதிக்க பட்ட சிறுமி வழங்கிய தகவலின் அடைப்படையில் ,வயோதீப தாத்தா கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார் .

பாதிக்க பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுளளார் .

குறித்த சிறுமி பாலியல் வன்புணர்வு தொடர்பில், கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் .

மேற்படி தாத்தாவினால் நடத்த பட்ட பாலியல் சம்பவம் ,யாழ்ப்பாண மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

போதை பொருள் பாவனை அதிகரிப்பே ,இந்த சீரழிவுகளுக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது .

சிறிலங்காவுக்கு தோல்வி ஆனால் தமிழர்களுக்கு வெற்றியல்ல நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
Posted in இலங்கை செய்திகள்

சிறிலங்காவுக்கு தோல்வி ஆனால் தமிழர்களுக்கு வெற்றியல்ல நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

சிறிலங்காவுக்கு தோல்வி, ஆனால் தமிழர்களுக்கு வெற்றியல்ல நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

சிறிலங்காவுக்கு தோல்வி, ஆனால் தமிழர்களுக்கு வெற்றியல்ல ! கேள்விக்குறியான பொறுப்புக்கூறல் பொறிமுறை !! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

சிறிலங்கா தொடர்பில் ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், சிறிலங்காவுக்கு தோல்வியாக இருந்தாலும், தமிழர்களுக்கு வெற்றியல்ல என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ

அரசாங்கம், தமிழர்களுக்கு எதிரான பாரிய மனித உரிமைமீறல்களுக்கான பொறுப்புக்கூறலுக்கு இத்தீர்மானம் வழியமைக்கவில்லை என்பதோடு, தமிழர் தாயகத்தினை ஆக்கிரமித்து நிற்கின்ற சிறிலங்காவின் இனப்படுகொலை

இராணுவமானது, பொறுப்புக்கூறலுக்கான அச்சமேதுமின்றி, தமிழர்கள் எதிரான தனது பாரிய மனித உரிமைமீறல்களை தொடரவே வழிசெய்துள்ளது என தெரிவித்துள்ளது.

இன்று செப்-6 வியாழக்கிழமை சிறிலங்கா இரண்டு ஆண்டுகள் காலநீடிப்பு வழங்கும் வகையில் சபையில் கொண்டுவரப்பட்ட சிறிலங்கா தொடர்பிலான

51/1 தீர்மானத்துக்கு 20 நாடுகள் ஆதரவாகவும், 7 எதிராகவும் வாக்களித்திருந்தன. 20 நாடுகள் வாக்களிக்கவில்லை.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமிழர் அரசியல் தரப்புக்கள், புலம்பெயர் அமைப்புக்கள் என இழைக்கப்பட்ட அநீதிக்கு பொறுப்புக்கூறவைக்க சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு

சிறிலங்காவுக்கு தோல்வி, ஆனால் தமிழர்களுக்கு வெற்றியல்ல நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

பாரப்படுத்துமாறு வேண்டப்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்கான கோரிக்கை புறந்தள்ளப்பட்டு, சிறிலங்காவுக்கு மேலும் மேலும் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது ஐ.நா எதற்காக உருவாக்கப்பட்டதோ,

அதன்தார்மீகத்துக்கு மாறாக அமைந்துள்ளதோடு, அரசுகள் தமது பூகோள புவிசார் நலன்களை அடைய, பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் மேலும் அநீதி இழைப்பதாகவே உள்ளது.

‘ இந்தியா மீண்டும் வாக்களிக்காமல் விலகியதால் ஈழத் தமிழர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். சிறிலங்கா தனது ‘சீனத் துரும்புச்சிட்டையை’ நன்றாக கையாண்டு அதன் அண்டை நாடான இந்தியாவை பயமுறுத்தி

அமைதியாகி விட்டது’ எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், ‘பிராந்திய வல்லரசான

இந்தியாவும், உலக வல்லரசும் தார்மீகக் கோட்பாடுகள், துணிவு, உறுதிப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் செயல்படும் என்று ஈழத் தமிழர்களாகிய நாங்கள் எதிர்பார்த்தோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

‘ஐ.நா.வின் உள்ளக ஆய்வு அறிக்கையின்படி இறுதிப்போரின் போது இனப்படுகொலை செய்யப்பட்ட 70,000 பேர் விடயத்தை புறந்தள்ளிவிட்டு,

தென்னிலங்கை கிளர்ச்சியில் உயிரிழந்த 10 பேருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது’ அதிர்ச்சியளிக்கிறது எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

‘தமிழ் தேசத்தின் மீதான சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பானது சிங்களமயமாக்கலுக்கும் பௌத்தமயமாக்கலுக்கும் அரணாக இருப்பதுடன், தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் சுரண்டுகிறது.

குறைந்பட்சம் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் தமிழர் பகுதிகளில் இருந்து சிறிலங்கா இராணுவத்தினை

குறைப்பதற்கும், வெளியேறுவதற்கான கால அட்டவணை அமைந்திருக்க வேண்டும்’ எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவுக்கு அப்பால் சர்வதேச ஜனநாயக சட்டவெளியில் நீதிக்கான புதிய புதிய களங்களை உருவாக்க முனைவதோடு, சிறிலங்காவினால்

நிராகரிக்கப்பட்ட ரோம் உடன்படிக்கையின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்தினை அரசியல் இறைமையுள்ள ஓர் தேசமாக

, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்தினை ஏற்றுக் கொள்வதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

பிகு : பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.

மிக கொடூரமான புலிகளை அழித்தேன் சரத்பொன்சேகா
Posted in இலங்கை செய்திகள்

மிக கொடூரமான புலிகளை அழித்தேன் சரத்பொன்சேகா

மிக கொடூரமான புலிகளை அழித்தேன் சரத்பொன்சேகா

உலகில் மிக கொடும் பயங்கரவாதிகளான தமிழீழ விடுதலை புலிகளை ,இலங்கையில் இருந்து முற்று முழுதாக அழித்துள்ளேன் என ,முன்னாள் இராணுவ தளபதியும் ,தமிழ் இன படுகொலையாழியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார் .

இறுதி போர் அண்மிக்கும் கால பகுதியில், சரத் பொன்சேகா தற்கொலை குண்டு தாக்குதலுக்கு ,உள்ளான நிலையில் உயிர் தப்பித்தார் .

மேலும் பலாலி விமான தளத்தில் தரையிறங்க முற்பட்ட பொழுது மயிரிழையில், புலிகளின் பீரங்கி தாக்குதலில் இருந்து தப்பித்து சென்றார் .


அவ்வாறான அரச பயங்கரவாதத்தை புரிந்த சரத் பொன்சேகாவே புலிகளை இவ்வாறு கீழ்த்தரமாக விமர்சித்துள்ளார் .

ஐநாவில் இலங்கைக்கு எதிராக பிரேரணை நிறைவேற்றம்
Posted in இலங்கை செய்திகள்

ஐநாவில் இலங்கைக்கு எதிராக பிரேரணை நிறைவேற்றம்

ஐநாவில் இலங்கைக்கு எதிராக பிரேரணை நிறைவேற்றம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் ,இன்று இலங்கைக்கு எதிராக ஐந்துநானாடுகளினால் பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டது .

இந்த பிரேரணை இலங்கைக்கு எதிராக நிறைவேற்ற பட்டுள்ளது .

இந்த வாக்கெடுப்பில் 20 நாடுகள் ஆதரவாகவும் .7 நாடுகள் எதிர்ப்பாகவும் வாக்குகளை அளித்தன .

இந்தியா வழமை போன்று வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை .
மேலும் 20 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை .

இந்த நிலைப்பாடு இலங்கைக்கு பெரும் இருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

பொய்களை கூறி கால நீடிப்பு செய்து வந்த இலங்கைக்கு ,ஐநாவில் தகுந்த பாடம் புகட்ட பட்டிருப்பதாக நம்ப படுகிறது .

இலங்கைக்கு உதவிகள் வழங்க படும் ஐநா தெரிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஐநாவில் மனிதஉரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பு

ஐநாவில் மனிதஉரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பு

ஐநா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது .

இந்த பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணையை பிரிட்டன் ,ஜெர்மனி ,கனடா ,மலாவி ,மொண்டெனேகுரே ,வடக்கு மாசிடோனியா போன்ற நாடுகள் இலங்கை தொடர் பான் தீர்மானத்தை தயாரித்துள்ளன .

இலங்கையில் நல்லிணக்கம் ,பொறுப்புக்கூறல் ,மற்றும் மனித உரிமைகள் மேம்படுத்தல் என்ற தலைப்பின் கீழ், இந்த வாக்கெடுப்பு இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படுகிறது .

இந்தியா வழமை போன்று வாக்களிப்பில் கலந்து கொள்ளாது என எதிர் பார்க்க படுகிறது .