தபால் திணைக்களத்தின் எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

தபால் திணைக்களத்தின் எச்சரிக்கை

தபால் திணைக்களத்தின் எச்சரிக்கை

தமது உத்தியோகபூர்வ இணையத்தளம் எந்தவொரு இணையப் பரிவர்த்தனைகளுக்கும் உதவவில்லை என இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் போன்று போலியான இணையத்தளத்தை உருவாக்கி பொதுமக்களின் கடனட்டை மற்றும் வரவட்டைகளின் தகவல்களைப் பெற்று மோசடிகள் இடம்பெற்றுவருவதாக அண்மையில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தமது இணையதளம் இதுபோன்ற எந்த ஒன்லைன் பரிவர்த்தனைக்கும் வசதி செய்யவில்லை என்றும், மோசடி செய்பவர்கள் தங்களது இணையத்தள முகவரியை தவறாகப் பயன்படுத்தியுள்ளனர் என்றும் இலங்கை தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

தபால் திணைக்களத்தின் எச்சரிக்கை

முன்பதிவு செய்யப்பட்ட பொதிகளுக்கு சிறிய தொகையை செலுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட இணையதளம் மூலம் ஒன்லையினில் குறுஞ்செய்தி அனுப்பி இந்த மோசடி இடம்பெறுவதாக அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், இந்தச் செயலைச் செய்யும் மோசடியாளர்களுக்கு இரையாகிவிட வேண்டாம் என்று பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் தபால் திணைக்களம், இது தொடர்பாக ஏதேனும் முறைப்பாடு, விசாரணை அல்லது விளக்கங்கள் தேவைப்பட்டால் 1950 என்ற அவசர அழைப்பு பிரிவு அல்லது அஞ்சல் தலைமையகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

லண்டன் லூசியம் சிவன் ஆலய தேர் திருவிழா video
Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

லண்டன் லூசியம் சிவன் ஆலய தேர் திருவிழா video

லண்டன் லூசியம் சிவன் ஆலய தேர் திருவிழா video


லண்டன் லூசியம் பகுதியில் அமைய பெற்றுள்ள ,
சிவன் ஆலயத்தின் தேர் திருவிழா இடம்பெற்றது.

பல்லாயிர கணக்கில் மக்கள் கலந்து கொண்டு தமது வேண்டுதல்களை நிறைவேற்றினர் .


பால்குடம் ,கற்பூர சட்டி ,காவடி ,உள்ளிட்ட வேண்டுதல்க நிகழ்வுகளும் இடம்பெற்றன .
கடந்த இரண்டு வருடங்களாக திருவிழா இடம்பெறாத நிலை காணப்பட்டது .

கொரனோ மற்றும் பிரிட்டன் இளவரசி அவர்கள் மரணமடைந்த நிலையில் ,தேர் திருவிழா இடம் பெறவில்லை .

ஆனால் இந்த வருடம் மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளது ,மக்கள் தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர் .
விரைவில் காணொளி பதிவேற்றம் செய்யப்படும் அதுவரை காத்திருங்கள் .

full video

அசானி கில்மிசாவுக்கு மக்கள் கண்ணீரால் வாழ்த்து
Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

அசானி கில்மிசாவுக்கு லண்டன் மக்கள் கண்ணீரால் வாழ்த்து


அசானி கில்மிசாவுக்கு லண்டன் மக்கள் கண்ணீரால் வாழ்த்து

அசானி கில்மிசாவுக்கு மக்கள் கண்ணீரால் வாழ்த்து ,
எங்கள் பிள்ளைகள் என உருக்கம்

அசானியை காணவில்லை தேடி அலையும் மக்கள் அழுகை ,கண்டி சின்ன குயில்அசானிக்கு நடந்தது என்ன ,ஊர் மக்கள் சோகத்தில் உறைவு ,

full video

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மர்ம சடலம் மீட்பு மிரட்டும் கொலைகள்

மர்ம சடலம் மீட்பு மிரட்டும் கொலைகள்

நானுஓயா, கிரிமெட்டிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நானுஓயா, கிளாரென்டர் தோட்டத்தை சேர்ந்த 49 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீதியொன்றில் உள்ள படிக்கட்டில் சடலம் ஒன்று காணப்படுவதாக நானுஓயா பொலிஸாருக்கு நேற்று (09) தகவல் கிடைத்திருந்தது.

உயிரிழந்தவர் கடந்த 8ஆம் திகதி உறவினர் வீட்டில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையை மிரட்டும் படு கொலைகள்
Posted in இலங்கை செய்திகள்

காணி தகராறு ஒருவர் கொலை

காணி தகராறு ஒருவர் கொலை

நுவரெலியா மீபிலிமான பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு பெண் காயமடைந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (09) காலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் ராகல பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் இந்த வீட்டின் உரிமையாளரின் தாயாரிடம் சாரதியாக பணிபுரிந்ததாகவும், தாய் உயிரிழப்பதற்கு முன்னர் அவரின் இறுதி ஆசையாக காணியின் உரிமையை குறித்த சந்தேகநபரின் பெயருக்கு மாற்றியுள்ளதாகவும் கூறி வீட்டின் உரிமையாளரான பெண்ணுடன் சிறிது காலமாக தகராறில் ஈடுபட்டுள்ளார்.

காணி தகராறு ஒருவர் கொலை

அதன்படி, சம்பவம் தினம் அன்று சந்தேக நபர் வீட்டுக்கு வந்து வீட்டில் இருந்த பெண்ணையும் உறவினர் ஒருவரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் உறவினர் உயிரிழந்த நிலையில், அவரின் சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த 41 வயதான வீட்டு உரிமையாளரான பெண்ணும் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், சந்தேக நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

இரத்மலானையில் துப்பாக்கிச்சூடு

இரத்மலானையில் துப்பாக்கிச்சூடு

இரத்மலானை – ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்..

குறித்த துப்பாக்கிச் சூட்டில் 46 வயதான நபர் ஒருவர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு ஆவா குழு தலைவன் கைது
Posted in இலங்கை செய்திகள்

பெண்மீது வாள்வெட்டு தாக்குதல்

பெண்மீது வாள்வெட்டு தாக்குதல்

யாழ்ப்பாணம் நீர்வேலியில் சனிக்கிழமை (11) யுவதி ஒருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஊடக நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவரும் குறித்த யுவதியின் வீட்டுக்குச் சென்ற அடையாளம் தெரியாதோர் குறித்த யுவதியின் மீதும் அவரது தாய் மீதும் வாள்வெட்டு தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

63 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் அழிவு
Posted in இலங்கை செய்திகள்

63 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் அழிவு

63 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் அழிவு

வறட்சியான வானிலையால் சிறுபோகத்தில் 63 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் அழிவடைந்துள்ளன என விவசாய காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பான அறிக்கை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் விவசாய அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது என சபையின் தலைவர் எம்.பி. வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வறட்சியான வானிலையினால் 64 ஆயிரத்து 342 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்

சுற்றுலாப் பயணிகள் அவதி
Posted in இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் ஓகஸ்ட் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

இந்த வருடம் ஓகஸ்ட் மாதத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என மத்திய வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 37 ஆயிரம் சுற்றுலாப் பயணிகளே நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இதன்படி, 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 82.2 வீதத்தினால் அதிகரித்துள்ளது

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

மரண வீட்டுக்கு சென்றவர் வெட்டிக் கொலை

மரண வீட்டுக்கு சென்றவர் வெட்டிக் கொலை

களுத்துறை, சேறுபிட பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (08) இரவு இக்கொலை இடம்பெற்றுள்ளதாக களுத்துறை – தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை சேறுபிட கொழும்பகே வத்த பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுள்ள நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபர் நேற்று மாலை மரண வீடொன்றுக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், வீடு திரும்பாததால், தேடி பார்த்த போது அயல் வீடொன்றுக்கு முன்பாக வெட்டுக்காயங்களுடன் தரையில் கிடந்துள்ளார்.

பின்னர் குடும்பத்தார் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ள நிலையிலி் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரண வீட்டுக்கு சென்றவர் வெட்டிக் கொலை

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் அப்போது மது அருந்திக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொலைசெய்யப்பட்ட நபரிடம் சந்தேகநபர் கடன் பெற்றுள்ளதாகவும், அதனை மறுநாள் மீண்டும் கேட்டபோது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் கொலை செய்யப்பட்டவரின் மகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கொலைச் சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

கடந்த ஓகஸ்ட் மாதம் வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 499.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இவ்வருடத்தின் கடந்த ஓகஸ்ட் மாதம் வரையிலான பணவனுப்பல்கள் 3,862.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

இது கடந்த 2022 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 74.4
சதவீத அதிகரிப்பு என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

கோட்டபாயா அமெரிக்கா சென்றால் கைதாவார்
Posted in இலங்கை செய்திகள்

லசந்தவை கொலை செய்யுமாறு கோட்டா பணித்தாரா

லசந்தவை கொலை செய்யுமாறு கோட்டா பணித்தாரா

இலங்கையின் ஈஸ்டர் குண்டுவெடிப்புகளை பற்றி சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை வெளியிட்ட இங்கிலாந்தின் சனல் 4, , முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டுதலின் பேரில் சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை நிகழ்த்தப்பட்டது எனும் தொடர்பாக புதிய குற்றச்சாட்டுகளுடன் வெளிவந்துள்ளது.

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடுகள் குறித்து சனல் 4 டிஸ்பாட்ச் நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலில், சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை பற்றி சாட்சியாளர் அசாத் மௌலானா பேசியுள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் மௌலானா, தற்பாதுகாப்புப் காரணமாக நாட்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வெளியேறிய பின்னர் இச்சம்பவங்கள் குறித்து பேசியுள்ளார்.

2008 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவைக் கொல்ல உத்தரவிட்டதாக குறித்த ஆவணப்படத்தின் ஒரு கட்டத்தில் மௌலானா விவரிக்கிறார்.

மௌலானாவின் கூற்றுப்படி, கோட்டாபய ராஜபக்ச ஒருமுறை பிள்ளையானுடனான சந்திப்பின் போது ‘டிரிபோலி படை’ என்ற துணை இராணுவ கொலைக் குழுவை உருவாக்க உதவுமாறு கோரியதாகக் கூறப்படுகிறது.

”அவர் (கோட்டாபய) பிள்ளையானிடம் சிறந்த குழுவைத் தேர்ந்தெடுத்து அவர்களை ஒன்றாக வேலை செய்ய வைக்குமாறு கூறினார். எனவே பிள்ளையான் தனது தேர்வுப்படி சிறந்தவர்களைத் தெரிவு செய்து ஒரு குழுவை உருவாக்கினார். அந்தக் குழுவானது பின்னர் அரசாங்கத்திற்கு எதிரானவர்களை அறிந்து அவர்களைக் கொலை செய்தது” என மௌலானா தெரிவித்துள்ளார்.

லசந்தவை கொலை செய்யுமாறு கோட்டா பணித்தாரா

ராஜபக்ச ஆட்சி குறித்த லசந்தவின் தொடர்ச்சியான விமர்சனங்கள் மற்றும் முக்கியமாக பெரிதளவில் அறியப்படாத அவர்களின் MiG இராணுவ ஜெட் பற்றி தனது கட்டுரையில் வெளிப்படுத்தியது போன்ற சம்பவங்களால் கோட்டாபய ஆத்திரமடைந்தார். எனவே ஒரு சந்திப்பில் தன்னையும் பிள்ளையானையும் அழைத்து, லசந்தவைக் கொலை செய்யுமாறு தெரித்ததாக மெளாலானா தெரிவித்தார்.

”இந்த நாய் என்னுடன் எப்போதும் விளையாடிக் கொண்டிருக்கிறது என அவர் சொன்னார். லசந்தவைக் கொல்ல வேண்டும். உன்னால் இயலுமானவரை சீக்கிரம் அதை செய் என அவர் சொன்னார்” என மௌலானா தனது நேர்காணலில் கூறுகிறார்.

அத்துடன், லசந்தவின் படுகொலை பற்றி ஆவணப்படத்தில் ஆதாரமளிக்கின்றார் நாடுகடத்தப்பட்டு வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ள குற்றப்புலனாய்வு அதிகாரி நிஷாந்த சில்வா. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் லசந்தவின் வழக்கின் புதிய விசாரணைக்கு நியமிக்கப்பட்ட நிஷாந்த சில்வா, விசாரணையில் கிடைத்த கண்டுபிடிப்புகள் தன்னை திரிப்போலி படைப்பிரிவுக்கு கொண்டு சென்றதாக ஆவணப்படத்தில் கூறுகிறார்.

லசந்தவின் கொலையுடன் தொடர்புடைய ஐந்து திரிபோலி படைப்பிரிவு உறுப்பினர்களின் தொலைபேசிகள் மற்றும் அழைப்புத் தள பகுப்பாய்வுடன் கூடிய தொலைபேசி பதிவுகள் லசந்த கொல்லப்பட்ட இடத்துடன் பொருந்தியதாக நிஷாந்த சில்வா கூறுகிறார்.

”எனது ஆய்வின் பிரகாரம் கோட்டாபயவுக்கு திரிபோலி பிரிவுடன் நேரடியான தொடர்பு இருந்தது. மேலும் லசந்தவின் படுகொலை தொடர்பில் சந்தேக நபராக அவரை (கோட்டா) குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்த போது, அது தொடர்பில் பேசுவதில் அவர் ஆர்வமாக இருக்கவில்லை” என நிஷாந்த சில்வா நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

விஷம் வைத்து கொலை செய்ய பட்ட 35 கோழிகள்
Posted in இலங்கை செய்திகள்

கோழி இறைச்சி விலை குறையும் அறிகுறி

கோழி இறைச்சி விலை குறையும் அறிகுறி

வர்த்தக அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கோழி இறைச்சியின் விலை தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் பண்டிகைக் காலத்தில், தற்போது 1,250 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1,100 ரூபாய்க்கு விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளதாக அதன் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த தலைவர் அஜித் குணசேகர,

கோழி இறைச்சி விலை குறையும் அறிகுறி

“வர்த்தக அமைச்சருடன் கலந்துரையாடினோம். அதன்படி உற்பத்தி செலவை கணக்கிட்டு கொடுத்துள்ளோம். கலந்துரையாடலுக்கு பின் சில உடன்பாடுகளுக்கு வந்துள்ளோம். தற்போது நாட்டில் இறைச்சி தட்டுப்பாடு இல்லை. சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் அதிகபட்ச திறனில்

உற்பத்தி செய்கின்றனர். அதன்படி எதிர்வரும் மாதங்களில் தட்டுப்பாடு ஏற்படாது. டிசம்பர் மாதத்திற்குள் உற்பத்தி திறன் அதிகரித்து உபரியாக இருக்கும் என நம்புகிறோம். அதன்படி விலை மேலும் குறையும். எங்களுக்கு உற்பத்தியை தொடர அரசு அனைத்து சலுகைகளையும் வழங்கியுள்ளது.

விலை 1,100 ரூபாவை எட்டும் என நம்புகிறோம். சோளம் தான் பெரிய பிரச்சனையாக உள்ளது. இலங்கைக்கு கொண்டுவந்தால் சோளத்தை முழுமையாக உணவுக்கு பயன்படுத்தலாம்.

அப்போது உற்பத்தி செலவை குறைக்கலாம். பண்டிகை காலத்தில் இந்த விலையை விட குறைவாக எங்களுக்கு கொடுக்க முடியும்

மண்சரிவு அபாயம் இரு மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளை (09) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதேபோல், ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு மேலும் நீடிக்கப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

கடந்த 24 மணித்தியாலங்களில் கேகாலை, மொரலிய ஒய பிரதேசத்தில் 114.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

மழையுடன் புளத்சிங்கள சிறிய ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் பரகொட, நாலியத்த, தம்பல போன்ற பிரதேசங்களில் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக புளத்சிங்கள மோல்காவ பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக புளத்சிங்கள ஹல்வதுர தமிழ் வித்தியாலயம் , பரகொட கிதுலேகொட கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் இஹலவெல்கம கனிஷ்ட வித்தியாலயம் இன்றும் மூடப்பட்டுள்ளன

வெற்றிலை குதப்பி துப்பத்தடை
Posted in இலங்கை செய்திகள்

வெற்றிலை குதப்பி துப்பத்தடை

வெற்றிலை குதப்பி துப்பத்தடை

ஊவா மாகாணத்தின் கடைசி நகரமான பதுளை, வெற்றிலையை மென்று துப்புதல், சுண்ணாம்புச் சுவரில் வெற்றிலையை தேய்த்தல், மீதமிருக்கும் சுண்ணாம்பை தடவுதல் போன்றவற்றால் மிகவும் அசுத்தமடைந்துள்ளதுடன், அது பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

இதைத் தவிர, பொதுச் சந்தை இடங்களிலும் இதே நிலைமை காணப்படுகின்றது. சில பாடசாலை மாணவர்கள் பாக்கு மற்றும் புகையிலையை மட்டும் மென்று சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்களும் பதுளை பஸ் நிலையத்தில் இவ்வாறு எச்சில் துப்புவதும் தெரியவந்துள்ளது.

வெற்றிலை குதப்பி துப்பத்தடை

பதுளை பஸ் நிலையத்தில் வெற்றிலை துப்புவது, சுண்ணாம்பு தடவுதல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மற்றும் மாநகரசபையின் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, பதுளை மாநகர சபையின் சுகாதார திணைக்களம் பதுளை பொலிஸாருடன் இணைந்து வெற்றிலையை துப்புபவர்களையும் சுண்ணாம்பு தடவி வருபவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த வாரம், இதுபோன்ற 15 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, தலா ஒரு டூபாய் அவர்களுக்கு தண்டம் விதிக்கப்பட்டது.

பொன்சேகா இராஜினாமா
Posted in இலங்கை செய்திகள்

சனல் 4 காணொளியை ஒதுக்க முடியாது பொன்சேகா

சனல் 4 காணொளியை ஒதுக்க முடியாது பொன்சேகா

புலனாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சலே ராஜபக்ஷர்க்களின் பாதுகாவலன் அத்துடன் ராஜபக்ஷர்களின் வீட்டில் மலசலகூடம் சுத்தப்படுத்துபவர் என்றும் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளியை சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது

என்றும் தெரிவித்த முன்னாள் இராணுவத்தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அது குறித்து விசேட கவனம் செலுத்தி சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தத்தினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (07) இடம்பெற்ற சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் அவர் மேலும் தெரிவிக்கையில்,

புலனாய்வுப் பிரிவின் பிரதானியான சுரேஷ் சலே தொடர்பில் சனல் 4 காணொளியில் பல விடயங்கள் கூறப்பட்டுள்ளன.

2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது புலனாய்வு பிரிவில் இருந்து கொண்ட, பொனிபஸ் பெரேரா என்பவருடன் ஒன்றிணைந்து தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் சுரேஷ் சலே புலனாய்வு பிரிவில் அதிகாரம் படைத்தவராக்கப்பட்டார்.

சனல் 4 காணொளியை ஒதுக்க முடியாது பொன்சேகா

சனல் 4 வெளியிட்டுள்ள ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் காணொளி தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக் குழு ஊடாக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது .

தெரிவுக்குழுக்கள் எவ்வாறு செயற்படும் என்பதை நாம் அறிவோம். ஆகவே சனல் 4 வெளியிட்ட விடயங்களை பாராளுமன்ற தெரிவுகுழு ஊடாக விசாரணை செய்வது பயனற்றது.எனவே சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்” என்றார்.

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

வீட்டுக்குள் இருந்து சந்தேகத்துக்கு இடமான சடலம் மீட்பு

வீட்டுக்குள் இருந்து சந்தேகத்துக்கு இடமான சடலம் மீட்பு

வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கங்பங்குவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து வெட்டுக்காயங்களுடன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

வெல்லவாய பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் 33 வயதுடைய கங்பங்குவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டுக்குள் இருந்து சந்தேகத்துக்கு இடமான சடலம் மீட்பு

உயிரிழந்தவர் தனது தாய் மற்றும் மூத்த சகோதர சகோதரிகளுடன் வீட்டில் வசித்து வந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், உயிரிழந்தவர் குடிப்பழக்கம் உள்ளவர் என்பதும் அயலவர்களுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு லட்சகம் ஏக்கர் சில இராணுவத்தால் ஆக்கிரமிப்பு
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகளை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

நாளை (09) முதல் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறும் தினங்களில் கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கை சுற்றியுள்ள வீதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நாளை 9, 10, 12, 14, 15ஆம் திகதிகளிலும், 17ஆம் திகதி இறுதிப் போட்டியும் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இனப்படுகொலைக்கு ஏன் சர்வதேச விசாரணையை மேற்கொள்ளவில்லை
Posted in இலங்கை செய்திகள்

இனப்படுகொலைக்கு ஏன் சர்வதேச விசாரணையை மேற்கொள்ளவில்லை

இனப்படுகொலைக்கு ஏன் சர்வதேச விசாரணையை மேற்கொள்ளவில்லை

செனல் 4 ஆவணப்படம் தொடர்பில் எல்லோரும் அறிந்த விடயத்தை சர்வதேச ஊடகம் உறுதிப்படுத்தியதை வரவேற்கிறோம். என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (07) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இனப்படுகொலைக்கு ஏன் சர்வதேச விசாரணையை மேற்கொள்ளவில்லை

ஏப்ரல் 21 தாக்குதல் விடயத்திற்கு சர்வதேச விசாரணை கோரிக்கையை வரவேற்கிறோம். அதனை தொடர்ந்து சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கூட்டமைப்பு கடிதம் அனுப்பியதும் வரவேற்கதக்கது.

சனல் 4 ஆவணப்படம் தொடர்பில் எல்லோரும் அறிந்த விடயத்தை சர்வதேச ஊடகம் உறுதிப்படுத்தியதை வரவேற்கிறோம்.

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு ஒரு சர்வதேச விசாரணையை முன் வைக்கும் போது எங்களுக்கு நடந்த இனப்படுகொலைக்கு ஏன் இன்று வரை ஒரு சர்வதேச விசாரணையை மேற்கொள்ள முன் வரவில்லை என தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் சிக்க போகும் இலங்கை
Posted in இலங்கை செய்திகள்

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – மனித உரிமைகள் ஆணையாளர்

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – மனித உரிமைகள் ஆணையாளர்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோர்க்கர் டர்க் இலங்கை தொடர்பான தனது வருடாந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச ஆதரவுடன் சம்பவத்தின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

உண்மையைக் கண்டறியும் புதிய பொறிமுறையொன்றை அரசாங்கம் முன்வைத்துள்ள போதிலும், உண்மையைக் கண்டறிவது மட்டும் போதாது எனவும், குற்றவாளிகளை தண்டிக்க போதுமான பொறிமுறையை வழங்குவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு அரசியல் உறுதிப்பாடு இருக்க வேண்டும் என்றும் ஆணையாளர் வலியுறுத்துகிறார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் ஒலிபரப்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு சட்டம் குறித்த பல சரத்துக்கள் தொடர்பில் தனது அறிக்கையில் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – மனித உரிமைகள் ஆணையாளர்

இலங்கையின் ஆட்சியில் வரலாற்று ரீதியிலான மாற்றம், கடந்த கால மக்கள் எதிர்ப்புக்களில் எதிர்பார்த்தபடி நடைபெறவில்லை என்றும், இதன் காரணமாக நீண்டகால சவால்களுக்கு தகவல் வழங்குவது மேலும் தாமதமாகி வருவதாகவும் ஆணையாளர் வருடாந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தொடர்ந்தும் பொறுப்புக்கூறல் இன்றி செயற்பட்டு வருவதாகவும், அண்மைக்காலமாக மனித உரிமை மீறல்கள், அதிகார துஷ்பிரயோகம் போன்ற சம்பவங்கள் நாட்டில் காணப்படுவதாகவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தனது வருடாந்த அறிக்கையில் மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை உறுதிப்படுத்துதல், ஊழலுக்கு எதிராக செயற்படுதல் மற்றும் நீதியை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்.

ஆழமான நிறுவன சீர்திருத்தங்கள் மற்றும் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளில் முன்னேற்றத்தை அடைவதில் இலங்கை கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஆணையாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் மற்றும் இந்நாட்டு அரசியல் கட்சிகள் இதனை அவசரத் தேவையாகக் கருத்தில் கொண்டு செயற்படுமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோர்க்கர் டர்க் கோரிக்கை விடுத்துள்ளார்.