சஹரான்கள் கோட்டாவை கட்டி அணைத்திருப்பர்
Posted in இலங்கை செய்திகள்

சஹரான்கள் கோட்டாவை கட்டி அணைத்திருப்பர்

சஹரான்கள் கோட்டாவை கட்டி அணைத்திருப்பர்

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டின் ஜனாதிபதியாக வருவார் என சஹரான்கள் அறிந்திருந்தால் கோட்டாபய ராஜபக்ஷவை கட்டிப்பிடித்து சஹரான்கள் மரணமடைந்திருப்பர் என்று தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் முன்னாள் எம்.பியுமான சுனில் ஹதுன்நெத்தி தெரிவித்தார்.

மக்களின் ஊழியர் சேமலாப நிதி ( EPF) ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) ஆகியவற்றை கொள்ளையடித்து, நிதி நிறுவனங்களை ஆபத்தில் ஆழ்த்தி, தேசிய வளங்களை ஏலம் விட்டு, மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பில் கினிகத்தேன கூட்டுறவு கூட்ட மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே சுனில் ஹதுன்நெத்தி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மக்கள் பிரச்சினை தொடர்பில் நாமல் ராஜபக்ஷவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை, சஜித் பிரேமதாசவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை, பாராளுமன்றத்தில் உள்ள எமது தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களை தவிர, யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்றார்.

தொலைக்காட்சியில் வரும் போது மைத்திரிபாலவின் பகிடிகளை பாருங்கள், அவர் தனது கட்சியின் பிரச்சினைகளை மட்டுமே பேசுகிறார், நாட்டின் பொருளாதாரம், உணவுப் பிரச்சினை, மருந்துப் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதில்லை என்றார்.

இந்நாட்களில் சனல் 4 காணொளியை தவிர மற்ற சனல்கள் மூடப்படுகின்றன, பொருட்களின் விலைக்கு சனல் இல்லை, எரிபொருளுக்கு சனல் இல்லை, பஸ்

கட்டணத்திற்கு சனல் இல்லை, மக்கள் பிரச்சனைகளை எந்த சனல்களும் பேசுவதில்லை, தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது பற்றி பேசுவதில்லை என்றும் குறிப்பட்டார்.

சஹரான்கள் கோட்டாவை கட்டி அணைத்திருப்பர்

சனல் 4வை பிடித்துக்குக் கொண்டு அரசியல் ரீதியாக தொங்கிக் கொண்டிருக்கின்றனர். அதற்கு நாமல் ராஜபக்ஷவிடம் நல்ல பதில்கள் உள்ளன, கோட்டாபய ராஜபக்ஷவை பதவிக்கு கொண்டு வர யாராவது தற்கொலை செய்து கொள்வார்களா என்று கேட்கின்றார்.

தங்களுடைய மரணங்களால்தான் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வருவார் என்று மரணித்த சஹரான்களுக்கு தெரிந்திருந்தால், தாங்கள் மட்டும் சாக மாட்டோம், கோட்டாபய ராஜபக்ஷவை கட்டிப்பிடித்து மரணித்து இருப்பார்கள் என தெரிவித்தார்.

பின்னர் அவர்கள் நாட்டு நலனுக்காக இறக்கிறார்கள் என்றால் அதுதான் அரசியல் தந்திரங்கள், அரசியல் விளையாட்டுகள் என்று பழமையானவர்கள் கூறுகின்றனர்.

இது இவ்வளவு கேவலமான நாடு, பதவிக்கு வருவதற்கு இன பேதங்களை உருவாக்கி, கேவலமான அரசியல் செய்கின்றனர். குறைந்த பட்சம் அவர்களுக்கு வருத்தம் இல்லை, வெட்கம் இல்லை, மனசாட்சி இல்லை,

“இந்த நாடு செல்லும் வழியை நிறுத்த வேண்டுமா இல்லையா? என்று கேட்பவர்கள் முதலில் இந்த அரசியல் அமைப்பை மாற்ற வேண்டும்” என்கின்றனர் என்றும் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார்.

சீனாவுக்கு குரங்கு விற்கும் இலங்கை
Posted in இலங்கை செய்திகள்

குரங்கு ஏற்றுமதி மனு விசாரணை நிறைவு

குரங்கு ஏற்றுமதி மனு விசாரணை நிறைவு


இலங்கை டோக் மக்காக் குரங்குகள் சீனாவுக்கு அனுப்பப்பட மாட்டாது என்று அரசாங்கம் உறுதியளித்த நிலையில், குரங்கு ஏற்றுமதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை நிறைவு செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

100 இலட்சம் டோக் மக்காக் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய முன்மொழியப்பட்டதை எதிர்த்து இலங்கையின் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கம் உட்பட 30 மனுதாரர்களால், ஏற்றுமதி செய்வதற்கான எந்தவொரு முடிவையும் முடக்கி ஆவணக் கேட்பு நீதிப் பேராணை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

குரங்கு ஏற்றுமதி மனு விசாரணை நிறைவு

டோக் மக்காக் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர முன்னர் தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இலங்கை டோக் மக்காக் குரங்குகள் சீனாவுக்கு அனுப்பப்பட மாட்டாது என்று வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் சார்பிலே திறந்த நீதிமன்றத்தில் ஆஜரான சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர்கந்தன் வருடாந்த மஹோற்சவம்
Posted in இலங்கை செய்திகள்

நல்லூர்கந்தன் வருடாந்த மஹோற்சவம்

நல்லூர்கந்தன் வருடாந்த மஹோற்சவம்

வரலாற்றுச் சிறப்புமிக்க அலங்கார நல்லூர்கந்தனின் வருடாந்த மஹோற்சவத்தின் 24 ஆவது திருவிழாவின் இரதோற்சவம் இன்று (13) பக்திபூர்வமாக இடம்பெற்றன.

21.08.2023 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் மஹோற்சவம் எதிர்வரும் 25 நாட்கள் திருவிழா இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்பெருமான் சமேதராக உள்வீதியுடாக வலம் வீற்று அலங்கார முருகன்,வள்ளி,தெய்வானை ஆகிய தெய்வங்கள் இரதோற்சவத்தில் வீற்று அருள்பாலித்தனர்.

நல்லூர்கந்தன் வருடாந்த மஹோற்சவம்

எதிர்வரும் 25 திருவிழாவாக நாளை (14) அன்று தீர்த்ததோற்சவமும் மாலை கொடியிறக்கத்துடன் இனிதே திருவிழா நிறைவடையும்.

இதில் பல பாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் பலரும் இஷ்டசித்திகளை பெற்றுச் சென்றனர்

எகிப்துக்கு பறந்தார் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா
Posted in இலங்கை செய்திகள்

G77+ சீனா மாநாட்டுக்கு புறப்பட்டார்‌ ஜனாதிபதி

G77+ சீனா மாநாட்டுக்கு புறப்பட்டார்‌ ஜனாதிபதி

தற்போதைய அபிவிருத்தி சவால்களுக்கு மத்தியில், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தின் வகிபாகம்” என்ற தொனிப்பொருளில்

செப்டம்பர் 14 முதல் 16 வரை கியூபாவின் ஹவானாவில் நடைபெறவுள்ள “G77+ சீனா” அரச தலைவர் மாநாட்டில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (13) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டார்.

ஈரானில் 1957 kg போதைவஸ்து கடத்தல் முறியடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

19 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

19 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

19 கோடி ரூபாய் பெறுமதியான 02 கிலோ 500 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் செவ்வாய்க்கிழமை (12) கட்டுநாயக்க விமான சரக்கு முனையத்தில் DHL வளாகத்தில் வைத்து கைப்பற்ற பட்டது.

இந்த போதைப்பொருள் ஒரு volleyball வலையின் மேல் மற்றும் கீழ் விளிம்புகளில் கூடுதல் பிளாஸ்டிக் குழாய் செருகப்பட்டு மறைக்கபட்ட நிலையில் கைப்பற்றபட்டுள்ளது.

19 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

பிரேசிலில் இருந்து கொழும்பு மருதானை பகுதியில் உள்ள முகவரிக்கு இந்த போதைப்பொருள் அடங்கிய ஏர் மெயில் பார்சல் அனுப்பப்பட்டுள்ளது. பார்சலின் உரிமையாளர்கள் இருவர் கட்டுநாயக்க விமான சரக்கு

முனையத்திற்கு வரவழைக்கப்பட்டு கைது செய்த சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளுக்காக இருவரையும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி 6 உடற்பாகங்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி 6 உடற்பாகங்கள் மீட்பு

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி 6 உடற்பாகங்கள் மீட்பு

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் செவ்வாய்க்கிழமை (12) ஆறாவது நாளாக இடம்பெற்ற நிலையில் ஆறாம் நாள் அகழ்வுப் பணிகள் சற்றுமுன்னர் நிறைவடைந்தன.

குறித்த அகழ்வாய்வின் போது ஏழு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்ததுடன் ஐந்து மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தொடர்சியாக அகழ்வுபணிகள் நடைபெற்றிருந்தன.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த புதன்கிழமை (06) உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந் நிலையில் ஆறாம் நாள் அகழ்வாய்வுகள் இன்று (12) முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ , தொல்லியல் ஆய்வாளர் பரமு புஷ்பரட்ணம், தடயவியல் பொலிஸார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி 6 உடற்பாகங்கள் மீட்பு

அகழ்வு பணியின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா இன்றையதினம் ஒரு உடற்பாகம் முழுமையாகவும் இன்னொரு உடற்பாகம் பகுதியளவில் மீட்கப்பட்டதாகவும் ஏற்கனவே மீட்கப்பட்ட ஐந்து உடற்பாகங்களுடன் ஆறு உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த பகுதியில் துப்பாக்கி சன்னம் ஒன்றும், கழிவு நீரை சுத்திகரிக்கும் உபகரணம் ஒன்றும் தடயப்பொருட்களாக எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அகழ்வு பணியில் உடலங்களை அடையாளப்படுத்துவதில் கடினத்தன்மை காணப்படுவதாகவும் ஒன்றன் மேல் ஒன்றாக பல உடல்கள் பின்னி பிணைந்து இருப்பதாலும் இந்தநிலை தோன்றியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் அகழ்வு பணிகள் தொடர்ந்து நாளைய(13) தினமும் ஏழாவது நாளாக முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரயில் மோதி வாலிபன் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

ரயில் திணைக்கள ஊழியர் படுகொலை

ரயில் திணைக்கள ஊழியர் படுகொலை

ரயில் திணைக்கள ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (12) பிற்பகல், கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்மலானை ரயில்வே குடியிருப்பில் அமைந்துள்ள வீட்டினுள் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் மாத்தறை, பியகஹா பகுதியைச் சேர்ந்த 41 வயதானவர் என்பதுடன், அவர் ரயில்வே குடியிருப்பில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தனிப்பட்ட தகராறு காரணமாக ரயில் திணைக்கள ஊழியரை ஒருவர் கத்தியால் குத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, மொரட்டுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லுனாவ பிரதேசத்தில் வீடொன்றின் முன்பாக கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் 58 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாக்குவாதத்தின் போது குறித்த நபர் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மொரட்டுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நீதிமன்ற அவமதிப்பு-ஓய்வு பெற்ற மேஜருக்கு 4 ஆண்டுகள் சிறை
Posted in இலங்கை செய்திகள்

மாணவன் மீது கை வைத்த அதிபருக்கு 7 ஆண்டுகள் சிறை

மாணவன் மீது கை வைத்த அதிபருக்கு 7 ஆண்டுகள் சிறை

பதின்ம வயது மாணவனை பாரதூரமான பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய பாடசாலை அதிபருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் தீர்ப்பளித்துள்ளார்.

“தனது கட்டுகாவலில் உள்ள மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது பாரதூரமான குற்றமாகும். தற்போது அதிகரித்து வரும் இத்தகைய செயற்பாடுகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படுவது அவசியம்.” என்று மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் தீர்ப்பில் கோடிட்டு காட்டினார்.

2014ஆம் ஆண்டு செப்டெம்பர் 23ஆம் திகதி மன்னார் பாடசாலையில் கற்ற 10 வயது மாணவன் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மாணவன் கல்வி கற்ற பாடசாலை அதிபர் கைது செய்யப்பட்டார்.

மன்னார் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற சுருக்க முறையற்ற விசாரணைகளின் பின் சட்ட மா அதிபரினால் மன்னார் மேல் நீதிமன்றில் பாடசாலை அதிபருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம். மிஹால் முன்னிலையில் விளக்கம் இடம்பெற்ற நிலையில் நேற்று (11) வழக்கு தீர்ப்புக்காக நியமிக்கப்பட்டது.

எதிரி மீதான குற்றச்சாட்டுக்கள் நிகழ்வு – நிபுணத்துவ சாட்சியங்கள் ஊடாக நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் வழக்குத் தொடுநரினால் நிரூபிக்கப்பட்டுள்ளதால் குற்றவாளி எனக் கண்டு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதன்படி, நீதிபதி தனது தீர்ப்பில்,

குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்படுகிறது, செலுத்தத் தவறின் 6 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும். பாதிக்கப்பட்ட மாணவனுக்கு ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். வழங்கத் தவறின் 6 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்” என்றும் மன்னார் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

வழக்குத் தொடுநர் சார்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாதி செஸான் மஹ்பூம் வழக்கை நெறிப்படுத்தினார்.

காரில் வந்து கடலில் குதித்து தற்கொலை
Posted in இலங்கை செய்திகள்

காரில் வந்து கடலில் குதித்து தற்கொலை

காரில் வந்து கடலில் குதித்து தற்கொலை


மொரட்டுவ எகொடஉயன விஜயபுர பிரதேச கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது.

இன்று (12) காலை 11 மணியளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன், அவர் மஹரகம பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடையவர் என சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் காரில் இந்தப் பகுதிக்கு வந்த குறித்த நபர், காரை அங்கேயே நிறுத்திவிட்டு கடலில் குதித்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த காட்சிகள் அருகில் இருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

ரயில்
Posted in இலங்கை செய்திகள்

120 ரயில் பயணங்கள் ரத்து

120 ரயில் பயணங்கள் ரத்து

தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிடின் பணிப்புறக்கணிப்பு தொடரும் என ரயில்வே லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (12) மாலை 6 மணிவரை சுமார் 120 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் தெரிவித்தார்.

சம்பளம், பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வவுனியாவில் வாலிபர் வெட்டி கொலை
Posted in இலங்கை செய்திகள்

கணவன் மனைவி இணைந்து செய்த சம்பவம்

கணவன் மனைவி இணைந்து செய்த சம்பவம்


துப்பாக்கியால் சுட்டு , கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகாயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த குற்றத்திற்காக தேடப்பட்டு வந்த சந்தேக நபரும் கொலைக்கு உதவிய சந்தேக நபரின் மனைவியும் தங்காலை குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று (11) ஹங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடிகல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரில் பயணித்த நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு, கூரிய ஆயுதத்தால் தாக்கி காயம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் கடந்த ஜூலை 11 ஆம் திகதி, ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 29 வயதுடையவர் எனவும் பெண் சந்தேகநபர் 23 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கணவன் மனைவி இணைந்து செய்த சம்பவம்

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, ​​ஹம்பாந்தோட்டை மற்றும் ஹங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 3 கால்நடை திருட்டு சம்பங்களுடன் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேக நபருக்கு ஹம்பாந்தோட்டை மற்றும் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தினால் 06 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் நேற்றைய தினம் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தடம் புரண்ட ரயில் போக்குவரத்து பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

ரயிலில் பயணித்த இளைஞன் மரணம்

ரயிலில் பயணித்த இளைஞன் மரணம்

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலின் கூரையில் பயணித்த இளைஞர் ஒருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் ஹொரபே ரயில் நிலையத்தின் கூரையில் மோதியதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் படுகாயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், அவர் சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ரயில் சாரதிகள் தொழிற்சங்கம் ஒன்று நேற்று (11) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதன்காரணமாக, தற்போது இயக்கப்படும் ரயில்களில் பயணிகள் அதிகளவில் பயணிப்பதாக தெரிவிக்கப்படுகிறது

கோட்டபாயா அமெரிக்கா சென்றால் கைதாவார்
Posted in இலங்கை செய்திகள்

அரசியலுக்கு திரும்பும் கோட்டா

அரசியலுக்கு திரும்பும் கோட்டா

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ததில் இருந்து கடுமையான மௌனம் காத்து வந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நேற்றைய தினம் தனது அரசியல் நுழைவை

உறுதிப்படுத்திய கோட்டாவின் நெருங்கிய நண்பரும் ஊடக உரிமையாளருமான ஒருவரின் தலைமையிலான புதிய அரசியல் கட்சி மூலம் தோல்வியடைந்த தனது பிம்பத்தை மீண்டும் கைப்பற்றி வலுப்படுத்த முனைந்துள்ளார்.

இந்நாட்டுப் பிரஜைகளால் பதவியில் இருந்து விரட்டப்பட்ட போதிலும், முன்னாள் ஜனாதிபதிக்கான அனைத்து சலுகைகள் மற்றும் வசதிகளையும் அனுபவித்துவரும் கோட்டாபய ராஜபக்ச, அண்மையில் தனது நெருங்கிய

உதவியாளரான திலித் ஜயவீரவினால் தலைமை ஏற்கப்பட்ட மவ்பிம ஜனதா கட்சிக்கு ஆதரவளிப்பதாக எமது சகோதர ஊடகமான டெய்லி மிரருக்கு அறியக்கிடைத்துள்ளது.

இலங்கையில் மிரட்டும் படுகொலைகள்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் மிரட்டும் படுகொலைகள்

இலங்கையில் மிரட்டும் படுகொலைகள்

இலங்கையில் மக்களை கொலைகள் மிரட்டிட வருகின்றன ,
நாள் தோறும் ,பல்வேறு பட்ட பகுதிகளில் இருந்து மனித சடலம் கண்டு பிடிக்க பட்டு வருகிறது .

இந்த மர்ம கொலைகளின் பின்னால் உள்ளவர்கள் கைது செய்யப்படாது ,
சிங்கள கால்துறையினர்ஈடுபட்டு வருகின்றனர் .

மிக முக்கிய அரசியல் கட்சி ஒன்றின் பின்புலத்தில் இந்த கொலைகள் ,
இடம்பெற்று வருவதான குற்ற சாட்டு முன் வைக்க படுகிறது .

தொடரும் இந்த மர்ம கொலைகள் மக்கள் மத்தியில் ஒருவித பீதியை ஏற்படுத்தியுள்ளது

தீயினால் மரங்கள் சேதம்
Posted in இலங்கை செய்திகள்

தீயினால் மரங்கள் சேதம்

தீயினால் மரங்கள் சேதம்

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதியோர் இல்ல வீதியில் இன்று(11) மதியம் பாரியளவில் பரவிய தீ மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

வெற்று காணி ஒன்றில் குப்பைகளை எரித்துக் கொண்டிருந்த போதும் திடீரென ஏற்பட்ட கடுமையான சுழல் காற்று காரணமாக குறித்த குப்பைகளில் பரவிய தீ அருகில் இருந்த ஏனைய வளவுகளுக்குள்ளும் பரவி பாரியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயினால் மரங்கள் சேதம்

இதன் காரணமாக சுமார் பத்துக்கும் மேற்பட்ட காணிகள் எரிந்து சாம்பலாகியுள்ளதுடன் பல பனை மரங்களும் தென்னை மரங்களும் எரிந்து நாசமாக உள்ளதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,.

மட்டக்களப்பு மாநகர சபைக்கு சொந்தமான தீயணைப்பு பிரிவினர் ஸ்தலத்திற்கு உடனடியாக விரைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதிக வருவாயினை பெற்றுக் கொடுக்கின்ற மாகாணமாக கிழக்கு மாகாணம்
Posted in இலங்கை செய்திகள்

அதிக வருவாயினை பெற்றுக் கொடுக்கின்ற மாகாணமாக கிழக்கு மாகாணம்

அதிக வருவாயினை பெற்றுக் கொடுக்கின்ற மாகாணமாக கிழக்கு மாகாணம்

அபு அலா –

Yana Swimming Academy இல் பயிற்சிபெற்று வருகின்ற 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான நீச்சல் பயிற்சிப் போட்டியொன்றை Trinco Aid நிறுவனம்

“Marine Mile Challenge” எனும் தொனிப்பொருளில் பாக்கு நீரிணை கடப்பதற்கான இரண்டாவது நீச்சல் பயிற்சிப் போட்டியை (01) ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தது.

14 கிலோமீற்றர் தூரத்தினை நீந்திக் கடக்கும் இப்போட்டி, காலை 8.30 மணிக்கு திருகோணமலை வைத்தியசாலையை அண்மித்த கடற்கரையில் ஆரம்பமாகி மதியம் 1.00 மணியளவில் திருகோணமலை
சல்லிமுனை கடற்கரையில் நிறைவடைந்தது.

13 சிறுவர்கள் பங்குபற்றிய இப்போட்டியில், 6 சிறுவர்கள் முழுமையாக கடந்து சாதனை படைத்தனர். சிலர் தங்களால் நீந்த முடிந்த தூரத்தினை அடைந்து தங்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்தனர்.

இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையின் தவிசாளர் பி.மதனவாசன் பிரதம அதிதியாகவும், Trinco Aid நிறுவனத்தின் நிறுவனர் இராஜக்கோன் ஹரிகரன், பணிப்பாளர் (திருமதி). தயாளினி ஹரிகரன்,

அதிக வருவாயினை பெற்றுக் கொடுக்கின்ற மாகாணமாக கிழக்கு மாகாணம்

நிகழ்ச்சி முகாமையாளர் சங்கரலிங்கம் நவநீதன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்துகொண்டு, இப்போட்டியில் பங்குபற்றிய வீரர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்ட கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையின் தவிசாளர் பி.மதனவாசன் தெரிவிக்கையில்,

எமது நாடு கடலால் சூழப்பட்டதொரு தீவாகும். ஆனால் தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்குபெறும் வீரர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே காணப்படுகிறது.

எமது பிள்ளைகள் இத்துறையிலும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதுபோன்ற போட்டிகள் மற்றும் பயிற்சிகளை தொடர்ந்தும் வழங்கி அவர்களை ஊக்கிவித்தும் வருகிறோம்.

அதுமாத்திரமல்லாமல், எமது நாட்டிலுள்ள எல்லா மாகாணங்களை விடவும், எமது மாகாணம் சகல வழிகளிலும் இயற்கை வளமுள்ள பசுமையான மாகாணமாக இருக்கின்றது. அதை சரியாகப் பயன்படுத்தினால் எமது

பிள்ளைகள் எதிர்வரும் காலங்களில் பல அடைவுகளை அடைந்து, பல சாதனைகளை நிலை நாட்டுவதுடன், மிக அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையினை அதிகரிக்கச் செய்து எமது நாட்டுக்கு
அதிக வருவாயினை ஈட்டிக் கொடுக்கின்ற மாகாணமாகவும் இருக்கின்றது.

அதற்கான பல திட்டங்களை திட்டமிட்டு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஆலோசனை மற்றும் உதவியின் கீழ் முன்னெடுத்தும் வருகின்றோம் என்றார்.

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

24 மணித்தியாலங்களில் நால்வர் பலி

24 மணித்தியாலங்களில் நால்வர் பலி

நாட்டின் பல பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதுக்கவில் இருந்து இங்கிரிய நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியின் இடதுபுறத்தில் உள்ள சமிக்ஞை கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் காயமடைந்த மோட்டார் இருவர் இங்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

24 மணித்தியாலங்களில் நால்வர் பலி

அவரின் சடலம் இங்கிரிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

24 மணித்தியாலங்களில் நால்வர் பலி

இதேவேளை, நாவுல பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் 27 வயதுடைய நபரொருவரும், கோப்பாய் பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளும் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதியதில் 49 வயதுடைய ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், அகுனகொலபெலஸ்ஸ பகுதியில் 69 வயதுடைய பரவகும்புக பிரதேசத்தை சேர்ந்த பாதசாரிய பெண், கார் மோதியதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முள்ளிவாய்க்கால் கஞ்சி குடித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலை
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸார் பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

பொலிஸார் பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களையும் ஒரு காரையும் அடையாளம் காண்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி, ஹப்புத்தளை பொலிஸ் பிரிவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அன்றைய தினம் இனந்தெரியாத குழுவினரால் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தின் சந்தேகநபர்கள் காரில் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

சந்தேக நபர்களை கைது செய்வதற்காக பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ் விசேட பொலிஸ் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

விசாரணைகளின் போது சந்தேகநபர்கள் போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட காரில் வந்தது தெரியவந்துள்ளது.

எனவே, சந்தேகநபர்கள் மற்றும் குறித்த கார் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரியவந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நிலைய கட்டளைத் தளபதி/ பொலிஸ் நிலையம் தியத்தலாவ – 1 – 859 1531

பண்டாரவளை பிரதேச செயற்பாட்டு அறை – 057 222 2260 / 057 – 223 1612 (R)

இரவில் அப்பம் காலையில் தேர்தல்
Posted in இலங்கை செய்திகள்

இரவில் அப்பம் காலையில் தேர்தல்

இரவில் அப்பம் காலையில் தேர்தல்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன எவருக்கும் உண்மையாக இருக்க மாட்டார் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.சுதந்திரக் கட்சியை மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன்

ஒன்றிணையும் முயற்சிக்கு தயாசிறி தடையாக இருந்த காரணத்தால் தயாசிறி கட்சியில் நீக்கப்பட்டுள்ளார் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

எதுல்கோட்டை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒரு நாள் இரவு மஹிந்த ராஜபக்ஷ உட்பட ராஜபக்ஷர்களுடன் ஒன்றிணைந்து அப்பம் சாப்பிட்டு விட்டு மறுநாள் காலை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட பொதுவேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கூட மைத்திரிபால சிறிசேன உண்மையாக இருக்கவில்லை.

இரவில் அப்பம் காலையில் தேர்தல்

அரசியலமைப்புக்கு முரணாக மஹிந்த ராஜபக்ஷவை பிரமராக்கி நாட்டில் பாரிய அரசியல் நெருக்கடிகளை தோற்றுவித்தார்.

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து கடந்த ஜனவரி மாதம் ஹெலிகொப்டர் சின்னத்தில் புதிய அரசியல் கூட்டணியை அமைத்தோம்.

கூட்டணியில் ஒன்றிணைந்து செயற்படுவதாக குறிப்பிட்டு விட்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் உயர்நீதிமன்றம் அவருக்கு நட்டஈடு விதிக்கப்பட்டதன் பின்னர் கூட்டணியில் இருந்து விலகினார்.

சுதந்திரக் கட்சியை மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைக்கும் முயற்சியை அமைச்சு பதவி வகிக்கும் சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் முன்னெடுத்துள்ளார்கள்.

இதற்கு கட்சியின் உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தடையாக இருந்ததால் தற்போது அவரை கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.

ஆகவே சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு செயற்பாடாமல் இருந்தால் தான் ஆச்சரியமடைய வேண்டும்.

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அரசியல் தரப்பினரை ஒன்றிணைத்து பலமான அரசியல் கூட்டணியை வெகுவிரைவில் ஸ்தாபிப்போம் என்றார்.

யாழ் பேருந்தில் பெண்ணை பிளேட்டினால் வெட்டிய இளைஞன்
Posted in இலங்கை செய்திகள்

கோப்பாய் பகுதியில் பேருந்தில் மோதி குடும்பஸ்தர் பலி

கோப்பாய் பகுதியில் பேருந்தில் மோதி குடும்பஸ்தர் பலி

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் தனியார் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கோப்பாயைச் சேர்ந்த எமில் ரவி என்ற 44 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் பகுதியில் பேருந்தில் மோதி குடும்பஸ்தர் பலி

யாழ்ப்பாணம் கொழும்பு சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஞாயிற்றுக்கிழமை (10) இரவு கோப்பாய் இராச பாதை வீதியில் பயணித்த வேளை மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்தின் சாரதி கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.